11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/09/2019
உயிரியல்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

2.
தவளையின் பெண் இனப்பெருக்க மண்டலத்தை விளக்குக.
3.
எபிதீலியம் என்றால் என்ன? அதன் பல்வேறு வகைகளின் பண்புகளைத் தருக.
4.
முட்டையிடும் மற்றும் குட்டி ஈனும் பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் முறையே சம எண்ணிக்கையில் இருக்குமா? ஏன்?
5.
விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?
6.
DNA-வின் பண்பினை எழுது
7.
8.
உயிரினங்களின் பரிணாம வரலாற்று பேழையை எவ்வாறு மரபணு குறிப்பான்கள் திறக்கின்றன.
9.
லைக்கென்களின் பொதுப்பண்புகளை எழுதுக.
10.
தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி.
1.
A - வலது, இடது, கல்லீரல் நாளம்,
B - பொது பித்த நீர் நாளம்,
C - கணைய நாளம்
D - கல்லீரல் கணைய நாளம்|
E - சிஸ்டிக் நாளம்.
2.
1. ஓரிணை அண்டக்கண்கள் பெண் இனப்பெருக்க உறுப்புகளாகும்.
2. மீசோவேரியம் என்றும் பெரிடோனிய சவ்வு மடிப்புகள், அண்டகங்களை சிறுநீரகங்கள் மற்றும் முதுகுப்புற சுவரில் இணைந்துள்ளன.
3. சிறுநீரகங்களின் பக்கவாட்டில் ஓரிணை சுருண்ட ஆண்ட நாளங்கள் அமைந்திருக்கின்றன.
4. அண்டநாளம் ஒவ்வொன்றும் முன்புறத்தில் உடற்குழியில் திறக்கக்கூடிய புனல் வடிவத்தில் தீர்ப்பையும், பொதுக்கழிவுப் பையில் திறக்கும் பின் பகுதியையும் கொண்டுள்ளன.
5. ஆண் தவளைகளில் காணப்படுவது போலன்றி, பெண் தவளைகளில் அண்ட நாளங்கள் சிறுநீரக நாளங்களிலிருந்து தனித்து காணப்படுகின்றன.
6. அண்ட நாளங்கள், பொதுக்கழிவு பையில் திறப்பதற்கு முன்பாகச் சற்று விரிவடைந்து ஒரு அண்டப்பையாக உருவாகியுள்ளது.
7. உயிரியில் இருந்து வளர்ச்சியடைந்த முட்டைகள், பொதுக் கழிவுத்துளை வழியாக வெளியேற்றப்படுவதற்கு முன்பு வரை தற்காலிகமாக அண்டப்பையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
8. தவளையை புற கருவுறுதல் நடைபெறுகிறது.
9. கருவுறுத்தலுக்குப் பின் சில நாட்களிலேயே கருமுட்டைகளிலிருந்து தாளிப்பிரட்டை என்னும் சிறிய வளர் இளவுயிரிகள் வெளிவருகின்றன.
10. இவை உடலில் சேமிக்கப்ட்டுள்ள கருவனவையே உணவூட்டத்திற்கு சார்ந்துள்ளன.
11. இவை படிப்படியாக வளர்ந்தபின் மூன்று இணை செவுள்களை பெறுகின்றன.
12. தலைப்பிரட்டை வளர்ந்து முதிர்ந்து காற்றை சுவாசிக்கும் ஊனுண்ணும் முதிர் தவளையாகிறது.
13. இம்மாற்ற நிகழ்வுகளே வளர் உருமாற்றம் என்படும்.
14. உடலில் கால்கள் வளர்ச்சியடைகின்றன.
15. வால், செவுள்கள் ஆகியவை மறைந்து விடுகின்றன.
16. வாய் அகன்று, தாடைகளும் பற்களும் வளர்ச்சியடைகின்றன.
17. நுரையீரல் செயல்படத் துவங்குகிறது.
18. இவ்வாறு முதிர் தவளை உருவாகிறது.
3.
1. உடலின் மேற்பரப்பில் உடற்குழியினைச் சுற்றிலும் காணப்படும் செல் வரிசையானது எபிதீலியத்திசு எனப்படும்.
2. உடலின் மேற்பரப்பில் இத்திசுவானது உரை போன்றும், மெல்லிய படலம் எபிதீலியமாகவும், சுரப்பு எபிதீலியமாகவும் காணப்படுகிறது.
3. பாதுகாப்பு, உறிஞ்சுதல், வடிகட்டுதல், கழிவு நீக்கம் சுரப்பு மற்றும் உணர்வறிதல் போன்ற பணிகளை செய்கிறது.
வகைகளும், பண்புகளும்
| வ.எண் | எபிதீலியம் | பண்புகள் | |
|---|---|---|---|
| 1 | A | எளிய எபிதீலியம் | - ஓரடுக்கு செல்களால் ஆனது |
| தட்டை வடிவ செல்கள் | - தட்டையான ஓரடுக்கு செல்களால் ஆனது | ||
| - ஒழுங்கற்ற விளிம்பினை உடையது. | |||
| B | கனசதுர வடிவ செல்கள் | -கனசதுர வடிவமுடைய ஓரடுக்கு செல்களால் ஆனது | |
| C | தூண்வடிவ செல்கள் | - வட்ட மற்றும் நீள்வட்ட உட்கருவை செல்லின் அடிப்பகுதியில் கொண்ட உயரமான ஓரடுக்கு செல்களால் ஆனது. | |
| D | குறு இழை கொண்ட செல்கள் | - தூண்வடிவ செல்களின் உச்சி பரப்பில் குறு இழைகள் காணப்படுகிறது | |
| E | பொய் அடுக்கு செல்கள் | - தூண்வடிவதிலும் சமமற்ற அளவுகளில் காணப்படுகிறது. - ஓரடுக்காலானது. ஆனால் பார்ப்பதற்கு பல அடுக்கு போன்று காட்சி அளிக்கிறது. - உட்கரு வெவேறு மட்டத்தில் காணப்படுகிறது. |
|
| F | சுரப்பு எபிதீலியம் | - கனசதுர வடிவ, தூண்வடிவ ஓரடுக்கு செல்களால் ஆனது. | |
| கூட்டு எபிதீலியம் | - பல அடுக்கு செல்களால் ஆனது. - சுரத்தலிலும் உறிஞ்சுதலிலும் சிறிதளவு பங்கு கொள்கிறது. |
||
| II | A | அடுக்கு கூட்டுத்திசு 1. பல அடுக்கு தட்டை வடிவ செல்கள். 2. கனசதுரவடிவ செல்கள் 3. தூண்வடிவ செல்கள் |
- பல அடுக்கு செல்களால் ஆனது |
| B | இடைநிலை எபிதீலியம் | இவ்வகை எபிதீலியம் நீட்சியடையவும் தளரவும் செய்து உறுப்புகளை பாதுகாக்கிறது. | |
4.
உயிரினங்கள் பொதுவாக அதிகமான முட்டைகளையே இடுகின்றன. அதிகமான ஆண் இனச்செல்களையும் பெண் இனச்செல்களையும் உருவாக்குவதால் அதிகமான கருவுற்ற முட்டைகள் உருவாகின்றது. முதுகுநாணற்ற விலங்குகள் பெரும்பான்மையான நீர் வாழும் பண்பை பெற்றிருப்பதாலும், நிலத்தில் வாழும் பண்பை பெற்றிருப்பதாலும் முட்டைகளையே இடுகின்றன. மேலும் மறைமுகவளர்ச்சி கொண்டுள்ளவைகள், லார்வாக்களை உருவாக்குபவைகள் முட்டைகளை அதிக எண்ணிக்கையில் இடுகின்றன.
குட்டி ஈனும் பெண் விலங்குகளின் முட்டைகளும் அவற்றின் குட்டிகளும் குறைவாகவே உள்ளது. காரணம் கருவளர்ச்சி சிக்கலானதாகும் கருவளர்ச்சிக்கு பாதுகாப்பு படலங்கள் தேவைப்படுகிறது.
5.
| வ.எண் | விலங்கு காட்சி சாலை | வன விலங்கு சரணாலயம் |
|---|---|---|
| 1. | மனித மேற்பார்வையுடன் கூடிய பாதுகாப்பான வனப்பகுதியில் காட்டு விலங்குகள் வைக்கப்பட்டிருக்கும் | பாதுகாக்கப்பட்ட இடம், மனிதர்களுடைய செயல்கள் குறைவு |
| 2. | விலங்குகள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டிருக்கும் | தடை செய்யப்பட்டிருக்கும் மரங்கள் வெட்ட அனுமதி இல்லை. விவசாயத்திற்கு காடுகளை அழிக்க கூடாது. மனிதர்கள் தங்கள் தேவைக்கு விறகு, உணவுப் பொருட்கள், மருத்துவத் தாவரங்களை சேகரித்துக் கொள்ளலாம். |
| 3. | எ.கா: அறிஞர் அண்ணா மிருகக் காட்சி சாலை வண்டலூர். | எ.கா: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். |
6.
1.இதன் ஒரு இழை 5' - 3' திசையில் இருந்தால் மற்றொரு இழையில் 3' - 5' திசையில் செல்லும்.எனவே இரு இழைகளும் எதிர் இணையானவையாக உள்ளன.5' முனையில் பாஸ்ஃபேட் தொகுதியும்,3'முனையில் OH தொகுதியும் காணப்படும்.
2.கார இணைகளில் இருந்து சர்க்கரைகள் 1200 குறுகிய கோணத்திலும் 2400 அகலக் கோணத்திலும் நீட்டிக் கொண்டிருக்கும்.குறுகிய கோணத்தின் காரணமாகத் தோன்றுவது சிறு பள்ளம் அகலக் கோணத்தில் தோன்றுவது முதன்மை பள்ளம் எனப்படுகிறது.
3.ஒவ்வொரு கோணமும் 0.34 nm தூரத்தில் அமைந்திருப்பதால் சுருளின் ஒவ்வொரு திருப்பமும் 3.4 nm நீளம் கொண்டது.அதாவது ஒரு திருப்பதில் 10 கார இணைகள் உள்ளன.இப்பண்புகள் DNA-வில் அதிகமாகத் திகழும் B-DNA - வில் காணப்படுகிறது.
4.DNA சுருளின் விட்டம் \(20 \overset{0}{A } \) ஆகவும்,அதன் குறைந்த பட்ச வளைவு \(34 \overset{0}{A } \) ஆகவும் உள்ளது.X கதிர் படிக அமைப்பைக் காணும்போது ஒரு சுற்று சுற்றுவதற்கு (3600) 10 கார இணைகள் தேவைப்படுவது தெரிய வருகிறது.
5.திருகுச்சுருளின் வெப்ப இயக்கு நிலைத்திறன் மற்றும் கார இணைகளின் குறிப்பிட்ட தனித்தன்மை இவற்றை உள்ளடக்கியது.
(i) இரட்டைத் திருகுச்சுருள் நிறைவுபடுத்தும் காரங்களுக்கு இடையேயுள்ள ஹைட்ரஜன் இணைப்புகள்.
(ii) பல காரங்கள் ஒன்றின் மேல் ஒன்று தொடர்பு கொண்டு திருகுச்சுருள் அச்சிற்குச் செங்குத்தாகக் காணப்படுகிறது.திருகுச்சுருள் அடுக்கில் எலக்ட்ரான் கூட்டங்கள் காரங்களுக்கிடையே தொடர்பு கொண்டு (π-π) இரட்டைத் திருகுச்சுருளின் அமைப்பிற்கு நிலைத்திறன் அளிக்கின்றது.
6.பாஸ்ஃபோ டைஎஸ்டர் பிணைப்புகள் DNA திருகுச்சுருளுக்குத் துருவத்தன்மை தருவதோடு அவை வலிமையான சகப்பிணைப்புகளை ஏற்படுத்துவதால்,பாலி நியுக்ளியோடைடு சங்கிலிக்கு வலிமையும், நிலைப்புத்தன்மையும் அளிக்கின்றன.
7.
8.
1. மூலக்கூறு வகைப்பாடு என்பது இனபரிணாம வளர்ச்சி முறையின் ஒரு பிரிவு ஆகும்
2. இது பாரம்பரிய மூலக்கூறு வேறுபாடுகளை முக்கியமாக DNA வரிசையில் உள்ள தகவல்களைப் பெறவும், பல்வேரு வகைப்பாடு குலுக்களுக்கிடையே உள்ள இனபரிமான உறவை உருகுவாக்குவதுற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் வழிவகை செய்கின்றது
3. DNA நகலாக்கம் மற்றும் வரிசை முறையாக்கம் போன்றவற்றின் வளர்ச்சி மூலக்கூறு வகைப்பாடு மற்றும் உயிரித் தொகை மரபியலின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகினற்ன.
4. இந்நவீன முறைகள் மூலக்கூறு வகைப்பாடு மற்றும் உயிரித் தொகை மரபியல் துறைகளில் மேம்படுத்தபட்ட பகுப்பாய்விற்கு ஊக்கம் மற்றும் துல்லியத்தன்மையைக் கொடுத்து புரட்சியை ஏற்படுத்தியுள்ளன
9.
லைக்கென்களின் பொதுப்பண்புகள்
i) லைக்கென்கள் பாசிகள் மற்றும் பூஞ்சைகளுக்கிடையே ஏற்படும் ஒருங்குயிர் அமைப்பு.
ii) இதில் காணப்படும் பாசி உறுப்பினர் பாசி உயிரி அல்லது ஒளி உயிரி எனப்படுகிறது.
iii) இதில் காணப்படும் பூஞ்சை உறுப்பினர் பூஞ்சை உயிரி எனப்படுகிறது.
iv) பாசி உயிரி பூஞ்சைக்கு ஊட்டத்தை தரும்.
v) அதே போன்று பூஞ்சை உயிரி பாசிக்கு பாதுகாப்பை தரும்.
vi) பாசி உயிரி உறக்க நகராவித்துக்கள் ஹார்மோகோனியங்கள் நகராவித்துக்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
vii) பூஞ்சை உயிரி பாலினப்பெருக்கத்தில் ஈடுபட ஆஸ்கோ கனி உடலங்களை உருவாக்குகிறது.
வகைகள் :
I.வாழிடத்தின் அடிப்படையில்
1.கார்ட்டிகோலஸ் - மரப்பட்டை மீது காணப்படுபவை.
2.லிக்னிகோலஸ் - கட்டை மீது வாழ்பவை
3.சாக்ஸிகோலஸ் - பாறை மீது வாழ்பவை
4. டெர்ரி கோலஸ் - நிலத்தில் வாழ்பவை
5.கடலில் வாழ்பவை - கடலில் உள்ள சிலிகா பாறை மீது வாழ்பவை
6.நன்னீர் வகை - நன்நீரில் உள்ள சிலிகா பாறை மீது வாழ்பவை.
II.உடலப்புற அமைப்பின் அடிப்படையில்
1.லெப்ரோஸ் - வரையறுக்கப்பட்ட பூஞ்சை அடுக்கு காணப்படுவதில்லை.
2.கிராஸ்டோஸ் - ஓடு போன்ற அமைப்பு
3. ஃபோலியோஸ் - இலை ஒத்த வகை
4. புருட்டிகோஸ் - கிளைத்த புதர் போன்ற தொங்கும் அமைப்பு.
III.உடலத்தில் பாசி செல்கள் பரவலின் அடிப்படையில்
1.ஹோமியோமிரஸ் - பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல்
2.ஹெட்டி ரோமிரஸ் - வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல்
IV.பூஞ்சை உயிரி அடிப்படையில்
1.ஆஸ்கொலைக்கென் - ஆஸ்கோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை.
2.பசிடியோலைக்கென் - பசிடியோமைசீட்ஸ் வகுப்பைச் சார்ந்தவை
V.பாறைகளில் வாழும் உயிரி அடிப்படையில்
1.லைக்கென்கள் பாறைகள் மீது படிந்து வாழும் பொழுது, ஆக்சாலிக் அமிலம் போன்ற கரிம அமிலங்களைச் சுரப்பதால் பாறைகளின் தளம் அரிக்கப்பட்டு மண் உருவாகிறது.
2.சீரோசீர் எனும் வறள் நிலத் தாவர வழிமுறை வளர்ச்சியில் முன்னோடி உயிரினங்களாகத் திகழ்கின்றது.
10.
தனிச் சதைக்கனி(simple fleshy fruit) : ஒற்றைமலரின் ஒரு சூலகப்பையிலிருந்து உருவாகும் கனியாகும். இவற்றின் கனித்தோல் சதைப்பற்றுடன் சாறு நிறைந்தும் காணப்படுகிறது. கனித்தோல் வெளித்தோல், நடுத்தோல், உட்தோல் என வேறுபட்டுக் காணப்படுகிறது. மேலும் இது கீழ்க்கண்ட உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அ. சதைக்கனி (Berry)
1. இக்கனி இரண்டு அல்லது பல சூலக இலைகள் இணைந்து உருவாகும் கனியாகும்.
2. கனியின் வெளித்தோல் மெல்லியதாகவும், நடுத்தோல் மற்றும் உட்தோல் வேறுபாடற்றும் காணப்படும்.
3.இவைகள் சாறு நிறைந்த பகுதியை உருவாக்குகிறது.
எடுத்துக்காட்டு: தக்காளி, பேரிச்சை, திராட்சை, கத்தரி.
ஆ) உள்ஒட்டுச் சதைக்கனி (Drupe):
1.இக்கனி ஒற்றைச் சூலக இலை கொண்ட மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து உருவாகிறது.
2. இவை பொதுவாக சாறு நிறைந்த பகுதியை உருவாக்குகிறது.
3. இக்கனித்தோலின் வெளித்தோல் இறுக்கமான தோல் போன்றும், உட்தோல் கல் போன்று கடினமாகி விதையைச் சூழ்ந்தும் காணப்படுகிறது.
எடுத்துக்காட்டு: மா, தென்னை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards