11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/05/2020
11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி II (11th Standard Chemistry Model Question Paper Part II)
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றை பொருத்துக.
| வாயு | விளைவு | ||
| A | சல்பர்டையாக்சைடு | 1 | கண் எரிச்சல் |
| B | நைட்ரஜன் ஆக்சைடு | 2 | துணி இழை பாதிப்பு |
| C | கார்பன் மோனாக்சைடு | 3 | சுயநினைவிழத்தல் |
| D | கார்பன் டையாக்சைடு | 4 | குமட்டல் |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 1 | 4 |
| A | B | C | D |
| 1 | 4 | 2 | 3 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
2.
தாவரம் மற்றும் பூக்களிலிருந்து பெறப்படும் அத்தியாவசிய எண்ணெய்களை பிரித்தெடுக்க பயன்படுவது
படிகமாக்குதல்
வாலை வடித்தல்
பின்ன வாலை வடித்தல்
நீராவி வாலை வடித்தல்
3.
கூற்று (A): இணையும் அணுக்களின் உருவளவு மற்றும் வைகளுக்கிடையேயான பிணைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றினைப் பொறுத்து பிணைப்பு நீளம் அமைகின்றது.
காரணம் (R): சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள இரு அணுக்களின் அணுக்கருக்களுக்கு இடைப்பட்ட தொலைவு பிணைப்பு நீளம் எனப்படுகிறது
இவற்றை விளக்க இயலும்
(A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்
(A) சரி, (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம் அல்ல
(A) சரி, (R) தவறு
(A) தவறு (R) தவறு
4.
700c ல் 6 dm3 கன அளவுடைய ஓரி எஃகு கலனில் உள்ள 2 மோல் சல்பர் ஹேக்ஸா புளுரைடின் அழுத்தத்தினை அவ்வாயுவினை நல்லியல்பு வாயுவாக கருதி கணக்கிட்டால், அதன் மதிப்பு
0.0821 atm
6.29 atm
9.39 atm
10.42 atm
5.
ஒரு அரோமேட்டிக் சேர்மத்தில் _________ உள்ளடங்கதா \(\pi \) எலக்ரான்கள் இருக்கும்.
4n + 2
4n + 1
4n
4n - 1
6.
ஒரு வினை தன்னிச்சையானதா இல்லையா என்பதை விளக்கும் வெப்ப இயக்கவியலின் விதி
முதல் விதி
இரண்டாம் விதி
மூன்றாம் விதி
பூஜ்ஜிய விதி
7.
அசிட்டோன் \(\xrightarrow[ii)H_2O/H^{-1}]{i)CH_3MgI }X\),இங்கு X என்பது
2-புரப்பனால்
2-மெத்தில்-2-புரப்பனால்
1-புரப்பனால்
அசிட்டோனால்
8.
கீழ்கண்ட வினைகளில் எவ்வினைக்கு KP மற்றும் KC சமம் அல்ல
2 NO(g) ⇌ N2(g) + O2(g)
SO2 (g) + NO2 ⇌ SO3(g) + NO(g)
H2(g) + I2(g) ⇌ 2HI(g)
PCl5 (g) ⇌ PCl3(g) + Cl2(g)
9.
1.25M கந்தக அமிலத்தின் நார்மாலிட்டி
1.25 N
3.75 N
2.5 N
2.25 N
10.
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருளாக செயல்படாதது எது?
ROH
ROR
PCl3
BF3
11.
ஒரு நிறமற்ற திண்மம் (A) ஐ வெப்பப்படுத்தும்போது CO2 வாயுவை வெளியேற்றுகிறது, மற்றும் நீரில் கரையும் வெண்ணிற வீழ்படிவைத் தருகிறது. அந்த வீழ்படிவும் நீர்த்த HCl உடன் வினைப்படுத்தும்போது CO2 ஐ தருகிறது.எனில் அந்த திண்மப்பொருள் A
Na2CO3
NaHCO3
CaCO3
Ca(HCO3)2
12.
பெர்ரஸ் ஆக்சலேட்டின் சமான நிறை



மேற்கண்ட எதுவுமில்லை.
13.
E=-2.178x10-18 J(z2/n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?
எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது, ஆற்றல்மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.
n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.
இச்சமன்பாட்டில் உள்ள எதிர்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது, எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ள போது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.
n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.
14.
ஆர்த்தோ நைட்ரோபீனால் மற்றும் பாரா நைட்ரோ பீனாலில் காணப்படும் H- பிணைப்புகள் முறையே,
மூலக்கூறுகளுக்கிடையேயான H- பிணைப்பு மற்றும் மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு
மூலக்கூறினுள் நிகழும் H-பிணைப்பு மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான H- பிணைப்பு
மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு
மூலக்கூறினுள் நிகழும் H- பிணைப்பு மற்றும் H-பிணைப்பு இல்லை.
15.
ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)
| IE1 | IE2 | IE3 | IE4 | IE5 |
| 577.5 | 1,810 | 2,750 | 11,580 | 14,820 |
இத்தனிமானது
பாஸ்பரஸ்
சோடியம்
அலுமினியம்
சிலிகான்
16.
கார உலோகங்களின் வேதிப் பண்புகள் சிறு குறிப்பு வரைக.
17.
X, Y, மற்றும் Z ஆகிய தனிமங்களின் முதல் அயனியாக்கும் ஆற்றல் (IE1) மற்றும் இரண்டாம் அயனியாகும் ஆற்றல் (IE2) ஆகியன முறையே கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| தனிமம் | IE1 (KJ mol-1) | IE2 (KJ mol-1) |
| X | 2370 | 5250 |
| Y | 522 | 7298 |
| Z | 1680 | 3381 |
மேற்கண்ட தனிமங்களுள் அதிக வினைபுரியும் உலோகம் எது? மந்த வாயு எது? குறைவாக வினைபுரியும் உலோகம் எது?
18.
N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.
19.
என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல் (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின் \(\triangle H^o _f\) கணக்கிடு.
20.
சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.
21.
காற்று நிரப்பிய பலூனினை அறை வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்த மிகக் குறைந்த வெப்பநிலைக்கு மாற்றப்படுவதைக் கொண்டு சார்லஸ் விதிக்கு எடுத்துக்காட்டாக எவ்வாறு பயன்படுத்தலாம்?
22.
O-அணுவில் உள்ள 8வது எலக்ட்ரான் மற்றும் Cl – அணுவில் உள்ள 15வது எலக்ட்ரான் குரோமியத்தின் கடைசி எலக்ட்ரான் ஆகியனவற்றிற்கான நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் தீர்மானிக்கவும்.
23.
நீர்வாயு மாற்ற வினை என்றால் என்ன?
24.
இயல்பு நிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலானது -2.18 × 10-18J ஆகும். அந்த ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்கும் ஆற்றலை kJ mol-1 அலகில் கணக்கிடுக.
25.
பார்மாலிட்டியை கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு எது?
26.
ஒரு வெப்ப பரிமாற்றமில்லா குடுவையில் உள்ள வெப்பநிலை மற்றும் அழுத்தம் யாது?
27.
எந்த வெப்பநிலைக்கு மேல் ஒரு துளை வழியே வாயுவினை விரிவடையச் செய்யும் போது வெப்பமாகிறது?
28.
பின்வனவற்றின் IUPAC பெயர்களை எழுதுக.
(i)\({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ F } }{ CH } -{ CH }_{ 3 }\)
(ii)\({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { CH }_{ 3 } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -{ CH }_{ 2 }-Br\)
(iii)\({ CH }_{ 2 }=CH-{ CH }_{ 2 }-Br\)
(iv)\({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { Br } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -\underset { \overset { | }{ CI } }{ CH } -\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -Br\)
29.
சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.
30.
X, Y, Z மற்றும் A தனிமங்களின் அணு எண்கள் முறையே 4,8,7 மற்றும் 12 ஆகும். இவற்றை எலக்ட்ரான் கவர்தன்மையின் வரிசையில் இறங்கு வரிசைப்படுத்துக.
31.
எளிய விகித வாய்ப்பாடு வரையறு.
32.
காரியஸ் முறையில், 0.24g கரிமச்சேர்ம்ம் 0.287g சில்வர்குளோரைடைத் தருகிறது. அச்சேர்ம த்தில் உள்ள குளோரினின் சதவீத்த்தினைக் காண்க.
33.
மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.
34.
பென்சீனில் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை நடைபெறுகிறது. ஆனால் சேர்க்கை வினைகள் நடைப்பெறுகின்றன ஏன்?
35.
வெப்ப வேதிச் சமன்பாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளை எழுது.
36.
ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதலுக்கான VB கொள்கையின் அடிப்படையை விவரி.
37.
இணை மாற்றியம் [அ] மெட்டாமெரிசத்தை எடுத்துக்கட்டுடன் விளக்கு.
38.
423K வெப்பநிலையில், 1dm3 கலனில் 1 மோல் PCl5 எடுத்துக்கொள்ளப்பட்டு சமநிலை அடைய அனுமதிக்கப்படுகிறது. வினைக்கலவையின் சமநிலைச் செறிவுகளைக் காண்க. (PCl5 சிதைவடையும் வினைக்கு 423Kல் Kcன் மதிப்பு 2)
39.
லித்தியத்தின் தனித்துவமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள மாற்ற தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.
40.
ஹைட்ரஜனின் பயன்களை விவரி.
41.
ஆரப்பங்கீட்டு சார்பை தக்கச் சான்றுடன் விளக்குக.
42.
இயல்பு வாயுக்களின் வாண்டர் வால்ஸ் சமன்பாடுகளைத் தருக. அழுத்தம் மற்றும் கன அளவின் திருத்தங்களையும் தருக.
43.
பாலிங் முறையினை பயன்படுத்தி பொட்டாசியம் குளோரைடு படிகத்தில் உள்ள K+ மற்றும் Cl– அயனிகளின் அயனி ஆரங்களை கணக்கிடுக. கொடுக்கப்பட்டுள்ள தரவு dk+ - cl- =3.14 Å
1.
(a)
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
2.
(d)
நீராவி வாலை வடித்தல்
3.
(a)
(A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்
4.
(c)
9.39 atm
5.
(a)
4n + 2
6.
(b)
இரண்டாம் விதி
7.
(b)
2-மெத்தில்-2-புரப்பனால்
8.
(a)
2 NO(g) ⇌ N2(g) + O2(g)
9.
(c)
2.5 N
10.
(d)
BF3
11.
(b)
NaHCO3
12.
(c)

13.
(b)
n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.
14.
(b)
மூலக்கூறினுள் நிகழும் H-பிணைப்பு மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான H- பிணைப்பு
15.
(c)
அலுமினியம்
16.
1. கார உலோகங்கள் அதிக வினைதிறன் கொண்டுள்ளன.
2. இந்த வினைதிறன் Li லிருந்து Cs வரை அதிகரிக்கிறது.
3. ஏனெனில் தொகுதியில் மேலிருந்து கீழாக அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
4. அனைத்து கார உலோகங்களும், அதிக எலக்ட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமங்களான ஆக்சிஜன் மற்றும் ஹேலஜன்களுடன் மிக அதிக வீரியத்துடன் வினைபுரிகின்றன.
17.
1. மந்த வாயுக்கள் 1037 kJ mol-1 முதல் 2372 KJmol-1 வரையிலான எல்லையில் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளைப் பெற்றுள்ளன. X என்ற தனிமத்திற்கு IE1, மதிப்பானது மந்த வாயுக்களில் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு எல்லையில் அமைந்துள்ளது. மேலும் இத்தனிமத்திற்கு IE1 மற்றும் IE2 ஆகிய இரு மதிப்புகளும் அதிகமாக உள்ளது. எனவே X ஆனது மந்தவாயு ஆகும்.
2. Y என்ற தனிமத்திற்கு முதல் அயனியாக்கும் ஆற்றல் குறைவாகவும் இரண்டாம் அயனியாகும் ஆற்றல் மிக அதிகமாகவும் உள்ளது. எனவே y என்பது அதிக வினைபுரியக்கூடிய உலோகம் ஆகும்.
3. Z என்ற தனிமத்திற்கு IE1 மற்றும் IE2 ஆகிய இரண்டும் மிக அதிகமாக உள்ளது. எனவே இது மிக குறைவாக வினைபுரியும் உலோகம்.
18.
\(Q={[NO_2]^2\over [N_2O_4]}={0.5\times 0.5\over 0.125}=2\)
Qன் மதிப்பானது KCன் மதிப்பினை விட அதிகம் எனவே Qன் மதிப்பு 0.21 ஆகும் வரை வினையானது பின்னோக்கிய திசையில், நிகழும்.
19.
H=U+PV
H,U,V ஆகியவற்றின் ஆரம்ப மற்றும் இறுதி நிலைகள் H1,U1,V1 மற்றும் H2,U2,V2 ஆகும்.
என்தால்பி மாற்றம்
(H2-H1)=(U2-U1)+P(V2-V1)
\(\triangle H=\triangle U+ P\triangle V\)
20.
1. ஒரு சேர்மம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளாக பிரிகையடையும் வினைகள் சிதைவடையும் வினைகள் என அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை வினைகளில், ஒரு சேர்மத்தில் உள்ள இரண்டு வெவ்வேறான தனிமங்களின் ஆக்சிஜனேற்ற எண்களில் மாற்றம் ஏற்படுகிறது.
எடுத்துக்காட்டு:

21.
1. ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவிற்கு அதன் அழுத்தம் மாறாதிருக்கும்போது கன அளவானது அதன் வெப்ப நிலையுடன் நேர்விகிதத் தொடர்புடையது என்பதே சார்லஸ் வாயுவிதி
2. கணிதவியல் முறைப்படி சார்லஸ் விதி
V = KT அல்லது \(\frac { V }{ T } \) = மாறிலி
3.எடுத்துக்காட்டாக , பனிக்கட்டி குளிர்நிலையில் உள்ள நீரில் உள்ள ஒரு பலூனை , கொதி நீருள்ள தொட்டிக்கு மாற்றும்போது, பலூனில் உள்ள வாயுவின் வெப்பநிலை அதிகரிக்கிறது
4.இதன் விளைவாக பலூனினுள்ள வாயு மூலக்கூறுகள் வேகமாக நகர்கின்றன
5.எனவே வாயு விரிவடைந்து கனஅளவு அதிகரிக்கிறது
22.
ஆக்ஸிஜனின் எலக்ட்ரான் அமைப்பு

∴ 8- வது எலக்ட்ரான் 2px ஆர்பிட்டாலில் உள்ளது மற்றும் குவாண்டம் எண்கள்
n = 2, l = 1, ml = +1 அல்லது -1 ஆக இருக்கலாம்
s = –1/2
குளோரினின் எலக்ட்ரான் அமைப்பு =

15th எலக்ட்ரான் 3PZ ஆர்பிட்டாலில் உள்ளது n = 3, l = 1,
ml = 0 மற்றும் ms = +1/2
23.
1. நீர்வாயுக் கலவையுடன், அதிக அளவு நீராவியினைச் சேர்த்து 4000°c வெப்ப நிலையில், இரும்பு / தாமிரம் வினைவேக மாற்றியைக் கொண்டுள்ள மாற்று உலையின் வழியாகச் செலுத்துவதன் மூலம் நீர்வாயுக் கலவையில் உள்ள கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்ஸைடாக மாற்றலாம்.
CO + H2O \(\rightarrow\) CO2 + H2
2. மேற்கண்டுள்ள முறையில் உருவான CO2 வாயுவானது, பொட்டாசியம் கார்பனேட் கரைசலால் உறிஞ்சப்படுகிறது.
CO2 + K2 CO3 + H2O \(\rightarrow\) 2KHCO3
24.
E1=-2.8 x 10-18 J
E∞=0
ΔE=E∞-E1
0-(-2.8 x 10-18J)
H-ன் அயனியாக்கும் ஆற்றல் =2.8 x 10-18 J
ஒரு மோல் H அணுவின் அயனியாக்கும் ஆற்றல்
=2.8 x 10-18J x 6.023 x 1023
=13.13 x 105 J mol-1
25.
26.
273 k வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தம்
27.
எதிர்மாறு வெப்பநிலைக்கு மேல்
28.
(i)\({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ F } }{ CH } -{ CH }_{ 3 }\)
2 புளுரோ புரேப்பேன்
(ii)\({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { CH }_{ 3 } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -{ CH }_{ 2 }-Br\)
1 புரோமோ 2,2 டை மெத்தில் புரேப்பேன்
(iii)\({ CH }_{ 2 }=CH-{ CH }_{ 2 }-Br\)
3 புரோமோ புரப் -2-யீன்
(iv)\({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { Br } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -\underset { \overset { | }{ CI } }{ CH } -\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -Br\)
2 புரோமோ 3 குளோரோ 2, 4, டை மெத்தில் பென்டேன்
29.
\(H-C\equiv C-H\overset { Na }{ \longrightarrow } H-C\equiv C-Na\overset { Na }{ \longrightarrow } Na-C\equiv C-Na\)
30.
Y > Z > X > A
31.
சேர்மத்தின், ஒரு முலக்கூறில் அடங்கியுள்ள வெவ்வேறு தனிமங்களின் எண்ணிக்கையின் எளிய விகிதத்தினை அத்தனிமத்தின் குறியீட்டிற்கு கீழ் ஓட்டாக எழுதுவதால் பெறப்படும் வாய்ப்பாடு எளிய விகித வாய்ப்பாடு எனப்படும்.
32.
குளோரினின் சதவீதம்

= \(\frac { 35.5 }{ 143.5 } \times \frac { 0.287 }{ 0.24 } \times 100\)
= 29.58%
33.
1. எலக்ட்ரான் குறைபாடுடைய ஹைட்ரைடுகள் (Eg: B2H6)
2. எல்க்ட்ரான் அதிகமாக உள்ள ஹைட்ரைடுகள் (NH3,H2O)
3. சரியான எல்க்ட்ரானை கொண்டுள்ள ஹைட்ரைடுகள் (CH4, C2, H6, SiH)
34.
1. பென்சீனின் வினைய அமைப்பின் காரணமாக அதில் உள்ள இரட்டை பிணைப்புகள் சுழலும் தன்மை உடையவை.
2. அவ்வாறு சுழலும் போது நேர் அயனி இடைநிலை உருவாகிறது. இதனால் கவர் பதிலீட்டு வினைகள் நடைபெறுகின்றன.
3. ஆனால், ஆல்கீன்களில் அவ்வாறு வினைய அமைப்பு இல்லாத காரணத்தால் சேர்க்கை வினைகள் நடைபெறுகின்றன.
35.
(i). சமன்படுத்தப்பட்ட வெப்ப வேதிச் சமன்பாடுகளில் உள்ள வினை குணகங்கள், வினையில் ஈடுபடும் வினைபடு மற்றும் வினைவிளை பொருட்களின் மோல்களின் எண்ணிக்கையினைக் குறிப்பிடுகின்றன.
(ii) ஒரு வேதிவினையின் என்தால்பி மாற்றம் ΔHr ஆனது தகுந்த குறியீட்டு மற்றும் அலகுடன் குறிப்பிடப்பட வேண்டும்.
(iii) ஒரு வேதிவினையின் மறுதலை வினையை கருதும்போது, அவ்வினையின் ΔHன் எண் மதிப்பை மாற்றாமல், குறியீட்டை மட்டும் மாற்றி குறிப்பிடப்படுகிறது.
(iv) ஒரு வினையின் ΔH மதிப்பானது அவ்வினையில் ஈடுபடும் வினைப் பொருள்களின் இயற்நிலைமைகளை பொறுத்து அமைவதால், அவ்வேதி வினை ஈடுபடும் அனைத்து பொருட்களின் இயற் நிலைமைகளும் முக்கியமானவை மற்றும் அவற்றை [வாயு(g), நீர்மம்(I), நீர்மக் கரைசல்(aq) திண்மம்(s) முதலிய அடைப்புக் குறிக்குள்] வெப்ப வேதிச் சமன்பாடுகளில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
(v) ஒரு வெப்ப வேதிச் சமன்பாடு முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட எண்ணால் பெருக்கப்படும்போது அதன் என்தால்பி மதிப்பும் அதே எண்ணால் பெருக்கப்படுகிறது.
(vi) ஒரு வினையின் ΔHr0 மதிப்பு எதிர்குறியை பெற்றிருந்தால் அவ்வினை வெப்பம் உமிழ்வினை எனவும், ΔHr0 மதிப்பு நேற்குறியை பெற்றிருப்பதால் வெப்பம் கொள்வினை எனவும் அறியலாம்.
36.

புதிய கவர்ச்சி விசைகள் (கருப்பு நிற அம்புகுறி)
(i) Ha ன் அணுக்கருவிற்கும், Hb ன் இணைதிற எலக்ட்ரானுக்கும் இடையே உருவாகிறது.
(ii) Ha ன் அணுக்கருவிற்கும், Hb ன் இணைதிற எலக்ட்ரானுக்கும் இடையே உருவாகிறது.
புதிய விலக்கு விசைகள் (ஆரஞ்சு நிற அம்புக்குறி)
(i) Ha மற்றும் Hb ஆகிய அணுக்கருக்களுக்கிடையே உருவாகிறது.
(ii) Ha மற்றும் Hb ஆகிய இணைதிறன் எலக்ட்ரான்களுக்கு இடையே உருவாகிறது.
(iii) கவர்ச்சி விசையின் காரணமாக Ha மற்றும் Hb ஆகியன ஒன்றோடொன்று நெருங்குகின்றன. ஆனால் அதே நேரத்தில் விலக்குவிசைகள் அவைகளை விலகலடையுமாறுச் செய்கின்றன. ஆரம்ப நிலையில், இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஒன்றோடொன்று நெருங்கும்போது, விலக்கு விசையினைக் காட்டிலும், கவர்ச்சி விசைகள் அதிக வலிமையுடையதாக உள்ளன. மேலும் நிலை ஆற்றல் குறைந்துக் கொண்டே வருகின்றது. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் நிகர கவர்ச்சி விசையானது விலக்கு விசைகளுக்குச் சரி சமமாகிறது. இந்நிலையில் அமைப்பானது, மிகக் குறைந்த நிலை ஆற்றலைப் பெற்றிருக்கும்.

H2 மூலக்கூறு உருவாதல் -VB கொள்கை
(i) இந்நிலையில் ஹைட்ரஜன் அணுக்களின் (Ha மற்றும் Hb) அணு ஆர்பிட்டால்களுக்கிடையே அதிகபட்ச மேற்பொருந்துதல் நிகழ்கிறது. மேலும் இந்நிலையில் அவைகள் ஒன்றோடொன்று சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன எனப்படுகிறது. இந்நிலையில் அவ்விரு ஹைட்ரஜன் அணுக்களுக்கிடையேயானத் தொலைவு H-H பிணைப்பு நீளத்தைத் தருகிறது. அதன் மதிப்பு 74pm. இந்நிலையில் வெளியிடப்படும் பிணைப்பாற்றல் எனப்படுகிறது.
(ii) இந்த பிணைப்பு உருவாதலில் ஆற்றல் வெளியிடப்படுகிறது. எனவே உருவான மூலக் கூறானது அதிக நிலைப்புத்தன்மை உடையது.
இவ்விரு அணுக்களுக்கு இடையேயான தொலைவினை மேலும் குறைக்கும் பொழுது கவர்ச்சி விசையினைக் காட்டிலும் விலக்கு விசையானது அதிகரிப்பதால் அமைப்பின் நிலையாற்றல் அதிகரிக்கிறது.
37.
1. ஒரு வினைசெயல் தொகுதியின் இருபுறமும் இணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை மாறுபடுவதால் ஏற்படும் ஒரு சிறப்பு வகை மாற்றியம் மெட்டாமெரிசம் எனப்படும்.
2. ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டினை பெற்றுள்ள சேர்மங்களின், வினைச்செயல் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆல்கைல் தொகுதிகள் மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியம் மெட்டாமெரிசம் எனப்படும்.
3.ஈதர்கள், கீட்டோன்கள் எஸ்டர்கள் மற்றும் ஈரினைய அமீன்கள் போன்ற வினைச்செயல் தொகுதிகளைப் பெற்றுள்ள சேர்மங்களில் இம்மாற்றியம் காணப்படுகின்றது.
4. அதாவது ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டினையும், நீண்ட கார்பன் சங்கிலித் தொடரில் (நேராக அல்லது பக்கச் சங்கிலி அமைப்புடைய) மாறுபட்டும் காணப்படும் மாற்றியங்கள் இவ்வகைப்படும்.
எ.கா:
C4H10O விற்கான இணை மாற்றியங்கள் பின்வருமாறு
CH3-O-C3H7
(மெத்தில் புரப்பையில் ஈதர்)
C2H5-O-C2H5
(டைஎத்தில் ஈதர்)
\(C{ H }_{ 3 }-O-\underset { \overset { | }{ C{ H }_{ 3 } } }{ CH } -C{ H }_{ 3 }\)
(மெத்தில் ஐசோ-புரப்பைல் ஈதர்)
38.
39.
i.லித்தியத்தின் தனித்துவமான பண்பு
ii.Li+அயனியின் தனித்துவமான பண்பிற்கான காரணங்கள் அதன் மிகச்சிறிய உருவளவு,அதிக முனைவாக்கும் திறன்,அதிக நீரேற்றம் ஆற்றல் மற்றும் d-ஆர்பிட்டால்கள் இல்லாத்தன்மை போன்றவையே ஆகும்.
| லித்தியம் |
தொகுதியிலுள்ள மற்ற தனிமங்கள் |
|---|---|
| i.கடினமானது, ii.அதிக உருகுநிலை iii.மற்றும் கொதிநிலை கொண்டது |
i.மிதுவானவை, |
| iv.குறைவா வினைத்திறன் உடையது v.(எடுத்துக்காட்டாக,இது ஆக்சிஜனுடன் வினைப்பட்டு சாதாரண ஆக்சைடை உருவாக்குகிறது, பெராக்சைடுகளை உருவாக்குவது மிகவும் கடினம்,மேலும் இவற்றின் உயர் ஆக்சைடுகள் நிலைப்புத்தன்மை அற்றவை) |
ivஅதிக வினைதிறன் மிக்கவை |
| vi.நைட்ரஜனுடன் வினைபுரிந்து Li3 ஐ தருகிறது. | v.வினை இல்லை |
| vii.புரோமினுடன் மெதுவாக வினைபுரிகிறது | vi.வீரியத்துடன் வினைபுரிகின்றன. |
| viii.கார்பனுடன் நேரடியாக வினைபுரிந்து அயனி கார்பைடுகளை உருவாக்குகின்றன. ix.எடுத்துக்காட்டாக 2Li+2C⟶Li2+C2 |
viii.கார்பனுடன் நேரடியாக வினைபுரிவதில்லை. ஆனால் கார்பன் சேர்மங்களுடன் வினைபுரிகின்றன. 2Na+C2H2⟶Na2C2+H2 |
| x.இதன் சேர்மங்கள் நீரில் பகுதியளவு கரைகின்றன. | ix.நீரில் நன்கு கரைகின்றன. |
40.
1. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜனில் 90% மேல், அத்தொழிற்சாலைகளிலேயே தொகுப்பு முறை பயன்பாட்டிற்கு வினைபொருளாகப் பயன்படுகிறது. அம்மோனியாவை பெருமளவில் தயாரிக்க பயன்படும் ஹேபர்முறை இதற்கு ஒரு உதாரணமாகும். நைட்ரிக் அமிலம், உரங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட வேதிச் சேர்மங்களை பெருமளவில் தயாரிப்பதில் அம்மோனியா பயன்படுகிறது.
380-450°C
N2+ 3H2 \(\rightleftharpoons \) 2NH3
200 atm/ இரும்பு(Fe)
2. தொழிற்சாலைகளில் பெருமளவு கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை, கார்பன் மோனாக்சைடிலிருந்து தாமிரத்தை (Cu) வினையூக்கியாகக் கொண்டு தயாரிக்கப் பயன்படுகிறது.
CO+2H2 \(\overset { Cu }{ \rightarrow } \) CH3 OH
3. Pt/H2 ஐப் பயன்படுத்தி, நிறைவுறாத கொழுப்பு எண்ணெய்களை வனஸ்பதி என்றழைக்கப்படும் நிறைவுற்ற கொழுப்புகளாக (Margarine) மாற்றலாம்.
4. உலோகவியலில் உலோக ஆக்சைடுகளை அதிக வெப்பநிலையில் உலோகமாக ஒடுக்க ஹைட்ரஜன் பயன்படுகிறது.
CuO + H2 \(\rightarrow\) Cu + H2O
WO3 + 3H2 \(\rightarrow\) W + 3H2 O
5. அணுநிலை ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆக்சிஜன் கலவையானது உலோகங்களை ஒட்டவும், வெட்டவும் பயன்படுகிறது.
6. ராக்கெட்டுகளை உந்தித்தள்ளும் எரிபொருளாக நீர்ம ஹைட்ரஜன் பயன்படுகிறது.
7. எரிமின்கலங்களில், மின் ஆற்றலை உற்பத்தி செய்ய ஹைட்ரஜன் பயன்படுகிறது. உலோகங்கள் ஹைட்ரஜனை மீள் முறையில் ஏற்றுக்கொள்ளும் தன்மையானது. மறு மின்னூட்டம் செய்யும் வகையிலான உலோக ஹைட்ரைடு மின்கலங்கள் தயாரிப்பதில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
41.
ஆரப்பங்கீட்டு சார்பு:
1. அடி ஆற்றல் நிலையில் (ground state) உள்ள ஹைட்ரஜன் அணுவின் ஒற்றை எலக்ட்ரானைக் கருதுக.
2. இந்த எலக்ட்ரானுகான குவாண்டம் n =1 மற்றும் 1=0 அதாவது இந்த எலக்ட்ரான் 1s ஆர்பிட்டாலில் உள்ளது.
3. 1s ஆர்பிட்டாலுக்கான, R(r2) Vs r வரைபடம் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

4. மேற்கண்டுள்ள வரைபடத்திலிருந்து, எலக்ட்ரானுக்கும் அணுக்கருவிற்கும் இடையேயான தூரம் குறையும்போது, எலக்ட்ரானைக் காண்பதற்கான நிகழ்த்தகவும் அதிகரிக்கின்றது என அறிய முடிகிறது. r =0, எனும் போது R(r)2-ன் மதிப்பானது பெருமமாகிறது. அதாவது |ψ|2 -ன் அதிக பட்ச மதிப்பானது அணுக்கருவினுள் அமைகிறது. எனினும் அணுக்கருவினைச் சுற்றி கொடுக்கப்பட்ட கோளாகக் கூட்டில் எலக்ட்ரானைக் காண்பதற்கான நிகழ்தகவே முக்கியமானதாகும். r மற்றும் r +dr ஆகிய ஆரங்களுக்கிடையே இரு ஒரு மைய கோளங்களுக்கு இடைப்பட்ட கன அளவு (dV)-யைக் கருதுவோம்.

கோளத்தின் கன அளவு \(V=\frac{4}{3}\pi r^3\)
\(\frac{dV}{dr}=\frac{4}{3}\pi(3r^2)\)
dV=4πr2dr
ψ2dV=4πr2ψ2dr
r மதிப்பிற்கு எதிரான 4πr2ψ2-ன் வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. மேற்கண்டுள்ள வரைபடத்தின் மூலம் அணுக்கருவிலிருந்து 0.52\(\mathring {A}\) தொலைவில் அதிகபட்ச நிகழ்த்தகவு அமைந்துள்ளது என அறிய முடிகிறது. இத்தொலைவு போர் ஆரத்திற்குச் சமம்.
2. இத்தொலைவில் அணுக்கருவினை சுற்றி, எலக்ட்ரானைக் காண்பதற்கான அதிகபட்ச நிகழ்தகவு உள்ளதை இது குறிப்பிட்டாலும், இத்தொலைவினை தவிர்த்த பிற தொலைவுகளிலும் எலக்ட்ரானை காண்பதற்கான நிகழ்தகவு உண்டு.
3. ஹைட்ரஜன் அணுவில் 2s, 3s, 3p மற்றும் 3d ஆர்பிட்டால்களுக்கான ஆர பகிர்வு சார்பினை பின்வருமாறு வரை படத்தில் குறிப்பிடலாம்.

4. 2s ஆர்பிட்டாலுக்கு, அணுக்கருவிலிருந்து தொலைவு (r) அதிகரிக்கும்போது, நிகழ்தகவு அடர்த்தி முதலில் அதிகரித்து, ஒரு சிறிய பெரும மதிப்பை அடைகிறது. பின் பூஜ்ஜியத்திற்கு குறைகிறது. பின் மீண்டும் மற்றுமொரு பெரும மதிப்பினை அடைந்து பின் பூஜ்ய மதிப்பினையடைகிறது.
5. இவ்வாறு நிகழ்தகவு அடர்த்தி சார்பின் மதிப்பு எப்பகுதியில் பூஜ்யமாகக் குறைகிறதோ அப்பகுதி, கணு புறப்பரப்பு ஆர்பிட்டால் ஒரு கணுவையும், 3s ஆர்பிட்டால் இரு கணுக்களையும் கொண்டுள்ளது.
6. 3p மற்றும் 3d ஆர்பிட்டால்களுக்கான, 4πr2ψ2 ன் வரைபடமானது, இதனைப் போன்ற அமைப்பினையே பெற்றுள்ளது.
7. ஆனால் ஆர கணுக்களின் எண்ணிக்கை (n-1-1)க்குச் சமம். இங்கு 'n' என்பது முதன்மைக் குவாண்டம் எண்ணையும், l என்பது கோண உந்த குவாண்டம் எண்ணையும் குறிப்பிடுகின்றது.
42.
வாண்டர் வால்ஸ் சமன்பாடு
இயல்பு வாயுக்களைப் பற்றிய கணிதவியல் ரீதியான ஆய்வுகள் முதன்முதலில் J.D வாண்டர் வால்ஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. இவரது சமன்பாட்டின் மூலம் நம்மால் மூலக்கூறு அளவில், இயல்பு வாயுக்களின் தன்மையினை விளக்க இயலும். இவர் அழுத்தத்திற்கான திருத்தம் மற்றும் கனஅளவிற்கான திருத்தம் என இரு திருத்தங்களை PV=nRT என்ற நல்லியல்பு வாயுச்சமன்பாட்டில், அறிமுகப்படுத்தி அச்சமன்பாட்டினை மாற்றியமைத்தார் .
அழுத்தத்திற்கான திருத்தம்
வாயுவின் அழுத்தமானது, அவ்வாயு மூலக்கூறுகள் கொள்கலனின் சுவற்றின் மீது மோதுவதால் ஏற்படும் விசைக்கு நேர்விகிதத் தொடர்புடையது. கொள்கலனின் சுவற்றினை நோக்கிச் செல்லும் ஒருவாயு மூலக்கூறின் வேகமானது, அம்மூலக்கூறினை சூழ்ந்துள்ள பிறவாயு மூலக்கூறுகளின் கவர்ச்சி விசையினால் குறைக்கப்படுகிறது. எனவே அளந்தறியப்பட்ட அழுத்தமானது, வாயுவின் நல்லியல்பு அழுத்தத்தை விட குறைவானதாகும். எனவே இவ்விளைவிற்கான ஒரு திருத்தத்தினை வாண்டர் வால்ஸ் அறிமுகப்படுத்தினார்.
கொள்கலனின் சுவற்றிற்கு அருகே உள்ளே ஒரு மூலக்கூறு உணரும் கவர்ச்சி விசையானது வாயுவின் அடர்த்தியின் வர்க்கத்திற்கு நேர்விகிதத்தில் இருக்கும் என வாண்டர் வால்ஸ் கண்டறிந்தார்.
P α ρ²
ρ = n/V
இங்கு n என்பது வாயுக்களின் மோல்களின் எண்ணிக்கை ‘V’ என்பது கொள்கலனின் கனஅளவு ⇒ P α n²/V²
⇒ P = a n²/V²
இங்கு a என்பது விகிதமாறிலி. இது வாயுவின் இயல்பினைப் பொருத்து அமையும்.
எனவே, Pநல்லியல்பு = P = P + (an²/V²)
கனஅளவிற்கான திருத்தம்
ஒவ்வொரு தனித்த வாயு மூலக்கூறும் ஒரு குறிப்பிடத்தக்க கனஅளவை அடைத்துக் கொள்வதால், வாயு அடங்கிய கொள்கலனின் கன அளவினை (V)க்காட்டிலும், வாயுவின் உண்மையான கனஅளவு குறைவானதாகும். இவ்விளைவிற்கான வாண்டர் வால்ஸ் திருத்தக்காரணி V' ஐ அறிமுகப்படுத்தினார். வாயு மூலக்கூறுகளை கோளவடிவில் இருப்பதாக கருத்திற் கொண்டு, திருத்தக் காரணியை நாம் கணக்கிடலாம்.
V' = புறக்கணிக்கப்பட்ட கனஅளவு
இரு மூலக்கூறுகளுக்கான புறக்கணிக்கப்பட்ட கனஅளவு
\(=\frac{4}{3} \pi(2 r)^{3}=8\left(\frac{4}{3} \pi r^{3}\right)=8 V_{m}\)
இங்கு Vm ஒரு தனித்த வாயு மூலக்கூறின் கனஅளவு
ஒரு தனித்த மூலக்கூறுக்கான புறக்கணிக்கப்பட்ட கனஅளவு = \(\frac{8 \mathrm{~V}_{\mathrm{m}}}{2}=4 \mathrm{~V}_{\mathrm{m}}\)
n மூலக்கூறுகளுக்கான புறக்கணிக்கப்பட்ட கனஅளவு = n(4Vm) = nb
இங்கு b என்பது வாண்டர் வால்ஸ் மாறிலி இது 4Vm ற்குச் சமம்
⇒ v = nb
Vநல்லியல்பு = V - nb
PV = nRT என்ற நல்லியல்பு வாயுச் சமன்பாட்டினை, திருத்தம் செய்யப்பட்ட அழுத்தம் மற்றும் கனஅளவு மதிப்புகளைக் கொண்டு மாற்றியமைக்க, இயல்பு வாயுக்களுக்கான வாண்டர் வால்ஸ் சமன்பாடு பின்வருமாறு பெறப்படுகிறது.
\(\left(p+\frac{a^{2}}{V^{2}}\right)(V-n b)=n R T\)
a மற்றும் b ஆகியன வாண்டர் வால்ஸ் மாறிலிகள். வாயுக்களின் தன்மையினைப் பொறுத்து இம்மாறிலிகளின் மதிப்பு அமையும். இச்சமன்பாடு நல்லியல்புத் தன்மையற்ற வாயுக்களுக்கான, தோராயமான ஒரு சமன்பாடாகும்.
43.
r(K+)+r(Cl-)=d(K+-Cl-) =3.14 Å .....(1)
(i) K+ மற்றும் Cl- அயனிகள் Ar(z=18) வகை எலக்ட்ரான் அமைப்பை கொண்டவை. ஏனவே அவற்றிக்கான நிகர அணுக்கரு மின்சுமை பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.
K+ = (1s2) (2s22p6) (3s23p6)
உள்கூடு (n-1)வதுகூடு n-வதுகூடு
Zசெயலுறு (K+) = z-s
=19-[(0.35 x7) + (0.85 x 8) + (1 x 2)
=19-11.25
=7.25
Zசெயலுறு(Cl-)
=17-[(0.35 x 7) + (0.85 x 8) + (1 x 2)
=17-11.25
5.75

∴ r(K+) = 0.74 r(Cl-) .............(2)
சமன்பாடு (2) ஐ (1) ல் பிரதியிட
0.74 r(Cl-) + r(Cl-) =3.14 Å ......(3)
1.74 r(Cl-) =3.14 Å
r (Cl-) = \(\frac { 3.14\overset { 0 }{ A } }{ 1.74 } \)
r(Cl-) = 1.81 Å
சமன்பாடு (2) லிருந்து,
r(K+) = 0.74 r(Cl-)
=0.74 x 1.81 Å
r(K+) =1.33 Å
r(K+) = 1.33 Å
r(Cl-) =1.81 Å
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards