11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/05/2020
11 ஆம் வகுப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் பகுதி V (11th Standard Chemistry Model Question Paper Part V)
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
கூற்று (A) : அனைத்து முக்கியமான உயிர்வேதி வினைகளும் கரிமவேதி வினையாகும்.
காரணம் (R): இவ்வினைகளின் விளைவாக பாஸ்போலிப்பிடுகள், லிப்போ புரோட்டீன்கள், கிளைக்கோ லிப்பிடுகள் போன்ற முக்கியமான கரிம வேதிப்பொருள்கள் உருவாகின்றன.
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம் அல்ல
(A) சரி, காரணம் (R) தவறு
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
2.
பின்வருவனவற்றை பொருத்துக.
| அடுக்குகள் | புவிப்பரப்பிலிருந்து உயரம் | ||
| A. | தெர்மோஸ் பியர் | 1. | 0-10 km |
| B . | மீஸோஸ் பியர் | 2 | 10-50 km |
| C. | ஸ்ட்ரோபோஸ் பியர் | 3. | 50-85 km |
| D. | ட்ரோபோஸ் பியர் | 4. | 85-500 km |
| A | B | C | D |
| 1 | 2 | 3 | 4 |
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
| A | B | C | D |
| 2 | 3 | 1 | 4 |
| A | B | C | D |
| 1 | 4 | 3 | 2 |
3.
ஒரு மோல் K+ உருவாவதற்கு தேவைப்படும் ஆற்றலின் மதிப்பு
-436.21 KJ
418.81 KJ
-348.56 KJ
718.18 KJ
4.
பின்வருவற்றுள் இரண்டு பென்சீன் வளையங்களை உடைய சேர்மம் எது?
ஆந்தரசீன்
நாப்தலீன்
டொலுவீன்
பிரிடின்
5.
ஹீலியத்தை திரவமாக்க பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் முறை
லிண்டே முறை
ஜூல் -தாம்சன் விளைவு
கிளாட் முறை
கார்னாட் முறை
6.
பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?
H=G-TS
G=H-TS
\(G= \triangle E- T\triangle S\)
G=V-TS
7.
இரண்டு திரவங்கள் X மற்றும் Y ஆகியன கலக்கப்படும்போது வெதுவெதுப்பான கரைசலைத் தருகின்றன. அந்தக் கரைசலானது
நல்லியல்புக் கரைசல்
நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து நேர்க்குறி விலக்கத்தை காட்டுகிறது.
நல்லியல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.
இயல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.
8.
ன் IUPAC பெயர்
2-புரோமோ பென்ட் – 3 – ஈன்
4-புரோமோ பென்ட் – 2 – ஈன்
2-புரோமோ பென்ட்– 4 – ஈன்
4-புரோமோ பென்ட்– 1 – ஈன்
9.
N2(g) + 3H2(g) ⇌ 2NH3(g) என்ற வினையின் \(\frac { { K }_{ c } }{ { K }_{ p } } = ?\)
\(\frac { 1 }{ RT } \)
\(\sqrt {RT }\)
RT
(RT)2
10.
(A) CH3CH2CH2Br + KOH → CH3 - CH= CH2 + KBr +H2O
(B) (CH3)3CBr + KOH → (CH3)3 COH + KBr

மேற்கண்டுள்ள வினைகளுக்கு, பின்வரும் எந்த கூற்று சரியானது?
(A) நீக்க வினை (B) மற்றும் (C) பதிலீட்டு வினைகள்
(A) பதிலீட்டு வினை (B) மற்றும் (C) நீக்க வினைகள்
(A) மற்றும் (B) நீக்க வினைகள் மற்றும் (C) சேர்க்கை வினை
(A) நீக்க வினை (B) பதிலீட்டு வினை மற்றும் (C) சேர்க்கை வினை
11.
கூற்று : BeSO4 நீரில் கரைகிறது, ஆனால் BeSO4 நீரில் கரைவதில்லை.
காரணம் : தகுதியில் Be லிருந்து Ba வரை செல்ல செல்ல நீரேற்ற ஆற்றல் குறைகிறது.மேலும் படிகக்கூடு ஆற்றல் மாறாமல் உள்ளது.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகமாகமாகும்.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணமானது, கூற்றிற்கான சரியான விளக்கம் இல்லை.
கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
12.
1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° c மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை
66.25 g mol-1
44 g mol-1
24.5 g mol-1
662.5 g mol-1
13.
பின்வரும் d ஆர்பிட்டால் இணைகளில் எலக்ட்ரான் அடர்த்தியினை அச்சுகளின் வழியே பெற்றிருப்பது எது?
\(d_{Z^{2}}\),dxy
dxy,dyz
\(d_{Z^{2}}\),\(d_{x^{2}-y^{2}}\)
dxy,\(d_{x^{2}-y^{2}}\)
14.
வேதிவினைக்கூறு விகிதத்தின் அடிப்படையில் அமையாத (non-stoichiometric) ஹைட்ரைடுகளை உருவாக்குபவை
பெலேடியம், வெனேடியம்
கார்பன், நிக்கல்
மாங்கனீசு, லித்தியம்
நைட்ரஜன், குளோரின்
15.
நேர் குறி எலக்ட்ரான் நாட்ட மதிப்பினை பெற்றுள்ளத் தனிமம்
ஹைட்ரஜன்
சோடியம்
ஆர்கான்
புளூரின்
16.
DDT பூச்சிக்கொல்லியின் IUPAC பெயர் என்ன? பெரும்பலான நாடுகளில் இவற்றின் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது. ஏன்?
17.
நார்மாலிட்டியை கணக்கிட பயன்படும் வாய்ப்பாடு எது?
18.
பல்வேறு மேலும் வினைகளைப் பற்றிய ஆய்வு முடிவுகளில் அடிப்படையில் நிறைத்தாக்க விதியினை உருவாக்கியவர்கள் யார்?
19.
வாயு மற்றும் ஆவி இரண்டிற்கும் இடையேயான வேறுபாடு யாது?
20.
பெரிலியம் ஹைட்ராக்சைடின் ஈரியல்புத் தன்மைக்கான சமன்பாடுகளை எழுது.
21.
டாபரீனர் வகைப்பாட்டின் குறைபாடுகள் யாவை?
22.
எலக்ட்ரான் கொள்கைப்படி ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினைகள் என்றால் என்ன?
23.
கரிமச்சேர்மங்களை அவற்றின் அமைப்பின் அடிப்படையில் வகைப்படுத்தலை விவரி.
24.
கீழ்க்கண்ட வினைகளுக்கு வேதிச் சமன்பாட்டினை எழுதுக.
(i) டங்க்ஸ்டன் (vi) ஆக்ஸைடுடன், ஹைட்ரஜனை வெப்பப்படுத்துதல்
(ii) ஹைட்ரஜன் வாயு மற்றும் குளோரின் வாயு
25.
குளோரினின் எலக்ட்ரான் ஏற்கும் என்தால்பி மதிப்பு 348 KJ mol-1 வாயநிலையில் உள்ள 17.5g குளோரின் அணுக்கள் முழுவதும் Cl- அயனியாக மாற்றப்படும்போது வெளியிடப்படும் ஆற்றலின் மதிப்பினை KJ ல் கணக்கிடுக.
26.
ஒரு சேர்மம் பகுப்பாய்வில் பின்வரும் சதவீத இயையைக் கொண்டுள்ளது. C =54.55%, H =9.09%, O=36.36% அச்சேர்மத்தின் எளிய விகித வாய்ப்பாட்டினைக் கண்டறிக.
27.
250 C வெப்பநிலையில் ஒரு சமநிலை வினைக்கு Kp=0.0260 மற்றும் ΔH= 32.4KJmol-1 370 C வெப்பநிலையில் KPன் மதிப்பினைக் கண்டறிக.
28.
பின்வருவனவற்றை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
(i) கார உலோகங்களின் எலக்ட்ரான் அமைப்பு
(ii) கார உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற
29.
பின்வருவனவற்றிற்கு \(\triangle \)S குறியீடுகளை
1. மீளாத தன்னிச்சையான செயல்
2. சமநிலையில் உள்ள மீள் செயல்முறை
3. துன்னிச்சையற்ற செயல்
30.
நல்லியல்பு வாயுக்கள் என்பன யாவை? இயல்புவாயுக்கள் நல்லியல்பு வாயுக்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
31.
ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.
32.
குவாண்டம் எண்களை அடிப்படையாகக் கொண்டு தனிம வரிசை அட்டவணையின் 5வது வரிசையில் 18 தனிமங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதை நிறுவுக.
33.
கீழ்க்கண்ட வேதி வினைகளை பூர்த்தி செய்து.
(அ) நீராற் பகுத்தல் (ஆ) ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள் (இ) நீரேற்ற வினைகள் என வகைப்படுத்துக
(i) KMnO4 + H2O2 →
(ii) CrCl3 + H2O →
(iii) CaO + H2O →
34.
காரமண் உலோகங்களின் பின்வரும் பொதுப் பண்புகளைப் பற்றி எழுதுக.
(i) அணு மற்றும் அயனி ஆரம்
(ii) பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
(iii) அயனியாக்கும் ஆற்றல்
35.
பின்வருவனவற்றைப் பற்றி குறிப்பு எழுதுக
(i) உருகுதல் என்டரோபி
(ii) ஆவியாதல் என்டரோபி
(iii) புறவேற்றுமை வடிவமாறுதல் என்டரோபி
36.
நீரின் இயற்பண்புகள் மற்றும் ஏதேனும் மூன்று வேதிப்பண்புகள் எழுதுக.
37.
4f2 என்ற குறியீடு உணர்த்தும் பொருள் யாது? இதில் உள்ள எலக்ட்ரான்களுக்கு, நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் எழுதுக.
38.
ஹாலஜன்களை அளந்தறியும் காரியஸ் முறையை விவரி.
39.
ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாதலுக்கான VB கொள்கையின் அடிப்படையை விவரி.
40.
எதிர் - மார்கோனிகாப் விதி (அ) பெராக்சைடு விளைவு (அ) கேராஸ் விதியின் வினை வழிமுறைய எழுது.
41.
1L மூடிய கலனில் 28g N2 மற்றும் 6g H2 கலக்கப்படுகிறது. சமநிலையில் 17g NH3 உருவாகிறது. நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனின் எடையினை சமநிலையில்கணக்கிடுக.
42.
பின்வரும் நிபந்தனைகளில் ஒரு வாயு நல்லியல்பு பண்பினை பெறுகிறதா அல்லது நல்லியல்பு பண்பிலிருந்து விலகிச் செல்கிறதா என விவரி?
அ) மாறா வெப்ப நிலையில் அது மிகச்சிறிய கனஅளவிற்கு அழுத்தப்படும் போது
ஆ) மாறா கனஅளவில் அதன் வெப்பநிலையை உயர்த்தும் போது
இ) சமவெப்ப மற்றும் சமகன அளவு நிலையில் அதிக அளவு வாயு சேர்க்கப்படும் போது
43.
அயனி ஆரத்தினை கண்டறியும் பாலிங் முறையினை விவரி.
1.
(a)
(A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம்
2.
(b)
| A | B | C | D |
| 4 | 3 | 2 | 1 |
3.
(b)
418.81 KJ
4.
(b)
நாப்தலீன்
5.
(b)
ஜூல் -தாம்சன் விளைவு
6.
(b)
G=H-TS
7.
(d)
இயல்புக் கரைசல் மற்றும் ரெளல்ட் விதியிலிருந்து எதிர்குறி விலக்கத்தை காட்டுகிறது.
8.
(b)
4-புரோமோ பென்ட் – 2 – ஈன்
9.
(d)
(RT)2
10.
(d)
(A) நீக்க வினை (B) பதிலீட்டு வினை மற்றும் (C) சேர்க்கை வினை
11.
(a)
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமாகமாகமாகும்.
12.
(b)
44 g mol-1
13.
(c)
\(d_{Z^{2}}\),\(d_{x^{2}-y^{2}}\)
14.
(a)
பெலேடியம், வெனேடியம்
15.
(c)
ஆர்கான்
16.
1. DDT பூச்சிக்கொல்லியின் IUPAC பெயர் பின்வருமறு.
2. 1-குளோரோ -4-[2,2,2-டிரைகுளோரோ-1-(4 குளோரோபினைல்) எத்தில்] பென்சீன்
.3. இது சிறந்த பூச்சிக்கொல்லியாக இருந்த போதிலும், இதன் நீண்ட கால தன்மையின் காரணமாக பெரும்பாலான நாடுகளில் இவற்றின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
17.
18.
மேக்மில்லன் குல்பெர்க் (ம) பீட்டர்வே.
19.
1. அறை வெப்பநிலை மற்றும் 1atm அழுத்தத்தில் இயல்பாகவே வாயு நிலைமையில் உள்ள ஒரு பொருள் வாயு எனவும்.
2. அறை வெப்பநிலை மற்றும் 1 atm அழுத்தத்தில் திட அல்லது திரவ நிலையில் இருக்கும் ஒரு பொருளின் வாயு நிலை வடிவம் ஆவி எனவும் அழைக்கப்படுகிறது.
20.
1. அமிலம் மற்றும் காரம் ஆகிய இரண்டுடனும் வினைபுரிகின்றது. எனவே இது ஈரியல்புத் தன்மை உடையது.
2. Be(OH)2 2NaOH ⟶ Na2BeO2 + 2H2O
3. Be(OH)2 + 2HCl ⟶ BeCl2 + 2H2O
21.
1. குறிப்பிட்ட சில தனிமங்களை மட்டுமே மும்மைத் தொகுதிகளாக வகைப்படுத்த முடிந்தது.
2. ஏறத்தாழ ஒத்த அணு நிறைகளைப் பெற்றுள்ள [Fe, Co, Ni] [Ru, Rh, Pd] [Os, Ir, Pt] போன்ற மும்மைத் தொகுதிகளுக்கு இவ்வகைப்பாட்டுக்குக் கொள்கையினைப் பயன்படுத்த இயலவில்லை.
22.
ஒரு வேதி வினையின் போது எலக்ட்ரான்களை இழந்தால் ஆக்சிஜனேற்றம் Fe2+ ⟶ Fe3+ + e- எலக்ட்ரான்களை ஏற்றுக்கொண்டால் ஆக்சிஜன் ஒடுக்கம்
Cu2+ + 2e- ⟶ Cu
23.

24.
(i) WO3 + 3H2 \(\rightarrow \) W + 3H2O
(ii) H2 + CI2 \(\rightarrow \) 2HCI
25.
Cl(g) + e- ⟶ \({ Cl }_{ (g) }^{ - }\) ; ΔH =348 KJ mol-1
ஒரு மோல் குளோரின் 348 KJ ஆற்றலை வெளியிடுகிறது.
∴ 17.5 g குளோரின் வெளியிடும் ஆற்றல்
=\(\frac { 348 }{ 2 } \) KJ =174 KJ
26.
| தனிமம் | சதவீதம் | அணுநிறை | ஒப்பு அணுக்களின் எண்ணிக்கை | எளிய விகிதம் |
| C | 54.55% | 12 | \(\frac { 54.55 }{ 12 } \)=4.55 | \(\frac { 4.55 }{ 2.27 } \)=2 |
| H | 9.09% | 1 | \(\frac { 9.09 }{ 1 } \)=9.09 | \(\frac { 9.09 }{ 2.27 } \)=4 |
| O | 36.36% | 16 | \(\frac { 36.36 }{ 16 } \)=2.27 | \(\frac { 2.27 }{ 2.27 } \)=1 |
எளிய விகித வாய்ப்பாடு =C2H4O
27.
T1 = 25 + 273 = 298 K
T2 = 37 + 273 = 310 K
ΔH = 32.4 KJmol-1 = 32400 Jmol-1
R = 8.314 JK-1 mol-1
KP1= 0.0260
Kp2 = ?
\(\log {K_2\over K_1}={\Delta H^o\over 2.303R}[{T_2-T_1\over T_2T_1}]\)
\(\log {K_2\over K_1}={32400\over 2.303\times 8.314}({310-298\over 310\times 298})\)
\(={32400\times 10\over 2.303\times 8.314\times 310\times 298}\)
= 0.2198
\({K_2\over K_1}=\) antilog 0.2198 = 1.6588
K2 = 1.6588 x 0.026 = 0.0431
28.
(i)
| தனிமம் | குறியீடு | அணு எண் | எலக்ட்ரான் அமைப்பு |
|---|---|---|---|
| லித்தியம் | Li | 3 | [He]2s1 |
| சோடியம் | Na | 11 | [Ne]3s1 |
| பொட்டாசியம் | K | 19 | [Ar]4s1 |
| ரூபீடியம் | Rb | 37 | [Kr]5s1 |
| சீசியம் | Cs | 55 | [Xe]6s1 |
| ஃபிரான்ஷியம் | Fr | 87 | [Rn]7s1 |
(ii) பொதுவான ஆக்ஸிஐனேற்ற நிலை:இந்த தனிமங்கள் அனைத்தும் அதிக நேரமின்தன்மை கொண்டவையாக உள்ளன.இவைகள் எளிதில் தங்களின் இணைதிறன் கூட்டு எலக்ட்ரானை இழந்து ஒற்றை மின்சுமையுடைய நேர்மின் அயனிகளை (M+) உருவாக்குகின்றன.கார உலோகங்கள் +1 என்ற ஒரே ஒரு ஆக்ஸினேற்ற நிலையை மட்டுமே கொண்டுள்ளன.
29.
| செயல் | தன்னிச்சை செயல் | சமநிலை | தன்னிச்சையற்ற செயல் |
| \(\triangle \)S | +ve | 0 | -ve |
30.
பாயில் விதிக்கும் சார்ல்ஸ் விதிக்கும் உட்பட்டு செயல்படும் வாயுக்கள் நல்லியல்பு வாயுக்கள் எனப்படும்
PV = nRT என்பது நல்லியல்பு வாயு ச் சமன்பாடாகும்
| நல்லியல்பு வாயு | இயல்பு வாயு |
|---|---|
| எல்லா வாயுவிதிகளையும் அனைத்தும் சூல்நிலைகளிலும் உட்பட்டு செயல்படும் | எல்லா வாயுவிதிகளையும் குறைந்த அழுத்தம் மற்றும் அதிக வெப்ப நிலையில் மட்டுமே உட்பட்டு செயல்படும் |
| வாயுமூலக்கூறுகளின் கன அளவானது வாயுவின் மொத்த கள அளவை ஒப்பு நோக்கும்போதும் தள்ளத்தக்கது | வாயு மொத்த கன அளவை ஒப்பிடுகை யில் வாயு மூலக்கூறுகள் அடைந்துள்ள கன அளவை தள்ள முடியாது |
| மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசையானது தள்ளத்தக்கது | மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசையானது தள்ள முடியாது |
31.
1. ஜெர்மன் மொழியில் ஆஃபா என்ற சொல்லுக்கு கட்டமைத்தல் என்பது பொருளாகும்.
2. அடி ஆற்றல் நிலையில் உள்ள அனுவின், ஆர்பிட்டால்கள் அவற்றின் ஆற்றலின் ஏறுவரிசையில் நிரப்பப்படுகின்றன.
3. அதாவது, எலக்ட்ரான்கள், அவை நிரப்பப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆர்பிட்டால்களில், எந்த ஆர்பிட்டால் குறைந்த ஆற்றலுடையதோ அந்த ஆர்பிட்டாலில் முதலில் நிரம்பும்.
4. குறைவான ஆற்றலுடைய ஆர்பிட்டால் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே, எலக்ட்ரானானது அடுத்த உயர் ஆற்றலுடைய ஆர்பிட்டாலினுள் நுழையும்.

5. மேலே உள்ள படம் ஆஃபா தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு ஆர்பிட்டால்களின் நிரப்பப்படும் வரிசை தரப்பட்டுள்ளது.
6. இவ்வரிசை (n+1) விதிப்படி அமைந்துள்ளது.
32.
(i) ஆஃபா தத்துவத்தின்படி 5வது வரிசையில் ஒன்பது ஆர்பிட்டால்கள் நிரப்பப்படலாம். (ஒரு 5s, ஐந்து 4d மற்றும் மூன்று 6p ஆர்பிட்டால்கள்)
(ii) ஒன்பது ஆர்பிட்டால்கள் அதிகபட்சமாக 18 எலக்ட்ரான்களை அடைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
(iii) எனவே 5வது வரிசையில் ருபிடியம் (z=37) முதல் செனான் (z=54) வரை 18 தனிமங்கள் உள்ளன.
33.
(i) 2KMnO4 + 5H2O2 + 3H2SO4 \(\rightarrow\) K2SO4 + 2MnSO4 + 5O2+8H2O
(ii) CrCI3 + 6H2O \(\rightarrow\) CrCI3.6H2O
(iii) CaO + H2O \(\rightarrow\) Ca(OH)2
இவற்றுள்
(அ) நீராற் பகுத்தல்
(iii) CaO + H2O \(\rightarrow\) Ca(OH)2
(ஆ) ஆக்ஸிஜனேற்ற வினை
(i) 2KMnO4 + 5H2O2 + 3H2SO4 \(\rightarrow\) K2SO4 + 2MnSO4 + 5O2 (அமில ஊடகத்தில்) + 8H2O
(இ) நீரேற்ற வினை -
(ii) CrCI3 + 6H2O \(\rightarrow\) CrCI3.6H2O
34.
(i) அணு மற்றும் அயனி ஆரம்:
1. காரமண் உலோகங்களின் அணு மற்றும் அயனி ஆரங்களின் மதிப்புகள் அவற்றிற்கு இணையான கார உலோகங்களைக் காட்டிலும் குறைவானதாகும்.
2. ஏனெனில் இரண்டாம் தொகுதி தனிமங்கள் அதிக அணுக்கரு மின் சுமையைப் பெற்றிருப்பதால் அவைகளின் எலக்ட்ரான்கள் அணுக்கருவினை நோக்கி வலிமையாககை கவரப்படுகின்றன.
3. தொகுதியில் மேலிருந்து கீழே வரும் போது, குருக்களின் எண்ணிக்கை மற்றும் திரை மறைப்பு விளைவு அதிகரிப்பதால் அணு ஆரம் அதிகரிக்கின்றது.
(ii) பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை:
1. இரண்டாம் தொகுதி தனிமங்கள், அவைகளின் இணைதிறன் கூட்டில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன.
2. அவைகளை இழப்பதன் மூலம் மந்தவாயுவின் எலக்ட்ரான் அமைப்பினைப் பெறுகின்றன.
3. எனவே இவற்றின் சேர்மங்களில் +2 ஆக்சிஜனேற்ற நிலையில் காணப்படுகின்றன.
(iii) அயனியாக்கும் ஆற்றல்:
1. p -தொகுதி தனிமங்களோடு ஒப்பிடும்போது காரமண் உலோகங்கள் ஓரளவிற்கு பெரிய உருவளவினைப் பெற்றிருப்பதாலும், தொகுதியில் கீழாக, அணுவின் உருவளவு அதிகரிப்பதாலும், அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது.
3. புதிய கூடுகள் உருவாக்கப்படுதல் மற்றும் உட்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் திரைமறைப்பு விளைவு அதிகமாதல் ஆகியவை எதற்கு காரணமாக அமைகின்றன.
35.
(i) உருகுதல் என்டரோபி:
ஒரு மோல் திண்மம், அதன் உருகுநிலையில், மீள் முறையில் உருகும் போது உறிஞ்சப்படும் வெப்பம் மோலார் உருகுதல் வெப்பம் எனப்படுகிறது. இச்செயல்முறைக்கான என்டரோபி மாற்றம் உருகுதல் என்டரோபி எனப்படும்.
ΔSr =\(\frac { \triangle H_{ v } }{ { T }_{ b } } \)
ΔSfusion =\(\frac { \triangle H_{ fusion } }{ { T }_{ f } } \)
(ii) ஆவியாதல் என்டரோபி:
1. ஒரு மோல் திரவம், தன கொதிநிலையில், மீன் முறையில் ஆவியாகும் போது உறிஞ்சப்படும் வெப்பம் மோலார் ஆவியாதல் வெப்பம் எனப்படுகிறது.
2. இச் செயல்முறைக்கான என்டரோபி ஆவியாதல் என்டரோபி எனப்படும்.
ΔSv =\(\frac { \triangle H_{ v } }{ { T }_{ b } } \)
(iii) புறவேற்றுமை வடிவமாறுதல் என்டரோபி:
1. ஒரு மோல் திண்மம், அதன் புறவேற்றுமை வடிவமாறு வெப்பநிலையில் மீள் முறையில் ஒரு புறவேற்றுமை வடிவத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றமடையும் போது ஏற்படும் வெப்ப மாற்றம் மோலார் புறவேற்றுமை வடிவமாறு வெப்பம் எனப்படுகிறது.
2. இச்செயல்முறைக்கான என்டரோபி மாற்றம் புறவேற்றுமை வடிவமாறுதல் என்டரோபி எனப்படுகிறது.
ΔSt =\(\frac { \triangle { H }_{ t } }{ { T }_{ t } } \)
36.
இயற்பண்புகள்:
1. நீரானது நிறமற்ற எளிதில் ஆவியாகக் கூடிய நீர்மமாகும்.
2. மூலக்கூறுகளுக்கிடையேயான ஹைட்ரஜன் பிணைப்பினால், குறுக்கப்பட்ட நிலைமையில் நீரானது தனித்த பண்புகளைப் பெற்றிருக்கிறது.
3. நீரின் அதிக உறைநிலைக்கும், கொதிநிலைக்கும் நேரில் உள்ள ஹைட்ரஜன் பிணைப்பே காரணமாகும்.
வேதிப்பண்புகள்:
(i) கார உலோகங்களுடன் வினை:
1. கார உலோகங்கள் அதிக வினைத்திறன் மிக்கவை.
2. இவை நீர் குளிர்ந்த நிலையில் இருந்தாலும் கூட அதனை சிதைவடையச் செய்து ஹைட்ரஜனை வெளியேற்றுவதுடன், காரக் கரைசலைத் தருகின்றது.
2Na + 2H2O ⟶ 2NaOH + H2 ↑
(ii) இடைநிலைத் தனிமங்களுடன் வினை:
சில இடைநிலைத் தனிம உலோகங்கள், சூடான நீருடனோ அல்லது நீராவியுடனோ வினைபுரிந்து அவற்றின் ஆக்ஸைடுகளைத் தருகின்றது.
3Fe + 4H2O ⟶ Fe3O4 + 4H2 ↑
(iii) ஹேலஜன்களுடன் வினை:
ஹேலஜன்கள் நீருடன் வினைபுரிந்து அமிலக் கரைசலைத் தருகின்றது.
Cl2 + H2O ⟶ HCl + HOCl
37.
38.
1.எடை அறிந்த கரிமச்சேர்மம், புகையும் HNO3 மற்றும் AgNO3 வுடன் சேர்த்து வெப்பப்படுத்தப்படுகிறது. C, H மற்றும் S முறையே CO2, H2O மற்றும் SO2 ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது. ஹாலஜன்கள் AgNO3 வுடன் சேர்ந்து வெள்ளிஹாலைடுகளாக வீழ்படிவாகின்றன.

2.AgX வீழ்படிவு வடிகட்டப்பட்டு, கழுவி, உலர்த்தி எடையறியப்படுகிறது. AgX ன் மற்றும் கரிமச்சேர்மத்தின் எடை ஆகியவற்றில் இருந்து ஹாலஜன்களின் சதவீதம் கணக்கிடப்படுகிறது.
3. ஒரு தூய்மையான கேரியஸ் குழாயில் துல்லியமாக எடையறியப்பட்ட சேர்மம் புகையும் HNO3 மற்றும் AgNO3 ஆகியவனவற்றுடன் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
4.குழாயின் திறந்த முனை மூடப்பட்டு இரும்பு குழாயினுள் 530-540 K வெப்பநிலையில் வைக்கப்படுகிறது.
5. பின்னர் குழாயானது குளிர்விக்கப்படுகிறது. இக்குழாயில் சிறிய துளையிடப்பட்டு உருவான வாயுக்கள் வெளியேற்றப்படுகிறது.
6.அதன் பின்னர் குழாய் உடைக்கப்பட்டு வீழ்படிவு வடிகட்டப்பட்டு, கழுவப்பட்டு, உலர்த்தப்பட்டு எடை கண்டறியப்படுகிறது.
7. உருவான AgX ன் நிறையிலிருந்து, கரிமச் சேர்மத்திலுள்ள ஹாலஜனின் சதவீதம் கணக்கிடப்படுகிறது.
கரிமசேர்மத்தின் எடை : w g
AgCl வீழ்ப்படிவின் எடை : a g
143.5 AgCl ல் உள்ள குளோரினின் எடை =35.5 g
a g AgCl ல் உள்ள குளோரினின் எடை= \(\frac{35.5}{143.5}\)x a
W g கரிமச் சேர்மம் a g AgCl யை தருகிறது.
w g கரிமச் சேர்மத்திலுள்ள குளோரினின் சதவீதம்
=\((\frac{35.5}{143.5}\times \frac{a}{w}\times100)\)%
சில்வர் புரோமைடின்எடை 'b' g என கருத்துக.
188 g AgBr ல் 80 g Br உள்ளது.
W g கரிமச் சேர்மம் b g AgBr யை தருகிறது.
கரிமச் சேர்மத்தில்
Br ன் சதவீதம் =\((\frac{80}{188}\times \frac{b}{w}\times 100)\)%
சில்வர் ஐயோடைடு எடை 'c' g என கருத்துக.
235g Agl ல் 127 g I.
C g Agl ல்\((\frac{127}{235}\times \frac{c}{w})\) g I உள்ளது.
W g கரிமச் சேர்மத்தில் c g AgI யை தருகிறது.
கரிமச் சேர்மத்தில்
I ன் சதவீதம் =\((\frac{127}{235}\times \frac{c}{w}\times 100)\)%
39.

புதிய கவர்ச்சி விசைகள் (கருப்பு நிற அம்புகுறி)
(i) Ha ன் அணுக்கருவிற்கும், Hb ன் இணைதிற எலக்ட்ரானுக்கும் இடையே உருவாகிறது.
(ii) Ha ன் அணுக்கருவிற்கும், Hb ன் இணைதிற எலக்ட்ரானுக்கும் இடையே உருவாகிறது.
புதிய விலக்கு விசைகள் (ஆரஞ்சு நிற அம்புக்குறி)
(i) Ha மற்றும் Hb ஆகிய அணுக்கருக்களுக்கிடையே உருவாகிறது.
(ii) Ha மற்றும் Hb ஆகிய இணைதிறன் எலக்ட்ரான்களுக்கு இடையே உருவாகிறது.
(iii) கவர்ச்சி விசையின் காரணமாக Ha மற்றும் Hb ஆகியன ஒன்றோடொன்று நெருங்குகின்றன. ஆனால் அதே நேரத்தில் விலக்குவிசைகள் அவைகளை விலகலடையுமாறுச் செய்கின்றன. ஆரம்ப நிலையில், இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஒன்றோடொன்று நெருங்கும்போது, விலக்கு விசையினைக் காட்டிலும், கவர்ச்சி விசைகள் அதிக வலிமையுடையதாக உள்ளன. மேலும் நிலை ஆற்றல் குறைந்துக் கொண்டே வருகின்றது. ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்ததும் நிகர கவர்ச்சி விசையானது விலக்கு விசைகளுக்குச் சரி சமமாகிறது. இந்நிலையில் அமைப்பானது, மிகக் குறைந்த நிலை ஆற்றலைப் பெற்றிருக்கும்.

H2 மூலக்கூறு உருவாதல் -VB கொள்கை
(i) இந்நிலையில் ஹைட்ரஜன் அணுக்களின் (Ha மற்றும் Hb) அணு ஆர்பிட்டால்களுக்கிடையே அதிகபட்ச மேற்பொருந்துதல் நிகழ்கிறது. மேலும் இந்நிலையில் அவைகள் ஒன்றோடொன்று சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன எனப்படுகிறது. இந்நிலையில் அவ்விரு ஹைட்ரஜன் அணுக்களுக்கிடையேயானத் தொலைவு H-H பிணைப்பு நீளத்தைத் தருகிறது. அதன் மதிப்பு 74pm. இந்நிலையில் வெளியிடப்படும் பிணைப்பாற்றல் எனப்படுகிறது.
(ii) இந்த பிணைப்பு உருவாதலில் ஆற்றல் வெளியிடப்படுகிறது. எனவே உருவான மூலக் கூறானது அதிக நிலைப்புத்தன்மை உடையது.
இவ்விரு அணுக்களுக்கு இடையேயான தொலைவினை மேலும் குறைக்கும் பொழுது கவர்ச்சி விசையினைக் காட்டிலும் விலக்கு விசையானது அதிகரிப்பதால் அமைப்பின் நிலையாற்றல் அதிகரிக்கிறது.
40.
கரிம பெராக்ஸைடு முன்னிலையில் ஆல்கின்கள் HBr -உடன் சேர்க்கை வினைப் புரியும் போது மார்கோனிகாப் விதி எதிரான விளைப் பொருட்களைத் தருகின்றன.

வினை வழிமுறை : இவ்விணையானது தனி உறுப்பு வினை வழி முறையினை பின்பற்றுகின்றது.
படி 1:
பெராக்சைடில் உள்ள , வலிமை குறைந்த 0 - 0 ஒற்றை பிணைப்பு சீர்மையற் ற பிளப்பிற்கு உற்பட்டு தனி உறுப்புகளை உண்டாக்குகின்றது.

படி 2:
தனி உறுப்பானது . HBr -யில் உள்ள ஹைட்ரஜனை கவர்ந்து புரோமின் தனி உறுப்பினைத் தருகின்றது.

படி 3:
வலிமை மிகுந்த ஆல்கைல் தனி உறுப்பினை உருவாகும் வகையில் புரோமின் தனி உறுப்பானது கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பில் சேர்கின்றது -

படி 4 :

ஈரிணைய தனி உறுப்புகள் HBr சேர்த்தால் H -C1 பிணைப்பானது (430.5 Kj /மோல் ) H - Br பிணைப்பை விட (363.7 kj ) அதிக வலிமை மிகுந்தது
எனவே H -C1 பிணைப்பானது தனி உறுப்புகளால் பிளவு படுவதில்லை H -I பிணைப்பானது (296.8 kj .மோல் ) H -C1 விட வலிமை குறைந்தது
எனவே H - I பிணைப்பு எளிதாக பிளக்கப்பட்டு ஐயோடின் தனி உறுப்புகள் உருவானாலும் அவை இரட்டை பிணைப்புடன் சேராமல் தமக்குள்ளேயே இணைந்து ஐயோடின் மூலக்கூறுகளைத் தருகின்றன .
எனவே HC1 மற்றும் HI யில் பெராக்சைடு விளைவினைக் காண முடியாது.
41.
கொடுக்கப்பட்டவை \(m_{N_{2}}=28g \ m_{H_{2}}=6g\)
V = 1 L
\((n_{N_{2}})_{initial}=\frac{28}{28}=1\ mol\)
\((n_{H_{2}})_{initial}=\frac{6}{2}=3\ mol\)
N2(g) + 3H2(g) ⇌ 2 NH3(g)
| N2(g) | H2(g) | NH3(g) | |
| ஆரம்ப செறிவு | 1 | 3 | - |
| வினைப்பட்டது | 0.5 | 1.5 | - |
| சமநிலை செறிவு | 0.5 | 1.5 | 1 |
\([NH_{3}]=(\frac{17}{17})=1\ mol=1\ mol\)
N2-ன் நிறை = (N2-ன் மோல்களின் எண்ணிக்கை) × N2-ன் மோலார் நிறை
= 0.5 × 28 = 14 g
H2-ன் நிறை = (H2-ன் மோல்களின் எண்ணிக்கை) × H2-ன் மோலார் நிறை
= 1.5 × 2 = 3 g
42.
43.
(i) பாலிங் முறைப்படி ஒற்றை மின்சுமையுடைய படிகங்களின் அயனி ஆரங்களை கணக்கிடலாம்.
(ii) படிக அலகுக்கூட்டில் காணப்படும் அயனிகள் கோளவடிவமுடையவை என பாலிங் கருதினார். மேலும் அவைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருப்பதாகவும் கருதினார். எனவே,
d=r(C+)+r(A-) .........(1)
இங்கு,
d=நேர் அயனி C+ அணுவிற்கும், எதிர்அயனி
A- ன் அணுவிற்கும் இடையேயானத்தொடர்பு
r(C+)= நேர் அயனியின் ஆரம்
r(A-)=எதிர் அயனியின் ஆரம்
(iii) மேலும், மந்த வாயுக்களின் எலக்ட்ரான் அமைப்பினை பெற்றுள்ள அயனிகளின் ஆரமானது, அவ்வயனிகள் மீது அணுக்கருவால் செலுத்தப்படும் செயலுறு அணுக்கரு மின்சுமைக்கு எதிர்விகிதத்தில் அமையும்.
(iii) அதாவது,

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards