11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 24/12/2018
+1 All Chapters Important Question
11ஆம் வகுப்பு Computer Technology / கணினி தொழில்நுட்பம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Technology / கணினி தொழில்நுட்பம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Technology Test

1.
ரைட்டர் சன்னல் திரையின் பாகங்கள் யாவை?
2.
சொற்செயலாக்கம் என்றால் என்ன?
3.
ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நிரந்தரமாக கணிப்பொறியிலிருந்து எவ்வாறு நீக்குவாய்?
4.
விண்டோஸில் எவ்வாறு எந்த நேரத்திலும் திரைமுகப்பிற்குச் செல்லலாம்?
5.
முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக .
6.
முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை சேமிப்பு வேறுபடுத்துக.
7.
ஒலிப்பெருக்கியின் (Speaker) பயன் யாது?
8.
தமிழில் தேடும் வசதியை தரும் தேடும் பொறியைப் பட்டியலிடுக
9.
சமூக வலையகம் என்றால் என்ன?
10.
வலையகம் என்றால் என்ன? அதன் வகைகளை எழுது
11.
கணிப்பொறியின் வலையமைப்பை வரையறு?
12.
முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டுள்ள வரைநிலைகளைப் பட்டியலிடுக
13.
Impress யில் வார்ப்புரு –வரையறு
14.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன
15.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் தொடர்ச்சி மற்றும் தொடர்ச்சி அல்லாத தாள்களை எவ்வாறு தேர்ந்தெடுபப்பாய்?
16.
ஓபன் ஆஃபீஸ் கால்க் -ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது?
17.
லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.
18.
பலபயனரின் இயக்க அமைப்பு என்றால் என்ன?
19.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?
20.
தொடர் விதிகளை எழுதுக.
21.
1ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக
22.
கணித ஏரண செயலகத்தின் செயல்பாடு யாது?
23.
மூலத்தரவு என்றால் என்ன?
24.
ரைட்டரில் உள்ள வார்த்தை கலையின் (Word Art) பயன் யாது?
25.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரின் சில அம்சங்களை எழுதுக
26.
Writer-ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக .
27.
பதிப்பாய்விற்குரிய குறுக்கு வழிச் சாவி,பணிக்குறி மற்றும் அவற்றின் செல்பாடுகளைப் பட்டியலிடு
28.
தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் யாவை?
29.
கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகர்த்துவாய்?
30.
லினக்ஸ் என்றால் என்ன?
31.
இயக்க அமைப்பின் வகைகள் யாவை?
32.
இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்களின் பயன் யாது?
33.
குறிப்பு வரைக: தொடுதிரை.
34.
Ramsomeware-விளக்குக
35.
தேடல் பொறி எவ்வாறு செயல்படுகிறது
36.
பொதுவாக,இணைப்பிகள் மையத்தை விட விரும்பப்படுகிறது.ஏன்?
37.
நிகழத்துதலில் முதல் சில்லுவை உருவாக்கும் வழிமுறைகள் யாவை?
38.
இம்ரசில் எத்தனை வகையான பார்வை காட்சிகள் உள்ளன?
39.
தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக
40.
ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் என்றால் என்ன?
41.
நுண்ணறை A1, A2 மற்றும் A3 யில் முறையே, 34, 65 மற்றும் 89 ஆகிய மதிப்புகள் உள்ளது.அதன் சராசரியை காணும் வாய்ப்பாட்டை எழுதுக
42.
Windows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?
43.
இயக்க அமைப்பின் செயலி மேலாண்மையின் நெறிமுறைகளை விளக்குக
44.
PROM மற்றும் EPROM வேறுபடுத்துக
45.
பின்வரும் பதின்ம எண்களை இருநிலை, எண்ணிலை மற்றும் பதினாறு நிலை எண்களாக மாற்றுக. 255
46.
இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.
47.
தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.
48.
மெயில் மெர்ஜ் வசதியின் நன்மைகளைப் பட்டியலிடுக
49.
எவ்வாறு ஒரு வரிசை மற்றும் நெடுவரிசையை சேர்ப்பாய்?
50.
நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
1.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் சன்னல் திரை தலைப்புபட்டை , பட்டி பட்டை, செந்தரக் கருவிப்பட்டை, வடிவூட்டல் கருவிப்பட்டை, ரூலர், பணியிடம் மற்றும் நிலைமைப்பட்டை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
2.
சொற்செயலாக்கம் என்பது கணிப்பொறியில் பொருத்தமான ஒரு மென் பொருளைப் பயன்படுத்தி உரை ஆவணங்களை உருவாக்குதல், பதிப்பித்தல், கையாளுதல்,பரிமாற்றுதல், சேமித்தல் மற்றும் திரும்ப எடுக்கும் செயற்பாடாகும்.
3.
ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நிரந்தரமாக கணிப்பொறியில் இருந்து மறு சுழற்சி தொட்டியில் தங்காமல் நீக்க SHIFT விசையுடன் Delete விசையும் சேர்த்து அழுத்த வேண்டும்.
4.
நாம் எந்த பயன்பாட்டில் வேலை செய்து கொண்டு இருந்தாலும் Winkey + D அல்லது ஏரோபீக் (Aero Peek) ஐ பயன்படுத்தி எந்த நேரத்திலும் திரை முகப்புக்குச் செல்லலாம்.
5.
1. யுனிக்ஸ்
2. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்
3. லினக்ஸ்
4. iOS
5. அண்ட்ராய்டு
6.
| முதன்மை நினைவகம் | இரண்டாம் நினைவகம் |
|---|---|
| 1. குறைந்த அளவு, விலை உயர்ந்தது . | அதிக அளவு, விலை குறைந்தது |
| 2. அழியும் வகை நினைவகம் | அழியா வகை நினைவகம் |
7.
1. குரல் ஒலியை (audio) வெளியிடுகிறது.
2. பேச்சு இணைப்பாக்கம் மென்பொருளை ஒலிப்பெருக்கி உடன் பயன்படுத்திக் கணிப்பொறி குரல் வெளியீட்டை வழங்க முடியும்.
3. விமான நிலையங்கள், பள்ளிகள், வங்கிகள், இரயில் நிலையங்கள் போன்ற பல இடங்களில் பொதுவானதாக உள்ளது.
8.
Google மற்றும் Bing தமிழில் தேடக்கூடிய தேடுபொறிகள் ஆகும்.
9.
சமூக வலையகம் அல்லது சமூக ஊடகமானது கணினி ஊடகத் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு உருவாக்கப்படுவதோடு தகவல். எண்ணங்கள், தொழில்துறை ஆர்வம் மற்றும் பிறவடிவ வெளிப்பாடுகளைமாய சமுதாயம் மற்றும் வலையகத்தின் மூலம் பகிரும் வசதி ஆகும்.
10.
வலையகம் என்பது ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட கணினியாகும்.
வலையின் வகைகள்
1. தனிப்பட்ட வலை (PAN)
2. குறும்பரப்பு வலை (LAN)
3. நகரப்பரப்பு வலை (MAN)
4. பரந்த வலை (WAN)
11.
(i) இணைப்பில் உள்ள கணிப்பொறியின் வன்பொருள், மென்பொருள், வளங்கள் மற்றும் தரவுகளை அவற்றிற்கிடையே உள்ள தொடர்பு இடையகத்தின் வழியே பகிர்ந்து கொள்ளும் அமைப்பாகும்.
(ii) கணிப்பொறி வலையகத்தில் உள்ள கணிப்பொறிகள் கம்பிகள், தொலைபேசி கம்பிகள், வானொலி அலைகள் செயற்கைகோள்கள் அல்லது அகச்சிவப்பு அலைகள் வழியாக இணைக்கப்படுகிறது.
12.
ஓபன் ஆபீஸ் இம்ஸ்ரஸில் 20 முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டுள்ள வரைநிலைகள் உள்ளன.
1. Blank Slide
2. Title Slide
3. Title, Text
4. Title,2Text blocks
5. Title Onle
6. Title, Object
7. Title, Chart
8. Title, Spreadsheet
9. Title,Clipart,Text
10. Title, Text, Chart
11.Title, Text, Clipart
12. Title ,Chart, Text
13. Title,Text, Object
14. Title,Text,2 Object
15. Title, Object,Text
16. Title,Object Above Text
17. Title, 2 Object, Text
18. Title, 2 Object Above Text
19. Title, Text Above Object
20. Title 4 Objects
13.
1.வார்ப்புரு (Template) என்பது புதிய நிகழ்த்தலை உருவாக்க முன்னரே வடிவமைக்கப்பட்ட நிகழ்த்தல் வடிவமைப்பாகும்.
2.From Template என்ற விருப்பத்தைத் தேர்வு செய்தால், புதிய நிகழ்த்தலை உருவாக்க ஏற்கனவே இருக்கக் கூடிய Template ஐப் பயன்படுத்தபட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம்.
3. 'Introducing a New Product' மற்றும் 'Recommendation of a strategy' போன்ற முன்னரே வடிவமைக்கப்பட்ட வார்ப்புருவை சில்லுகளின் தொகுப்பாகும்.
14.
தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்பது சில தலைப்புகள் (ஆவணத்தலைப்பு, நூலாசிரியர் பெயர் அல்லது மேற்கோள்கள் (அதாவது பக்க எண், பக்கங்களில் எண்ணிக்கை, தேதி) அல்லது குறிப்புரைகள் ஆகியவை பக்கத்தின் மேல் பகுதியில் அச்சிடப்பட்டால் அவை தலைப்பு எனவும், பக்கத்தின் கீழ்ப்பகுதியில் அச்சிடப்பட்டால் அடிக்குறிப்பு எனவும் அழைக்கப்படுகின்றன.
15.
தொடர்ச்சியான ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டவணைத்ததாள்களை தேர்ந்தெடுத்தல்.
1. முதலில் ஒரு கணக்கீட்டுத் தாளின் தத்தலை (Sheet Tab) கிளிக் செய்யவும்.
2. Shift பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு கடைசி கணக்கிட்டுத்தாளின் தத்தலை (Sheet Tab)கிளிக் செய்யவும், தொடர்ச்சியாக அமையாத ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டவணைத் தாள்களை தேர்ந்தெடுக்க.
படி 1 : ஏதேனும் ஒரு தாளை கிளிக் செய்யவும்.
படி 2 : Ctrl பொத்தானை அழுத்திப் பிடித்தவாறு. தேர்வு செய்ய வேண்டிய வேறு ஒரு தாளை கிளக் செய்யவும்.
16.
ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் கொடா நிலையாக மூன்று கருவிப்பட்டைகள் உள்ளன. அவை
(i) செந்தரக் கருவிப்பட்டை
(ii) வடிவூட்டல் கருவிப்பட்டை
(iii) வாய்ப்பாட்டு பட்டை
17.
லினக்ஸ்(Linux)-ன் மிகப் பிரபலமான சேவையக பகிர்மானங்கள் :
1. உபுண்டு லினக்ஸ்
2. ஆர்க் லினக்ஸ்
3. பெடோரா
4. ஸென்ட் OS
5. லினக்ஸ் மின்ட்
6. டீப்பன்
7. டெபியான்
18.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள். தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு" எனப்படும்.
19.
உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI) என்பது ஒளிக்காட்சித் கட்டுப்படுத்தியிலிருந்து வரும் சுருக்கப்படாத ஒலி மற்றும் ஒளிக்காட்சித் தரவுகளை கணிப்பொறித் திரையுகம். LCD புரொஜக்டர் மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சிக்கு மாற்றப் பயன்படும் ஒரு ஒலி/ஒளி இடைமுகம் ஆகும்.
20.
21.
படிநிலை1: கொடுக்கப்பட்ட பதின்ம எண்ணுக்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
படிநிலை2: மாற்றப்பட்ட இருநிலை எண் 8 பிட்டுகளாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.8 பிட்டுக்கும் குறைவாக இருப்பின், முன்னொட்டாக 0 க்களை சேர்த்து 8 பிட்டுகளாக மாற்றவும்.
படிநிலை2: அனைத்து பிட்டுகளையும், தலைகீழாக மாற்றவும்.(அதாவது 1 என்பதை 0 எனவும் 0 என்பதை 1 எனவும் மாற்றுக.)
22.
1. மையச் செயலகத்தின் ஒரு பகுதியாக உள்ள கணித ஏரணச் செயலகம். பல கணிப்பீடு செயல்களைத் தரவின் மீது நிகழ்த்துகிறது .
2. கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல் மற்றும் சுருக்கு அல்லது தருக்கச் செயல்கள் போன்ற கணிதச் செயல்பாடுகளைக் கணித ஏரணச் செயலகம் செய்கிறது .
23.
ஒரு மூலத்தரவு என்பது அஞ்சல் பட்டியலைத் தருவிக்கப் பயன்படும் பெயர்கள் மற்றும் முகவரிகளை உள்ளடக்கியத் தரவுத்தளம் அல்லது மற்றத் தகவல்களின் பதிவுகளாகும்.
24.
1. Word Art வார்த்தை கலை என்பது Open Office Writer யில் உள்ள உரை மாற்றப்படும் அம்சமாகும்.
2. ஒரு வார்த்தைக்கு அல்லது சொற்றொடருக்கு நிழல்கள்,வரைபடங்கள், வண்ணங்கள்,சாய்வு 3D விளைவுகள் போன்ற தாக்கங்கள் (effects) இதன் மூலம் பெறலாம்.
3. Word Art-ல் உள்ள சிறப்பு தாக்கங்கள் மூலம் உரையை மேலும் படிப்பதற்கு எளிமையாக மற்றும் தூண்டுவதாகவும் அமைக்க முடியும்.
25.
1. வார்ப்புருகள் மற்றும் பாணிகள்
2. சட்டங்கள், நெடுவரிசைகள் மற்றும் அட்டவணைகள் உள்ளிட்ட பக்க வடிவமைப்பு முறைகள்.
3. வரைபடங்கள், அட்டவணைச் செயலிகள் மட்டும் பிற பொருட்களை உட்பொதித்தல் அல்லது இணைத்தல்
4. வரைதலுக்கான உள்ளிணைந்த கருவிகள்.
5. பல ஒற்றை ஆவணங்களை ஒரு முதன்மை ஆவணமாக உருவாக்குதல்.
6. ஆவணங்களைத் திருத்தும் போது அதன் நடையை மாற்றும் வசதி.
7. நூலகத் தரவுத்தளப் பட்டியில் சேர்த்தலுடன் இணைந்த தரவுத்தள ஒருங்கிணைப்பு.
8. ஆவணத்தை PDF வடிவிற்கு ஏற்றம் செய்தல்.
26.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டர் பல்வேறு விதமான உதவிகளை வழங்குகின்றது.
1. F1 அல்லது பட்டிப்பட்டையில் உள்ள Help-ஐ தேர்வு செய்தால் உதவித்திரை தோன்றும்.
2. கருவிப் குறிப்புகள் (Tools tips) நீட்டிக்கப்பட்ட குறிப்புகள் (Extended tips).உதவி முகவர் செயல்படுத்த Tools→Options→ Open Office என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
3. மேலும் விரிவான விளக்கத்திற்கு Help →What's this? என்பதைக் தேர்வு செய்ய வேண்டும்.
27.
| செயல் | செயல்பாடு | பணிக்குறி | குறுக்கு வழிச் சாவி |
|---|---|---|---|
| Cut நீக்க | தேர்ந்தெடுத்த உரையை நீக்க | ![]() |
Ctrl+X |
| Copy நகலெடுக்க | தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க | ![]() |
Ctrl+C |
| Paste ஒட்ட | நகர்த்தல் (அ) நகலெடுத்தல் செயல்பாட்டிற்கு பிறகு உரையை ஒட்ட |
![]() |
Ctrl+V |
| Undo செயல் தவிர் | நிகழப்பட்ட முந்தைய செயல்பாட்டை ரத்து செய்ய | ![]() |
Ctrl+Z |
28.
1. பயனர் முறையாகத் தமிழ் தட்டச்சு பயின்றிருக்க வேண்டும்.
2. கணிப்பொறியில் அந்தக் குறிப்பிட்ட எழுத்துரு இருக்க வேண்டும்.
3. ஆங்கிலம் உட்பட மற்ற மொழிகளை ஏற்காது.
4. ஒரு ஆவணத்தை, ஒரு கணிப்பொறியிலிருந்து, மற்றோரு கணிப்பொறிக்கு அனுப்பும் போது, இரண்டு கணிப்பொறிகளிலும் அதே எழுத்துரு இல்லாவிடில் மூல எழுத்துக்கள் குறியீடுகளாகவே தோன்றும்.
29.
கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்தப் பயன்படும் வழிகள்:
(i) Edit பட்டியில் உள்ள Cut மற்றும் Paste தேர்வு மூலம்.
(ii) Ctrl+X (cut) மற்றும் Ctrl +V (paste) சாவிச் சேர்மானம் மூலம்.
(iii) வலது கிளிக் செய்து வரும் மேல் மீட்புப் பட்டியலில் உள்ள Cut மற்றும் Paste தேர்வு மூலம்.
(iv) இழுத்து விடுதல் மூலம்.
30.
1. லினக்ஸ் ஓர் திறந்த மூல அமைப்புகளின் ஒரு குடும்பமாகும்.
2. உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட்டு விநியோகிக்கப்படலாம்.
3. லினக்ஸ் இயங்குதளத்தின் முக்கிய நன்மை, ஒரு திறந்த மூல இயக்கமாகும்.
4. பல பதிப்புகள் மற்றும் புதுப்பிப்பிகளும் உள்ளன.
5. லினக்ஸ் இயக்க அமைப்பு 1991 இல் பின்லாந்தின் பல்கலைக்கழக மாணவரான "லினஸ் டோர் வால்டஸ்" என்பவரின் திட்டமாக உருவானது.
31.
செயலாக்கத் திறன்களைப் பொறுத்து இயக்க அமைப்புகள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
1. ஒற்றைப்பயனர் இயக்க அமைப்பு
2.பலபயனர் இயக்க அமைப்பு
1. ஒற்றைப்பயனர் இயக்க அமைப்பு :
இந்த வகை இயக்க அமைப்பு, ஒரு நேரத்தில், ஒரு பயனரை ஒரே ஒரு பணியை மட்டுமே செய்ய அனுமதிக்கிறது. எனவே, இது "ஒற்றை பயனர் மற்றும் ஒற்றை பணி இயக்க அமைப்பு " என அழைக்கப்படுகிறது.
எ .கா: MS-DOS.
2.பல பயனர் இயக்க அமைப்பு:
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள். தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு" எனப்படும்.
எ .கா: விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ்.
32.
1. இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்களில் தரவு மற்றும் நிரல்கள் நிரந்தரமாக சேமித்து வைக்கப்படும்.
2. இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் இயல்பாக அழியா நிலையில் இருப்பதால் அவை முதன்மை நினைவகத்திற்கு ஒரு இணை சேமிப்பு சாதனமாகப் பணியாற்றுகிறது.
3. இதனால் இரண்டாம் நிலை சேமிப்பு "காப்பு சேமிப்பு" (Backup Storage) என்றழைக்கப்படுகிறது.
33.
1. தொடுதிரை என்பது ஒரு காட்சி சாதனம்.
2. இது பயனர் கணிப்பொறியுடன் ஊடாடுவதற்கு விரலைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
3. ஒரு வரைகலை பயனர் இடைமுகத்தில்(GUI) உலவுவதற்கு, சுட்டி அல்லது விசைப்பலகைக்கு மாற்றாகத் தொடு திரை பயன்படுகிறது.
4. கணிப்பொறி மற்றும் மடிக்கணினி ,திரையகம், ஸ்மார்ட் கைபேசிகள், டேப்லட்ஸ் (Tablets), பணப்பதிவேடுகள் (Cash registers) மற்றும் தகவல் கணிப்பொறியகம் (information kiosks) போன்ற பல்வேறு வகையான சாதனங்களில் தொடுதிரை பயன்படுத்தப்படுகின்றன.
34.
Ransomeware : ஒரு கணிப்பொறி அமைப்பில் இணையத் தாக்குதல் தொடங்கிய பிறகு, பணம் கோரி தீங்கு இழைக்கத் திட்டமிடக்கூடிய ஒரு வகைத் தீம்பொருள் ஆகும்.
35.
1.வலை தேடல் பொறி என்பது www - ல் தகவல்களைத் தேடுவதற்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் அமைப்பாகும்.
2. பல்வேறு தலைப்புகளுக்கான பரந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது.
3.இந்தத் தகவலானது வலைப்பக்கங்கள். படங்கள் மற்றும் பிறக் கோப்பு வகைகளின் கலவையாகும்.
4.சில தேடல் பொறிகள் தரவுத்தளத்திலுள்ள தரவுகள் அல்லது திறந்த விவரப்புத்தகத்திலுள்ள தரவுகளையும் தேடிக் கொடுக்கிறது.
5.தேடல் பொறிகள் நிகழ் நேர தகவல்களை webcrawler நெறிமுறைகளைச் செயல் படுத்துவதன் மூலம் பராமரிக்கிறது.
36.
1. இணைப்பி. தரவுப் பொட்டலங்களைப் பெற்றவுடன் எந்தக் கணிப்பொறி அல்லது சாதனத்திற்குரியது என்பதைக் கண்டறிந்து அந்த கணிப்பொறிக்கு மட்டுமே அதை அனுப்புகிறது.
2. அதை மையத்தைப் போல அனைத்து கணிப்பொறிகளுக்கும் ஒலிபரப்புவதில்லை (broadcast).
3. இந்தக் காரணத்திற்காகவே இணைப்பிகள் மையங்களை விட அதிகமாக தேர்வு செய்யப்படுகின்றன.
37.
1. முதல் சில்னு பொதுவாக தலைப்பு சில்லுவாக இருக்கும். சில்லுவின் அமைப்பை அதன் நோக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்கவும். முன் வடிவமைக்கப்பட்ட அமைப்புகளை, பணிப் பலகத்திலுள்ள Layout பிரிவிலிருந்து பயன்படுத்தலாம். பொருத்தமான அமைப்பானது தலைப்பு மற்றும் உள்ளடக்கம் கொண்ட தலைப்பு சில்லுவாகும்.
2. பணிப்பலகத்தின் அமைப்பு பிரிவில் ஒரு அமைப்பைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்வதன் மூலம் இது பணியிடத்தில் தோன்றும், ஒரு தலைப்பை உருவாக்க 'Click to add-title' ஐ கிளிக் செய்து, பின் உரையைத் தட்டச்சு செய்யவும்.
3. தலைப்பின் வடிவமைப்பிற்கு மாற்றங்கள் செய்வதற்கு F11 விசையை அழுத்தவும். அல்லது தலைப்பு நிகழ்த்துதலை வலது கிளிக் செய்கையில் வரும் மேல் மீட்பு பட்டியில் இருந்து Modify-ஐ தேர்வு செய்யலாம்.
4. தலைப்பு சில்லு அமைப்பைப் பயன்படுத்தினால் "Click to add text" யை கிளிக் செய்து, உரையை தட்டச்சு செய்ய வேண்டும். வடிவமைப்பு மாற்றங்கள் இன்னும் செய்ய இருந்தால் மேல் கூறியதை மீண்டும் செய்யவும்.
38.
Impress ல் ஐந்து வகையானக் காட்சிகள் வழங்கப்படுகின்றன.
1. Normal View தனித்தனி சில்லுவை உருவாக்கவும், பதிப்பிக்கவும் உதவுகிறது.
2.Outline View சில்லுவின் பெயர் மற்றும் தலைப்புகளைத் தேவைக்கேற்ப பதிப்பித்துக் கொள்ள உதவுகிறது.
3.Notes View- சில்லுகளின் குறிப்புகளைச் சேர்க்கவும், ஏற்கனவே உள்ளக் குறிப்புகளைப் பார்க்க உதவுகிறது.
4.Slide Sorter - எல்லா சில்லுகளையும் சிறிய வடிவத்தில் பார்க்க உதவுகிறது.
5.Handout View - சில்லுவின் அளவை மாற்றி. பல சில்லுகள் ஒரே பக்கத்தில் வருமாறு சில்லுகளை அச்சிட்டுக் கைப்பிடி அறிக்கைகளாக வழங்க உதவுகிறது.
39.
படிநிலை 1:
வரிசையாக்கம் செய்யப்பட வேண்டிய புலத்தில் (நெடுவரிசை) நுண்ணறைச் சுட்டியை இருத்தவும்.
படிநிலை 2:
1.செந்தரக் கருவிப்பட்டையிலுள்ள Sort Ascending அல்லது Sort Descending பணிக்குறியைக் கிளிக் செய்யவும்.
2. ஓபன் ஆஃபீஸ் கால்க், தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுவரிசையிலுள்ள தரவுகளின் அடிப்படையில், அதனுடன் தொடர்புடைய மற்ற நெடுவரிசைகளையும் சேர்த்து வரிசைப்படுத்தும்.
40.
செயற்கூறு என்பது முன்னரே வரையறுக்கப்பட்ட வாய்ப்பாடு ஆகும்.
1.அட்டவணைச் செயலியில் உள்ள தரவுகளைக் கையாளவும், பகுப்பாய்வு செய்வதற்கும் பயன்படுகிறது.
2.அட்டவணைத் தாளில், தேவையான விடையைப் பெறுவதற்கு வாய்ப்பாடுகளைக் கட்டமைப்பதைச் செயற்கூறுகள் எளிதாக்குகின்றன.
41.
சராசரியை கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு =AVERAGE (A1;A2;A3)
அல்லது
AVERAGE (A1;A3)
42.
| Windows | Ubuntu |
|---|---|
| 1. மூடிய மூல இயக்க அமைப்பாகும். | ஒரு திறந்த மூல இயக்க அமைப்பாகும். |
| 2.Windows இயக்க அமைப்பைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும். | விலையில்லாமல் கிடைக்கிறது. |
| 3. இது நிறுவனம் சார்ந்தது | சமூகம் சார்ந்தது |
| 4. ஒரே ஒரு திரை முகப்பைக் கொண்டது. | ஒன்றுக்கும் மேற்ப்பட்ட திரை முகப்பைக் கொண்டது. |
| 5. தானமைவாக Internet Explorer ஐ உலவியாகக் கொண்டுள்ளது. | தானமைவாக Firefox ஐ உலவியாகக் கொண்டுள்ளது. |
| 6. இயங்குநிலைக் கோப்புகளை(executable :files) ஆதரிக்கும். | இயங்குநிலைக் கோப்புகளை(executable :files) ஆதரிக்காது. எனவே நச்சு நிரல் தாக்குதல்கள் இல்லை |
43.
ஒரு கணிப்பொறியின் செயலிக்கு, தேவியான செயல்முறைகளை ஒதுக்கீடு செய்வதற்கு கீழ்காணும் நெறிமுறைகள் (Algorithms) முதன்மையாகபின்பற்றப்படுகின்றன.
1. முதலில் வந்து முதலில் செல்லும் (FIFO)
2. சிறியது முதலில் (Shortest Job First)
3. வட்ட வரிசை (Round Robin)
4. முன்னுரிமைக்கு ஏற்ப (Based on Priority)
1. முதலில் வந்து முதலில் (FIFO- First In First Out ):
முதலில் வந்து முதலில் செல்லும் நெறிமுறை என்பது வரிசை நுட்பத்தை (Queuing Technique) அடிப்படையாக கொண்டது. நுட்ப ரீதியாக, வரிசையில் நுழையும் செயல்முறை முதலில் CPU-யில் செயல்படுத்தப்பட்டு, அடுத்தடுத்து தொடர்கிறது. வரிசையின் அடிப்படையில் செயல்முறை செயல்படுத்தப்படுகின்றன.
2. சிறியது முதலில் (Shortest Job First):
இந்த நெறிமுறை, மைய செயலகத்தால் இயக்கப்படும் ஒரு வேலையின் அளவை அடிப்படையாக கொண்டது.
3. வட்ட வரிசை திட்டமிடல் (Round Robin):
வட்ட வரிசை திட்டமிடல் "நேரப் பகிர்வு அமைப்பு" களுக்கு (Time Sharing System) சிறப்பாக வடிவமைக்கப்ட்ட நெறிமுறை ஆகும். சுழற்சி முறையில், ஒவ்வொரு பணிக்கும், ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும்.
4. முன்னுரிமைக்கு ஏற்ப (Based on Priority):
கொடுக்கப்பட்ட வேலை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற வேலைகளை விட அதிக முன்னுரிமை கொண்டிருக்கும் வேலை மிகவும் முக்கியமானது.
44.
| PROM | EPROM |
|---|---|
| இதில் தரவுகளை ஒரு முறை மட்டும் எழுத முடியும். ஒரு முறை நிரல்களை எழுதி விட்டால் எப்பொழுதும் அழியாமலிருக்கும். |
இதில் புற ஊதா ஒளிமூலம் தகவல்களை அழித்து மீண்டும் வேறு நிரல்களை மறுபடியும் எழுதலாம். |
45.
அ) (255)10=(?)2

\(\therefore \quad { \left( 255 \right) }_{ 10 }={ \left( 11111111 \right) }_{ 2 }\quad \)
ஆ)(255)10 ன் இருநிலை மதிப்பை எண்ணிலைக்கு மாற்றுதல்
(11111111)2=(?)8
வலமிருந்து இடமாக மூன்று பிட்டுகளாகக் குலுவாக்கவும்
\(\therefore \quad { \left( 255 \right) }_{ 10 }={ \left( 377 \right) }_{ 8 }\)
இ)(255)10 ன் இருநிலை மதிப்பை பதினாறு நிலை எண்ணாக மாற்றுதல்
(11111111)2=(?)16
வலமிருந்து இடமாக நான்கு பிட்டுகளாகக் குலுவாக்கவும்
\(\therefore \quad { \left( 255 \right) }_{ 10 }={ \left( FF \right) }_{ 16 }\)
46.
1. இருநிலை எண் முறையில் 0 மற்றும் 1 என்ற இரண்டு எண் உருக்கள் மட்டுமே உள்ளது.
2. இந்த முறை "2ன் அடுக்கு நிலை நிறை முறை"(2's Power Positional weightage method) யில் 2ஐ அடிமானமாக கொண்டுள்ளது.
3. ஒரு இருநிலை எண் தொடரின் இடது ஒர பிட் அதிக நிலை நிறை மதிப்பை கொண்டுள்ளதால் அது "மிகு மதிப்பு பிட்" எனவும், (Most Significant Bit -MSB) வலது ஒர பிட் குறைந்த மதிப்பை பெறுவதால் அது "குறை மதிப்பு பிட்" (Least Significant Bit -LSB) எனவும் அழைக்கப்படுகிறது.

47.
1. இந்த வகையில் ஒரு சிறு கம்பி , மை நாடா மீது தட்டி ஒரு புள்ளியை ஏற்படுத்தும் அல்லது ஒரு முழு எழுத்தை தட்டி அந்த எழுத்தை ஏற்படுத்தும்.
2. இந்த அச்சுப்பொறிகள் இயந்திர அழுத்தத்தைப் பயன்படுத்தி ஒரே சமயத்தில் பல படிகள் எடுக்க வகை செய்கிறது. எ.கா : வரி அச்சுப்பொறி மற்றும் வரிபுள்ளி அச்சுப்பொறி
3. புள்ளி அச்சுப்பொறி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையலினா செருகி அல்லது கம்பிகளைக் பயன்படுத்தி அச்சிடுகிறது.
4. ஒவ்வொரு புள்ளியும் ஒரு சிறிய உலோகக் கம்பி மூலம் உருவாக்கப்படுகிறது .
5. இதில் பொதுவாக ஒரு நேரத்தில் ஒரு வரி உரையே மட்டுமே அச்சிட முடியும்.
6. வரிபுள்ளி அச்சுப்பொறிகள் நிலையான அச்சுத் தலையை அச்சிடப் பயன்படுத்துகிறது.
7. இந்த அச்சுப்பொறிகளின் அச்சிடும் வேகம் 30 முதல் 1550 சிபிஎஸ்(CPS - Character Per Second) வரை வேறுபடுகிறது.
8. அடிப்படையில், இது ஒரு பக்க அளவிலான புள்ளிகளை அச்சிடுகிறது.
9. வரி அச்சுப்பொறிகள் வினாடிக்கு 1000 க்கு மேற்பட்ட வரிகளை அச்சிடும் திறன் கொண்டது.
48.
(i) மெயில் மெர்ஜ் வசதி முகவரித்தரவை ஒருங்கிணைத்து, அதை ஆவணத்தில் ஒன்றிணைத்து தேவையான வடிவமைப்பில் அச்சிடப் பயனருக்கு உதவி செய்கிறது.
(ii) பெயர்கள் மற்றும் முகவரியின் பட்டியலை ஒரு கடிதத்துடன் ஒன்றிணைத்து, வெவ்வேறு பெயர்களுக்கு மற்றும் முகவரிக்கு அனுப்பலாம்.
(iii) ஒரு ஆவணத்தின் (கடிதப் படிவம்) பல நகல்களை பல்வேறு பெறுநர்களுக்கு பின்வரும் வசதிகளால் அனுப்பப்படும்.
1. மெயிலிங் (Mailing)
2. லேபில்ஸ் (Labels)
3. எனவலப்ஸ் (Envelopes)
49.
அட்டவணையில் வரிசைகளை சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை கையாளலாம்.
1. எளிமையான வழி, அட்டவணையின் கடைசி சிற்றரையில் Tab சாவி பொத்தானை அழுத்த வேண்டும்.
2. அட்டவணையில் ஒரு வரிசையைச் சேர்க்க செருகும் புள்ளியைத் தேவையான சிற்றறைக்கு கொண்டு சென்று Table Formatting கருவிப்பட்டையில் உள்ள Insert row பணிக்குறியைக் கிளிக் செய்யவும்.
3. ஒன்றுக்கு மேற்பட்ட வரிசைகளைச் சேர்க்க Table → Insert → Rows என்ற கட்டளையைப் பயன்படுத்த வேண்டும்.Insert Rows உரையாடல் பெட்டி தோன்றும். இதில், சுழல் அம்புக்குறிகளை நகர்த்தியோ அல்லது வரிசையின் எண்ணிக்கைகளை நேரடியாகத் தட்டச்சு செய்தோ தேவையான எண்ணிக்கையிலான வரிசைகளைச் சேர்க்கலாம்.Before அல்லது After ரேடியோ பொத்தானை தேர்வு வரிசை எங்கு சேர்க்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம்.
4. OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
நெடுவரிசைகளைச் சேர்க்க:
1. அட்டவணையில் நெடுவரிசையை எங்கு சேர்க்க வேண்டுமோ அந்த இடத்தில் செருகும் புள்ளியை கொண்டு சென்று Insert column பணிக்குறியை கிளிக் செய்தால், செருகும் புள்ளிக்கு வலது புறத்தில் ஒரு புதிய நெடுவரிசை சேர்க்கப்படும்.
2. ஒன்றுக்கு மேற்பட்ட நெடுவரிசைகளைச் சேர்க்க செருகும் புள்ளியை அந்த நெடுவரிசையில் கொண்டு சென்று Table → Insert → columns என்ற கட்டளையைப் பயன்படுத்தினால் Insert columns உரையாடல் பெட்டி தோன்றும். இதில், சுழல் அம்புக்குறிகளை நகர்த்தி அல்லது எண்ணிக்கையை நேரடியாகத் தட்டச்சு செய்யலாம்.
3. Position விருப்பத்தில் உள்ள Before அல்லது After ரேடியோ பொத்தான் மூலம் சேர்க்கப்படும் நெடுவரிசையின் இடத்தைத் தேர்வு செய்யலாம்.
4. OK பொத்தானைக் கிளிக் செய்யவும்.
50.
| நகர்த்தல் | நகலெடுத்தல் |
|---|---|
| 1. இந்தச் செயல்பாட்டில், தேர்வு செய்யப்பட்ட உரையானது மூல இடத்திலிருந்து நீக்கப்பட்டு, இலக்கு இடத்தில் வைக்கப்படும். |
இந்தச் செயல்பாட்டில், தேர்வு செய்யப்பட்ட உரை, மூல இடத்திலிருந்துநகலெடுக்கப்பட்டு, இலக்கு இடத்தில்அனுப்பப்படும்.. |
| 2. Cut மற்றும் Paste என்ற பதிப்பாய்வு செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது |
Copy மற்றும் Paste என்ற பதிப்பாய்வு செயல்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards