11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/03/2020
11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Three Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இருவிதையிலைத் தாவர வேர்களில் இரண்டாம் நிலை வளர்ச்சி எவ்வாறு நடைபெறுகிறது?
2.
வேறுபடுத்துக:சாற்றுக்கட்டை [அல்பர்ணம்] மற்றும் வைரக்கட்டை [டியூரமென்]
3.
தண்டில் இரண்டாம் நிலை வளர்ச்சி படம் வரைந்து பாகம் குறி.
4.
அடுக்குறா கேம்பியம் படம் வரைந்து பாகம் குறி.
5.
மூடியவகை வாஸ்குலக் காற்றை என்றால் என்ன?
6.
வேரிதூவி செல்கள் என்றால் என்ன?
7.
மஞ்சரி வெவ்வேறு இடத்திலிருந்து உருவாவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?ஒரு தாவரத்தில் மஞ்சரி எங்குள்ளது?தண்டு நுனியிலோ அல்லது இலைக் கக்கத்திலா?
8.
முன் கழுத்துக் கழலை என்பது யாது?
9.
சிறுநீரகத்தில் சுரக்கப்படும் ஹார்மோன்கள், அதனைச் சுரக்கும் ஹார்மோன்கள், மற்றும் அதன் பணிகளை அட்டவணைப்படுத்து.
10.
ஒரு நரம்பு தூண்டல்களை கடத்துவது எது?
11.
குருட்டுப்புள்ளி என்பது யாது?
12.
தசைச்சோர்வு என்பது யாது?
13.
தசைப்பிடிப்பு நோயைப் பற்றிய குறிப்பு எழுதுக.
14.
இயற்கை முறை இனப்பெருக்கம் என்பது யாது?
15.
மீன் பண்ணை பராமரிப்பு என்பது யாது?
16.
மாற்று சிறுநீரகம் பொருத்துதல் பற்றி எழுதுக?
17.
சிறுநீரகத்தின் அமைப்பை பற்றி குறிப்பு எழுதுக.
18.
எலக்ட்ரான் கடத்துச் சங்கிலி என்றால் என்ன?
19.
கிரப்ஸ் சுழற்சியின் முக்கியத்துவத்தினை எழுதுக.
20.
ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சாறுண்ணி உணவூட்டம் பற்றி எழுதுக.
21.
உயிரியல் நைட்ரஜன் நிலைநிறுத்ததின் பயன்களை எழுதுக.
22.
மூப்படைதலுக்கான காரணிகளை எழுதுக.
23.
ஒளி ஆக்ஸிஜனேற்ற நிலையை எழுதுக.
24.
வளர்ச்சி அளவறிதல் பற்றி எழுதுக.
25.
ஒளிஈர்ப்பு நிறமாலை என்றால் என்ன.
26.
பிளீக்டோனீமிக் DNA சுருள்கள் என்றால் என்ன?
27.
நொதியின் செயலில் முடிவுப் பொருள் தடுப்பு என்றால் என்ன?
28.
சைக்லோசோம் அல்லது அனாஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்தும் கூட்டமைப்பு APC/C என்பது யாது?
29.
மைட்டாசிஸ் மற்றும் மியாசிஸில் நடைபெறும் நிகழ்வுகளில் எவையெல்லாம்
எண்டோமைட்டாசிஸ் காணப்படாது.
30.
மிசோகேரியோட்டுகள் என்பவை யாவை?எ.கா தருக
31.
புரோகேரியோட்டுகள் என்பவை யாவை?
32.
ஆம்பர் என்பது யாது?அதன் பயன் யாது?
33.
பாசிகளின் உடன் அமைப்பில் காணப்படும் பலவகைகள் யாவை?
34.
அகவித்துகள் என்பவை யாவை?
35.
பாக்டீரிய செல்லின் நுண்ணமைப்பை படம் வரைந்து பாகம் குறி.
36.
தண்டின் முதல்நிலை பணிகள் யாவை?
37.
தொற்று அல்லது வெலாமென் வேர்கள் என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.
38.
ஆரச்சீரமைவு கொண்ட மலர் என்றால் என்ன? எடுத்துக்காட்டு வரைக.
39.
மூலக்கூறு வகைப்பாட்டடில் பயன்படுத்தப்படும் மூலக்கூறு குறிப்பான்கள் யாவை?
40.
உலக வகைப்பாடு படிநிலை வரைவு நூல் எதனை உள்ளடக்கியது.
41.
ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பின் ஈடுகட்ட தவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.
42.
உருமாறும் தன்மை என்றால் என்ன?
43.
EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.
44.
ஷெல்லாக்கின் பயன்களில் ஏதேனும் மூன்றை வரிசைப்படுத்துக
45.
அரக்குப்பூச்சியின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கூறு
46.
எலும்புத் தசைகளை விளக்கும்போது "வரியுடைய" என்பது எதைக் குறிக்கிறது?
47.
பீனியல் சுரப்பி ஒரு நாளமில்லாச் சுரப்பி இதன் பணியைப் பற்றி எழுதுக.
48.
தைராய்டு சுரப்பியின் அசினி பற்றி எழுதுக.
49.
தூண்டுதல் அடிப்படிப்படையில் உணர்வுறுப்புகளை வகைப்படுத்து.
50.
நரம்பு செல் படத்தில் பாகங்களைக் குறி.
51.
நெஃப்ரானின் உட்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன?நெஃப்ரானின் வெளிச்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் நிகழ்வதென்ன?சுயநெறிப்படுத்தல் நடைபெறவில்லை என கருத்தில் கொள்க.
52.
G0 –நிலைப்பற்றி குறிப்புத் தருக
53.
ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி. அதன் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.
54.
கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக
55.
சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
56.
ஏன் சில தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறது பிறதாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறது?
57.
அச்சு சட்டகத்தில் அடங்கியுள்ள மூன்று முக்கிய பகுதிகளின் பெயர்களை பட்டியலிடுக
58.
மறைமுக செல்பகுப்பை நேர்முக செல்பகுப்பிலிருந்து வேறுபடுத்துக.
59.
புரோகேரியோட்டிகளுக்கும் யூகேரியோட்டுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
60.
உயிரியப் பல்வகைமையைப் பாதுகாப்பதில் தேசியப் பூங்காக்களின் பங்கினை விவரி
61.
பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.
62.
நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரஙகள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை ஏன்?
63.
சிறுநீர் கழிப்பு பயிற்சி எவ்வாறு சிறுநீர் கழிக்கும் முறையை மாற்றியமைக்கிறது?
1.
1. வேரில், வாஸ்குலக் கேம்பியம் முற்றிலும் இரண்டாம் நிலை தோற்றமாகும்.
2. இது ஃபுளோயம் கற்றைகளின் கீழே காணப்படும் இணைப்பு திசு, புரோட்டாசைலத்திற்கு மேலேம் காணப்படும் பெரிசைக்கிளின் ஒரு பகுதி ஆகியன சேர்ந்து ஒரு தொடர் அலை வளையமாக தோன்றுகிறது.
3. பிறகு இந்த அலை வளையமாக வட்டமாக மாறித் தண்டில் நடைபெறும் இரண்டாம் நிலை சைலம் மற்றும் இரண்டாம் நிலை ஃபுளோயத்தை உருவாக்குகிறது.
2.
| சாற்றுக்கட்டை [அல்பரணம்] | வைரக்கட்டை [டியூரமேன்] | |
| 1. | கட்டையின் உயிருள்ள பகுதி | கட்டையின் உயிரற்ற பகுதி |
| 2. | வெளிறிய நிறத்தில் காணப்படும் | அடர் நிறத்தில் காணப்படும். |
| 3. | வெளிறிய நிறத்தில் காணப்படும். | அடர் நிறத்தில் காணப்படும் |
| 4. | மிகவும் மென்மையான தன்மை கொண்டது | கடினமான தன்மை கொண்டது. |
| 5. | டைலோஸ்கள் அற்றது. | டைலோஸ் கள் கொண்டது |
| 6. | நீடித்த உழைப்பு மற்றும் நுண்ணயிர்கள் எதிர்ப்புத்திறன் அற்றது. | நீடித்த உழைப்பு மற்றும் நுண்ணயிர்கள் எதிர்ப்புத்திறன் கொண்டது. |
3.
4.
5.
சைலத்திற்கும் ஃபுளோயத்திற்கும் இடையே கேம்பியம் காணப்படவில்லை எனில், அந்த வகை வாஸ்குலக் கற்றை மூடிய வகை எனப்படும்.
எடுத்துக்காட்டு:ஒருவித்திலைத் தாவரத் துண்டு.
6.
1.வேரின் புறத்தோல் அடுக்கு இரண்டு வகையான புறத்தோல் செல்களைக் கொண்டுள்ளது. அவை நீண்ட செல்கள் மற்றும் குட்டை செல்கள்,குட்டைசெல்கள் வேர்தூவி செல்கள் என அழைக்கப்படுகின்றன.
2. இவை வேர்த்தூவிகளாக நீட்டிக்கப்படுகின்றன.
7.
தோன்றுமிடத்தின் அடிப்படையில் மஞ்சரியை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.அவை
1. நுனி மஞ்சரி :தண்டுநுனியிலிருந்து வளர்ந்து உருவாவது.எ,கா :நீரியம் ஒலியாண்டர்.
2. கக்கமஞ்சரி :இலையின் கக்கத்தில் தோன்றுவது.
எ.கா : ஹைபிஸ்கஸ் ரோசா - சைனஸ்சிஸ்
3.தண்டு மஞ்சரி (காலிஃபுளோரஸ்) : மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து நேரடியாக மஞ்சரி உருவாதல்.எ.கா:தியுபுரோமோ கொக்கோ, கௌரோபிட்டா கையானென் சிஸ்.
8.
1. இது மண்டலக்கழலை என்றும் அழைக்கப்படும்.
2. இது தைராக்ஸின் சுரப்பு குறைவதால் ஏற்படுகின்றது.
3. தைராய்டு சுரப்பி வீங்குதல், சீரத்தில் தைராக்ஸின் அளவு குறைதல், TSH சுரத்தல் அதிகரிப்பு ஆகியன முன்கழுத்துக் கலலையின் சில அறிகுறிகளாகும்.
9.
| வ.எண் | ஹார்மோனின் பெயர் | சுரக்கும் பகுதி | பணிகள் |
| 1. | ரெனின் | ஜக்ஸ்டா கிளாமருலார் செல்கள் | இரத்தத்தில் ஆஞ்சியோடென்சின் உருவாகும் போது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றது. |
| 2. | எரித்ரோ பயாடின் | ஜக்ஸ்டா கிளாமருலார் | எலும்பு மஞ்சையில் இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டுகிறது. |
| 3. | கால்சிட்ரியால் | நெஃப்ரானின் அண்மைச் சுருள் நுண் குழல் | செயல்படு நிலையிலுள்ள வைட்டமின் D3 குடலில் இருந்து கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உயர்த்துகிறது. எலும்பு உருவாக்கத்தை துரிதப்படுத்துகிறது. |
10.
1. ஆக்ஸோலெம்மாவின் உட்புறமுள்ள சைட்டோபிளாசத்தில் உள்ள செல் உள் திரவத்தில் அதிக அளவு K2PO4 மற்றும் Mg2PO4 உள்ளது.
2. இத்துடன் எதிர்மறை மின்தன்மை கொண்ட புரதங்கள், பிற கரிம மூலக்கூறுகளும் உள்ளன.
3.ஆக்ஸோலெம்மாவிற்கு வெளியில் உள்ள செல் வெளித்திரவத்தில் அதிகஅளவு Nacl,HCO3 உணவூட்டப் பொருட்கள் உள்ளன.
4. இவ்விரு திரவங்களிலும் உள்ள எதிர்மறை மற்றும் நேர்மறை மின்னூட்டத் துகள்களே நரம்புத் தூண்டலைப் கடத்துகின்றன.
11.
1. கண்ணின் பின் முனையின் மையப்பகுதிக்குச் சற்று கீழாக இரத்தக் குழாய்களும், பார்வை நரம்பும் கண்ணிற்குள் நுழைகின்றன.
2. இப்பகுதியில் ஒளியுணர் செல்கள் கிடையாது.
3. எனவே இப்பகுதி குருட்டுப்புள்ளி என்று அழைக்கப்படுகிறது.
12.
1.தொடர்ந்து பலமுறை தசைச்சுருக்கம் நடைபெற்ற பின்னர் தசை மேலும் சுருங்க முடியாத நிலையை அடையும்/
2. இந்நிலையே தசைச்சோர்வாகும் தசைகளில் ATP பற்றாக்குறை மற்றும் ஆக்ஸிஜனின்றி நடைபெறும் குளுக்கோஸ் சிதைவின் விளைவாக சேகரமாகும் லாக்டிக் அமிலம் ஆகியவை தசை சோர்வடையைக் காரணங்களாகும்.
13.
(i) தசையில் ஏற்படும் கிழிசலே தசைப்பிடிப்பு எனப்படும் , விபத்து போன்ற அதிர்ச்சி இழுப்பால் தசையிழைகளில் ஏற்படும் கிழிவு சுளுக்கு எனப்படும்.
(ii) தசைகளின் மீள் திறனை விட அதிகமாகதிடீரென இழுபடுவதால் இந்நிலை ஏற்படுகின்றது.
(iii) சரியற்ற நிலையில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்வதால் முதுகுத் தசைகளில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு முதுகுவலி உண்டாகிறது.
14.
1. இவை வளர்ப்பு மீன்களின் இனப்பெருக்கத்திற்காக பராமரிக்கப்படும் சிறப்புத் தன்மை வாய்ந்த குணங்களாகும்.
2. அதிக அளவு மழைநீரைத் தேக்கி வைக்கக்கூடிய பெரிய தாழ்மட்டப்ட பகுதிகளில் இவற்றின் வரப்புகள் அமைக்கப்படுகின்றன.
3. இவ்வமைப்பின் ஆழம் குறைந்த பகுதிகள் குஞ்சு பொரிப்பு இடமாக பயன்படுத்தப்படுகின்றன.
15.
1. மண்ணின் தன்மை நீரின் தரம் நீராதாரம், நீரின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் காரணிகள் போன்ற மீன்வளர்ப்பின் பல்வேறு நிலைகளை மீன்வளர்க்க விரும்புவோர் அறிந்ததிருத்தல் வேண்டும்.
2. இனப்பெருக்கம், பொரித்தல், பேணுதல், பராமரிப்பு மற்றும் இருப்பு வைத்தல் போன்றவற்றை சரிவர பராமரித்தல் வேண்டும்.
3. கீழ்காணும் பல்வேறு வகை குளங்கள் மீன்களின் பல்வேறு நிலைகளைக் கருத்தில் கொண்டு பராமரிப்பிற்காக பரிந்துரைக்கப்படுகின்றது.
16.
சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு ஆரோக்கியமான கொடையாளியின் சிறுநீரகத்தை பொருத்துவதே சிறுநீரக மாற்று ஆகும்.
சிறுநீரக மாற்று சிகிச்சையின் வெற்றியை உறுதிப்படுத்த நோயாளியின் வாரிசு அல்லது நெருங்கிய உறவினர்கள் விபத்து அல்லது பிற காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரகங்கள் கொடையாக பெறப்படுகின்றன.|
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் விளைவாக திசு நிராகரிப்பு நடந்து விடாமலிருக்க நோய்த்தடை காப்பு வினைகளுக்கு எதிரான மருந்துகள் தரப்படுகின்றன.
17.
ஒவ்வொரு சிறுநீரகமும் சராசரியாக 120கிராம் முதல் 170கிராம் வரை எடை கொண்டது. சிறுநீரகத்தின் மேல் மூன்று அடுக்குகளாக ரீனல் ஃபேசியா பெரீரீனல் கொழுப்பு உர மற்றும் நார் உரை ஆகிய ஆதரவுதிசுக்கள் அமைந்துள்ளன. சிறுநீரகத்தின் நீள்வெட்டு தோற்றத்தில் வெளிப்புற கார்டெக்ஸ் உட்புற மெடுல்லா மற்றும் பெல்விஸ் பகுதிகள் காணப்படுகின்றன.
18.
கிளைக்காலைசிஸ், இணைப்பு வினை மற்றும் கிரப்ஸ் சுழற்சி ஆகியவற்றின் சுவசாத் தளப்பொருட்கள் ஆக்சிஜனேற்றத்தின் போது பல் படிநிலைகளில் இறுதியில் ஒடுக்க நிலையுள்ள இணை நொதிகளான NADH+H+FADH2 ஆகியவை உருவாகின்றன. இந்த ஒடுக்க இணை நொதிகள் மைட்டோகாண்ட்ரியத்தின் உட்சவவிற்கு கடத்தப்பட்டு மீண்டும் அங்கு ஆக்சிஜனேற்ற நிலையிலான இணை நொதிகலாக மாறி, எலக்ட்ரான்களையும், புரோட்டான்களையும் உண்டாக்குகின்றன.
19.
1. TCA சுழற்சியானது ஆற்றலை ATP வடிவத்தில் தாவரங்களின் அனைத்து வளர்சிதை மாற்றங்களுக்கும் அளிக்கிறது.
2. பல்வேறு வளர்சேர்க்கை செயல்களை உருவாக்கும் கார்பன் சேர்மங்களின் மூலப் பொருளாகத் திகழ்கின்றன.
3. TCA சுழற்சியின் பல்வேறு இடைபொருள்கள் மீண்டும் வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் நியுக்ளிக் அமிலங்களை உருவாக்க உதவுகின்றன.
20.
(i) இறந்த மற்றும் மக்கிய உடல்களிலிருந்து உணவைப் பெறுவது சாறுண்ணி (Saprophytyic) அல்லது மட்குண்ணி உணவூட்டம் எனப்படுகிறது.
(ii) பூஞ்சைகளும், பாக்டீரியாக்களும் சாறுண்ணி உணவூட்டத்திற்கான முதன்மை உயிரினங்களாகும்.
(iii) சில ஆஞ்சயோஸ்பெர்முகளும் சாறுண்ணி வகை உணவூட்டதை மேற்கொள்கின்றன.
எடுத்துக்காட்டு:நியோட்டியா (பறவைக்கூடு ஆர்க்கிடு). நியோட்டியாவின் வேர்களானது வேரி பூஞ்சைகளுடன் இணைந்து ஊட்டச்சத்துக்களை சாறுண்ணி போன்று எடுத்துக்கொள்கிறது.
21.
(i) ரைசோபியம் போன்ற கூட்டுறவு வாழ்க்கையில் ஈடுபடும் பாக்டீரியங்களின் மூலம் நிகழும் நைட்ரஜன் நிலைநிறுத்தும்.
(ii) லைக்கன்கள்,ஆந்தோசெராஸ், அசோல்ல மற்றும் சைக்கஸ் பவளவேர் ஆகியவற்றில் காணப்படும் சயனோ பாக்டீரியங்கள் மூலமும் நைட்ரஜன் நிலைநிறுத்தம் நடைபெறுகிறது.
(iii) மேலும் கூட்டுயிர் வாழ்க்கையில்லாமல் தனித்து வாழும் கிளாஸ்டிரீடியம் போன்ற பாக்டீரியங்கள் மூலம் இச்செயல் நிகழ்கிறது.
22.
1. ABA மற்றும் ஏத்திலின் தலை தூண்டுகிறது மாறக ஆக்சின் மற்றும் சைட்டோகைனின் மூப்படைதலை குறைக்கிறது
2. நைட்ரஜன் குறைபாடு மூப்படைதலை அதிகரிக்கிறது அனால் நைட்ரஜன் அளிப்பு மூப்படைதலை குறைக்கிறது.
3. தட்பப்பதன விதைகளில் அதிக வெப்பநிலை முப்படைதலை தூண்டுகிறது ஆனால் தாழ் வெப்பநிலை முப்படைதலை குறைக்கிறது.
23.
(i) ஒளியாற்றலானது ஈர்க்கப்படுதல்.
(ii) துணை நிறமிகளிடம் இருந்து ஆற்றலானது வினை மையத்திற்கு கடத்தப்படுதல்.
(iii) குளோரோஃபில் ய நிறமி தூண்டப்படுதல்.
24.
(i) நீள்வாக்கில் அல்லது குறுக்களவில் அதிகரித்தல் (வேர் மற்றும் தண்டு)
(ii) உலர் எடை அல்லது ஈர எடை அதிகரிக்கிறது
(iii) அளவு மற்றும் பருமன் அதிகரித்தல் (கனிகள் மற்றும் இலைகள் )
(iv) செல்கள் எணிக்கையில் அதிகரித்தல்.
25.
(i) ஒளியை பிரதிபிரதிபலிக்காமல், கடத்தாமல் ஒளியை முழுமையாக தேக்கி வைத்துக்கொள்வது ஒளிஈர்ப்பு எனப்படும்.
(ii) நிறமிகள் ஒளியின் பல்வேறு அலைநீளங்களை ஈர்த்துக் கொள்கிறது. ஒளிஈர்ப்பு நிறமாலை என்பது பல்வேறு அலை நீளங்களையும், நிறமிகளின் ஒளி ஈர்ப்பையும் வரைபடத்தில் பொருத்தி பெறப்படும் வளைவு வரைபடமாகும்.
26.
1.DNA வின் இரண்டு இழைகள் திருகுச்சுருள் அமைப்பில் ஒன்றோடொன்று பிணைத்து காணப்படுகிறது.
2.இதில் ஒன்றிலிருந்து மற்றொன்ற எளிதில் பிரிக்க முடியாதவாறு காணப்படுகிறது.
3.இதற்கு பிளீக்டோனீமிக் DNA சுருள்கள் என்று பெயர்.
27.
1.ஒரு வளர்ச்சிதை மாற்ற வழித் தடத்தின் முடிவு பொருள் சேகரம் அடையும்போது அது அந்த வழித்தடத்தின் முதல் படியை வேற்றுத்தள தடுப்பான இருந்து தடுக்கிறது.
2.இவ்வாறு விளைபொருளின் சேகரம்,தனது உற்பத்தியைத் தானே நிறுத்திக் கொள்கிறது.
3.விளைபொருள் பயன்பாட்டிற்குப்பின் அதன் அளவு குறையும் போது மீண்டும் அதன் உற்பத்தி தொடர்கிறது.
4.இதற்கு முடிவுப் பொருள் தடுப்பு எனப்படும்.
28.
1.மெட்டாஃபேஸ் நிலையிலிருந்து அனாஃபேஸ் நிலைக்கு முன்னேறுதலை ஒழுங்குபடுத்தும் புரதங்களைச் சிதைவடையச் செய்வது APC/C என்ற அனாஃபேஸ் பிரிநிலைக்கு முன்னேறுதலை ஏற்படுத்தும் கூட்டமைப்பு (அல்லது) சைக்லொசோம் ஆகும்.
2.இந்த சைக்லோசோம் (APC யை) ஏற்படுத்துவது யூபிகுயிடிடன் லைகேஸ் எனும் நொதியாகும்.
29.
1. எண்டோமைட்டாசிஸ், குரோமோனிமாக்கள் பிரியாமல் ஒன்றோடொன்று தொடர்புற்று இருப்பதால் குரோமோசோம்கள் உருவாவதில்லை.
2. உட்கரு உறை சிதைவதில்லை.
3.கதிர்கோல் இழைகள் உருவாக்குவதில்லை.
30.
1. புரோகேரியோட்டின் சில பண்புகளையும் யூகேரியோட்டின் பண்புகளையும் இந்த உயிரிகள் பெற்றுள்ளன.
2. இவைகள் புரோகேரியோட்டுகளுக்கும் மற்றும் யூகேரியோட்டுகளுக்கும் இடைப்ப்பட்டவைகளாக காணப்படுகின்றன.
3. இவற்றில் நன்கு உருவாகிய உட்கரு சவ்வால் சூழப்பட்டுள்ளது.
4. இதன் DNA குரோமோசோம்களாகவும் ஹிஸ் டோன் புரத மற்றும் காணப்படுகிறது.
5. இவைகள் புரோகேரியோட்களைப் போல நேர்முகப் பிரிவு பகுப்பை கொண்டுள்ளன.
எ.கா.:
1. நாக்டியூலியா
2. ஜிம்னோடினியம்
3. பெரிடினியம்
4. டைனோபிளஜெல் லேட்டுகள்
31.
1. தொன்மையான உட்கரு கொண்ட உயிர்கள் புரோகேரியோட்டுகள் எனப்படும்.
2. இதன் நியூகிளியாய்டு பகுதியில் ஹிஸ்டோன் புரதம் அற்ற DNA உட்கரு சவ்வு அற்று காணப்படுகிறது.
3. ஆகையினால் இது உண்மையான உட்கரு அன்று.
எ.கா :
1. பாக்டீரியங்கள்
2. நீலப்பசும் பாசிகள்
3. மைக்கோபிளாஸ்மா
4. ரிக்கெட்சயே
5. ஸ்பைரேகிட்
32.
1. ஆம்பர் என்பது தாவரங்கள் சுரக்கும் திறன்மிக்க ஒரு பாதுகாக்கும் பொருளாகும்.
2. இதன் சிதைவடையா பண்பு அழிந்துபோன உயிரினங்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுகிறது.
3.'பைனிட்டிஸ் சக்ஸினிஃபெரா என்ற ஜிம்னோஸ்பெர்ம்"ஆம்பரை உற்பத்தி செய்கிறது.
33.
| 1. | ஒரு செல் அமைப்பு நகரும் தன்மை | கிளாமிடோமோனஸ் |
| 2. | ஒரு செல் அமைப்பு நகரும் தன்மையுற்றது | குளோரெல்லா |
| 3. | காலனி, அமைப்பு நகரும் தன்மை | வால்வாக்ஸ் |
| 4. | காலனி, அமைப்பு நகரும் தன்மையுற்றது | ஹைட்ரோடிக்டியான் |
| 5. | குழல் அமைப்பு | வவுச்சீரியா |
| 6. | கிளைத்தலற்ற இலைவடிவம் | ஸ்பைரோகைரா |
| 7. | கிளைத்த இழை வடிவம் | கிளாடோஃபோரா |
| 8. | வட்டு வடிவம் | கோலியோகீட் |
| 9. | இரு வடிவ உடலம் | ஃபிரிட்சியல்லா |
| 10. | இலை வடிவம் | அல்வா |
| 11. | இராட்சத கடல் பாசி | லாமினேரியா, மாக்ரோஸ்டிஸ் |
34.
1.பாக்டீரியங்கள் சாதகமற்ற சுழலில் தடித்த சுவருடைய ஓய்வுநிலை வித்துகளை உருவாக்குகின்றன.இதற்கு அகவித்துகள் என்று பெயர்.
2.சாதகமான சூழ்நிலையில் இவை முளைத்து பாக்டீரியங்களாக உருவாக்குகின்றன.
3.எ.கா : பேசில்லஸ் மெகாதீரியம் , பேசில்லஸ் ஸ்பெரிகஸ், கிளாஸ்ட்டிரிடியம் டெட்டானி.
35.
36.
1. தாவரத்திற்கு நிலை ஆதாரத்தை வழங்கி இலைகள் மலர்கள் மற்றும் கனிகளைத் தாங்க உதவுகின்றது.
2. வேரிலிருந்து நீரையும், கனிமங்களையும் மற்ற பகுதிகளுக்குத் கடத்த உதவுகிறது.
3. இலைகள் தயாரிக்கும் உணவைத் தாவரத்தின் பிற பகுதிகளுக்கு கடத்துகிறது.
37.
1. சில தொற்று ஆர்க்கிடுகள், சிறப்பு வகை தொங்கும் தரைமேல் வேர்களை உருவாக்குகின்றன.
2. இவ்வகை வேர்கள் வெலாமென்என்கின்ற மென்மையான திசுவைகே கொண்டிருக்கின்றன.
3. இத்திசு காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எ.க: வாண்டா, டெனட்ரோபியம்.
38.
1. மலரின் மையத்தில் செல்லுமாறு எந்த ஆரத்தில் அல்லது எந்த தளத்தில் வெட்டினாலும் இரு பிம்ப உருவங்களாக பிரியும் மலர்கள், ஆரச்சீரமைவு மலர்கள் எனப்படும்.
2. இவைகள் பொதுவாக இரண்டுக்கும் பிமேற்பட்ட தளங்களில் சீரமைவு கொண்டவை.
எ.கா: ஹைபிஸ்கஸ்
39.
1. அலோசைம்.
2. மைட்டோகான்டிரியா DNA
3. நுண்துணைக் கோள்கள்
4. RAPD -க்கள் (தொடர்ற் ற பெருக்கப் பல்வடிவுடைய DNA க்கள் )
5. AFLP -க்கள் (பெருக்க கீற்று நீள்பல்வடிவுடையமை )
6. SNP (ஒற்றை நியூக்ளியோடைட் டு பல்வடிவுடையமை )
7. மைக்ரோசில்கள் அல்லது வரிசைகள்
40.
1. குழுக்களின் தற்போதய வகைப்பாட்டியல் அறிவு மற்றும் அது தொடர்பான முக்கியத்தகவல்கள்.
2. குழுக்களின் உள்ளமைப்பியல் , வேதிப்பண்புகள் , மரபுவழித் தொடர்புகள் போன்ற தகவல்கள்.
3. இதுவரை வெளியிடப்பட்ட குழுவின் தகவல்களின் தொகுப்புகள் , பெயரிடல் தொடர்பான விளக்கங்கள் , கண்டுபிடிக்க உதவும் திறவுகள் , தேர்வு செயத் மற்றும் ஆசிரியர்களின் பெயர்கள் மற்றும் பரவியிருந்த வரைப்படங்கள்
41.
நிலை I: இலையிடைத் திசுக்கள்:
இலை இடைத்திசு செல்களின் ஸ்ட்ரோமாவில் CO2, PEP-யால் நிலைப்படுத்தப்பட்டு ஆக்சலோ அசிட்டிக் அமிலம் உருவாகிறது.

இவ்வாறு தோன்றிய ஆக்சலோ அசிட்டிக் அமிலம் (OAA), மாலிக் அமிலம் அல்லது ஆஸ்பார்டிக் அமிலமாக மாற்றமடைகிறது. இவற்றுள் மாலிக் அமிலம் பின்னர் பிளாஸ்மோடெஸ்மேட்டா வழியாகக் கற்றை உறை செல்களுக்கு கடத்தப்படுகிறது.
நிலை II கற்றை உறைசெல்கள்:
மாலிக் அமிலமானது கார்பன் நீக்க வினையின் மூலம் 3 கார்பன் பொருளான பைருவிக் அமிலம் மற்றும் CO2 வை உருவாக்குகிறது. இதில் வெளியேற்றப்பட்ட CO3 வானது RUBP வுடன் இணைந்து கால்வின் சுழற்சியை தொடர்கிறது. எது இரண்டாம் நிலை CO2 நிலைநிறுத்தமாகும். இதன் முடிவில் உருவாக்கப்படும் கார்போஹைட்ரேட்டானது ஃபுளோயத்திற்கு கடத்தப்படுகிறது. பைருவிக் அமிலம் இலையிடத்திசுவிற்கு கடத்தப்படுகிறது.
\(\underset { (5C) }{ RUBP } +{ CO }_{ 2 }\overset { Rubisco }{ \longrightarrow } \underset { (3C) }{ 2PGA } \).
42.
தாவரங்களில் சூழ்நிலை அல்லது வளர்ச்சி நிலைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு உறவை அமைப்புகள் தோன்றுகிறது.இத்தகைய திறனுக்கு உருமாறும் தன்மை (பிளாஸ்டிசிடி என்று பெயர்). எடுத்துக்காட்டு ஹெட்டிரோ∴பிலி (ஈருவ இலை ) காணப்படும் தாவரங்கள் பருத்தி மற்றும் கொத்தமல்லி இத்தகைய தாவரங்களில் இளந்தவரா இலையின் உருவ அமைப்பும் அதே தாவரத்தின் முதிர்ந்த தாவர இலையின் உருவ அமைப்பும் வேறுபாட்டுக் காணப்படுகிறது.
மற்றொரு எடுத்துக்காட்டாக ரனன்குலஸ் (Butercup) எனும் தாவரத்தில் சூல்நிலைக்குத் தகுந்தவாறு இரு வேறுபட்ட உருவ அமைப்புடைய இலைகள் உருவாகிறது, இத்தாவரத்தில் நீரில் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் , நீர் பரப்பிற்கு மேல் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் வேறுபடுகிறது. இத்தகைய ஹெட்டிரோ∴பிலி உருமாறும் (Plasticity) தன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
43.
I.பாஸ்பரிகரண வினை
நொதி:ஹெக்சோகைனேஸ்
II.ஃபாஸ்பேட் நீக்கம் வினை
நொதி:ஃபாஸ்ஃபாஃபோகிளிசரேட் கைனேஸ்
நொதி: பைருவேட் கைனேஸ்
44.
1. முத்திரை மெழுகு தயாரிக்கவும் ஒளியியல் கருவிகளில் ஒட்டும் பொருளாகவும் அரக்கு பயன்படுகின்றது. மேலும், இது சிறந்த மின் கடத்தாப் பொருளாக செயல்படுவதால் மின்சாரத் துறையிலும் அதிகம் பயன்படுகிறது.
2. காலணி தயாரிப்பிலும் தோல் பொருட்களை பளபளப்பாக்கவும், மரப்பூச்சு தயாரிக்கவும் பயன்படுகிறது.
3. புகைப்படங்கள், செதுக்கித் தயாரிக்கும் பொருட்கள், நெகிழி வார்ப்பு பொருட்கள், நெகிழி வார்ப்பு பொருட்கள் மற்றும் அடுக்குப்பலகைத் தாள் படலம் தயாரிப்பிலும் பயன்படுகிறது. தங்க நகைகளில் உள்ளீட்டுப் பொருளாகவும் பயன்படுகிறது.
45.
1. முத்திரை மெழுகு தயாரிக்கவும் ஒளியியல் கருவிகளில் ஒட்டும் பொருளாகவும் அரக்கு பயன்படுகின்றது. மேலும், இது சிறந்த மின் கடத்தாப் பொருளாக செயல்படுவதால் மின்சாரத் துறையிலும் அதிகம் பயன்படுகிறது.
2. காலணி தயாரிப்பிலும் தோல் பொருட்களை பளபளப்பாக்கவும், மரப்பூச்சு தயாரிக்கவும் பயன்படுகிறது.
3. புகைப்படங்கள், செதுக்கித் தயாரிக்கும் பொருட்கள், நெகிழி வார்ப்பு பொருட்கள் மற்றும் அடுக்குப்பலகைத் தாள் படலம் தயாரிப்பிலும் பயன்படுகிறது. தங்க நகைகளில் உள்ளீட்டுப் பொருளாகவும் பயன்படுகிறது.
46.
1. தசை நுண்ணிழையின் நீளம் முழுதும் அடுத்தடுத்த அடர்த்தி மிகு மற்றும் அடர்த்தி குறை பட்டைகள் காணப்படுகின்றன.
2. அடர்த்தி மிகு யு பட்டைகள் (மாறுபட்ட தன்மை கொண்ட பட்டைகள்) மற்றும் அடர்த்தி குறைவான பட்டைகள் ஒத்த தன்மை கொண்ட பட்டைகள் ஆகியன மாறி மாறி நேர்த்தியாக அமைந்துள்ளன.
3. இவ்வமைப்பே தசைகளுக்கு வரிகளைத் தருகின்றன.
47.
மனிதனில் ஏபிசைபிஸ் செருப்பை அல்லது கொனேரியம் என்றழைக்கப்படும் பீனியல் சுரப்பி மூளையின் மூன்றாவது வென்ட்ரிகிளின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. இது பாரன்கைமா மற்றும் இடையீட்டு செல்களால் அனைத்து. இது மெலடோனின் எனும் ஹார்மோனைச் சுரக்கின்றது.
ஒழுங்கமைவு இயக்கத்தினைக் கட்டுப்படுத்துவதில் இது முக்கியப்பங்கு வகிக்கின்றது
இதனால் நம் உடலில் தூக்க - விழிப்பு சுழற்சி முறையாக நடைப்பெறுகின்றது.
48.
தைராய்டு சுரப்பி நமது உடலில் உள்ள மிகப் பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும்
இதன் பக்க கதுப்புகள் இரண்டும் இஸ்துமஸ் எனும் மையத் திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதிப்புகளால் ஆனது.
நுணக்கதுப்புகள் காசினி எனும் ஃபாலிகிள்களால் ஆனவை.(ஒருமையில் - அசினஸ்)
அசினஸின் உட்பகுதி தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் கொண்ட அடர்த்தி மிக்க கூழ்ம கிளைகோபுரத கலவையால் நிரம்பியுள்ளது.
49.
| உணர்வேற்பி | துண்டால் | செயல்பாடு உறுப்பு அமைவிடம் | |
| 1 | இயக்க உணர்வெற்பிகள் | அழுத்தம் மற்றும் அதிர்வுகள் | அகச்செவியின் காக்ளியா அரை வட்டக் கால்வாய் மற்றும் யூட்ரிகுலஸ் பகுதி. |
| 2 | வேதி உணர்வேற்பிகள் | வேதிப்பொருட்கள் | நாக்கிலுள்ள சுவை அரும்புகள் மற்றும் நாசி எபிதீலியம் |
| 3 | வெப்ப உணர்வேற்பிகள் | வெப்பம் | தோல் |
| 4 | ஒளி உணர்வேற்பிகள் | ஒளி | கண்களில் உலா குச்சி மற்றும் கூம்பு செல்கள். |
50.
A. உட்கருமணியுடன் உட்கரு
B. ஆக்ஸான்
C. டென்ரைட்டுகள்
D. மயலின் உறை
E. ஆக்ஸோபிளாசம்
F. ரான்வியர் கணு
51.
நெஃப்ரானின் உட்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் குறைவு தோன்றும்.
நெஃப்ரானின் வெளிச்செல் நுண்தமனி சுருக்கமடைந்தால் கிளாமருலார் வடிதிரவ வீதத்தில் அடர்வு உருவாகும்.
52.
1. சில செல்கள் G1 நிலையிலிருந்து விடுபட்டு அமைதி நிலைக்குச் செல்கின்றன. இந்நிலைக்கு G0 நிலை என்று பெயர்.
2. G0 நிலையில் செல்கள் நீண்ட காலம் செல் பெருக்கமடையாமல் இருந்து வளர்சிதை மாற்றத்தை மட்டுமே செய்கின்றன. ஆனால் பெருக்கம் அடைவதில்லை.
3. G0 நிலையில் உள்ள செல்கள் RNA மற்றும் புரதச்சேர்க்கை செயல்களைக் குறைந்த அளவில் செய்வதுடன் வளர்ச்சியற்ற நிலையில் உள்ளன.
4. G0 நிலை நிலையற்றது. முதிர்ந்த நியூரான், எலும்புத் தசை ஆகியவற்றின் செல்கள் G0 நிலையில் நிலைத்துவிடுகின்றன. உகந்த செல் சாரா சமிக்ஞை மற்றும் வளர்ச்சிக் காரணிகள் கிடைத்தால் மட்டும் G0 நிலைக்குப் பெரும்பாலான விலங்கினச் செல்கள் செல்ல இயலும்.
5. இல்லையெனில் G0 நிலையிலேயே நின்று விடும். G0 செல்களை வளர்வடக்க நிலையில் (Dormant) உள்ள செல்களாகக் கருதப்படுவதில்லை.
53.
R.H. விட்டாக்கெர் எனும் அமெரிக்காவை சேர்ந்த வகைப்பாட்டியலர் 1969 ஆம் ஆண்டில் உயிரினங்களை ஐம்பெரும்பிரிவுகளாக வகுத்தார்.
நிறைகள்
i) ஐம்பெரும் பிரிவு வகைப்பாடு ஆனது சிக்கலான செல் அமைப்பு, உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.
ii) உணவு ஊட்டமுறையின் அடிப்படையில் இந்த வகைப்பாடு அமைந்து உள்ளது.
iii) பூஞ்சைகள் தாவரங்களிலிருந்து பிரித்துத் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
iv) உயிரினங்களுக்கு இடையே உள்ள இனப்பரிணாம குழுத் தொடர்பினை இந்த வகைப்பாடு எடுத்துக்காட்டுகிறது.
குறைகள்
i) இந்த வகைப்பாட்டில் வைரஸ்கள் சேர்க்கப்படவில்லை.
ii) மொனிரா, புரோட்டிஸ்டா என்ற பெரும் பிரிவில் தற்சார்பு, சார்பூட்ட முறை உயிரினங்கள் அடங்கியுள்ளன,இவை செல் சுவரற்ற உயிரினங்கள்.எனவே இவ்விரு பெரும் பிரிவுகளும் மாற்றுப் பண்பினை பெறுகின்றன.
54.
| வ.எண் | திரள் கனி | கூட்டுக்கனி |
| 1 | ஓர் தனிமலரின் இணையாத சூலகங்கள் உருவாக்குகிறது. ஒவ்வொரு தனி சூல்கமும் ஒரு எளிய சிறு கனியாக மாறுகிறது. |
ஒரு முழு மஞ்சரியும் அதைத் தாங்கும் மஞ்சரிக் காம்பும் சேர்ந்து உருவாகும் |
| 2 | எ.கா: மக்னோலியா, ராஸ்பெர்ரி, அன்னோனா, பாலியால்தியா | எ.கா: அன்னாசி, பலா, மல்பெரி, ஃபைகஸ். |
55.
56.
(i) பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் தோன்றுமிடத்தை வைத்து முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் வேறுபாட்டை உணரலாம்.
(ii) இதற்கு முக்கிய காரணம் கனிமங்களின் இடம்பெயர்வாகும். இதன் அடிப்படையில்
(அ) விரைவாக இடம் பெயரும் தனிமங்கள்.
(ஆ) ஒப்பீட்டளவில் இடம் பெயராத தனிமங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.
(அ) விரைவாக இடம் பெயரும் தனிமங்கள்:
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், குளோரின், சோடியம், துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் விரைவாக இடம்பெயர்வதால் பற்றாக்குறை அறிகுறிகள் முதிர்ச்சியடைந்த, உதிரும் நிலையில் உள்ள இலைகளில் தோன்றுகிறது.
(ஆ) ஒப்பீட்டளவில் இடம்பெயராத கனிமங்கள்:
கால்சியம், கந்தகம், இரும்பு, போரான் மற்றும் தாமிரம் போன்ற தனிமங்கள் எளிதில் இடம்பெயர்வதில்லை. எனவே, பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் இளம் இலைகளில் தோன்றுகிறது.
57.
1. மண்டையோடு
2. நாவடி (ஹையாய்டு) எலும்பு
3. முதுகெலும்புத் தொடர்.
4. மார்புக் கூடு
| எலும்பின் பெயர் | எலும்புகளின் எண்ணிக்கை | எலும்புகளின் மொத்த எண்ணிக்கை | |
|---|---|---|---|
| மண்டையோடு | கபாலம் | 8 | 29 |
| முகத்தெலும்பு | 14 | ||
| நடுக்காது எலும்பு | 6(2x3) | ||
| நாவடி எலும்பு | 1 | 26(பெரியவர்கள்) | |
| முதுகெலும்புத் தொடர் | கழுத்துப்பகுதி | 7 | |
| மார்புப்பகுதி | 12 | ||
| இடுப்புப்பகுதி | 5 | ||
| திருவெலும்பு | 1 | ||
| வாலெலும்பு | (5 எலும்புகள் இணைந்தது 1 (4 எலும்புகள் இணைந்தது) |
||
| மார்புபெலும்பு | 1 | 1 | |
| விலா எலும்புகள் | 12x2=24 | 24 | |
| எலும்புகளின் மொத்த எண்ணிக்கை | 80 | ||
58.
| வ.எண் | நேர்முகப்பகுப்பு / எமைட்டாசிஸ் | மறைமுகப்பகுப்பு / மைட்டாசிஸ் |
| 1. | தாய்செல்லின் குரோமோசோம்கள் சமமற்ற அளவில் சேய் செல்களை சென்றடைவதால்,தெளிவிலாச் செல் பகுப்பு என்று அழைக்கப்படுகிறது. | தாய் செல்லின் குரோமோசோம்கள் எண்ணிக்கையை சேய் செல்கள் சமநிலை பகுப்பு என்று அழைக்கப்படுகிறது. |
| 2. | உட்கருவின் இடைப் பகுதியில் இறுக்கம் ஏற்பட்டு இரண்டாக முதலில் பகுப்படைகிறது. | உட்கருவானது புரோஃபேஸ் மெட்டாஃபேஸ், அனாஃபேஸ் மற்றும் டீலோஃபேஸ்போன்ற நிலைகளைக் கடக்கும் போது உட்கரு சவ்வு மறைந்து, குரோமோசோம் சமமாக பிரிகிறது. |
| 3. | பிளாஸ்மா சவ்வில் இறுக்கம் தோன்றி மையம் நோக்கி விரிவடைந்து, இறுதியில் சைட்டோபிளாசம் இரு பகுதிகளாக பிரிந்து இரு செல்கள் உருவாகிறது. | பிரியும் தாவர செல்லின் மையத்தில் செல்தட்டு தோன்றி விளிம்பை நோக்கி நகர்ந்து சைட்டோபிளாசத்தை பிரிவடையச் செய்கிறது. பிரியும் விலங்கு செல்லின் விளிம்பில் இறுக்கங்கள் தோன்றி மையத்தை நோக்கி நகர்ந்து சைட்டோபிளாசத்தை இரண்டாகப் பிரிவடையச் செய்கிறது. |
| 4. | கதிர்கோல் இழைகள் தோன்றுவதில்லை | கதிர்கோல் இழைகள் தோன்றுகின்றது. |
| 5. | குரோமாட்டின் பொருள் செறிவுற்று குரோமோசோம்கள் உருப்பெருவதில்லை | குரோமோசோம்கள் தோன்றுகிறது. |
| 6. | எ.கா. 1. பாலூட்டிகளின் குறுத்தெலும்பு செல்களின் பகுப்பு. 2. பரமேசியத்தின் பெரிய உட்கரு பகுப்பு 3. உயர்நிலை தாவரங்களில் காணப்படும் முதுமை யடைந்து சிதைந்து கொண்டிருக்கும் செல்களில் நிகழும் பகுப்பு |
தாவரத்தின் தண்டு, வேர், நுனி மற்றும் ஆக்குத் திசுவில் நடைபெறுகிறது. |
59.
| பண்புகள் | புரோகேரியோட்டுகள் | யுகேரியோட்டுகள் |
|---|---|---|
| செல்லின் அளவு | -1 - 5 um | -10 - 100 um |
| உட் கருவின் பண்பு | நியுக்ளியாய்டு உண்மையான உட்கரு அற்றது | சவ்வுடன் கூடிய உட்கரு காணப்படுகிறது |
| DNA | பொதுவாக வட்ட வடிவம், ஹிஸ்டோன் புரதம் அற்றவை | பொதுவாக நீள் வடிவம், ஹி ஸ் டோன், புரதம் கொண்டவை |
| RNA உற்பத்தி புரதச் சேர்க்கை | சைட்டோபிளாசத்தில் நடைபறுகிறது | RNA உட்கருவினுள் உருவாகின்றது.புரதச் சேர்க்கை சைட்டோபிளாசத்தினுள் நடைபெறுகிது |
| ரைபோ சோம்கள் | 50 S + 30 S | 60s + 40 S |
| நுண்ணுறுப்புகள் | இல்லை | பல காணப்படுகிறது |
| செல் இடப் பெயர்ச்சி | கசையிழை | கசையிழை மற்றும் குறுஇழை |
| அமைவு முறை | பொதுவாக ஒற்றைச் செல் | ஒற்றைச் செல் கூட்டமைவு மற்றும் பல செல்களைக் கொண்டது |
| செல் பகுப்பு | இரு பிளவுறுதல் முறை | மைட்டாசிஸ், மியாசிஸ் |
| எடுத்துக் காட்டுகள் | பாக்ட்ரியா மற்றும் ஆர்க்கியா | பூஞ்சை , தவாரங்கள் மற்றும் விலங்குகள் |
60.
1. தாவரத் தோட்டங்களில் உள்ள அலங்கார மற்றும் அழகு மிகைத் தாவரங்கள் பெருமளவில் பார்வையாளர்களைக் கவர்ந்து ஈர்க்கின்றன.
எடுத்துக்காட்டு : கொல்கத்தாவின் இந்தியத் தாவரவியல் தோட்டத்திலுள்ள புகழ்பெற்ற பெரிய ஆலமரம் (பைகஸ் பெங்காலென்சிஸ் - ficus benghalensis )
2. தாவரத் தோட்டங்களில் பெருமளவில் காணப்படும் தாவரச் சிற்றினங்கள்.தாவரவியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன
3. தாவர சுய வழி கற்பதற்கும் செயல்முறை ஆராய்ச்சிக்கு உதவதற்கும் தாவரத் தோட்டங்களில் உள்ள பல்வகைத் தாவரங்கள் பயன்படுகின்றன
4. தாவர உள்ளமைப்பியல் கருவியல் , தாவர வேதியியல், செல்லியல் வாழ்வியல், சூல்நிலை உயிரியல் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒருங்கிணைத்து பயில ஆதாரமாக தோட்டங்கள் விளங்குகின்றன
5. உயிரி பன்மத் தன்மை பற்றி மட்டுமின்றி அரிதான மற்றும் அழியும் நிலையிலுள்ள தாவரங்களை பாதுகாக்கும் மையமாகத் தாவரத் தோட்டங்கள் விளங்குகின்றன.
6. ஆண்டு முழுவதும் கிடைக்க கூடிய தாவரச் சிற்றினங்கள் மற்றும் இலவச விதை பரிமாற்றம் தொடர்பான அறிக்கையை அளிக்க உதவுகின்றன
7. தாவரங்களின் இனப்பெருக்க முறைகள் பொது மக்களுக்கு விற்கப்படும் தாவரங்கள் பற்றிய தகவல்களைத் தாவரத் தோட்டங்கள் வழங்குகின்றன
61.
பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வடிவமுடைய பசுங்கணிகம் காணப்படுகிறது.
| வ. எண் | பசுங்கனிகத்தின் வடிவம் | எ-கா |
| 1. | கிண்ண வடிவம் | கிளாமிடோமோனால் |
| 2. | வட்டுவடிவம் | கேரா |
| 3. | கச்சை வடிவம் | யூலோத்ரிக்ஸ் |
| 4. | வலைப்பின்னல் | ஊடோகோணியம் |
| 5. | சுருள் வடிவம் | ஸ்பைரோகைரா |
| 6. | நட்சத்திர வடிவம் | சைக்னீமோ |
| 7. | தட்டு வடிவம் | மவுஜிலிய |
62.
(i) நைட்ரஜன் சுழற்சி சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சுழற்சியாகும். இப்புவியின் உயிரிங்கள் நைட்ரஜன் சுழற்சியைப் பெரிதும் சார்ந்துள்ளன. வளிமண்டலத்தில் நைட்ரஜனானது (N2) என்ற தனி நைட்ரஜனாக உள்ளது.
(ii) இரு நைட்ரஜன் அணுக்கள் உறுதியான மூன்று சகப்பிணைப்புகளால் (N=N) பிணைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல நைட்ரஜனை (N2) அம்மோனியவாக மாற்றும் செயல் முறைக்கு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று பெயர்.
63.
சிறுநீர் கழிப்பு பயிற்சி சிறுநீர் கழிக்கும் சீராக வைத்திருக்க பயன்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards