11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/11/2019
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
குளோரோபுரப்பேனின் ஒடுக்க வினையை எழுது.
2.
5.845 கிராம் சோடியம் குளோரைடை நீரில் கரைக்கப்பட்டது. மேலும் அக்கரைசலானது திட்டக் குடுவையைப் பயன்படுத்தி 500 மி.லி க்கு நீர்க்கப்பட்டது. அக்கரைசலின் வலிமை மோலாரிட்டியில் கணக்கிடுக.
3.
ஜூல் தாம்சன் விளைவை எழுதுக.
4.
பின்வரும் செயல்முறைகளுக்கான நிபந்தனைகளை தருக.
1.வெப்பம் மாறா செயல்முறை
2.வெப்பநிலை மாறா செயல்முறை
3.அழுத்தம் மாறா செயல்முறை
4. கனஅளவு மாறா செயல்முறை
5. சுற்று செயல்முறை
5.
மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.
6.
ஹேலோ ஆல்கேன்களில் காணப்படும் C-X பிணைப்பின் முனைவுத் தன்மைக்கு காரணம் தருக
7.
சமநிலை செறிவில் எவ்வித மாற்றமும் இல்லை எனினும் சமநிலையானது ஏன் இயங்குச் சமநிலை என கருதப்படுகிறது?
8.
ஆக்ஸி ஜனேற்ற எண் எனும் வார்த்தையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய்?
9.
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.
10.
வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு பல்வேறு கரைபொருளுக்கு எவ்வாறு மாறுபடுகிறது என விளக்கு.
11.
Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத் எவ்வாறு தீர்மானிப்பாய்?
12.
உர்ட்ஸ் ஃபிட்டிக் வினையை எழுதுக.
13.
பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்பாடுகளை எழுதுக.
i. m-டைநைட்ரோ பென்சீன்
ii. p-டைகுளோரோ பென்சீன்
iii. 1,3,5-ட்ரைமீத்தைல் பென்சீன்
14.
வாயுநிலையில் உள்ள நடுநிலை அணுவுடன் ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம். இந்த எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?
15.
ஹீண்ட் விதிப்படி சமமான ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன என்பதை உதாரணத்துடன் விளக்குக.
16.
298 K வெப்பநிலையில் :2A +B → C வினையின் ΔH=400 KJ mol-1, ΔS=0.2 KJK-1 mol-1 எனில் வினை தனிச்சசையாக நிகழ தேவையான வெப்பநிலையை கணக்கீடுக
17.
பாயிலின் விதியினை தருக.
18.
டியூட்டிரியத்தின் பதிலீட்டு வினைகளை விளக்குக
19.
கார்பன் டெட்ரா குளோரைடு பற்றி கூற்றுகளில் சரியானதைத் தேர்ந்தெடு
உலர் சலவை காரணியாக பயன்படுகிறது
ஆல்கஹாலிற்கு கரைப்பானாக பயன்படுகிறது
ஆவிநிலையில் உள்ள CCl4 தீப்பற்றி எரியும் தன்மையுடையது
மேற்கண்ட அனைத்தும் சரி
20.
பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு.
II-பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுவுடன் தனித்த இரட்டை எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள அணு அல்லது தொகுதி இணைக்கப்பட்டிருக்கும் நேர்வுகளில் பிணைப்பில்லா உடனிசைவு விளைவு உணரப்படுகிறது.
தனித்த ஜோடி எலக்ட்ரான்கள் உடனிசைவில் ஈடுபட்டு II எலக்ட்ரான்களை இடப்பெயர்ச்சி செய்வதால் ஒன்றிற்கும் மேற்பட்ட உடனிசைவு அமைப்புகளை தருகின்றன.
எலக்ட்ரான் கவர்தன்மை அதிகமுடைய அணு அல்லது தொகுதி II பிணைப்பு உடன் உடனிசைவில் ஈடுபடும்போது II எலக்ட்ரான்கள் நகர்வினால் பல பிணைப்பு உருவாகிறது
இவை அனைத்தும் சரி
21.
கூற்று (A): ஒரு வினைசெயல் தொகுதியின் இருபுறமும் இணைக்கப்பட்டுள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை மாறுபடுவதால் ஏற்படும் ஒரு சிறப்பு வகை மாற்றியும் மெட்டாமெரிசம் எனப்படும்.
காரணம் (R): ஓரே மூலக்கூறு வாய்ப்பாட்டினை பெற்றுள்ள சேர்மங்களின் வினைச் செயல் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆல்கைல் தொகுதிகள் மாறுபடுவதால் இம்மாற்றியம் ஏற்படுகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கம் அல்ல
(A) சரி, (R) தவறு
(A) தவறு, (R) தவறு
22.
1868-ல் தற்போதுள்ள நவீன ஆவர்த்தன அட்டவணையினை ஒத்த ஒரு தனிம வரிசை அட்டவணையை உருவாக்கியவர்.
நியூலண்ட்
மெண்டலீஃப்
லோதர் மேயர்
மோஸ்லே
23.
குவாண்டம் இயக்கவியல் உருவாக அடிப்படையாக அமைந்தது
ஹெய்சன்பர்க்கின் நிச்சயமற்றக் கொள்கை
னுந்துகளின் ஈரியல்புத் தன்மை
அ மற்றும் ஆ
இவற்றுள் ஏதுவுமில்லை
24.
வாயு கரைசல் சமநிலையினை விளக்குவதற்கு பயன்படும் விதி
வான்ட ஹாப் விதி
லீ - சாட்லியர் விதி
ஹென்றி விதி
ஜூல் தாம்சன் விதி
25.
ஒரு இயல்பு வாயுவை வெப்பமாறாச் செயல்முறையில் விரிவடையச் செய்யும்போது
வெப்பமடைகிறது
குளிர்ச்சியடைகிறது
வெடிக்கிறது
a & b
26.
அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை
25% பாராவும் 75% ஆர்த்தோவும்
1% பாரா 99% ஆர்த்தோ
75% பாராவும் 25% ஆர்த்தோவும்
99% பாரா 1% ஆர்த்தோ
27.
பின்வரும் வினையின் அதிக அளவு உருவாகும் முதன்மை விளை பொருள் \(\left( { CH }_{ 3 } \right) _{ 2 } C=CH_{ 2 }\overset { ICI }{ \longrightarrow } \)
2- குளோரோ -1- அயடோ -2- மெத்தில் புரப்பேன்
1- குளோரோ -2- அயடோ -2- மெத்தில் புரப்பேன்
1,2- குளோரோ - 2 - மெத்தில் புரப்பேன்
1,2- டை அயடோ -2- மெ த்தில் புரப்பேன
28.
காற்றில் உள்ள நைட்ரஜனின் பகுதி அழுத்தம் 0.76 atm மற்றும் 300K வெப்பநிலையில் அதன் ஹென்றி விதி மாறிலி மதிப்பு 7.6 × 104 atm. 300 K வெப்பநிலையில், காற்றை நீரின் வழியாக குமிழிகளாக செலுத்தும்போது, கிடைக்கும் கரைசலில், நைட்ரஜன் வாயுவின் மோல் பின்ன மதிப்பு என்ன?
1 × 10–4
1 × 10–6
2 × 10–5
1 × 10–5
29.
பின்வரும் வினைகளில் எது அதிகபட்ச என்ட்ரோபி மாற்றத்தை கொண்டிருக்கும்?
Ca(S) + ½ O2(g) → CaO(S)
C(S) + O2(g) → CO2 (g)
N2(g) + O2(g) → 2NO(g)
CaCO3(S) → CaO(S) + CO2(g)
30.
கட்டுப்பாடற்ற விரிவடைதலின் போது ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை குறைவதில்லை ஏனெனில் மூலக்கூறுகள்
எதிர்மாறு வெப்பநிலையை விட அதிக வெப்பநிலையில் உள்ளது
ஒன்றுக்கொன்று கவர்ச்சி விசையை செலுத்துவதில்லை
இயக்க ஆற்றல் இழப்பிற்கு சமமான வேலையை செய்யும்
ஆற்றல் இழப்பின்றி மோதுகின்றன.
31.
கார உலோகங்களுக்கு, பின்வருவனவற்றுள் எந்த வரிசைப்பண்பு தவறானது?
நீரேற்றும் ஆற்றல் : Li > Na > K > Rb
அயனியாக்கும் ஆற்றல் : Li > Na > K > Rb
அடர்த்தி : Li < Na < K < Rb
அணு உருவளவு : Li < Na < K < Rb
32.
1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்கள்) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. மாதிரியின் மாசு சதவீதம்.
0%
4.4%
16%
8.4%
33.
\(3d_{xy}\) ஆர்பிட்டாலில் yz தளத்தில் எலக்ட்ரான் அடர்த்தி
பூஜ்யம்
0.50
0.75
0.90
34.
பிணைப்பில்லா உடனிசைவு ஒரு உதாரணத்துடன் விளக்கு.
35.
கரைசல்கள் ரெளல்ட் வீதியிலிருந்து விளக்கமடைவதற்க்கான காரணங்களை பட்டியலிடு.
36.
HI உருவாதல் வினைக்கான KP மற்றும் KC க்கான மதிப்பினை கணக்கிட்டு .
37.
லித்தியத்தின் தனித்துவமான பண்புகளை அத்தொகுதியில் உள்ள மாற்ற தனிமங்களின் பண்புகளுடன் ஒப்பிடுக.
38.
ஹைட்ரஜனின் பயன்களை விவரி.
39.
பருப்பொருட்களின் ஈரியல்புத் தன்மைக்கான டி -பிராக்ளே தொடர்பை தருவி.
40.
பின்வருவனவற்றிற்கு IUPAC முறையில் பெயரிடுக
1) CH3–CH=CH–CH=CH–C≡C–CH3
2) \({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { C }_{ 2 }{ H }_{ 5 } } }{ \underset { \overset { I }{ { CH }_{ 3 } } }{ C } } -\overset { \underset { | }{ { C }{ H }_{ 3 } } }{ \underset { \overset { I }{ { H } } }{ C } } -C\equiv C-{ CH }_{ 3 }\)
3) (CH3)3 C – C ≡ C – CH (CH3)2
4) எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலீன்
5) CH ≡ C – C ≡ C – C ≡ CH
41.
பாம் கலோரிமீட்டரில், மாறா கனஅளவில் வெப்பம் உட்கவரப்படுதலை தெளிவான படத்துடன் விளக்குக.
42.
ஆக்ஸிஜனேற்ற எண் முறையில் பின்வரும் வினைகளைச் சமன் செய்க
i) K2Cr2O7 + KI + H2SO4 → K2SO4 + Cr2(SO4)3 +I2+H2O
ii) KMnO4 + Na2SO3 → MnO2 + Na2SO4 + KOH
iii) Cu+ HNO3 → Cu(NO3)2 + NO2+ H2O
iv) KMnO4+H2C2O4 + H2SO4 → K2SO4 + MnSO4 + CO2 + H2O
43.
பெரிலியம் மற்றும் அலுமினியத்திற்குமான ஒத்தத் தன்மைகளை விவரிக்க
1.

2.

\(=\frac { \left( \frac { 5.845 }{ 58.45 } \right) }{ 0.5 } \)
\(=\frac { 0.1 }{ 0.5 } =0.2M.\)
3.
வெப்பமாறாச் செயல்முறையில் ஒரு வாயுவானது அதிக அழுத்தப்பகுதியிலிருந்து , குறைந்த அழுத்தப்பகுதிக்கு விரிவடையச் செய்யும் போது, வெப்பநிலையானது குறையும் இந்நிகழ்வு ஜூல் தாம்சன் விளைவு எனப்படுகிறது.
4.
செயல்முறைகள் மற்றும் அவற்றிற்கான நிபந்தனைகள்
| செயல்முறை | நிபந்தனை |
| வெப்பம் மாறா செயல்முறை | q=0 |
| வெப்பநிலை மாறா செயல்முறை | dT=0 |
| அழுத்தம் மாறா செயல்முறை | dP=0 |
| கனஅளவு மாறா செயல்முறை | dV=0 |
| சுற்று செயல்முறை | dE=0,dH=0,dP=0,dV=0,dT=0 |
5.
மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பானது ஒரு தனித்த மூலக்கூறுக்கு உள்ளாகவே நிகழ்கிறது.
6.
1. ஹாலஜனானது கார்பனைக் காட்டிலும் அதிக எலக்ட்ரான் கவர் தன்மை உடையது.அதனால் கார்பன்-ஹாலஜன் பிணைப்பானது முனைவுத் தன்மை கொண்டுள்ளது.
2.கார்பன் அணுவானது பகுதி நேர்மின் தன்மையினையும் (\(\delta^+ \))ஹலாஜன் அணுவானது பகுதி எதிர்மின் தன்மையினையும் (\(\delta^-\))பெற்றுள்ளது.

3. கார்பன் sp3 இனக்கலப்பு ஆர்பிட்டாலுடன், ஹலாஜன் அணுவின் சரிபாதி நிரப்பப்பட்ட p-ஆர்பிட்டால் மேற்பொருந்துதல் C-X பிணைப்பு உருவாகிறது.
7.
சமநிலையை அடைந்த பின்னர் மீளும் தன்மையுடைய வேதிவினைகள் நீகழாமல் நின்றுவிடுவதில்லை.
சமநிலையில் முன்னோக்கிய வினை மற்றும் பின்னோக்கிய வினை ஆகிய இரண்டும் சமமான வேகத்தில் நிகழ்ந்து கொண்டுருக்கின்றன.
பேரளவு மாற்றங்கள் ஏதும் உணரப்படுவதில்லை. எனவே வேதிச் சமநிலையானது இயங்குச் சமநிலை என அழைக்கப்படுகிறது.
8.
ஒரு சேர்மத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அணுவினைத் தவிர்த்து, பிற அணுக்களை அவற்றின் வழக்கமான, ஆக்சிஜனேற்ற நிலையில் அயனிகளாக கண்டறிவதற்கான விதிகளின்படி நிர்ணயம் செய்யப்பட்ட ஆக்சிஜனேற்ற நிலையில் அயனிகளாக நீக்கிய பின்னர் அக்குறிப்பிட்ட அணுவின் மீது எஞ்சியிருப்பதாக கருதப்படும் மின்சுமையே அந்த அணுவின் ஆக்சிஜனேற்ற எண் எனப்படும்.
ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைகளை ஆக்சிஜனேற்ற எண்ணை பயன்படுத்தி நன்கு விளக்க முடியும்.
9.
(i) லாந்தனைடுகள்: [54Xe] 4f1-145d1 6s2
(ii) ஆக்டினைடுகள்: [86Rn] 5f0-14 6d0-2 7s2
10.
(i) பிரிகையடைதல் அல்லது இணைதல் நிகழாத கரைபொருளுக்கு வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு 1.மேலும், அதன் கண்டறியப்பட்ட மோலார் நிறையானது, உண்மையான மோலார் நிறைக்கு அருகாமை மதிப்பை பெற்றிருக்கும்.
(ii) கரைசலில், இணைந்து உயிர்படி ஒலிகோமரைத் தரும் கரைபொருள்களின் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு ஒன்றை விடக் குறைவு (i < 1). மேலும், அளவிடப்பட்ட மோலார் நிறையைவிட அதிகமாக இருக்கும்.
(iii) பிரிகையடைந்து அவற்றின் உட்கூறு அயனிகளை உருவாக்கும் கரைபொருளின் வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு ஒன்றை விடக் அதிகம் (i > 1) மேலும், அளவிடப்பட்ட மோலார் நிறையானது. உண்மையான மோலார் நிறையைவிட குறைவாக இருக்கும்.
11.
Q = KC, எனும்போது வினை சமநிலையில் உள்ளது.
Q > KC, எனும்போது வினையானது பின்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
Q < KC, எனும்போது வினையானது முன்னோக்கிய திசையில் நிகழ்கிறது.
12.

13.
14.
(i) அனுவின் உருவளவு
(ii) நிகர அணுக்கரு மின்சுமை
(iii) மறைத்தல் விளைவு
(iv) எலக்ட்ரான் அமைப்பு
15.
1. ஆறு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள கார்பன் அணுவினை கருதுவோம்.
2. ஆஃபா தத்துவத்தின்படி இதன் எலக்ட்ரான் அமைப்பு 6C=1s22s22p2
3. இதனை பின்வருமாறு குறிப்பிடலாம்

4. மேற்கண்ட நிகழ்வில் எலக்ட்ரான் -எலக்ட்ரான் விலக்குவிசையினை குறைத்திட ஹீண்ட் விதிப்படி ஆறாவது எலக்ட்ரானானது ஐந்தாவது எலக்ட்ரான் இடம் கொண்டுள்ள px ஆர்பிட்டாலில் சென்று இரட்டையாகாமல் py ஆர்பிட்டாலுக்குச் செல்கிறது.
16.
T = 298 K
ΔH = 400 J mol−1 = 400 J mol−1
ΔS = 0.2 J K−1 mol−1
ΔG = ΔH − TΔS
if T = 2000 K
ΔG = 400 − (0.2 × 2000) = 0
if T > 2000 K
ΔG will be negative.
The reaction would be spontaneous only beyond 2000K
17.
1. ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் , குறிப்பட்ட நிறையுள்ள வாயு அடைத்துக்கொள்ளும் கன அளவானது அதன் அழுத்திற்கு எதிர்விகித தொடர்புடையது.
2. கணிதவியல் முறைப்படி, பாயில் விதி
\(V\alpha \frac { 1 }{ p } \) (T மற்றும் n மாறிலிகள் ) அல்லது \(V=K\frac { 1 }{ P } \)
3. K = விகித மாறிலி
18.
1. வினை நிகழும் சூழலைப் பொறுத்து, டியூட்டிரியமானது ஹைட்ரஜனின் சேர்மங்களிலுள்ள ஹைட்ரஜனை, பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ மீள் முறையில் பதிலீடு செய்கிறது.
2. இவ்வினைகள் டியூட்டிரியம் அல்லது கனநீரைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படுகின்றன .
CH4 + 2D2 \(\rightarrow\) CD4 + 2H2
2NH3 + 3D2 \(\rightarrow\) 2ND3 + 3H2
19.
(a)
உலர் சலவை காரணியாக பயன்படுகிறது
20.
(d)
இவை அனைத்தும் சரி
21.
(a)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) ஆனது (A) விற்கான சரியான விளக்கமாகும்
22.
(b)
மெண்டலீஃப்
23.
(c)
அ மற்றும் ஆ
24.
(c)
ஹென்றி விதி
25.
(b)
குளிர்ச்சியடைகிறது
26.
(a)
25% பாராவும் 75% ஆர்த்தோவும்
27.
(a)
2- குளோரோ -1- அயடோ -2- மெத்தில் புரப்பேன்
28.
(d)
1 × 10–5
29.
(d)
CaCO3(S) → CaO(S) + CO2(g)
30.
(b)
ஒன்றுக்கொன்று கவர்ச்சி விசையை செலுத்துவதில்லை
31.
(c)
அடர்த்தி : Li < Na < K < Rb
32.
(c)
16%
33.
(a)
பூஜ்யம்
34.
1. \(\sigma \) - பிணைப்பு எலக்ட்ரான்களின் உள்ளடங்காத தன்மை Hyper Conjucation என அழைக்கப்படுகிறது.
2. \(\sigma \) - பிணைப்பில் உள்ள எலக்ட்ரான்கள் (வழக்கமாக C - H (அல்லது) C - C பிணைப்பு எலக்ட்ரான்கள்) அதன் அருகாமையில் உள்ள பிணைப்பில் ஈடுபடா p ஆர்பிட்டல் அல்லது \(\sigma \)*, \(\pi\)* போன்ற எதிர்பிணைப்பு ஆர்பிட்டால்களுடன் இடைவினை புரிவதால் ஏற்படும் ஒரு தனித்த நிலைப்புத்தன்மை பெறச் செய்யும் விளைவு Hyper Conjucation எனப்படும்.
3. எலக்ட்ரோமெரிக் விளைவைப் போன்று அல்லாமல் இவ்விளைவு நிலையான ஒன்றாகும்.
4. இவ்விளைவு நிகழ \(\alpha \) C - H தொகுதி அல்லது அணுக்களின் மீதுள்ள தனித்த எலக்ட்ரான்களைப் பெற்றுள்ள N, O போன்றவை \(\pi\) பிணைப்பிற்கு அருகாமையில் (sp2 இனக்கலப்பு கார்பனுக்கு) அமைய வேண்டும்.
5. - பிணைப்பு ஆர்பிட்டால் அல்லது தனித்த இரட்டை எலக்ட்ரான்களில் பெற்றுள்ள ஆர்பிட்டால் ஆனது அருகாமையில் உள்ள ஆர்பிட்டால் அல்லது P- அர்ப்பிட்டாலுடன் மேற்பொருத்துவதால் இவ்விளைவு நிகழ்கிறது.
6. எடுத்துக்காட்டு 1:
7. புரப்பீனில்,மெத்தில் தொகுதியின் (C-H) '\(\sigma \)' பிணைப்பு எலக்ட்ரான்கள் இரட்டைப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ள கார்பனின் \(\pi\) -ஆர்பிட்டாலுக்கு கீழே குறிப்பிட்டுள்ளவாறு இசைவுற இயலும்.

8. மேற்கட்டுள்ள அமைப்புகளில், '\(\sigma \)' பிணைப்பு எலக்ட்ரான்கள் உடனிசைவில் ஈடுபடுகின்றன மேலும் இத்தகைய உடனிசைவு நிகழ பிணைப்பு பிளவுறுகிறது.
9. இதன் விளைவாக மூன்று உடனிசைவு வடிவங்களில் புரப்பீனைக் குறிப்பிட இயலும் (வடிவம் (II), (III) மற்றும் (IV) இவ்வடிவங்களால், \(\alpha\) - கார்பன் மற்றும் ஒரு ஹைட்ரஜனுக்கிடையே எத்தகைய பிணைப்பும் காணப்படுவதில்லை.
10. எனவே இவ்விளைவு பிணைப்பில்லா உடனிசைவு விளைவு (no bond resonance) அல்லது பேக்கர் - நாதன் விளைவு புரப்பீனின் பிணைப் பில்லா உடனிசைவு வடிவங்கள் என அழைக்கப்படுகிறது. வடிவம் (II), (III) மற்றும் (IV) ஆகியன முனைவுத் தன்மை உடையவை.
35.
(1) கரைசல்கள், நல்லியல்பு நடத்தையிலிருந்து விலக்கலடைவதற்கு பிவரும் காரணிகள் காரணமாகின்றன.
(i) கரைபொருள் - கரைப்பான் இடையீடுகள்:
ஒரு நல்லியல்பு கரைசலுக்கு, கரைப்பான் மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட (A - A), கரைபொருள் மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட (B -B) மற்றும் கரைப்பான், கரைபொருள் மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட (A -B) இடையீடுகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடையீடுகள் வேறுபட்டிருப்பின், நல்லியல்பு நிலையிலிருந்து விளக்கமடைதல் நிகழும்.
(ii) கரைபொருள் பிரிகையடைதல்:
கரைசலிலுள்ள கரைபொருளானது, பிரிகையடைந்து அதன் உட்கூறு அயனிகளை உருவாக்கும்போது, அந்த அயனிக்கனவை, கரைப்பானுடன் வலுவாக இடையீடு செய்கின்றன, மேலும் இதனால் ரெளல்ட் வீதியிலிருந்து விலகலடைகிறது. எடுத்துக்காட்டாக, பொட்டாசியம் குளோரைடின் நீர்க்கரைசல், நல்லியல்பு நடத்தையிலிருந்து விலகலடைகிறது. ஏனெனில் கரைபொருள் பிரிகையடித்து, K+ மற்றும் Cl- அயனிகளை தருகிறது. இவை நீர் மூலக்கூறுகளுடன் வலுவான அயனி - இருமுனை இடையீடுகளை உருவாக்குகிறது.
KCl(s) + H2O ➝ K+(aq) + Cl-(aq)
(iii) கரைபொருள் இணைதல்:
கரைபொருள் இணைத்தலும், நல்லியல்பு நடத்தையிலிருந்து விளக்கமடைவதற்கு காரணமாக இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, கரைசல்களில், அசிட்டிக் அமிலமானது மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட ஹைட்ரஜன் பிணைப்பை உருவாக்குவதன் காரணமாக இப்படி மூலக்கூறாக காணப்படுகிறது. எனவே ரெளல்ட் விதியிலிருந்து விலக்கலடைகிறது.

(iv) வெப்பநிலை:
கரைசலில் வெப்பநிலை அதிகரிப்பானது, கரைசலிலுள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. இதனால், அவற்றிற்கிடையே உள்ள கவர்ச்சி விசைகள் குறைக்கப்படுகின்றன. இதன் விளைவாக கரைசல் நல்லியல்பு தன்மையிலிருந்து விலக்கலடைகின்றன.
(v) அதிக அழுத்தத்தில், மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று, அருகருகே இருக்க நிர்பந்திக்கப்படுகின்றன. இதனால் அவற்றின் மூலக்கருக்களுக்கிடைப்பட்ட கவர்ச்சி அதிகமாகும். எனவே, அதிக அழுத்தத்தில் கரைசல்கள் ரெளல்ட் விதியிலுருந்து விலக்கலடைகின்றன.
(vi) செறிவு:
கரைசலை போதுமான அளவு நீர்க்கச் செய்தல், குறிப்பிடத்தகுந்தளவு கரைப்பான் - கரைபொருள் இடையீடுகள் இருப்பதில்லை, ஏனெனில் கரைப்பான் மூலக்கூறுகளுடன் ஒப்பிடும்போது கரைபொருள் மூலக்கூறுகளின் எண்ணிக்கை மிகக் குறைவு. கரைபொருளைச் சேர்த்து செறிவை அதிகரிக்கும்போது, குறிப்பிடத்தக்க அளவு கரைப்பான் - கரைபொருள் இடையீடு ஏற்படுகிறது. இது ரெளல்ட் வீதியிலிருந்து விளக்கமடைய செய்கிறது.
36.
HI உருவாகும் வினையை நாம் கருதுவோம். 'a' மோல் நைட்ரஜன் மற்றும் 'b' மோல் அயோடி வாயுக்கள், 'V' கொளவுள்ள உடைய கலனில் வினைபுரிய அனுமதிக்கப்படுகின்றன. X மோல் ஹைட்ரஜன் X மோல் அயோடினுடன் வினைபுரிந்து 2x மோல் HIஐ தருவதாகக் கொள்வோம்.
\({ H }_{ 2 }(g)+{ I }_{ 2 }(g)\rightleftharpoons 2HCI_{ 2 }(g)\)
| H2 | I2 | HI | |
| ஆரம்பத்தில் உள்ள மோல்களின் எண்ணிக்கை | a | b | 0 |
| வினைபட்ட மோல்களின் எண்ணிக்கை | x | x | 0 |
| சமநிலையில் உள்ள மோல்களின் எண்ணிக்கை | a -x | b -x | 2x |
| சமநிலையில் மோலார் செறிவு | \(\frac { a-x }{ V } \) | \(\frac { b -x }{ V } \) | \(\frac { 2x }{ V } \) |
நிறைதாக்க விதியைக் பயன்படுத்த,
\({ K }_{ C }=\frac { \left[ HI \right] ^{ 2 } }{ \left[ { H }_{ 2 } \right] \left[ { I }_{ 2 } \right] } \)
\(=\frac { \left( \frac { 2x }{ V } \right) ^{ 2 } }{ \left( \frac { a-x }{ V } \right) \left( \frac { b-x }{ V } \right) } =\frac { { 4x }^{ 2 } }{ (a-x)(b-x) } \)
சமநிலை மாறிலி KP ன் மதிப்பினை பின்வருமாறு கணக்கிட இயலும்.
KP க்கும் KC க்கும் இடையேயான தொடர்பினை நாம் அறிவோம்.
\({ K }_{ p }={ K }_{ C }(RT)^{ (\triangle { n }_{ g }) }\)
இங்கு
\(\triangle n(g)={ n }_{ p }-{ n }_{ r }=2-2=0\)
எனவே \({ K }_{ p }={ K }_{ C }\)
\({ K }_{ p }=\frac { { 4x }^{ 2 } }{ (a-x)(b-x) } \)
37.
i.லித்தியத்தின் தனித்துவமான பண்பு
ii.Li+அயனியின் தனித்துவமான பண்பிற்கான காரணங்கள் அதன் மிகச்சிறிய உருவளவு,அதிக முனைவாக்கும் திறன்,அதிக நீரேற்றம் ஆற்றல் மற்றும் d-ஆர்பிட்டால்கள் இல்லாத்தன்மை போன்றவையே ஆகும்.
| லித்தியம் |
தொகுதியிலுள்ள மற்ற தனிமங்கள் |
|---|---|
| i.கடினமானது, ii.அதிக உருகுநிலை iii.மற்றும் கொதிநிலை கொண்டது |
i.மிதுவானவை, |
| iv.குறைவா வினைத்திறன் உடையது v.(எடுத்துக்காட்டாக,இது ஆக்சிஜனுடன் வினைப்பட்டு சாதாரண ஆக்சைடை உருவாக்குகிறது, பெராக்சைடுகளை உருவாக்குவது மிகவும் கடினம்,மேலும் இவற்றின் உயர் ஆக்சைடுகள் நிலைப்புத்தன்மை அற்றவை) |
ivஅதிக வினைதிறன் மிக்கவை |
| vi.நைட்ரஜனுடன் வினைபுரிந்து Li3 ஐ தருகிறது. | v.வினை இல்லை |
| vii.புரோமினுடன் மெதுவாக வினைபுரிகிறது | vi.வீரியத்துடன் வினைபுரிகின்றன. |
| viii.கார்பனுடன் நேரடியாக வினைபுரிந்து அயனி கார்பைடுகளை உருவாக்குகின்றன. ix.எடுத்துக்காட்டாக 2Li+2C⟶Li2+C2 |
viii.கார்பனுடன் நேரடியாக வினைபுரிவதில்லை. ஆனால் கார்பன் சேர்மங்களுடன் வினைபுரிகின்றன. 2Na+C2H2⟶Na2C2+H2 |
| x.இதன் சேர்மங்கள் நீரில் பகுதியளவு கரைகின்றன. | ix.நீரில் நன்கு கரைகின்றன. |
38.
1. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜனில் 90% மேல், அத்தொழிற்சாலைகளிலேயே தொகுப்பு முறை பயன்பாட்டிற்கு வினைபொருளாகப் பயன்படுகிறது. அம்மோனியாவை பெருமளவில் தயாரிக்க பயன்படும் ஹேபர்முறை இதற்கு ஒரு உதாரணமாகும். நைட்ரிக் அமிலம், உரங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்ட வேதிச் சேர்மங்களை பெருமளவில் தயாரிப்பதில் அம்மோனியா பயன்படுகிறது.
380-450°C
N2+ 3H2 \(\rightleftharpoons \) 2NH3
200 atm/ இரும்பு(Fe)
2. தொழிற்சாலைகளில் பெருமளவு கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் மெத்தனாலை, கார்பன் மோனாக்சைடிலிருந்து தாமிரத்தை (Cu) வினையூக்கியாகக் கொண்டு தயாரிக்கப் பயன்படுகிறது.
CO+2H2 \(\overset { Cu }{ \rightarrow } \) CH3 OH
3. Pt/H2 ஐப் பயன்படுத்தி, நிறைவுறாத கொழுப்பு எண்ணெய்களை வனஸ்பதி என்றழைக்கப்படும் நிறைவுற்ற கொழுப்புகளாக (Margarine) மாற்றலாம்.
4. உலோகவியலில் உலோக ஆக்சைடுகளை அதிக வெப்பநிலையில் உலோகமாக ஒடுக்க ஹைட்ரஜன் பயன்படுகிறது.
CuO + H2 \(\rightarrow\) Cu + H2O
WO3 + 3H2 \(\rightarrow\) W + 3H2 O
5. அணுநிலை ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆக்சிஜன் கலவையானது உலோகங்களை ஒட்டவும், வெட்டவும் பயன்படுகிறது.
6. ராக்கெட்டுகளை உந்தித்தள்ளும் எரிபொருளாக நீர்ம ஹைட்ரஜன் பயன்படுகிறது.
7. எரிமின்கலங்களில், மின் ஆற்றலை உற்பத்தி செய்ய ஹைட்ரஜன் பயன்படுகிறது. உலோகங்கள் ஹைட்ரஜனை மீள் முறையில் ஏற்றுக்கொள்ளும் தன்மையானது. மறு மின்னூட்டம் செய்யும் வகையிலான உலோக ஹைட்ரைடு மின்கலங்கள் தயாரிப்பதில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
39.
1. பிளாங்கின் குவாண்டம் கருது கோளின்படி
E=hv ...(1)
2. ஐன்ஸ்டீனின் நிறை ஆற்றல் சமன்பாட்டின்படி
E=mc2 ...(2)
சமன்பாடு (1), (2) ஐ சமன்படுத்த
hv=mc2 ...(3)
இங்கு \(v=\frac{c}{\lambda}\)எனில்
சமன்பாடு (3) ஐ கீழ்கண்டவாறு எழுதலாம்
\(h\frac{c}{\lambda}=mc^2\)
\(\lambda=\frac{h ̶c̶}{mc^{ ̶2̶}}\)
\(\lambda=\frac{h}{mc}\) ...(4)
c=v எனப்பிரதியிட
\(\lambda=\frac{h}{mv}\) ...(5)
mv=p என்பது துகளின் உந்தமாகும்
சமன்பாடு (5) ஐ பின்வருமாறு எழுதலாம்
\(\lambda=\frac{h}{p}\)
40.
| அமைப்பு | IUPAC பெயர் | |
|---|---|---|
| 1. | CH3 - CH = CH - CH = CH -C = C - CH3 | ஆக்டா - 2, 4 - டையீன் - 6 - ஜன் |
| 2. | \({ CH }_{ 3 }-\overset { \overset { { CH }_{ 3 } }{ | } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ c } } -\overset { \overset { { CH }_{ 3 } }{ | } }{ \underset { \overset { | }{ { H } } }{ c } } -C\equiv C-{ CH }_{ 3 }\) | 4 - மெத்தில் - 5 - எத்தில் - 5 - மெத்தில் ஹெக்ஸ் - 2 - ஜன் |
| 3. | (CH3)3 C - C \(\equiv \) C - CH (CH)32 | 2 - மீத்தைல் - 5,5 - டைமீத்தைல் ஹெக்பொ - 3 - யீன் |
| 4 | எத்தில் ஐசோபுரப்பைல் அசிட்டிலின் கண்டறி | 2 - மெத்தில் - 3 - ஹெக்சைன் (அ) - 2 - மெத்தில் ஹெக்ஸ் - 3 - ஜன் |
| 5. | CH \(\equiv \) C - C \(\equiv \) C - C \(\equiv \) CH | ஹெக்ஸ் - 1,3,5 - டீரையின் |
41.
1. இயற் அல்லது வேதி மாற்றங்களில் ஏற்படும் வெப்பமாற்ற அளவினை அளந்தறிய கலோரிமீட்டர் பயன்படுகிறது.
2. கலோரி மீட்டர் முறையில், ஒரு செயல்முறையில் ஏற்படும் வெப்பநிலை மாற்றமானது அளந்தறியப்படுகிறது.
3. இந்த வெப்பநிலை மாற்றமானது, வெப்ப ஏற்புத்திறனுக்கு C=q/m \(\triangle\)Tநேர்விகித்திலிருக்கும். என்ற சமன்பாட்டை பயன்படுத்தி ஒரு செயல்முறையின் வெப்பமாற்ற அளவை நாம் கணக்கிட முடியும்.கலோரி மீட்டர் அளவீடுகளை இருவேறு நிபந்தனைகளில் கீழ் அளந்தறியலாம்.
i) மாறாத கன அளவில் (qv)
ii) மாறாத அழுத்தத்தில் (qp)
(அ)\(\triangle\)U அளவிடுதல்
1. மாறாத களஅளவில், வேதி வினைகளில், வெளிப்படும் வெப்பம் கலோரிமீட்டர் கொண்டு அளவிடப்படுகிறது.
2. பாம் கலோரிமீட்டரின் உள்கலன் (பாம்) மற்றும் மூடி ஆகியன வலிமையானஎஃகினால் செய்யப்பட்டுள்ளது.உலோக முடியானது திருகாணிகள் மூலம் இறுக்கமாக பொருத்தப்பட்டுள்ளது.
3. எடையிடப்பட்ட (Wகி) கரிம சேர்மமானது ஒரு பிளாட்டின தடடில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இத்தட்டானது மின்பாய்தல் மூலம் உடனடியாக எரிதலை தூண்டுவதற்காக மின்கம்பிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது உள் கலனில் அதிகளவு ஆக்ஸிஜன் செலுத்தி அழுத்தப்படடு இறுக்கமாக மூடப்படுகிறது. உள் கலன் (பாம்) ஆனது கலோரிமீட்டரினுள் உள்ள நீரில் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. வினையில் உருவாகும் வெப்பம் நீர் முழுவதும் சீராக பரவச் செய்ய கலோரி மீட்டரின் சுவர்களுக்கு, உள்கலனிற்கும் (பாம்) இடையே ஒரு கலக்கி உள்ளது. மின்வில்ன உருவாக்கி சேர்மம் எரிக்கப்படுகிறது.
4. சேர்மம் எரிக்கப்படும் போது உருகும் வெப்பம், கலோரி மீட்டர் மற்றும் அதைச் சுழ்ந்துள்ள நீரினால் உறிஞ்சப்பிடுகிறது. வெப்பநிலை மாற்றத்தை அளவிட பெக்மென் வெப்பநிலைமானி பொருத்தப்பட்டுள்ளது. பாம் கலோரி மீட்டர் மூடப்பட்டுள்ளதால், அதன் கனஅளவில் மாற்றம் ஏற்படுவதில்லை. எனவே வெப்ப அளவீடகளானது மாறாத கனஅளவில் எரிதல் வெப்பத்திற்கு (\(\triangle U^o_c\))சமம்.
5. இவ்வினயில் உருவான வெப்பத்தின் அளவானதுனைது (),கலோரி மீட்டர் மற்றும் நீரால் உறிஞ்சப்பட்ட வெப்ப மதிப்புகளின் கூடுதலுக்குச் (\(\triangle U^o_c\))சமம்.
6. கலோரி மீட்டரால் உறிஞ்சப்பட்ட வெப்பம்
\(q_1=k.\triangle T\)
7. இங்கு k என்பது கனமாரி மீட்டர மாறிலி எனப்படுகிறது. மேலும் k=mcCc
8. mc=கலோரி மீட்டரின் நிற
9. Cc=கலோரி மீட்டரின் வெப்ப ஏற்புதிறன்
10. நீரால் உறிஞ்சப்பட்ட வெப்பம் q2=mwCw\(\triangle\)T
11. இங்கு mwஎன்பது நீரின் மோலார் நிற,
12.Cw நீரின் மோலார் வெப்ப ஏற்புத்திறன்
(4.184 KJ K-1mol-1)
எனவே \(\triangle U_c=q_1+q_2\)
=\(k.\triangle T+m_wC_w\triangle T\)
\(=(k+m_wC_w)\triangle T\)
13. ஒரு தெரிந்த அளவுடைய திட்ட பொருளை (பென்சாயிக் அமிலம்) எரிப்பதன் மூலம். கலோரி மீட்டர் மாறிலியின் (k)மதிப்பினை தீர்மானிக்க முடியும். பென்சாசாயிக் அமிலத்தின் எரிதல் வினை வெப்பம்-3227KJ mol-1 என்ற தெரிந்த ஒரு மதிப்பாகும்.
மாறா அழுத்தத்தில் என்தால்பி மாற்றத்தை சமன்பாடு (7.17)ஐ பயன்படுத்தி கணக்கிடலாம்.
\(\triangle H^o_c\)(அழுத்தம்)=\(\triangle U^o_c\)(கன அளவு)+\(\triangle n_gRT\)

42.
(i)

K2Cr2O7 + 6KI+H2SO4 → K2SO4 + Cr2 (SO4)3 + I2 +H2O
K2Cr2O7 + 6KI+H2SO4 → K2SO4 + Cr2 (SO4)3 + 3I2 +H2O
K2Cr2O7 + 6KI+7H2SO4 → 4K2SO4 + Cr2 (SO4)3 + 3I2 +H2O
(ii)

⇒ 2KMnO4+3Na2SO3 → MnO2 + Na2SO4 + KOH
⇒ 2KMnO4+3Na2SO3 → 2MnO2 + 3Na2SO4 + KOH
⇒ 2KMnO4+3Na2SO3 + H2O→ 2MnO2 + 3Na2SO4 + 2KOH
(iii)

Cu+2HNO3 → Cu(NO3)2 + NO2 + H2O
Cu+2HNO3 + 2HNO3→ Cu(NO3)2 + 2NO2 + 2H2O
Cu+4HNO3 → Cu(NO3)2 + 2NO2 + 2H2O
(iv)

2KMnO4+5H2C2O4 + H2SO4 → K2SO4 + MnSO4 + CO2 +H2O
2KMnO4+5H2C2O4 + H2SO4 → K2SO4 + 2MnSO4 + 10CO2 +H2O
2KMnO4+5H2C2O4 + H2SO4 → K2SO4 + 2MnSO4 + 10CO2 +8H2O
43.
1.பெரிலியமும், அலுமினியமும் மூலைவிட்டத் தொடர்பினைக் கொண்டுள்ளது.இந்நேர்வில், இந்த அயனிகளின் உருவளவு.
\(r_{Be^{2+}}=0.45 \overset{0}{A}\)
\(r_{Al^{3+}}=0.54 \overset{0}{A}\)
2.ஓரலகு பரப்பில் அவைகளின் அடர்த்தியானது நெருக்கமான மதிப்புகளை பெற்றுள்ளன.
Be2+ = 2.36
Al3+ = 2.50
3. இவைகளின் எலக்ட்ரான் கவர்தன்மை மதிப்புகளும் சமம்.
Be=1.5
Al=1.5
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards