11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/05/2020
11 வது வகுப்பு வேதியியல் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் ஜூன் 2020 (11th Standard Chemistry Public Exam Model Question Paper June 2020)
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றை பொருத்துக.
| அடுக்குகள் | காணப்படுபவை | ||
| A | அடிவெளிப் பகுதி | 1 | O2+ |
| B | அடுக்கு மண்டலம் | 2 | O3 |
| C | மத்திய அடுக்கு | 3 | e- |
| D | வெப்ப அடுக்கு | 4 | CO2 |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 3 | 2 | 1 | 4 |
| A | B | C | D |
| 4 | 2 | 1 | 3 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
2.
கூற்று (A): நீராவி மாற்றியமைத்தல் செயல்முறை மூலம் தொழிற்சாலையில் அதிக அளவு H2 வாயுவை ஹைட்ரோ கார்பனிலிருந்து பெறலாம்.
காரணம் (R): மீத்தேனிலிருந்து H2 வாயு உருவாக்கும் முறையானது நீராவி மாற்றியமைத்தல் செயல்முறை எனப்படுகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம் அல்ல
(A) சரி, (R) தவறு
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
3.
தாவரம் மற்றும் பூக்களிலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய்களை பிரித்தெடுக்க பயன்படுவது
படிகமாக்குதல்
வாலை வடித்தல்
பின்ன வாலை வடித்தல்
நீராவி வாலை வடித்தல்
4.
பின்வருவனவற்றின் ஏதன் எலக்ட்ரான்களை இணைதிற கூட்டில் பெற்றுள்ள எலக்ட்ரான் இரட்டையாக குறிப்பிடப்படுகிறது?
N
C
O
He
5.
பின்வருவனவற்றை பொருத்துக.
| A | 1 atm | 1 | 6894.76 pa |
| B | 1 mm Hg | 2 | 105 pa |
| C | 1 bar | 3 | 133.322 pa |
| D | 1 psi | 4 | 101325 pa |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 4 | 1 |
| A | B | C | D |
| 3 | 4 | 2 | 1 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 4 |
6.
திட்ட கட்டிலா ஆற்றல் மாற்றம் \(\triangle G^o\)ஆனது சமநிலை மாறிலி kp உடன் கொண்டுள்ள தொடர்பு
\(\triangle G^o =- RT \ In \ K_p\)
\(k_p =({e \over RT})\triangle G^o\)
\(k_p ={-\triangle G \over RT} \)
\(k_p ={\triangle G \over RT} \)
7.
அசிட்டோன் \(\xrightarrow[ii)H_2O/H^{-1}]{i)CH_3MgI }X\),இங்கு X என்பது
2-புரப்பனால்
2-மெத்தில்-2-புரப்பனால்
1-புரப்பனால்
அசிட்டோனால்
8.
200ml புரத நீர்க் கரைசலானது, 1.26g புரதத்தை கொண்டுள்ள து. 300K வெ ப்பநிலை யில், இந்த கரைசலின் சவ்வூடுபரவல் அழுத்த மதிப்பு 2.52 × 10–3 bar என கண்ட றியப்பட்டுள்ளது. புரதத்தின் மோலார் நிறை (R = 0.083 L bar mol–1 K–1)
62.22 Kg mol–1
12444g mol–1
300g mol–1
இவற்றில் ஏதுமில்லை
9.
கீழ் கண்டவற்றில் எது சரியான கூற்று அல்ல?
சமநிலையில் உள்ள ஒரு அமைப் பிற்கு Qவின் மதிப்பு எப்போதும் சமநிலை மாறிலியை விடகுறைவாக இருக்கும்.
இரு பக்கத்திலிருந்தும் சமநிலையினை அடையலாம்.
வினையூக்கியானது முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளை சம அளவில்
பாதிக்கும்.
வெப்ப நிலையினை பொருத்து சமநிலை மாறிலி மதிப்புகள் மாறுபடும்.
10.
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?
ROH
ROR
PCl3
BF3
11.
RbO2 சேர்மம் ஒரு
சூப்பர் ஆக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது
பெராக்சைடு மற்றும் டையாகாந்தத் தன்மை கொண்டது
சூப்பர் ஆக்சைடு மற்றும் டையாகாந்தத் தன்மை கொண்டது
பெராக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது
12.
இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை
102 g
27 g
270 g
78 g
13.
M2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s22s22p63s23p63d6 அதன் அணு நிறை 56 எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை
26
22
30
24
14.
டிரிட்டியம் உட்கருகொண்டுள்ளது--------
1p +0n
2p +1n
1p +2n
இவற்றில் ஏதும் இல்லை
15.
A மற்றும் B ஆகிய தனிமங்களின் எலக்ட்ரான் அமைப்பு முறையே 1s2, 2s2, 2p6, 3s2 மற்றும் 1s2, 2s2, 2p6, 3s2,3p5 ஆகும்.இவ்விரு தனிமங்களுக்கிடையே தோன்றும் அயனி சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு.
AB
AB2
A2B
எதுவும் இல்லை
16.
ஹேலோ அரீன்களின் கார்பன் அணுவின் இனக்கலப்பு நிலை என்ன?
17.
கரைசல் என்பது யாது? அதன் பகுதிப் பொருட்கள் யாவை? எ.கா தருக.
18.
CH3COOCH3 (aq) + H2O (aq) ⇌ CH3COOH (aq) + CH3OH(aq) என்பது எச்சமநிலைக்கு எடுத்துக்காட்டு?
19.
லோதர் மேயர் வகைப்பாட்டினை எழுதுக.
20.
அமுக்கத்திறன் காரணி வரையறு.
21.
பெரிலியத்தின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் என்ன?உன் பதிலை விளக்குக.
22.
H2SO4 ன் சமான நிறையைக் கண்டறி.
23.
டுமாஸ் முறையை பயன்படுத்தி நைட்ரஜனை அளவிடும்போது, 0.35g கரிமச்சேர்மமானது 150oC மற்றும் 760mm Hg அழுத்தத்தில் 20.7mL நைட்ரஜனை தருகிறது. அச்சேர்மத்தில் காணப்படும் நைட்ரஜனின் சதவீதத்தினைக் காண்க.
24.
0oCல் உள்ள ஒரு பனிக்கட்டி, 0oCல் உள்ள திரவ நீரில் வைக்கப்படும்போது மூழ்குகிறது – ஏன்?
25.
128.0 கிராம் ஆக்ஸிஜனை 00C லிருந்து 1000C க்கு வெப்பப்படுத்துமபோது \(\triangle \)U மற்றும் H மதிப்புகளை கணக்கிடுக. தோராயமாக Cv மற்றும் Cp மதிப்புகள் முறையை 21 J mol-1K-1 மற்றும் 29 J mol-1K-1 [வேறுபாடானது 8 J mol-1K-1 இது தோராயமாக R மதிப்பிற்குச் சமம்.
26.
மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்கு.
27.
கீழ்கண்ட சேர்மங்களில் உள்ள ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற எண்ணைக் காண்க.
(i) நீர்
(ii) ஹைட்ரஜன் பெராக்சைடு
(iii) KO2
(iv) OF2
28.
NH3, N2 மற்றும் H2 ஆகியனவற்றின் சமநிலைச் செறிவுகள் முறையே 1.8x10-2M, 1.2x10-2M மற்றும் 3x10-2M. N2 மற்றும் H2விலிருந்து NH3 உருவாகும் வினைக்கு சமநிலை மாறிலியின் மதிப்பினைக் காண்க.
29.
தனிமவரிசை அட்டவணையின் முதல் தொகுதியில் காணப்படும் தனிமங்கள் கார உலோகங்கள் எனப்படுகின்றன.அவற்றின் வேதிப்பண்புகளை பட்டியலிடு.
30.
ஒரு வாயு 15oCயில் 1atm அழுத்தத்தில் பெற்றுள்ள கனஅளவு 2.58 dm3வெப்பநிலை 38oCயாக
1atm அழுத்தத்தில் உயர்ந்தால் அதன் கனஅளவு அதிகரிக்குமா? எனில் அதன் இறுதி
கனஅளவைக் கணக்கிடு
31.
காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாட்டினை சுருக்கமாக விளக்குக.
32.
ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு ஆக்சிஜனேற்றியாகவும், ஆக்சிஜன் ஒடுக்கியாகவும் செயல்படுகிறது. இக்கூற்றினை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் நிரூபிக்க
33.
அயனியாக்கும் ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் நாட்டத்தினை பாதிக்கும் காரணிகளுள் முக்கியமான ஒரு காரணி அணுவின் எலக்ட்ரான் அமைப்பு - விளக்குக.
34.
கார உலோகச் சேர்மங்கள் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ராக்சைடுகள் பற்றி விரிவாக எழுது.
35.
கீழ்கண்ட வினையின் வினைவிளைப் பொருட்கள் A மற்றும் B யைக் கண்டறி.
36.
N2+ - ன் பிணைப்பு நீளமானது M2-ன் பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் NO+ ன் பிணைப்பு நீளமானது NO வைக் காட்டிலும் குறைவு. ஏன்?
37.
ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரான் ஒன்றின் திசைவேகத்தினை அளவிடுவதில் ஏற்படும் நிச்சயமற்றத் தன்மையினை கணக்கிடுக. (முதல் வட்டப்பாதையில் போர் அணு ஆறாம் 0.592 Å) வட்டப்பாதையில் உலா எலக்ட்ரானின் நிலையினை அவ்வட்டப்பாதை ஆரத்தில் 0.5% துல்லியமாக, கண்டறிய இயலும் எனக் கருதுக.
38.
பின்வருவனவற்றை விளக்குக.
(i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு
(ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு
(iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு
39.
வினைகளின் தன்னிச்சை தன்மை மீது வெப்ப நிலையின் விளைவை எடுத்துக்காட்டுடன் விவரி.
40.
ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? மூலக்கூறுக்கு இடைப்பட்ட மற்றும் மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பை விளக்குக.
41.
5000C ல், \({ Ca }{ CO }_{ 3 }(s)\rightleftharpoons CaO(S)+{ CO }_{ 2 }(g)\) என்ற வினையில் CO2ன் பகுதி அழுத்தம்
1.017 × 10–3 atm ஆகும். இவ்வினை யில் 6000Cல், KP க்கான மதிப்பினை கணக்கிடுக. இவ்வினையின் \(\triangle\)H 181KJ mol-1 மேலும் கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலை எல்லையில் இதன் மதிப்பு மாறுவதில்லை.
42.
300K ல் 525g ஆக்சிஜன் மற்றும் 65.1g CO2 அடங்கியுள்ள தொட்டியில் கலவையின் மொத்த அழுத்தம் 9.21 atm. கலவையிலுள்ள ஒவ்வொரு வாயுவின் பகுதி அழுத்தங்களை கண்டறிக.
43.
திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?
1.
(a)
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
2.
(a)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம்
3.
(d)
நீராவி வாலை வடித்தல்
4.
(d)
He
5.
(d)
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 4 |
6.
(a)
\(\triangle G^o =- RT \ In \ K_p\)
7.
(b)
2-மெத்தில்-2-புரப்பனால்
8.
(a)
62.22 Kg mol–1
9.
(a)
சமநிலையில் உள்ள ஒரு அமைப் பிற்கு Qவின் மதிப்பு எப்போதும் சமநிலை மாறிலியை விடகுறைவாக இருக்கும்.
10.
(d)
BF3
11.
(a)
சூப்பர் ஆக்சைடு மற்றும் பாரா காந்தத் தன்மை கொண்டது
12.
(a)
102 g
13.
(c)
30
14.
(c)
1p +2n
15.
(b)
AB2
16.
sp2
17.
1. ஒரு கரைசல் என்பது அணுக்கள், அயனிகள் அல்லது மூலக்கூறுகளை கொண்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களின் ஒரு படித்தான கலவை ஆகும்.
2. மிக அதிக அளவில் காணப்டும் சேர்மமானது கரைப்பான் என்றழைக்கப்படுகிறது. மற்றவை கரைபொருளாகும்.
எகா:
1. சிறிதளவு NaCl ஐ நீரில் கரைக்கும்போது ஒரு படித்தான கரைசல் கிடைக்கிறது. இதில்
2. NaCl குறைந்த அளவில் உள்ளதால் இது கரைபொருள்.
3. நீரானது அதிகளவில் உள்ளதால் இது கரைப்பான்.
18.
ஒரு படித்தான சமநிலைக்கு
19.
1. தற்போதுள்ள நவீன ஆவர்த்தன அட்டவணையினை ஒத்த ஒரு தனிமை வரிசை அட்டவணை 1868 - ல் லோதர் மேயர் உருவாக்கினார்.
2. இயற்பண்புகளான அணு பருமன், உருகுநிலை மற்றும் கொதிநிலை போன்றவற்றை, அணுக்களின் அணுநிறைக்கு எதிராக வரைபடத்தில் குறித்த பொது, அப்பண்புகளில் ஆவர்த்தன தன்மை காணப்படுவதை லோதர் மேயர் கண்டறிந்தார்.
20.
இயல்பு வாயுக்கள், நல்லியல்புத் தன்மையிலிருந்து விலகலடைதலை PV மற்றும் nRT க்கு இடையேயான விகிதத்தின் அடிப்படையில்,அளவிட இயலும்.இக்காரணி அமுக்கத்திறன் காரணி எனப்படுகிறது.
21.
i.சிறிய உருவளவு மற்றும் அதிக முனிவுறுத்தும் திறன்
ii.அதிக எலக்ட்ரான் கவர் தன்மை மற்றும் அயனியாக்கும் ஆற்றல்
iii.இணை திற கூட்டில் காலியான d-ஆர்பிட்டால் காணப்படுவதில்லை.
22.
H2SO4 ன் கரத்துவம் = 2 eq mol-1
H2SO4 ன் மோலார் நிறை
= (2x 1) + (1 x 32) + (4 x 16)
98 g mol-1
H2SO4 ன் சமான நிறை =\(\frac{98}{2}\)
=49 g eq-1
23.
கரிமச் சேர்மத்தின் எடை = 0.35
நைட்ரஜனின் கன அளவு = 20 ml
= 20. 7 x 10-3 L
வெப்ப நிலை = 1500C
= 150 + 273 = 423 k
நைட்ரஜனின் அழுத்தம் = 760 mm Hg
நிர்ம அழுத்தம் = 12 mm Hg
உலர் நைட்ரஜனின் அழுத்தம் = 760 - 12
\(\frac { { P }_{ 1 }{ V }_{ 1 } }{ { T }_{ 1 } } =\frac { { P }_{ 0 }{ v }_{ 0 } }{ T_{ 0 } } \)
\({ V }_{ 0 }=\frac { 748\times 20.7\times { 10 }^{ -3 } }{ 423 } \times \frac { 273 }{ 760 } \)
= 19.37 x 10-3
நைட்ரஜனின் சதவீதம் = \(\left( \frac { 28 }{ 22.4 } \times \frac { { v }_{ 0 } }{ w } \right) \times 100\)
= \(\frac { 28 }{ 22.4 } \times \frac { 19.37\times { 10 }^{ -3 } }{ 0.35 } \times 100\)
= 69.18%
24.
1. எந்த நிலையிலும் பனிக்கட்டியானது நீரில் மூழ்குவதில்லை. ஆனால் 0°c உள்ள பனிக்கட்டியை 0°c உள்ள திரவ நீரில் வைக்கும் போது சமநிலையை அடைகிறது.
2. எனவே, உருகுதல் அல்லது உறைதல் நிகழ்வு ஏற்படுகிறது.
3. இதே நிலையில் உள்ள பனிக்கட்டியை 0°c உள்ள கன நீரில் (D2O) வைக்கும் போது மூழ்குகிறது.
25.
இங்கு,
ΔU =nCv (T2-T1)
ΔH =nCp (T2-T1)
மேலும்,
n=\(\frac{128}{32}\)
n=4 மோல்கள்
T2 =1000C+273 =373 K
T1 =00C+273 =273 K
ΔU =nCv (T2-T1)
=4 x 21 (373-273)
=8400 J
ΔU =8.4 KJ
ΔH =nCp (T2-T1)
=4 x 29(373-273)
=11600 J
ΔH =11.6 KJ
26.
1. ஒத்த பண்புகளை உடைய தனிமங்கள் வெவ்வேறு தொகுதிகளிலும், வெவ்வேறு பண்புகளை உடைய தனிமங்கள் ஒரே தொகுதியிலும் வைக்கப்பட்டிருந்தன.
2. இதைப் போலவே ஆவர்த்தன விதிக்கு முரணாக அதிக அணு நிறையுள்ள தனிமமானது குறைவான அணு நிறையுள்ள திமத்திற்கு முன்னதாகவே வைக்கப்பட்டிருந்தது.
எ.கா.
3. டெலூரியம் (127.6) ஆறாவது (VI) தொகுதியிலும், அயோடின் (127) ஏழாவது (VII) தொகுதியிலும் வைக்கப்பட்டிருந்தன.
4. 58.7Ni28 -க்கு முன்னதாக 59Co27 வைக்கப்பட்டிருந்தது.
27.
(i) நீர் (H2O)
2(+1)+x =0
+2+x=0
x=-2
(ii) ஹைட்ரஜன் பெராக்சைடு (H2O2)
2(+1)+2x =0
+2+2x =0
2x=-2
x=-2/2
x=-1
(iii) KO2
+1+2x = 0
2x=-1
x=-1/2
(iv) OF2
x+2(-1) =0
x-2=0
x=+2
28.
கொடுக்கப்பட்டவை
[NH3] = 1.8 x 10-2 M
[N2] = 1.2 x 10-2 M
[H2] = 3 x 10-2 M
Kc = ?
தீர்வு:
N2(g) + 3H2(g) \(\rightleftharpoons \) 2NH3(g)
\(K_c={[NH_3]^2\over[N_2][H_2]^3}={1.8\times 10^{-2}\times 1.8\times 10^{-2}\over 1.2\times 10^{-2}\times 3\times 10^{-2}\times 3\times 10^{-2}\times 3\times 10^{-2}}\)
= 1 x 103l2mol-2
29.
i.கார உலோகங்கள் அதிக வினைதிறனைக் கொண்டுள்ளன.
ii.இந்த வினையின் Li லிருந்து Cs வரை அதிகரிக்கிறது.
iii.தொகுதியில் மேலிருந்து கீழாக அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
iv.அனைத்து கார உலோகங்களும்,அதிக எலக்ட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமங்களான ஆக்ஸிஜன் மற்றும் ஹேலஜன்களுடன் மிக அதிக வீரியத்துடன் வினைபுரிகின்றன.
30.
T1 = 150 C + 273 T2 = 38 + 273
T1 = 288 K T2 = 311 K
V1 = 2.58 dm3 V2 = ?
(P = 1 atm மாறிலி)
\({V_1\over T_1}={V_2\over T_2}\)
\(V_2=\left(V_1\over T_1\right)\times T_2\)

V2 = 2.78 dm3 அதாவது கனஅளவு 2.58 dm3 லிருந்து 2.78 dm3 ஆக அதிகரிக்கிறது.
31.
1. எர்வின் ஷ்ரோடிங்கர் எலக்ட்ரானின் அலைப்பண்பினை, ஒரு வகைக்கெழுச் சமன்பாட்டின் அடிப்படையில் குறிப்பிட்டார்.
2. எலக்ட்ரான் இயங்கக்கூடிய விசையின் புலத்தினை பொறுத்து புறவெளியில் அலைச் சார்பில் ஏற்படும் மாறுபாட்டினை இச்சமன்பாடு தீர்மானிக்கிறது.
3. காலத்தினை சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டினை பின்வருமாறு குறிப்பிடலாம்.
\(\widehat { H } \psi =E\psi \)...(1)
இங்கு,
\(\widehat { H } \)=ஹாமில்டோனியன் செயலி
\(\psi \)=அலைச் சார்பு. இது துகளின் நிலை அச்சுகளின் சார்பாகும். இது \(\psi \left( x,y,z \right) \) என குறிப்பிடப்படுகிறது.
\(\widehat { H } =\left[ \frac { -{ h }^{ 2 } }{ 8{ \pi }^{ 2 }m } \left( \frac { { \partial }^{ 2 } }{ \partial { x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { z }^{ 2 } } \right) +V\psi \right] \)...(2)
சமன்பாடு (2) ஐ (1) ல் பிரிதியிட,
\(\left[ \frac { -{ h }^{ 2 } }{ 8{ \pi }^{ 2 }m } \left( \frac { { \partial }^{ 2 } }{ \partial { x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 } }{ \partial { z }^{ 2 } } \right) +V\psi \right] =E\psi \)...(3)
சமன்பாடு (3) ஐ \(-\frac { 8{ \pi }^{ 2 }m }{ { h }^{ 2 } } \) ஆல் பெருக்கி, மாற்றியமைக்க.
\(\frac { { \partial }^{ 2 }\psi }{ \partial { x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\psi }{ \partial { y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\psi }{ \partial { z }^{ 2 } } +\frac { 8{ \pi }^{ 2 }m }{ { h }^{ 2 } } \left( E-V \right) \psi =0\)...(4)
4. மேற்கண்ட ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாட்டில், காலம் (t) ஒரு சார்பாக இடம் பெறவில்லை என்பதால் இச்சமன்பாடு காலத்தைப் பொறுத்து அமையாத ஷ்ரோடிங்கரின் அலைச் சமன்பாடு என அழைக்கப்படுகிறது.
5. மொத்த ஆற்றலின் (E) குறிப்பிட்ட சில மதிப்புகளுக்கு மட்டும் இச்சமன்பாட்டிற்கு தீர்வுகாண இயலும்.
32.
1. ஹைட்ரஜன் பெராக்சைடு, ஆக்ஸிஜனேற்றி மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கி ஆகிய இரண்டு வினைபொருட்களாகவும் செயல்படும் தன்மையுடையது.
2. வழக்கமாக ஆக்ஸிஜன் ஒடுக்க வினைகள் கார ஊடகத்திலும் நிகழ்த்தப்படுகின்றன.
ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு:
அமில ஊடகத்தில்,
H2O2 + 2H+ + 2e- \(\rightarrow\) 2H2 O (E° = + 1.77v)
எடுத்துக்காட்டு:
2FeSO4 + H2SO4 + H2O2 \(\rightarrow\) Fe2(SO4)3 + 2H2O
ஒடுக்கியாக செயல்படுவதற்கு எடுத்துக்காட்டு:
கார ஊடகத்தில்,
\({ HO }_{ 2 }^{ - }\) + OH- \(\rightarrow\) O2 + H2 O + 2e- (E° = +0.08v)
எடுத்துக்காட்டு:
2KMnO4(aq) + 3H2O2(aq) \(\rightarrow\) 2MnO2 + 2KOH + 2H2O + 3O2(g)
33.
(i) அணுவில் எலக்ட்ரான்கள் நிரப்பப்பட்டுள்ள விதம் அணுவின் எலட்ரான் அமைப்பு எனபப்டும்.
(ii) அணுவின் வெளிக்கூட்டில் காணப்படும் எலட்ரான்கள் இணைதிற எலட்ரான்கள் எனப்படுகின்றன.
(iii) இந்த இணைதிற எலட்ரான்களில் இலகுவாக பிணைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானை நீக்க தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் அயனியாக்கும்.
(iv) எலக்ட்ரான் அமைப்பின் அடிப்படையில் அயனியாக்கும் ஆற்றலை நோக்கினால் சரிபாதியளவு மற்றும் முழுவதும் நிரப்பப்பட்ட எலட்ரான் அமைப்பு அதிக அயனியாக்கும் ஆற்றலையும், பகுதியளவு நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பு குறைந்த அயனியாக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளது.
(v) இதேபோல் இணைதிறன் கூட்டில் ஒரு எலக்ட்ரானை சேர்த்து அதன் எதிர் அயனியை உருவாக்கும்போத வெளிப்படும் ஆற்றல் எலக்ட்ரான் நாட்டம் எனப்படுகிறது.
(vi) சரிபாதியளவு நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பில் மேலும் ஒரு எலக்ட்ரான் அமைப்பு இழக்கப்படும் நிலை ஏற்படும்.
(vii) மேலும் முழுவதும் நிரப்பப்பட்ட நிலையான எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ளவற்றுடன் கூடுதலாக ஓர் எலக்ட்ரானை சேர்த்தல் சாதகமானதல்ல.
34.
1. கார உலோகங்களை அதிகளவு காற்றில் எரிக்கும் போது M2O என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட சாதாரண ஆக்சைடுகளை உருவாக்குகின்றன.
M2O+H2O ⟶ 2MOH
2. Li ஐ தவிர மற்ற கார உலோகங்களை அதிகளவு காற்றில் எரிக்கும்போது சாதாரண ஆக்சைடுகளுடன் சேர்த்து பெராக்சைடுகளையும் உருவாக்குகின்றன.
3. இந்த பெராக்சைடுகள் நீருடன் வினைபுரியும் போது ஹைட்ராக்சைடுகள் மற்றும் H2O2 ஐ உருவாக்குகின்றன.
M2O2+2H2O ⟶ 2MOH+H2O2
4. Li, Na தவிர மற்ற கார உலோகங்கள் சூப்பர் ஆக்சைடுகளையும் உருவாக்குகின்றன.
5. இந்த சூப்பர் ஆக்சைடுகளும் நீருடன் வினைபுரியும் போது காரத்தன்மை கொண்ட ஹைட்ராக்சைடுகளை உருவாக்குகின்றன.
2MO2+2H2O ⟶ 2MOH+H2O2+O2
(M=K, Rb, Cs)
35.
36.
1. மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையின்படி N2-ன் பிணைப்புத்தரம் மூன்று N2+ ன் பிணைப்புத்தரம்.
2. இக்கொள்கையின்படி அதிக பிணைப்புத்தரம் உடையவை குறைந்த நீளத்தினைப் பெற்றிருக்கும்.
3. எனவே, N2+ -ன் பிணைப்பு நீளம் N2 ன் பிணைப்பு நீளத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
மேலும்,
4. NO+ ஆனது O π* எதிர்பிணைப்பு எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது.
5. சூடீ அனைத்து 1 π* எதிர் பிணைப்பு எலக்ட்ரானைப் பெற்றுள்ளது.
3. இதில், N-O பிணைப்பு ஆனது, எதிர்பிணைப்பு எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வலிமையற்றதாகிறது.
4. இதனால் NO+ ன் பிணைப்பு நீளமானது NO வை விடக் குறைவாக உள்ளது.
37.
நிலையை அளவிடுவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை
=Δx
=\(\frac { 0.5% }{ 100% } \) x 0.529 Å
=\(\frac { 0.5 }{ 100 } \) x 0.529 x 10-18 m
Δx=0.2645 x 10-13 m
ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றத் தன்மை கோட்பாட்டின்படி
Δx.Δp ≥ \(\frac { h }{ 4\pi } \)
Δx(m.Δv) ≥ \(\frac { h }{ 4\pi } \)
Δv ≥ \(\frac { h }{ 4\pi .m.\triangle x } \) ≥ \(\frac { 6.626\times 10^{ -34 }kg{ m }^{ 2 }{ s }^{ -1 } }{ 4\times 3.14\times 9.11\times { 10 }^{ -31 }kg\times 2.645\times 10^{ -13 }m } \)
Δv ≥ 2.189 x 108 ms-1.
38.
(i) பிஷர் அமைப்பு வாய்ப்பாடு:
1. ஒரு முப்பரிமாண வடிவமைப்பினை இரு பரிமாணத்தில் இம்முறை குறித்துக்காட்டுகிறது.
2.இம்முறையில் சீர்மையற்ற கார்பன் அணுக்கள் தாளின் தளத்தில் குறிக்கப்படுகின்றன.
3. கிடைமட்ட கொட்டினால் குறிக்கப்படும் பதிலிகள் உற்று நோக்குபவை நோக்கி அமையும்.
4.செங்குத்துக் கோட்டினால் குறிக்கப்படும் பதிலிகள் உற்று நோக்குபவரிடமிருந்து விலகி அமைகின்றன. டார்டாரிக் அமிலத்தின் பிஷர் அமைப்பு வாய்ப்பாடு பின்வருமாறு:

(ii) சாஹார்ஸ் அமைப்பு வாய்ப்பாடு :
1. இம்முறையில் இரு கார்பன் அணுக்களுக்கிடையே பிணைப்பானது முலை விட்டவாக்கில் சற்றே நீட்டமாக வரையப்படுகின்றது.
2. கீழ் இடது புறம் உள்ள கார்பன் முன்னோக்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
3.மேலும் மேல் வலது புற கார்பன் பின்னோக்கி இருப்பதாகக் கருதப்படுகிறது.
4. இரு அடுத்தடுத்த அணுக்களுக்கு இடையே உள்ள தொகுதிகளின் புறவெளி அமைவிட தொடர்பை பிஷர் அமைப்பு வாய்ப்பாடு விளக்க இயலவில்லை.
5.சாஹார்ஸ் அமைப்பு தொகுதிகளுக்கு இடையேயான அமைவிடம் பற்றிய அறிவைத் தருகிறது.

(iii) நீயூமன் அமைப்பு வாய்ப்பாடு :
1.இம்முறையில் மூலக்கூறுகள் கார்பன்-கார்பன் \(\sigma \) பிணைப்பு அச்சின் வழியே நோக்கப்படுகிறது.
2.சிக்மா பிணைப்பை உருவாக்கும் இரு கார்பன்கள் இரு வட்டங்களால் குறிப்பிடப்படுகின்றன.
3. ஒன்று மற்றதன் பின்னால் அமைவதால் முன்புறமுள்ள கார்பன் மட்டுமே பார்க்க இயலும்.
4.கண்களுக்கு அருகில் உள்ள கார்பன் ஒரு புள்ளியாகவும், தொலைவில் உள்ள கார்பன் வட்டமாகவும் குறிக்கப்படுகின்றது.
5.எனவே முன்னால் உள்ள கார்பனின் C-H பிணைப்புகள் வட்டத்தின் மையப்புள்ளியிலிருந்து அதே நேரத்தில் பின்னால் உள்ள கார்பனின் C-H பிணைப்புகள் வட்டத்தின் சுற்றளவிலிருந்தும் குறித்துக்காட்டப்படுகின்றன.
6.இவற்றிக்குக்கிடையேயான கோணமதிப்பு 120o ஆகும்.

39.
| \(\triangle H_r\) | \(\triangle S_r\) | \(\triangle G_r=\triangle H_r-T\triangle S_r\) | விளக்கம் | விளக்கம் |
| - | + | -(at all T)அனைத்து வெப்பநிலைகளிலும் | அனைத்து வெப்பநிலைகளிலும் தன்னிசையானது | \(2O_3(g)\rightarrow 3O_2(g)\) |
| - | - | -(at low T)குறைந்த வெப்பநிலையில் | குறைந்த வெப்பநிலையில் தன்னிசையானது | வாயுக்கள் பரப்பு கவரப்படுத்தல் |
| +(at highT)உயர் வெப்பநிலையில் | உயர் வெப்பநிலையில் தன்னிச்சையற்றது | |||
| + | + | -(at low T)குறைந்த வெப்பநிலையில் | குறைந்த வெப்பநிலையில் தன்னிச்சையற்றது | ஒரு திண்மம் உருகுதல் |
| -(athighT)உயர் வெப்பநிலையில் | உயர் வெப்பநிலையில் தன்னிசையானது | |||
| + | - | +(at all T)அனைத்து வெப்பநிலைகளிலும் | அனைத்து வெப்பநிலைகளிலும் தன்னிச்சையற்றது | \(2H_2O(g)+O_2(g)\rightarrow 2H_2O_2(l)\) |
இந்த அட்டவணையானது\(\triangle H\) மற்றும் \(\triangle S\) ஆகியவை அனைத்து வெப்ப நிலைகளிலும், மேற் குறிப்பிட்டுள்ளவாறு இருப்பதாக கருத்திற்கு கொண்டுள்ளது. அவ்வாறாகவே இருக்க வேண்டும் என அவசியமில்லை.ஒரு வேதி வினையின் தன்னிச்சைதன்மையானது, மேலே குறிப்பிட்டுள்ளவாறு வினை நிகழ்வதற்கான வாய்ப்பினை மட்டும் தருகிறது. இத்தகைய செயல்முறைகளின் வேகமானது வெப்ப இயக்கவியல் கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட, வினை வேகவியல் வெப்ப இயக்கவியல் கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட, வினை வேகவியல் காரணிகளால் (Kinetic factors)தீர்மானிக்கப்படுகிறது.
40.
ஹைட்ரஜன் பிணைப்பு:
1. வேதியியல் மற்றும் உயிரியல் நிகழ்வுகளில் இயற்க்கையில் நிகழும் ஒரு முக்கியமான நிகழ்வு ஹைட்ரஜன் பிணைப்பாகும்.
2. DNA மற்றும் புரதங்களின் வடிவமைப்பில், ஹைட்ரஜன் பிணைப்பு மிக முக்கிய பாங்கு வகிக்கிறது.
3. ஒரு ஹைட்ரஜன் அணுவானது (H), அதிக எலக்ட்ரான் கவர்தன்மை உடைய புளூரின் (F) அல்லது ஆக்ஸிஜன் (O) அல்லது நைட்ரஜன் (N) போன்ற அணுக்கள் ஒன்றுடன் பிணைக்கப்பட்டிருக்கும் போது, அப்பிணைப்பு முனைவுறு பிணைப்பாகிறது.
4. இவ்விளைவின் காரணமாக முனைவுற்ற ஹைட்ரஜன் அணுவானது அதன் சூழலில் உள்ள மற்றொரு எலக்ட்ரான் கவர்தன்மை அதிகமுடைய அணுவுடன் ஒரு வலிமை குறைந்த நிலை மின்னியில் கவர்ச்சி விசையை ஏற்படுத்தும் இயல்பினைப் பெற்றுள்ளது.
5. இக்கவர்ச்சி விசையே ஹைட்ரஜன் பிணைப்பு (20-50 KJ mol-1) என்று அழைக்கப்படுகிறது. இப்பிணைப்பு விடுபட்ட கோடுகளால் (... ...) குறிக்கப்படுகிறது.
6. இப்பிணைப்பு சகப்பிணைப்பை விட வலிமை குறைவானது (>100 KJ mol-1) ஆனால் வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசையைவிட வலிமையானது (<20 KJ mol-1) ஹைட்ரஜன் பிணைப்பானது. ஆவி அழுத்தம் (H2O மற்றும் H2 S) கொதிநிலை, திரவங்கள் ஒன்றோடு ஒன்று கலக்கும் தன்மை (H2 O மற்றும் C2H5OH ). பரப்பு இழுவிசை, அடர்த்தி, பாகுநிலைத்தன்மை. ஆவியாதல் மற்றும் உருகுதலின் வெப்பம் போன்ற பல்வேறு இயற்பண்புகளில் முக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.
மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு:
1. மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பானது ஒரு தனித்த மூலக்கூறுக்கு உள்ளாகவே நிகழ்கிறது.

மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பு:
1. மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன்பிணைப்பானது இரண்டு வேறுபட்ட மூலக்கூறுகளுக்கிடையே நிகழ்கிறது.
2. ஹைட்ரஜன் பிணைப்பு இடைவினையை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக ஹைட்ரஜன் வழங்கி மற்றும் ஹைட்ரஜன் ஏறபியினை தகுந்த இடத்தில் பெற்றுள்ள ஒரே மாதிரியான மூலக்கூறுகள் அல்லது வெவ்வேறு மூலக்கூறுகளுக்கிடையே இத்தகைய ஹைட்ரஜன் பிணைப்பு உருவாகிறது.
3. எடுத்துக்காட்டாக: மூலக்கூறுகளுக்கு இடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பானது, அம்மோனியா மூலக்கூறுகளுக்கிடையே நிகழலாம். அல்லது நீர் மூலக் கூறுகளுக்கிடையேயோ அல்லது அம்மோனியா மற்றும் நீர் மூலக்கூறுகளுக்கிடையேயோ உருவாகலாம்.
41.
PCO2 = 1.017 x 10-3 atm T = 5000C
Kp = PCO2
\({ K }_{ { p }_{ 1 } }\) = 1.017 x 10-3 T = 500 + 273 = 773 K
\({ K }_{ { p }_{ 2 } }\) = ? T = 600 + 273 = 873 K
\(\triangle\)H0 = 181 KJ mol-1
\(log\left( \frac { { K }_{ { P }_{ 2 } } }{ { K }_{ { P }_{ 1 } } } \right) =\frac { \triangle { H }^{ 0 } }{ 2.303R } \left( \frac { { T }_{ 2 }-{ T }_{ 1 } }{ { T }_{ 1 }{ T }_{ 2 } } \right) \)
\(log\left( \frac { { K }_{ { P }_{ 2 } } }{ 1.017\times { 10 }^{ -3 } } \right) =\frac { 181\times { 10 }^{ 3 } }{ 2.303\times 8.314 } \left( \frac { 873-773 }{ 873\times 773 } \right) \)
\(log\left( \frac { { K }_{ { P }_{ 2 } } }{ 1.017\times { 10 }^{ -3 } } \right) =\frac { 181\times { 10 }^{ 3 }\times 100 }{ 2.303\times 8.314\times 873\times 773 } \)
\(\frac { { K }_{ { P }_{ 2 } } }{ 1.017\times { 10 }^{ -3 } } \) = antilog of (1.40)
\(\frac { { K }_{ { P }_{ 2 } } }{ 1.017\times { 10 }^{ -3 } } \) = 25.12
\({ K }_{ { p }_{ 2 } }\) = 25.12 x 1.017 x 10-3
\({ K }_{ { p }_{ 1 } }\) = 25.54 x 10-3
42.
mO2 = 52.5 g PO2 = ?
mCO2 = 65.1 g PCO2 = ?
T = 300 K P = 9.21 atm
PO2 = XO2 x மொத்த அழுத்தம்
\(X_{O_2}=\frac{O_2}{n_{O_2}+n_{CO_2}}\)

=\(\frac{52.5g}{32gmol^{-1}}\)=1.64 mol

=1.48 mol
PO2=XO2 x மொத்த அழுத்தம்
=0.53x9.21 atm=4.88 atm
PCO2=XCO2 x மொத்த அழுத்தம்
=0.47x9.21 atm=4.33 atm
43.
(i) ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது உட்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
(ii) இதன் காரணமாக உட்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களுக்கு இணைதிற எலக்ட்ரான்களுக்கும் இடையேயான விலக்கு விசையும் அதிகரிக்கின்றது.
(iii) அதாவது உள்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் மறைத்தல் விளைவு அதிகரிப்பதனால், அணுக்கருவினால் இணைதிற எலக்ட்ரான்கள் மீது செலுத்தப்படும் கவர்ச்சி விசை குறைகிறது.
(iii) இவ்விளைவையே திரைமறைப்பு விளைவு என்கிறோம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards