11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 14/03/2020
11ஆம் வகுப்பு உயிரியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 11th Standard Biology All Chapter Two Marks Important Questions 2020 )
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
அதிகமான ஒளியும், அதிக ஆக்ஸிஜன் செறிவும் காணப்படும் போது எவ்வகை வழித்தடம் தாவரங்களில் நடைபெறும் காரணங்களை ஆராய்க.
2.
ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.
3.
நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?
4.
தாவரம் A சாட்டைவால் நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. AB யின் கனிமக் குறைபாட்டினைக் கண்டறிக.
5.
கோலி சிஸ்டோ கைனின் (CCK) பணிகளைக் குறிப்பிடுக.
6.
7.
மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
8.
புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.
9.
பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.
10.
ஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் பொதுவான இரண்டு பண்புகளை எழுதுக
11.
பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?
12.
13.
வளர்ச்சி இயங்கியல் என்றால் என்ன?
14.
பிளாஸ்மோஸைசிஸின் முக்கியத்துவம் யாது?
15.
ஆற்றல் சாரா கடத்தல் என்றால் என்ன?
16.
வளைப்பட்டை என்பது யாது?எடுத்துக்காட்டு தருக.
17.
மரக் கால நிலையில் என்பது யாது?
18.
மர வயதியில் என்றால் என்ன?
19.
இடியோபிளாஸ்ட்கள் என்பது யாது?
20.
மண்புழுக்கள் பற்றி சார்லஸ் டார்வினின் கூற்று யாது?
21.
குளுக்ககான் ஏன் ஹைபர்கிளைசீமிக் ஹார்மோன் என அழைக்கப்படுகிறது?
22.
இருமுனை நியூரான்கள் என்பது யாது?
23.
புறச்செவித் துளை எந்த கபால எலும்பில் காணப்படுகிறது?
24.
எலும்புத் தசையின் வரித்தன்மைக்கு காரணமானது எது?
25.
நிலவாழ் விலங்கினங்களில் நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?
26.
தொகுதி பிளாட்பெல்மின்தஸின் ளார்வாக்களின் பெயரினை எழுதுக.
27.
வேதியமைப்பு அடிப்படையில் ஹானோன்கள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?
28.
தண்டுவட நரம்பின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?
29.
ஊட்டப்பொருள் படல தொழில் நுட்பம்-குறிப்பு எழுதுக.
30.
அமோனியா நீக்கிகள் பற்றி குறிப்பு எழுதுக.
31.
காற்றிலா சுவாசித்தலின் பண்பினை எழுதுக.
32.
கிளைக்காலைசிஸ் என்றால் என்ன?
33.
மூப்படைதலின் வகைகளை எழுதுக.
34.
கார்பன் டை ஆக்ஸைடு பற்றி எழுதுக.
35.
அம்மோனியாவாதல் என்றல் என்ன?
36.
37.
பைக்கோபிலின்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
38.
கூட்டுத்திசு என்றால் என்ன?
39.
குரோமோசோமின் சாட்டிலைட் பகுதியின் முக்கியத்துவம் யாது?
40.
ஒரு நியூக்ளியோடைடின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி?
41.
லைசோசோம்கள் எதிலிருந்து உருவாகின்றன.
42.
எவ்வாறு இரண்டு அல்லது ஒற்றை சாக்கரைடுகள் இணைந்து ஒரு இரட்டை சாக்கரைடுவை உருவாக்குவது என்பதை வேதி வினை மூலம் காண்பி.
43.
வரையறு: செல் சுழற்சி
44.
மைட்டாசிஸ் எப்பொழுதெல்லாம் நடைபெறுகிறது?
45.
இரைப்பைப்பாகு என்பது யாது?
46.
இரைப்பை உட் சுவரில் காணப்படும் செல்களையும் அதன் சுரப்புகளைக் கூறு.
47.
குருத்தெலும்பு மீன்களில் காணப்படும் செதில்கள் யாவை?
48.
ஒளிசார் பரவிலை அமைவு என்றால் என்ன?
49.
முழு உடலி பூஞ்சைகள் என்பவை யாவை?
50.
கனி என்றால் என்ன?
51.
கீழ் மட்டச் சூலகப்பை என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.
52.
ஸ்ட்ரெப்டோமைசிஸ் எனும் மண்வாழ் ஆக்டினோ பாக்டீரியம் உருவாக்கும் உயிர் எதிர்ப் பொருட்களைக் கூறு.
53.
ஆக்ஸிஜன் சிவப்பணுக்கள் மற்றும் பிளாஸ்மா மூலம் எந்த அளவுகளில் கடத்தப்படுகிறது ? ஏன்?
54.
குர்திநீர்ச்சார் வகைப்பாடு அல்லது ஊநீர் வகைப்பாடு என்பது யாது?
55.
வரையறு: மூச்சுக்காற்று அளவு (Tidal volume - TV).
56.
தாவரத் தொகுப்பு புத்தகம் என்பது யாது?
57.
கிளைடெல்லம் என்பது யாது? அதன் வேலை யாது?
58.
தவளைகள் மாறு வெப்பநிலை விலங்குகள் என அழைக்கப்பட காரணம் யாது?
59.
இதயத்திலிருந்து வெளியேறும் இரத்த அளவு என்பது யாது?
60.
தரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?
61.
நன்கு நீரூற்றினாலும், மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுகிறது.விளக்கு
62.
சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்?
63.
தாவரவியலில் படி கட்டை என்பது என்ன?
64.
ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?
65.
நீர் மற்றும் சிறு மூலக்கூறுகளின் இரத்த நுண்நாளச் சுவர்களின் வழியாக திசுத் திரவத்திற்குள் எவ்வாறு செல்கிறது?
66.
வெளிப்புற ஃபுளோயம் சூழ் சைபனோஸ்டீல் என்பது யாது?
67.
வித்தகத் தாவர சந்ததியில் முதல் செல் எது?
68.
ஒரு காய்ப்புத் தாவரங்கள் என்பவை யாவை?
69.
அடர்வான சீரான இணைப்புத்திசுவின் பயன்கள் யாவை?
70.
சுரப்பு எபிதீலியம் என்பது யாது?
71.
ஹேலோஃபைல்கள் என்பவை யாவை?
72.
மெத்தனோஜன்கள் என்பவை எவை?
73.
தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பின் பெயர்களைக் கூறு
74.
அரக்குப்பூச்சிகள் வளரும் ஏதேனும் இரண்டு மரங்களின் பெயர்களைக் கூறு
75.
டெட்டனி எவ்வாறு ஏற்படுகிறது?
76.
மனித எலும்புகளில் இணைக்கப்படாத எலும்பு எது?
77.
உடல் சமநிலைப் பேணுதல் (ஹோமியோஸ்டாசிஸ்) பற்றி எழுதுக.
78.
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?
79.
சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?
80.
மனிதரில் கார்னியா மற்றும் சிகிக்சை பொதுவாக நிராகரிக்கப்படுவதில்லை.ஏன்?
81.
82.
சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?
83.
84.
இரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்திசு என்றழைக்கப்படுகிறது?
85.
வெள்ளை அடிப்போஸ் திசுவைப் பழுப்பு அடிப்போஸ் திசுவிலிருந்து வேறுபடுத்து.
86.
மூச்சுக்குழாயில் காற்று செல்லும் வழியில் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு ஏன்? ஏதேனும் இரண்டு காரணங்களைக் கூறு.
87.
தட்டைப் புழு, மண் புழு, மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு.
88.
மீன்களில் காணப்படும் காற்றுப் பைகளின் பண்புகளைக் குறிப்பிடுக.
89.
வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?
90.
பயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டிரீயாவிலிருந்து வேறுபடுத்துக.
91.
கோவேறுகழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது?
92.
நைட்ரோஜீனஸ் காரம் மற்றும் கனிம வேதியியலில் பயன்படும் காரத்தை வேறுப்படுத்துக
93.
உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையை க் கொண்ட கரிமச் சேர்மங்களை வரை ப்ப டம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள “X” என்ற வெற்றிடத்தில் பொருத்துக.

| பிரிவு | சேர்மம் |
| கொலஸ்டிராஸ் | குவானைன் |
| அமினனோ அமிலம் | NH2 |
| நியூக்ளியோடைடு | அடினைன் |
| நியூக்ளியோசைடு | யூராசில் |
94.
கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவத்தைக் கூறுக.
95.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?
96.
இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்
97.
ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து
98.
கீழ்கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக
அ) ஒரு வளமற்ற மகரந்தத்தாள்
ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள்
இ) அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்
99.
உயிர்சார் நெருக்கடியின் செயல் நுட்பங்களை விளக்குக.
100.
வறட்சி நிலையில் தாவரங்கள் எதிர்கொள்ளும் சேயலியல் விளைவுகள் யாவை?
101.
ஊர்வன உயிரிகள் நிலவாழ்க்கை வெற்றிக்கான அவற்றின் பண்புகளின் பங்கீடு யாது?
102.
மிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வுகளை வேறுபடுத்துக.
103.
ஓர் நடு நரம்பமைவுக்கும் பல நடு நரம்பமைவுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை கூறு.
1.
(i) ஒளிச்சேர்க்கை நடைபெறும் செல்களில் CO2 இல்லாதபோது O2 அதிகரிக்கும் போது நடைபெறும் அதிகப்படியான சுவாசம் ஒளிச்சுவாசம் எனபப்டுகிறது. C2 சுழற்சியின்போது RUBISCO-வின் கார்பாக்சிலேஸ் செயல் ஆக்ஸிஜினேஸ் செயலாக மாறுகிறது.
(ii) C2 சுழற்சியானது பசுங்கணிகம், பெர்ராக்ஸிசோம் மற்றும் மைட்டோகாண்டரியம் என மூன்று செல் நுண்றுப்புகளில் நடைபெறுகிறது. பசுங்கணிகத்தில் RUBP யானது 2C-பாஸ்போகிளைக்கோலேட் மற்றும் பாஸ்போகிளிசரிக் அமிலமாக மாறுகிறது.
(iii) இதற்கு RUBISCOநொதி பயன்படுகிறது. இவ்வினையில் முதலில் உருவாகும் பொருள் 2C பொருளாக இருப்பதால் இச்சுழற்சிக்கு C2 சுழற்சி என்று பெயர்.
2.
இரு பிரிவு தாவரங்களின் ஒளிச்சேக்கை வீதத்தை ஒப்பிடுக.
பிரிவு அ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)400-450nm இடைப்பட்ட ஒளி அலைநீளம் நீல நிற ஒளி சேர்க்கை ஆகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் அதிகமாக உள்ளது.
பிரிவு ஆ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)500-550 இடைப்பட்ட ஒளி அலைநீளத்தில் பச்சை நிற ஒளி சேர்க்கை கதிர்வீச்சாகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் குறைவகவே நடைப்பெறுகின்றது. பச்சையம் உரிஞ்சப்படுவது இல்லை.
3.
இரு நைட்ரஜன் அணுக்கள் உறுதியான மூன்று சகப்பிணைப்புகளால் (N=N) பிணைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல நைட்ரஜனை (N2) அம்மோனியாவாக மாற்றும் செயல்முறைக்கு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று பெயர். இது முதல் நிலையாகும்.
நைட்ரோஜினேஸ் நொதியானது காற்றில்லா நிலையின்போது மட்டுமே செயல்படக் கூடியது. காற்றில்லா நிலையை ஏற்படுத்த வேர்முடுச்சிகளில் உருவாகும் லெக்ஹீமோகுளோபின் (leghaemoglobin )ஆக்ஸிஜன் நீக்கியாக(Oxygen Scavenger ) செயல்பட்டு ஆக்ஸிஜன் இல்லாச் சூழலை ஏற்ப்படுத்துகிறது.
4.
(i) குறைப்பாட்டு கனிமங்கள்
(ii) துத்தநாகம் மாலிப்டினம்
(iii) பற்றாக்குறை அறிகுறிகள்/ நோய்கள்
சிற்றிலை நோய் டர்னிக், பீட்ரூட்டில் பழுப்பு மையக் கருக்கல் னாய் மற்றும் ஆப்பிளின் உள்திசு தக்கை நோய்
(iv) காலிப்ளவர் மற்றும் முட்டைகோஸின் சாட்டை வால் நோய்
5.
உணவிலுள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலத்தை பொறுத்து முன்சிறு குடலில் கோலிசிஸ்ட்டோகைனின் (CCK) சுரக்கின்றது. CCK பித்தப்பையின் மீது செயல்பட்டு பித்த நீரை முன்சிறுகுடலினுள் வெளியிடுகிறது.
மேலும் கணைய நீர் உற்பத்தியாகி வெளிவருவதையும் தூண்டுகிறது. கணையத்தின் அசினிசெல்கள் மீது செக்ட்ரிடின் செயல்பட்டு நீர் மற்றும் பைகார்பனேட் அயனிகளை சுரந்து உணவின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குகின்றது. GIP இரைப்பை சுரப்பையும் அதன் இயக்கத்தையும் தடுக்கின்றது.
6.
7.
1.நிலைத்த மரபுத்தன்மை: சேய் செல்களின் மரபுப்பொருளானது தாய் செல்லை ஒத்துக் காணப்படுகிறது.
2. வளர்ச்சி: பல செல் உயிரிகள் உரு வளர்ச்சி அடையும் போது அவற்றின் திசுக்களில் செல் பெருக்கமடைய உதவுகிறது. இவை அனைத்தும் ஒத்த செல்களாகவே உள்ளன.
3. திசு சிதைவதைச் சீர் செய்தல்: திசு சிதைவடையும் போது புதிய உருவொத்த செல்கள் மைட்டாசிஸ் பகுப்பின் மூலம் உருவாகிச் சிதைவு சரி செய்யப்படுகிறது.
4. பாலிலா இனப்பெருக்கம்: தாய் செல்லை ஒத்த வழித்தோன்றல்கள், பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் தோன்ற இப்பகுப்பு உதவுகிறது.
எடுத்துக்காட்டு: ஈஸ்ட் மற்றும் அமீபா.
5. பூக்கும் தாவரங்களில் குமிழ்த்தண்டு, தண்டடிக் கிழங்கு,கிழங்குகள், மட்டநிலத் தண்டுகள், ஓடுகொடிகள் ஆகிய அனைத்தும் மைட்டாடிக் பகுப்பினால் தோன்றியவை. இவை தாய்த் தாவரத்தை விட்டு விலகிப் புதிய தாவரங்கள் தோன்ற உதவுகின்றன. எனவே குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையுடைய வழித் தோன்றல்களை மைட்டாசிஸ் பகுப்பின் மூலமே உருவாக்க இயலும். மரபு பொறியியல், உயிர் தொழில்நுட்பவியலில் கையாளப்படும் திசு வளர்ப்பில் இப்பகுப்பே முக்கியப் பங்காற்றுகிறது.
6. இழப்பு மீட்டல்: நட்சத்திர மீன்களின் இழப்பு அடைந்த கரங்கள் மீள் உருவாதல்.
8.
1. புரோட்டோபிளாசம் செல்லின் உயிருள்ள பொருள். இது பிளாஸ்மா சவ்வினால் சூழ்ந்து காணப்படுகிறது. இது ஒரு நிறமற்ற பொருளாகும்.
2. இது செல் முழுவதும் பரவி.சைட்டோபிளாசம் உட்கரு மற்றும் பல உள்ளுறுப்புக்களைக் கொண்டுள்ளன.
3. புரோட்டோபிளாசம் சிறிய துகள்களான அயனிகள் அமினோ அமிலங்கள் , ஒற்றைச் சர்க்கரைகள் மற்றும் நீரையும் .பெரும் மூலகூறுகளான நீயுக்ளிக் அமிலங்கள் , புரதங்கள் , லிப்பிடுகள் மற்றும் பல்கூட்டுச் சர்க்கரைகள் போன்ற கூட்டுப் பொருள்களை உள்ளடக்கியது
4. இவை நிறமற்ற தோற்றத்துடன் ஜெல்லி போன்ற மீள்பாகு நிலை கொண்ட துகள்களால் ஆனது.இவை அதிக எண்ணிக்கையிலான வாக்குவோல்கள் கொண்டுள்ளதால் நுரை போன்று காணப்படுகிறது.இது வெப்பம். மின் அதிர்ச்சி வேதிப் பொருள் ஆகியவற்றின் தூண்டுதலுக்கு ஏற்பத் துலங்கலாகச் செயல் படுகிறது
9.
1.கருவுறுதலுக்கு நீர் இன்றியமையாதது.
2. நிலவாழ் தாவரங்களாக இருப்பினும் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்ய நீர் அவசியமாதலால் தாவர பெரும்பிரிவுன் "நீர்நில வாழ்வன" என்று அழைக்கப்படுகிறது.
3. ஆந்திரீடியங்களில் உருவாகும் இரு கசையிழைகாளைக் கொண்ட நகரும் ஆண் கேமீட்கள் மெல்லிய நீர் மென்படலத்தில் நீந்தி ஆர்க்கிகோனியத்தை அடைந்து முட்டையுடன் இணைந்து இரட்டைமடிய கருமுட்டையை உருவாக்குகின்றது.
10.
1. வேர், தண்டு, இலைகளைக் கொண்டு நன்கு வரையறுக்கப்பட்ட தாவர உடல் காணப்படுதல்.
2. இரு விதையிலைத் தாவரங்களில் உள்ளது போலவே ஜிம்னோஸ்பெர்ம்களிலும் கேம்பியத்தைக் கொண்டிருத்தல்.
3. தண்டில் யூஸ்டீல் காணப்படுதல்.
11.
i) பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிடும் முறை.
ii) அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் நைட்ரஜனை நிலைப்படுத்துதலில் ஈடுபடுகின்றன.
iii) லெகூம் வகை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் காணப்படுகின்றன.
iv) எனவே, லெகும் வகை தாவரங்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்திகின்றன.
v) ஆகவே, பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுகிறார்கள்.
12.
13.
வளர்ச்சி இயங்கியல் என்பது செல்களின் இயக்கம் அல்லது விரிவாக்கம் பற்றிய ஆய்வை குறிக்கிறது
14.
செல் உயிருள்ளதா அல்லது உயிரற்றதா என்பதை அறியலாம்.
15.
1. ஈர்ப்பு விசை மற்றும் செறிவினை அடிப்டையாகக் கொண்டு நடைபெறும்.
2. இதற்கு ஆற்றல் தேவைப்படுவதில்லை.
எடுத்துக்காட்டு: பரவல், மேம்படுத்தப்பட்ட பரவல், உள்ளீர்த்தல், சவ்வூடுபரவல்.
16.
1ஃபெல்லோஜென் தண்டை சுற்றி முழுமையான உருளையை உருவாக்கினால் அது வளைப்பட்டை எனப்படும்.
2. இதனை உரித்து எடுக்க முடியாது.
எடுத்துக்காட்டு:குர்கஸ்
17.
1. இது மரவயதியலின் ஒரு பிரிவு.
2. ஆண்டு வலையங்களைக் கொண்டு கடந்தகாலப் பருவநிலை மாற்றப் பதிவுகளைக் கட்டமைத்தல், தாவரப் வளர்ச்சிப் பண்புகள் ஆகியவற்றை கூர்ந்து ஆய்வது மரக் கால நிலையியல் எனப்படும்.
18.
ஒரு மரத்தின் வயதை ஆண்டு வளையங்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு உறுதி செய்யப்படுவது மரவயதியல் எனப்படும்.
19.
1. இவ்வகை கோலங்கைமாவில் செல்கள் ஒழுங்கற்று அமைந்திருக்கும் .
2. செல்லிடை வெளிப்பகுதியை சூழ்ந்துள்ள சுவர்ப்பகுதி மட்டும் தடிப்புகள் காணப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:ஐப்போமியாவின் புறத்தோலடித்தோல்.
20.
தான் உருவாக்கும் நன்மைகளைப் பற்றி அறியாத இந்த எளிய உயிரி, மனித இனத்திற்கும் விவசாயத்திற்கும் செய்யும் அளப்பறிய பணிகளை இந்த கடினமான செயலை அவைகள் இல்லை எனில் முன்றிலும் முடியாது என்பதை நாம் அறிவோம்.
21.
1. செல்களில் குளுக்கோஸின் பயன்பாட்டு அளவையும், குளுக்கோஸின் உள்ளேறும் அளவையும் குளுக்ககான் தடுப்பதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
2. எனவேதான் குளுக்ககான் ஹைபர்கிளைசீம் ஹார்மோன் (இரத்த சர்க்கரையை உயர்த்தும் ஹார்மோன் எனப்படுகிறது.
22.
ஒரு ஆக்ஸான் மற்றும் ஒரு டென்ட்ரைட்டை மட்டும் பெற்றுள்ள நியூரான்கள் இரு முனை நியூரான்கள் எனப்படும்.
எ.கா: கண்களின் விழித்திரை
2. உட்செவி
3. மூளையின் நுகர்ச்சிப் பகுதி
ஆகிய இடங்களில் இருமுனை நியூரான்கள் காணப்படுகிறது.
23.
பொட்டெலும்பு
24.
1. தசை நுண்ணிழையின் நீளம் முழுவதும் அடுத்தடுத்த அடர்த்திமிகு A பட்டைகள் மாறுபட்ட தன்மை கொண்ட பட்டைகள்) மற்றும் அடர்த்தி குறை I பட்டைகள்) மாறி மாறி நேர்த்தியாக அமைந்துள்ளன.
2. இவ்வமைப்பு எலும்புத் தசைகளின் வரித்தன்மைக்கு காரணமாகிறது.
25.
நிலவாழ் விலங்குகளில் நச்சுத்தன்மை குறைந்த யூரியா மற்றும் அமிலம் போன்றவை உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் நீர் சேமிக்கப்படுகிறது.
26.
1. மீராசீடியம்
2. ஸ்போரோசிஸ்ட்
3. ரீடியா
4. செர்க்கேரியா
27.
பெப்டைடு ஹார்மோன்கள், ஸ்டீராய்டு ஹார்மோன்கள் மற்றும் அமினோ அமிலம் சாரந்த ஹார்மோன்கள் என வேதியமைப்பு அடிப்படையில் ஹார்மோன்கள் மூன்று பெரும் வகைகளாக உள்ளன.
28.
ஒவ்வொரு தண்டுவட நரம்பும் உணர்ச்சி நரம்பாகவும் இயக்கு நரம்பாகவும் செயல்படக்கூடிய கலப்பு நரம்பாகும்.
29.
இம் முறையில் ஊட்டப் பொருள் நிறைந்த நீரானது குறுகிய தொட்டி அல்லது 'ஏஊ குழல் வழியே செலுத்தப்படுகின்றது.குழாயில் உள்ள துளைகளில் தாவரங்கள் நடப்பட்டு அவற்றின் வேர்ப்பகுதி குழாயின் நீரோட்டத்தில் தொடும்படி அமைந்துள்ளது.
30.
பெரும்பாலான நைட்ரஜன் பொருளை அம்மோனியாவாக வெளியேற்றும் உயிரிகள் அமோனியா நீக்கிகள் எனப்படும்
31.
1. காற்று சுவாசத்தை விடக் காற்றிலா சுவாசித்தல் குறைந்த திறனுடையவை
2. ஒரு மூலக்கூறு குளுக்கோஸிலிருந்து குறைந்த எண்ணிக்கையுடைய ஹகூஞ மூலக்கூறுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
32.
கிளைக்காலைசிஸ் என்பது 6-கார்பன் கொண்ட குளுக்கோஸ் இரண்டு மூலக்கூறு 3-கார்பன் கொண்ட பைருவிக் அமிலமாக உடையும் நிகழ்வு தொடர்வினைகள் ஆகும்.கிளைக்காலைசிஸ் நிகழ்ச்சிக்குத் தேவையான நொதிகள் அனைத்தும் சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது.
33.
(i) ஒட்டுமொத்த மூப்படைதல்
(ii) மேற் பகுதி மூப்படைதல்
(iii) இலை உதிர்வு வழி மூப்படைதல்
(iv) படிப்படியாக மூப்படைதல்
34.
(i) வளி மண்டலத்தில் CO2 வின் அளவானது 0.3% மட்டுமே இருப்பினும் இது முக்கிய பங்காற்றுகிறது.
(ii) CO2 வின் செறிவு அதிகரிக்கும்போது ஒளிச்சேர்க்கை வீதம் அதிகரிக்கிறது (வளிமண்டல CO2 செறிவு 330 ppm.
(iii) CO2 செறிவானது 500 pm விட அதிகரிக்கும்போது ஒளிச்சேர்க்கை வீதம்பாதிக்கப்பட்டு தடுப்பு விளைவுகள் (Inhibitory effect) தோன்றுகிறது.
35.
அம்மோனியாவாதல் (Ammonification )
(i) இறந்த தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து பெறப்படும் கரிம நைட்ரஜன் (புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள்) பாக்டீரியங்களால் அம்மோனியாவாக மாற்றப்படும் நிகழ்வு அம்மோனியாவாதல் எனப்படும்.
(ii) இச்செயலில் பங்கேற்கும் பாக்டீரியங்கள் பாசில்லஸ் ரமோசஸ் மற்றும் பாசில்லஸ் வல்காரிஸ்.
36.
37.
(i) ஃபைக்கோசயனின் -சயேனோபாக்டீரியங்களின் நீலப்பச்சை நிறத்திற்கு காரணம் ஆகும்.
(ii) ஃபைக்கோ எரிதிரின் -சிவப்பு ஆல்காக்களில் (Rhodophycen algae) சிவப்பு நிறத்திற்கு காரணமாக உள்ளது.
38.
(i) ஒரு குறிப்பிட்ட பணியினை மேற்கொள்ளப் பல்வேறு வகையான செல்களின் ஒரு கூட்டமைப்பே கூட்டுத்திசு எனப்படும்.
(ii) இது ஒரு வகைப்படும். அவை சைலம் மற்றும் ஃபுளோயம்.
39.
குரோமோசோம்களின் உருஅமைப்பைத் தீர்மானிக்கும் பகுதியாக சாட்டிலைட் திகழ்கிறது.
40.
41.
கோல்கை உடலம்.
42.
43.
1. புதிய செல்லை உருவாக்கும் தொடர்ச்சியான நிகழ்விரு செல் சுழற்சி என்று பெயர்.
2. செல் சுழற்சியின் போது பல மாறுதல்கள் ஏற்பட்டு புதிய செல் தொகை உருவாக்கப்படுகிறது.
44.
1. உயிரிகள் வளர்ச்சியடையும் போது.
2. பாலிலா இனப்பெருக்கத்தில் புதிய செல்களின் ஆக்கத்தின் போது.
45.
1. இரைப்பையில் உணவுப்பொருள் இரைப்பை நீருடன் கலந்து கடையப்படுகிறது.
2. இதன்மூலம் உருவாகும் கூழ்ம நிலையான உணவிற்கு இரைப்பைப்பாகு என்று பெயர்.
46.
| வ.எண் | செல்களின் பெயர் | சுரப்புகள் |
|---|---|---|
| 1. | முதன்மை செல்கள் (அ) பெப்ட்டிக் செல்கள் (அ) சைமோஜன்செல்கள் | இரைப்பை நொதிகள் |
| 2. | கோப்பை வடிவ செல்கள் | கோழை |
| 3. | பெரைட்டல் செல்கள் | HCL மற்றும் காசிலின் உள்ளமைக் காரணி (வைட்டமின் B12 உட்கிரகித்தலுக்குத் தேவை) |
47.
பிளகாய்டு செதில்கள்
48.
தாவரங்களில் ஒரு இலை மற்றொரு இலைக்கு நிழலை ஏற்படுத்தாதவாறும், அனைத்து இலைகளும் அதிகபட்ச சூரிய ஒளி கிடைக்கும் விதத்தில் ஒன்றின் மேல் ஒன்று தழுவாதவாறு தங்களுக்குள் சரி செய்து கொள்வது ஒளிசார் பரவிலை அமைவு என்று பெயர்.
எ.கா: அகாரிஃபா (குப்பைமேனி)
49.
பூஞ்சையில் பாலிலிநிலை மற்றும் பால் நிலை எனும் இரண்டு நிலைகள் கொண்டிருந்தால் அது முழு உடலி பூஞ்சைகள் எனப்படும்.
50.
கனி என்பது கருவுற்ற, முதிர்ந்த சூலகப்பை ஆகும்.
51.
புல்லிகள், அல்லிகள் மகரந்தத்தாள்கள் சூலகப்பையின் முனையில் ஒட்டி இருந்தால், அந்த சூலகப்பை கீழ் மட்டச் சூலகப்பை என்று பெயர்.
52.
1.ஸ்ட்ரெப்டோமைசின்
2.குளோரம்ஃபெனிகால்
3.டெட்ராசைக்ளின்
53.
1. பிளாஸ்மாவில் கரைந்த நிலையில் 3% மட்டுமே கடத்தப்படுகிறது. ஏனெனில், ஆக்ஸிஜன் கரைதிறன் மிகவும் குறைவு.
2. ஹீமோ குளோபினோடு இணைந்த நிலையில் 97% கடத்தப்படுகிறது.
3. ஏனெனில் ஹீமோகுளோபினோடு எளிதில் பிரியும் வகையில் பிணைக்கப்பட்டு, ஆக்ஸ் ஹீமோகுளோபின் (HbO2) வடிவத்தில் கடத்தப்படுகிறது.
54.
ஒத்த பண்புகளை கொண்ட தாவரங்களின் வகைப்பாட்டில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்க , அவற்றில் காணப்படும் புரதங்களின் அடிப்படஇல்லை வகைப்படுத்துதல் குர்திநீர்ச்சார்/ஊநீர் வகைப்பாடு எனப்படும்.
55.
1. இயல்பான ஒவ்வொரு சுவாசத்தின் போதும் உள்ளேறும் காற்று அல்லது வெளியேறும் காற்றின் கொள்ளளவு மூச்சுக்காற்று அளவு எனப்படும்.
2. மூச்சுக்காற்று அளவு = 500 மில்லி லிட்டர்.
56.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் எல்லாத் தாவரங்களையும் தொகுத்து அவற்றை இனகண்டறிய வகைப்பாட்டு திறவுகோளுடன் வெளியிடப்படும் புத்தகம் தாவரத் தொகுப்பு புத்தகமாகும்.
57.
முதிர்ச்சியடைந்த மாண்புவில் 14 முதல் 17 வரையிலான உடற்கண்டங்கள் சுவர் சற்றே பருத்து தடுத்ததால் சுரபிகளுடன் காணப்படும். இதற்கு கிளைடெல்லம் என்று பெயர்.
கருமுட்டை உருவாக்க கிளைடெல்லம் துணை புரிகிறது.
58.
சுற்றுச் சூழலின் வெப்பநிலைக் கேற்ப தவளையின் உடல் வெப்பமும் மாறுபடுவதால், இவ்வுயிரிகள் மாறும் வெப்பநிலை விலங்குகள் என அழைக்கப்படுகின்றன.
59.
1. ஒவ்வொரு வென்ட்ரிகிளும் ஒரு நிமிடத்தில் வெளியேற்றும் இதயத்தின் அளவு இதயத்திலிருந்து வெளியேறும் இரத்த அளவு ஆகும்.
2. இது இதயத்துடிப்பு வீதம் மற்றும் வீச்சுக் கொள்ளளவின் விளைவாகும்.
60.
தரச-சர்க்கரை கோட்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் ஹேன்ஸ் (1940) என்பவரால் காப்பு செல்லில் பபஸ்பாரிலேஸ் நொதி(phosphorylase) கண்டறியபட்டது.
பகலில் பபஸ்பாரிலேஸ் நொதி தரசத்தினை நீராற்பகுத்து சர்க்கரையாக மாற்றி ph- அளவை உயர்த்துவதால் உட்சவ்வூடூபரவல் நடைபெற்று இலைத்துளை திறக்கிறது.
இரவில் இதற்கு எதிரான செயல் நடைபெறுகிறது.

61.
அடர்ந்த உப்பு கரைசலில் கரைபொருளின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சவ்வூடுபரவல் அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே, அதிக அடர்வுள்ள கரைசல் அதிகமான சவ்வூடு பரவல் அழுத்தத்தினைக் கொண்டிருப்பதால் தாவரம் வாடுகிறது.
62.
சில சதைப்பற்றுள்ள தாவரங்களான ஒபன்ஷியா, பிரையோஃபில்லம் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் பகுதியாக ஆக்சிஜனேற்றமடைந்து கரிமஅமிலமாகக் குறிப்பாக மாலிக் அமிலமாக மாறுவதால் இத்தாவரங்களின் சசுவாசித்தில் CO2வெளியிடுவதில்லை ஆனால் O2பயன்படுத்தப்படுகிறது. இதில் சுவாச ஈவு மதிப்பு சுழியாக உள்ளது.
63.
64.
ஸ்கிலிரன்கைமா செல்கள் புரோட்டா பிளாசமற்ற இறந்த செல்களாகும். இச்செல்கள் நீண்டோ அல்லது குட்டையாகவோ லிக்ளினால் ஆன இரண்டாம் நிலை சுவர்களைக் கொண்டு காணப்படும்.
65.
1. நுண் தமணிகளிலுள்ள இரத்தம், நுண் நாளங்களில் பாயும் போது அதிக நீர்ம அழுத்தத்துடன் உள்ளது.
2. இரத்த உந்து விசையால் ஏற்படும் இவ்வழுத்தம் நீர் மற்றும் சிறு மூலக்கூறுகளை இரத்த நுண்நாளச் சுவர்களின் வழியாக திசு திரவத்திற்குள் செலுத்துகிறது.
66.
1. இவ்வகை ஸ்டீலில் சைலத்தின் வெளிப்புறத்தில் மட்டும் ஃபுளோயம் காணப்படும்.
2. மையத்தில் பித் காணப்படும்
எ.கா. ஆஸ்முண்டா.
67.
கருமுட்டை
68.
தன் வாழ்நாளில் ஒரு முறை மட்டும் பூத்து காய்த்து பின் மடிகின்ற தாவரங்கள், ஒரு காய்ப்புத் தாவரங்கள் எனப்படும். எ.கா: மூங்கில், அகேவ் (கற்றாழை), மியூசா (வாழை)
69.
1. எலும்புத்தசையை எலும்புகளோடு இணைகிறது - தசை நாண்
2. எலும்பையும் எலும்பையும் இணைகிறது. - எலும்பிணைப்பு நார்கள்
70.
சில காண சதுர வடிவ மற்றும் தூண்வடிவ எபிதீலிய செல்கள் சுரப்பித் தொழிலை செய்வதற்காக சிறப்புற்று காணப்படுகிறது.அவ்வகை செல்கள் சுரப்பு எபிதீலியம் எனப்படும்.
எ.கா: உமிழ்நீர், சுரப்பு
71.
உப்புத்தன்மையுள்ள சூழ்நிலையில் வாழும் புரோகேரியோட்டுகள் ஹேலோஃபைல்கள் எனப்படும்.
72.
ஒரு சில புரோகேரியோட்டுகள் சூரிய ஒளி மற்றும் ஆக்ஸிஜன் இன்றி எரிமலை சாம்பலில் இருந்து வரும் ஹைட்ரஜன் சல்பைடை பயன்படுத்தி உணவை தயாரித்துக் கொள்கிறது.
73.
1. இராணி தேனீ,
2. ஆண் தேனீக்கள்
3. வேலைக்கார தேனீக்கள்
74.
1. கருங்காலி
2. கருவேலை
3. கும்பாதிரி
75.
1. பாராதைராய்டு ஹார்மோன் பற்றாக்குறையின் காரணமாக உடலில் கால்சியத்தின் அளவு குறைகிறது.
2. இதனாலேயே தீவிரத் தசை இறுக்கம் ஏற்படுகின்றது. இதற்கு டெட்டனி என்று பெயர்.
76.
1. நாவடி (ஹாய்டு) எலும்பு என்பது மனித உடலில் இணைக்கப்படாத எலும்பாகும்.
2. தொண்டைக் குழியின் அடிப்பகுதியில் ஒரு வடிவஒற்றைநாவடி (Hyoid) எலும்பு உள்ளது.
77.
ஹார்மோன்கள் உடலமைப்பு உடற்செயலில் மனநிலை செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து உடல் சமநிலையைப் பேணுதல்.
78.
சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் ஆன்டிடையூரிக் ஹார்மோன், ரெனின் மற்றும் ஆஞ்சியோடென்சின் ஆகும்.
79.
சிறுநீரக தமனி சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்த குழையாகும்.
எடுத்துச்செல்லப்படும் இரத்தம் தமனி இரத்தம் ஆகும்.
80.
இத்திசுவில் இரத்தக் குழாய்கள் இல்லாததே இதற்க்கு காரணம் ஆகும்.
81.
82.
இரைப்பையில் குடல் உறிஞ்சிகள் கிடையாது.
காரணம்:
1. இரைப்பை உணவை சேமிக்கிறது.
2. இரைப்பை உணவை அரைக்கிறது
3. இரைப்பை நீரில் நொதிகள் காணப்படுவதால் செரித்தலில் மட்டும் ஈடுபடுகிறது.
4. உணவு முழுமையாக செரித்தல் அடையாமல் இருப்பதால் உறிஞ்சுவதற்கேற்ற சிறிய மூலக் கூறுகள் உருவாகவில்லை.
5. உறிஞ்சுவதற்குரிய நுண்ரத்தக்குழாய்கள் கிடையாது. மேற்கூறிய காரணங்களினால் இரப்பை குடல் உறிஞ்சிகளைப் பெற்றிருக்கவில்லை.
83.
84.
1. இரத்தம் ஒரு சிறப்புவகை இணைப்புத்திசுவாகும். இதனுடைய திரவ ஊடகமான பிளாஸ்மாவில் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் அமிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.
2. சிறுகுடலில் உறிஞ்சப்பட்ட ஊட்டப்பொருட்களை உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம், உடல் உறுப்புகள் அனைத்தையும் இணைகிறது.
3. நுரையீரல் இருந்து O2 ஐ பல்வேறு உறுப்புகளுக்கும், அவ்வாறே உறுப்புகளிலிருந்து CO2 ஐ நுரையீரலுக்கும் எடுத்துச் செல்வதன் மூலம் உறுப்புகள் அனைத்தையும் இணைக்கிறது.
4. கழிவுப் பொருட்களை உடல் உறுப்புகளிலிருந்து நீக்கி, சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம் அதனையும் இணைகிறது.
மேற்கூறிய காரணங்களால் இரத்தம் ஒரு இணைப்புத் திசுவாக கருதப்படுகிறது.
85.
| வ.எண் | வெள்ளை அடிபோஸ்திசு | பழுப்பு அடிபோஸ்திசு |
|---|---|---|
| 1 | தோலுக்கு அடியில் காணப்படுகிறது. சிறுநீரகம், கண்கோளம், இதயம் ஆகிய உறுப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. | இதும் தோலுக்கு டியில் காணப்படுகிறது. எண்ணற்ற மைட்டோகாண்ட்ரியாயாக்களை கொண்டது. |
| 2 | ஊட்டச்சத்துகளைச் சேகரித்துவைக்கும் இடமாக உள்ளது. | இரத்த ஓட்டத்தையும் உடலையும் வெப்பப்படுத்துகிறது. பிறந்த குழந்தையின் உடம்பில் நடுக்கத்தை ஏற்படுத்தாமல் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. |
| 3 | இதன் மறுபெயர் வெள்ளை கொழுப்பு | இதன் மறுபெயர் பழுப்பு கொழுப்பு |
86.
1. கோப்பைச் செல்கள் அதிக கிளைக்கோபுரத்தைக் கொண்ட வழுவழுப்பான கோழையைச் சுரப்பதால்.
2. மூச்சுக்குழல் ஓரளவிற்கு வளையும் தன்மை கொண்ட பல குருத்தெலும்பு வளையங்களை உடையதால்.
87.
சுவாச உறுப்புகள்:
1. தட்டை புழு - உடல் பரப்பு
2. மண்புழு - ஈரப்பதமான தோல்
3. மீன் - செவுள்
4. இறால் - செவுள்
5. கரப்பான் பூச்சி - மூச்சுக்குழல்
6. பூனை - நுரையீரல்
88.
மீன்களில் உணவுக்குழலுடன் இணைக்கப்பட்ட அல்லது இணைக்கப்படாத காற்றுப்பைகள் காணப்படுகின்றன. இப்பைகள், காற்றுப் பரிமாற்றத்திற்கும் (நுரையீரல் மீன்கள்) திருக்கை மீன்களில் மிதவைத் தன்மையைக் கொடுக்கவும் பயன்படுகின்றன.
89.
1. வலது வென்ட்ரிக்கிள் - இங்கிருந்து ஆக்சிஜனற்ற இரத்தம் இதயத்தின் அருகில் உள்ள நுரையிரலுக்கு செல்வதால், குறைவான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டுவதால் இதன் சுவர் சற்று மெல்லியது.
2.இடது வென்ட்ரிக்கிள் - இங்கிருந்து ஆக்சிஜன் உள்ள இரத்தம் இதயத்தை விட்டு தூரமான உறுப்புகளுக்கு அனுப்பப்படவேண்டுமானதல், அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டி இருப்பதால், அதன் சுவர் தடிமனாக உள்ளது.
90.
| வ.எண் | பயன்தரும் பாக்டீரியா | நோயூக்கி பாக்டீரியா |
|---|---|---|
| 1. | வீடுகளில் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது | நோய்களை ஏற்படுத்துகிறது |
| 2. | தயிர், கயிறு, நொதி, எதிர் உயிரி உற்பத்தியில் பயன்படுகிறது. | காசநோய், காலரா, ஆன்ந்ராக்ஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தும். |
91.
இயற்கையில் இனப்பெருக்கப் பண்புகளில் இரு வேறு சிற்றினங்கள் தனிப்படுத்தப்பட்டுள்ளது. வெவ்வேறு சிற்றினங்களுக்கிடையே அவ்வாறு இனப்பெருக்கத்தடை உண்டு.
ஆனால் சில வேளைகளில் நெருங்கிய தொடர்புடைய சில சிற்றினங்களுக்கிடையே இனக்கலப்பு செய்யும் போது மலட்டுத் தன்மையுடைய சேய்கள் உருவாகிறது.
அதனால் தான் கோவேறு கழுதை மலட்டுத் தன்மையுடையதாக உள்ளது.
92.
1.நைட்ரோஜீனஸ் காரத்தில் நைட்ரஜன் காணப்படும்.
எ.கா. பியூரைன்காரம், பிரிமிடின் காரம்.
2.கரிம வேதியியலில் பயன்படும் காரத்தில் நைட்ரஜனுக்குப் பதிலாக -OH தொகுதி காணப்படும்.
93.
நியூக்ளியோசைடு - யூராசில்
94.
1. பொருளை நன்கு வேறுபடுத்தி அறிய உதவுகிறது.
2. உயிருள்ள செல்கள் , திசுக்களைப் படித்தறிய உதவுகிறது.
3. வளர்ப்பு ஊடகத்தில் உள் வளர்ப்பின் மூலம் திசு வளர்ப்பு செய்து செல்வகுப்பின் நிலைகளை படித்தறிய உதவுகிறது.
95.
பக்கவேரானது வேர்களின் பெரிசைக்களிலிருந்து தோன்றி அகத்தோல், புறணி மற்றும் ரைசோடெர்மியை தாண்டி வெளி வருவதால் அவைகள் அகத் தோன்றிகளாகும்.
96.
வகுப்பு : டைக்காட்டியிடனே
துணைவகுப்பு : பாலிப்பெட்டாலே
வரிசை : காலிசி∴ புளோரே
97.
லைக்கென் உடலத்தில் பாசிசெல்கள் பரவலின் அடிப்படையில்
| ஹோமியோமிரஸ் | ஹெட்டிரோமிரஸ் |
| பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல். | வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல். |
98.
அ) ஸ்மினோடு (மலட்டு மகரந்தம்)
ஆ) பொல்லினியம்
இ) அல்லி ஒட்டியவை.
99.
உயிரியல் சார் நெருக்கடிகள்:
1. பிற உயிரினங்களான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள், பூச்சிகள், களைகள், போட்டித் தாவரங்கள் போன்றவைகளால் தாவரங்களில் ஏற்படும் கடுமையான விளைவுகளே உயிரியல் சார் நெருக்கடி எனப்படுகிறது.
2. கால்நடைகளின் தீவனத்திற்காகவும் எரிபொருள் தேவைக்காகவும், வேளாண்மை பயன்பாட்டிற்காகவும்,மனிதர்களால் தாவரங்கள் வெட்டப்படுதலும் உயிரியல் சார் நெருக்கடிக்கு காரணமாக உள்ளன.
3. சுற்றுச்சூழலில் எப்பொழுதும் காணப்படும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் புழுக்கள் ஆகியவற்றால் ஏற்படும் உயிரியல் சார் நெருக்கடி செயல்திறன் மிக்க நெருக்கடிகள் என்ற அழைக்கப்படுகின்றன.
அல்லிலோபதி:
1. ஓர் உயிரினம் உற்பத்தி செய்யும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரி வேதிப்பொருள்கள் பிற உயிரினங்களின் முளைத்தல், வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.இது அல்லிலோபதி என்றழைக்கப்படும்.
2. இவை நன்மைத் தருபவை நேர்மறை அல்லிலோபதி அல்லது தீங்களிப்பவை எதிர்மறை அல்லிலோபதி-களாக உள்ளன.
3. இத்தகைய அல்லிலோ வேதிப்பொருட்கள் இலையிலிருந்து கசியும் நீர் தரையை அடைந்த பிறகும் மற்றும் வேரிலிருந்தும் பெறப்படுகின்றன.
4. அல்லிலோபதி என்ற கிரேக்க சொல் அல்லிலோன்-ஒருவருக்கொருவர் மற்றும் பாத்தோஸ்-பாதிக்க எனவும் முதன்முதல் ஹின்ஸ்மோலிஸ் என்பவரால் 1937-ல் பயன்படுத்தப்பட்டது.
5. அல்லிலோபதி விளைவுகளைத் தாவரங்கள் பயிர்களின் மீதும் பயிர்களைத் தாவரங்களின் மீதும் ஏற்படுத்தலாம்.
6. கருப்பு பாதாம் (ஜக்லான் நைக்ரம்) நன்கு அறியப்பட்ட அல்லிலோபதி தாவரங்களில் மீதும் ஏற்படுத்தலாம்.
7. இக்கருப்பு பாதாமில் ஜக்லான் என்ற வேதிப்பொருள் உள்ளன. இது ஒரு சுவாச தடுப்பான்.
8. சொலோனேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்காளான தக்காளி, மிளகாய் மற்றும் கத்திரிக்காய் ஜக்லானுக்கு எளிதில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை.
9. இத்தகையத் தாவரங்கள் அல்லிலோ வேதிப்பொருள்களுடன் சேரும்போது வாடல், பச்சைய சோகை இறப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
10. தற்போது அல்லிலோபதி மரங்களின் பட்டியலில் பெருமரம் (அய்லாந்தஸ் அல்டிசிமா) சேர்க்கப்பட்டுள்ளது.
11.அய்லான்தோன் ஓர் அல்லிலோ வேதிப்பொருள். இது அய்லான்தஸ் வேரிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.
12.சோளத்தில் காணப்படும் சொர்கோலான் என்ற அல்லிலோ வேதிப்பொருள்கள் அல்லிலோபதி செயல்தன்மை கொண்டவை.
13.இது பெரும்பாலும் சோளத்தின் சிற்றினங்களின் வேர்க்கசிவுகளில் காணப்படும்.
14. மக்காசோளத்தின் வேர்க் கசிவு சினோபேடியம் அல்பம் மற்றும் அமரான்தஸ்ரெட்ரோப்ளக்ஸ்ஸஸ் போன்ற சிலகளைத் தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.
15.ஓட்ஸ் (அவினா ஃபடுவா) தாவரத்தின் விதைக்கசிவு கோதுமை விதைமுளைத்தலை பாதிக்கின்றன.
(ii) நோய் உருவாக்கம்:
நுண்ணியர்களின் விளைவால் தாவரங்களில் நோய் உண்டாகின்றன. உதாரணமாக சாந்தோமோனாஸ் சிட்ரி.
100.
வறட்சி என்ற சொல் போதியளவு மழை இல்லாத காலங்களில் மண்ணில் நீரின் அளவு குறைந்து தாவரங்களும் நீர் பாற்றாக்குறையின் காரணமாக பாதிக்கப்படுதலை குறிக்கும்.
வறட்சியின் விளைவுகள்:
1. செல்களின் வளர்ச்சி மற்றும் செல்சுவர் கூறுகளின் உற்பத்தி குறைவதால் செல்கள் அளவில் சிறிதாகின்றன.
2. நைட்ரஜன் நிலைநிறுத்தம் மற்றும் அதன் ஒடுக்கம் ஆகியவை சில நொதிகளின் குறைவான செயல்பாடுகளால் குறைகின்றன.
3. அப்சிக் அமிலம் உற்பத்தி அதிகரித்து இலைத்துளை சாதனங்கள் மூடுவதால் நீராவிப்போக்கு வீழ்ச்சியடைகின்றது.
4. புரோட்டோகுளோரோஃபில் உற்பத்தி தடைபடுவதால் ஒளிச்சேர்க்கை வீழ்ச்சியடைகின்றன.
5. சுவாசித்தல் மற்றும் உணவுப் பொருட்கள் இடப்பெயர்ச்சி குறைதல்,நீர் இழப்பதால் நொதிகளின் செயல்பாடுகள் அதிகரித்தல், இதைத் தொடர்ந்து RNA மற்றும் புரதங்கள் சிதைக்கப்படுகின்றன.
6.. கார்போஹைட்ரேட் இடப்பெயர்வு பாதிக்கப்படுவதால் முதிர்ந்த இலைகள் வாடுகின்றன.
7. இதைத் தொடர்ந்து இலை மூப்படைதல் நிகழ்கிறது.
101.
1. உடல் உலர்ந்த உறுதியான தோலால் மூடப்பட்டுள்ளது.
2. தோலில் செதில்கள் காணப்படுகிறது.
3. மாறும் உடல் வெப்பமுடையவைகள்
4. ஓடுடைய முட்டைகளை இடுகின்றன.
5. யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றுகிறது.
6. சிறுநீரகம் மெட்டாநெஃப்ரிக் வகை
7. உட்கருவுருவுதல் நடைபெறுகிறது.
102.
| வ.எண் | மிட்ரல் வால்வு | அரைச்சந்திர வால்வு |
| 1 | இடது அரிக்கிகளுக்கு இடது வெண்றிக்கிள்களும் இடையில் காணப்படுகிறது. | பெருந்தமனி துவக்கம், நுரையீரல் தமனியின் துவக்கம் மற்றும் சிரைகளில் காணப்படுகிறது. |
| 2 | இதன் மறுபெயர் ஈரிதழ் வால்வு | - |
| 3 | வெண்ட்ரிக்கிள் சுருங்கும் போது வெண்ட்ரிக்கிளில் இருந்து ஆரிக்கிளினுள் இரத்தம் செல்வதை தடுக்கிறது. | வெண்ட்ரிக்கிள் விரிவடையும் போது இரத்தம் பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமையிலிருந்து பின்னோக்கி செல்வதை தடுக்கிறது |
| 4 | கார்டோடென்டினே என்ற அமைப்பு தாங்குகிறது. | காணப்படவில்லை |
| 5 | வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது இவ்வால்வுகள் மூடுவதால் 'லப்' என்ற ஒலி ஏற்படுகிறது. | வெண்ட்ரிக்கிள்கள் விரிவடையும் போது இவ்வால்வுகள் மூடுவதால் 'டப்' என்ற ஒலி ஏற்படுகிறது. |
103.
| ஓர் நடு நரம்பமைவு | பல நடு நரம்பமைவு | |
| 1. | இவ்வகை நரம்பமைவில் இலையின் மையத்தில் ஒரே ஒரு மைய நரம்பு மட்டும் உள்ளது. |
இவ்வகை நரம்பமைவில், இலையின் ஒரு புள்ளியிலிருந்து இரண்டு அல்லது பல மைய நரம்புகள் தோன்றுகிறது. |
| 2. | இம் மைய நரம்பிலிருந்து பல கிளை நரம்புகள் தோன்றி ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்துகிறது. |
பல மைய நரம்புகள் இலையின் வெளிப்புறமாகவோ அல்லது மேற்புறமாகவோ செல்கிறது. |
| 3. | இதன் மறுபெயர் சிறகு வடிவ வலைப் பின்னல் நரம்பமைவு ஆகும். |
இதன் மறுபெயர் அங்கை வடிவ வலைப்பின்னல் நரம்பமைவு ஆகும். |
| 4. | எ.கா: மாஞ்சிஃபெராபூ இண்டிகா, ஃபைகஸ் ரிலிஜியோஸா, நீரியம். |
எ.கா. குக்கர் பிட்டர் (பூசனி), லூஃபா(பீர்க்கங்காய்), காரிக்கா பப்பாயா (பப்பாளி), ஜிஜீஃபஸ் (இலந்தை), சின்னமோமம் (பிரிஞ்சிஇலை) |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards