11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/05/2020
11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி I (11th Standard Chemistry Model Question Paper Part I)
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கூற்று (A): நீராவி மாற்றியமைத்தல் செயல்முறை மூலம் தொழிற்சாலையில் அதிக அளவு H2 வாயுவை ஹைட்ரோ கார்பனிலிருந்து பெறலாம்.
காரணம் (R): மீத்தேனிலிருந்து H2 வாயு உருவாக்கும் முறையானது நீராவி மாற்றியமைத்தல் செயல்முறை எனப்படுகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம் அல்ல
(A) சரி, (R) தவறு
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
2.
பின்வருவனவற்றை பொருத்துக.
| சேர்மத்தின் வகை | வினைசெயல் தொகுதி | ||
| A | சயனேட் | 1 | -OCN |
| B | ஐசோ சயனேட் | 2 | -NCO |
| C | தயோ சயனேட் | 3 | -SCN |
| D | ஐசோ தயோ சயனேட் | 4 | -NCS |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 1 | 3 | 4 |
| A | B | C | D |
| 1 | 4 | 2 | 3 |
| A | B | C | D |
| 4 | 1 | 2 | 3 |
3.
பின்வருவனவற்றை பொருத்துக.
| பிணைப்பு வகை | பிணைப்பு நீளம் Å | ||
| A | C-H | 1 | 1.09 |
| B | C-C | 2 | 1.54 |
| C | C-N | 3 | 1.47 |
| D | C-O | 36 | 1.43 |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 1 | 4 |
| A | B | C | D |
| 3 | 2 | 1 | 4 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
4.
விரிவடைதல் குணகத்தின் மதிப்பு தோராயமாக ________ க்கு சமம்.
1/273
1/373
1/473
1/173
5.
குடிநீரில் உள்ள லெட் மாசுக்களின் அளவு எவ்வளவு இருப்பின் அது கல்லீரலை பாதிக்கிறது?
500 ppm க்கு மேல்
500 ppm க்கு மேல்
45 ppm க்கு மேல்
450 ppm க்கு மேல்
6.
'q' அளவு வெப்பத்தை உறிஞ்சி 'W' அளவு வேலையைச் செய்தால் அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம்
H
P\(\triangle\)V
V
E
7.
நீரின் உறை நிலைத்தாழ்வு மாறிலி மதிப்பு 1.86 K Kgmol-1. 45 கிராம் நீரில், 5g Na2SO4 ஐ கரைக்கும்போது, உறைநிலையில் ஏற்படும் தாழ்வு 3.64oC. Na2SO4 இன் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு
2.5
2.63
3.64
5.50
8.
பின்வரும் சேர்மங்களுள் எச்சேர்மமானது OH- அயனியாயால் கருக்கவர்பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படும் போது சுழிமாய்க் கலவையைத் தரும்,
i) \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ CH } -{ CH }_{ 2 }Br\)

(i)
(ii) and (iii)
(iii)
(i) and (ii)
9.
Fe (OH)3 (s) ⇌ Fe3+(aq) + 3OH–(aq), என்ற வினையில் OH- அயனியின் செறிவு ¼ மடங்காக குறைந்தால், Fe3+ன் சமநிலைச் செறிவானது
மாறாது
¼ மடங்காக அதுவும் குறையும்
4 மடங்காக அதிகரிக்கும்
64 மடங்காக அதிகரிக்கும்
10.
-I விளைவினை காட்டுவது
-Cl
-Br
both (a) and (b)
-CH3
11.
தவறான கூற்றைக் கண்டறியவும்
உலோக சோடியம் ,கரிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.
சோடியம் கார்பனேட் நீரில் கரையக்கூடியது, மேலும் இது கனிம பண்பறி பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.
சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க முடியும்
பொட்டாசியம் பைகார்பனேட் அமிலத் தன்மை உடைய உப்பு
12.
தனிமம் X ன் ஐசோடோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது. 200X=90%, 199X = 8 %, 202X = 2 % இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறை மதிப்பு
201 u
202 u
199 u
200 u
13.
காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாடானது
\(\hat { H } \)ψ = Eψ
\({ \nabla }^{ 2 }\Psi +\frac { 8{ \pi }^{ 2 }m }{ { h }^{ 2 } } (E+V)\Psi =0\)
\(\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial z }^{ 2 } } +\frac { 2m }{ { h }^{ 2 } } (E-V)\Psi =0\)
இவை அனைத்தும்
14.
ஆர்த்தோ நைட்ரோபீனால் மற்றும் பாரா நைட்ரோ பீனாலில் காணப்படும் H- பிணைப்புகள் முறையே,
மூலக்கூறுகளுக்கிடையேயான H- பிணைப்பு மற்றும் மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு
மூலக்கூறினுள் நிகழும் H-பிணைப்பு மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான H- பிணைப்பு
மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு
மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு மற்றும் H-பிணைப்பு இல்லை.
15.
Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg → Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்
+169 kcal mol-1
- 169 kcal mol-1
+ 527 kcal mol-1
- 527 kcal mol-1
16.
கார உலோக ஹாலைடுகள் அனைத்தும் அயனிப்படிகங்களாகும். எனினும் லித்தியம் அயோடைடு சகப்பிணைப்புப் பணப்பை காட்டுகிறது.
17.
(n-1) d2, ns2 (இங்கு n =5) என்ற எலக்ட்ரான் அமைப்பினை நிறைவு செய்யும் தனிமம் தனிமைவரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினைக் கண்டறிக.
18.
KOH கிராம் சமான நிறையை கணக்கிடுக.
19.
N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.
20.
ஒரு சுற்றுச் செயல் முறையில், ஒரு மோல் நல்லியல்பு வாயு போடப்பட்ட வரிசையின் மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. செயல்முறையின் பெயர்\(A \rightarrow B\), \(B \rightarrow C\)மற்றும் \(C \rightarrow A\)
21.
மோட்டார் வாகன ஓட்டி பிரேக்கினை உபயோகிக்கும் போது பயணிகள் முன்பக்கமாக விழுவார்கள். ஆனால் ஹீலியம் பலூன் வண்டியின் பின்பக்கமாகத் தள்ளப்படும்.ஏன்?
22.
பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு
23.
NH3, H2O மற்றும் HF ஆகியவற்றை அவற்றின் ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக. தங்களது வரிசைப்படுத்தலுக்கான அடிப்படையினை விளக்குக.
24.
இரண்டாம் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
25.
ஹைட்ரோ ஹேலஜன் நீக்கவினையை இவ்வாறும் அழைக்கப்படுகிறது?
26.
பல்வேறு மேலும் வினைகளைப் பற்றிய ஆய்வு முடிவுகளில் அடிப்படையில் நிறைத்தாக்க விதியினை உருவாக்கியவர்கள் யார்?
27.
வாயுக்களின் வேதித்தன்மை எத்தகையதாக இருப்பினும் அனைத்து வாயுக்களுக்கும் எந்நிலையில் பாயில் விதி பொருந்தும்?
28.
பெரிலியம் மற்றும் நைட்ரஜன் ஆகியவை ஏறத்தாழ பூஜ்ய எலக்ட்ரான் நாட்ட மதிப்பை பெற்றுள்ளன. ஏன்?
29.
டாபரீனர் வகைப்பாட்டின் குறைபாடுகள் யாவை?
30.
எதிர் சவ்வூடு பரவலின் பயன்கள் யாவை?
31.
கிராம் சமான நிறை வரையறு.
32.
2-பியூட்டீனை எடுத்துக்காட்டாக்க் கொண்டு வடிவ மாற்றியங்களை விளக்குக.
33.
NH3 ஆனது, 15ம் தொகுதியில் உள்ள பிற தனிமங்களின் ஹைட்ரைடுகளைக் காட்டிலும் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது – விளக்குக
34.
காரமண் உலோகங்களின் பின்வரும் வேதிப் பண்புகளைப் பற்றி எழுதுக.
(i) ஹாலஜன்களுடன் வினை
(ii) ஹைட்ரஜனுடன் வினை
35.
பென்சீனில் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை நடைபெறுகிறது. ஆனால் சேர்க்கை வினைகள் நடைப்பெறுகின்றன ஏன்?
36.
0.1688 g எடையுள்ள சேர்மத்தில் உள்ள நைட்ரஜனின் சதவீதத்தினை கணக்கிடுக. டூமாஸ் முறையில் பகுப்பிற்கு உட்படும்போது 140C 758 mm Hg ல் 31.7 ml ஈரமான நைட்ரஜனை தந்தது.
37.
வேதிப்பிணைப்பு பற்றிய கோசல் -லூயிசின் அணுகுமுறையை விவரி.
38.
1atm NO மற்றும் 1atm O2 ஐ தொடக்க செறிவுகளாகக் கொண்ட NOன் வளிமண்டல ஆக்சிஜனேற்ற வினை.
2NO(g) + O2(g) ⇌ 2NO2(g)
ஆய்ந்தறியப்படுகிறது. சமநிலையில், ஆக்சிஜனின் பகுதி அழுத்தம் 0.52atm எனில் இவ்வினைக்கான Kpன் மதிப்பைக் காண்க.
39.
தொழில் முறையில் ஹைட்ரஜன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
40.
ஆரப்பங்கீட்டு சார்பை தக்கச் சான்றுடன் விளக்குக.
41.
00C வெப்பநிலையில் 1 மோல்பனிக்கட்டி நீராக உருகும்போது நிகழும் என்ட்ரோபி மாற்றத்தை கணக்கிடுக. பனிக்கட்டியின் மோலார் உருகுதல் வெப்பமதிப்பு 6008 J mol-1
42.
பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது
ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது
இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது
43.
பாலிங் முறையினை பயன்படுத்தி பொட்டாசியம் குளோரைடு படிகத்தில் உள்ள K+ மற்றும் Cl– அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ள தரவு dk+ - cl- =3.14 Å
1.
(a)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம்
2.
(a)
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
3.
(a)
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
4.
(a)
1/273
5.
(a)
500 ppm க்கு மேல்
6.
(d)
E
7.
(a)
2.5
8.
(c)
(iii)
9.
(d)
64 மடங்காக அதிகரிக்கும்
10.
(c)
both (a) and (b)
11.
(c)
சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க முடியும்
12.
(d)
200 u
13.
(a)
\(\hat { H } \)ψ = Eψ
14.
(b)
மூலக்கூறினுள் நிகழும் H-பிணைப்பு மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான H- பிணைப்பு
15.
(c)
+ 527 kcal mol-1
16.
1. மிகச் சிறிய நேர்மின் எதிர்மின் அயனியை அதிக முனைவுறுத்தும் திறனைப் பெற்றுள்ளது.
2. கூடுதலாக அயோடைடு அயனி மிகப்பெரியதாக இருப்பதால் Li+ அயனியால் மிக அதிக அளவிற்கு முனைவுறுத்தப்பட முடியும்.
17.
1. எலக்ட்ரான் அமைப்பு: (n-1) d2, ns2
2. n=5 க்கு எலக்ட்ரான் அமைப்பு:
3. IUPAC தற்காலிக குறியீடு : 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 4d2 5s2
4. அணு எண் :40
5. அணு எண் : 40
6. இத்தனிமம் 4-ஆவது தொகுதி 5-வைத்து வரிசையில் (d-தொகுதி) உள்ள சிர்க்கோனியம் (zr) ஆகும்.
18.
KOH ன் அமிலத்துவம் =1 eq mol-1
KOH ன் மோலார் நிறை = (1 x 39) + (1 x 16) + (1 x 1)
=56 g mol-1
KOH கிராம் சமான நிறை =56 கி mol-1
________
1 eq mol-1
= 56 g eq-1
19.
\(Q={[NO_2]^2\over [N_2O_4]}={0.5\times 0.5\over 0.125}=2\)
Qன் மதிப்பானது KCன் மதிப்பினை விட அதிகம் எனவே Qன் மதிப்பு 0.21 ஆகும் வரை வினையானது பின்னோக்கிய திசையில், நிகழும்.
20.
\(A \rightarrow B\):வெப்பநிலை மாறா செயல் முறை
\(B \rightarrow C\):அழுத்தம் மாறா செயல் முறை
\(C \rightarrow A\):கன அளவு மாறா செயல் முறை
21.
1. மோட்டார் வாகன ஓட்டி பிரேக்கினை உபயோகிக்கும் போது பயணிகள் முன்பக்கமாக விழுவார்கள்.இது நியூட்டனின் முதல் விதிப்படி நடக்கிறது
2. பிரேக்கினை உபயோகிக்கும் போது அந்த குறிப்பட்ட வாகனமானது ஓய்வு நிலைக்கு வருகிறது.ஆனால் பயணிகள் தொடர்ந்து முன்னோக்கிய இயக்கத்தில் உள்ளனர்.எனவேதான் முன்பக்கமாக விழுகின்றனர்
3. ஹீலியம் பலூனின் இயக்கம் எதிர்திசையில் இருக்கும்.சுற்றியுள்ள காற்றின் அடர்த்தி வேறுபாடே இதற்குக் காரணம்
4. தீரரென காரை நிறுத்தும் போது காற்று முன்னோக்கி நகர்கிறது.இதன் விளைவு காரின் முன்புற அடர்த்தி பின்புறத்தைவிட அதிக அழுத்தத்தை முன் புற பலூனிற்கும் தரும்
5. எனவே பலூன் ஆனது குறைந்த அதிர்த்தியுடைய பின்பக்கமாக தள்ளப்படுகிறது/
22.
கொடுக்கப்பட்ட ஒரு ஆர்பிட்டாலில் அதிகபட்சமாக இரு எலக்ட்ரான்கள் மட்டுமே நிரப்ப முடியும். அவை இரண்டும் எதிரெதிர் சுழற்சியுடையவை.
23.
1. NH3, H2O, HF ஆகியவற்றை அவற்றின் ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையின் ஏறுவரிசை.
NH3
(i) சிறிய உருவளவையும்
(ii) அதிக எலக்ட்ரான் கவர் தன்மையையும் பெற்றிருந்தால் H பிணைப்பு உண்டாகும்.
3. N, F, O - ஐ ஒப்பிட கவர் தன்மை வரிசை
F > O > N|
4. எனவே HF அதிக ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையைப் பெற்றுள்ளது.
24.
(i) பெரிலியத்தைக் காட்டிலும் போரான் அதிகமான அணுக்கரு மின்சுமையினைப் பெற்றிருப்பதால் போரானின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு அதிகம் என எதிர்பார்த்தலுக்கு முரணாக பெரிலியம் அதிக அயனியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது.
(ii) நைட்ரஜன் அயனியாக்கும் ஆற்றல் (1402 Kmol-1) ஆக்ஸிஜனின் அயனியாக்கும் ஆற்றல் (1314 Kmol-1) மதிப்பைக் காட்டிலும் அதிகம்.
25.
β-நீக்கவினை
26.
மேக்மில்லன் குல்பெர்க் (ம) பீட்டர்வே.
27.
குறைந்த அழுத்தம் உள்ள நிலையில்
28.
1. Be - 1s2 2s2
2. N - 1s2 2s2 2p3
2. பெரிலியம் நைட்ரஜன் போன்ற தனிமங்களில் ஒரு எலக்ட்ரான் சேர்க்கப்படும் நிலையில் அவற்றின் அதிக நிலைப்புத்தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பு இழக்கப்படும் நிலை ஏற்படும். எனவே இத்தகைய தனிமங்கள் ஏறத்தாழ பூஜ்ஜிய எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளன.
29.
1. குறிப்பிட்ட சில தனிமங்களை மட்டுமே மும்மைத் தொகுதிகளாக வகைப்படுத்த முடிந்தது.
2. ஏறத்தாழ ஒத்த அணு நிறைகளைப் பெற்றுள்ள [Fe, Co, Ni] [Ru, Rh, Pd] [Os, Ir, Pt] போன்ற மும்மைத் தொகுதிகளுக்கு இவ்வகைப்பாட்டுக்குக் கொள்கையினைப் பயன்படுத்த இயலவில்லை.
30.
(i) கடல் நீரிலிருந்து உப்பை நீக்க
(ii) குடிநீரை சுத்திகரிக்க
31.
1.008g ஹைட்ரஜன் அல்லது 8g ஆக்ஸிஜன் அல்லது 35.5g குளோரின் இவற்றோடு சேரக்கூடிய அல்லது இவற்றை இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஒரு தனிமம் அல்லது சேர்மம் அயனியின் நிறையே, அதன் கிராம் சமான நிறை என வரையறுக்கப்படுகிறது.
32.
1) கார்பன் - கார்பன் இரட்டை பிணைப்பு அமைப்பினை சூழல் இயலாத் தன்மையினால் புறவெளியில் வெவ்வேறு வடிவமைப்புகளை பெற்றுள்ள புறவெளி மாற்றியங்கள் வடிவ மாற்றியங்கள் எனப்படுகின்றன.
2) கார்பன் - கார்பன் இரட்டை பிணைப்பின் வழியே சுழற்ச்சித் தடையின் காரணமாகவோ அல்லது வளையச் சேர்மங்களில் ஒன்றைப் பிணைப்பின் வழியே ஏற்படும் சுழற்ச்சித் தடையி னாலோ இவவகை மாற்றியங்கள் ஏற்படுகின்றபன.
3) ஆல்கீன் களில் , இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள கார்பன்கள் sp2 இனக்கலப்பாதலுக்கு உட்பட்டுள்ளன.
4) இந்த கார்பன் - கார்பன் இரட்டை பிணைப்பில் ஒரு \(\sigma \) பிணைப்பு மற்றும் ஒரு \(\pi \) பிணைப்பு காணப்படுகின்றது.
5) sp2 இனக்கலப்பு ஆர்பிட்டால்களின் நேர்கோட்டு மேற்பொருந்துதலால் \(\sigma \) பிணைப்பு உருவாகிறது. P - ஆர்பிட்டால்களின் பக்கவாட்டு மேற் பொருந்துதலால் பிணைப்பு உருவாகிறது பிணைப்பின் காரணமாக மூலக்கூறானது ஒரு நிலையில் உள்ளது.
6) C = C எனவே கார்பன் கார்பன் இரட்டைப் பிணைப்பிணைப் பொறுத்து சுழற்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. C - C இரட்டை பிணைப்பிணைப் பொறுத்து சுழற்சிக்கான தடையே ஆல்கீன்களின் வடிவ மாற்றியத்திற்கனா காரணமாகும்.


7) இவ்விரு சேர்மங்களும் வடிவமாற்றியங்கள் என அழைக்கப்டுகின்றன. இவை சிஸ் மற்றும் டிரான்ஸ் ஆகிய சொற்கூறுகளால் வேறுபடுத்தி அறியப்படுகின்றன.
8) இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள கார்பனுடன் இணைக்கப்பட்டுள்ள இரு தொகுதிகளும் ஓத்திருப்பின் அவை சிஸ் மாற்றியும் எனவும் இரு ஒத்தத் தொகுதிகளும் இரட்டை பிணைப்பின் எதிர் எதிர் பக்கிங்களில் காணப்படின் அம்மாற்றியங்கள் டிரான்ஸ் மாற்றியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
9) ஏதேனும் ஒரு மாற்றியத்தினை அதிக வெப்ப நிலைக்கு சூடுபடுத்துதல் அல்லது ஒளியை உட்கவரச் செய்வதன் மூலம் சிஸ் மாற்றியத்தினை , டிரான்ஸ் மாற்றியமாகவோ அல்லது டிரான்ஸ் மாற்றியத்தினை சிஸ் மாற்றியமாகவோ மாற்ற இயலும்.
10) வெப்பமானது \(\pi \) பிணைப்பை பிளவுறத் தேவையான ஆற்றலை தருவதால் (62 Kcal mol -1 ) அளவிலான ஆற்றல) பிணைப்பு பிளக்கப்படுகிறது.
11) இதன் காரணமாக பிணைப்பை சுற்றி சுழற்ச்சி ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் குளிர்விக்கும் பொது மிகவும் பிணைப்பு இரு வழிகளில் உருவாக வாய்ப்புள்ளதால் . சிஸ் மற்றும் டிரான்ஸ் 2- பியூட்டேன் ஆகியவற்றின் கலவை உருவாகின்றது.
33.
1. 15-ம் தொகுதியில் உள்ள பிற தனிமங்களின் ஹைட்ரைடுகளுடன் ஒப்பிட NH2 ஆனது அதிக கொதிநிலை மற்றும் உருகுநிலையைப் பெற்றுள்ளது.
2. இதற்கு காரணம் மூலக்கூறுக்கிடைப்பட்ட ஹைட்ராஜன் பிணைப்பு காணப்படுவதே ஆகும்.
34.
(i) ஹாலஜன்களுடன் வினை:
அதிக வெப்ப நிலையில், அனைத்து காரமண் உலோகங்களும், ஹாலஜன்களுடன் இணைந்து அவைகளின் ஹாலைடுகளை உருவாக்குகின்றன.
M+X2 ⟶ MX2
(M=Be, Mg, Ca, Sr, Ba, Ra)(X=F, Cl, Br, I)
(ii) ஹைட்ரஜனுடன் வினை:
1. பெரிலியத்தினைத் தவிர்த்து பிற தனிமங்கள் வெப்பப்படுத்தும் போது, ஹைட்ரஜனுடன் இணைந்து MH2 என்ற வாய்ப்பாடுடைய ஹைட்ராக்சைடுகளைத் தருகிறது.
2. BeCl2 மற்றும் LiAlH4 ஆகியவற்றை வினைப்படுத்துவதன் மூலம் BeH2 ஐத் தயாரிக்கலாம்.
2LeCl2+LiAlH4 ⟶ 2BeH2+LiCl+AlCl3
35.
1. பென்சீனின் வினைய அமைப்பின் காரணமாக அதில் உள்ள இரட்டை பிணைப்புகள் சுழலும் தன்மை உடையவை.
2. அவ்வாறு சுழலும் போது நேர் அயனி இடைநிலை உருவாகிறது. இதனால் கவர் பதிலீட்டு வினைகள் நடைபெறுகின்றன.
3. ஆனால், ஆல்கீன்களில் அவ்வாறு வினைய அமைப்பு இல்லாத காரணத்தால் சேர்க்கை வினைகள் நடைபெறுகின்றன.
36.
கரிமச் சேர்மத்தின் எடை =0.168 g
ஈரமான நைட்ரஜனின் கன அளவு (V1) =31.7 ML
=31.7 x 10-3 L
வெப்பநிலை (T1) =14° C
=14 + 273
T1 =287 K
ஈரமான நைட்ரஜனின் அழுத்தம் (P) =258 mm Hg
14°C ல் நீர்ம அழுத்தம் (P1) = 12 mm Hg
∴ உலர் நைட்ரஜனின் அழுத்தம் =(P-P1)
=758 - 12
=746 mm Hg
∴ \(\frac { { P }_{ 1 }{ V }_{ 1 } }{ { T }_{ 1 } } =\frac { { P }_{ 0 }{ V }_{ 0 } }{ { T }_{ 0 } } \)
∴ V0 =\(\frac { 746\times 31.7\times { 10 }^{ -3 } }{ 287 } \times \frac { 273 }{ 760 } \)
V0 =29.58 x 10-3 L
நைட்ரஜனின் சதவீதம் =\(\left( \frac { 28 }{ 22.4 } \times \frac { { V }_{ 0 } }{ W } \right) \)x 100
=\(\frac { 28 }{ 22.4 } \times \frac { 29.58\times { 10 }^{ -3 } }{ 0.1688 } \)x 100
=21.90%
37.
1. 1916-ல் வேதிப்பிணைப்பு பற்றிய தர்க்க ரீதியான அணுகுமுறை கோசல் மற்றும் லூயிஸ் ஆகிய அறிவியல் அறிஞர்களால் முன்மொழியப்பட்டது.
2. மந்த வாயுக்கள் பிற அணுக்களுடன் வினைபுரியாத அல்லது அரிதாக வினைபுரியும் தன்மையைப் பெற்று மந்தத் தன்மையுடன் இருப்பதன் அடிப்படையில் வேதிப்பிணைப்பு உருவாதலை இவ்வறிவியல் அறிஞர்கள் அணுகினார்கள்.
3. முழுவதுமாக நிரப்பப்பட்ட வெளிக்கூட்டு எலக்ட்ரான் அமைப்பினை மந்த வாயுக்கள் பெற்றிருப்பதால் அவைகள் அதிக நிலைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளன.
4. மந்த வாயுக்களைத் தவிர்த்த பிற தனிமங்கள் தங்கள் வெளிக்கூட்டில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களை இழத்தல். ஏற்றுக்கொள்ளுதல் அல்லது பங்கிடுதல் ஆகியவற்றின் மூலம் நிலைப்புத் தன்மையை பெற முயல்கின்றன.
எ.கா:
1. Na ஒரு எலக்ட்ரானை இழப்பதன் மூலம் Na+ அயனி உருவாகிறது. அது இழக்கும் எலக்ட்ரானை Cl ஏற்றுக்கொண்டு Cl- அயனி உருவாகிறது.
2. இதன் விளைவாக இரண்டு அணுக்களும் தங்களுக்கு அருகே உள்ள மந்த வாயுக்களின் நிலையான எலக்ட்ரான் அமைப்பினைப் பெறுகின்றன.
38.
39.
ஹைட்ரோ கார்பன்களை, நீராவியைக் கொண்டு மறு உருவாக்கம் செய்யும் முறையில், அதிக அளவில் ஹைட்ரஜனைத் தயாரிக்கலாம். இம்முறையில் மீத்தேனைப் போன்ற ஹைட்ரோ கார்பன்களை நீராவியுடன் கலந்து, 800-900°c வெப்பநிலையில், 35 atm அழுத்தத்தில் நிக்கல் வினை வேக மாற்றியின் மீது செலுத்தி ஹைட்ரஜன் பெறப்படுகிறது.
CH4 + H2O \(\rightarrow\) CO + 3H2
மற்றொரு முறையில், செஞ்சூட்டு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தப்பட்ட கல்கரியின் மீது நீராவியைச் செலுத்தி கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் பெறப்படுகின்றன. இம்முறையில் பெறப்படும் வாயுக்கள் அடங்கிய கலவை நீர் வாயு எனப்படுகிறது. இதனை தொகுப்பு வாயு எனவும் அழைக்கலாம். மெத்தனால் மற்றும் சில எளிய ஹைட்ரோகார்பன்களைப் போன்ற கரிமச்சேர்மங்களைத் தொகுப்பு முறையில் தயாரிக்க இவ்வாயுக்கலவை பயன்படுவதால் இதனை தொகுப்புவாயு என்று அழைக்கின்றோம்.

நீர் வாயுவில் உள்ள கார்பன் மோனாக்சைடை கார்பன்-டை-ஆக்சைடாக மாற்றுதல்:
நீர்வாயுக் கலவையுடன், அதிக அளவு நீராவியினைச் சேர்த்து 400°C வெப்பநிலையில், இரும்பு (iron) / தாமிரம் (copper) வினைவேக மாற்றியைக் கொண்டுள்ள மாற்று உலையின் (shift Converter) வழியாகச் செலுத்துவதன் மூலம் நீர்வாயுக் கலவையில் உள்ள கார்பன் மோனக்சைடு, கார்பன் டை ஆக்சைடாக மாற்றலாம்.
CO + H2O \(\rightarrow\) CO2 + H2
மேற்கண்டுள்ள முறையில் உருவான CO2 வாயுவானது. பொட்டாசியம் கார்பனேட் கரைசலால் உறிஞ்சப்படுகிறது.
CO2 + K2CO3 + H2O \(\rightarrow\) 2KHCO3
40.
ஆரப்பங்கீட்டு சார்பு:
1. அடி ஆற்றல் நிலையில் (ground state) உள்ள ஹைட்ரஜன் அணுவின் ஒற்றை எலக்ட்ரானைக் கருதுக.
2. இந்த எலக்ட்ரானுகான குவாண்டம் n =1 மற்றும் 1=0 அதாவது இந்த எலக்ட்ரான் 1s ஆர்பிட்டாலில் உள்ளது.
3. 1s ஆர்பிட்டாலுக்கான, R(r2) Vs r வரைபடம் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

4. மேற்கண்டுள்ள வரைபடத்திலிருந்து, எலக்ட்ரானுக்கும் அணுக்கருவிற்கும் இடையேயான தூரம் குறையும்போது, எலக்ட்ரானைக் காண்பதற்கான நிகழ்த்தகவும் அதிகரிக்கின்றது என அறிய முடிகிறது. r =0, எனும் போது R(r)2-ன் மதிப்பானது பெருமமாகிறது. அதாவது |ψ|2 -ன் அதிக பட்ச மதிப்பானது அணுக்கருவினுள் அமைகிறது. எனினும் அணுக்கருவினைச் சுற்றி கொடுக்கப்பட்ட கோளாகக் கூட்டில் எலக்ட்ரானைக் காண்பதற்கான நிகழ்தகவே முக்கியமானதாகும். r மற்றும் r +dr ஆகிய ஆரங்களுக்கிடையே இரு ஒரு மைய கோளங்களுக்கு இடைப்பட்ட கன அளவு (dV)-யைக் கருதுவோம்.

கோளத்தின் கன அளவு \(V=\frac{4}{3}\pi r^3\)
\(\frac{dV}{dr}=\frac{4}{3}\pi(3r^2)\)
dV=4πr2dr
ψ2dV=4πr2ψ2dr
r மதிப்பிற்கு எதிரான 4πr2ψ2-ன் வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. மேற்கண்டுள்ள வரைபடத்தின் மூலம் அணுக்கருவிலிருந்து 0.52\(\mathring {A}\) தொலைவில் அதிகபட்ச நிகழ்த்தகவு அமைந்துள்ளது என அறிய முடிகிறது. இத்தொலைவு போர் ஆரத்திற்குச் சமம்.
2. இத்தொலைவில் அணுக்கருவினை சுற்றி, எலக்ட்ரானைக் காண்பதற்கான அதிகபட்ச நிகழ்தகவு உள்ளதை இது குறிப்பிட்டாலும், இத்தொலைவினை தவிர்த்த பிற தொலைவுகளிலும் எலக்ட்ரானை காண்பதற்கான நிகழ்தகவு உண்டு.
3. ஹைட்ரஜன் அணுவில் 2s, 3s, 3p மற்றும் 3d ஆர்பிட்டால்களுக்கான ஆர பகிர்வு சார்பினை பின்வருமாறு வரை படத்தில் குறிப்பிடலாம்.

4. 2s ஆர்பிட்டாலுக்கு, அணுக்கருவிலிருந்து தொலைவு (r) அதிகரிக்கும்போது, நிகழ்தகவு அடர்த்தி முதலில் அதிகரித்து, ஒரு சிறிய பெரும மதிப்பை அடைகிறது. பின் பூஜ்ஜியத்திற்கு குறைகிறது. பின் மீண்டும் மற்றுமொரு பெரும மதிப்பினை அடைந்து பின் பூஜ்ய மதிப்பினையடைகிறது.
5. இவ்வாறு நிகழ்தகவு அடர்த்தி சார்பின் மதிப்பு எப்பகுதியில் பூஜ்யமாகக் குறைகிறதோ அப்பகுதி, கணு புறப்பரப்பு ஆர்பிட்டால் ஒரு கணுவையும், 3s ஆர்பிட்டால் இரு கணுக்களையும் கொண்டுள்ளது.
6. 3p மற்றும் 3d ஆர்பிட்டால்களுக்கான, 4πr2ψ2 ன் வரைபடமானது, இதனைப் போன்ற அமைப்பினையே பெற்றுள்ளது.
7. ஆனால் ஆர கணுக்களின் எண்ணிக்கை (n-1-1)க்குச் சமம். இங்கு 'n' என்பது முதன்மைக் குவாண்டம் எண்ணையும், l என்பது கோண உந்த குவாண்டம் எண்ணையும் குறிப்பிடுகின்றது.
41.
\(\triangle H\) உருகுதல் =6008 Jmol-1
Tf =00C=273K
\(H_2O(S)\xrightarrow{273k}{}H_2O(1)\)

\(\triangle S\) உருகுதல் = \(\frac{6008}{273}\)
\(\triangle S\) உருகுதல் =22.007JK-1mole-1
42.
43.
r(K+)+r(Cl-)=d(K+-Cl-) =3.14 Å .....(1)
(i) K+ மற்றும் Cl- அயனிகள் Ar(z=18) வகை எலக்ட்ரான் அமைப்பை கொண்டவை. ஏனவே அவற்றிக்கான நிகர அணுக்கரு மின்சுமை பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
K+ = (1s2) (2s22p6) (3s23p6)
உள்கூடு (n-1)வதுகூடு n-வதுகூடு
Zசெயலுறு (K+) = z-s
=19-[(0.35 x7) + (0.85 x 8) + (1 x 2)
=19-11.25
=7.25
Zசெயலுறு(Cl-)
=17-[(0.35 x 7) + (0.85 x 8) + (1 x 2)
=17-11.25
5.75

∴ r(K+) = 0.74 r(Cl-) .............(2)
சமன்பாடு (2) ஐ (1) ல் பிரதியிட
0.74 r(Cl-) + r(Cl-) =3.14 Å ......(3)
1.74 r(Cl-) =3.14 Å
r (Cl-) = \(\frac { 3.14\overset { 0 }{ A } }{ 1.74 } \)
r(Cl-) = 1.81 Å
சமன்பாடு (2) லிருந்து,
r(K+) = 0.74 r(Cl-)
=0.74 x 1.81 Å
r(K+) =1.33 Å
r(K+) = 1.33 Å
r(Cl-) =1.81 Å
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards