11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/05/2020
11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி III (11th Standard Chemistry Model Question Paper Part III)
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள் தவறானதை தேர்ந்தெடு.
கார்பாக்சிலிக் அமிலத்தின் சோடியம் உப்பு மற்றும் சுண்ணாம்பு கலவையை வெப்பப்படுத்தும் போது ஆல்கேன்கள் உருவாகின்றன.
உருவாகும் ஆல்கேனில் கார்பாக்சிலிக் அமிலத்தை விட ஒரு கார்பன் அணு அதிகமாக இருக்கும்
கார்பாக்சிலிக் தொகுதியை நீக்கும் இச்செயல்முறை கார்பாக்சில் நீக்கம் எனப்படும்.
மேற்கண்ட அனைத்தும் தவறு
2.
பின்வரும் எதைக் கொண்டு கரிமச் சேர்மங்களின் அமைப்பினை குறித்துக் காட்டலாம்?
கொடு பிணைப்பு அமைப்பு
குறுக்கப்பட்ட அமைப்பு
பிணைப்புக் கோடு அமைப்பு
இவை அனைத்தும்
3.
கூற்று (A) : நீர் மூலக்கூறு 'V' வடிவத்தைப் பெற்றுள்ளது. ஆனால் CO2 நேர்க்கோட்டு வடிவமைப்பைப் பெற்றுள்ளது.
காரணம் (R): வேதிப்பிணைப்பினைப் பற்றிய கொள்கையை ப் பயன்படுத்தி இவற்றை விளக்க இயலும்
(A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்
(A) சரி, (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம் அல்ல
(A) சரி, (R) தவறு
(A) தவறு (R) தவறு
4.
பின்வருவனவற்றை பொருத்துக.
| A | 1 atm | 1 | 6894.76 pa |
| B | 1 mm Hg | 2 | 105 pa |
| C | 1 bar | 3 | 133.322 pa |
| D | 1 psi | 4 | 101325 pa |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 2 | 3 | 4 | 1 |
| A | B | C | D |
| 3 | 4 | 2 | 1 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 4 |
5.
குடிநீரில் புளூரைடு அயனிச் செறிவு எவ்வளவு இருந்தால் பற்களில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்?
1 ppm மேல்
2 ppm மேல்
3 ppm மேல்
50 ppm மேல்
6.
ஒரு வெப்பமாறாச் செயல்முறையில் கீழ்க்கண்டவற்றில் எது உண்மை?
q = w
q = 0
E = q
P\(\triangle \)V=0
7.
கீழ்கண்ட வினைகளின் சமநிலை மாறிலிகள்:
N2 + 3H2 ⇌ 2NH3 ; K1
N2 + O2 ⇌ 2NO ; K2
H2 + ½O2 ⇌ H2O ; K3
2 NH3 + 5/2 O2 k 2NO + 3H2O, will be
என்ற வினையின் சமநிலை மாறிலி மதிப்பு;
\({ k }_{ 2 }^{ 3 }\frac { { K }_{ 3 } }{ { K }_{ 1 } } \)
K1\(\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 2 } } \)
\({ K }_{ 2 }\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 1 } } \)
K2\(\frac { { K }_{ 3 } }{ { K }_{ 1 } } \)
8.
பின்வரும் சேர்மங்களுள் எச்சேர்மமானது OH- அயனியாயால் கருக்கவர்பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படும் போது சுழிமாய்க் கலவையைத் தரும்,
i) \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ CH } -{ CH }_{ 2 }Br\)

(i)
(ii) and (iii)
(iii)
(i) and (ii)
9.
நல்லியல்புக் கரைசலுக்கு பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தவறானது
\(\triangle H \)கலத்தல் =0
\(\triangle U \)கலத்தல்=0
\(\triangle P \)கண்டறியப்பட்டது=Pபிரளல்ட் விதி கணக்கிடப்பட்டது=0
\(\triangle G \)கலத்தல் =0
10.
கருக்கவர் திறனின் இறங்கு வரிசை
OH- > NH2- > -OCH3 > RNH2
NH2- > OH- > -OCH3 > RNH2
NH2- > CH3O- > OH- > RNH2
CH3O- > NH2- > OH- > RNH2
11.
சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?
ஆல்கஹால்
நீர்
மண்ணெண்ணெய்
இவற்றில் ஏதுமில்லை
12.
பின்வருவனவற்றுள் எத்திலீனில் (C2H4) காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது?
புரப்பீன்
ஈத்தைன்
பென்சீன்
ஈத்தேன்
13.
n=6 எனில், எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் சரியான வரிசை
ns → (n – 2) f → (n – 1)d → np
ns → (n – 1) d → (n – 2) f → np
ns → (n – 2) f → np → (n – 1) d
இவை எதுவும் சரியல்ல
14.
Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg → Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்
+169 kcal mol-1
- 169 kcal mol-1
+ 527 kcal mol-1
- 527 kcal mol-1
15.
ஆர்த்தோ, பாரா டைஹைட்ரஜன் குறித்து கீழ்க்கண்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
அவைகள் உட்கரு சுழற்சி ஐசோடோப்புகள் (மாற்றியங்கள்)
ஆர்த்தோ மாற்றியம் பூஜ்ஜிய உட்கரு சுழற்சியையும், பாரா மாற்றியம் ஒரு உட்கரு சுழற்சியும் கொண்டுள்ளது.
குறைந்த வெப்பநிலை, பாரா மாற்றியத்திற்கு சாதகமாக உள்ளது.
பாரா மாற்றியத்தின் வெப்ப கடத்துதிறன், அதன் ஆர்த்தோ மாற்றியத்தை விட 50% அதிகம்
16.
கார உலோகங்கள் எவ்வாறு பின்வருவனவற்றுடன் வினைபுரிகின்றன?
(i) நீருடன் வினை
(ii) ஆல்கஹால் உடன்
(iii) ஆல்கைன்களுடன் வினை
17.
பொட்டாசியம் டை குரோமேட்டின் சமான நிறையினைக் கணக்கிடுக. அமில ஊடகத்தில் ஒடுக்க அரைவினை.
Cr2O72- + 14H + 6e- ⟶ 2Cr3+ + 7H2O
18.
என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல் (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின் \(\triangle H^o _f\) கணக்கிடு.
19.
பின்வருவனவற்றிற்கு தகுந்த விடையளி.
(I) மிக அதிக எலட்ரான் கவர் தன்மை கொண்ட தனிமம்
(II) மிகக்குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம்
20.
SrCO3 (s) ⇌ SrO (s) + CO2(g), என்ற வினையில், 1002K ல் சமநிலை மாறிலி மதிப்பு KP = 2.2 \(\times \) 10–4.வினைக்கான KC மதிப்பினைக் கணக்கிடுக.
21.
2.98 atmல் 250சி ல் உள்ள எரிவாயு உலோகத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது அத்தொட்டி 12atm அழுத்தம் வரை மட்டுமே தாங்கி பின் அதிக அழுத்தத்தினால் வெடிக்க கூடியது அத்தொட்டி உள்ள கட்டிடத்தில் தீப்பிடிக்கும் போது அத்தொட்டி முதலில் வெடிக்குமா அல்லது உருகத் தொடங்குமா என கண்டறிக.(உலோகத்தின் உருகுநிலை 1100K)
22.
பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு
23.
ஐசோடோப்புகள் (மாற்றியங்கள்) என்றால் என்ன? ஹைட்ரஜனின் ஐசோடோப்புகளின் பெயர்களை எழுதுக.
24.
இயல்பு நிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலானது -2.18 × 10-18J ஆகும். அந்த ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்கும் ஆற்றலை kJ mol-1 அலகில் கணக்கிடுக.
25.
குளோரோபார்ம் ஆனது சிறிதளவு எத்தில் ஆல்கஹால் உள்ள அடர் நிறமுடைய கலன்களில் வைக்கப்படுகிறது. ஏன்?
26.
மோலாலிட்டினை கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு எது?
27.
நல்லியல்பு வாயுச் சமன்பாட்டின் படி பகுதி அழுத்தம் என்பது எதற்குச் சமம்?
28.
வாயு மற்றும் ஆவி இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு யாது?
29.
நவீன தனிம வரிசை அட்டவணையில் s -தொகுதி தனிமங்களின் இடம் பற்றி எழுதுக.
30.
உலோகங்களை விட அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகளை ஏன் அதிகமாக உள்ளன?
31.
H2SO4 ன் சமான நிறையைக் கண்டறி.
32.
லாசிகன் முறையில் கரிமச்சேர்மங்களில் காணப்படும் நைட்ரஜனைக் கண்டறிவதில் நடைபெ றும் வேதிவினைகளை விளக்குக.
33.
மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.
34.
கார உலோகங்களின் பின்வரும் பண்புகளை பற்றி எழுதுக.
(i) பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
(ii) அணு மற்றும் அயனி ஆரங்கள்
(iii) அயனியாக்கும் என்தால்பி
35.
பென்சீனில் எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை நடைபெறுகிறது. ஆனால் சேர்க்கை வினைகள் நடைப்பெறுகின்றன ஏன்?
36.
ஒரு எலக்ட்ரானின் திசை வேகத்தது அளவிடுவதில் நிச்சயமற்ற தன்மை 5.7 x 105 ms -1. எனில் அதன் நிலையில் காணப்படும் நிச்சயமற்றத் தன்மையைக் கணக்கிடுக.
37.
மீத்தேனின் இனக்கலப்பை விவரி.
38.
கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடும் IUPAC விதிமுறைகள் யாவை?
39.
பின்வரும் வினையினைக் கருதுக.
Fe3+(aq) + SCN–(aq) ⇌ [Fe(SCN)]2+(aq)
Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x10-3m மற்றும் 8x10-4m என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2x10-4m சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக.
40.
ஹைட்ரஜன் பெராக்சைடு சாய்வு விச அமைப்பினைக் கொண்டுள்ளது. அதன் வடிவத்தை உருவகப்படுத்துக்க.
41.
128.0 கிராம் ஆக்ஸிஜனை 00C லிருந்து 1000C க்கு வெப்பப்படுத்தும் போது \(\triangle U\) மற்றும் \(\triangle H\) மதிப்புகளைக் கணக்கிடுக.தோராயமாக CV மற்றும் CP மதிப்புகள் முறையே 21J mol-1 k-1 மற்றும் 29J mol-1 k-1 (வேறுபாடானது 8J mol-1 k-1 இது தோராயமாக R மதிப்பிற்குச் சமம்.)
42.
பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது
ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது
இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது
43.
பின்வருவனவற்றை விவரி. மேலும் தக்க காரணம் தருக
(i) N-ன் அயனியாக்கும் ஆற்றல் O-ஐ விட அதிகம்.
(ii) C-அணுவின் முதல் அயனியாக்கும் ஆற்றலின் மதிப்பு B-அணுவை விட அதிகம்; அதே வேளையில் இதன் மறுதலைக் கூற்று இரண்டாம் அயனியாக்கும் ஆற்றலுக்கு உண்மையாகிறது.
(iii) Be, Mg ஆகியவற்றின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் பூஜ்ஜியமாகும். மேலும் N (0.02eV) மற்றும் P (0.80eV) ஆகியவைகளுக்கும் இதன் மதிப்பு குறைவு.
(iv) F(g) லிருந்து F-(g) உருவாவது வெப்ப உமிழ்வினையாகும். ஆனால் O(g)லிருந்து O2-(g) உருவாவது வெப்பக்கொள் வினையாகும்.
1.
(b)
உருவாகும் ஆல்கேனில் கார்பாக்சிலிக் அமிலத்தை விட ஒரு கார்பன் அணு அதிகமாக இருக்கும்
2.
(d)
இவை அனைத்தும்
3.
(a)
(A) சரி, (R) சரி. (A) ஆனது (R) க்கு சரியான விளக்கம்
4.
(d)
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 4 |
5.
(b)
2 ppm மேல்
6.
(b)
q = 0
7.
(c)
\({ K }_{ 2 }\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 1 } } \)
8.
(c)
(iii)
9.
(d)
\(\triangle G \)கலத்தல் =0
10.
(b)
NH2- > OH- > -OCH3 > RNH2
11.
(c)
மண்ணெண்ணெய்
12.
(a)
புரப்பீன்
13.
(a)
ns → (n – 2) f → (n – 1)d → np
14.
(c)
+ 527 kcal mol-1
15.
(b)
ஆர்த்தோ மாற்றியம் பூஜ்ஜிய உட்கரு சுழற்சியையும், பாரா மாற்றியம் ஒரு உட்கரு சுழற்சியும் கொண்டுள்ளது.
16.
(i) நீருடன் வினை
(ii) ஆல்கஹால் உடன்
(iii) ஆல்கைன்களுடன் வினை:
H-C≡C-H \(\overset { Na }{ \longrightarrow } \) H-C≡C-Na \(\overset { Na }{ \longrightarrow } \) Na-C≡C-Na
17.
ஆக்சிஜனேற்ற வினைப்பொருளின் சமான நிறை
=\(\frac { 292.2gmol^{ -1 } }{ 6eqmol^{ -1 } } \) =48.7 g eq-1.
18.
H=U+PV
H,U,V ஆகியவற்றின் ஆரம்ப மற்றும் இறுதி நிலைகள் H1,U1,V1 மற்றும் H2,U2,V2 ஆகும்.
என்தால்பி மாற்றம்
(H2-H1)=(U2-U1)+P(V2-V1)
\(\triangle H=\triangle U+ P\triangle V\)
19.
(i) மிக அதிக கவர்தன்மை கொண்ட தனிமம் =F
(ii) மிகக் குறைந்த எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் =Cs
20.
SrCO3 (S) ⇌ SrO(S) + CO2(S)
என்ற வினைக்கு
Δng = 1 – 0 = 1
\(\therefore \) KP = KC (RT)
2.2 × 10–4 = KC (0.0821) (1002)
\({ K }_{ C }=\frac { 2.2\times { 10 }^{ -4 } }{ 0.0821\times 1002 } \)
= 2.674 \(\times \) 10-6
21.
உலோகத்தின் உருகுநிலையில் உலோகத் தொட்டியில் உள்ள வாயுவின் அழுத்தம்
T1 = 298K; P1=2.98atom; T2=1100K; P2=?
\({P_1\over T_1}={P_2\over T_2}\)
\(⇒\ P_2={P_1\over T_1}\times T_2\)
\(={2.98atm\over 298K}\times 1100 K=11atm\)
1100K வெப்பநிலையில் தொட்டியில் உள்ள வாயுவின் அழுத்தமானது 11atm ஆகிறது.உலோகத் தொட்டியானது அதிக பட்சமாக 12atm வரை தாங்கக்கூடியது என்பதால் தொட்டி முதலில் உருகத் தொடங்கும்.
22.
கொடுக்கப்பட்ட ஒரு ஆர்பிட்டாலில் அதிகபட்சமாக இரு எலக்ட்ரான்கள் மட்டுமே நிரப்ப முடியும். அவை இரண்டும் எதிரெதிர் சுழற்சியுடையவை.
23.
ஐசோடோப்புகள்:
1. ஒத்த அணு எண்ணையும் மாறுப்பட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அனுக்களே ஐசோடோப்புகள் எனப்படுகின்றன.
ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்:
1. புரோட்டியம் (1H1 அல்லது H)
2. டியூட்டிரியம் (1H2 அல்லது D)
3. டிரிட்டியம் (2H3 அல்லது T)
24.
E1=-2.8 x 10-18 J
E∞=0
ΔE=E∞-E1
0-(-2.8 x 10-18J)
H-ன் அயனியாக்கும் ஆற்றல் =2.8 x 10-18 J
ஒரு மோல் H அணுவின் அயனியாக்கும் ஆற்றல்
=2.8 x 10-18J x 6.023 x 1023
=13.13 x 105 J mol-1
25.
1. சூரிய ஒளியின் முன்னிலையில் குளோரோபார்ம் ஆனது காற்றுடன் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து கார்போனைல் குளோரைடு அல்லது பாஸ்ஜினைத் தருகிறது.
2. இது மிகவும் நச்சுத்தன்மை உடையது.
3. எனவே தான், குளோரோபார்ம் ஆனது சிறிதளவு எத்தில் ஆல்கஹால் உள்ள அடர் நிறமுடைய கலன்களில் வைக்கப்படுகிறது.
26.
27.
மோலார் செறிவு x (RT)
28.
1. அறை வெப்பநிலை மற்றும் 1atm அழுத்தத்தில் இயல்பாகவே வாயு நிலைமையில் உள்ள ஒரு பொருள் வாயு எனவும்.
2. அறை வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் திட அல்லது திரவ நிலையில் இருக்கும் ஒரு பொருளின் வாயு நிலை வடிவம் ஆவி எனவும் அழைக்கப்படுகிறது.
29.
1. நவீன தனிம வரிசை அட்டவணையில் 1 மற்றும் 2 தொகுதியைச் சார்ந்த தனிமங்கள் s-தொகுதி தனிமங்கள் ஆகும்.
2. இந்த இரண்டு தொகுதிகளைச் சார்ந்த தனிமங்கள் முறையே கார மற்றும் காரமண் உலோகங்கள் என அறியப்படுகின்றது.
30.
(i) தனிம வரிசை அட்டவணையின் இடமிருந்து வலமாகச் செல்லும்போது உட்கருமின்சுமை அதிகரிப்பதாலும், உருவளவு குறைவதாலும் எலக்ட்ரான் நாட்ட மதிப்பு அதிகரிக்கின்றது.
(ii) அலோகங்கள் அட்டவணையின் வலப்புறத்திலும் உலோகங்கள் இடப்புறத்திலும் காணப்படுகின்றன.
(iii) எனவே அலோகங்களின் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் அதிகமாகக் காணபப்டுகின்றன.
31.
H2SO4 ன் கரத்துவம் = 2 eq mol-1
H2SO4 ன் மோலார் நிறை
= (2x 1) + (1 x 32) + (4 x 16)
98 g mol-1
H2SO4 ன் சமான நிறை =\(\frac{98}{2}\)
=49 g eq-1
32.
1.லாசிகன்ஸ் உறுக்குசாறு சோதனை எல்லா வகையான நைட்ரஜன் சேர்மங்களிலுள்ள நைட்ரஜனை கண்டறிய உதவும் மிகச்சிறந்த ஆய்வாகும்.
2.சேர்மத்திலுள்ள நைட்ரஜன் சோடியம் சயனைடாக மாற்றப்பட்டு பின் புதிதாக தயாரிக்கப்பட்ட பெர்ஸ்சல்பேட் கரைசல் மற்றும் பெர்ரிக் அயனி மற்றும் அடர் HCL வுடன் பிரஷ்யன் நீல நிறம் (அ) பச்சை நிறம் (அ) வீழ்ப்படிவினைத் தருகிறது.
3.இதனால் நைட்ரஜன் உள்ளது உறுதிப்படுத்தப்படுகிறது.
4. மேற்கண்ட வினையில் உண்டான பச்சை நிற வீழ்படிவினை கரைக்க HCL சேர்க்கப்படுகிறது.
இப்பச்சை நிற வீழ்படிவான பெர்ரஸ் ஹைடிராக்ஸைடு அதிக அளவு NaOH மற்றும் FeSO4 னால் உண்டாக்கப்படுகிறது.
5. பிரஷ்யன் நீளம் உருவாதலில் பின்வரும் வினைகள் நடைபெறுகின்றன.

FeSO4+2NaOH⟶Fe(OH)2+Na2SO4
(அதிக சோடியத்திலிருந்து
6NaOH+Fe(OH)2 ⟶Na4[Fe(CN)6]+2NaOH
சோடியம் பெர்ரோசயனைடு
3Na4[Fe(CN)6]+FeCl3⟶Fe4[Fe(CN)6]3+12NaCl
ஃபெரிக் பெர்ரோசயனைடு பிரஷ்யன் நீலம் அல்லது பச்சைநிற வீழ்படிவு
6. N மற்றும் S சேர்ந்து காணப்பட்டால் நீலம் (அ) பச்சை நிறத்திற்கு பதிலாக இரத்த சிவப்பு நிறம் தோன்றும்.
7. இதற்கு பின்வரும் வினைகள் காரணமாகின்றன.
NaCNS+FeCl3 ⟶Fe(CNS)3+3NaCl
ஃபெரிக் சல்போசயனைடு (இரத்த சிவப்பு நிறம்)
33.
1. எலக்ட்ரான் குறைபாடுடைய ஹைட்ரைடுகள் (Eg: B2H6)
2. எல்க்ட்ரான் அதிகமாக உள்ள ஹைட்ரைடுகள் (NH3,H2O)
3. சரியான எல்க்ட்ரானை கொண்டுள்ள ஹைட்ரைடுகள் (CH4, C2, H6, SiH)
34.
(i) பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை:
1. இந்த தனிமங்கள் அனைத்தும் அதிக நேர்மின்தன்மை கொண்டவையாக உள்ளன.
2. இவைகள் எளிதில் தங்களின் இணைதிறன் கூட்டு எலக்ட்ரானை இழந்து ஒற்றை மின்சுமையுடைய நேர்மின் அயனிகளை (M+) உருவாக்குகின்றன.
3. கார உலோகங்கள் +1 என்ற ஒரே ஒரு ஆக்சிஜனேற்ற நிலையை மட்டுமே கொண்டுள்ளன.
(ii) அணு மற்றும் அயனி ஆரங்கள்:
1. ஒவ்வொரு வரிசையிலும் கார உலோகங்கள் முதல் தனிமமாக இருப்பதால் அந்தந்த வரிசைகளில் அதிகபட்ச அணு மற்றும் அயனி ஆரங்களைக் கொண்டுள்ளது.
2. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது, கூடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே அணு மற்றும் அயனி ஆரங்கள் அதிகரிக்கின்றன.
3. ஒட்ரு இணைதிறன் அயனிகள் (M+), அவற்றின் மூல அணுக்களைக் காட்டிலும் உருவளவில் சிறியவையாக உள்ளன.
(iii) அயனியாக்கும் என்தால்பி:
1. ஒவ்வொரு வரிசையிலும் உள்ள மற்ற தனிமங்களுடன் ஒப்பிடும்போது கார உலோகங்கள், குறைந்தபட்ச அயனியாக்கும் என்தால்பி மதிப்புகளைக் கொண்டுள்ளன.
2. ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும்போது, அணுவின் உருவளவு அதிகரிப்பதால் அயனியாக்கும் என்தால்பி குறைகிறது.
3. மேலும் உள்கூடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன, இதன் விளைவாக திரைமறைவு விளைவும் அதிகரிக்கின்றது.
4. எனவே தொகுதியில் கீழாக செல்லச் செல்ல அயனியாக்கும் என்தால்பி குறைகிறது.
35.
1. பென்சீனின் வினைய அமைப்பின் காரணமாக அதில் உள்ள இரட்டை பிணைப்புகள் சுழலும் தன்மை உடையவை.
2. அவ்வாறு சுழலும் போது நேர் அயனி இடைநிலை உருவாகிறது. இதனால் கவர் பதிலீட்டு வினைகள் நடைபெறுகின்றன.
3. ஆனால், ஆல்கீன்களில் அவ்வாறு வினைய அமைப்பு இல்லாத காரணத்தால் சேர்க்கை வினைகள் நடைபெறுகின்றன.
36.
கொடுக்கப்பட்டவை,
Δv=5.7 x 105 ms-1
Δx=?
ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றத் தன்மை கோட்பாட்டின் படி,
Δx.Δp ≥ \(\frac { h }{ 4\pi } \) ....(1)
இங்கு,
\(\frac { h }{ 4\pi } =\frac { 6.626\times { 10 }^{ -34 }kgm^{ 2 }s^{ -1 } }{ 4\times 3.14 } \)
\(\frac { h }{ 4\pi } \)=5.28 x 10-35 kg m2s-1 ....(2)
37.
1. மீத்தேன் மூலக்கூறை எடுத்துக்காட்டாகக் கொண்டு sp3 இனக்கலப்பினை விளக்கலாம். மீத்தேன் மூலக்கூறில் மைய கார்பன் அணு நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கார்பன் அணுவின் இணைதிற கூட்டு எலக்ட்ராட்ரான் அமைப்பு அடி ஆற்றல் நிலையில் [He]2s22px12py12pz0.

2.நான்கு ஹைட்ரஜன் அணுக்களுடன் நான்கு சகப்பிணைப்பினை ஏற்படுத்த கார்பனின் 2s ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களில் ஒரு எலக்ட்ரானானது 2pz ஆர்பிட்டாலுக்கு கிளர்வுறுகிறது.கார்பனின் ஒரு 2s ஆர்பிட்டாலும் மற்றும் ஒரு மூன்று 2p ஆர்பிட்டால்களும் இனக்கலப்பு அடைந்து நான்கு சமமான sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்களைத் தருகின்றன. இரு sp3 ஆர்பிட்டால்களைத் இடையேயுள்ள பிணைப்புக் கோணம் 109o 28'.
ஹைட்ரஜனின் 1s ஆர்பிட்டால்கள் மேற்பொருந்துதல்:
நான்கு ஹைட்ரஜன் அணுக்களின் 1s ஆர்பிட்டால்களுடன் கார்பன் அணுவின் நான்கு sp3 இனக்கலப்பு ஆர்பிட்டால்கள் நேர்கோட்டில் மேற்பொருந்தி மீத்தேன் மூலக்கூறினில் 4C-H \(\sigma \)-பிணைப்பினை படத்தில் காட்டியுள்ளவாறு ஏற்படுத்துகின்றன.

38.
1.நீண்ட கார்பன் தொடரை தெரிவு செய்யா வேண்டும்(மூலவார்த்தை) இச்சங்கிலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற அனைத்துத் தொகுதிகளையும் பதிலிகளாகக் கருத வேண்டும்.
2.நீண்ட கார்பன் சங்கிலிக்கு எண் இட வேண்டும்.
3. பதிலிகளுக்கு பெயரிடுதல் (முன்னொட்டு அல்லது பின்னொட்டு)
4. பதிலிகளை ஆங்கில அக்கறை வரிசையில் வைக்க.
5.பெயரை பின்வருமாறு எழுத வேண்டும்.
முன்னொட்டு +மூலவார்த்தை +முதன்மை பின்னொட்டு +இரண்டாம் நிலை பின்னொட்டு.
39.
40.
வாயு நிலைமை மற்றும் திரவ நிலைமை ஆகிய இரு நிலைமைகளிலும் இம் மூலக்கூறு, சாய்வு வசஅமைப்பினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆக்சிஜன் மீதுள்ள தனித்த எலக்ட்ரான்களுடன், OH பிணைப்பின் விலக்கு இடைவினை காரணமாக இவ்வமைப்பு ஏற்படுகிறது. மேலும், இது ஒற்றைப் பிணைப்பின் வழியே ஏற்படும் சுழற்சித் தடையினை பெற்றுள்ள சிறிய மூலக்கூறாகும்.

H2O2 ன் அமைப்பு
H2O2 ஆனது முனைவற்ற வடிவமைப்பினைப் பெற்றுள்ளது. வாயு நிலைமை மற்றும் திடநிலைமையில் மூலக்கூறு வடிவமைப்பின் பரிமாணங்கள் படம் கொடுக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பினைப் பொருத்தவரையில், இரண்டு OH- தொகுதிகளும் ஒரே தளத்தில் அமையாத இருதள (dihedral) வடிவமைப்பின் மூலம் H2O2 வை குறிப்பிடலாம். பகுதியளவு திறந்து வைக்கப்பட்டுள்ள புத்தகத்தின், அச்சில் ஆக்சிஜன் அணுக்களும், பக்கங்களில் ஹைட்ரஜன் அணுக்களும், பக்கங்களில் ஹைட்ரஜன் அணுக்களும் இருப்பதாக இதன் வடிவமைப்பினை உருவாக்கப்படுத்தலாம். திட நிலைமையில் உள்ள மூலக்கூறில் ஹைட்ரஜன் பிணைப்பின் காரணமாக இரு தளங்களுக்கும் இடையேயான கோணம் 90.2° ஆக குறைகிறது. மேலும் -O-O-H கோணம் 94.8° லிருந்து 101.9° ஆக அதிகரிக்கிறது.
41.
இங்கு
\(\triangle U=n{ C }_{ v }\left( { T }_{ 2 }-{ T }_{ 1 } \right) \)
\(\triangle H=n{ C }_{ p }\left( { T }_{ 2 }-{ T }_{ 1 } \right) \)
\(n=\frac { 128 }{ 32 } =4\)
T2=1000 C=373k ;T1=00;C=273k
\(\triangle U=n{ C }_{ v }\left( { T }_{ 2 }-{ T }_{ 1 } \right) \)
\(\triangle U=4\times 21\times \left( 373-273 \right) \)
\(\triangle U=8400J\)
\(\triangle U=8.4kJ\)
\(\triangle H=n{ C }_{ p }\left( { T }_{ 2 }-{ T }_{ 1 } \right) \)
\(\triangle H=4\times 29\times \left( 373-273 \right) \)
\(\triangle H=11600J\)
\(\triangle H=11.6kJ\)
42.
43.
(1) நைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு:
7N =1s2 2s2 2p3
ஆக்ஸிஜனின் எலக்ட்ரான் அமைப்பு
8O =1s2 2s2 2p4
(ii) இரண்டிலும் 2p கூட்டில் இருந்து ஒரு எலக்ட்ரானை நீக்க வேண்டும்.
(iii) சரிபாதியளவு நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பின் காரணமாக நைட்ரஜன் அதிக நிலைப்பு தன்மை பெற்றுள்ளது.
(iv) ஆதலால், நைட்ரஜனின் 2p ஆர்பிட்டாலில் இருந்து ஒரு எலக்ட்ரானை நீக்குவதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.
(iv) நைட்ரஜனோடு ஒப்பிடும்போது ஆக்ஸிஜனில் 2p எலக்ட்ரானை நீக்குவது எளிதாகிறது.
(2) போரானின் எலக்ட்ரான் அமைப்பு:
5B =1s2 2s2 2p1
கார்பனின் எலக்ட்ரான் அமைப்பு
6C =1s2 2s2 2p2
(i) இதில் கார்பனின் உட்கரு மின்சுமை போரானை விட அதிகம்.
(ii) மேலும் கார்பன் போரானை விட உருவளவில் சிறியதாக இருப்பதாலும் கார்பனின் முதல் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பு அதிகம்.
(iii) ஆனால், கார்பனில் இருந்து இரண்டாவது எலக்ட்ரானை நீக்குவது எளிது. போரானில் முழுவதும் நிரம்பிய 2s ஆர்பிட்டால் இருப்பதால் போரானின் இரண்டாவது அயனியாக்கும் ஆற்றல் கார்பனைவிட அதிகம்.
(3) Be-ன் எலக்ட்ரான் அமைப்பு
Mg ன் எலக்ட்ரான் அமைப்பு = 1s2 2s2 2p6 3s2 மந்த வாயுக்களின் எலக்ட்ரான் அமைப்பு = ns2 np6
இவற்றில்,
(i) முழுவதும் நிரம்பிய வெளிக்கூட்டை (இணைதிறகூட்டை) பெற்றிருப்பதால் மேலும் ஒரு எலக்ட்ரானை சேர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
(ii) எனவே தான் Bc, Mg மற்றும் மந்த வாயுக்கள் புஜ்ஜிய எலக்ட்ரான் நாட்ட மதிப்பைப் பெறுகின்றன.
(iii) நைட்ரஜனின் எலக்ட்ரான் அமைப்பு: 1s2 2s2 2p2
(iv) பாஸ்பரஸின் எலக்ட்ரான் அமைப்பு: 1s2 2s2 2p2 3s2 3p3
இவற்றில்,
(v) சரிபாதியளவு நிரம்பிய இணைதிற கூட்டை பெற்றிருப்பதால் நிலைப்புத் தன்மையுடன் உள்ளது. ஏனவே எலக்ட்ரானை சேர்ப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு.
(vi) எனவேதான் N மற்றும் p ன் எலக்ட்ரான் நாட்ட மதிப்புகள் ஏறக்குறைய பூஜ்ஜியமாக அல்லத பூஜ்ஜியத்திற்கு அருகில் உள்ளது.
(4) ப ஆனது அதிக எதிர்மின் தன்மை கொண்டது. எனவே, இது ஒரு எலக்ட்ரானை சேர்த்துக் கொண்டு நிலையான எலக்ட்ரான் அமைப்பை உடைய F- அயனியாக மாறுகிறது.
(i) அச்சமயம் வெப்பமானது வெளிவிடப்படுகிறது. எனவேதான், F(g) லிருந்து F(g)- உருவாவது வெப்ப உமிழ்வினையாகும்.
(ii) ஆக்ஸிஜனுடன் ஒரு எலக்ட்ரானை சேர்க்கும் வினை வெப்ப உமிழ்வினையாகும்.
(iii) ஆனால் இரண்டாவது எலக்ட்ரானை சேர்க்கும்போது எலக்ட்ரான் -எலக்ட்ரான் விலக்குவிசை ஏற்படுகிறது.
(iv) இதனை பூர்த்தி செய்ய வெளியில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி கொண்டு இணைதிற கூட்டில் எலக்ட்ரான் நுழைகிறது.
(v) எனவே O(g) லிருந்து O(g)2- உருவாகும் வினை வெப்ப கொள்வினை ஆகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards