11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/01/2019
+1 First Revision Test Important Questions
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
வானியல் மற்றும் ஈர்ப்பியலில் சமீபத்திய வளர்ச்சிகளை விவரி.
2.
மீளா செயல்முறைக்கான சில எடுத்துக்காட்டுகளை கூறுக.
3.
பின்வருவானவற்றில் ஒலி எதிரொலிப்பின் பயன்கள் யாவை?
4.
ஒரு சிறிய துளியின் முற்றுத் திசைவேகம் V, N எண்ணிக்கையுள்ள ஒத்த துளிகள் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய துளி உண்டாகிறது. எனில் பெரியதுளியின் முற்றுதிசைவேகம் யாது?
5.
சுதந்திர இயக்கக்கூறுகள் என்றால் என்ன? அதைக் கொண்டு இரு வேறு வெப்பநிலைகளில் உள்ள வாயு மூலக்கூறுகளில் மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் வேகப்பகிர்வு வரைந்து விவரி.
6.
சுருள்வில்கள் பக்க இணைப்பில் உள்ளபோது தொகுபயன் சுருள்வில்லைனைத் தருவி.
7.
தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகளின்
1. இயக்க ஆற்றலின் சராசரி மதிப்பானது நிலையாற்றலின் சராசரி மதிப்பிற்கு சமம்
2. சராசரி நிலையாற்றல் = சராசரி இயக்க ஆற்றல் = \(1\over 2\)(மொத்த ஆற்றல்)
எனக் காட்டுக.
8.
27oC வெப்பநிலையில் உள்ள கால்பந்து ஒன்றினுள் 0.5 மோல் காற்று மூலக்கூறுகள் உள்ளன. கால்பந்தின் உள்ளே உள்ள காற்றின் அக ஆற்றலைக் கண்டுபிடி.
9.
வெப்பத்தின் இயந்திரச் சாமானத்தை விவாதிக்க ஜூலின் ஆய்வை விவரி.
10.
கீழ்க்கண்டவற்றுள் எந்த சமன்பாடு தனிச்சீரிசை இயக்கத்தை குறிக்கிறது?
(i) x = A sin \(\omega\)t + B cos \(\omega\)t
(ii) x = A sin \(\omega\)t + B cos 2\(\omega\)t
(iii) x = A ei\(\omega\)t
(iv) x = A ln\(\omega\)t
11.
a. இந்த ஏரியில் அதிக மழை உள்ளது.
b. குவளையில் உள்ள சூடான தேநீரில் அதிக வெப்பம் உள்ளது.
இவ்விரண்டு கூற்றுகளில் உள்ள தவறு என்ன?
12.
பாய்மங்களில் பாஸ்கல் விதியைக் கூறி அதனை நிரூபி.
13.
C, E என்ற இரு ஒலிப்பான்கள் (Speakers) 5 m இடைவெளியில் பிரிதது வைக்கப்படடு, ஒரே ஒலி மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. C, E ன் மையம் O விலிருந்து 10 m தொலைவிலுள்ள புள்ளி A ல் மனிதன் ஒருவன் நின்று கொண்டுள்ளான். A யிலிருந்து 1 m தொலைவிலுள்ள B என்ற புள்ளிக்கு (OC க்கு இணையாக) நடந்து செல்கிறான் (படத்தில் காட்டியவாறு) B ல் ஒலிகளின் முதல் சிறுமத்தை உணர்கிறான். ஒலி மூலத்தின் அதிர்வெண்ணைக் காண்க . (ஒலியின் திசைவேகம் 343 m s-1 எனக் கொள்க ).
14.
குன்றின் உச்சியிலிருந்து அருவி (நீர்) கீழ்நோக்கி பாய்வது ஏன்?
15.
சூரிய குடும்பத்தின் படம் தரப்பட்டுள்ளது. இதிலிருந்து புதன், புவி மற்றும் வியாழன் கோள்கள் மீதான சூரியனின் ஈர்ப்பியல் புலங்களின் தன்மையினை குறிப்பிடுக.

1.
2.
இயற்கையாக நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மீளா நிகழ்வுகள் ஆகும். சில ஆர்வமூட்டும் எடுத்துக்காட்டுகளை இங்கு காண்போம்.
1. வாயு அடைத்து வைக்கப்பட்ட குடுவையை திறந்தவுடன், குடுவையில் இருந்த வாயு மூலக்கூறுகள் மெதுவாக அறை முழுவதும் பரவுகின்றன. அவை மீண்டும் குடுவைக்கு வருவதில்லை.
2. பேனா மைத்துளி சொட்டு ஒன்றைத் தண்ணீரில் விடும்போது, மைத்துளி தண்ணீரில் மெதுவாக பரவும். அந்த பரவிய மைத்துளி மீண்டும் ஒன்று சேராது.
3. சர்றே உயரமான இடத்திலிருந்து விழும் பொருள் தரையை அடைந்த உடன், பொருளின் மொத்த இயக்க ஆற்றல் தரையின் மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலாக மாற்றமடைகிறது. அதில் ஒரு சிறுபகுதி ஒலி ஆற்றலாக இழக்கப்படுகிறது. தரையின் மூலக்கூறுகளுக்கு மாற்றமடைந்த இயக்க ஆற்றலை மீண்டும் ஒன்றிணைத்து பொருள் தானாகவே மேலே செல்ல இயலாது.
வெப்ப இயக்கவியலின் முதல் விதியின்படி மேலே கூறப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் எதிர்த்திசையில் நடக்கவும் சாத்தியமுண்டு. ஆனால் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதி இந்நிகழ்ச்சிகளை எதிர்த்திசையில் நடக்க அனுமதிக்காது. இயற்கையின் முக்கிய விதிகளில் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியும் ஒன்றாகும். இவ்விதி இயற்கை நிகழ்வுகள் நடைபெறும் திசையை தீர்மானிக்கிறது.
3.
ஒலியின் எதிரொலிப்பின் பயன்கள்:
இதயத்துடிப்புமானி
இது ஒலியின் பன்மடங்கான எதிரொளிப்பின் தத்துவத்தில் இயங்குகிறது.

இது மூன்று பகுதிகளை கொண்டது.
(i) இதயத்தின் மீது வைக்கும் பகுதி
(ii) காதில் வைக்கும் பகுதி
(iii) ரப்பர் குழாய்
(i) இதயத்தின் மீது வைக்கும் பகுதி : இது சிறிய தட்டு வடிவிலான ஒத்ததிர்வுச் சவ்வு. இது ஒலியை மிக நுண்ணியமாக உணரும். மேலும் உணர்ந்த ஒலியை பெருக்கும்.
(ii) காதில் வைக்கும் பகுதி: இது உலோகக் குழாய்களால் ஆனது. இது இதயத்திலிருந்து உணர்ந்த ஒளியை கேட்கப் பயன்படுகிறது.
(iii) ரப்பர் குழாய்: இது இதயம் மீது வைக்கும் பகுதியையும் இணைக்கிறது. இதயம் மீது வைக்கும் பகுதியின் சவ்வு உணர்ந்த ஒலியை காதில் வைக்கும் பகுதிக்கு எடுத்துச் செல்கிறது. நுரையீரலின் சத்தம் அல்லது இதயத்தின் துடிப்பு அல்லது உடல் உள் உறுப்புகள் ஏற்படுத்தும் ஒலியை உணர்ந்து, அதை காதில் வைக்கும் பகுதிக்கு ரப்பர் குழாயில் ஏற்படும் பன்மடங்கு எதிரொலிப்பு மூலம் எடுத்துச் செல்கிறது.
எதிர் முழக்கம் (Reverberation):
மூடிய அறை ஒன்றினுள் ஒலி தொடர்ந்து சுவர்களினால் எதிரொலிக்கப்படும்போது, ஒளிமூலம் ஒலி ஏற்படுத்துவதை நிறுத்திய பிறகும், ஒலிமூலம் ஒலி ஏற்படுத்துவதை நிறுத்திய பிறகும், ஒலி மீது (reverberation) இருக்கும் நிகழ்வு எதிர் முழக்கம் எனப்படும். ஒலி மூலம் ஒலி ஏற்படுத்துவதை நிறுத்திய பிறகு ஒலி கேட்கும் நேரம் "எதிர் முழக்க நேரம்" (reverberation time) எனப்படும். எதிர் முழக்க நேரம் கூடத்தில் ஒளியின் தனியில்ப்பைப் பாதிக்கும். எனவே, அரங்கங்கள் உகந்த அளவு எதிர் முழக்க நேரம் அமையுமாறு அமைக்கப்படுகிறது.
4.
முற்றுதிசைவேகம் = \(V=\frac { 2 }{ 9 } \frac { { r }^{ 2 }\left( \rho -\sigma \right) g }{ \eta } \)
= \(\frac { V }{ { r }^{ 2 } } =\frac { 2 }{ 9 } \left[ \frac { \left( \rho -\sigma \right) g }{ \eta } \right] \)
= \(\frac { V }{ { r }^{ 2 } } =\frac { 2g }{ 9\eta } \left( \rho -\sigma \right) \) ......(1)
இதைப் போலவே பெரிய துளிக்கு
\(\frac { V }{ { R }^{ 2 } } =\frac { 2g }{ 9\eta } \left( \rho -\sigma \right) \)........(2)
சமன் (1) ஐ (2) ஆல் வகுக்க
\(\frac { V }{ V' } =\frac { { r }^{ 2 } }{ { R }^{ 2 } } \)
\({ V }^{ ' }=V\left( \frac { R }{ r } \right) ^{ 2 }\)
N துளிகள் எனில்
ஒரு பெரிய துளியின் பருமன் = N துளிகளின் பருமன்
\(\frac { 4 }{ 3 } \pi { R }^{ 3 }=N\left( \frac { 4 }{ 3 } \pi { r }^{ 3 } \right) \quad \) [கோணத்தின் பருமன் V = \(\frac { 4 }{ 3 } \pi { r }^{ 3 }\)]
R3 = N(r3)
R3 = \({ N }^{ \frac { 1 }{ 3 } }\) r [கனமூலம் எடுக்க ]
பெரிய துளியின் முற்றுத் திசைவேகம்
= \(\left( \frac { R }{ r } \right) ^{ 2 }\times V\)
= \(\left[ \frac { \frac { { N }^{ \frac { 1 }{ 3 } } }{ r } }{ r } \right] \times V=\left( { N }^{ \frac { 1 }{ 3 } } \right) ^{ 2 }\times V\)
= \({ N }^{ \frac { 2 }{ 3 } }\times V\)
5.
முப்பரிமாண வெளியிலுள்ள வெப்ப இயக்கவியல் அமைப்பு ஒன்றின் நிலை மற்றும் அமைப்பினை விவரிக்கத் தேவைப்படும் குறைந்தபட்ச சார்பற்ற ஆயஅச்சுக்கூறுகளின் எண்ணிக்கையே சுதந்திர இயக்கக்கூறுகள் என அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு:
1.x - அச்சுத்திசையில் இயங்கும் தனித்தத் துகளொன்றின் இயக்கத்தினை முழுமையாக விளக்க, ஒரே ஒரு ஆய அச்சுக்கூறு மட்டுமே போதுமானது. எனவே அத்துகளின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை ஒன்று ஆகும்.
2. தளம் ஒன்றில் இயங்கும் துகளினை முழுமையாக விளக்க, இரு ஆய அச்சுக்கூறுகள் தேவைப்படும். எனவே அத்துகளின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை இரண்டு ஆகும்.
3.இதேபோன்று வெளியில் (Space) இயங்கும் துகளொன்றின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை மூன்று ஆகும்.
கொள்கலன் ஒன்றின் N வாயு மூலக்கூறுகள் உள்ளன எனக்கருதினால், அவற்றின் மொத்த சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை f=3N ஆகும்
இருவேறு வெப்பநிலைகளில் உள்ள வாயு மூலக்கூறுகளின் மேல்ஸ்வெல் போல்ட்ஸ்மென் வேகப்பகிர்வு வரைபடம்

ஆனால் அமைப்பு ஒன்றிற்கு q எண்ணிக்கையில் அமைந்த இயக்கத்தடைகள் (Constraints)இருப்பின், அவ்வமைப்பின் சுதந்திர இயக்கக்கூறுகளின் எண்ணிக்கை f=3N-q. இங்கு N என்பது துகள்களின் எண்ணிக்கையாகும்.
6.
(i) விசை Fஐ வலதுபுறமாக செலுத்துவதாக கொள்வோம். இந்நேர்வில், இரு சுருள்களும் ஒரே அளவிலான நீட்சி அல்லது இறுக்கத்தினை அடைகின்றது. நிறை m அடைந்த இடப்பெயர்ச்சி எனில்

இங்கு kp என்பது தொகுபயன் சுருள்மாறிலி ஆகும். முதல் சுருளில் x நீட்சியை ஏற்படுத்தும் விசை F1 எனவும், இரண்டாவது சுருளில் அதே அளவு x நீட்சியை ஏற்படுத்தும் விசை F2 எனவும் கொண்டால், தொகுபயன் விசையானது
F =-k1x-k2x ......(2)
சமன்பாடு 1 மற்றும் 2 ஆகியவற்றை சமன் செய்ய நாம் பெறுவது
kp =k1+k2 ......(3)
(ii) பொதுவாக n சுருள்வில்கள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டிருப்பின்,
kp =\(\overset { n }{ \underset { i=1 }{ \Sigma } } \)ki .......(4)
(iii) அனைத்து சுருள்வில் மாறிலியின் மதிப்பும் சமமெனில் அதாவது
k1=k2=...=kn=k
kp=nk
தொகுபயன் சுருள்மாறிலி n மடங்கு அதிகரிக்கும் என்பதை இது காட்டுகிறது. ஆகவே சுருள்வில்கள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டிருப்பின் தொகுபயன் சுருள் மாறிலி தனித்தனி சுருள் மாறிலியின் மதிப்பினைவிட அதிகமாக இருக்கும்.
7.
(Ek)சராசரி =\(\cfrac { 1 }{ 2 } \int _{ 0 }^{ T }{ { E }_{ k }dt } \)
= \(\cfrac { 1 }{ 2 } \int _{ 0 }^{ T }{ \cfrac { 1 }{ 2 } { mA }^{ 2 }{ \omega }^{ 2 }{ cos }^{ 2 }\omega dt } \)
= \(\cfrac { 1 }{ 4T } { mA }^{ 2 }{ \omega }^{ 2 }.T=\cfrac { 1 }{ 4 } { mA }^{ 2 }{ \omega }^{ 2 }\)
\(\left( { E }_{ p } \right) _{ ave }=\cfrac { 1 }{ T } \int _{ 0 }^{ T }{ { E }_{ p }dt } \)
= \(\cfrac { 1 }{ T } \int _{ 0 }^{ T }{ \cfrac { 1 }{ 2 } { m\omega }^{ 2 }{ A }^{ 2 }{ sin }^{ 2 }\omega tdt } \)
= \(\cfrac { 1 }{ 2T } .m{ \omega }^{ 2 }{ A }^{ 2 }\int _{ 0 }^{ T }{ \cfrac { 1-\cos { 2\omega t } }{ 2 } dt } \)
= \(\cfrac { 1 }{ 4T } .m{ \omega }^{ 2 }{ A }^{ 2 }\left[ t-\cfrac { sin2\omega t }{ 2\omega } \right] ^{ T }_{ 0 }\)
\(\left( { E }_{ p } \right) _{ ave }=\cfrac { 1 }{ 4T } .m{ \omega }^{ 2 }{ A }^{ 2 }\)
= \(m{ \omega }^{ 2 }\cfrac { { A }^{ 2 } }{ 4 } =\cfrac { 1 }{ 4 } { m\omega }^{ 2 }\)
\(\therefore \quad { E }_{ p }={ E }_{ k }\)
சராசரி இயக்க ஆற்றல்= (இயக்க ஆற்றல்) = \(\frac { 1 }{ T } \int _{ 0 }^{ T }\) (இயக்க ஆற்றல்)
சராசரி நிலை ஆற்றல் =(நிலை ஆற்றல்) = \(\frac { 1 }{ T } \int _{ 0 }^{ T }\)(நிலை ஆற்றல்)
8.
நல்லியல்பு வாயுவின் அக ஆற்றல் = \(\frac { 3 }{ 2 } \) NKT. காற்று மூலக்கூறுகளின் எண்ணிக்கை மோல்களின் எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சமன்பாட்டை பின்வரும் வடிவில் எழுத வேண்டும்.
\(U=\frac { 3 }{ 2 } \mu RT\)
இங்கு Nk = \(\mu R\) (\(\mu \) என்பது மோல்களின் எண்ணிக்கையாகும்)
வாயு மாறிலி R = 8.31 \(\frac { J }{ molK } \)
கெல்வின் வெப்பநிலை T = 273 + 27oC = 300 K
U = \(\frac { 3 }{ 2 } \) × 0.5 × 8.31 × 300 = 1869.75 J
இம்மதிப்பு, 57 kg நிறையுள்ள மனிதரொருவர் 8 m s-1 வேகத்தில் ஓடும்போது அவர் பெற்றிருக்கும் இயக்க ஆற்றலுக்குச் சமமானதாகும்.
9.
ஜூலின் வெப்ப இயந்திரவியல் சமானம் (Joule's Mechanical Equivalent of Heat)
1. பொருளொன்றின் வெப்பநிலையை அதனை வெப்பப்படுத்துவதன் மூலம் உயர்த்தலாம் அல்லது அப்பொருளின்மீது வேலை செய்வதன் மூலம் உயர்த்தலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஜேம்ஸ் ஜூல் என்ற அறிவியல் அறிஞர் இயந்திர ஆற்றலை அக ஆற்றலாகவும், அக ஆற்றலை இயந்திர ஆற்றலாகவும் மாற்ற முடியும் என்று நிரூபித்தார்.
2. அவரின் ஆய்வின் இரண்டு நிறைகள் கயிறு ஒன்றின் வழியே துடுப்பு சக்கரத்துடன் (Paddle wheel) இணைக்கப்பட்டுள்ளன. புவியீர்ப்பு விசையால் இரண்டு நிலைகளும் h தூரத்திற்கு கீழேவரும்போது 2mgh அளவு நிலை ஆற்றலை இரண்டு நிறைகளும் இழக்கின்றன.
3. நிறைகள் கீழே வரும்போது நீரினுள் உள்ள துடுப்பு சக்கரம் சுற்றும். எனவே துடுப்பு சக்கரத்திற்கும் நீருக்கும் இடையே ஓர் உராய்வு விசைத்தோன்றும். இது நீரில் வெப்பநிலையை உயர்ந்தும். இங்கு ஈர்ப்பு நிலை ஆற்றல் (Gravitational potential energy) நீரில் அக ஆற்றலாக மாற்றமடைவதை இது உணர்த்துகிறது.
4. புவியீரப்புவிசையால் செய்யப்பட்ட வேலையினால் நீரில் வெப்பநிலை உயர்ந்துள்ளது. உண்மையில் வெப்பத்தை கொடுப்பதால் ஏற்படும் அதே விளைவை இயந்திரத்தைக் கொண்டுசெய்யப்படும் வேலையினால் ஏற்படுத்த முடியும் என்று ஜூல் நிரூபித்துள்ளார்.

5. 1 கிராம் நிறைடைய நீரில் வெப்பநிலையை 1oC உயர்த்த 4.186 J ஆற்றல் தேவைப்படும் என்று ஜூல் கண்டறிந்தார். பழங்காலங்களில் வெப்பமானது கலோரி (Clorie)என்ற அலகினால் அளக்கப்பட்டது
1 cal=4.186 J
இதற்கு ஜூலின் வெப்ப இயந்திரவியல் சமானம் என்று பெயர்.
10.
(i) x = A sin \(\omega\)t + B cos \(\omega\)t
\({dx\over dt}\)= A\(\omega\) cos \(\omega\)t − B\(\omega\) sin \(\omega\)t
\({d^2x\over dt^2}\)= − \(\omega\)2 (A sin \(\omega\)t+ B cos \(\omega\)t)
\({d^2x\over dt^2}\)= − \(\omega\)2x
இந்த வகைக்கெழுச் சமன்பாடு தனிச்சீரிசை இயக்கத்தின் வகைக்கெழுச் சமன்பாடு போன்று உள்ளது. எனவே x = A sin \(\omega\)t + B cos \(\omega\)t தனிசீரிசை இயக்கத்தினை குறிக்கும்.
(ii) x = A sin \(\omega\)t + B cos 2\(\omega\)t
\({dx\over dt}\)= A\(\omega\) cos \(\omega\)t - B(2\(\omega\)) sin2\(\omega\)t)
\({d^2x\over dt^2}\)= −\(\omega\)2 (A sin \(\omega\)t +4B\(\omega\) cos 2\(\omega\)t)
\({d^2x\over dt^2}\)\(\neq\) − \(\omega\)2x
இந்த வகைக்கெழுச் சமன்பாடு தனிச்சீரிசை இயக்கத்தின் வகைக்கெழுச் சமன்பாடு போன்று அமையவில்லை
எனவே x = A sin \(\omega\)t + B cos 2\(\omega\)t என்ற சார்பு தனி சீரிசை இயக்கத்தினை குறிக்காது.
(iii) x = A ei\(\omega\)t
\({dx\over dt}\)=A ei\(\omega\)t (i2 = −1)
\({d^2x\over dt^2}\)= −A \(\omega\)2 ei\(\omega\)t
\({d^2x\over dt^2}\)= − \(\omega\)2x
இந்த வகைக்கெழுச் சமன்பாடு தனிச்சீரிசை இயக்கத்தின் வகைக்கெழுச் சமன்பாடு போன்று உள்ளது. எனவே x = A ei\(\omega\)t தனிசீரிசை இயக்கத்தினைக் குறிக்கும்.
(iv) x = A ln\(\omega\)t
\({dx\over dt}=\left(A\over \omega t\right)\omega={A\over t}\)
\({d^2x\over dt^2}=-{A\over t^2}\Rightarrow{d^2x\over dt^2}\neq-\omega^2 x\)
இந்த வகைக்கெழுச் சமன்பாடு தனிச்சீரிசை இயக்கத்தின் வகைக்கெழுச் சமன்பாடு போன்று அமையவில்லை
எனவே x = A ln\(\omega\)t என்ற சார்பு தனி சீரிசை இயக்கத்தினை குறிக்காது.
11.
a. மழைபொழியும் போது, மேகங்களிலிருந்து ஏரி தண்ணீரைப் பெறுகிறது. மழை பொழிவது நின்றவுடன் ஏரி முன்பு இருந்ததைவிட அதிகத் தண்ணிரைப் பெற்றிருக்கும். இங்கு மழை என்பது மேகங்களிருந்து தண்ணீரைப் பெறும் ஒரு செயலாகும். மழை பொழிவது ஒரு அளவு அல்ல. மாறாக மழை மேகங்கள் தண்ணீராக மாற்றமடைந்து ஏரிக்கு செல்வதைக் குறிக்கும். எனவே ஏரியில் அதிக மழை உள்ளது என்று கூறுவது தவறாகும். மாறாக ஏரியில் அதிகத் தண்ணீர் உள்ளது என்று கூறுவதே பொருத்தமானதாகும்.
b. குவளையில் உள்ள தேநீர் வெப்பப்படுத்துவதால் அடுப்பிலிருந்து வெப்பத்தைப் பெறுகிறது. தேநீரை இறக்கி வைத்தவுடன் அது முன்பிருந்ததைவிட அதிக அக ஆற்றலைப் பெற்றிருக்கும். வெப்பம் என்பது உயர் வெப்பநிலையிலுள்ள பொருளுக்கு ஆற்றல் செல்வதைக் குறிக்கிறது. வெப்பம் ஓர் அளவு அல்ல. எனவே குவளையில் உள்ள தேநீரில் அதிக வெப்பம் உள்ளது என்று கூறுவதை விட குவளையில் உள்ள தேநீர் அதிக சூடாக உள்ளது என்பதே பொருத்தமானதாகும்.
12.
பாஸ்கல் விதியின் கூற்றானது ஒரு திரவத்தில் உள்ள ஒரு புள்ளியில் அழுத்தம் மாறினால் அந்த மாறுபாடு மதிப்பு குறையாம திரவம் முழுவதற்கும் பரப்பப்படுகிறது.
நிரூபணம்:
(i) பாஸ்கல் விதியின் ஒரு செயல்முறை பயன்பாடு, குறைவான விசையைக் கொண்டு அதிக பளுவைத் தூக்க பயன்படும் நீரியல் தூக்கி (Hydraulic lift) ஆகும். இது ஒரு விசைப் பெருக்கி. இது A மற்றும் B என்ற ஒன்றுடன் ஒன்று கிடைமட்டக் குழாயால் இணைக்கப்பட்டு திரவத்தால் நிரப்பப்பட்ட இரு உருளைகளைக் கொண்டுள்ளது.
(ii) அவற்றினுள் A1 மற்றும் A2 (A2 > A1) குறுக்குவெட்டுப்பரப்புக்கள் கொண்ட உராய்வற்ற பிஸ்டன்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறிய பிஸ்டனின் மீது நோக்கிய விசை F செலுத்தப்படுவதாக் கொண்டால் இந்த பிஸ்டனுக்கு கீழ் உள்ள திரவத்தின் அழுத்தம் P(இங்கு \(p=\frac { { F }_{ 1 } }{ { A }_{ 1 } } \)) என்ற மதிப்பிற்கு அதிகரிக்கிறது.
(iii) ஆனால் பாஸ்கல் விதிப்படி, இந்த அதிகரிக்கப்பட்ட அழுத்தம் P அனைத்து திசைகளிலும் மதிப்பு குறையாமல் பரப்பப்படுகிறது. எனவே பிஸ்டன் B - இந்த மீது ஒரு அழுத்தம் செலுத்தப்படுகிறது. பிஸ்டன் B - இந்த மீது மேல்நோக்கிய விசை
\({ F }_{ 2 }=P\times { A }_{ 2 }=\frac { { A }_{ 2 } }{ { A }_{ 1 } } \times { A }_{ 2 }\Rightarrow { F }_{ 2 }\frac { { A }_{ 2 } }{ { A }_{ 1 } } \times { F }_{ 1 }\)
(iv) எனவே சிறிய பிஸ்டன் A இந்த மீது உள்ள விசையை மாற்றுவதன் மூலம் பிஸ்டன் B -இந்த மீதுள்ள விசையானது \(\frac { { A }_{ 2 } }{ { A }_{ 1 } } \) என்ற காரணியின் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த காரணி நீரியல் தூக்கியின் இயந்திர இலாபம் எனப்படும்.
13.
B யில் இரு ஒலி அலைகளும் 180° (எதிர்கட்டம்) ல் சந்தித்தால், முதல் சிறுமம் ஏற்படும்.
பாதை வேறுபாடு \(\Delta x ={\lambda \over 2}\)
பாதை வேறுபாட்டைக்கான பாத நிலங்கள் x1, x2 வைக் காண வேண்டும்.
செங்கோன் முக்கோணம் BDC ல்,
DB = 10m மற்றும் \(OC={1\over2}(5)=2.5m\)
CD = OC −1 = 2.5 m−1 m = 1.5 m
\(x_1=\sqrt{(10)^2+(1.5)^2}=\sqrt{100+2.25}\)
\(=\sqrt{102.25}=10.1m\)
செங்கோன் முக்கோணம் EFB ல்
DB = 10m மற்றும் \(OC={1\over2}(5)=2.5m=FA\)
FB = FA + AB = 2.5 m + 1 m = 3.5 m
\(x_2=\sqrt{(10)^2+(3.5)^2}=\sqrt{100+12.25}\)
\(=\sqrt{112.25}=10.6m\)
பாதை வேறுபாடு Δx = x2 − x1 = 10.6 m−10.1 m = 0.5 m இந்த பாதை வேறுபாடு \(\lambda\over2\) விற்கு சமமாக வேண்டும்.
\(Δx={\lambda\over2}=0.5⇒⋋=1.0m\)
ஒலி மூலத்தின் அதிர்வெண் காண
\(v=\lambda f⇒f={v\over \lambda}={343\over l}=343 Hz\)
=0.3 kHz
சற்றே வேறுபட்ட அதிர்வெண் கொண்ட இரு அலைகள் மேற்பொருந்தும்போது ஆக்க அழிவு குறுக்கீட்டு விளைவுகளுக்கு இடையே ஒரு சமகால மாறுபாடு உள்ளது. அதாவது அவை கால முறையாக ஒத்த மற்றும் எதிர் கட்டத்தில் அமைகின்றன.
14.
ஏனெனில் குன்றின் உச்சியில் ஈர்ப்பு தன்னிலை ஆற்றலானது புவிபரப்பில் ஈர்ப்பு தன்னிலை ஆற்றலை விட அதிகம்.

அதாவது > குன்று > தரை
வெக்டர் அளவுகளான \(\overrightarrow { { F }}\)அல்லது \({ \overrightarrow { E } }\)ஆகியவற்றை விட ஸ்கேலார் அளவுகளான U(r) அல்லது V(r) ஆகியவற்றைப் பயன்படுத்தி பொருள்களின் இயக்கத்தை எளிதாக பகுப்பாய்வு செய்ய முடியும். நவீன இயற்பியல் கோட்பாடுகளில் (modern theories physics) ஈர்ப்பு தன்னிலை ஆற்றல் (Potential) முக்கிய பங்கினை வகித்து வருகிறது.
15.
தொலைவு அதிகரித்தால் ஈர்ப்பு புலம் குறையும். எனவே சூரியன் வியாழன் மீது ஏற்படுத்தும் ஈர்ப்பு புலம் குறைவாக இருக்கும். சூரியனுக்கு மிக அருகே உள்ள புதனின் மீது செயல்படும் ஈர்ப்பு புலம் அதிகமாக இருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards