11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/08/2026
11ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
பகுபதத்தின் உறுப்புகள் யாவை?
2.
வெள்ளிவீதியார் - சிறுகுறிப்பு வரைக.
3.
நல்ல குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது?
4.
காவடிச்சிந்து என்பது யாது?
5.
'கோட்டை என்னும் சொல் திராவிட' மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
6.
இறந்தகால இடைநிலைகளில் பொருந்தாதது __________.
த்
ட்
ற்
வ்
7.
ஒரு மொழியின் அடிப்படையான வேர்ச்சொல்__________.
பகுதி
விகுதி
இடைநிலை
எழுத்துப்பேறு
8.
வாடிவாசல் என்பது ______________.
புதினம்
குறும் புதினம்
சிறுகதை
வரலாறு
9.
சி.சு செல்லப்பா தொடங்கிய இதழ் ___________.
தென்றல்
குயில்
எழுத்து
கணையாழி
10.
சி. சு செல்லப்பா உதவி ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள் ___________.
i) சந்திரோதயம் ii) தினமணி
iii) தினபூமி iv) தீக்கதிர்
i, ii - சரி
ii, iii - சரி
iii, iv - சரி
நான்கும் சரி
11.
“அம்மவாழி: எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் - யாரிடம் கூறியது?
தோழி - தலைவனிடம் கூறியது
நற்றாய் தோழியிடம் கூறியது
பாகன் - தலைவனிடம் கூறியது
தோழி - தலைவியிடம் கூறியது
12.
வெள்ளிவீதியார் சங்கத்தொகை நூல்களில் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை ___________.
13
12
10
14
13.
முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூலாகக் கருதப்படுவது __________.
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
புறநானூறு
14.
'நல்ல' என்ற அடைமொழியை உடைய எட்டுத்தொகை நூல் ___________.
குறுந்தொகை
அகநானூறு
புறநானூறு
பரிபாடல்
15.
உரை அசிரியரகள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் __________.
புறநாநூறு
அகநானூறு
குறுந்தொகை
நெடுநல்வாடை
16.
தண்டு என்பதன் பொருள் ____________.
நூற்கண்டு
ஊன்றுகோல்
துலாக்கோல்
மணிக்கூண்டு
17.
1984ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித்தேர்வில் முதன்முதலாக, முழுவதுமாகத் தமிழிலேயே எழுதி, முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றவர் ___________.
இறையன்பு
ராதாகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்
சகாயம்
18.
கொற்கை வஞ்சி தொண்டி வளாகத்தை ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் ___________.
ஆர்.பாலகிருஷ்ணன்
எம்.பாலகிருஷ்ணன்
சு. வெங்கடேசன்
எஸ்.இராமகிருஷ்ணன்
19.
KVT COMPLEX என்பதன் பொருள் __________.
கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்
கொற்கை வயலூர் தொண்டி வளாகம்
குறிச்சி வஞ்சி தொண்டி வளாகம்
குறிச்சி வஞ்சி திருச்சி வளாகம்
20.
பகுபதத்தில் "பகுதி” என்பது, சொல்லின் ________ அமையும்.
இடையில்
முதலில்
இறுதியில்
எங்கும் இல்லை
21.
பகுபதத்தில் அடிப்படை உறுப்புகள் ________.
மூன்று
ஆறு
நான்கு
இரண்டு
22.
பகுபத உறுப்புகள் மொத்தம் _________.
இரண்டு
மூன்று
ஆறு
எட்டு
23.
இலக்கண வகையில் சொற்கள், _________ வகைப்படும்.
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
24.
குறுந்தொகை, _________ திணை சார்ந்த நூல்
அகத்
புறத்
உயர்
அல்
25.
'குறுந்தொகை' நூலைத் தொகுத்தவர் __________.
வெள்ளிவீதியார்
சாத்தனார்
பூரிக்கோ
பெருந்தேவனார்
26.
தொகைநால்களுள் முதலில் தொகுக்கப்பட்டது __________.
நற்றிணை
புறநானூறு
குறந்தொகை
ஐங்குறுநூறு
27.
சங்ககாலப் பெண்பால் புலவர்களுள் ஒருவர் _______.
காரைக்காலம்மை
மணிமேகலை
ஆண்டாள்
வெள்ளிவீதியார்
28.
'மலை இடப்பெயர்கள் ஒர் ஆய்வு' கட்டுரை இடம்பெற்றுள்ள நூல் _________.
கொற்கை, வஞ்சி, தொண்டி வளாக ஆய்வு
அன்புள்ள அம்மா
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
சிறகுக்குள் வானம்
29.
'கடையெழு வள்ளல்கள்' வாழ்ந்த இடம் __________.
பாலை
காடு
மலை
தீவு
30.
"விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” எனக் குறிப்பிடும் நூல் ________.
தொல்காப்பியம்
புறநானூறு
திருமுருகாற்றுப்படை
பரிபாடல்
31.
முருகனைச் “சேயோன் மேய மைவரை உலகம்” எனக் கூறும் நூல் __________.
திருழுருகாற்றுப்படை
நற்றிணை
தொல்காப்பியம்
நன்னூல்
32.
மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை, _________ என்னும் கலைச்சொல் குறிக்கும்.
Biology
Geology
Zoology
Orology
33.
அகத்திணை இயல், மலை மற்றும் மலைசார்ந்த பகுதியை, __________ எனக் குறித்தது.
பாலை
முல்லை
குறிஞ்சி
மருதம்
34.
பகுபத உறுப்புகளுள் முதனிலை என்பது ______
பகுதி
சந்தி
விகுதி
இடைநிலை
35.
திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு
பகுதி
விகுதி
சந்தி
சாரியை
36.
கொண்ட - இச்சொல்லின் பகுதி ________
கொண்
கொள்
கொ
கொண்டு
37.
எழுதினான் - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை ________ ஆகும்
த்
இன்
ட்
ச்
38.
செய்தான் - இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை _________
இன்
த்
ட்
ந்
39.
பகுபதத்தில் குறைந்தளவு இருக்க வேண்டிய உறுப்புகள் ________
பகுதி, சந்தி
இடைநிலை, சாரியை
பகுதி, விகுதி
சந்தி, விகாரம்
40.
வாடிவாசல் புதினத்தில் பிச்சி பிடித்த காளையின் பெயர்_____.
ஓரி
பாரி
காரி
மாரி
41.
சி.சு. செல்லப்பாவின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற புதினம்_____.
சுதந்திரதாகம்
சந்திரோதயம்
எழுத்து
ஜீவனாம்சம்
42.
'வாடிவாசல்' குறும்புதினத்தின் ஆசிரியர் ______.
முத்துலிங்கம்
ஜெயமோகன்
பிரபஞ்சன்
சி.சு. செல்லப்பா
43.
குறுந்தொகை நூலுக்குக் கடவள் வாழ்த்து பாடியவர் __________
வெள்ளிவீதியார்
இளம்பெருவழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பூரிக்கோ
44.
குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை _________
451
401
501
551
45.
'சிதவல்' என்னும் சொல்லின் பொருள் _________
இடுப்பில் கட்டும் ஆடை
தோளில் இடும் துண்டு
தலைப்பாகை
கைக்குட்டை.
46.
நுமக்குப் பாடமாய் அமைந்த குறுந்தொகை __________ திணையைச் சார்ந்தது.
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
47.
கழுகுமலையில் கோயில் கொண்டுள்ள தலைவன் ________
சிவன்
முருகன்
இந்திரன்
திருமால்
48.
காவடிச்சிந்து என்ற பா வடிவம் __________ வகைகளிலிருந்து தோன்றியது.
தெம்மாங்குப்பாடல்
தாலாட்டுப்பாடல்
நாடோடிப்பாடல்
வழிநடைப்பாடல்
49.
தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர் __________
அண்ணாமலையார்
காளமேகப்புலவர்
ஒளவையார்
அருணகிரியார்
50.
'மலயத்துவஜ' என்று வழங்கப்பட்ட மன்னன் ____________
சேரன்
சோழன்
பாண்டியன்
பல்லவன்
51.
மனித சமூகத்தின் ஆதிநிலமாய்க் கருதப்படுகிறது __________
காடு
மலை
கடல்
வயல்
52.
'வரை' என்னும் சொல் எதனைக் குறிக்கிறது?
காடு
வயல்
மரம்
மலை
53.
கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை ஆய்வுலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர் __________
இராமகிருஷ்ணன்
கோபாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்
கோகுலகிருஷ்ணன்
54.
மலையும் மலைசார்ந்த இடமும் ________ திணையாகும்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
55.
திராவிடர்களை 'மலைநில மனிதர்கள்' என வழங்கியவர் __________
கால்டுவெல்
கமில் சுவலபில்
தாலமி
பாலகிருஷ்ணன்
56.
பகுபத உறுப்புகளுள் இடம் பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?
பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம்.
பகுதி, இடைநிலை, சாரியை.
பகுதி, சந்தி, விகாரம்
பகுதி, விகுதி.
57.
பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
| 1. வெள்ளிவீதியார் | - | அ) புறநானூறு |
| 2. அண்ணாமலையார் | - | ஆ) சி.சு. செல்லப்பா |
| 3. வாடிவாசல் | - | இ) குறுந்தொகை |
| 4, இளம்பெருவழுதி | - | ஈ) காஷடிச்சிந்து |
| 1 | 2 | 3 | 4 |
| அ | ஆ | இ | ஈ |
| 1 | 2 | 3 | 4 |
| ஆ | ஈ | அ | இ |
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | ஆ | அ |
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | அ | ஆ |
58.
காவடிச்சிந்துவிற்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
பாரதிதாசன்
அண்ணாமலையார்
முருகன்
பாரதியார்
59.
கூற்று “கோடு” என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் - கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு,
கூற்று சரி, விளக்கம் தவறு.
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
கூற்று தவறு, விளக்கம் சரி.
கூற்றும் தவறு, விளக்கமும் தவறு.
60.
விகுதிகள் எவற்றை உணா்த்தும்?
61.
பகுபதத்தில் சந்தி, சாரியை எவ்வெவ்விடங்களில் அமையும்?
62.
காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
63.
பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?
64.
65.
66.
67.
1.
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் ஆறும் பகுபதத்தின் உறுப்புகளாகும்.
2.
(i) சங்ககாலப் பெண்புலவர்களுள் ஒருவர், வெள்ளிவீதியார்.
(ii) சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை ஆகும்.
3.
(i) குறுந்தொகை நான்கடிமுதல் எட்டடிகள்வரை அமைந்த குறுகிய பாக்களால் ஆனது.
(ii) பல்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் இருநூற்று ஐவர் பாடிய பாடல்களைக் கொண்ட நூல்.
(iii) பண்டைய தமிழரின் அகஒழுக்கமாகிய இன்பியல் வாழ்க்கையினைச் சுவைபடச் சித்திரிக்கும் நூல்.
4.
(i) தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச்சிந்து ஆகும்.
(ii) முருகப்பெருமானுக்கு அவன் அடியார்கள் காவடி எடுத்துச் செல்லும் போது அன்பர்களால் பாடப்படும் பாடல்கள், காவடிச்சிந்து ஆகும்.
(iii) இவை சிந்து என்னும் இசைப்பாடல்களால் ஆனவை. காவடிச்சிந்து என்னும் நூலில் 22 இசைப்பாடல்கள் உள்ளன.
5.
(i) 'கோட்டை' என்னும் சொல் தமிழில் கோடு எனப்படுகிறது; மலையாளத்தில் கோட்ட, கோடு எனப்படுகிறது.
(ii) கன்னடத்தில் கோட்டே, கோண்டே எனவும், தெலுங்கில் கோட்ட எனவும் வழங்கப்படுகிறது.
(iii) துளுவில் கோட்டே என்றும், தோடா மொழியில் குவாட் என்றும் வழங்கப்படுகிறது.
6.
(d)
வ்
7.
(a)
பகுதி
8.
(b)
குறும் புதினம்
9.
(c)
எழுத்து
10.
(a)
i, ii - சரி
11.
(d)
தோழி - தலைவியிடம் கூறியது
12.
(a)
13
13.
(b)
குறுந்தொகை
14.
(a)
குறுந்தொகை
15.
(c)
குறுந்தொகை
16.
(b)
ஊன்றுகோல்
17.
(c)
ஆர்.பாலகிருஷ்ணன்
18.
(a)
ஆர்.பாலகிருஷ்ணன்
19.
(a)
கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்
20.
(b)
முதலில்
21.
(d)
இரண்டு
22.
(c)
ஆறு
23.
(c)
நான்கு
24.
(a)
அகத்
25.
(c)
பூரிக்கோ
26.
(c)
குறந்தொகை
27.
(d)
வெள்ளிவீதியார்
28.
(c)
சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்
29.
(c)
மலை
30.
(c)
திருமுருகாற்றுப்படை
31.
(c)
தொல்காப்பியம்
32.
(d)
Orology
33.
(c)
குறிஞ்சி
34.
(a)
பகுதி
35.
(b)
விகுதி
36.
(b)
கொள்
37.
(b)
இன்
38.
(b)
த்
39.
(c)
பகுதி, விகுதி
40.
(c)
காரி
41.
(a)
சுதந்திரதாகம்
42.
(d)
சி.சு. செல்லப்பா
43.
(c)
பாரதம் பாடிய பெருந்தேவனார்
44.
(b)
401
45.
(c)
தலைப்பாகை
46.
(a)
குறிஞ்சி
47.
(b)
முருகன்
48.
(d)
வழிநடைப்பாடல்
49.
(a)
அண்ணாமலையார்
50.
(c)
பாண்டியன்
51.
(b)
மலை
52.
(d)
மலை
53.
(c)
பாலகிருஷ்ணன்
54.
(a)
குறிஞ்சி
55.
(b)
கமில் சுவலபில்
56.
(d)
பகுதி, விகுதி.
57.
(d)
| 1 | 2 | 3 | 4 |
| இ | ஈ | அ | ஆ |
58.
(b)
அண்ணாமலையார்
59.
(b)
கூற்றும் சரி, விளக்கமும் சரி.
60.
விகுதி திணை, பால், எண், இடம், எச்சம், முற்று, வியங்கோள் ஆகியவற்றை உணர்த்தும்.
61.
சந்தி : பகுதியுடன் பிற உறுப்புகள் சேரும்போது புணர்ச்சி விதிப்படி இடையில் தோன்றும் உறுப்பு சந்தி எனப்படும்.
சான்று :
படித்தான் - படி + த் + த் + ஆன்.
காக்கிறான்- கா + க் + கிறு + ஆன்,
நடிப்பார் - நடி + ப் + ப் + ஆர்.
பகுதிகளோடு த், கிறு, ப் என்னும் இடைநிலைகள் சந்திக்கும்போது (சேரும்போது) புணர்ச்சி விதிப்படி இடையில் த், க், ப் என்னும் மெய்யெழுத்துகள் தோன்றின. இவை “சந்தி” எனப்படும்.
சாரியை : பகுபதத்தில் பகுதியோடு இடைநிலையையும், இடைநிலையோடு விகுதியையும் பொருத்தமாய்ச் சார்ந்து இயைய வரும் உறுப்பு சாரியை எனப்படும்.
சான்று :
அறிகுவான் - அறி + கு + வ் + ஆன்.
உண்டனன் - உண் + ட் + அன் + அன்.
பகுதியுடன் இடைநிலை சேரும்போது வந்த சாரியை 'கு' ஆகும். இடைநிலையுடன் விகுதி சேரும்போது வந்த சாரியை 'அன்' ஆகும்.
62.
இறந்தகால இடைநிலை த், ட், ற், இன் என்பன.
சான்று :
செய்தான் - செய் + த் + ஆன் இறந்தகாலம்
உண்டான் - உண் + ட் + ஆன் இறந்தகாலம்
கற்றான் - கல் (ற்) + ற் + ஆன் இறந்தகாலம்
ஒடினான் - ஓடு + இன் + ஆன் இறந்தகாலம்
நிகழ்கால இடைநிலைகள் கிறு, கின்று, ஆநின்று என்பன.
சான்று :
உண்கிறான் - உண் கிறு + ஆன் நிகழ்காலம்
உண்கின்றான் - உண் + கின்று + ஆன் நிகழ்காலம்
உண்ணாநின்றான் - உண் + ஆநின்று + ஆன் நிகழ்காலம்
எதிர்கால இடைநிலைகள் ப், வ் என்பன.
சான்று :
உண்பான் - உண் + ப் + ஆன் எதிர்காலம்
செய்வான் - செய் + வ் + ஆன் எதிர்காலம்
63.
பகுபத உறுப்புகள் ஆறு ஆகும். அவை, பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகும்.
64.
65.
66.
67.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards