11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 15/11/2019
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மூளையின் வென்ட்ரிக்கிள்கள் பணிகளைக் குறிப்பிடுக.
2.
ஒளிக்காலத்ததூண்டல் பற்றி எழுதுக.
3.
வாஸ்குலக் கேம்பியத்தின் அமைப்பினை வரையறு?
4.
நம் நாட்டில் காணக்கூடிய சில முக்கியத் தொல்லூயிர் எச்சம் மிகுந்த பகுதிகளைக் குறிப்பிடு.
5.
EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.
6.
எளிய எபிதீலியத்திசு வகைகள் யாவை?
7.
அண்மை சுருள் நுண்குழல் பகுதியில் மீள உறிஞ்சப்பட்ட பொருட்கள் எம்முறையில் கடத்தப்படுகின்றன எனப் பொருத்துக.
| அ) Na+ | -எளிய ஊடுருவல் |
| ஆ) குளுக்கோஸ் | -முதன்மை செயல்மிகு கடத்தல் |
| இ) யூரியா | -மறைமுக செயல்மிகு கடத்தல் |
| ஈ) பிளாஸ்மா | -இணை செயலியக்கம் |
| உ) நீர் | -உயிரணு உட்கவர்தல் |
| ஊ) புரதங்கள் | -புரத வழி ஊடுருவல் |
8.
கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?
9.
புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.
10.
சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
11.
அலுமினியம் நச்சுத்தன்மை என்றால் என்ன?
12.
இலைத்துளையின் அமைப்பு பற்றி எழுதுக.
13.
இனப்பெருக்கம் செய்யாத உயிரினங்களின் பெயரினைத் தருக.ஏன் அவைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை?
14.
வகைப்பாட்டியல் சேர்க்கப்பட்டுள்ள இடைநிலை படிநிலைகளைக் குறிப்பிடுக.
15.
16.
ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?
17.
வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?
18.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?
19.
ஒளிச்சேர்க்கையில் நடைபெறும் வினை _______.
பாஸ்பரிகரணம்
ஆக்ஸிஜனேற்றம்
ஒடுக்கம்
ஆக்ஸிஜனேற்றம், ஒடுக்கம்
20.
உயிர்த்துடிப்பு கோட்பாட்டை வெளியிட்டவர் __________.
J.C
காட்லெவிஸ்கி
ஸ்ட்ராஸ்பர்கர்
ஸ்டீபன் ஹேல்ஸ்
21.
விரும்பத்தக்க பண்புகளைக் கொண்ட விலங்குகளைப் பெருக்கும் இன்னொரு முறை _____ ஆகும்.
சிற்றினங்களுக்கிடையே கலப்பினம் செய்தல்
செயற்கை விந்துதூட்டம்
பல அண்ட வெளியேற்ற கரு மாற்ற தொழில் நுட்பம்
பால் பண்ணை
22.
உணவூட்டடத்தில் ஓம்புயிர் தாவரத்தை முழுமையாக தன் வாழ்க்கையாக ஒட்டுண்ணி சாந்திருக்கும் அத்துடன் _____ எனும் உறிஞ்சு உறுப்பை உருவாக்குகிறது.
ஹாஸ்டோரியம்
கூட்டுயிர்
சல்பர் டை ஆக்ஸைடு
ரைபோசோம்
23.
ஜக்ஸ்டா மெடுல்லரி நெஃப்ரான்களில் ஹென்லே வளைவுக்கு இணையாக நீண்ட நாளத்தை உருவாகியுள்ளன . இதற்கு _______ என்று பெயர்.
புற நுண்குழல் இரத்த நாளங்கள்
வாசா ரெக்டா
ஆர்னித்தைன் சுழற்சி
கிளாமருலஸ்
24.
புரதத்தில் காணப்படும் பல்வேறு பிணைப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளவைகள் அனைத்தும் சரியானது.இதனை தவிர
நீர் வெறுக்கும் பிணைப்பு புரதத்தின் அமைப்பைத் தக்க வைக்க உதவுகிறது.
டைசல்ஃபைடு பிணைப்புகள், அமினோ அமிலங்களுக்கிடையே காணப்பட்டு ஓர் இணைப்பு பாலத்தினை அமைக்கின்றன.
அயனிப்பிணைப்பு புரதத்தை வெப்பப்படுத்தும் போது துண்டிக்கப்பட்டுவிடுகிறது.
ஹைட்ரஜன் பிணைப்புகள் புரத மூலக்கூறின் முப்பரிமாண வடிவத்தை நிலைப்படுத்துகின்றன.
25.
தவளையை காணப்படும் சுவாச உறுப்பு
செவுள்கள்
தோல்
வாய்க்குழி
இவை அனைத்தும்
26.
கிளைக்கோகேலிக்ஸ் எனப்படுவது பாக்டிரீயாவின்.
செல் சுவர்
வெளியுறை
நுண்சிலும்பு
ஃபிம்ரியெ
27.
வாஸ்குலத் தொகுப்புடைய பூவாத்தாவரங்கள் -எவை?
தாலோஃபைட்டா
பிரையோஃபைட்டா
டெரிடோஃபைட்டா
ஸ்பெர்மெட்டோஃபைட்டா
28.
பூஞ்சையின் பாலிலா இனப்பெருக்க நிலை எனப்படும்
அனாமார்∴ ப்
டீலோமார்∴ ப்
இன்டெக்ஸ் ∴பங்கோரம்
மைக்கோ வங்கி
29.
தடித்த இழைகளிலுள்ள புரதம் ______.
மையோசின்
ஆக்டின்
பெக்டின்
லியூசின்
30.
A,B என்ற இரு செல் வகைகளில் படங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

செல் A என்பது குச்சி செல்.இது விழித்திரையின் அனைத்துப் பகுதியிலும் காணப்படுகிறது.
செல் A என்பது கூம்புசெல் இது ஃபோவியாவின் (மஞ்சள் தானத்தின்) மையப்பகுதியில் செறிவாக உள்ளது.
செல் A யானது செறிவான ஒளியில் நிறப்பார்வையுடன் தொடர்புடையது.
செல் A யானது செறிவான ஒளியை உணரக்கூடியது.
31.
கீழ்க்கண்டவற்றுள் எதன் புறப்பரப்பில் இது இருப்பது அல்லது இல்லாமையால் இரத்த வகைகள் உருவாகிறது.
வெள்ளையணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது (அ) உள்ளதால்
சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிபாடி இருப்பது
சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது
வெள்ளையணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிபாடி இருப்பது
32.
எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது?
வகைப்பாட்டுத் திறவுகோல்
ஹெர்பேரியம்
தாவரம்
மோனோஃகிராப்
33.
நட்சத்திர இழையற்ற பகுப்பு மைட்டாசிஸ்சின் சிறப்புப் பண்பு______.
கீழ்நிலை விலங்குகள்
உயர்நிலை விலங்குகள்
உயர்நிலைத் தாவரங்கள்
அனைத்து உயிருள்ள உயிரினங்கள்
34.
முத்து வளர்ப்பு பற்றி எழுதுக?
35.
C3 மற்றும் C4 தாவரங்களின் வேறுபாட்டினை எழுதுக.
36.
தாவர வளர்ச்சி ஹர்மோன்களின் பண்புகளை எழுதுக.
37.
பெருங்குடலின் அமைப்பை படத்துடன் விளக்கு.
38.
மண்புழுவின் பெண் இனப்பெருக்க மண்டலத்தை படத்துடன் விளக்கு.
39.
கலப்பு வகை மஞ்சரி என்பது யாது? அதன் வகைகளை படத்துடன் விளக்கு.
40.
எளிய எபிதீலிய திசுக்களை படம் வரைந்து பாகம் குறி
41.
தொகுதி : ஆஸ்கெல் மின்தஸின் பண்புகளைக் கூறு.
42.
43.
கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

1.
ஒவ்வொரு பெருமூளை அரைக்கோளத்திலும் C வடிவில் காணப்படும் இக்குழிகள் முதலாம் மற்றும் இரண்டாம் பக்க வென்ட்ரிக்கிள்கள் எனப்படுகின்றன. இவ்விரண்டையும் பெலுசிடம் சுவர் எனும் மெல்லிய சவ்வு பிரிகிறது. ஒவ்வொரு பக்க வென்ட்ரிகிளும், டயன்செஃபலானில் உள்ள குறுகிய மூன்றாவது வென்ட்ரிக்கிளினுள் மன்றோவின் துளை எனப்படும் இடை வென்ட்ரிகுலார் துளை வழியே திறக்கிறது. மூன்றாவது வென்ட்ரிக்கிள் பின்மூளையில் உள்ள நான்காவது வென்ட்ரிக்கிளுடன் சில்வியஸ் நாளாத்தின் வழியே தொடர்பு கொண்டுள்ளது.
2.
24 மணி நேர சூழற்சியில் போதுமான ஒளிக் கால அளவு ஒரு தூண்டல் சுழற்சி என கருதப்படுகிறது. தாவரங்கள் மலர்தலுக்காக ஒன்று அல்லது மேற்பட்ட தூண்டல் தேவைப்படலாம். தழை மொட்டு மலர் மொட்டாக மாற்றப்பட தேவைப்படும் தூண்டல் சுழற்சியே ஒளிக்காலத்ததூண்டல் எனப்படுகிறது.
3.
(i) வாஸ்குலக் கேம்பிய செல்கள் ஆக்குத்திசுவின் பொதுவான பண்புகளை ஒத்து காணப்படுவதில்லை.
(ii) ஆக்குத்திசு செல்கள் ஒத்த குறுக்களவு, அடர்ந்த சைட்டோபிளாசம் பெரிய நியூக்ளியஸ் போன்றவற்றை கொண்டவை.
(iii) வாஸ்குலக் கேம்பிய செல்களில், பெரிய மைய நுண்குமிழ்பை அல்லது பைகள் ஒரு மெல்லிய அடர் சைட்டோபிளாச ஆட்டுக்கால் சூழப்பட்டுள்ளது.
4.
| வ.எண் | தொல்லுயிர் எச்சங்கள் | காணப்படும் இடம் |
| 1. | ஷிவாலிக் தொல்லுயிர் பூங்கா | ஹிமாச்சல் பிரதேசம் |
| 2. | மாண்ட்லா தொல்லுயிர் பூங்கா | மத்தியப் பிரதேசம் |
| 3. | இராஜ்மஹால் குன்றுகள் | ஜார்கண்ட் |
| 4. | அரியலூர் பூங்கா | தமிழ்நாடு |
5.
I.பாஸ்பரிகரண வினை
நொதி:ஹெக்சோகைனேஸ்
II.ஃபாஸ்பேட் நீக்கம் வினை
நொதி:ஃபாஸ்ஃபாஃபோகிளிசரேட் கைனேஸ்
நொதி: பைருவேட் கைனேஸ்
6.
1. தட்டை வடிவ செல்கள்
2. கனசதுர வடிவ செல்கள்
3. தூண் வடிவ செல்கள்
4. குறு இழை கொண்ட செல்கள்
5. பொய் அடுக்கு செல்கள்
7.
8.
1. ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் நீண்ட காலம் வாழக்கூடியச் சூழலில் அதற்கேற்ற சுவாசமும், இரத்தச் சிவப்பணுக்கள் உருவாக்கமும் சரி செய்யப்படுகின்றன.
2. இத்தகைய சூழலைச் சமாளிக்கவே சிறுநீரகங்களிலிருந்து அதிக அளவு எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
3. இந்த ஹார்மோன், எலும்பு மஞ்சையைத் தூண்டி அதிக இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
9.
1. புரோட்டோபிளாசம் செல்லின் உயிருள்ள பொருள். இது பிளாஸ்மா சவ்வினால் சூழ்ந்து காணப்படுகிறது. இது ஒரு நிறமற்ற பொருளாகும்.
2. இது செல் முழுவதும் பரவி.சைட்டோபிளாசம் உட்கரு மற்றும் பல உள்ளுறுப்புக்களைக் கொண்டுள்ளன.
3. புரோட்டோபிளாசம் சிறிய துகள்களான அயனிகள் அமினோ அமிலங்கள் , ஒற்றைச் சர்க்கரைகள் மற்றும் நீரையும் .பெரும் மூலகூறுகளான நீயுக்ளிக் அமிலங்கள் , புரதங்கள் , லிப்பிடுகள் மற்றும் பல்கூட்டுச் சர்க்கரைகள் போன்ற கூட்டுப் பொருள்களை உள்ளடக்கியது
4. இவை நிறமற்ற தோற்றத்துடன் ஜெல்லி போன்ற மீள்பாகு நிலை கொண்ட துகள்களால் ஆனது.இவை அதிக எண்ணிக்கையிலான வாக்குவோல்கள் கொண்டுள்ளதால் நுரை போன்று காணப்படுகிறது.இது வெப்பம். மின் அதிர்ச்சி வேதிப் பொருள் ஆகியவற்றின் தூண்டுதலுக்கு ஏற்பத் துலங்கலாகச் செயல் படுகிறது
10.
11.
(i) அலுமினியத்தின் நச்சுத்தன்மை காரணமாக நியூக்ளிக் அமிலமானது வீழ்ப்படுகிறது.ஹைகூஞயேஸ் நொதியின் செயல்பாடு தடைபடுகிறது.
(ii) செல் பகுப்பை தடை செய்தல் மற்றும் பிளாஸ்மா சவ்வுடன் கால்மோடுலின் பிணைவதைத் தடுக்கிறது.
12.
இலைகளின் புறத்தோல் மற்றும் பசுமையான தண்டில் காணப்படும் எண்ணற்ற சிறிய துளைகள் இலைத்துளைகள் (Stomata) எனப்படும்.
இலைத்துலையின் நீளம் மற்றும் அகலம் முறையே 10-40 மைக்ரான் மர்றும் 3-10 மைக்ரான் ஆகும்.
முதிர்ந்த இலைகளில் ஒரு சதுர மில்லி மீட்டருக்கு 50 முதல் 500 என்ற எண்ணிக்கையில் இவை காணப்படும்.
13.
வேலைக்காரத் தேனீக்கள் மற்றும் கோவேறு கழுதைகள் மலட்டுத் தன்மை காரணமாக இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை.
14.
1. துணை உலகம்
2. நிலை
3. பிரிவு
4. துணைப் பிரிவு
5. துணைத் தொகுதி
6. சிறப்பு வகுப்பு
7. துணை வகுப்பு
8. சிறப்பு வரிசை
9. துணை வரிசை
10. சிறப்பு குடும்பம்
11. துணை குடும்பம்
12. துணை சிற்றினம்
15.
16.
1. இனப்பெருக்க காலங்களில், ஆன் தவளைகளில் ஓரிணை குரல் பை காணப்படுகிறது.
2. குரல்ப்பையின் உதவியினால் கரகர ஒலியை உருவாக்கி பெண் தவளையை கவர்கின்றது.
17.
1. வலது வென்ட்ரிக்கிள் - இங்கிருந்து ஆக்சிஜனற்ற இரத்தம் இதயத்தின் அருகில் உள்ள நுரையிரலுக்கு செல்வதால், குறைவான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டுவதால் இதன் சுவர் சற்று மெல்லியது.
2.இடது வென்ட்ரிக்கிள் - இங்கிருந்து ஆக்சிஜன் உள்ள இரத்தம் இதயத்தை விட்டு தூரமான உறுப்புகளுக்கு அனுப்பப்படவேண்டுமானதல், அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டி இருப்பதால், அதன் சுவர் தடிமனாக உள்ளது.
18.
பக்கவேரானது வேர்களின் பெரிசைக்களிலிருந்து தோன்றி அகத்தோல், புறணி மற்றும் ரைசோடெர்மியை தாண்டி வெளி வருவதால் அவைகள் அகத் தோன்றிகளாகும்.
19.
(d)
ஆக்ஸிஜனேற்றம், ஒடுக்கம்
20.
(a)
J.C
21.
(c)
பல அண்ட வெளியேற்ற கரு மாற்ற தொழில் நுட்பம்
22.
(d)
ரைபோசோம்
23.
(b)
வாசா ரெக்டா
24.
(b)
டைசல்ஃபைடு பிணைப்புகள், அமினோ அமிலங்களுக்கிடையே காணப்பட்டு ஓர் இணைப்பு பாலத்தினை அமைக்கின்றன.
25.
(d)
இவை அனைத்தும்
26.
(b)
வெளியுறை
27.
(c)
டெரிடோஃபைட்டா
28.
(a)
அனாமார்∴ ப்
29.
(a)
மையோசின்
30.
(b)
செல் A என்பது கூம்புசெல் இது ஃபோவியாவின் (மஞ்சள் தானத்தின்) மையப்பகுதியில் செறிவாக உள்ளது.
31.
(c)
சிவப்பணுக்களின் புறப்பரப்பில் ஆன்டிஜென் இருப்பது
32.
(a)
வகைப்பாட்டுத் திறவுகோல்
33.
(c)
உயர்நிலைத் தாவரங்கள்
34.
(i) முத்து என்பது சிப்பியின் ஓட்டினுள் உள்ள முகுந்த பளபளப்புடன் கூடிய உறுதியான கோளவடிவப் பொருள் ஆகும்.
(ii) முத்துச்சிப்பிகள் நகராத் தன்மையுடையவனவாகும். நம் நாட்டில் முதல் முதலில் தூத்துக்குடியில் 1973 ல் முத்து வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
(iii) முத்துச்சிப்பிகள் கன்னியாகுமரியின் கடற்பகுதி மற்றும் கட்ச வளைகுடா பகுதிகளில் காணப்படுகின்றன.
(iv) பிங்டேடா பேரினத்தைச் சேர்ந்த சிப்பிகள் உயர்தர முத்துக்களை உருவாக்குகின்றன. இவ்வகை சிப்பிகளை 30% உப்புத்தன்மையுடைய நீரில் சாரம், மிதவைகள் மற்றும் நீள் கயிற்றில் வளர்க்கலாம்.
(v) நன்னீர் மட்டியான லெமல்லிடென்ஸ் செயற்கை முத்து வளர்ப்புக்கு பயன்படுகின்றன. பெரும்பாலும் , முத்துச்சிப்பிகள், பாறை மடிப்புகள், இறந்த பவளப்பாறைகள் ஆகியவற்றில் வளர்ந்து பரந்த முத்து வங்கிகளாகின்றன.
(vi) இவற்றால் உருவாக்கப்படும் உயர் மதிப்பு முத்துக்களுக்கு லிங்கா முத்துக்கள் என்று பெயர்.
35.
| C3 மற்றும் C4 தாவரங்களின் வேறுபாடுகள் | |
| C3 தாவரங்கள் | C4 தாவரங்கள் |
| CO2 நிலைநிறுத்தும் இலையிடைத் திசுக்களில் மட்டும் நடைபெறுகிறது. |
CO2 நிலைநிறுத்தும் கற்றை உறை மற்றும் இலையிடைத்திசு ஆகியவைகளில் நடைபெறுகிறது. |
| CO2 -நிலைநிறுத்தும் பொருள் RUBP மட்டும் | PEP இலையிடைத் திசுவிலும் கற்றை உறையில் RUBP -யும் நிலைநிறுத்தம் பொருள்களாக உள்ளன. |
| தோன்றும் முதல் விளைபொருள் 3C -PGA | தோன்றும் முதல் விளைபொருள் 4C -OAA |
| கிரான்ஸ் உள்ளமைப்பு காணப்படுவதில்லை | கிரான்ஸ் உள்ளமைப்பு காணப்படுகிறது |
| இலையிடைத் திசு செல்களின் பசுங்கணிகங்கள் கிரானம் பெற்றவை |
கிரானம் இலையிடைத் திசு செல்களின் பசுங்கணிகங்களில் காணப்படுகிறது. கற்றை உறை செல்களின் பசுங்கணிகங்களில் கிரானம் காணப்படுவதில்லை. |
| திசு ஒரே வகை வடிவமுடைய பசுங்கணிகங்கள் | இரு வகை வடிவமுடைய பசுங்கணிகங்கள் |
| உகந்த வெப்பநிலை 200 முதல் 250C | உகந்த வெப்பநிலை 300 முதல் 450C |
36.
(i) பொதுவாக வேர்கள் , தண்டுகள் மற்றும் இலைகள் உற்பத்தியாகிறது.
(ii) தாவரத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கடத்துத் திசுக்கள் மூலம் கடத்தப்படுகிறது.
(iii) மிகக் குறைந்த அளவில் தேவைப்படுகிறது.
(iv) அனைத்து ஹார்மோன்களும் கர்மச் சேர்மங்களாகும்.
(v) ஹார்மோன் உற்பத்திக்குச் சிறப்பான செயல்களோ அல்லது உறுப்புகளோ இல்லை என தாவர வளர்ச்சியைத் தூண்டுதல், தடைசெய்தல் , வளர்ச்சி உருமாற்றம் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது .
37.
1. பெருங்குடலில், பிதுக்கப்பகுதி, பெருங்குடல் பகுதி மற்றும் மலக்குடல் எனும் 3 பகுதிகள் உள்ளன.
2. சிறுகுடல், பெருங்குடல் பிதுக்கப் பகுதியில் இணைகிறது.
3. இதன் அடிப்பகுதியில் உள்ள குறுகிய விரல் போன்ற குழல் தன்மை கொண்ட நீட்சி குடல்வால் எனப்படும்.
4. தாவர உண்ணிகளில் குடல் பிதுக்கள் பகுதியும் குடல் வால் பகுதியும் மிகப் பெரிதாக அமைந்துள்ளது.
5. இங்குள்ள நம்மை செய்யும் பாக்டீரியாக்கள் செல்லுலோஸ் செரித்தலுக்கு உதவுகின்றன.
6. கோலான எனும் பெருங்குடலானது, ஏறுகுடல், கிடைமட்டக்குடல், இறங்கு குடல் மற்றும் சிக்மாய்டு குடல் என்ற 4 பகுதிகளைக் கொண்டது.
7. பெருங்குடலின் உட்பகுதியில் உள்ள பை போன்ற விரிவுகள் ஹாஸ்டிரா எனப்படும் (ஒருமை: ஹாஸ்டிரம்)
8. 'S' வடிவ சிக்மாய்டு குடலின் தொடர்ச்சியாக மலக்குடல் உள்ளது.
9. 'S' வடிவ சிக்மாய்டு குடலின் தொடர்ச்சியாக மலக்குடல் உள்ளது.
9. மலக்குடலில் மலப்பொருட்கள் வெளியேற்றப்படும் வரை சேமிக்கப்படுகின்றது.
10. மலக்குடல் மலத்துளையில் திறக்கின்றது.
11. மலத்துளை ஈரடுக்கு சுருக்குத் தசைகளால் ஆனது.
12. மலத்துளையை சுற்றியுள்ள கோழைப்படலம் பல செங்குத்தான மடிப்புகளால் ஆனது.
13. இம்மடிப்புகளில் தமனிகளும், சிரைகளும் உள்ளன.
14. இவ்விடத்தில் ஏற்படும் புடைப்புகளால் மூலம் அல்லது ஹெமராய்டுகள் தோன்றுகிறது.

38.
1. மண்புழுக்கள் இருப்பாள் உயிரிகளாகும்.
2. இருபால் உறுப்புகளும் வெவ்வேறு காலத்தில் முதிர்ச்சியடைவதால் சுயக்கருவுருத்தல் தடுக்கப்படுகிறது.
3. பெண் இனப்பெருக்க மண்டலத்தில் ஒரு இணை அண்டங்கள் உள்ளது.
4. இது புழுவின் 13வைத்து கண்டத்தில் அமைந்துள்ளது.
5. அண்டகம் விறல் போன்று நீட்சியை உடையது.
6. அண்டத்தில் நீள் வரிசையில் அண்டணுக்கள் உள்ளன
7. அண்டத்தின் அடியில் உள்ள அண்டகப் புனல் நீண்டு ஆண்ட நாளாமாகிறது.
8. இருபக்கமும் உள்ள அண்ட நாளங்கள் வயிற்றுப்புற பகுதியில் ஒன்று சேர்ந்து 14வைத்து கண்டத்தில் ஒற்றை மையப் பெண் இனப்பெருக்க துளையின் வழியாக வெளியே திறக்கிறது.
9. 7, 8, 9வது கண்டங்களில் கண்டத்திற்கு ஒரு இணை வீதம் மூன்று இணை விந்து கொள்பை உள்ளன.
10. விந்து கொள்பைகள் முறையே 6வது 7வது கண்டங்களுக்கிடையேயும் மற்றும் 8வது 9வது கண்டகளுக்கிடையேயும் வயிற்றுப் புறத்தில் திறக்கின்றன.
11. கலவியின்போது இத்துளையின் வழியாக விந்தணுக்கள் பெறப்பட்டு விந்து கொள்கையில் சேகரித்து வைக்கப்படுகிறது.
39.
கலப்பு வகை மஞ்சரி:
ராசிமோஸ், சைமோஸ் மஞ்சரிகளின் உருவாக்க வகை கலந்து, ஒரே மஞ்சரியாக வெளிப்படும். அவை இருவகைப்படும்.
1. திரசஸ்(Thrsus): இது ராசிக்கு அச்சில் அமைந்த சைம்கள் ஆகும். வரம்பற்ற மைய அச்சில் பக்கவாட்டில் காம்புடைய சைம் மலர்கள் (தனி டைக்கேஷியம் அல்லது கூட்டு டைக்கேஷியம்) அமைந்திருக்கும்.
எடுத்துக்காட்டு : ஆசிமம் (துளசி), அனைசோமிலாஸ்(பேய்மிரட்டி)
2. வெர்ட்டிசில் அல்லது வெர்ட்டிசிலாஸ்டர் (vertieillasterr): மைய அச்சு இரண்டு எதிர் எதிர் பக்கவாட்டு காம்பற்ற சைம்களைக் கணுவில் கொண்டவை. ஒவ்வொரு கிளையும் ஒருகைக்கிளைத்த, இடம் வலமாக ஸ்கார்பியாய்டுசைம் போல் உருவாவதால் மலர்கள் கணுவைச் சுற்றி கூட்டமாகக் காணப்படும்.
எ.கா: லியோநாடிஸ், லியூக்கஸ்(தும்பை).
40.
41.
1. நெமட்டோடா என முன்னர் அழைக்கப்படுகிறது.
2. உருளைப்புழுக்கள் என அழைக்கப்படுகிறது.
3. இப்புழுக்கள் தனித்தோ அல்லது நீர்நில தாவரங்கள் மற்றும் மற்றும் விலங்குகளில் ஒட்டுண்ணியாக உள்ளது.
4. இருபக்க சமச்சீருடைய மூவடுக்கு உயிரிகள்.
6. உடல் சுவர் கொலாஜன் சவ்வினால் ஆனவை
7. கண்டங்களற்றவை
8. முழுமையான வளர்ச்சியடைந்த செரிமான மண்டலத்தைப் பெற்றுள்ளது
9. கழிவுநீக்கம் ரென்னட் சுரப்பிகளால் நடைபெறுகிறது.
10. ஒருபால் உயிரிகள்.
11. சில புழுக்களில் தாயுள் முட்டை வளர்ச்சி நடைபெறுகிறது.
எ.கா: 1. அஸ்காரிஸ் லும்பிரிகாய்டஸ் (உருளைப் புழுக்கள்) 2. உச்சரீரியா பான்கிராப்டி (யானைக்கால் புழு)
42.
43.
A - வலது, இடது, கல்லீரல் நாளம்,
B - பொது பித்த நீர் நாளம்,
C - கணைய நாளம்
D - கல்லீரல் கணைய நாளம்|
E - சிஸ்டிக் நாளம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards