11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/09/2019
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
400k வெப்பநிலையில் பின்வரும் வினையின் சமநிலை மாறிலி keq மதிப்பை காண்க
\(2NOCl(g)⇌2NO(g)+Cl_2(g),\)
\(\triangle H^0=77.2KJ mol^{-1};\)
மற்றும் \(\triangle S^0=122JK^{-1}mol^{-1}\)
2.
அகஆற்றலின் சிறப்பியல்புகளை விளக்குக.
3.
வாண்டர் வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு நிலைமாறு மாறிகளைத் தருவி
4.
ஜிப்சத்தின் பயன்களைத் தருக
5.
பின்வரும் செயல்முறைக்கு தேவைப்படும் ஆற்றலைக் கணக்கிடுக.
He+ (g) → He2+ (g) + e-
சிறும ஆற்றல் நிலையில் உள்ள ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல் -13.6 evatom-1.
6.
பின்வருவனவற்றின் மோலார் நிறைகளைக் காண்க.
i) யூரியா[CO(NH2)2]
ii) அசிட்டோன் [CH3COCH3]
iii) போரிக் அமிலம்[H3BO3]
iv) கந்தக அமிலம்[H2SO4]
7.
திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?
8.
H2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக
9.
மின்னாற் பகுப்பு முறையில் ஹைட்ரஜன் தயாரித்தலை விளக்குக.
10.
அயனி ஆரத்தினை கண்டறியும் பாலிங் முறையினை விவரி.
1.
தீர்வு
கொடுக்கப்பட்டவை
T = 400K; ΔH0 = 77.2 kJ mol-1 = 77200
J mol-1; ΔS0 = 122 JK-1 mol-1
ΔG0 = -2.303 RT log Keq
\(\begin{aligned}
& \log \mathrm{K}_{\mathrm{eq}}=\frac{-\Delta \mathrm{G}^0}{2.309 \mathrm{RT}} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& \log \mathrm{K}_{\mathrm{eq}}=-\frac{\left(\Delta \mathrm{H}^0-\mathrm{T} \Delta \mathrm{S}^0\right)}{2.303 \mathrm{RT}} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& \log \mathrm{K}_{\mathrm{eq}}=-\left(\frac{77200-400 \times 122}{2.303 \times 8.314 \times 400}\right) \\
\end{aligned}\)
\(\begin{aligned}
& \log \mathrm{K}_{\mathrm{eq}}=-\left(\frac{28400}{7659}\right)
\end{aligned}\)
log Keq = -3.7080
Keq = -3.7080
Keq = antilog (-3.7080)
Keq = 1.95 \(\times\) 10-4
2.
அக ஆற்றலின் சிறப்பியல்புகள்:
1. ஒரு அமைப்பின் அக ஆற்றலானது ஒரு பொருண்மை சார்பண்பாகும். ஒரு அமைப்பிலுள்ள பொருளின் அளவை பொறுத்து இது அமைகிறது.
2. அமைப்பிலுள்ள பொருளின் அளவை இரு மடங்காக்கும் போது, அக ஆற்றலும் இரு மடங்காகிறது.
3. ஒரு அமைப்பின் அக ஆற்றல் ஒரு நிலைச்சார்பு. இது அமைப்பின் நிலை மாறிகளை (T,P,V,K மற்றும் n )மட்டுமே சார்ந்து அமைகிறது.
4. அக ஆற்றல் மாற்றமானது, இறுதிநிலையையை அடைய எந்த வழிமுறை பின்பற்றப்பட்டது என்பதை பொறுத்து அமையாது.
5.அமைப்பின் அக ஆற்றல் மாற்றமானது \(\triangle U=U_f-U_i\) எனகுறிப்பிடப்படுகிறது.
6.சுற்று செயல்முறைகளில், அக ஆற்றலில் எவ்வித மாற்றமும் நிகழ்வதில்லை.
\(\triangle U=0\)
7. ஒரு அமைப்பின் இறுதிநிலை அக ஆற்றலானது அதன் ஆரம்பநிலைஅக ஆற்றலைவிட குறைவாக இருக்கும் நிலையில்\(\triangle U\) ஆனது எதிர்குறி மதிப்பை பெறும்.
\(\triangle U=U_f-U_i=ve(U_f
8. ஒரு அமைப்பின் இறுதிநிலை அக ஆற்றலானது (Uf),அதன் ஆரம்பநிலை (Ui)அக ஆற்றலை விட அதிகமாக இருக்கும் நிலையில் ஆனது நேர்குறி மதிப்பை பெறும்.
\(\triangle U=U_f-U_i=+ve(U_f
3.
n மோல் வாயுவிற்கான வாண்டர் வாலஸ் சமன்பாடு
\(\left( p+\frac { { an }^{ 2 } }{ { v }^{ 2 } } \right) \left( V-nb \right) =nRT\)........(1)
1 மோல் வாயுவிற்கு
\(\left( p+\frac { a }{ { v }^{ 2 } } \right) (V-b)=RT\).............(2)
மேற்கண்ட சமன்பாட்டிலிருந்து நிலைமாறு மாறிலிகள் PC, VC மற்றும் TC மதிப்புகளை வாண்டர் வாலஸ் மாறிலிகள் a மற்றும் b ன் வாயிலாக தருவிக்கலாம்
மேற்கண்ட சமன்பாட்டை விரிவாக்க
\(PV+\frac { a }{ v } -pb-\frac { ab }{ { v }^{ 2 } } -RT=0\)........(3)
சமன்பாடு (3) ஐ V2 /p ஆல் பெருக்க
\(\frac { { V }^{ 2 } }{ p } \left( PV+\frac { a }{ v } -pb-\frac { ab }{ { v }^{ 2 } } -RT \right) =0\)
\({ V }^{ 3 }+\frac { aV }{ p } -{ bV }^{ 2 }-\frac { ab }{ p } -\frac { { RTV }^{ 2 } }{ P } =0\).......(4)
'V' ஏன் அடுக்காக மேற்கண்ட சமன்பாட்டினை விவரிக்கும்போது
\({ V }^{ 3 }\left[ \frac { RT }{ p } +b \right] { V }^{ 2 }+\left[ \frac { a }{ p } \right] V-\left[ \frac { ab }{ p } \right] =0\).......(5)
இச்சமன்பாடு V-ல் அமைந்த முப்படிச் சமன்பாடாகும். இச்சமன்பாட்டினை தீர்க்கும்போது நாம் மூன்று தீர்வுகளை பெறலாம்
நிலைமாறு நிலையில் V ன் இம்மூன்று மதிப்பிகளும் நிலைமாறுக அளவு Vc க்கு சமம் மேலும் அழுத்தம் மற்றும் வெப்ப நிலைகள் மற்றும் Tc குக் சமம்
V = Vc
V - Vc = 0
(V - Vc)3 = 0
V3 - 3VcV2 + 3VCV - \({ V }_{ c }^{ 3 }\)..........(6)
சமன்பாடுகள் (5) (6) ஒன்றே என்பதால் , அதில் உள்ள ஆகியவற்றின் குணகங்கள் மற்றும் மாறிலி மதிப்புகளை நாம் சமம்படுத்தலாம்
\(-{ 3V }_{ c }{ V }^{ 2 }=-\left[ \frac { { RT }_{ c } }{ { P }_{ c } } +b \right] { V }^{ 2 }\)
\({ 3V }_{ c }=\frac { RT_{ c } }{ { P }_{ c } } +b\) ......(7)
\({ 3V }_{ c }^{ 2 }=\frac { a }{ { p }_{ c } } \) .........(8)
\({ V }_{ c }^{ 3 }=\frac { ab }{ { p }_{ c } } \) ..........(9)
சமன்பாடு (9) ஐ (8) ஆல் வகுக்க
\(\frac { { V }_{ c } }{ 3b } \)
Vc = 3b ...........(10)
Vc - ன் மதிப்பை சமன்பாடு (1)ல் பிரதியிட
\({ 3V }_{ c }^{ 2 }=\frac { a }{ { p }_{ c } } \)
\({ p }_{ c }=\frac { a }{ { 3V }_{ c }^{ 2 } } =\frac { a }{ 3\left( { 3b }^{ 2 } \right) } =\frac { a }{ 3\times { 9b }^{ 2 } } \)
\({ p }_{ c }=\frac { a }{ { 27b }^{ 2 } } \).......(11)
Vc மற்றும் Pcன் மதிப்புகளை சமன்பாடு (7) ல் பிரதியிட
\({ 3V }_{ c }=b+\frac { { RT }_{ c } }{ { R }_{ c } } \)
\(3(3b)=b+\frac { { RT }_{ c } }{ a/{ 27b }^{ 2 } } \)
\(96-b=\left( \frac { { RT }_{ c } }{ a } \right) { 27b }\)
\(\quad 8b=\frac { { T }_{ c }R{ 27b }^{ 2 } }{ a } \)
\({ T }_{ c }=\frac { 8a }{ 27Rb } \) ...(13)
நிலைமாறு மாறிலிகளின் மதிப்பினைப் பயன்படுத்தி வாண்டர் வாலஸ் மாறிலிகளயும் வாண்டர் வாலஸ் மாறிலிககளை ப் பயன்படுத்தி நிலைமாறு மாறிலிகளின் மதிப்புகளையும் கண்டறியலாம்
a = 3Vc 2Pc மற்றும் \(b=\frac { { v }_{ c } }{ 3 } \)
4.
1.பண்டைய எகிப்து மற்றும் மெசபடோமியாவில் ஜிப்சத்தின் ஒரு வகையான அலபாஸ்டர் சிற்பிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஜிப்சத்தினை, எவ்வாறு பாரீஸ்சாந்தாக மாற்றுவது என்பதை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்களால் அறியப்பட்டுள்ளது.தற்போது மனித சமுதாயத்தில் ஜிப்சம் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.அவற்றின் சில பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2.உலர்பலகைகள், பூச்சுப் பலகைகள் தயாரிப்பதில் ஜிப்சம் பயன்படுகிறது.சுவர்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கவும், மேற்கூரைகள் மற்றும் அறைகளை பகுதிகளாக பிரிக்கவும் பூச்சிப் பலகைகள் [பயன்படுகிறது.
3.ஜிப்சத்தின் மற்றுமொறு பயன்பாடு பர்ரீஸ் சாந்து தயாரிக்கப்பதாகும்.ஜிப்சத்தினை 300 டிகிரி பாரன்ஹீட்டில் சூடுபடுத்தி பாரீஸ்சாந்து தயாரிக்கப்படுகிறது.இது ஜிப்சம் பூச்சு எனவும் அழைக்கப்படுகிறது.முக்கியமாக இது சிற்பங்களை வடிப்பதில் பயன்படுகிறது.
4.வேளாண்மைத் துறையில் மண்ணுடன் சேர்க்கப்படும் பொருளாகவும்,கட்டுப்படுத்தியாகவும்,உரமாகவும் பயன்படுகிறது.களிமண் மற்றும் இறுக்கமான மண்ணை நெகிழச் செய்வதுடன், தாவர வளர்ச்சிக்கு முக்கியமாக பயன்படும் கால்சியம் மற்றும் சல்பரை தரும் பொருளாக உள்ளது.மண்ணிற்கு அதிக உப்புத் தன்மையைத் தரும்.Na+ அயனிகளை நீக்கவும் பயன்படுகிறது.
5.ஜிப்சம் முக்கியமாக இணைத்தல் மற்றும் கெட்டியாக்கும் பண்புகளைப் பெற்றுள்ளதால் பற்பசை, ஷாம்புகள் மற்றும் முடித் தொடர்பான பொருட்களில் பயன்படுகிறது.
6.போர்ட்லாண்டு சிமெண்டுகளில்,ஜிப்சம் ஒரு முக்கியப் பகுதிப் பகுதிப் பொருளாகும்.இது கடினமாதலை தாமப்படுத்தும் காரணியாக செயல்படும் தன்மையைப் பெற்றிருப்பதால் கான்கிரீட்டுகள் கடினமாகும் வேகத்தினைக் கட்டுப்படுத்துகிறது.
7.அதிக அளவில் கிடைக்கும் தாதுப் பொருட்களின் முக்கியமானது ஜிப்சமாகம்.இது கணக்கற்ற ஜிப்சமாகும்.இத்துணை கணக்கற்ற பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.இத்தாதுவானது புவி மேற்பரப்பிற்கருகில் அதிக அளவில் கிடைப்பதால் இதன் வெட்டி எடுப்பது ஜிப்சம் வெட்டி எடுத்தால் சுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் ஜிப்சத்தினை மறுசுழற்சி செய்ய முடியும்.ஆனால் இத்தாது அதிக அளவில் கிடைப்பதால், இதன் மறுசுழற்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
5.
He+ → He2+ + e–
\(E_n=\frac{-13.6z^{2}}{n^{2}}\)
\(E_1=\frac{-13.6(2)^{2}}{(1)^{2}}=-54.4\)
\(E_\infty=\frac{-13.6(2)^{2}}{(\infty)^{2}}=0\)
∴கொடுக்கப்பட்டுள்ள செயல்முறை நிகழ தேவையான ஆற்றல் = E∞ – E1 = 0 – (– 54.4) = 54.4 ev
6.
i) யூரியா[CO(NH2)2]
C : 1x 12.01 = 12.01
O : 1 x 16 = 16.00
N : 2 x 14.01 = 28.02
H : 4 x 1.01 = 4.04
= 60.07 g mol-1
ii) அசிட்டோன் [CH3COCH3]
C : 3 x 12.01 = 36.03
H : 6 x 1.01 = 6.06
O : 1 x 16 = 16.06
58.09 g mol-1
iii) போரிக் அமிலம்[H3BO3]
H : 3 x 1.01 = 3.03
B : 1 x 11 = 11.00
O : 3 x 16 = 48.00
=62.03 g mol-1
iv) கந்தக அமிலம் [H2SO4]
H : 2 x 1.01 = 2.02
S : 1 x 32.06 = 32.06
O : 4 x 16 = 64.00
98.08 g mol-1
7.
(i) ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக செல்லும் போது உட்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
(ii) இதன் காரணமாக உட்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களுக்கு இணைதிற எலக்ட்ரான்களுக்கும் இடையேயான விலக்கு விசையும் அதிகரிக்கின்றது.
(iii) அதாவது உள்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களின் மறைத்தல் விளைவு அதிகரிப்பதனால், அணுக்கருவினால் இணைதிற எலக்ட்ரான்கள் மீது செலுத்தப்படும் கவர்ச்சி விசை குறைகிறது.
(iii) இவ்விளைவையே திரைமறைப்பு விளைவு என்கிறோம்.
8.
| H2O ன் வடிவமைப்பு | H2O2 ன் வடிவமைப்பு |
|---|---|
| எது வளைவான அமைப்பை கொண்டது | திறந்த புத்தக அமைப்பை கொண்டது |
| HOH பிணைப்பின் கோணம் 104.5° | H-O-H பிணைப்பின் கோணம் 94.8° |
இது ஒரு முனைவுற்ற மூலக்கூறு![]() |
இது முணைவற்ற மூலக்கூறு![]() |
9.
1. மிகச் சிறிதளவு அமிலம் அல்லது காரம் கலந்த நீரினை மின்னாற் பகுத்தல் மூலம் மிகத்தூய்மையான (> 99.9 %) ஹைட்ரஜனைப் பெறலாம்.
2. அல்லது சோடியம் ஹைட்ராக்சைடு போன்றவற்றின் நீர்க்கரைசலை மின்னாற் பகுத்தும் ஹைட்ரஜனைப் பெறலாம்.
3. இம்மின்னாற் பகுப்பில் நிக்கல் நேர்மின்வாயாகவும், இரும்பு எதிர் மின்வாயாகவும், செயல்படுகிறது.
நேர்மின்வாய் : 2OH- \(\rightarrow\) H2O + 1/2 O2 + 2e-
எதிர்மின்வாய் : 2H2O + 2e- \(\rightarrow\) 2OH- + H2
ஒட்டுமொத்தவினை : H2O \(\rightarrow \) H2 + 1/2 O2
10.
(i) பாலிங் முறைப்படி ஒற்றை மின்சுமையுடைய படிகங்களின் அயனி ஆரங்களை கணக்கிடலாம்.
(ii) படிக அலகுக்கூட்டில் காணப்படும் அயனிகள் கோளவடிவமுடையவை என பாலிங் கருதினார். மேலும் அவைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருப்பதாகவும் கருதினார். எனவே,
d=r(C+)+r(A-) .........(1)
இங்கு,
d=நேர் அயனி C+ அணுவிற்கும், எதிர்அயனி
A- ன் அணுவிற்கும் இடையேயானத்தொடர்பு
r(C+)= நேர் அயனியின் ஆரம்
r(A-)=எதிர் அயனியின் ஆரம்
(iii) மேலும், மந்த வாயுக்களின் எலக்ட்ரான் அமைப்பினை பெற்றுள்ள அயனிகளின் ஆரமானது, அவ்வயனிகள் மீது அணுக்கருவால் செலுத்தப்படும் செயலுறு அணுக்கரு மின்சுமைக்கு எதிர்விகிதத்தில் அமையும்.
(iii) அதாவது,

11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards