9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/08/2026
9ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
2.
அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.
3.
'தண்ணீர் கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
4.
பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
5.
6.
நீரை எவ்வாறு சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்?
7.
குளித்தல் என்ற சொல்லைக் குறித்துப் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் கூறுவது யாது?
8.
நீரும் நிலமும், உடம்பும் உயிரும்
9.
அமையா
10.
விரிமலர்
11.
செந்நெல்
12.
கொடுத்தோர்
13.
சாய்ந்து
14.
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! உண்டி முதற்றே உணவின் பிண்டbe உணவெனப் படுவது நிலத்தொடு நீே நீரும் நிலமும் புணரியோர். ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே!!
1. இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
அ) அகநானூறு
ஆ) புறநானூறு
இ) குறுந்தொகை
ஈ) நாலடியார்
2. இப்பாடலை இயற்றியவர்
அ) குடபுலவியனார்
ஆ) கபிலர்
இ) வண்ணதாசன்
ஈ) கீரந்தையார்
3. உணவெனப்படுவது என்பதைப் பிரிந்து எழுதுக
அ) உணவெனப் + படுவது
இ) உண + வெனப்படுவது
ஆ) உணவு + எனப்படுவது
ஈ) உணவெ + னப்படுவது
4. பாடலின் சீர்மோனைச் சொற்கள்
அ) உண்டி உயிர்
ஆ) உண்டி பிண்டம்
இ) நீரும் - ஈண்டு
ஈ) உண்டி - முதற்றே
1.
1. தூம்பு என்பது தண்ணீர் போகும் வழி அடைப்பாகும்.
2.. மழைக்காலங்களில் ஏரி நிரம்பும் போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருக்குள். சென்று கழிமுகத்தை அடைந்து குமிழித்தூம்பை மேலே தூக்குவார்.
3. அடியில் இரண்டு துளைகள் காணப்படும். மேலே இருக்கும் நீரோடித்துளையிலிருந்து நீர் வெளியேறும். இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.
2.
1. நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
2. குளம், ஏரி, கால்வாய். கிணறு போன்ற நீர்நிலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குதல் வேண்டும்.
3. தண்ணீர்ச் சிக்கனமே நீர்ப் பாதுகாப்பின் முதல் படி.
4. ஒழுகும் குழாய்களை மூடுவதையும், நிலத்தடி நீரை அளவோடு செலவழிப்பதையும் கடமையாகக் கொள்ள வேண்டும்.
5. நெகிழிக் குப்பைகளை அனைத்து இடங்களிலும் போடுவது. நீர் நிலத்தினுள் புகா வண்ணம் அடைப்பை ஏற்படுத்தும். எனவே இதனைத் தவிர்க்கவேண்டும்.
6. மழை நீரை நிலத்தடியிலும், நீர்நிலைகளிலும் சேமித்து வைக்கவேண்டும்.
3.
முன்னுரை:
'நீரின்றி அமையாது உலகு' என்றார் திருவள்ளுவர். நாட்டின் வளர்ச்சிக்கு நீரே ஆதாரம். தண்ணீருக்காக விரைவில் போர் வந்தாலும் வியப்பில் ஆழத் தேவையில்லை என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார். இத்தகைய நீர்ப் பற்றாக்குறை பற்றி இக்கதை விளக்கும் கருத்துகளைக் காண்போம்.
பொட்டுத் தண்ணியில்லை:
எப்போது இரயில் வரும் தண்ணீர் பிடிக்கலாம் என்ற அந்தக் கிராம மக்களின் அவலநிலையைச் சொல்லி மாளாது. இந்திரா குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு வாரியைத் தாண்டி ஓடி, இரயில் நிலையத்திற்குள் புகுந்து தண்ணீரைப்பிடிக்கப் படும் பாடு பெரும்பாடு.
இந்திரா படுகெட்டி:
தண்ணீர் பிடிக்க இந்திரா கடும் முயற்சி மேற்கொள்வாள். அவள் படு கெட்டியான பெண். எல்லோருக்கும் முன்பாக இடம் பிடிப்பதோடு தண்ணீர்ப் பிடிப்பதிலும் அவள் படு கில்லாடியாக இருந்தாள். இரயில் வந்ததும் அரைச் செம்பும் கால் செம்புமாகப் பிடித்துக் குடத்தில் தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்தாள்.
ஊரின் அவலநிலை:
இரயில் பிடிக்கும் தண்ணீர் தான் அடுத்த நாள் மாலை வரை வீட்டுக்குக் குடிதண்ணீர். ஊருக்குள் நாலு இடங்களில் கிணறு வெட்டிப்பார்த்தார்கள். கடல் தண்ணீரை விட ஒரு மடங்கு கூடுதலான உப்பு. கிணற்றுத் தண்ணீரில் உப்பளம் போடலாம் என்றார்கள்.
வந்தால் வெள்ளம்:
எல்லா ஊரிலும் பருவகாலத்தில் மழை பெய்யும். புயல் வந்தால் தான் இந்தப் பக்கம் முழுவதும் மழை. மழை பெய்வதில்லை பெய்தால் பேய் மழை. கண்மாய், ஊருணி எல்லாம் உடைப்பெடுத்து வெள்ளம் போய் மூன்றாம் நாள் மறுபடி நீரில்லாப் பூமியாகக் கிடக்கும்.
வறட்சி:
இப்போது எல்லாமே பூண்டற்றுப் போய் விட்டன. முல்லை மலர்ந்த நந்தவனம் குட்டிச்சுவர்களில் சின்ன அடையாளங்களோடு பாழடைந்து கிடக்கிறது. கிணற்றில் முள்ளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள்.
நல்ல தண்ணீர்:
ஊருணிக்குப் பக்கமாயிருக்கிறது அந்த நல்ல தண்ணீர்க் கிணறு. ஊற ஊறத்தான் இறைக்க வேண்டும். மதியம் வரை பிலாப்பட்டி மக்கள் மட்டும் இறைத்துக் கொள்வார்கள். மதியத்துக்கு மேல் வெளியூர் ஆள்களுக்கு விடுவார்கள். நல்ல தண்ணீர் பிடிக்க இந்தப் பாடுபடுவார்கள் அம் மக்கள்.
இரயில் மட்டுமே கதி:
ஒலகம் பூராவும் தண்ணியில்லைன்னாலும் சரி நாள் தவறாம இரயிலுக்கு மட்டும் எங்கிருந்தாவது கொண்டு வந்து ஊத்திவிட்டுருறான் பாரு. இப்படிப் பேசிப்பேசியே மூன்று மணிக்கு வரும் பாசஞ்சர் இரயிலைக் குறி வைத்துத் தண்ணீர் பிடித்து வந்தனர் அம்மக்கள்.
இந்திராவின் அவலம்:
இந்திரா ஒருநாள் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தாள். இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தது. இரயில் நகர்ந்து விட்டது. இவளால் இறங்க முடியவில்லை. வடக்கத்திப்பெண் ஒருவள் இவளைக் கீழே விழாமல் காப்பாற்றினாள். வீட்டில் அவளைத் தேடினார்கள். அவளோ இரயிலில் பயணமானாள்.
அடுத்த இரயில் நிலையம்:
ஊரிலிருந்து பேருந்தில் ஏறி அடுத்த இரயில் நிலையம் செல்ல முயற்சி மேற்கொண்டார்கள். இந்திராவைத் தேடி அலைந்தார்கள். அவளைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார்கள். 'எம்புள்ளை எந்த ஊரு தண்டவாளத்திலே விழுந்து கெடக்கோ" என்று அங்கலாய்த்தாள் தாய்.
முடிவுரை:
அம்மா, அப்பா, ஊர் மக்கள் அனைவரும் இந்திராவைத் தேடி ஓடிக்கொண்டிருந்தார்கள். இறுதியில் தண்டவாளத்தின் ஓரத்திலேயே அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு இந்திரா எதிரே வருவதைக் கண்டு ஆனந்தமடைந்தார்கள். மகள் வந்து சேர்ந்ததில் மலர்ந்து போய் ஐயா கேட்டார் .....' பயமகளே இதையும் சுமந்துக்கிட்டா வரணும்; இத்தனை மைலுக்கும்? இந்திரா சொன்னாள் ... ஊக்கும் .... நாளைக்கு வரை குடிக்க எங்கே போறது. தண்ணீர் தான் வாழ்க்கை. தண்ணீர் இல்லையேல் வாழ்வில்லை. உயிரில்லை.
4.
காவிரி நீர்:
காவிரி நீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. நீர் நிலைகள் நிறைந்த நாட்டுக்கு வளத்தைத் தரும் பொருட்டுக் காவிரிநீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.
உழத்தியரின் உழைப்பு:
வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக்கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்றனர். அவ்வாறே களைகளைக் களைந்து செல்லும் உழத்தியரின் கால்களில் குளிர்ந்த முத்துக்களை ஈனும் சங்குகள் இடறின. அதனால் அவர்கள் இடை தளர்ந்து மெல்ல அசைந்து, வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுமாறு மென்மையாக நடந்து அருகில் உள்ள வரப்பினை அடைவர்.
வளமான நாடு :
1. காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன.
2. சோலைகள் எங்கும் உள்ள செடிகளின் புதிய கிளைகளில் மலர் அரும்புகள் உள்ளன.
3. பக்கங்களில் எங்கும் நெருக்கமாகச் சங்குகள் கிடக்கின்றன.
4. நீர் நிலையின் கரையெங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.
5. குளங்கள் எல்லாம் கடலைப் போன்ற பரப்புடையதாய்க் காணப்படுகின்றன. அதனால் நாடு முழுவதும் நீர்நாடு என்று சொல்லத்தக்கதாய் உள்ளது.
6. இத்தகைய சிறப்புகளால் பிறநாடுகள் சோழ நாட்டிற்கு ஈடாக மாட்டா.
வளம்:
நீர் நிலைகளில் அன்னப் பறவைகள் ஊர்ந்து செல்லும், எருமைகள் வீழ்ந்து மூழ்கும். வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும், இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.
செந்நெல்லும் பிற வளங்களும்:
அரியப்பட்ட செந்நெல்லின் கட்டுகளை அடுக்கிப் பெரிய போராகக் குவிப்பர். மிகுதியாகப் பிடித்த மீன்களை நீண்ட குன்றைப் போல் குவிப்பர். வளைந்த சங்குகள் ஈன்ற முத்துகளையும் குன்றைப் போல் உயர்த்திக் கூட்டுவர். தேன் வடியும் விரிந்த மலர்த் தொகுதியை மலை போல் குவித்து வைப்பர்.
பொன்மாலைச் சாரல் காட்சி:
1. நீலமணி போன்ற தெளிந்த நீரினை உடைய அகழிகள்.
2. நீண்ட பரந்த மண்ணாலான நிலப்பகுதி
3. பாதுகாப்புத் தருகின்ற உயர்ந்தோங்கிய மலைகள்
4. அழகிய நிழலால் செறிந்து காணப்படுகின்ற காடுகள் இவை நான்கும் குறள் கூறும் நாட்டின் அரண்கள் ஆகும்.
வளமான மரங்கள்:
1. வளர்ந்தோங்கிய தென்னை செருந்தி மரங்கள்
2. நறுமணமுடைய நரந்தும் மரங்கள்
3. அரசமரம், கடம்பமரம், பச்சிலை மரங்கள்
4. குளிர்ந்த மலரையுடைய குராமரங்கள்
5. பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை. சந்தன மரங்கள்
6. நாகமரங்கள் நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சி, கோங்கு மரங்கள்
7. முதலியன எங்கெங்கும் செழித்து வளர்த்துள்ளன.
5.
நீர் உயிர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
நீர் உழவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
அனைத்து விளைச்சல்களுக்கும் ஆதாரமே நீர் தான்.
நீரின் அவசியத்தை உணர்ந்து நீர் நிலைகளைப் பாதுகாப்போம்.
நீரில் வேதிக்கழிவுகள் ஏதும் கலந்து விடாமல் இருக்குமாறு அதனை பேணிக்காப்போம்.
6.
1. நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த மரபார்ந்த அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
2. குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்குதல் வேண்டும்.
3. வீடு தோறும் கல்வி என்பதைப் போல வீடு தோறும் நிலத்தடி நீர் சேமிப்பு அமைப்பினைப் பேண வேண்டும்.
7.
1. 'குளித்தல்' என்ற சொல்லுக்கு 'உடம்பினைத் தூய்மை செய்தல்' அல்லது 'அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள்.
2. கதிரவனின் வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் குளிர வைத்தல் என்பதே அதன் பொருளாகும்.
3. 'குளிர்த்தல்' என்பதே 'குளித்தல்' என்று ஆயிற்று என்பது அவரது விளக்கம்.
8.
எண்ணும்மைகள்
9.
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
10.
வினைத்தொகை
11.
பண்புத்தொகை
12.
கொடு + த் + த் + ஓர்
கொடு - பகுதி
த் - சந்தி
ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி
த் - இறந்தகால இடைநிலை
13.
சாய்ந்து - சாய் + த் + த் + உ
சாய் - பகுதி,
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
14.
1. புறநானூறு
2. குடபுலவியனார்
3. உணவு + எனப்படுவது
4. உண்டி உயிர்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards