9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/08/2026
9ஆம் வகுப்பு Tamil / தமிழ் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Tamil / தமிழ் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Tamil Test

1.
எண் வகை வனப்புகள் யாவை?
2.
திராவிட மொழிகள் பற்றி கால்டுவெல் அவர்களின் கருத்து யாது?
3.
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
4.
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க
தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்.
1. முத்திக்கனி -இலக்கணக்குறிப்பு தருக.
அ) உருவகம்
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இ) பண்புத்தொகை
ஈ) இரண்டாம் வேற்றுமைத்தொகை
2. விளம்பக்கேள் பொருள் தருக.
அ) சொல்வதைக் கேட்பாயாக
ஆ) கேட்பதை சொல்வாயாக
இ) விளம்புவதைச் சொல்
ஈ) படித்துப்பார்
3.உவந்துரைக்கும் - பிரித்து எழுதுக.
அ) உவந் + துரைக்கும்
ஆ) உவந்து + உரைக்கும்
இ) உவந் + உரைக்கும்
ஈ) உவந்து + துரைக்கும்
4. இப்பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்களை எடுத்தெழுதுக.
அ) தித்திக்கும், தெள்அமுதாய்
ஆ) தித்திக்கும், உன்னோடு
இ) உண்ணப். விண்ணப்பம்
ஈ) விண்ணப்பம், விளம்ப
5.
தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பதற்குத் தமிழ்விடு தூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக.
6.
திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது. என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
7.
தென்திராவிட மொழிகள் யாவை?
8.
மொழிக்குடும்பம் பற்றி பிரான்சிஸ் எல்லிஸ் என்பாரின் கருத்துகள் யாவை?
9.
10.
11.
12.
13.
14.
15.
1.
அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு ஆகியன வகை வனப்புகள் ஆகும்.
2.
1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து மாறுபட்டுள்ளன.
2. திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும், செல்வாக்குச் செலுத்தியுள்ளன என்று கால்டுவெல் கூறுகிறார்.
3.
1. தென் திராவிடம் என்ற இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.
2. தென் திராவிடம் சார்ந்த தமிழ்மொழியை நாம் பேசுகிறோம்.
3. தொன்மையும் இலக்கிய, இலக்கண வளமும் உடைய மொழி தமிழ்.
4. சில திராவிட மொழிகளின் தாய்மொழியாகக் தமிழ் கருதப்படுகிறது.
4.
1. உருவகம்
2. சொல்வதைக் கேட்பாயாக
3. உவந்து + உரைக்கும்
4. உண்ணப். விண்ணப்பம்
5.
முன்னுரை
தமிழையே தூதுப் பொருளாக்கியுள்ளது தமிழ்விடுதூது. தமிழின் இனிமை. இலக்கிய வளம், சுவை, அழகு, திறம், தகுதி ஆகியன இப்பாடலில் விரவிக் கிடக்கின்றன.
அமுதத்தமிழே
1. இனிக்கும் தெளிந்த அமுதமே! அமிழ்தினும் மேலான வீடுபேற்றைத் தரும் கனியே! இயல், இசை, நாடகம் என் முத்தமிழாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே! அறிவால் உண்ணப்படும் தேனே!
வேண்டுகோள்
2. மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுவதாக அமைந்தது தமிழ்விடுதூது.
சிந்தாமணியே
பாவின் திறம் அனைத்தும் பொருந்தி நின்று என்றுமே சிந்தாத மணியாய் இருக்கும் உன்னை சிந்து என்று அழைப்பது உன் பெருமைக்குத் தகுமோ? அவ்வாறு கூறிய நா இற்று விழும் அன்றோ?
தேவர்களை விட வானத்தில் வசிக்கும் முற்றும் உணர்ந்த தேவர்கள் கூட சத்துவம், இராசசம், தாமசம் என்னும் மூன்று குணங்களையே பெற்றுள்ளார்கள்.
ஆனால், தமிழானது பத்துக் குற்றங்கள் இல்லாமல் செறிவு, தெளிவு, சமநிலை. இன்பம், ஒழுகிசை, உதாரம் உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்துக்குணங்களைப் பெற்றுள்ளதால் உயர்ந்ததாகும்.
வண்ணத்தமிழ்
மனிதரால் உண்டாக்கப்பட்ட வண்ணங்கள் வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை என ஐந்திற்கு மேல் இல்லை. நீயோ புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக நூறு வண்ணங்களைக் கொண்டுள்ளாய்.
சுவைமிகு தமிழ்
நாவின் மீது பொருந்தும் குறைபாடுடைய உணவின் சுவைகள் ஆறுக்கு மேல் இல்லை. நீயோ செவிகளுக்கு விருந்தளிக்கும் ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.
அழகுமிகு தமிழ்
1. தமிழை அடையப் பெறாத மற்றையோர்க்கு அழியாத அழகு ஒன்றே ஒன்று அல்லாமல் அதிகம் உண்டோ? நீயோ நீங்காத அம்மை முதலிய அழகு எட்டினைப் பெற்றுள்ளாய் என தமிழை வாழ்த்துகிறார்.
2. மேற்கண்ட காரணங்களால் தூது அனுப்பத் தமிழே சிறந்தது என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
6.
திராவிட மொழிக்குடும்பம்
1. உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் அவற்றின் பிறப்பு, தொடர்பு, அமைப்பு. உறவு ஆகியவற்றின் அடிப்படையில் பல மொழிக்குடும்பங்களகப் பிரிக்கப்பட்டுள்ளன.
2. அவற்றுள் ஒன்று திராவிட மொழிக்குடும்பம்.
திராவிடம்
1. தமிழ் என்ற சொல்லிலிருந்து தான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
2. ஹீராஸ் பாதிரியார் இம்மாற்றத்தைத் தமிழ் தமிழா தமிலா டிரமிலா ட்ரமிலா →த்ராவிடா →திராவிடா என்று விளக்குகிறார்.
3. திராவிட மொழிக்குடும்பம் என்ற பகுப்பு உருவாவதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்து உருவானவை என்ற கருத்து அறிஞர் பலரிடையே நிலவி வந்தது.
4. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை இந்திய மொழிகள் அனைத்திற்கும் வடமொழியே மூலம் எனவும் அதிலிருந்தே மற்ற மொழிகள் தோன்றி வளர்ந்தன எனவும் அறிஞர்களால் கருதப்பட்டது. காரணம், இம்மொழிகளில் வடமொழிச் சொற்கள் மிகுந்து காணப்பட்டதே.
5. அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டார்.
6. தொடர்ந்து. 1816 ஆம் ஆண்டில் பேராசிரியர்கள் பாப். ராஸ்க். கிரிம் முதலானோராலும் மொழியில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
திராவிட மொழிக்குடும்பம்
1. பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முதன்முதலில் தெரிவித்தார்.
2. இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டார். இதனையொட்டி, மால்தோ, தோடா, கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகளும் எழுந்தன.
ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் 'தமிழியன்' என்று பெயரிட்டார்: ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.
3. 1856 இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல், திராவிட மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார். இதனை மேலும் உறுதிப்படுத்தப் பல்வேறு இலக்கணக் கூறுகளைச் சுட்டிக்காட்டி, திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளையும் எடுத்துரைத்தார்.
4. கால்டுவெல்லுக்குப் பின்னர் ஸ்டென்கனோ, கே.வி.சுப்பையா, எல்.வி.இராமசுவாமி. பரோ. எமினோ. கமில்சுவலபில், ஆந்திரனோவ், தெ.பொ. மீனாட்சிசுந்தரம் முதலான அறிஞர்கள் திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
தென்னிந்திய மொழிகள்
1. பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்வு செய்தார். இவை தனியொரு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முதன்முதலில் தெரிவித்தார்.
2. இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டார். இதனையொட்டி மால்தோ, தோடா. கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகளும் எழுந்தன.
கால்டுவெல் ஆய்வு
1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து மாறுபட்டுள்ளன.
2. திராவிட மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும். செல்வாக்குச் செலுத்தியுள்ளன.
ஆய்வுக்குப் பங்களிப்பு
1. கால்டுவெல்
2. கே.வி. சுப்பையா
3. ஸ்டென்கனோ
4. எல்.வி. இராமசுவாமி
5. பரோ
6. கமில்சுவலபில்
7. எமினோ
8. தெ.பொ. மீனாட்சிசுந்தரம்
7.
1. தமிழ்
2. மலையாளம்
3. கன்னடம்
4. குடகு
5. துளு
6. கோத்தா
7. தோடா
8. கொரகா
9. இருளா
ஆகியவை தென் திராவிட மொழிகள் ஆகும்.
8.
1. பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்வு செய்தார்.
2. இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முதன்முதலில் தெரிவித்தார்.
3. இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனப் பெயரிட்டார்.
4. இதனையொட்டி மால்தோ. தோடா. கோண்டி முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகளும் எழுந்தன.
9.
10.
(a)
11.
(b)
12.
(d)
13.
(d)
14.
(a)
15.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards