11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/03/2020
11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Five Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
வேர்செல்களில் நீர் செல்லும் மூன்று விதமான வழிகளை விளக்கு.
2.
பட்டையின் பணிகள் யாவை?
3.
ஒரு விதையிலை [புல்] இலையின் உள்ளமைப்பை படத்துடன் விளக்கு,
புறத்தோல்:
4.
மின் முனைப்பியக்க நீக்கம் மற்றும் மின்முனைப்பியக்க மீட்சி பற்றி எழுதுக.
5.
சுவாசநிறமிகளை பற்றி குறிப்பு எழுதுக.
6.
புரதக்குறைபாட்டு நோய்களைப் பற்றிக் குறிப்பு எழுதுக.
7.
எலும்பிற்கு, குறுத்தெலும்பிற்கும் உள்ள வேறுபாட்டை எழுதுக.
8.
9.
முதுகுநாண்களின் அடிப்படைப் பண்புகளை விளக்கு.
[அல்லது]
தொகுதி முதுகு நாணுடையவைகளின் தனித்துவமான அம்சங்களை விவரி.
10.
தோல் - தொடு உணர் உறுப்பு குறிப்பு தருக.
11.
ஹார்மோன்கள் செயல்படும் விதம் பற்றி எழுதுக?
12.
கணையம் அமைப்பு மற்றும் செயல்களை எழுதுக?
13.
தசை மண்டல மற்றும் எலும்பு மண்டலத் குறைபாடுகளை விவரி?
14.
அச்சுச்சட்டகம் பற்றி எழுதுக?
15.
தேனீ வளர்ப்பு பற்றி எழுதுக?
16.
பட்டுப்புழுவின் உணவுத் தாவரங்களைப் பயிரிடல் பற்றி எழுதுக?
17.
சிறுநீரகத்தின் பணிகளை வெறிப்படுத்துதல் பற்றி எழுதுக? ADH மற்றும் டையபெட்டிஸ் இன்சிபிடஸ்
18.
நெப்ரான்களின் இரத்த நுண் நாளத் தொகுப்பு பற்றி குறிப்பு எழுதுக.
19.
பூச்சியுண்ணும் உணவூட்டம் பற்றி எழுதுக.
20.
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஒட்டுண்ணி உணவூட்டம் பற்றி எழுதுக?
21.
சுவாசித்தலின் ஒட்டு மொத்த சுருக்க வரைபடம் வரைக?
22.
காற்று சுவாசித்தலின் போது CO2 வெளியிடுவதை நிரூபிக்க ஆய்வினை எழுதுக.
23.
ஆய்வுக்குழல் புனல் ஆய்வு நிரூபிக்கும் சோதனையை எழுதுக.
24.
ஒளி சுவாசம் படம் வரைக.
25.
ஆகிசின் வகைகளை எழுதுக.
26.
தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகளின் அட்டவணைப்படுத்துக.
27.
டைலோசஸ் அமைப்பினை படம் வரைந்து பாகங்களைக் குறிக்க?
28.
செல்களுக்கிடையே நடைபெறும் கடத்து முறையை அட்டவணைப்படுத்துக.
29.
ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசுக்களுக்கிடையேயான வேறுபாட்டினை எழுதுக.
30.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும்.
31.
உயிரியல் சொற்களை கீழ்க்காணும் சொற்றொடர்களுடன் அடையாளம் காண்க. கழிவு நீக்கம், கிளாமருலஸ் , சிறுநீர்ப்பை, கிளாமருலார் வடிதிரவம், சிறுநீர் நாளங்கள், சிறுநீர், பௌமானின் கிண்ணம், சிறுநீரக மண்டலம், மீண்டும் உறிஞ்சுதல், மிக்ட்யூரிஷன், சவ்வூடு பரவல், புரதங்கள், சமநிலை பேணுதல்
i. சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம்.
ii. பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது.
iii. சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல்.
iv. இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து.
vi. தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல்.
vii. ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது.
vii. சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது.
xi. சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர்.
xii. இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்துதல்.
xiii.சிறுநீரகங்கள். சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன.
xiv. கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல்.
xvii. இரத்தத்தில் மட்டும் காணப்பட்டு கிளாமருவார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது?
32.
பாலிடீன் குரோமோசோமின் அமைப்பை படுத்துடன் விளக்கு?
33.
34.
புரதத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.
35.
ஜிம்னோஸ்பெர்ம்களின் ஆஞ்சியோஸ்பெர்மகளுக் கிடையேயான வேறுபாடுகள் யாவை?
36.
இடைக்கால நிலை என்பது யாது? அதன் துணை நிலைகளை படத்துடன் விளக்கு.
37.
குறிப்பு எழுத்து: ஏமைட்டாசிஸ்.
38.
B-DNA , A-DNA, Z-DNA வின் பண்புகளை ஒப்பிடு.
39.
வாய்குழியில் உணவு செரித்தல் நடைபெறுவதை விளக்கு.
40.
டெரிடோஃபைட்டுகளின் பொதுப்பண்புகள் யாவை?
41.
டாட்டுரா மெட்டல் தாவரத்தை கலைச் சொற்களால் விளக்கு.
42.
இலை அடுக்கமைவின் வகைகளை படத்துடன் விளக்குக.
43.
பூஞ்சைகளின் நண்மைகள் யாவை?
44.
தவளைகளின் பொருளாதார முக்கியத்துவத்தை பட்டியலிடு.
45.
குறிப்பு எழுதுக: குமிழம்.
46.
ரசிமோஸ் வகை மஞ்சரியை வகைப்படுத்துக.
47.
மஞ்சரிகளின் வகைகள் யாவை?
48.
லாம்பிட்டோ மாரிட்டீ மற்றும் மெடாபையர் போஸ்துமா ஆகிய சீற்றங்களுக்கு இடையே புற பண்புகளில் உள்ள வேறுபாட்டினை அட்டவணைப்படுத்து
49.
APG IV வகைப்பாட்டின் எளிமை படுத்தப்பட்ட பதிப்புறு வரையவும்.
50.
51.
காற்று நுண்ணறைகளில் ஆக்ஸிஹீமோகுளோபின் உருவாவதற்கும் மற்றும் திசுக்களில் ஆக்ஸிஹீமோகுளோபினிலிருந்து O2 பிரிவதற்கும் இடையே உள்ள சூழல்கள் வேறுபாட்டைக் கூறு.
52.
இரத்தம் உரைதல் நடைபெறும் முறையை விளக்கு.
53.
சுற்றோட்ட மண்டலத்தின் முக்கிய பணிகளை விளக்கு படத்தினை வரையவும்.
54.
நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?
55.
56.
ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் C4 தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP-களை பயன்படுத்துவதாகும். C3 தாவரங்கள் 18 ATP - க்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் விளக்குகிறார். பின்னர் அதே ஆசிரியர் C4 தாவரங்கள் தான் C3-யை விட சிறந்த தகவமைப்பு பெற்றுள்ளதாக கூறுகிறார். இந்த முரண்பாட்டிற்க்கான காரணங்களை உன்னால் கூற முடியுமா?
57.
ஒரு மரத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காணப்படும் பொது மைய வளையங்கள், வளர்ச்சி வளையங்கள் எனப்படுகிறது. வளர்ச்சி வளையங்கள் எவ்வாறு உருவாகின்றன. அதன் முக்கியத்துவம் யாது?
58.
சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை ?
59.
காற்று சுவாசித்தலின் ஒரு மூலக்கூறு சுக்ரோஸ் முழுவதுமாக ஆக்ஸிஜனேற்றமடைந்து உருவாகும் நிகர விளைபொருள்கள்களை தற்போதய பார்வையில் எவ்வாறு கணக்கிடுவாய்.
60.
மைட்டோகாண்ட்ரியா உட்சவ்வில் நடைபெறும் வினைகளை விவரி.
61.
தொடர்ந்து பகுப்படையும் திசு ஆக்குத்திசுவாகும். பக்க ஆக்குத்திசுவின் செயல்பாட்டை இதனுடன் தொடர்புபடுத்துக.
62.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.
63.
ஸ்கிலிரைடுகளின் வகைகளை வவரி.
64.
ஐந்து உலக வகைப்பாட்டில் உள்ள ஐந்து உலகத்தின் பெயர், அதில் உள்ள விலங்குகளின் பண்புகளை தொகுத்து அட்டவணைப்படுத்துக.
65.
விலங்குகளுக்கு பெயரிடும் முறையினால் ஏற்படும் நன்மைகள் எவை?
66.
67.
சொல் சோதனை: இதயத்தசை, ஏட்ரியாக்கள், மூவிதழ்வால்வு, சிஸ்டோல், ஆரிக்கிள்கள், தமனிகள், டயஸ்டோல், வெண்டிரிக்கிள், ஈரிதழ்வால்வு, நுரையீரல் தமனி, இதய இயக்கச் சூழற்சி, அரைச்சந்திர வடிவ வால்வு, சிரைகள், நுரையீரல் சிரை, இரத்த நுண் நாளங்கள், பெருஞ்சிரை, பெருந்தமனி.
|01. சுற்றோட்டத்தின் முக்கியத் தமனி
02. இடது ஏட்ரியம் மற்றும் வென்டிரிக்கிளுக்கு இடையே உள்ள வால்வு
03. இதயம் விரிவடைதலைக் குறிக்கும் சொல்
04. ஏட்ரியத்தின் மாற்று பெயர்
05. முக்கியச் சிரை
06. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளம்
07. இதயத்தின் இரு மேலுறையின் பெயர்
08. தடிமனான சுவர் கொண்ட இதய அறை
09. இதயத்திலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தநாளம்
10. முழுமையடைய 0.8 நொடிகள்
11. இதயத்திலிருந்து இரத்தம் வெளியேற்றும் பகுதியிலுள்ள வால்வு
12. இதயத்தை நோக்கி இரத்தத்தைக் கொண்டுவரும் இரத்த நாளம்
13. நுரையீரலிருந்து இதயத்திற்கு இரத்தைக் கொண்டு வருவது
14. இதயக் கீழறைகள் இரண்டின் பெயர்
15. பெருந்தமனிக்குள் நுழைந்தபின் மீண்டும் இதயக் கீழறைக்குள் இரத்தம் திரும்பாமல் காப்பது.
16. ஒரு இதயத்துடிப்பின் தொழில் நுட்பப் பெயர்.
17. வலது ஆரிக்கிளுக்கும் வென்டிரிக்கிளுக்கு மிடையேயான வால்வு
18. இதயம் சுருங்குவதைக் குறிக்கும் தொழில் நுட்பப் பெயர்
19. மிக்க குறுகிய இரத்த நாளங்கள்.
68.
குருத்தெலும்பின் பண்புகளை பட்டியலிடு.
69.
கால்நடை இனப்பெருக்கத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றி விவாதி
70.
பட்டுப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு
71.
72.
மார்புக்கூட்டை உருவாக்கும் விலாஎலும்புகளின் வகைகள் யாவை?
73.
74.
டையாபெட்டிஸ் மெலிட்டஸ் மற்றும் டையாபெட்டிஸ் இன்சிபிடஸ் ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்களைக் குறிப்பிடுக.
75.
யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது?இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது.மேற்கண்ட கழிவுநீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.
76.
நுகர்ச்சி உணர் உறுப்பின் அமைப்பினை விவரி.
77.
அனைத்து உணர்வு உறுப்புகளிலும் சுவை உணர்வு உறுப்பு மகிழ்வூட்டக் கூடியது (Pleasurable) இதனுடன் தொர்புடைய உணர்வியை படத்துடன் விளக்குக.
78.
கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

79.
80.
எபிதீலியம் என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளின் பண்புகளைத் தருக.
81.
இணைப்புத்திசுக்களை வகைப்படுத்தி அவற்றின் செயல்களைத் தருக.
82.
எந்தவொரு நிலையில் ஆக்ஸிஜன் கடத்தலில் சிக்கல்கள் ஏற்படுகிறது என்பதை விளக்கு.
83.
சுவாசப் பாதையை விளக்கும் தொடர் விளக்க வரைபடத்தை (flow chart) வரைக .
84.
முட்டையிடும் மற்றும் குட்டி ஈனும் பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் முறையே சம எண்ணிக்கையில் இருக்குமா? ஏன்?
85.
கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கிக் கீழ்க்கழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

அ) விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு.
ஆ) இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்தன்மை எத்தகையது?
இ) இவ்வுயிரியில் தலைக் காணப்படுகிறதா?
ஈ) இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
உ) இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்?
ஊ) இவ்விலங்கில் நரம்பு செல்கள் உள்ளனவா?
86.
விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?
87.
பல வகையான RNA-வின் அமைப்பு மற்றும் பணிகளை விளக்குக.
88.
நொதியின் செயல் வினைகளைப் பாதிக்கும் காரணிகள் யாவை ?
89.
புரோநிலை I-ல் பாக்கிடீன் மற்றும் டிப்ளோட்டீன் பற்றி எழுதுக.
90.
தாவரசெல்களிலும் விலங்கு செல்களிலும் சைட்டோகைனிசிஸ் - வேறுபடுத்துக.
91.
தாவரச் செல்லின் நுண்ணமைப்பை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்.
92.
93.
கீழ்கண்டவற்றின் ஒற்றுமை, வேற்றுமைகளை எழுதுக.
அ) அவிசீனியா, ட்ராபா
ஆ) ஆலமரம், இலவம் பஞ்சு மரம்
இ) கதிர்கோல் வடிவ வேர், பம்பர வடிவ வேர்
94.
லில்லியேசி குடும்பத் தாவரங்களை சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?
95.
உயிரினங்களின் பரிணாம வரலாற்று பேழையை எவ்வாறு மரபணு குறிப்பான்கள் திறக்கின்றன.
96.
லைக்கென்களின் பொதுப்பண்புகளை எழுதுக.
97.
தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி.
98.
படத்தில் காட்டியுள்ளவாறு தேர்வு செலுத்து சவ்வாலான ஒரு செயற்கையான செல் அளவீடுகளைப் பார்த்துக் கீழ்காணும் வினாக்களுக்கு விடை தருக.
அ) நீர் செல்லும் பாதையினை அம்புக் குறியிட்டுக் காட்டுக
ஆ) செல்லுக்கு வெளியமைந்த கரைசலில் நிலை ஐசோடானிக், ஹைபோடானிக் அல்லது ஹைப்பர்டானிக்?
இ) செல்லின் நிலை ஐசோடானிக்,ஹைபோடானிக் அல்லது ஹைப்பர்டானிக்?
ஈ) சோதனை முடிவில் செல்லானது அதிகத் தளர்வு நிலை, அதிக விறைப்பு நிலை அல்லது அதே நிலையில் நீடிக்குமா?
உ) இச்செயற்கை செல்லில் நடைபெறுவது உட்சவ்வூடு பரவலா அல்லது வெளிச்சவ்வூடு பரவலா?காரணம் கூறு.
99.
1.
1. அப்போபிளாஸ்ட் வழிப்பாதை:
அப்போபிளாஸ்டில் நீரானது முழுக்க செல் சுவர் அல்லது தாவரத்தின் உயிரற்ற பகுதி வழியாக எவ்வித சவ்வினையும் கடக்காமல் செல்வது அப்போபிளாஸ்ட் கடத்தல் எனப்படும்.
2. புரோட்டாபிளாஸ் வழிப்பாதை[சிம்பிளாஸ்ட்] :
(i) சிம்பிளாஸ்ட் வழியில் நீரானானது வெளிப்புறம் அமைந்த செல் வேர் செல்லின் பிளாஸ்மா சவ்வு வழியாக அருகமைந்த செல்லின் சைட்டோபிளாசத்தினை அடைகிறது.
(ii) சைட்டோபிளாசத்தில் செல்லும்போது நீர் வாக்குவோலுக்குள் செல்லாமல் அதைச் சுற்றியே செல்கிறது.
(iii) இதன் மூலம் அதிகப்படியான செல்சவ்வினை கடக்காமல் நீர் இறுதியாக சைலத்தினை அடைகிறது.
3. சவ்விடை வழிப்பாதை :
(i) சவ்விடை வழியில் நீரானது படிப்படியாக செல்லில் ஒரு புறம் நுழைந்து மறுபுறம் வெளிவருகிறது.
(ii) இவ்வழியில் குறைந்தது ஒரு செல்லில் இரண்டு சவ்வுகளை தாண்டியே நீர் செல்கிறது.
(iii) நீர் டோனோபிளாஸ்டுக்குள்ளும் செல்லும்.
2.
1. ஒட்டுண்டு, பூச்சிகள், பூஞ்சைகளில் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது.
2. நீர் ஆவியாதலை தடை செய்கிறது.
3. வெளிப்புற சூழல் மாறுபாட்டிலிருந்து பாதுகாக்கிறது.
4. பூச்சி விரட்டி, அழுகல் பாதுகாப்பு, நெருப்பு பாதுகாப்பு, மருந்துகள் மற்றும் நறுமணப் பொருட்கள் பெற பயன்படுகிறது.
5. பட்டையில் உள்ள ஃபுளோயம் உணவினைக் கடத்துகிறது.
6. பட்டையில் உள்ள இரண்டாம் நிலை புறணி உணவினை சேமிக்கிறது.
3.
1. மேல்புறத்தோல் மற்றும் கீழ்ப்புறத்தோல் கொண்டுள்ளது.
2. வெளிபுறச்ச சுவரின் மீது கியூட்டிகள் படிந்துள்ளது.
3. இரு புறதோல்களிலும் இலைத்துளைகளின் எண்ணிக்கை சமமாக உள்ளது.
4. இலைத்துளைகளை பாதுகாக்கும் காப்பு செல்கள் பசுங்கணிங்களைப் பெற்று சப்ளாக்கட்டை வடிவத்தில் உள்ளது.
5. பிற புறதோல் செல்களில் பசுங்கணிகங்கள் காணப்படவில்லை.
6. காப்பு செல்களைச் சூழ்ந்து துணை செல்கள் காணப்படுகிறது.
7. மேல் புறத்தோலின் சில செல்கள் பெரியவையாகவும், மெல்லிய செல்சுவருடன் காணப்படுவது, குமிழுரு செல்கள் (அ) இயக்கச் செல்கள் எனப்படும்.
8. இச்செல்கள் தட்பவெப்ப மாறுதலுக்கு ஏற்ப இலை சுருளுதலுக்கும், சுருள் நீங்குதலுக்கும் உதவுகின்றன.
9. புறத்தோலில் சிலிக்கா செல்கள் காணப்படுகிறது.
இலையிடைத்திசு :
1. மேற்புறத்தோலுக்கும் கீழ்ப்புறத்தோலுக்கும் இடையில் காணப்படும் அடிப்படை திசுவாகும்.
2. பாலிசேட் மற்றும் பஞ்சு பாரங்கைமா எனும் வேறுபாடு அடையவில்லை.
3.அனைத்து செல்களும் சமவிட்டதுடன், மெல்லிய சுவருடன்,செல்லிடை வெளிகளுடன் அதிக பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளன.
வாஸ்குலக் கற்றைகள்:
1. வாஸ்குலக் கற்றைகள் அளவில் வேறுபட்டு, சிறியவையாக உள்ளன.
2. பெரிய வாஸ்குலக் கற்றையின் மேற்புறமும், கீழ்புறமும் ஸ்கிலிரங்கைமா திசுவாலான திட்டுகள் காணப்படுகிறது.
3. இவை இலைகளுக்கு உறுதி அளிக்கிறது.
4. இவை இலைகளுக்கு உறுதி அளிக்கிறது.
5.வாஸ்குலக் கற்றையில் ஸ்கிலிரங்கைமா திட்டுகள் காணப்படுவதில்லை.
6. வாஸ்குலக் கற்றைகள் ஒன்றிணைந்தவை, மூடியவகையாகும்.
7.C4 தாவரங்களான கற்றை உறை செல்கள் ஒளிச்சேர்க்கையில் பங்கு பெறுகின்றன.
8. இந்த கற்றை உறை கிரான்ஸ் உறை எனப்படும்.
4.
மின்முனைப்பியக்க நீக்கம்:
1. ஒரு நரம்பிழை தூண்டப்பட்டவுடன்,சோடியம் மின்னூட்டக் கால்வாய் திறக்கிறது.
2. அதே நேரத்தில் பொட்டாசியம் மின்னூட்டக் கால்வாய் மூடப்படுகிறது. இதன் விளைவாகச் செல் வெளி திரவத்திற்குச் செல்லும் பொட்டாசிய அயனிகளின் வீதத்தை விட ஆக்ஸோபிளாசத்தினுள் செல்லும் சோடியம் அயனிகளின் வீதம் அதிகரிக்கிறது.
3. இச்செயலினால்,ஆக்ஸோலெம்மாவின் உட்பகுதி நேர்மறை மின்னூட்டத் தன்மையையும் வெளிப்பகுதி எதிர்மறை மின்னூட்த்தையும் பெறுகின்றன. இவ்வாறு மின்முனைப்பியக்க நீக்கம் எனப்படும்.
4. இந்நிகழ்வின்போது, தேவையான அளவு சோடியம் அயனிகள் செல்லினுள் சென்ற பின், மின்னழுத்தம் உச்ச நிலையை (-55mV) அடைகிறது.
5. இதற்கு உச்ச மின்னழுத்தம் என்று பெயர். இவ்வுச்சமநிலை மின் அழுத்தத்தைக் கொண்டு வரக் காரணமான தூண்டல் அளவிற்கு உச்ச அளவு தூண்டல் என்று பெயர்.
6. உச்ச அளவை விடக் குறைந்த மின்னழுத்ததில் நரம்பு செல்கள் எந்தவொரு மின்தூண்டலையும் கடத்த முடிவதில்லை.
7. இவ்வகை செயலே 'உண்டு அல்லது இல்லை கொள்கை எனப்படும்.சோடியம் அயனிகளின் உள் ளேற்றதால், சவ்வின் மின்னழுத்தம் மிக விரைவாக +45mV அளவிற்குச் செல்லும்.இதற்குக் கூர்முனை மின்னழுத்த அளவு என்று பெயர்.
மின்முனைப்பியக்க நீட்சி :
1. கூர்முனை மின்னழுத்த அளவை அடைந்தவுடன் ஆக்ஸோலெம்மாவில் உள்ள சோடியம் மின்னூட்டக்கால்வாய் திறக்கப்படுகிறது.
2. இதனால் சோடியம் அயனிகளின் உள்ளேற்றம் தடுக்கப்பட்டுப் பொட்டாசியம் மின்னூட்டக்கால்வாய் திறக்கப்படுகிறது.
3. எனவே செல்லினுள் நேர்மறை மின்னூட்ட அயனிகளின் அளவு குறைகிறது. இதனால் மின்னழுத்த அளவு மீண்டும் ஓய்வு நிலை மின்னழுத்த அளவை நோக்கிச் செல்கிறது.
4. எனவே K+ அயனிகள் ஆக்ஸோலெம்மாவை விட்டு வெளியேறுவதால் ஆக்ஸோலெம்மாவின் உட்புறம் மீண்டும் எதிர்மறை மின்தன்மையைப் பெறுகிறது.
5.இச் செயலே மின்முனைப்பியக்க மீட்சி எனப்படும்.
5.
ஹீமோகுளோபின்:
1. ஹீமோகுளோபின் இணைவுப்புரத வகையைச் சார்ந்தது. இதில் இரும்புச் சத்தடங்கிய நிறமிப்பகுதி 4% நிறமற்ற புரதமான ஹிஸ்டோன் வகை குளோபின் மீதிப்பகுதியியையும் கொண்டுள்ளது.
2. ஹீமோகுளோபின் மூலக்கூறு எடை 63,000 ஆகும் .
3. இதில் உள்ள நான்கு இரும்பு அணுக்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறுடன் இணையும் தன்மையுடையது.
மெட் ஹீமோகுளோபின்:
1. ஹீம் பகுதிப்பொருளான, இரும்பு இயல்பான ஃபெரஸ் நிலையில் இல்லாமல் ஃபெரிக் நிலையில் இருந்தால் அதற்கு மெட்ஹீமோகுளோபின் என்று பெயர்.
2. இதனுடன் ஆக்ஸிஜன் இணைவதில்லை. பொதுவாக இரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே மெட்ஹீமோகுளோபின்கள் உள்ளன.
6.
1. வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு அதிக அளவு புரதம் தேவைப்படுகின்றது.
2. இளம் பருவத்தில் உணவில் புரதம் குறைந்தால் புரத ஆற்றல் குறைபாடுகளான மாரஸ்மஸ் மற்றும் குவாஷியார்கர் போன்றவை ஏற்படுகின்றன.
3. இதன் அறிகுறிகளாக உலர்ந்த தோல், பானை போன்ற வயிறு, கால்கள் மற்றும் முகத்தில் நீர் கோர்த்தல், குன்றிய வளர்ச்சி, ரோமநிற மாற்றம், பலவீனம் மற்றும் எரிச்சல் தோன்றுகின்றது.
4. மராஸ்மஸ் தீவிரமான புரதக் குறைபாடாகும்.
5. இந்நிலை உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதப் பற்றாக்குறையால் தோன்றுகிறது.
6. இவ்விதப் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் வயிற்றுப்போக்கு கொழுப்பின்மையால் மடிப்புகளுடன் கூடிய தசைகளில் கொழுப்பின்மையால் மடிப்புகளுடன் கூடிய தோல் ஆகிய அறிகுறிகளைப் பெற்றிருப்பர்.
7.
| குருத்தெலும்பு | எலும்பு | |
| 1. | செல்லிடைப் பொருட்கள் உறுதியானவை | கொல்லாஜன் இழைகளால் வலுவூட்டப்பட்டுள்ளது. |
| 2. | வளையும் தன்மையுடையது | வளையும் தன்மையற்றது |
| 3. | அழுத்தத்தை தாங்கக் கூடியது | மிக அழுத்தத்தை தாங்கக்கூடியது |
| 4. | இத்திசுவின் செல்கள் கான்ட்ரோசைட்டுகள் | இத்திசுவின் செல்கள் ஆஸ்டியோசைட்டுகள் |
| 5. | கருநிலையில் காணப்படும் பெரும்பாலான குருத்தெலும்புகள் பெரியவர்களில் எலும்புகளாக மாறுகிறது. |
எலும்புகள் குறுத்தெலும்புகளில் இருந்து தோன்றுகிறது. |
| 6. | ஓரளவிற்கு பாதுகாப்பு வழங்குகிறது. | உடலுக்கு சட்டகமாகவும், உள் உறுப்புகளை பாதுகாப்பதும், உடல் எடையை தாங்குவதும் உடல் இயக்கத்திற்கும் இரத்த செல்களை உருவாக்கவும் செய்கிறது. |
8.
9.
1. முதுகு நாண்:
அ. முதுகுநாண் நரம்பு வடத்திற்குக் கீழாகவும், உணவுப்பாதைக்கு மேலாகவும் அமைந்துள்ளது.
ஆ. இது தென்மையான அகச்சட்டகமாகும்
இ. லாம்ப்ரே மற்றும் லான்ஸலெட் போன்ற விலங்குகளில் வாழ்நாள் முழுவதும் காணப்படும்.
ஈ. முதிர் முதுகெலும்புகளில் இது பகுதியாகவே அல்லது முழுமையாகவோ முதுகெலும்புத் தொடராக மாற்றீடு செய்யப்படுகிறது.
2. முதுகுப்புற நரம்புக்குழல்:
அ. முதுகுநாணிற்கு மேலாகவும், முதுகுப்புற உடற்சுவருக்கு கீழாகவும் அமைந்துள்ளது.
ஆ. இது குழல் வடிவத்திலும், உள்ளீடற்றும், திரவம் நிரம்பவும் காணப்படுகிறது.
இ. இது உடற் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கிறது.
ஈ. உயர் முதுகுநாணிகளால் நரம்பு வடத்தில் முன்முனை பருத்து மூளையாகவும், பின்பகுதி மூளையாகவும், பின்பகுதி தண்டுவடமாகவும் மாறியுள்ளது.
உ. முதுகெலும்புத் தொடரால் தண்டுவடம் பாதுகாக்கப்படுகிறது.
3. தொண்டை செவுள் பிளவுகள்:
அ. அணைத்து முதுகுநாணிகளின் வாழ்க்கைச் சுழற்சியில் எதாவது ஒரு நிலையில் தொண்டைப் பிளவு காணப்படுகிறது.
ஆ. அனைத்து முதுகுநாணிகளின் கருவளர்ச்சியின் போது தொண்டை சுவர்களில் வரிசையாகக் காணப்படும்.
இ. நீர்வாழ் விலங்குகளில் செவுள் பிளவுகள் இரத்த நுண்நாளங்களுடன் கூடிய இழைவடிவ செவுள்களாக மாறி சுவாசத்திற்கு உதவுகிறது.
ஈ. நிலவாழ் முதுகுநாணிகளில் கருவளர்ச்சியின்போது செயல்படாச் செவுள் பிளவுகள் தோன்றி படிப்படியாக மறைகிறது.
10.
தோல் ஒரு மிகப்பெரிய தொடு உணர்வு உறுப்பாகும்.
தோல் பரப்பு முழுவதும் பரவியுள்ள மில்லியன் கணக்கான நுண் உணர்வேற்பிகள், தொடுதல், அழுத்தம், வெப்பம், குளிர்ச்சி, வலி ஆகிய உணர்வுகளை அறிய உதவுகிறது.
விரல் நுனிகளில் இவ்வுணர்வேற்பிகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதால் அப்பகுதி அதிக உணர்வுகளை கண்டறிகிறது.
எபிடெர்மிஸ் அடுக்கில் ஆழ்பகுதியிலுள்ள மென்மையான தொடுதல்களை உணரக்கூடியவை மெர்கெல் வட்டுகள் ஆகும்.
மயிர்க்கால்களைச் சுற்றியுள்ள நுண்பைகளில் உள்ள உணர்வேற்பிகளும் மெல்லிய தொடுதலை உணரக்கூடியவை.
மீஸ்னரின் துகள்கள்:
தோல் பாப்பில்லாக்களின் எபிடெர்மல் அடுக்கின் கீழ் அமைந்துள்ள இவை மென்மையான அழுத்தங்களை உணரக்கூடியவை.
முடிகளற்ற தோல் பகுதிகளான விரல்முனைகள் மற்றும் பாதங்களின் இவை அதிகமுள்ளன.
பாசினியன் துகள்கள்:
முட்டை வடிவம் கொண்ட இவை டெர்மிஸ் பகுதியின் ஆழ்பகுதியில் பரவலாக உள்ளன. அழுத்தத்தால் ஏற்படும். அதிர்வுகளை இவை உணர்கின்றன.
மேலும் வலி, கடினத்தன்மை, வெப்பம் மற்றும் வேறுபட்ட தொடுப்பரப்புகளை உணரும் தன்மையைத் தருகின்றன.
ரஃபினி முனைகள்:
தொடர் அழுத்தத்தை உணரும் இவை டெர்மிஸ் அடுக்கில் உள்ளன.
கிராஸ் முனைக்குமிழ்கள்:
இவை வெப்பத்தை உணரும் வெப்ப உணர்வேற்பிகள் ஆகும்.
11.
12.
13.
14.
15.
1. நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே மனிதன் தன்னைச் குழ்ந்துள்ள உயிரினங்களை பல்வேறு விதமான நோக்கங்களுக்குப் பயன்படுத்த அவற்றை வளர்த்து எண்ணிக்கையில் பெருக்கினான்.
2.இதில் முக்கிய கண்டுபிடிப்பானது தேனீக்களால் சேகரிக்கப்பட்ட தேனை மனித பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.வணிக ரீதியாக தேனீ உற்பத்தி செய்வற்காக தேனீக்களை பாதுகாத்து வளர்க்கும் முறை தேனீ வளர்ப்பு எனப்படும்.
3.அதிக தேன் கூடுகளை கொண்ட தேன்வளர்ப்பிடம் எபியரிகள் எனப்படும்.
4. ஏப்பிகல்ச்சர் என்னும் சொல் யுளை என்னும் இலத்தீன் சொல்லிருந்து வந்தது. இதற்கு தேனீ என்று பொருள்.
5.தேனீ வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் பொதுவான ஐந்து இனங்களாவன எபிஸ் டார்சேட்டா (பாறை தேனீ ), எபிஸ் ஃப்ளோரிய (சின்ன தேனீ),எபிஸ் இன்டிகா(இந்திய தேனீ ), எபிஸ் மெல்லிபெரா (ஐரோப்பிய தேனீ) மற்றும் எபிஸ் ஆடம்சோனி (ஆப்பிரிக்க தேனீ )போன்றவை ஆகும்.
16.
1.பட்டுப்புழு வளர்த்தலின் முதல் கூறாக பட்டுப்புழுக்களின் உணவுத் தாவரம் பயிரிடல் விளங்குகிறது.
2. பாம்பிக்ஸ் மோரி வகை பட்டுப்புழுக்களுக்கு உணவாக விளங்கும் மல்பெரி தாவரத்தைப் பயிரிடும் முறைக்கு மோரிகல்சர் என்று பெயர்.
3.தற்காலத்தில் பயிரிடக்கூடிய மேம்பட்ட ரகங்களான விக்டரி 1,ளு 36,பு2 மற்றும் பு4 ஆகியவை பலவித விவசாய பருவ கால நிலைகள் மற்றும் வேறுபட்ட மண் நிலைகளைத் தாங்கி வளரக்கூடியவை ஆகும்.
4.மல்பெரி வளர்ப்பிற்கு உகந்த காலம் ஜூன்,ஜூலை, நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகும்.
5.நிலத்தைத் தயார் செய்தல், பதியங்களைத் தயாரித்தல், நடவுத்தொழில் நுட்பங்கள்,மல்பெரி நாற்றங்கால் பராமரித்தல்,நோய் மற்றும் தீங்குயிரி மேலாண்மை, பழைய மல்பெரி தாவரங்களைப் பிடுங்கிய பின் புதிய மல்பெரித் தோட்டம் அமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது மோரிகல்சர் ஆகும்.
6.தரமான பட்டுக்கூடுகளை உருவாக்க மல்பெரியை சிறிய மரம் போன்று 123-152 செ.மீ உயரம் வரை 20x 20 செ.மீ அல்லது 25 x 25 செ.மீ இடைவெளிவிட்டு வளர்த்து அறுவடைசெய்ய வேண்டும்.
17.
சிறுநீரக பணிகளை ஹைப்போதலாமஸ், ஜக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு மற்றும் ஓரளவிற்கு இதயம் ஆகியவைகளை உள்ளடக்கிய ஹார்மோன் பின்னூட்ட கட்டுப்பாடே கண்காணித்து நெறிப்படுத்துகிறது.
இரத்தம் மற்றும் உடல் திரவத்தின் கொள்ளளவு மற்றும் அயனிகளில் அடர்வுகளில் ஏற்படும் மாற்றங்களால் ஹைபோதாலமஸில் உள்ள ஊடுகலப்பு உணரவேற்பி தூண்டப்படுகிறது.
உடலிலிருந்து அதிக அளவில் திரவ இழப்பு ஏற்படுதல் அல்லது இரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்றவைகளால் ஹைபோதலாமஸின் ஊடுகலப்பு உணரவேற்பி தூண்டப்படுகிறது.
இதன்விளைவாக நியுரோஹைபோபைஸில் தூண்டப்பட்டு ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் எனப்படும் வாஸோபிரஸ்ஸின் அல்லது சிறுநீர்பெருக்கெதிர் ஹார்மோன் வெளியிடப்படுகிறது.
இதனால் சேகரிப்பு நாளம் மற்றும் சேய்மை சுருள் நுண்குழல்களின் செல்பரப்புகளில் அக்குவபோரின்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் குழலின் உட்பகுதியிலிருந்து இடையீட்டு திரவத்திற்குள் நீர் செல்கின்றது. இதனால் சிறுநீர்ப்பெருக்கத்தின் மூலம் ஏற்படும் அதிக நீரிழப்பு தடுக்கப்படுகிறது.
அளவிற்கதிகமாக பழச்சாறு அருந்தும்போது ஹைபோதலமஸில் உள்ள ஊடுகலப்பு உணரவேற்பிகள் தூண்டப்படாதால் நியூரோ ஹைபோபைஸிசில் உற்பத்தி குறைகிறது.
இது ஒரு எதிர்மறை பின்னூட்ட நிகழ்வாகும். இந்நேரத்தில் சேகரிப்பு நாளத்திலுள்ள அக்குவாபோரின்கள் சைட்டோபிளாத்தினுள் சென்று விடுவதால் சேகரிப்பு நாளத்தில் நீர் ஊடுருவல் தடுக்கப்படுகிறது.
எனவே சேகரிப்பு நாளத்திலுள்ள நீர் அனைத்தும் வெளியேற்றப்படுவதால் நீர்த்த சிறுநீர் வெளியேறுகிறது.
இதனால் இரத்தத்தின் அளவு நிலைநிறுத்தப்படுகிறது.
வாஸோபிரஸ்ஸின் ஹார்மோன் சுரப்பை எஎதிர்மறை மற்றும் நேர்மறை பின்னூட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது.
யுனுர் உணரவேற்பிகள் குறைபாடு இருந்தாலோ அல்லது யுனுர் சுரக்க இயலாமையாலோ நீரிழிவு நோய் உருவாகிறது.
அதிக தாக்கம் நீர்த்த சிறுநீர் அதிகமாக வெளியேறுதவதால் ஏற்படும் நீரிழப்பு மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.
18.
நெப்ரான்களில் இரு இரத்த நுண் நாளத் தொகுப்புகள் உள்ளன. ஒன்று கிளாமருலஸிலும் மற்றொன்று நுண் குழல்களை சுற்றிலும் அமைந்துள்ளது.
கிளாமருலஸில் உள்ள இரத்த நுண் நாளத்தொகுப்பு மட்டத்திலிருந்து வேறுபட்டதாகும்.
ஏனெனில் இத்தொகுப்பு இரத்தத்தை எடுத்துச் செல்லும்போது உட்செல் நுண் தமணிகளாகவும் வெளியேறும் போது வெளிச்செல் நுண் தமணிகளாகவும் வெளியேறுகின்றன.
இந்த வெளிச்செல் நுண்தமனிகள் கிளாமருலஸிலிருந்து வெளியேறிய பின், நுண்ணிய நாளங்களாகப் பிரித்து சிறு நீராக நுண்குழலைச் சூழ்ந்து காணப்படுகின்றன.
இவை புரா நுண்குழல் இரத்த நாளங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஜாக்ஸ்டா மெடுல்லரி நெப்ரான்களில் மேற்கண்ட வெளிச்செல் நுண் தமனிகள் நீள் கற்றையாக ஹென்லே வளைவுக்கு இணையாக நீண்ட நாளத்தை உருவாகியுள்ளன.
கார்டிகல் நெப்ரான்களில் வாசா ரெக்டா காணப்படுவதில்லை அல்லது எண்ணிக்கையில் குறைந்திருக்கும்.

19.
1.நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள இடங்களில் இவ்வகை தாவரங்கள் நைட்ரஜன் பற்றாக்குறையை சரிசெய்ய பூச்சிகளின் உடலில் இருந்து நைட்ரஜன் சத்துக்களைப் பெறுகின்றன.
(அ) நெப்பந்தல் (Pitcher plant):
(i) குடுவை என்பது இலையின் மாற்றுரு. இக்குடுவையினுள் செரிமான நொதிகளை உருவாக்கம் வளரிகள் உள்ளன.
(ii) குடுவையின் வாய் விளிம்பில் தேன் சுரப்பிகள் காணப்படுவதோடு, குடுவையின் மூடி பகுதி பூச்சிகளைக் கவரும் வண்ணங்களும் காணப்படுகிறது.
(iii) பூச்சிகள் குடுவையினுள் விழுந்தவுடன் புரத செரிமான நொதிகள் பூச்சிகளின் உடலை செரிக்க உதவுகிறது.
(ஆ) ட்ரஸீரா (Drosera-Sundew- plant):
(i) இவை நீண்ட தடித்த உணர்நீட்சிகளை கரண்டி வடிவ இலைகளில் பெற்றவை.இவை ஒட்டக்கூடிய செரிமான திரவத்தை சுரந்து, பூச்சிகளை ஈர்க்கிறது. இது பார்ப்பதற்கு சூரிய பனித்துளி போன்று உள்ளது.
(இ) யுட்ரிகுலேரியா (Bladderwort):
(i) இது ஒரு நீரில் மூழ்கி காணப்படும் தாவரம். இவற்றின் இலைகள் பை போன்ற மாற்றுரு அடைந்து பூச்சிகளை சேகரித்து செரிக்கச் செய்கிறது.
(ஈ) டயோனியா (Venus fly trap):
(i) இவற்றின் இலைகள் வண்ணமயமான பொறியாக மாற்றமடைந்துள்ளது. இரண்டு மடல்களுடைய இலைகளின் உள்ளே உணர் இழைகள் காணப்படும்.
(ii) பூச்சிகள் உணர் இழைகளை தொட்டவுடன் இலைகள் மூடி அவை சிறைப்படுகின்றன.
20.
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் ஒட்டுண்ணி உணவூட்டம்:
ஓம்புயிர் தாவரங்களிலிருந்து உணவைப் பெற்று அவற்றிக்கு நோயை உண்டாக்கும் உணவூட்ட முறை ஒட்டுண்ணி உணவூட்டம் எனப்படும்.
(அ) கட்டாய அல்லது முழு ஒட்டுண்ணி (Obligate or Total parasite):
இவ்வகை உணவூட்டத்தில் ஓம்புயிர் தாவரத்தை முழுமையாக தன் வாழ்க்கைக்காக ஒட்டுண்ணி சார்ந்திருக்கும். அத்துடன் ஹாஸ்டோரியம் எனும் உறிஞ்சு உறுப்பை உருவாக்குகிறது.
(i) முழு தண்டு ஒட்டுண்ணி (Obligate stem parasite):
கஸ்குட்டா (டோடர்) வேர் இல்லாத இரு இலைகளற்ற தாவரம். இதன் முழுத் தண்டும் ஓம்புயிரி (இலந்தை, சிட்ரஸ் மற்றும் பிற)தாவரங்கள் மேல் படர்ந்து ஹாஸ்டோரியங்களை உருவாக்குகிறது.
(ii) முழு வேர் ஒட்டுண்ணி ((Obligate root parasite)
தண்டு அச்சைப் பெற்றிறாது பிற ஓம்புயிரி தாவரங்களின் வேர்களில் இருந்து நீரையும் உணவையும் பெற்று ஒட்டுண்ணியாக வாழ்ந்து ஹாஸ்டோரியங்களை உருவாக்கும் தாவரங்கள். எடுத்துக்காட்டு: ராஃப்ளெஸியா,ஒர பாங்கே மற்றும் பேலனோ ஃபோரோ.
(ஆ) பகுதி ஒட்டுண்ணிகள் (Partial Parasite)
இவ்வகை தாவரங்கள் பச்சையம் பெற்றிருப்பதால், கார்போஹைட்ரேட்டை தயாரிக்கச் கூடியவை, நீர் மற்றும் கனிமங்களுக்காக மட்டுமே இவை ஓம்புயிர் தாவரங்களைச் சார்ந்துள்ளன.
(i) பகுதி தண்டு ஒட்டுண்ணி:
லொரான்தஸ் தாவரம் அத்தி மற்றும் மாமரத்தின் சைலத்திசுவிலிருந்து நீர் மற்றும் கனிம உப்புகளை ஹாஸ்டோரியத்தின் உதவியினால் உறிஞ்சுக் கொள்கிறது. எடுத்துக்காட்டு;லொரன்தஸ், விஸ்கம் (மிஸ்ஸில்டோ).
(ii) பகுதி வேர் ஒட்டுண்ணி:
நாற்று நிலையில் இதன் வேர்கள் பிற தாவரவேர்களின் மீது வளர்ந்து ஹாஸ்டோரியங்கள் உதவியுடன் நீரை உறிஞ்சுக்கொள்கிறது எடுத்துக்காட்டு: சாண்டலம் ஆல்பம் (சந்தன மரம்).
21.

22.
ஏதாவது விதையினை (நிலக்கடலை அல்லது மொச்சை விதைகள்) சிறிதளவு எடுத்து ஊறவைத்து முளைத்தலுக்கு உட்படுத்த வேண்டும். முளைத்தலுக்கு பின் கூம்புக்குடுவையினுள் வைக்க வேண்டும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட 4அட பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH) கரைசலைச் சிறிய கண்ணாடி குடுவையில் எடுத்துக் கூம்புக் குடுவையினுள் நூலின் உதவியால் தொங்க விட்டு ஒரு துளை தக்கையினால் இறுக்கமாக மூட வேண்டும். வளைக்கப்பட்ட கண்ணாடி குழாயை எடுத்துச் சிறிய முனைப்பகுதியை நீர் நிரப்பிய பீக்கரினுள்ளும் மூழ்கியிருக்குமாறு வைக்க வேண்டும். வளைக்கப்பட்ட கண்ணாடி குழாயின் ஆரம்ப நிலையின் நீரின் அளவினைக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த அமைப்பினை இரண்டு மணி நேரத்திற்கு வைத்திருந்து விதைகளை முளைக்க விட வேண்டும்.இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, கண்ணாடி குழாயில் நீரின் அளவு உயர்கிறது. ஏனெனில் காற்று சுவாசத்தின் போது முளைக்கப்பட்ட விதைகளால் CO2 வெளியேறுவதால் KOH கரைசலால் உறிஞ்சப்படுவதால் நீரின் அளவு கண்ணாடி குடுவையினுள் உயர்கிறது.
நிலக்கடலை அல்லது மொச்சை விதைகளின் உயர்த்தப்படும் நீரானது குறைவாகக் காணப்படும் ஏனெனில் இந்த விதைகள் கொழுப்பு மற்றும் புரதத்தினை சுவசாத் தளப்பொருளாக பயன்படுத்துவதால் மிகச் சிறிய அளவு CO2 வெளிப்படுகிறது. ஆனால் கோதுமை விதைகளில் உயர்த்தப்படும் நீரின் அளவு அதிகமாகக் காணப்படும் ஏனெனில் கார்போ ஹைட்ரேட்டை சுவசாத் தளப்பொருளாக பயன்படுத்துவதால். கார்போஹைட்ரேட்டுகளை தளப்பொருளாக பயன்படுத்துவதால் சமமான வீதத்தில் CO2 வெளியேற்றமும் O2 பயன்பாடும் நடைபெறும்.

23.
நிரூபிக்கும் சோதனை:
(i) ஹைட்ரில்லா தாவரத்தை நீருக்கு அடியில் வெட்டி முகவையின் அடியில் வைக்கவும்.
(ii) அதன் மீது ஒரு புனலை தலைகீழாக பொருத்தவும்.
(iii) புனலின் மீது நீர் கொண்ட சோதனை குழாயினை தலைகீழாக பொருத்தவும்.
(iv) இந்த அமைப்பினை சூரிய ஒளி படும்படி வைக்கவும். உற்றுநோக்களை குறிப்பெடுத்துக் கொள்க.

24.

25.
ஆகிசின்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். அவை இயற்கை அக்சின் மற்றும் செயற்கை ஆகிசின். அவை கிழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
(i) பரவும் ஆகிசின் (Free auxin )
தாவரத் திசுக்களிலிருந்து வெளியேறி எளிதில் பரவும் தன்மை கொண்டது. எடுத்துக்காட்டு: IAA
(ii) பரவலற்ற ஆகிசின் (bound auxin )
இவை எளிதில் பரவும் தன்மை அற்றது. எடுத்துக்காட்டு - அஸ்பார்டிக் அமிலம்.
(iii) முன்னோடிச் சேர்மம் (Precursor)
IAA -வின் முட்டோடிச் சேர்மம் டிரிப்டோ∴பன் என்ற அமினோஅமிலம் ஆகும். மேலும் துத்த நாகம் எனும் தனிமம் இதன் உற்பத்திக்கு தேவைப்படுகிறது.
(iv) வேதி அமைப்பு (chemical structure)
இன்டோல் அசி டிக் அமிலம் என்ற சேர்மத்தின் வேதி அமைப்பை பெற்றிருக்கிறது.
26.

27.

28.

29.
| ஆக்குத் திசுக்கள் நிலைத்திசுக்களுக்கிடையேயான வேறுபாடுகள் | |
| ஆக்குத் திசுக்கள் | நிலைத்திசுக்கள் |
| 1. செல்கள் மீண்டும் மீண்டும் பகுப்படைகின்றன. | 1. செல்கள் படுப்படைவதில்லை. |
| 2. வேறுபாடு அற்ற செல்கள் | 2. சேலைகள் முழுவதுமாக வேறுபாடு அடைந்துள்ளன. |
| 3. செல்கள் சிறியவை மற்றும் ஓத்த குறுக்களவு கொண்டவை |
3. செல்கள் வடிவம், அமைப்பில் வேறுபாடு கொண்டவை |
| 4. நுண் குமிழ்ப்பைகள் பொதுவாகக் காணப்படுவதில்லை. | 4. நுங்குமிழ்ப்பைகள்காணப்படுகின்றன. |
| 5. மெல்லிய செல் சுவர் உடையவை. | 5. செல் சுவர் மெல்லியது (அ) தடித்தது |
| 6. சைட்டோபிளாசா கனிமப் பொருட்கள் காணப்படுவதில்லை. | 6. சைட்டோபிளாசா கனிமப் பொருட்கள் காணப்படுகின்றன. |
30.
31.
| 1 | சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம் | சிறுநீர் |
| 2 | பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது | கிளாமருலார் வடிகட்டல் |
| 3 | சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல் | சிறுநீர்ப்பை |
| 4 | இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து | கிளாமருலஸ் |
| 5 | கிளாமருலார் வடிதிரவத்தை சிறுநீராக மாற்றும் செயல் | கழிவுநீக்கம் |
| 6 | தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல் | யூரியா |
| 7 | ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது | பௌமானின் கிண்ணம் |
| 8 | சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது | சிறுநீர் நாளங்கள் |
| 9 | யூரியா மற்றும் பயனுள்ள பல பொருட்களைக் கொண்டுள்ளது | கிளாமருலார் வடிகட்டல் |
| 10 | இதன் சுவர்கள் வழியாக பௌமான் கிண்ணத்தினுள் இரத்தமானது வடிகட்டப்பட்டுள்ளது | கிளாமருலஸ் |
| 11 | சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர் | மிக்ட்யூரின் |
| 12 | இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்தல். | உடற்சமநிலை பேணுதல் |
| 13 | சிறுநீரகங்கள், சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன. | சிறுநீரக மண்டலம் |
| 14 | கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல் | மீண்டும் உறிஞ்சுதல் |
| 15 | அண்மை சுருண்ட குழல்களில் நீர் கடத்தப்படும் நிகழ்ச்சி | மீண்டும் உறிஞ்சுதல் |
| 16 | அண்மை சுருண்ட குழல்களைச் சூழ்ந்து காணப்படும் இரத்த நுண் நாளங்களில் உள்ள இரத்தம் எங்கிருந்து வருகிறது? | பௌமானின் கிண்ணம் |
| 17 | இரத்தத்தில் மட்டும் காணப்பட்டு, கிளாமருலார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது? | புரதங்கள் |
32.
1. C.G பால்பியானி (1881) என்பவர் டிரோசோஃபைலா என்ற பழப் பூச்சியின் உமிழ் நீர் சுரப்பில் இதனை கண்டறிந்தார்.இது பல்வேறு பூச்சிகளின் லார்வாக்கள் , மிட்ஜஸயில் காணப்படுகின்றன.
2. உட்கரு பகுப்பு ஏற்படாமல் இடைக்கால நிலையில் குரோசோம்கள் இரட்டித்தலில் ஈடுபடுகின்றன.ஒரு குரோசோம் பல நகல்களை உருவாக்குவதால் தோன்றும் அமைப்பே பாலிடீன் குரோமோசோம் ஆகும்.இதை ஒளி நுண்ணோக்கியிலும் காண இயலும் மரபியல் செயல்பாடு கொண்டுள்ளதாக இவை காணப்படுகின்றன.
3. இதில் அடர்த்தியான சாயம் ஏற்கும் பட்டைகள் மற்றும் சாயம் ஏற்கா இடைப்பட்டைகள் அடுத்தடுத்துக் காணப்படடுகின்றன.இவற்றுள் அடர்த்தியான பட்டையும் 95 DNA -வையம் சாயம் ஏற்கா இடைப்பட்டையில் 5 DNA வையம்கொண்டுள்ளன.கைரோனோமஸ் லார்வாவில் உள்ள பாலிடீன் குரோமோசோம்ங்களில் மிகபெரிய புடைப்புகள் காணப்படுகின்றன.இவற்றதிற்கு பால் பியாணி வலையங்கள் என்று பெயர்.இதுற்கு குரோமோசோம் புடைப்புகள் என்று அழைக்கலாம்.
4. இவை துரிதமாக RNA உற்பத்தி நிகழும் இலக்குகளாகும் குறிப்பாக இது உமிழ்நீர் சுரப்பியில் காணப்படுவதால் இவற்றிற்கு உமிழ்நீர் சுரப்பி குரோமோசோம்கள் என்றும் அழைக்கப்படுகிறது
5.உட்கரு பகுப்பு நடைபெறாமல் குரோமோசோம் DNA தொடச்சியாக இரட்டிப்படைத்து தோன்றும் சகோதர குரோமாட்டிட்கள் பக்கவாட்டில் தொகுக்கப்பட்டு , இந்தப் பாலிடீன் குரோமோசோம் உருவாகிறது.இந்த நிகழ்விற்கு எண்டோமைட்டாசிஸ் என்று பெயர்.ஜீன் வெளிப்பாடு , ஜூன்கள் படியெடுத்தல் மற்றும் RNA உருவாதல் போன்றவை பாலிடீன் குரோமோசோமில் நிகழ்கின்றன.
6. உடலச் செல்களில் தாய்வழி மற்றும் தந்தைவழித் தோன்றிய ஒத்திசைவு குரோமோசோம்கள் பக்கவாட்டில் ஒன்றொடொன்று தொடர்புடையதாக்க காணப்படுகின்றன.இதற்கு உடல இணைவு என்று பெயர்.
33.
34.
1.முதல் நிலை :பல அமினோ அமிலங்கள் பாலிபெப்டைடு சங்கிலியில் அடுத்தடுத்து நீள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ள நிலை,முதல் நிலை (Primary structure) அமைப்பாகும்.
2.இரண்டாம் நிலை: (Secondary structure) அமைப்பு, வினைத் தொகுதிகள் வெளிபரப்பில் வெளியாகி நைட்ரஜன் பிணைப்புகள் மூலம் மூலக்கூறு இடைச்செயல் புரிவதால் தோன்றுகிறது.இதனால் பாலிபெப்டைடு சங்கிலி மடிப்புறுகிறது.இதனால் திருகுச்சுருள் கொண்ட \(\alpha\) சுருள் அமைப்பு அல்லது \(\beta\)மடிப்பு வரைவுற்ற தகடு என்ற இரண்டாம் நிலை அமைப்புகள் உருவாகின்றன.
3.மூன்றாம் புரத நிலை (Tertiary protein structure) என்பது இரண்டாம் நிலையிலுள்ள புரதம் மேலும் சுருண்டு மேலாண்மையான கோள உருவம் அடைந்து உருவாகும் அமைப்பு ஆகும்.இதனைக் களம் (Domain) என்று அழைப்பர்.
4.நான்காம் புரத நிலை (Quaternary protein structure) அமைப்பு, ஒன்றிற்கு மேற்பட்ட பாலிபெப்டைடு சங்கிலிகள் கொண்ட சிக்கலான புரதங்களில் காணப்படுகிறது.இதனால் ஒரு பெரிய பல அடுக்கு புரதம் உருவாகிறது.இதில் உலா பாலிபெப்டைடு சங்கிலிகள் தனியே துணை அலகுகள் (sun units) எனப்படுகின்றன.இத்தகைய செயல்படும் புரதம் பல அடுக்கு (multimer)எனப்படும்.
எடுத்துக்காட்டு: நொதிகள் வினையூக்கிகளாகச் செயல்படுவதால் இவை குறிப்புச் சார்பு அற்ற செயல் புரதங்களாகும்-உயிர் எதிர் பொருட்கள் பல்வேறு உயிரினங்களுக்குக் குறிப்பு சார்பு பெற்றுச் சிக்கலான கிளைக்கோபுரதங்களாக உள்ளன.
35.
ஆஞ்சியோஸ் பெர்ம்களுக்கும் ஜிம்னோஸ் பெர்ம்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்
| வ.எண். | ஜிம்னோஸ்பெர்ம்கள் | ஆஞ்சியோஸ்பெர்ம்கள் |
| 1. | பொதுவாகச் சைலக் குழாய்கள் காணப்படுவதில்லை (நீட்டேல்ஸ் நீங்கலாக) | பொதுவாகச் சைலக் குழாய்கள் காணப்படுகின்றன. |
| 2. | ஃபுளோயத்தில் துணை செல்கள் காணப்படுவதில்லை | துணை செல்கள் காணப்படுகின்றன. |
| 3. | சூல்கள் திறந்தவை | சூல்கள் சூலகத்தால் மூடப்பட்டுப் பாது காக்கப்படுகின்றன. |
| 4. | பொதுவாக மகரந்த சேர்க்கை காற்றின் மூலம் நடைபெறுகிறது | பூச்சிகள், காற்று, நீர், பறவைகள், விலங்குகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. |
| 5. | இரட்டைக் கருவுறுதல் இல்லை | இரட்டைக் கருவுறுதல் உண்டு |
| 6. | ஒற்றைமடிய கருவூண்திசு காணப்படுகிறது. | மும்மடிய கருவூண் திசு காணப்படுகிறது |
| 7. | கனி தோன்றுவதில்லை | கனி தோன்றுகிறது |
| 8. | மலர்கள் காணப்படுவதில்லை | மலர்கள் காணப்படுகின்றன. |
36.
இடைக்கால நிலை செல் பகுப்பில் அதிகக் காலம் கொண்ட நிலை ஆகும். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு உட்கரு ஓய்வு நிலையில் இருப்பது போன்று தோன்றும். ஆனால் இது உண்மையல்ல. இழை போன்ற அமைப்பிலிருந்து குரோமோசோம்கள் இந்நிலையில் விரவிய அமைப்பாக உள்ளன. பெரும்பாலான நேரங்களில் இந்நிலையில் போது இவை புரத உற்பத்தியில் ஈடுபடுகின்றன.
G1 நிலை:G1 நிலையில் இருக்கும் செல்களில் DNA- வின் அளவானது 2C ஆக உள்ளது. இந்நிலையில் செல்லானது வளர்சிதை மாற்றச் செயலில் ஈடுபட்டு வளர்ச்சிக்குத் தேவையான புரதம், லிப்பிடுகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் செல் நுண்ணுறுப்புகளான மைட்டோ கான்டிரியங்கள், எண்டோபிளாச வலை ஆகியவற்றை உருவாக்குகின்றன.
பல்வேறு தடைப் புள்ளிகள் செல் சுழற்சியைக் கட்டுப்படுத்துகின்றன. G1 படிநிலையில் முடிவில் ஏற்படும் தட்டைப்புள்ளி "வரையறு புள்ளி" (Restriction point) என்று அழைக்கப்படுகிறது. ஒரு செல்லானது செல் சுழற்சியில் தொடர்ந்து செயல்படுவதை அல்லது G0 என்ற அமைதி நிலைக்குச் செல்வதை மற்றும் குறிப்பிட்ட செல்லாக மாற்றம் அடைவதாகி அல்லது பகுபடாமல் இறந்து விடுவதைத் தீர்மானிப்பதாக இந்தத் தட்டைப்புள்ளி திகழ்கிறது. G1 நிலையில் செல்கள் பகுபடாமல் தடைபடுவதற்குக் காரணம்:
1. ஊட்டம் இல்லாமை
2. வளர்ச்சி ஊக்கிக்காரணிகள் இல்லாமை அல்லது செல்களின் செறிவு சார்ந்த தடை.
3. வளர்ச்சிதை மாற்றம் அடைந்த G0 நிலைக்குச் செல்கின்றன.
செல்லினுள் காணப்படும் உயிர்வேதிப் பொருட்கள் செல் பகுப்பினைச் செயல்படச் செய்கிறது. கைனேசஸ் மற்றும் சைக்ளின்கள் என்ற புரதங்கள் ஜீன்களையும் அவற்றின் புரதங்களையும் செயல்படச் செய்து செல் பகுப்பினைச் செயல்படுத்துகிறது. சைக்ளின்கள் G1 நிலையில் முக்கியத் தட்டைப்புள்ளியாக செயல்பட்டு ஒரு செல்லானது பகுப்படைகிறதா அல்லது பகுப்படையாமல் இருக்கின்றதா என்பதை தீர்மானிக்கிறது.
S நிலை:
DNA உற்பத்தியில் இருப்பதால், 2C க்கும் 4C க்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளதாக இது கருதப்படுகிறது. DNA இரட்டிப்பால் செல்லின் வளர்ச்சி தொடர்ந்து நிகழ்வதுடன் ஹிஸ்டோன் என்ற புரத மூலக்கூறுகள் உருவாக்கப்பட்டு DNA வுடன் இணைக்கப்படுகின்றன. சைட்டோபிளாசத்தில் சென்ட்ரியோல்கள் இரட்டிப்படைகின்றன. இறுதியில் DNA அளவானது 2C யிலிருந்து 4C ஆக பெருக்கமடைகிறது.
G2 நிலை:
புரதச் சேர்க்கை மற்றும் செல் நுண்ணுறுப்புகள் உருவாதல் மைட்டோகாண்டிரியம், பசுங்கணிகம் பகுப்படைதல் கதிர்கோல் இழைகள் உருவாதல் ஆகியவை இந்நிலையில் சிறப்புப்பண்புகளாகும். இதைத் தொடர்ந்து உட்கரு பகுப்பு, சைட்டோபிளாச பகுப்பு நடைபெறுகிறது. DNA அளவு 4C ஆகவே உள்ளது. டியூபியூலின் புரத ஆக்கத்தின் மூலம் நுண் நுண்குழல் இழைகள் என்று சேர்ந்து கதிர்கோல் இழைகளை உருவாக்குகின்றன செயல்படுத்துகின்றன.
முதிர்ச்சியை ஊக்கப்படுத்தும் காரணிகள்(Maturation promoting Factors-MPF) என்ற ஒரு வகை புரதம் G2 காலநிலையில் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. இக்காரணிகள் இடைக்காலநிலை குரோமோசோம் இழைகள் செறிவுற்று அது மைட்டாடிக் குரோமோசோம்களாக உருவெடுக்க உதவுகின்றன.செல் சுழற்சியில் G1 , S மற்றும் G2 நிலைகளில் DNA சிதைத்தல் தட்டைப்புள்ளி செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
37.
ஏமைட்டாசிஸ், நேர்முகப் பகுப்பு (Direct cell division) அல்லது தெளிவிலாச் செல் பகுப்பு (Incipient cell division) என்றும் அழைக்கப்படுகின்றன. இப்பகுப்பில் கதிர்கோல் இழைகள் தோன்றுவதில்லை. குரோமாட்டின் பொருள் செறிவுற்று குரோமோசோம்கள் உருப்பெறுவதில்லை. இதிலும் காரியோகைனசிஸ், சைட்டோகைனசிஸ் என இரு நிலைகள் உள்ளன.
காரியோகைனசிஸ்:
1.உட்கரு பகுப்படைதல்
2.உட்கருவில் இடைப்பகுதியில் இறுக்கம் ஏற்பட்டு உடுக்கை வடிவம் அடைதல்
3.எருக்கம் ஆழமாகி உட்கரு இரண்டாகப் பிரிதல்.
சைட்டோகைனசிஸ்:
1.சைட்டோபிளாசம் பகுப்படைதல்
2. உட்கரு இறுக்கத்தைத் தொடர்ந்து பிளாஸ்மாச் சவ்விலும் இறுக்கம் உருவாதல்.
3.சவ்வில் நிகழும் இந்த இறுக்கமும் மையம் நோக்கி விரிவடைந்து (Centripetal) இறுதியில் சைட்டோபிளாசம் இரு பகுதிகளாக பிரிந்து இரு செல்கள் உருவாதல்.
எடுத்துக்காட்டு: பாலூட்டிகளின் குறுத்தெலும்பு செல்களின் பகுப்பு, பரமேசியத்தின் பெரிய உட்கரு பாகுப்பு, உயர்நிலை தாவரங்களில் காணப்படும் முதுமையடைந்து சிதைந்து கொண்டிருக்கும் செல்களில் நிகழும் பகுப்பு.
நேர்முகப் பகுப்பின் குறைகள்:
1.குரோமோசோம்கள் சமமற்ற அளவில் சேய் செல்களைச் சென்றடைவது.
2.வளர்ச்சிதை மாற்றம் மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றில் பிறழ்சிகள் ஏற்படுதல்.
38.
| பண்புகள் | B-DNA | A-DNA | Z-DNA |
|---|---|---|---|
| திருகுச்சுருள் வகைகள் | வலப்புறம் | வலப்புறம் | இடப்புறம் |
| திருகுசுருள் விட்டம் (nm) | 2.37 | 2.55 | 1.84 |
| ஒவ்வொரு கார் இணையின் உயர்வு | 0.34 | 0.29 | 0.37 |
| ஒரு முழுத் திருப்பத்திற்கு உண்டான தொலைவு (இடைநிலையளவு)(nm) | 3.4 | 3.2 | 4.5 |
| ஒரு முழுத் திருப்பத்திற்குப் கார இணைகளின் எண்ணிக்கை | 10 | 11 | 12 |
| முதன்மை பள்ளம் வடிவமைப்பு | அகலமானது ஆழமானது | குறுகியது,ஆழமானது | தட்டையானது |
| சிறு பள்ளம் வடிவமைப்பு | குறுகியது, ஆழமற்றது | அகலமானது,ஆழமற்றது | குறுகியது,ஆழமானது |
39.
1. உணவின் மீதான பார்வை, அதன் மனம் சுவை மற்றும் வாய்குழியில் உணவுப்பொருள் ஏற்படுத்தும் தொடு தூண்டல் ஆகியவற்றால் தூண்டப்பெற்ற அனிச்சை செயல் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டுகிறது.
2.உணவைச் சிறிய துண்டுகளாக உடைத்தல் மற்றும் அரைத்தில் போன்ற முதல்நிலை செரிமானம் வாய்குழியில் நடைபெறுகின்றது.
3. இதற்கு மெல்லுதல் என்று பெயர்.
4. உமிழ்நீர்ல், நீர், NA+, K+, CI,- HCO3-, டயலின் எனும் உமிழ்நீர் அமைலேஸ், லைசோசைம், கோழை ஆகியவை காணப்படுகிறது.
5. உணவை ஈரப்படுத்தி, மென்மையாக்கி குழைத்த நிலைக்கு மாற்றி உயவுத் தன்மையை ஏற்றி எளிதில் விழுங்குவதற்கேற்ற தன்மைக்கு உணவை உமிழ்நீர் மாற்றுகின்றது.
6. உணவிலுள்ள ஸ்டார்ச்சின் அளவில் 30% ஐ உமிழ்நீர் இரட்டைச் சர்க்கரை மூலக்கூறுகளாக மாற்றுகிறது.
7. நன்கு அரைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் உணவுக் கவளங்களாக மாற்றப்பட்டுத் தொண்டை வழியாக உணவுக்குழலுக்குள் செலுத்தப்படும் நிகழ்ச்சிக்கு விழுங்குதல் என்று பெயர்.
8. உணவுப் கவளம் உணவுக்குழலின் பெரிஸ்டால்சிஸ் என்னும் அலையியக்கம் மூலம் இரைப்பையை அடைகின்றது.
9. இரைப்பைக்குள் உணவு செல்வதை கார்டியாக் சுருக்குத் தசை கட்டுப்படுத்துகின்றது.
40.
1. தாவர உடல் ஓங்கிய வித்தகத் தாவர (2n) சந்ததியைச் சார்ந்தது. இது உண்மையான வேர், தண்டு, இலை என வேறுபாடு அடைந்து காணப்படுகிறது.
2. வேற்றிட வேர்கள் காணப்படுகின்றன.
3. தண்டு ஒருபாத (Monopodial)அல்லது கவட்டை கிளைத்தலைப் பெற்றுள்ளது.
4.நுண்ணிலைகள் அல்லது போரிலைகள் கொண்டுள்ளன.
5.வாஸ்குலக் கற்றைகள் புரோட்டோஸ்டீல் வகையைச் சார்ந்தவை. சிலவற்றில் சைபனோஸ்டீல் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு:மார்சீலியா.
6.நீரைக் கடத்தும் முக்கியக் கூறுகள் டிரக்கீடுகள் ஆகும்.செலாஜினெல்லாவில் சைலக்குழாய்கள் (Vessels)காணப்படுகின்றன.
7.வித்தை தங்கும் பை போன்ற பகுதி வித்தகம் எனப்படும். வித்தகங்கள் வித்தக இலைகள் (Sporophyll)எனப்படும் சிறப்பு இலைகளில் தோன்றுகின்றன. சில தாவரங்களில் வித்தகயிலைகள் நெருக்கமாக அமைந்து கூம்பு அல்லது ஸ்ட்ரொபைலஸ் என்ற அமைப்பை உருவாக்குகின்றன.எடுத்துக்காட்டு: செலாஜினெல்லா,ஈக்விசிட்டம்.
8.இவை ஒத்தவித்துத்தன்மை-Homosporous (ஒரே வகையான வித்துகள் எடுத்துக்காட்டு: லைக்கோபோடியம் )அல்லது மாற்றுவித்துத்தன்மை -Heterosporous (இரு வகையான வித்துகள் எடுத்துக்காட்டு: செலாஜினெல்லா)உருவாக்குகின்றன. மாற்றுவித்தகத்தன்மை விதைதோன்றுதலுக்கு ஆரம்ப அல்லது முன்னோடியாகக் கருதப்படுகிறது.
9.வித்தகம்,உண்மை வித்தகம் (Eusporangiate) (பல தோற்றுவிகளிலிருந்து வித்தகம் உருவாதல்)அல்லது மெலிவித்தகம் (Leptosporangiate) (வித்தகம் தனித் தோற்றுவியிலிருந்து உருவாதல்)என இருவகை வளர்ச்சியைச் சார்ந்துள்ளது.
10.வித்துதாய்செல் குன்றல் பிரிவிற்கு (Meiosis)உட்பட்டு ஒற்றைமடிய (n)வித்துகளை உருவாக்குகின்றன.
11.வித்துகள் முனைத்துப் பசுமையான, பல செல் கொண்ட,தனித்து வாழும் திறன் கொண்ட,இதய வடிவ ஒற்றைமடிய (n) சார்பின்றி வாழும் முன்உடலத்தை (prothallus)உருவாக்குகின்றன.
12.உடல இனப்பெருக்கம் துண்டாதல்,ஓய்வுநிலை மொட்டுகள் (Resting buds),வேர்க்கிழங்குகள் (Root tubers), வேற்றிட மொட்டுகள் தோற்றுவித்தல் ஆகிய முறைகளில் நடைபெறுகிறது.
13.பாலினப்பெருக்கம்,கருமுட்டைஇணைவுவகையைச் சார்ந்தது. ஆந்திரீடியம், ஆர்க்கிகோணியம் முன்உடலத்தில் தோற்றுவிக்கப்படுகின்றது.
14.ஆந்திரீடியம் பலகசையிழைகளைக் கொண்ட சுருண்ட அமைப்புடைய நகரும் ஆண் கேமீட்களை உருவாக்குகிறது.
15. குடுவை வடிவ ஆர்க்கிகோணியம், வெண்டர் என்ற அகன்ற அடிப்பகுதியையும்,நீண்ட,குறுகிய கழுத்துப்பகுதியையும் கொண்டுள்ளது. வெண்டர் பகுதியில் முட்டையும்,
16.கருவுறுதலுக்கு நீர் அவசியமாகிறது. கருவுறுத்தலுக்குப் பின் உருவாகும் இரட்டைமடிய (2n) கருமுட்டை குன்றலில்லா பகுப்பிற்கு (Mitosis)உட்பட்டுக் கருவைத் தோற்றுவிக்கிறது.
17.டெரிடோஃபைட்களில் பாலிணைவின்மை (Apogamy),குன்றலில்லா வித்துத்தன்மை(Apospory)ஆகியன காணப்படுகின்றன.
41.
1.வளரியல்பு : பெரிய நிமிர்ந்த , பருமனான சிறு செடி
2. வேர் : கிளைத்த ஆணிவேர்த் தொகுப்பு
3. தண்டு : உள்ளடற்றது, பசுமையானது ,மென்மையானது மற்றும் மிகுந்த மணமுடையது.
4. இலை: தனி இலை , மாற்றிலை யமைவு இலைக்காம்புடையது .முழுமையானது அல்லது மடல்களையு டையது.வழவழப்பானது இலையடிச்செதிலற்றது .இது நடுநரம்புடன் வலைப்பின்னல் நரம்பமைப்புடையது.
5. மஞ்சரி : தனித்த இலைக்கோண சைம்.
6. மலர் : மலர்கள் பெரியவை , பசுமை கலந்த வெண்மை நிறமுடைவை , பூவடிச் செதிலுடையவை.பூக்காம்புச் செதிலற்றவை ,பூக்காம்புடைவை , முழுமையானவை இரு பூவிதழ் வட்டங்க்ளுடைவை , ஐந்தங்க மலர் , முழுமையான மலர் , ஆரச்சிருடையவை , இருபால்தன்மை உடைவை மற்றும் சூலக மேல் மலர்
7.புல்லி வட்டம் : புல்லிகள் 5,பசுமையானது தொடுஇதழ் அமைவில் இணைந்த புல்லிகள் பெருபான்மையான தாவரங்களில் புல்லிகள் நிலைத்த தன்மையுடைவை மற்றும் தனித்தப் புல்லி அச்சு நோக்கி காணப்படுகிறது.
8. அல்லி வட்டம் : அல்லிகள் 5 பசுமை கலந்த வெண்மை நிறமுடைவை இணைந்த அல்லிகள் ப்ளிகேட் (கைவிசிறி போன்ற மடிப்புடையது, திருகு இதழமைவில் இணைந்த அல்லிகள் 10 மடல்களுடன் அகன்ற வாயினையடையன புனல் வடிவமானவை.
9.மகரந்ததாள் வட்டம்: மகரந்த தாள்கள் 5, ஒன்றுக்கொன்று தனித்தவை , அல்லி ஒட்டி யவை ,அல்லி இதழ்களுக்கு இடையே அமைந்தவை , மகரந்த கம்பிகள் அல்லி குழலின் மையப்பகுதியில் ஓட்டிக் காணப்படும்,மக்ராந்தப்பை இரு மடல்காலையுடைவை , அடி இணைந்தவை , நீண்ட மகிர்ந்த கம்பிகள் ,மகரந்தப்பைகள் உட்புறமாக நீள்வாக்கில் வெடிக்கக் கூடியவை
10.சூலக வட்டம் : இணைந்த இரு சூலிலைகள் மேல்மட்டச் சுல்கைப்பை இரு சூலக அறைகள் போலியான அறைகுறுக்குச் சுவர் உற்பத்தியாவதால் நான்கு சூலக அறைகள் கொண்டு காணப்படுகின்றது. சூலக இலைகள் அச்சிற்கு நேர்க்கோ நேர்கோட்டில் அமையாமல் சற்று சாய்வாக காணப்படும்.சூல்கள் பருத்த சூல் ஓட்டுத் திசுவில் அச்சு சூல் ஓட்டு முறை யிலுள்ளது.
11. கனி :நிலைத்த புல்லிவட்டத்துடன் ம் நான்கு வால்வுகளுடன் வெடிக்ககூடிய முட்கள் போன்ற புறவளரி களுடன் கூடிய வெடிகனி
12விதை : கரவூன் உடையது
13. மலர் சூத்திரம் :
42.
1. மாற்றிலை அடுக்கமைவு
2. எதிரிலை அடுக்கமைவு
3. மூவிலை அடுக்கமைவு
4. வட்ட இணை அடுக்கமைவு

1. மாற்றிலை அடுக்கமைவு (Alternate phyllotaxy) இவ்வகை இலையமைவில் ஒரு கணுவில் ஒரே ஒரு இலை மட்டும் காணபப்டும். அடுத்தத்துள்ள கணுக்களில் மாறிமாறி மாற்றிலை அமைவில் அமைந்திருக்கும். இலைகளை சூழல் முறையில் அமைந்திருப்பது பல நெடுக்கு வரிசைகள் போன்று தோற்றம் அளிக்கின்றன. எதற்கு ஆர்தோஸ்டிகிஸ் (Orthostichies) என்று பெயர். இது இரண்டு வகைப்படும்.
அ) சூழல் மாற்றிலை அடுக்கமைவு(Alternate sirial): இவ்வகையில் இலைகள் மாற்றிலை அமைவில் சூழல் அமைப்பு முறையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: ஹைபிஸ்கஸ், ஃபைகஸ்
ஆ) இருவரிசை மாற்றிலை அல்லது பைஃபேரியஸ் (Alternate distichous ir Bifarious): இவ்வகையில் இலைகள் மாற்றிலை அமைவில் தண்டின் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு வரிசைகளில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: முனூன்லான்ஜிஃபோலியம் (பாலியால்தியா லான்ஜிஃபோலியா)
2. எதிரிலை அடுக்கமைவு (Opposite phyllotaxy) இவ்வகை இலையமைவில் ஒவ்வொரு கணுவிலும் இரண்டு இலைகள், ஒன்றுக்கொன்று வெவ்வேறு முறைகளில் அமைந்திருக்கின்றன.
i) ஒரு போக்கு எதிரிலை அடுக்கமைவு (Opposite superposed): இதில் அடுத்தடுத்துள்ள கணுக்களில் இணையாக உள்ள இலைகள் ஒரே போக்கில் அமைந்துள்ளன. அதாவது ஒரு கணுவில் உள்ள இரண்டு எதிரெதில் இலைகள் கீழே உள்ள கணுவிலுள்ள இலைகளுக்கு நேர்மேலாக உள்ளன. எடுத்துக்காட்டு: சிடியம், ஸைஜீஜியம் குமினி (நாவல் மரம்) குவிஸ்குவாலிஸ் (ரங்கூன் மல்லி)
(ii) குறுக்கு மறுக்கு எதிரிலை அடுக்கமைவு (Opposite decussate): அடுத்தடுத்த கணுக்களில் அமைந்துள்ள இணை இலைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக (குறுக்கு மறுக்கு )அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு: கலோட்ராபிஸ் ஜினியா, ஆசிமம் (துளசி)
3. மூவிலை அடுக்கமைவு (Tcrnate phyllotaxy) இவ்வகை இளையமைவில் ஒவ்வொரு கணுவிலும் மூன்று இலைகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டு: நீரியம் (அரளி)
4. வட்ட இலை அடுக்கமைவு (Whorled or verticillate type of phyllotaxy) இவ்வகை இலையமைவில் ஒவ்வொரு கணுவிலும் மூன்றிற்கு மேற்பட்ட இலைகள் வட்டமாக அமைந்து காணபப்டுகின்றன. எடுத்துக்காட்டு: அலமாண்டா, அல்ஸ்டோனியா, ஸ்காலரிஸ்.
43.
பூஞ்சைகளின் நண்மைகள்
1.உணவு : லென்டினஸ் எடோடஸ், அகாரிகஸ் பைஸ்போரஸ்,வால்வேரியெல்லா வால்வேசியே போன்றவை ஊட்ட மதிப்புடையதால் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.ஈஸ்ட்கள் வைட்டமின் B-யையும் எரிம மோதீசியம் ஆஷ்பியி வைட்டமின் B-12 யையும் தருகின்றன.
2.மருத்துவம்: பூஞ்சைகள் பாக்டீரியங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் அல்லது அழிக்கும் உயிர்எதிர்ப்பொருட்களை உற்பத்தி செய்கின்றன.பூஞ்சைகள் உற்பத்தி செய்யும் உயிர்எதிர்ப்பொருட்களில் பெனிசிலின் (பெனிசிலியம் நொட்டேட்டம்), செபலலோஸ்போரின்கள் (அக்ரி மோனியம் கிரைசோஜீனம்), கிரைசியோ பல்வின் (பெனிசிலியம் கிரைசோபல்வம்)போன்றவை அடங்கும்.கிளாவிசெப்ஸ் பாப்பூரியா உற்பத்தி செய்யும் எர்காட் ஆல்கலாய்டு (எர்காட்டமைன்) இரத்தக்குழாயினைச் சுருங்க வைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
3.தொழிற்சாலை - கரிம அமில உற்பத்தி :
கரிம அமிலங்களை வணிகரீதியில் உற்பத்தி செய்வதற்கு தொழிற்சாலைகளில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன.சிட்ரிக் அமிலம்,குளுக்கோனிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பெர்ஜில்லஸ் நைஜர் என்ற பூஞ்சையும், இட்டகோனிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பெர்ஜில்லஸ் டெரியஸ்,கோஜிக் அமிலம் தயாரிக்க ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசே பூஞ்சையும் பயன்படுத்தப்படுகின்றன.
44.
1. சூழியல் மண்டலத்தின் நிலைப்படுத்தும் உணவுச் சங்கிலியின் முக்கிய அங்கமாக தவளைகள் உள்ளன. எனவே பாதுகாக்க படவேண்டும்.
2. கொசு உள்ளிட்ட மனிதனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பூச்சிகளை தவளைகள் உண்பதனால் பூச்சிகளின் உயிர்தொகைக் கட்டுப்படுத்தப்படுகிறது.
3. இரத்த அழுத்தம் மற்றும் வயது முதிர்வை கட்டுப்படுத்தும் மருந்து பொருளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
4. சுவையும் அதிக உணவூட்ட மதிப்பும் உடையதால் அமெரிக்க, ஜப்பான், சீனா, வடகிழக்கு இந்திய பகுதிகள் மற்றும் பல நாடுகளில் தவளைகள் மக்களால் சுவைமிகுந்த உணவாக உட்கொள்ளப்படுகின்றன.
45.
குமிழம்:
இவை சதைப்பற்றுள்ள செதில் இலைகளால் சூழப்பட்ட குறிக்கப்பட்ட "கூம்பு அல்லது குவிந்த வடிவமுடைய தரைகீழ் தண்டாகும். இவை இரண்டு வகைப்படும்.
1. உறையுடை குமிழ்தண்டு (Tunicated (coated) bulb):
இவ்வகையில் தண்டானது மிகவும் குறுகியும், வளையம் போன்ற பல அடுக்குகளாலான செதில் இலைகளாலும் சூழப்பட்டிருக்கும். இவை இரண்டு வகைப்படும்.
(i) சாதாரண உறையுடைய குமிழம் எ.கா: அலியம் சீபா (வெங்காயம்)
(ii) கூட்டு உறையுடைய குமிழம் எ.கா: அலியம் சட்டைவம் (பூண்டு)
2. உறையற்ற குமிழம் (Scaly bulb): இவை குறுகியும், ஓரங்களில் மட்டும் ஒன்றையொன்று தழுவி காணப்படும் குமிழங்களாகும். எ.கா: டுலிபா சிற்றினம்
பொய்க்குமிழம் (Pseudobulb): இவை சேமிப்பிற்காகவோ இனப்பெருக்கத்திற்காகவோ நிலத்தின் மேல் பகுதியில் தோன்றும் சிறிய நிமிர்ந்த தண்டுகளாகும். இந்தப் பொய் குமிழங்கள் குறிப்பிட்ட சில தொற்றி வாழும் ஆர்க்கிடுகளிலும் தரைவாழ் ஆர்க்கிடுகளிலும் காணப்படுகின்றன. எ.கா: பல்போஃபில்லம்
46.
மஞ்சரி மைய அச்சின் (மஞ்சரி அச்சு) நுனி மொட்டு தொடர்ந்து வளர்ந்து பக்கவாட்டில் மலர்களை உருவாக்குவது ரசிமோஸ் மஞ்சரி எனப்படும்.
2. முதிர் மலர்கள் அச்சின் வளர்த்தன்மை அடிப்படையில் இம்மஞ்சரியை மேலும் மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
47.
1.தோன்றுமிடத்தின் அடிப்படையில்
1.நுனி மஞ்சரி -தண்டு நுனியிலிருந்து வளர்ந்து உருவாகிறது.
எ.கா: நீரியம், ஒலியாண்டர்
2.கக்க மஞ்சரி -ஏழையின் கக்கத்தில் தோன்றுகிறது.
எ.கா: ஹைபிஸ்கஸ், ரோசா -சைன்ஸ்சிஸ்
3.தண்டுப்பகுதியிலிருந்து நேரடியாக மஞ்சரி உருவாகிறது.
எ.கா: தியோபுரோமா, கொக்கோ, கெளரோபீட்டா கையானென்சிஸ்
II மலர்களின் கிளைத்தல், அமைந்திருக்கும் விதம் சில சிறப்பு அமைப்புகளின் அடிப்படையில்
1. வரம்பற்ற வளர்ச்சி -(ரசிமோஸ்)
2. வரம்புடைய வளர்ச்சி -(சைமோஸ்)
3. கலப்பு வகை (ரசிமோஸ், சைமோஸ் கலவை)
4. சிறப்பு வகை
48.
| வ.எண் | பண்புகள் | லாம்பிட்டோ மாரிட்டீ | மெடாபையர் போஸ்துமா |
|---|---|---|---|
| 1 | வடிவம் மற்றும் அளவு | நீள் உருளை வடிவம் நீளம் - 80மிமீ முதல் 210மிமீ வரை அகலம் - 3.5மிமீ முதல் 5.0மிமீ வரை |
நீள் உருளை வடிவம் நீளம் - 115மிமீ முதல் 130மிமீ வரை அகலம் - 5மிமீ |
| 2 | நிறம் | வெளிறிய பழுப்பு நிறம் | அடர் பழுப்பு நிறம் |
| 3 | கண்டங்கள் | 165 முதல் 190 கண்டங்கள் | சுமார் 140 கண்டங்கள் உண்டு |
| 4 | கிளைடெல்லம் | 14வது முதல் 17வது வரையிலான கண்டங்கள் | 14வது முதல் 16வது வரையிலான கண்டங்கள் |
| 5 | விந்து கொள்பை திறப்பு | மூன்று இணைகள் 6/7, 7/8, 8/9 ஆகிய கண்டங்களுக்கிடையே கண்டா இடைப்பகுதியில் | நான்கு இணைகள் 5/6, 6/7, 7/8, 8/9 ஆகிய கண்டங்களுக்கிடையே கண்டா இடைப்பகுதியில் |
49.
50.
51.
| வ.எண் |
ஆக்ஸிஹீமோ குளோபின் உருவாவதற்குச் சூழல் (காற்று நுண்ணறைகளில்) |
ஆக்ஸி ஹீமோ குளோபினிலிருந்து O2 பிரிவதற்கானச் சூழல் (திசுக்களில்) |
| 1. | அதிக ஆக்ஸிஜன் பகுதி அழுத்தம் | குறைவான ஆக்ஸிஜன் பகுதி அழுத்தம் |
| 2. | குறைவான கார்பன்-டை-ஆக்ஸைடு பகுதி அழுத்தம் | அதிகமான கார்பன்-டை-ஆக்ஸைடு பகுதி அழுத்தம் |
| 3 | குறைவான வெப்பநிலை | அதிகமான வெப்பநிலை |
| 4. | குறைவான ஹைட்ரஜன் அயனி அடர்த்தி | அதிகமான ஹைட்ரஜன் அயனி அடர்த்தி |
52.
1. ஒரு காயம்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியாவதைத் தடுக்கும் பொருட்டு இரத்தக்கட்டி உருவாகி அதிகமான இரத்தப்போக்கை நிறுத்தும் நிகழ்வு இரத்தம் உறைதல் எனப்படும்.
2. இரத்தக் குழாயிலுள்ள எண்ட்டோதீலியம் சிதைவடைந்து அதன் சுவரிலுள்ள இணைப்புத் திசுக்களை இரத்தம் நனைக்கும் போது, இரத்த உறைதல் பொருட்களை (காரணிகளை) வெளியிடுகின்றன.
3. இப்பொருட்கள் இரத்தத்தட்டு கொத்துக்களால் ஆன அடைப்பைப் ஏற்படுத்தி உடனடியாக இரத்த இழப்பைத்தடுக்கின்றன.
5. இவ்வாறு திரட்சியடைந்த இரத்தத்தட்டுகள் அல்லது சேதமடைந்த செல்களால் வெளியிடப்பட்ட இரத்த உறைதல் காரணிகள் பிளாஸ்மாவிலுள்ள புரோத்ராம்பின் என்னும் புரதம், கால்சியம் அயனிகள் மற்றும் வைட்டமின் K ஆகியவற்றின் முன்னிலையில் செயல்படும் திராம்பினாக மாற்றமடைகிறது.
6. திராம்பின், இரத்தப் பிளாஸ்மாவில் கரைந்த நிலையிலுள்ள ஃபைப்ரின் இழைகளாக்குகின்றன.
7. இவ்விழைகள் ஒன்றுக்கொன்று இணைந்து இரத்தச் செல்களை சூழ்ந்து ஒரு வலைப்பின்னல் அமைப்பை உண்டாக்குகிறது.
8. மேலும் ஃபைப்ரின் வலைப்பின்னல் காயம்பட்ட இரத்தக் குழலில் குணமாகும் வரை அடைப்பை ஏற்படுத்தி இரத்தம் வெளியேறாமல் தடுக்கிறது.
9. சிறிது நேரத்திற்குப் பிறகு ஃ பைப்ரினில் உள்ள நுண்ணிழைகள் சுருங்கி வெளிர் மஞ்சள் நிறச் சீரம் எனும் திரவத்தை வலைப் பின்னல் வழியே வெளியேற்றுகின்றது.
10. சீரம் என்பது ஃபைப்ரினோஜன் இல்லாத பிளாஸ்மா ஆகும்.
11. இரத்தம் உறைதலை தடைசெய்யும் இரத்த உறைவு எதிர்ப் பொருளான ஹிப்பாரின் இணைப்புத் திசுக்களிலுள்ள மாஸ்ட் செல்களில்னால் உருவாக்கப்படுகிறது.
12. இது சிறிய இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைதலைத் தடைசெய்கிறது.

53.

54.
நீரியல் திறன் (\(\Psi \)) இவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.
\(*W=*s+*p\)
நீரியல் திறன் கரைபொருள் உள்ளார்ந்த திறன் + அழுத்தம் உள்ளார்ந்த திறன்
(i) கரைபொருளின் அடர்த்தி அல்லது கரைபொருள் உள்ளார்ந்த திறன் (*)
(ii) அழுத்தம் உள்ளார்ந்த (*) மேற்கண்ட இரு காரணிகலையும் இணைத்து நீரியல் திறனை இவ்வாறு குறிப்பிடலாம்.
(i) கரைபொருள் திறன் (*s) (Solute polential) : கரைபொருள் திறன் என்பது ஒரு கரைபொருள் நீரியல் திறன் மீது ஏற்படுத்தும் விளைவாகும். இது சவ்வூடு பரவல் இயல்திறன் (Osmotic Potential) என்றும் அழைக்கப்படுகிறது. தூய நீரில், கரைப்பொருளினைச் சோர்க்கும்போது அது னீரின் தனி ஆற்றலை (Free Energy) குறைப்பதால் நீரியல் திறன் பூஜ்ஜியத்திலிருந்து குறைந்து எதிர்மறையாகவே இருக்கும்.
திட்ட வளிமண்டல அழுத்தத்தின் உள்ள ஒரு கரைசலின் நீரியல் திறனானது அக்கரைசலின் கரைபொருள் திறனுக்குச் சமமாகவே இருக்கும் (*w = *s).
2. அழுத்தம் உள்ளார்ந்த திறன் (*p) (Pressure Potential) : கரைபொருள் உள்ளார்ந்த திறனின் செயல்பாட்டிற்கு எதிராக செயல்படும் இயங்கு விசையை அழுத்தயியல் திறன் /அழுத்தம் உள்ளார்ந்த திறன் ஆகும். ஒரு செல்லில் அழுத்த இயல் திறன் அதிகரித்தால் நீரியல் திறனும் அதிகரிக்கும், எனவே நீர் செல்லுக்குஸ் சென்று செல் விறைப்புத் தன்மையினை அடைகிறது.
செல்லுனுள் உருவாகும் இவ்வகை நேர்மறை நீரியல் அழுத்தம் (Positive hydrostatic pressure), விறைப்பு அழுத்தம் எனப்படும்.
இதேபோன்று செல்லில் இருந்து நீர் வெளியேறுவதால் நீரின் உள்ளார்ந்த திறன் குறைகிறது. இந்நிலையில் செல் நெகிழ்வு நிலை(flaccid)அடைகிறது.
3.ஊடக உட்திறன் (*m) (Matric Potential) : செல்சுவரில் உள்ள நீரை ஈர்க்கும் கொல்லாய்டுகள் (hydrating colloid) அல்லது கூழ்மம் போன்ற அங்கக மூலக்கூறுகளுக்கும் நீருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு ஊடக உட்திறன் எனப்படுகிறது.
ஊடக உட்திறனை உள்ளீ ர்த்தல் அழுத்தம் (imbibition pressure) எனவும் அழைக்கலாம்.
ஊடக உட்திறன் அதிகபட்சமாக (எதிர்மறை அலகில்) உலர்ந்த பொருட்களின் காணப்படும்.
எடுத்துக்காட்டு: நீரில் ஊறவைத்த விதைகள் பொருக்கமடைதல் .
55.
56.
| C3 மற்றும் C4 தாவரங்கள் வேறுபாடுகள் | |
| C3 தாவரங்கள் | C4 தாவரங்கள் |
| CO2 நிலைநிறுத்தும் இலையிடைத் திசுக்களில் மட்டும் நடைபெறுகிறது. |
CO2 நிலைநிறுத்தும் காற்றை உறை மற்றும் இலையிடைத் திசு ஆகியவைகளில் நடைபெறுகிறது. |
| CO2-வை நிலைநிறுத்தும் பொருள் சுருக்ஷஞ மட்டும் | PEP இலையிடைடீ திசுவிலும் கற்றை உறையில் RUBP-யும் நிலைநிறுத்தும் பொருள்களாக உள்ளன. |
| உகந்த வெப்பநிலை 200 முதல் 250C | உகந்த வெப்பநிலை 30ஸ் முதல் 45ஸ்ஊ |
| CO2 நிலைநிறுத்தும் 50 ppm சேரியில் நடைபெறுகிறது. | CO2 நிலைநிறுத்தும் 10ppm செறிவிற்குக் குறைவான செறிவில் நடைபெறுகிறது. |
| அதிக ஒளிச்சுவாசதினால் குறைவான செயல்திறன் பெற்றது | குறைவான ஒளிச்சுவாசதினால் அதிகச் செயல்திறன் பெற்றது. |
| RUBP கார்பாக்சிலேஸ் நொதி CO3 நிலைநிறுத்தத்திற்கு உதவுகிறது. | PEP கார்பாக்சிலேஸ்மற்றும் RUBP கார்பாக்சிலேஸ் நொதிகள் CO2 நிலைநிறுத்தத்திற்கு உதவுகிறது. |
57.
(i) ஆண்டு வளையம் என்பது முன்பருவக் கட்டையும் பின்பருவக் கட்டையும் கொண்ட தொகுப்பைக் குறிக்கும்.
(ii) மேலும் பின் பருவக்கட்டையின் அடர்த்தி மிகுதியால் வளையங்கள் நம் கண்ணிற்குத் தெளிவாகப் புலப்படுகிறது.
(iii) சில நேரங்களில், ஆண்டு வளையங்கள் வளர்ச்சி வளையங்கள் (growth rings) என்றும் அழைக்கப்படுகின்றன.
(iv) ஆனால் அனைத்து வளர்ச்சி வளையங்களும் ஆண்டு வளையங்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில மரங்களில் காலநிலை மாற்றத்தினால் ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வளர்ச்சி வளையங்கள் உருவாகின்றன.
(v) மோசமான இயற்கை சீற்றங்களான வறட்சி, உரைபனி, இலை நீக்கம், வெள்ளம், காயங்கள், உயிர்க்காரணிகள் போன்றவற்றால் ஒரு ஆண்டில் கூடுதல் வளர்ச்சி வளையங்கள் தோன்றுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட வளையங்கள் தோன்றுவதால் உருவாக்கப்படுகின்றன.
(vi) இந்த வளையங்கள் போலி ஆண்டு வளையங்கள் (pseudo-or false-annual rings) எனப்படுகிறது.
வளர்ச்சி வலையங்களைப் பற்றி படிப்பதன் முக்கியத்துவம்:
(i) மரத்தின் வயதைக் கணக்கிட முடியும். மரக்கட்டையின் தரத்தை உறுதிப்படுத்த முடியும்.
(ii) கதிரியக்கக் கரியம்க் காலக் கணக்கீடு (radio- cardon dating) சரிப்பார்க்க முடியும்.
(iii) கடந்த கால நிலை, தொல்லியல் (archaeological) கணக்கீடு போன்றவற்றைச் செய்ய முடியும்.
(iv) தடயவியல் (forensic) விசாரணைக்கு ஆதாரங்களை வழங்குகிறது.
58.
சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் :
1. ஆக்சின் (IAA) இருக்கும் போது செல் வகுப்பை தூண்டுகிறது.
2. ஒளி உணரும் தன்மை பெற்ற விதைகளில் அதன் உறக்கத்தை நீக்கி முளைக்கும்படி செய்கிறது. எடுத்துக்காட்டு: புகையிலைத் தாவரம்.
3. ஆக்சின் இருக்கும் போது, பட்டாணி தாவரத்தில் பக்க மொட்டுகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது
4. சைட்டோகைனின் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சி அடையச் செய்து தாவரங்கள் வயதாவதை தாமதப்படுத்துகிறது. இதற்கு ரிச்மாண்ட் லாங்க் விளைவு (Richmond lang effect ) என்று பெயர்.
5. சைட்டோகைனின் புரத சேர்க்கை விதத்தை அதிகப்படுத்தவும் , கற்றை இடைக்கேபியம் உருவாதலைத் தூண்டவும் , புதிய இலைகள் , பசுங்கணிகம் மற்றும் பக்க கிளைகள் உருவாதலை தூண்டவும் உதவுகிறது.
6. தாவரங்கள் மிகத் துரதமாக கரைப் பொருட்களை சேகரமடையச் செய்ய உதவுதல்.
59.
காற்று சுவாசித்தலின் ஒரு மூலக்கூறு குளுக்கோஸ் உருவாகும் நிகர மூலக்கூறுகளின் அளவு
| நிலைகள் | CO2 | ATP | ஒடுக்க நிலையிலுள்ள NAD | ஒடுக்க நிலையிலுள்ள FAD | மொத்த ATP உற்பத்தி |
| கிளைக்காலைசிஸ் | 0 | 2 | 2(2x2=4) | 0 | 6 |
| இணிப்பு வினை | 2 | 0 | 2(2x3=6) | 0 | 6 |
| கிரப்ஸ் சுழற்சி | 4 | 2 | 6(6x3=18) | 2(2x2=4) | 24 |
| மொத்தம் | 6 | 4 ATP கள் | 28 ATP கள் | 4 ATP கள் | 36 ATP கள் |
சுவாச ஈவு (Respiratory Quotient)
சுவாசித்தலின் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுக்கும் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன் அளவுக்கும் உள்ள விகிதமே சுவாச் ஈவு அல்லது சுவாச விகிதம் எனப்படும். சுவாச தளப்பொருள்களின் தன்மை மற்றும் அதன் ஆக்சிஜனேற்றத்தை பொருத்து சுவாச் ஈவு மதிப்பு மாறுபடும்.

60.
TCA சுழற்சியின் தொடக்கத்தில் அசிட்டைல் CoA வானது ஒரு நீர் மூலக்கூறினைப் பயன்படுத்தி ஆக்ஸலோ அசிட்டேட்டுடன் இணைந்து சிட்ரேட் அல்லது சிட்ரிக் அமிலம் உருவாகிறது. ஆகவே கிரப்ஸ் சுழற்சியைச் சிட்ரிக் அமிலச் சுழற்சி (CAC)(அ) ட்ரை கார்பாக்ஸிலிக் அமில (TCA) சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது.

மைட்டோகாண்ட்ரியாவில் நிகழும் இணைப்பு வினை மற்றும் கிரப்ஸ்சுழற்சியின் ஒட்டுமொத்த நிகழ்வு பின்வருமாறு:
பைருவிக் அமிலம் 4NADH+FAD+4H2O+ADP+Pi
மைட்டோண்ட்ரிய மேட்ரிக்ஸ்
3CO2+4NADH+4H++FADH2+H2O+ATP
கிளைக்காலைசிஸ் நிகழ்ச்சியின் இறுதியில் உருவான இரண்டு மூலக்கூறு பைருவிக் அமிலம் மைட்டோகாண்ட்ரியத்தின் மேட்ரிகஸில் நுழைவதால் இவை இரண்டும் தனித்தனியே கிரப்ஸ் சுழற்சியை நிகழ்த்தி, மொத்தமாக ஒரு மூலக்கூறு குளுக்கோஸிலிருந்து ஆறு மூலக்கூறு CO2 எட்டு மூலக்கூறு NADH + H+,இரண்டு மூலக்கூறு FADH2 மற்றும் இரண்டு மூலக்கூறு ATP ஆகியவை உருவாகின்றன.
61.
(i) நுனி மற்றும் பக்க ஆக்குத்திசு : நுனி ஆக்குத்திசுவானது முதல்நிலை தாவர உடலத்தை தோற்றுவிக்கின்றன.
(ii) கட்டைத் தாவரங்கள் இரண்டு வகையான பக்க ஆக்குத்திசுக்கலை கொண்டுள்ளது. வாஸ்குலக் கேம்பியம் இரண்டாம் நிலை சைலம் ஃபுளோயத்தையும், கார்க்கேம்பியம் மரப்பட்டையையும் தோற்றுவிக்கின்றன.
இதுவே இரண்டாம் நிலை வளர்ச்சி ஆகும். ஏனென்றால் பக்க ஆக்குத்திசுவானது நேரடியாக நுனி ஆக்குத்திசுவினால் தோற்றுவிக்கப்படுவத்தில்லை.
(iii) தண்டில் இரண்டாம் நிலை வளர்ச்சி : ஜிம்னோஸ்பெர்ம், பெரும்பாலான் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் தண்டின் சுற்றளவு பக்க ஆகுத்திசுவினால் அதிகரிக்கின்றது.
(iv) வேரில் இரண்டாம் நிலை வளர்ச்சி : ஜிம்னோஸ்பெர்ம், பெரும்பாலான் அஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வேரின் சுற்றளவு பக்க அக்குத்திசுவினால் அதிகரிக்கின்றது.
62.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகள்:
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலைத் தண்டு | ஒருவிதையிலைத் தண்டு |
| 1. | பபுறத்தோலடித்தோல் | கோலங்கைமா செல்களானது. | ஸ்கிலிரங்கைமா செல்களானது. |
| 2. | அடிப்படைத்திசு | புறணி, அகத்தோல், பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படுகிறது. |
வேறுபடாத, தொடர்ச்சியான பாரங்கைமா திசுவால் ஆனது. |
| 3. | தரசு அடுக்கு | காணப்படுகிறது | காணப்படவில்லை. |
| 4. | மெடுல்லா கதிர்கள் | காணபப்டுகிறது | காணப்படவில்லை. |
| 5. | வாஸ்குலக் கற்றைகள் | (i) ஒருங்கமைந்தவை மற்றும் திறந்தவை. (ii) ஒரு வளையமாக அமைந்துள்ளன. (iii) இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுகிறது. |
(i) ஒருங்கமைந்தவை மற்றும் மூடிய வை. (ii) அடிப்படைத்திசுவில் சிதறிக் காணப்படுகிறது. (iii) இரண்டாம் நிலை பொதுவாக நடைபெறுவதில்லை. |
63.
ஸ்கிலிரைடுகளின் வகைகளை:
(i) பிரேக்கி ஸ்கிலிரைடுகள் அல்லது கல் செல்கள் (Brachysclerids or Stone cells):
இவை ஒத்த விட்டம் கொண்ட ஸ்கிலிரைடுகள். கடினமான செல் சுவர்களைக் கொண்டுள்ளன. இச்செல்கள் தாவரங்களின் பட்டைகள், பித், புறணி, கடின கருவூண் திசு மற்றும் சியல் கனிகளின் தசைப் பகுதிகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: பேரிக்காயின் தளத்திசு (pulp of Pyrus)
(ii) மேக்ரோஸ்கிலிரைடுகள் (Macrosclereids):
இவை சிறு கழிகள் போன்ற நீண்ட செல்களாகும். இவை லெகூம் தாவர விதை வெளி உறைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: குரோட்டலேரியா, பைசம்.
(iii) ஆஸ்டியோ ஸ்கிலிரைடுகள் (Osteosclereids):
இவை விரிவடைந்த நுனிப் பாகங்களுடன் கூடிய நீண்ட செல்கள். இவை இலைகள், விதை உறைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு:பைசம் மற்றும் ஹேகியா (Kakea) விதை உறைகள்.
(iv) ஆஸ்டிரோ ஸ்கிலிரைடுகள் (Astrosclereids):
எவை கிளைத்த பிரிவுகலைக் கொண்ட நட்சத்திர வடிவ ஸ்கிலிரைடுகள் ஆகும். இவை இலைகள், இலைக்காம்பு ஆகியவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: தேயிலை, நிம்பையா, ட்ரைகோடென்ட்ரான்.
(v) டிரைக்கோ ஸ்கிலிரைடுகள் (Trichosclereids):
இவை மெல்லிய சுவர் கொண்ட மயிரிழைகள் போன்ற ஸ்கிலிரைடுகள் ஆகும். எண்ணற்ற கோண நுனிப்பிளவுற்ற படிகங்கள் செல் சுவரில் படிந்திருக்கும். இவை நீர் தாவரங்களின் தண்டு மற்றும் இலைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: நிம்பையா, இலைகள், மான்ஸ்டீரா காற்று வேர்கள்.
64.
| பண்புகள் | மோனிரா | புரோடிஸ்டா | பூஞ்சைகள் | தாவரங்கள் | விலங்குகள் |
|---|---|---|---|---|---|
| செல்வகை | புரோகேரியோட் | யூகேரியோட் | யூகேரியோட் | யூகேரியோட் | யூகேரியோட் |
| செல்சுவர் | செல் அமைப்பு கிடையாது | சிலவற்றில் உண்டு | உண்டு | உண்டு | உண்டு |
| உடலமைப்பு | செல்லால் ஆனவை | செல்லால் ஆனவை | பல செல் மற்றும் திசுக்களால் ஆனவை | திசு மற்றும் உறுப்பு அமைப்பு | திசு, உறுப்பு மற்றும் உறுப்பு மண்டல அமைப்பு |
| உணவூட்ட முறை | தன்னூட்ட மற்றும் சார்ந்துண்ணும் ஊட்ட முறை | தன்னூட்ட மற்றும் சார்ந்துண்ணும் ஊட்ட முறை | சார்ந்துண்ணும் ஊட்ட முறை | தன்னூட்ட முறை | சார்ந்துண்ணும் ஊட்ட முறை |
65.
1. ஒவ்வொரு உயிரியின் சிறப்புப் பண்புகளை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
2. நெருங்கிய தொடர்புள்ள சிற்றினங்களுக் கிடையே உள்ள உறவுகளை அறிந்து கொள்ள முடியும்.
3. உயிரினங்களுக்கு இடையே உள்ள ஒத்த மற்றும் மாறுபட்ட பண்புகளின் அடிப்படையில் ஒரு சிற்றினத்தை வரிசைப்படுத்த முடியும்.
4. உயிரினப் பலவகைமை சார்ந்த தகவல்களை உருவாக்குவதற்கு இது அவசியமாகிறது.
5. உயிரிகளின் படிநிலையில் உள்ள அனைத்து வகைப்பாட்டு தொகுதியின் எல்லா மட்டங்களிலும் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பெயரிட உதவுகிறது.
66.
67.
1.இதயத்தசை
2. ஈரிதழ் வால்வு
3. டயஸ்டோல்
4. ஆரிக்கிள்
5. பெருஞ்சிரை
6.பெருந்தமனி, நுரையீரல் தமனி
7. ஆரிக்கிள்கள்
8. வென்ட்ரிக்கிள்
9. நுரையீரல் தமனி
10. இதய இயக்கச் சூழ்ற்சி
11. அரைச்சந்திர வால்வு
12. பெருஞ்சிரை
13. நுரையீரல் சிரை
14. வென்ட்ரிக்கிள்கள்
15. அரைச்சந்திர வால்வுகள்
16. இதய இயக்கச் சுழற்சி
17. மூவிதழ் வால்வு
18. சிஸ்டோல்
19. இரத்த நுண் நாளங்கள்
(i) பெருந்தமனி
(ii) நுரையீரல் தமனி
(iii) இடது நுரையீரல் சிரை
(iv) நுரையீரல் தமனி
(v) இடது வென்ட்ரிக்கிள்
(vi) வலது வென்ட்ரிக்கிள்
(vii) கீழ் பெருந்திரை
68.
1. இது ஒரு சிறப்புவகை இணைப்புத்திசுவாகும்.
2. செல்லிடைப் பொருட்கள் உறுதியானவை
3. வளையும் தன்மையுடையதாகவும் அழுத்தத்தை தங்கக்கூடியதாகவும் உள்ளது.
4. கான்ட்ரோஸ்ட்டுகளால் ஆனவை
5. கான்ட்ரோசைட்டுகள் தளைத்திசுவில் உள்ள சிறிய குழிகளுக்கு பொதிந்து காணப்படுகிறது.
6. முதுகெலும்பின் கருநிலையில் காணப்படும் பெரும்பாலான குருத்தெலும்புகள் பெரியவர்களானதும் எலும்புகளாக மாறுகிறது.
7. காணப்படும் இடம் - வெளிக்காது, செவி மடல், அடுத்தடுட்ர்ஹ முள்ளெலும்புகளுக்கு இடையில், கை, கால்கள்
69.
அ) உள் இனக்கலப்பு:
4 முதல் 6 தலைமுறைகளுக்கு ஒரே இனத்தின் விலங்குகளுக்கிடையே இனக்கலப்பு செய்வது உள் இனக்கலப்பு எனப்படும். உள் இனக்கலப்பினால் ஒத்த கருநிலைத்தன்மை உயர்கின்றது.
ஆ) வெளியினக் கலப்பு:
ஒரே சீற்றினத்தைச் சேர்ந்த சந்ததி தொடர்பில்லாத விலங்குகளுக்கிடையே இனக்கலப்பு செய்வது வெளி இனக்கலப்பு ஆகும். இதில் உருவாகும் விலங்குக்கு 4 முதல் 6 தலைமுறை வரை பொது மூதாதையர் கிடையாது.
1. வெளிக்கலப்பு:
பொது மூதாதையர்களற்ற தொடர்பில்லாத ஒரே இனத்தின வெவ்வேறு விலங்குகளுக்கிடையே கலப்பு செய்வது வெளிக்கலப்பு ஆகும். இதனால் வெளிப்படும் இள உயிரிகளுக்கு வெளிக்கலப்பு உயிரிகள் என்று பெயர். இம்முறையை சராசரிக்கும் குறைவான உற்பத்தித்திறன் கொண்ட விலங்குகளிடையே செய்வது உகந்ததாகும்.
2. குறுக்குக் கலப்பு:
இது உயர்தர பண்புகளை உடைய ஒரு இனத்தின் ஆண் விலங்கு மற்றும் உயர்தர பண்புகளை உடைய மற்றொரு இனத்தின் பெண் விலங்கு இவற்றின் இடையே செய்யப்படும் கலப்பு ஆகும். இதனால் உண்டாகும் தலைமுறை உயர்தர பண்புகளைக் கொண்டு அமையும் (கலப்பின் வீரியம் அல்லது கலப்பினத்திறன்).
3. சிற்றினங்களுக்கிடையே கலப்பினம் செய்தல்:
இம்முறையில் இருவேறு சிற்றினங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் விலங்குகளுக்கு இடையே கலப்பு செய்யப்படுகின்றது. இதனால் உருவாகும் உயிரிகள் பெற்றோர் பண்புகளில் இருந்து மாறுபட்டுக் காணப்படும். இவை பெற்றோர்களின் விரும்பத்தக்க பண்புகளைக் கொண்டிருக்கலாம். கோவேறு கழுதை எனும் உயிரி ஆண் கழுதை மற்றும் பெண் குதிரை இணைவால் தோன்றுவதாகும்.
70.
1. பட்டு நூல்கள் பட்டுத் துணிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
2. தற்பொழுது பட்டு நூலினை இயற்கை மற்றும் செயற்கை இழைகளுடன் இணைந்து டெரிபட்டு, காட்டன்பட்டு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
3. பட்டு, நிறம் சேர்க்கப்பட்டு ஆடை அலங்கார பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் எரி அல்லது ஸ்பன் வகை பட்டிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
4. தொழிற்ச்சாலைகளிலும் இராணுவத் துறையிலும் பட்டு பயன்படுத்தப்படுகிறது.
5. மீன்பிடி வலைகள், பாராசூட்டுகள், கார்ட்ரிட்ஜ் பைகள், தொலை தொடர்பு கம்பிகளின் மேலுறைகள் மற்றும் கம்பியில்லா தொலைபேசிக் கருவிகள், பந்தய காரின் டயர்கள், வடிகட்டி இழைகள், மருத்துவத் துறையில் காயக்கட்டுத் துணிகள் மற்றும் தையலிடுவதற்கும் பட்டு பயன்படுகிறது.
71.
72.
I. உண்மை விலா எலும்புகள்
II. போலி விலா எலும்புகள்
III. மிதக்கும் விலா எலும்புகள்
1. 12 இணைவிலா எலும்புகள் உள்ளன.
2. மெல்லிய தட்டையான ஒவ்வொரு விலா எலும்பும் முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடருடனும் வயிற்றுப்புறத்தில் மார்பெலும்புடனும் இணைந்துள்ளது.
3.இவற்றின் முதுகுப்புறத்தில் இரு அசையும் இணைவுப் பகுதிகள் உள்ளதால் இவை இருதலைக் கொண்டன எனப்படுகின்றன.
உண்மை விலா எலும்புகள்:
1. முதல் 7 இணை விலா எலும்புகள் உண்மை விலா எலும்புகள் அல்லது முள்ளெலும்புகள் விலா எலும்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
2. இவை முதுகுப்புறத்தில் முதுகெலும்புத் தொடரின் மார்பு முள்ளெலும்புகளுடனும் வயிற்றுப்பகுதியில் மார்பெலும்புடனும் ஹையலின் குருத்தெலும்பால் இணைக்கப்பட்டுள்ளன.
போலி விலா எலும்புகள்:
1. 8,9,10 ஆவது இணை விலா எலும்புகள் நேரடியாக மார்பெலும்புடன் இணையாமல் 7 ஆவது விலா எலும்பின் ஹையலின் குருத்தெலும்பு பகுதியோடு இணைந்துள்ளது. இதற்குப் போலி விலா எலும்புகள் என்று பெயர்.
மிதக்கும் விலா எலும்புகள்:
1. கடைசி இரு இணைகள் (11 மற்றும் 12 ஆவது இணை) வயிற்றுப் பகுதியில் மார்பெலும்புடன் இணையாமல் இருப்பதால் இவற்றிற்கு மிதக்கும் விலா எலும்புகள் என்றும் பெயர்.
2. மார்பு முள்ளெலும்புகள், விலா எலும்புகள் மற்றும் மார்பெலும்பு ஆகியவற்றால் விலா எலும்புக்கூடு உருவாகியுள்ளது. நுரையீரல் , இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பாதுகாப்பதுடன் சுவாசத்திலும் விலா எலும்புக்கூடு பங்கேற்கின்றது.
73.
74.
டையாபெட்டிஸ் மேலிட்டஸ்:
செல்களில் குளுகோஸின் பயன்பாட்டு அளவையும் குளுகோஸின் உள்ளேறும் அளவையும் குளுகோகான் தடுப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. நாள்பட்ட ஹைபர்கிளைசீமியா, டையபடிஸ் மெலிட்டஸ் என்னும் நீரிழிவு நோய்க்கு காரணமாகிறது.
டையாபெட்டிஸ் இன்சிபிடஸ்:
இக்குறைபாடு பிட்யூட்டரின் பின்காதுப்பு ஹார்மோனான வாஸோப்ரஸ்ஸின் (ADH) சுரப்பு குறைவதால் தோன்றுகிறது. பாலியூரியா மற்றும் பாலிடிப்சியா போன்றன இதன் அறிகுறிகளாகும்.
75.
யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை நைட்ரஜன் கழிவுப்பொருள் நிர்ணயிக்கிறது.
இது அமோனியா, யூரியா மற்றும் யூரிக் அமிலம் அடிப்படையில் வேறுபடுகிறது.
யூரியோடெலிக் உயிரிகள் - பாலூட்டிகள், நிலவாழ் இருவாழ்விகள்
யூரிகோடெலிக் உயிரிகள் - ஊர்வன, பறப்பன, நிலவாழ் நத்தைகள்.
76.
1. சுவை மற்றும் மணம் இவற்றிற்கான உணரவேற்பிகள் எனப்படுகின்றன. காற்றில் கரையச் கூடிய வேதிப்பொருட்கள் நுகர்ச்சி உணரவேற்பிகளைத் தூண்டுவதால் மணம் உணரப்படுகிறது.
2. நாசியறைகளின் கூரைப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் எனப்படுகிறது.
3. நுகர்ச்சி எபித்தீலியமானது கீழ்புறம் கோழைப்படலத்தாலும், மேல்புறம் நுகர்ச்சி சுரப்பிகளைக் கொண்ட இணைப்புத்திசுக்களாலும் சூழப்பட்டுள்ளது.
4. நுகர்ச்சி உறுப்பில் மூன்று வகையான செல்கள் காணப்படுகின்றன. அவை
1.ஆதரவு செல்கள்,
2. அடிப்படை செல்கள்,
3. ஆயிரக்கணக்கான ஊசி வடிவ நுகர்ச்சி உணர்வேற்பி செல்கள்.
5. மயலினுறை அற்ற இந்த உணர்வேற்பிகளின் மெல்லிய இழைகள் இணைந்து நுகர்ச்சி நரம்பாக மாறியுள்ளது. இது நுகர்ச்சி குமிழில் இணைகிறது.
6. மூளையின் முன்நெற்றி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணம் உணரப்படுகிறது.
7.மூளையின் முன்நெற்றி பகுதிக்கு செல்லும் அதே நேரம் தூண்டல்கள் லிம்பிக் தொகுப்புக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்க்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.
77.
1. எல்லா உணர்வுகளுக்கும் மேலான மகிழ்வூட்டும் உணர்வாகச் சுவை உணர்வு உள்ளது. நாவில் காணப்படும் சிறிய புடைப்புகள் பாப்பிலாக்கள் எனப்படுகின்றன.
2. இவை நாக்குக்குச் சொரசொரப்புத் தன்மையைத் தருகிறது. நாக்கு முழுவதும் பரவிக் காணப்படும் பாப்பில்லாக்களில் இவை மொட்டுக்கள் அதிகம் காணப்படுகின்றன.
3. எனினும் மேலண்ணத்தின் மென்மையான பகுதி, கன்னத்தின் உள்பரப்பு, தொண்டை பகுதி, குரல்வளை மூடி போன்ற பகுதிகளிலும் சுவை மொட்டுக்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன.
4.சுவைமொட்டுக்கள் குடுவை வடிவமுடையவை. இவற்றில் 50-100 வரையிலான எபிதீலியல் செல்கள் காணப்படுகின்றன. இரண்டு வகை எபிதீலியம் செல்கள் உள்ளன. அவை
1. சுவை எபிதீலியல் செல்கள் (சுவை உணர்விகள்)
2. அடிப்படை அல்லது பேசல் எபிதீலியல் செல்கள் (புதுப்பிக்கும் செல்கள்)
5. சுவை எபிதீலிய செல்களிலிருந்து வெளிவரும் சுவை நுண்இழைகள் சுவைத் துளைகளின் வழியாக வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.
6. இவை உமிழ்நீரில் அமிழ்ந்து காணப்படுகின்றன. சுவை உணர் செல்களில் உள்ள சுவை நுண் இலைகளே சுவையே உணரும் பகுதியாகும்.
7. இச்செல்களில் உணர்தன்மை கொண்ட டென்ட்ரைட்டுகள் சுவைக்கேற்பக் குறிப்புகளை முலைக்கு அனுப்புகின்றன.
8. பேசல் செல்கள் மூலச்செல்களாக செயல்பட்டு புதிய சுவை எப்பிதீலியல் செல்களை உருவாக்குகின்றன.
78.
A - வலது, இடது, கல்லீரல் நாளம்,
B - பொது பித்த நீர் நாளம்,
C - கணைய நாளம்
D - கல்லீரல் கணைய நாளம்|
E - சிஸ்டிக் நாளம்.
79.
80.
1. உடலின் மேற்பரப்பில் உடற்குழியினைச் சுற்றிலும் காணப்படும் செல் வரிசையானது எபிதீலியத்திசு எனப்படும்.
2. உடலின் மேற்பரப்பில் இத்திசுவானது உரை போன்றும், மெல்லிய படலம் எபிதீலியமாகவும், சுரப்பு எபிதீலியமாகவும் காணப்படுகிறது.
3. பாதுகாப்பு, உறிஞ்சுதல், வடிகட்டுதல், கழிவு நீக்கம் சுரப்பு மற்றும் உணர்வறிதல் போன்ற பணிகளை செய்கிறது.
வகைகளும், பண்புகளும்
| வ.எண் | எபிதீலியம் | பண்புகள் | |
|---|---|---|---|
| 1 | A | எளிய எபிதீலியம் | - ஓரடுக்கு செல்களால் ஆனது |
| தட்டை வடிவ செல்கள் | - தட்டையான ஓரடுக்கு செல்களால் ஆனது | ||
| - ஒழுங்கற்ற விளிம்பினை உடையது. | |||
| B | கனசதுர வடிவ செல்கள் | -கனசதுர வடிவமுடைய ஓரடுக்கு செல்களால் ஆனது | |
| C | தூண்வடிவ செல்கள் | - வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவை செல்லின் அடிப்பகுதியில் கொண்ட உயரமான ஓரடுக்கு செல்களால் ஆனது. | |
| D | குறு இழை கொண்ட செல்கள் | - தூண்வடிவ செல்களின் உச்சி பரப்பில் குறு இழைகள் காணப்படுகிறது | |
| E | பொய் அடுக்கு செல்கள் | - தூண்வடிவதிலும் சமமற்ற அளவுகளில் காணப்படுகிறது. - ஓரடுக்காலானது. ஆனால் பார்ப்பதற்கு பல அடுக்கு போன்று காட்சி அளிக்கிறது. - உட்கரு வெவேறு மட்டத்தில் காணப்படுகிறது. |
|
| F | சுரப்பு எபிதீலியம் | - கனசதுர வடிவ, தூண்வடிவ ஓரடுக்கு செல்களால் ஆனது. | |
| கூட்டு எபிதீலியம் | - பல அடுக்கு செல்களால் ஆனது. - சுரத்தலிலும் உறிஞ்சுதலிலும் சிறிதளவு பங்கு கொள்கிறது. |
||
| II | A | அடுக்கு கூட்டுத்திசு 1. பல அடுக்கு தட்டை வடிவ செல்கள். 2. கனசதுரவடிவ செல்கள் 3. தூண்வடிவ செல்கள் |
- பல அடுக்கு செல்களால் ஆனது |
| B | இடைநிலை எபிதீலியம் | இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளை பாதுகாக்கிறது. | |
81.
| I. தளர்வான இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | ஏரியோலார் திசு | - எப்பீதிலிய செல்களுக்கு தாங்கு சட்டகம் - உடல் திசுக்களுக்கு நீர், உப்பினை தேக்குகிறது |
| 2 | அடிபோஸ் திசு | - கொழுப்பையும், பயன்படுத்தப்படாத உணவை கொழுப்பாக மாற்றி சேமிக்கிறது. - உணவுண்ணாத நிலையில் ஆற்றலை கொடுக்கிறது. |
| 3 | ரெட்டிகுலார் திசு | - நிணநீர் கணுக்கள், மண்ணீரல், எலும்பு மஞ்சை போன்ற உறுப்புகளில் இரத்த செல்களுக்கு அகசட்டமாக பயன்படுகிறது. |
| II. அடர்வான இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | அடர்வான சீரான திசு | - தசைகளையும் எலும்புகளையும் இணைகிறது. - எலும்பினையும் எலும்புபினையும் இணைகிறது. |
| 2 | அடர்வான சீரற்ற திசு | - சிறுநீரகம், எலும்பு, குருத்தெலும்பு, தசைகளுக்கு நாரிழை உரையாக அமைகிறது. |
| 3 | மீள்தன்மை திசு | - இழுக்கப்பட்ட தசைகளை மீண்டும் சுருண்ட உறையாக அமைகிறது. - தமனிகள் சுருங்கி விரிய, நுரையீரல் சுருங்க காரணமாகிறது. |
| III. சிறப்பு வகை இணைப்புத்திசு | ||
|---|---|---|
| வ.எண் | இணைப்புத்திசுவின் வகைகள் | செயல்கள் |
| 1 | குருத்தெலும்புகள் | - வளையும், அழுத்தத்தை தாங்கும் - காதுமடல், மூக்கின் ஆதரவு மற்றும் அமைப்பைத் தருகிறது. |
| 2 | எலும்புகள் | - அகச்சட்டமாக அமைந்து உடலுக்கு உருவத்தை கொடுக்கிறது. |
| 3 | இரத்தம் | - திரவ இணைப்புத்திசு - உடலில் உள்ள அணைத்து உறுப்புகளையும் இணைகிறது. |
82.
1. காற்று நுண்ணறைகளில் உள்ள அதிக O2 பகுதி அழுத்தம், குறைவான CO2 பகுதி அழுத்தம், குறைவான வெப்பநிலை மற்றும் குறைவான H2 அயனிஅடர்த்தி ஆகியவை ஆக்ஸிஹீமோகுளோபின் உருவாவதற்கான சாதகச் சுழலாகும். அதே நேரத்தில் திசுக்களில் உள்ள குறைவான O2 பகுதி அழுத்தம் அதிக CO2 பகுதி அழுத்தம் அதிக H2 அயனி அடர்த்தி மற்றும் அதிக வெப்பநிலை ஆகியவை ஆக்ஸிஹீமோகுளோபினிலிருந்து O2 பிரிவதற்கான சாதகச் சுழலாகும்.
2. இந்த இரண்டு சாதகச் சூழலைத் தவிர்த்து, வேறுபட்ட O2 மற்றும் CO2 பகுதி அழுத்தம், வெப்பம், H2 அயனி அடர்த்தி, O2 கடத்தலில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
83.

84.
உயிரினங்கள் பொதுவாக அதிகமான முட்டைகளையே இடுகின்றன. அதிகமான ஆண் இனச்செல்களையும் பெண் இனச்செல்களையும் உருவாக்குவதால் அதிகமான கருவுற்ற முட்டைகள் உருவாகின்றது. முதுகுநாணற்ற விலங்குகள் பெரும்பான்மையான நீர் வாழும் பண்பை பெற்றிருப்பதாலும், நிலத்தில் வாழும் பண்பை பெற்றிருப்பதாலும் முட்டைகளையே இடுகின்றன. மேலும் மறைமுகவளர்ச்சி கொண்டுள்ளவைகள், லார்வாக்களை உருவாக்குபவைகள் முட்டைகளை அதிக எண்ணிக்கையில் இடுகின்றன.
குட்டி ஈனும் பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் குறைவாகவே உள்ளது. காரணம் கருவளர்ச்சி சிக்கலானதாகும் கருவளர்ச்சிக்கு பாதுகாப்பு படலங்கள் தேவைப்படுகிறது.
85.
அ. கடல் சாமந்தி (ஆடம்கியா) (தொகுதி: நிடோரியா)
ஆ. இருபக்க சமச்சீரமைப்புடைய விலங்கு
இ. தலை காணப்படவில்லை
ஈ. ஈரடுக்கு கொண்ட உயிரி
உ. ஒன்று மட்டும் (வாய் அல்லது ஹைப்போஸ்டோம்).
ஊ. வலைப் பின்னல் அமைப்பாக பரவியுள்ள மிக எளிய நரம்பு மண்டலம் உள்ளது.
86.
| வ.எண் | விலங்கு காட்சி சாலை | வன விலங்கு சரணாலயம் |
|---|---|---|
| 1. | மனித மேற்பார்வையுடன் கூடிய பாதுகாப்பான வனப்பகுதியில் காட்டு விலங்குகள் வைக்கப்பட்டிருக்கும் | பாதுகாக்கப்பட்ட இடம், மனிதர்களுடைய செயல்கள் குறைவு |
| 2. | விலங்குகள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டிருக்கும் | தடை செய்யப்பட்டிருக்கும் மரங்கள் வெட்ட அனுமதி இல்லை. விவசாயத்திற்கு காடுகளை அழிக்க கூடாது. மனிதர்கள் தங்கள் தேவைக்கு விறகு, உணவுப் பொருட்கள், மருத்துவத் தாவரங்களை சேகரித்துக் கொள்ளலாம். |
| 3. | எ.கா: அறிஞர் அண்ணா மிருகக் காட்சி சாலை வண்டலூர். | எ.கா: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். |
87.
RNA-வின் அமைப்பு:
ரைபோ நியூக்ளிக் அமிலம் (RNA) என்பது ஒரு பல அடுக்கு மூலக்கூறாகும்.இது மரபுக்குறியிடுதல், குறியீடு நீக்கம், மரபுப் பண்புகளின் ஒழுங்குமுறை மற்றும் ஜீன் வெளிப்பாடு ஆகிய பல்வேறு உயிரிய நிகழ்வுகளில் பங்காற்றுகின்றது.DNA - வோடு ஒப்பிடுகையில் RNA ஒற்றை இழை உடையது.நிலையற்றது.
RNA வகைகள்:
1.தூதுவ RNA [mRNA] : அமினோ அமிலங்களில் இருந்து புரதம் உருவாக்குவதற்கான அறிவுறுத்தல்களின் நகலினைப் பெற்றுள்ளது.இது மிகவும் நிலையற்றது.செல்லின் மொத்த RNA -வில் 56 விழுக்காடாக இது உள்ளது.புரோகேரியோட்டுகளில் உள்ள mRNA (பாலிசிஸ்ட்ரானிக்) பல பாலிபெட்டைடுகளுக்கான குறியீடு வரிசைகள் கொண்டுள்ளதாகவும் காணப்படுகிறது.யூகேரியோட்டுகளில் உள்ள mRNA (மோனோசிஸ்ட்ரானிக்) ஒரு பாலிபெட்டைடுகளுக்கான மரபுச் செய்தியினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது.
2.கடத்து RNA [tRNA]: தூதுவ RNA - வில் உள்ள மரபுக் குறியீட்டை மொழி பெயர்ந்து அமினோ அமிலங்களை ரைபோசோமுக்குக் கடத்தி புரதம் உருவாக இது உதவுகிறது.இது மிகவும் மடிப்புற்று விரிவான முப்பரிமாண அமைப்பு கொண்டது.செல்லின் 15விழுக்காடு RNA இவ்வகையைச் சாரும்.அதிகக் கரையும் தன்மை பெற்ற RNA இதுவாகும்.
3.ரைபோசோமல் RNA [rRNA]: ரைபோசோம்களை உருவாக்க உதவும் RNA - இதுவாகும் செல்லில் 80 விழுக்காடு RNA இவ்வகையைச் சாரும்.ரைபோசோம்களின் துணை அலகுகளுக்கு வடிவுருவத்தைத் தரும்.இவை 120 முதல் 3000 என்ற எண்ணிக்கையில் நியூக்ளியோடைடுகளை பெற்ற மீச்சேர்மங்களாக உள்ளன.இவற்றிக்குரிய ஜீன்கள் அதிக நிலைத் தன்மை பெற்றவை.எனவே ரைபசோமல் RNA -ன் மரபு வழி ஆய்வுகளுக்கு அதிகம் பயன்படுகின்றன.
88.
1.வெப்ப நிலை
2. pH
3.தளப்பொருட்களின் செறிவு
4.நொதிகளின் செறிவு
5.மிக்கலிஸ் - மெண்டன் மாறிலி
6.நொதிச் செயல் ஒடுக்கிகள்
7.போட்டி ஒடுக்கிகள்
8. போட்டியிலா ஒடுக்கிகள்
9.வேற்றுத்தள ஒடுக்கிகள்
89.
பாக்கிடீன்: இந்த நிலையில் பைவாலண்ட் குரோமோசோம்களின் நான்கமை நிலை (Tetrads) தெளிவாகப் புலப்படுகிறது. மியாசிஸ் I ல் பைவாலண்ட் ஒவ்வொன்றும் 4 குரோமாட்டிட்கள், 2 சென்ட்ரோமியர்களைக் கொண்டுள்ளது. ஒத்திசைவு குரோமோசோமின் (Homologous chromosome ) சகோதரி குரோமாட்டிட்கள் குறுக்கெதிர் மாற்றம் (Crossing over ) நடைப்பெற்ற பகுதியில் மீள்சேர்க்கைக்கு உதவும் இலக்குகள் (Recombination
nodules) தோன்றுகிறது. இந்தத் துணை நிலையின் முடிவில் ஒத்திசைவு குரோமோசோம்களுக்கிடையே மீள் சேர்க்கை நிகழ்வது முடிவுற்றுக் குறுக்கெதிர் மாற்றம் நடந்த பகுதியில் மட்டும் குரோமோசோம்கள் இணைந்துள்ள நிலை ஏற்படுகிறது. இந்நிகழ்விற்கு ரிகாம்பினேஸ் என்ற நொதி உதவுகிறது.

டிப்லோட்டீன்: சினாப்டினிமல் தொகுப்பு கலைந்து கரையத் தொடங்கிறது. குறுக்கெதிர் மாற்றம் நடந்து, ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட புள்ளிகளில் ஒத்திசைவு குரோமோசோம்கள் பிணைந்த நிலையிலேயே உள்ளன. இவ்விலக்கில் "X" வடிவ அமைப்பு காணப்படுகிறது. இவ்விலக்குகள் கயாஸ்மாக்கள் (Chiasmata) எனப்படுகின்றன. குரோமோசோம்களில் மீள் சேர்க்கை நிகழ்ந்த இலக்கை இந்தக் கயாஸ்மாக்கள் குறிக்கின்றன. சகோதரி குரோமாட்டிகள் நெருக்கமாக இணைவுற்றிருந்தாலும் ஒத்திசைவு குரோமோசோம்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகிய நிலையில் காணப்படும். இருப்பினும் இவை காயஸ்மா இலக்குகளில் இணைந்தே காணப்படுகின்றன. இந்த துணை நிலையில் பால் தன்மை மற்றும் உயிரிகளுக்கேற்ப நாட்கள் அல்லது வருடங்கள் வரை நீடிக்கும்.

பெண் கேமீட்டான முட்டையில் கருவளர்ச்சிக்கான ஊட்டப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால் குரோமோசோம்களில் அதிவேகமாக படியெடுத்தல் நடைபெறுகிறது. இதனால் ஏற்படும் குரோமோசோம் அமைப்பே விலங்கு செல்களில் காணப்படும் விளக்கு தூரிகை குரோமோசோம் உருவாக உதவுகிறது.
90.
| வ. எண் | விலங்கு செல் சைட்டோகைனசிஸ் | தாவர செல் சைட்டோகைனசிஸ் |
| 1. | விலங்கு செல்களில் இது பிளாஸ்மா சவ்வு சுருங்குவதால் நடைபெறுகிறது. | டீலோஃபேஸ் நிலையில் சைட்டோ பிளாசம் பிரியத் துவங்குகிறது. |
| 2. | பிளாஸ்மா சவ்வினால் ஏற்படும் சுருக்கு வளையம் ஆக்டின் மற்றும் மையோசின் சேர்ந்த நுண் இழைகளால் ஆனது. | தாவரங்களில் செல்தட்டு செல்லின் மையப்பகுதியில் தோன்றுகிறது |
| 3. | இந்த இழைகள் உள்நோக்கிச் சுருங்க உதவும் விசை ஒன்று தோன்றி இறுதியில் சைட்டோபிளாசம் இரு சம அளவில் சவ்வினால் பிரிக்கப் படுகிறது. | செல்தட்டு வெளிநோக்கி வளர்ந்து நகர்ந்து பக்கவாட்டில் செல்சுவரை அடைகிறது. இதன் மூலம் செல்சுவரை அடைகிறது. இதன் மூலம் செல்லில் உள்ள சைட்டோபிளாசம் இரண்டாகப் பிரிகிறது. |
91.

92.
93.
ஒற்றுமை:
| அவிசீனியா | ட்ராபா | |
| 1. | இத்தாவரத்தில் வேர்கள் பூமிக்கு மேலே காணப்படுகிறது. | இத்தாவரத்தில் வேர்கள் பூமிக்கு மேலே காணப்படுகிறது. |
வேற்றுமை:
| 1. | அவிசீனியா | ட்ராபா |
| 1. | இத்தாவரத்தில் சுவாச வேர்கள் காணப்படுகிறது. | இத் தாவரத்தில் ஒளிச் சேர்க்கை வேர்கள் காணப்படுகிறது |
| 2. | இத்தாவரங்கள் சதுப்புநிலத்தில் காணப்படுகிறது. | சாதாரண நிலைச்சூழலில் காணப்படுகிறது. |
| 3. | சுவாசத்திற்கென எண்ணிலடங்கா சுவாசத்துளைகள் காணப்படுகின்றன. | ஒளிச்சேர்க்கை நிலச்சூழலில் காணப்படுகிறது. |
ஆ) ஆலமரம், இலவம் பஞ்சு மரம் ஒற்றுமை:
| ஆலமரம் | இலவம் பஞ்சு மரம் | |
| 1. | இதில் வேற்றிட வேர்கள் உருமாற்றம் அடைந்துள்ளது. | இதில் வேற்றிட வேர்கள் உருமாற்றம் அடைந்துள்ளது. |
| 2. | வளரியல்பு-மரம் | வளரியல்பு-மரம் |
வேற்றுமை:
| 1. | ஆலமரம் | இலவம் பஞ்சு மரம் |
| 1. | இதில் வேற்றிட வேர்கள் தூண் வேர்களாக உருமாற்றம் அமைந்துள்ளது. | இதில் வேற்றிட வேர்கள் பலகை வேர்களாக உருமாற்றம் அடைந்துள்ளது. |
| 2. | பக்க கிளைகளிலிருந்து கீழ்நோக்கி நேராக வளர்ந்து மண்ணுக்குள் சென்று, பக்கக் கிளையை தூண் போன்று தாங்குகிறது. | இம்மரங்களில் அகலமான பலகை போன்ற புற வளர்ச்சியானது தண்டைச் சுற்றி கீழ்நோக்கி வளரும். இவை சாய்வாகக் கீழ்நோக்கி வளர்ந்து பெரும் மரங்களுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. |
இ) கதிர்கோல் வடிவ வேர், பம்பர வடிவ வேர் ஒற்றுமை:
| கதிர்கோல் வடிவ வேர் | பம்பர வடிவ வேர் | |
| 1. | இவைகள் ஆணி வேரின் உருமாற்றமாகும். | இவைகள் ஆணி வேரின் உருமாற்றமாகும். |
| 2. | உணவை சேமிப்பதால், இவைகள் சேமிப்பு வேர்கள் எனப்படுகிறது. | உணவை சேமிப்பதால், இவைகள் சேமிப்பு வேர்கள் எனப்படுகிறது. |
வேற்றுமை:
| கதிர்கோல் வடிவ வேர் | பம்பர வடிவ வேர் | |
| 1. | இவ்வேரின் நடுப்பகுதி பருத்தும், இரு முனைகளை நோக்கி குறுகி காணப்படுகிறது. | இவ்வேரின் மேல்பகுதி மிகப்பருத்தும் நுனியில் திடீரென வால்போல் குறுகியிருக்கிறது. |
| 2. | கதிர் போன்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. | பம்பரம் போன்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. |
| 3. | எ.கா. முள்ளங்கி (ரஃபானஸ் சட்டைவஸ்) | எ.கா: பீட்ரூட் போன்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. |
94.
| வ.எண் | பொதுப் பண்புகள் | குடும்பம் : சொலானேசி | குடும்பம் : லில்லியேசி |
|---|---|---|---|
| 1. | வளரியல்வு | பெரும்பாலும் ஒரு பருவச் சிறுகொடிகள் புதர் செடிகள், சிறிய மரங்கள் | பெரும்பாலும் பல பருவச் சிறு செடிகள் |
| 2 | வேர் | கிளைத்த அனிவேர் தொகுப்பு | வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பு |
| 3. | தண்டு | மென்மையானது (அ ) கடைத்தன்மை கொண்டது, நிமிர்ந்து பின்னுக் கொடிகள் (அ) ஊடுருவி வளர்பவை | தரை தரைக்கீழ் குமிழ் தண்டு , சில வற்றின் மட்டநிலத்தண்டு |
| 4. | இலை | மாற்றிலை யடுக்கமைவு , தனியிலை அரிதாக இதற்கு வடிவ கூட்டிலை கள் , இலையடிச் செதிலற்றது.எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு | வேரண்மை இலைகள் காலைன் மாற்றிலை யடுக்கமைவு எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு இலையடிச் செதில் அற்றது |
| 5. | மஞ்சரி | இலைக்கோண (அ ) நுனி சைம்கள் (அ ) தனி மலர் , தேளுறு (அ )ரைபிடியம் (அ) சை மோஸ் (அ ) அம்பெல் லேட் சைம் | தனித்த (அ)கிளைத்த ரெசிமோஸ் (அ ) ஸ்பைக் (அ ) கூட்டு ரசிம் |
| 6 | மலர் | பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது , பூக்காம்பு டையது, இரு பால் மலர் இரு பூவிதழ் அடுக்குடையது | காம்புடையது. பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது,இரு பால் மலர் முவங்கமலர் சூலக மேல் மலர் |
| 7 | புல்லிவட்டம் (அ ) பூவிதழ் வட்டம் | புல்லிகள் 5,அரிதாக 4(அ ) இணைந்த புல்லி , தொடு இதழமைவு நிலைத்த புல்லி | பூவிதழ்கள் - 6 இணை யாதவை அரிதாக இணைந்தவை தோடு (அ )தழுவு இதழமைவு |
| 8 | அல்லிவட்டம் | அல்லிகள் 5 இணைந்த அல்லிகள் சூழல் இதழமைவு , சக்கர வடிவம் (அ ) மணி வடிவம் (அ ) புனல் வடிவம் தொடு (அ ) திருகு இதழமைவு | காணப்படுவதில்லை |
| 9 | மகரந்தத்தாள் வட்டம் | மகரந்தத்தாள் 5, அல்லி ஒட்டிவை சம நீலமற்ற மகரந்த கம்பிகளை யடைவை மகரந்தபை இரு அறைகள்களை உடைவை | மகரந்ததாள் 6 பூவிதலுக்கு எதிராக அமைத்துள்ளது.மகரந்தப்பை இரு மடல்கள் உடையது.நீள வாக்கில் வெடிப்பவை வெளி உள் நோக்கியது |
| 10 | கனி | வெடிகனி (அ ) சதைக்கனி | அறைவழி வெடிகனி (அ ) சதைகனி (அ ) தடுப்புச் சுவர் வழி வெடிகனி |
95.
1. மூலக்கூறு வகைப்பாடு என்பது இனபரிணாம வளர்ச்சி முறையின் ஒரு பிரிவு ஆகும்
2. இது பாரம்பரிய மூலக்கூறு வேறுபாடுகளை முக்கியமாக DNA வரிசையில் உள்ள தகவல்களைப் பெறவும், பல்வேரு வகைப்பாடு குலுக்களுக்கிடையே உள்ள இனபரிமான உறவை உருகுவாக்குவதுற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் வழிவகை செய்கின்றது
3. DNA நகலாக்கம் மற்றும் வரிசை முறையாக்கம் போன்றவற்றின் வளர்ச்சி மூலக்கூறு வகைப்பாடு மற்றும் உயிரித் தொகை மரபியலின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகினற்ன.
4. இந்நவீன முறைகள் மூலக்கூறு வகைப்பாடு மற்றும் உயிரித் தொகை மரபியல் துறைகளில் மேம்படுத்தபட்ட பகுப்பாய்விற்கு ஊக்கம் மற்றும் துல்லியத்தன்மையைக் கொடுத்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளன
96.
லைக்கென்களின் பொதுப்பண்புகள்
i) லைக்கென்கள் பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிர் அமைப்பு.
ii) இதில் காணப்படும் பாசி உறுப்பினர் பாசி உயிரி அல்லது ஒளி உயிரி எனப்படுகிறது.
iii) இதில் காணப்படும் பூஞ்சை உறுப்பினர் பூஞ்சை உயிரி எனப்படுகிறது.
iv) பாசி உயிரி பூஞ்சைக்கு ஊட்டத்தை தரும்.
v) அதே போன்று பூஞ்சை உயிரி பாசிக்கு பாதுகாப்பை தரும்.
vi) பாசி உயிரி உறக்க நகராவித்துக்கள் ஹார்மோகோனியங்கள் நகராவித்துக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
vii) பூஞ்சை உயிரி பாலினப்பெருக்கத்தில் ஈடுபட ஆஸ்கோ கனி உடலங்களை உருவாக்குகிறது.
வகைகள் :
I.வாழிடத்தின் அடிப்படையில்
1.கார்ட்டிகோலஸ் - மரப்பட்டை மீது காணப்படுபவை.
2.லிக்னிகோலஸ் - கட்டை மீது வாழ்பவை
3.சாக்ஸிகோலஸ் - பாறை மீது வாழ்பவை
4. டெர்ரி கோலஸ் - நிலத்தில் வாழ்பவை
5.கடலில் வாழ்பவை - கடலில் உள்ள சிலிகா பாறை மீது வாழ்பவை
6.நன்னீர் வகை - நன்நீரில் உள்ள சிலிகா பாறை மீது வாழ்பவை.
II.உடலப்புற அமைப்பின் அடிப்படையில்
1.லெப்ரோஸ் - வரையறுக்கப்பட்ட பூஞ்சை அடுக்கு காணப்படுவதில்லை.
2.கிராஸ்டோஸ் - ஓடு போன்ற அமைப்பு
3. ஃபோலியோஸ் - இலை ஒத்த வகை
4. புருட்டிகோஸ் - கிளைத்த புதர் போன்ற தொங்கும் அமைப்பு.
III.உடலத்தில் பாசி செல்கள் பரவலின் அடிப்படையில்
1.ஹோமியோமிரஸ் - பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல்
2.ஹெட்டி ரோமிரஸ் - வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல்
IV.பூஞ்சை உயிரி அடிப்படையில்
1.ஆஸ்கொலைக்கென் - ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை.
2.பசிடியோலைக்கென் - பசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை
V.பாறைகளில் வாழும் உயிரி அடிப்படையில்
1.லைக்கென்கள் பாறைகள் மீது படிந்து வாழும் பொழுது, ஆக்சாலிக் அமிலம் போன்ற கரிம அமிலங்களைச் சுரப்பதால் பாறைகளின் தளம் அரிக்கப்பட்டு மண் உருவாகிறது.
2.சீரோசீர் எனும் வறள் நிலத் தாவர வழிமுறை வளர்ச்சியில் முன்னோடி உயிரினங்களாகத் திகழ்கின்றது.
97.
தனிச் சதைக்கனி(simple fleshy fruit) : ஒற்றைமலரின் ஒரு சூலகப்பையிலிருந்து உருவாகும் கனியாகும். இவற்றின் கனித்தோல் சதைப்பற்றுடன் சாறு நிறைந்தும் காணப்படுகிறது. கனித்தோல் வெளித்தோல், நடுத்தோல், உட்தோல் என வேறுபட்டுக் காணப்படுகிறது. மேலும் இது கீழ்க்கண்ட உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அ. சதைக்கனி (Berry)
1. இக்கனி இரண்டு அல்லது பல சூலக இலைகள் இணைந்து உருவாகும் கனியாகும்.
2. கனியின் வெளித்தோல் மெல்லியதாகவும், நடுத்தோல் மற்றும் உட்தோல் வேறுபாடற்றும் காணப்படும்.
3.இவைகள் சாறு நிறைந்த பகுதியை உருவாக்குகிறது.
எடுத்துக்காட்டு: தக்காளி, பேரிச்சை, திராட்சை, கத்தரி.
ஆ) உள்ஒட்டுச் சதைக்கனி (Drupe):
1.இக்கனி ஒற்றைச் சூலக இலை கொண்ட மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து உருவாகிறது.
2. இவை பொதுவாக சாறு நிறைந்த பகுதியை உருவாக்குகிறது.
3. இக்கனித்தோலின் வெளித்தோல் இறுக்கமான தோல் போன்றும், உட்தோல் கல் போன்று கடினமாகி விதையைச் சூழ்ந்தும் காணப்படுகிறது.
எடுத்துக்காட்டு: மா, தென்னை.
98.
(ஆ) செல்லுக்கு வெளியமைந்த கரைசலில் நிலை ஹைப்போடானிக்
(இ) செல்லின் நிலை ஹைப்பர்டானிக்
(ஈ) சோதனை முடிவில் செல்லானது அதிகத் தளர்வு நிலை, அதிக விறைப்பு நிலை
(உ)தூய நீரில் அல்லது ஹைப்போடானிக் கரைசலில் வைக்கப்பட்ட செல் அல்லது ஒரு ஆஸ்மாட்டிக் அமைப்பிற்குள் கரைப்பான் மூலக்கூறுகள் உட்செல்வது எண்டாஸ்மாசிஸ் அல்லது உட்சவ்வூடு பரவல் எனப்படும்.
99.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards