11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
11ஆம் வகுப்பு History / வரலாறு தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , History / வரலாறு பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ History Test1.
அனைத்து மதக்கருத்துகளும் ஒரே இலக்கைச் சென்றடையும் பல்வேறு பாதைகள் எனக் கூறியவர்.______
இராமகிருஷ்ண பரம்ஹம்சர்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி தயானந்தசரஸ்வதி
ஜோதிபாபூலே
2.
சிவாஜியின் தந்தை______________ஆவார்.
ஷாஜி போன்ஸ்லே
தத்தாஜி கொண்டதேவ்
முதலாம் பாஜிராவ்
பாலாஜிவிஸ்வநாத்
3.
73- கிளர்ச்சியாளர்கள் ______ ஆம் ஆண்டு மலேசியாவில் பினாங்குக்கு நாடு கடத்தப்பட்டார்கள்.
1801
1806
1804
1802
4.
குற்றப் பழங்குடியினர் சட்டம் ______ ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
1871
1771
1671
1673
5.
பந்தர்பூர் விட்டலாவின் புகழைப் பாடும் பாடல்களைப் பாடுவதில் நேரத்தை செலவிட்டனர்_____ ஆவார்.
மீராபாய்
துக்காராம்
சூர்தாஸ்
கபீர்
6.
வேதங்களில் பழைமையானது _______ வேதம்.
ரிக்
யஜீர்
சாம
அதர்வண
7.
திப்பு சுல்தான் _____ பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.
கள்ளிக்கோட்டை
குடுகு
கொடுங்களூர்
திண்டுக்கல்
8.
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் சோழ மண்டலப் பகுதியில் தலைமையிடம் _________________ ஆகும்.
காரைக்கால்
புலிகாட்
மசூலிப்பட்டினம்
மதராஸ்
9.
கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை உலகத்திலேயே கண்டறிந்து முதல் அரசர் _________ ஆவார்.
அக்பர்
ஷாஜகான்
ஷெர்ஷா
பாபர்
10.
மாணிக்கவாசகர் இயற்றிய நூல் _________
தேவாரம்
திருவாசகம்
பெரியபுராணம்
வேதாந்தம்
11.
விஜயநகர அரசின் அரசு முத்திரை _______
பன்றி
புலி
மீன்
வில்
12.
கௌதமிபுத்தர சதகர்னிக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்றவர் ________________
வசிஷ்டபுத்ர புலுமாவி
நாகபனா
கடம்பர்
யக்னஸ்ரீ சதகர்னி
13.
ஹரியங்கா வம்சத்தை தொடர்ந்து_________வம்சம் ஆட்சிக்கு வந்தது.
மெளரிய
கனிஷ்க்
வர்த்தன
சிசுநாக
14.
பொ.ஆ. 470ல் வஜ்ரநந்தி என்பவரால் தமிழ்நாட்டில் திராவிட சமண சங்கம் நிறுவப்பட்ட இடம் _____
திருச்சி
திருநெல்வேலி
மதுரை
திருவண்ணாமலை
15.
குஷாண நாணயங்கள் …………………. நாணயங்கள்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன
ரோமானிய
கிரேக்க
குப்த
சாதவாகன
16.
அரசப் பதவியையை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே சுல்தான் _________
முபாரக் ஷா
ஆலம் கான்
கிசர் கான்
துக்ரில் கான்
17.
கெடா __________________ இல் உள்ளது
மலேசியா
சிங்கப்பூர்
தாய்லாந்து
கம்போடியா
18.
ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை __________________ இன் அறிவுரையின் படி ஏற்றுச் கொண்டார்.
கிரகவர்மன்
அவலலோகிதேஷ்வர போதிசத்வர்
பிரபாகரவர்த்தனர்
போனி
19.
20.
மெஹர்கார் _________ பண்பாட்டுடன் தொடர்புடையது.
பழைய கற்காலப்
புதிய கற்காலப்
இடைக்கற்காலப்
செம்புக்காலப்
21.
இந்தியாவை பற்றிய பாபாரின் கருத்து என்ன என்பதை விவரி.
22.
ஹிரண்ய கர்ப்பம் என்றால் என்ன?
23.
ஹூணர்களின் படையெடுப்பை பற்றி கூறுக?
24.
சூர்தாஸின் முக்கிய படைப்புகள் யாவை?
25.
காந்தார கலையை பற்றி கூறுக.
26.
குறிப்பு வரைக.பிந்துசாரர்
27.
புத்தரின் நான்கு பெரும் உண்மைகள் யாவை?
28.
ஹோமா எரக்டஸ்: குறிப்பு வரைக.
29.
மதுரைக்காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன?
30.
இந்தியாவின் இரும்புக்காலம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
31.
சோழர்கால உள்ளாட்சித் தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.
32.
பிரேஞ்சுக்காரர் களுக்கு ஏற்பட்ட போட்டியும், போர்களும் பற்றி விரிவாக எழுதுக.
33.
நீர்பாசன வசதிகள் குறித்து கட்டுரை வரைக.
34.
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகளை பற்றி விவரி.
35.
பாதாமிச் சாளுக்கியர்களின் கீழ் கலை, கட்டிடக்கலை வளர்ச்சியை தொகுத்து எழுதுக.
36.
அசோகரின் ஆட்சி தம்ம அரச பற்றி விவரி.
37.
பெளத்த மத நான்கு சங்கங்களைப்பற்றி விவரி?
38.
முகலாயர் ஆட்சியில் பொருளாதாரம், வணிகம் பற்றி ஆராய்க.
39.
தமிழ் நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக.
40.
41.
அலா-உத்-தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதிக்கவும்
42.
ஹர்ஷரின் வடஇந்தியப் படையெடுப்புகள் குறித்து விவரி
43.
மூவேந்தர் அரசுகளுடைய நிர்வாகக் கட்டமைப்பை விவரிக்கவும்.
44.
வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒரு கட்டுரை வரைக .
45.
குதுப்பினாரைப் பற்றி கூறுக.
46.
கல்வித் துரையின் முன்னோடியாக சரபோஜி யாரைக் கருதினார். அவர் மேற்கொண்ட சீர் திருத்தங்கள் யாவை?
47.
கனிஷ்கர் கால இலக்கியங்கள் யாவை?
48.
பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது?யாரால் நிறுவப்பட்டது?
49.
தொடக்க காலப் பாண்டியரால் கட்டப்பட்ட குடைவரைக்கோயில்கள் யாவை?
50.
அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
51.
பல்லவர்களின் நிர்வாகப் பிரிவுகள்.
52.
குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்கு முக்கியமான காரணங்கள் யாவை ? ஏதேனும் மூன்று காரணங்களைக் கூறுக.
53.
கிழார் - வேளிர் இருவருக்குமுள்ள வேறுபாடுகள் .
54.
பொ.ஆ.மு. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவைதீகச் சிந்தனையாளர்களை அடையாளம் காண்க.
1.
(a)
இராமகிருஷ்ண பரம்ஹம்சர்
2.
(a)
ஷாஜி போன்ஸ்லே
3.
(d)
1802
4.
(a)
1871
5.
(a)
மீராபாய்
6.
(a)
ரிக்
7.
(c)
கொடுங்களூர்
8.
(c)
மசூலிப்பட்டினம்
9.
(a)
அக்பர்
10.
(b)
திருவாசகம்
11.
(a)
பன்றி
12.
(a)
வசிஷ்டபுத்ர புலுமாவி
13.
(d)
சிசுநாக
14.
(c)
மதுரை
15.
(a)
ரோமானிய
16.
(b)
ஆலம் கான்
17.
(a)
மலேசியா
18.
(b)
அவலலோகிதேஷ்வர போதிசத்வர்
19.
(d)
20.
(b)
புதிய கற்காலப்
21.
1.இந்துஸ்தானத்தின் தலையாய மேன்மை எதுவெனில் இது ஒரு மிகப்பெரிய நாடு. பெருமளவிலான தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுள்ளது.
2. இங்குள்ள தொழிலாளர்கள், ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் முடிவே இல்லாத வகையில் கடுமையாக உழைத்தனர்.
22.
1. ஹிரண்ய கர்ப்பம் என்றால் தங்கக் கருப்பை என்று பொருள்.
2. இதற்கான மதச் சடங்குகளை மதகுருக்கள் விரிவாக நடத்துவார்கள்
3. கருப்பையிலிருந்து வெளிவரும் நபர் அதிக ஆற்றல் கொண்ட உடலி பெற்றவராக மறுபிறப்பெடுத்தவராக அரிக்கப்படுவார்
4. சாதவாகன வம்சத்து அரசரான கௌதமிபுத்ர சதர்கணி என்பவர் சத்ரிய அந்தஸ்தை அடைவதற்கு ஹிரண்யகர்ப்பச் சடங்கை நடத்தினார்.
23.
i) ஸ்கந்தகுப்தரின் ஆட்சியின்போது ஹூணர்கள் வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தார்கள்
ii) ஸ்கந்தகுப்தர் ஹூணர்களை விரட்டினாலும், குப்தர்களின் கருவூலம் காலியானது.
iii) ஆறாம் நூற்றாண்டில் ஹூணர்கள் மாளவம், குஜராத், பஞ்சாப், காந்தாரா ஆகியவற்றை கைப்பற்றினார்
iv) ஹூணர்களின் படையெடுப்பால், நாட்டின் மெது குப்தர்களின் பிடி தளர்ந்தது,
24.
சூர்சாகர், சூரசரவளி, சைத்ய லகிரி ஆகியன சூர்தாஸின் முக்கிய படைப்புகள் ஆகும்.
25.
i) பண்பாட்டுத் தாக்கங்கள் சங்கமிக்குமிடத்தில் அமைந்துள்ள காந்தாராம் கிரேக்க மற்றும் ரோமானிய பண்பாடுகளின் செல்வாக்கு ரோமானியம் உட்பட்டது.பொ.ஆ. முதல் நூற்றாண்டில் காந்தாராக் கலை வடிவங்கள் வளர்ச்சியடைந்தன.
ii) குஷாணப் பேரரசுக் காலத்தில் ரோமுடனான அதன் தொடர்புகளினால் ரோமானியக் கலைநுட்பங்கள் இந்தியக் காலை நுட்பங்களோடு கலந்து, வடமேற்கு இந்தியா முழுதும் பின்பற்றப்பட்டன.
iii) ஆன்மநிலையில் - கண்கள் [பாதி மூடிய நிலையில் தியானத்திலிருந்து புத்தரை சித்தரித்ததற்காக காந்தாராகலை புகழ் பெற்றது.
26.
i) சந்திர குப்தரின் புதல்வர் பொ.ஆ.மு.297-ல் அமைதியான, இயல்பான ஆட்சி மாற்றம் மூலம் அவருக்கு பின் ஆடசியில் அமர்ந்தார்.
ii) பிந்து சாரர் நல்ல திறமையான அரசர். மேற்கு ஆசியாவின் கிரேக்க அரசுகளுடன் நல்லுறவு பேணும் தனது தந்தையின் வழியைத் தொடர்ந்தார்.
27.
| (i) துன்பம் பற்றிய உண்மை | -பிறப்பு வயது, மரணம், விரும்பத்தக்கவை, பிரிவு, நிறைவேறாத விருப்பம் பற்றியது. |
| (ii) துன்பத்தின் காரணம் பற்றிய பெரும் உண்மை | -இன்பம், அதிகாரம், நீண்ட ஆயுள் போன்றவற்றிற் கான ஆசையே துன்பத்திற்கான காரணம் ஆகும். |
| (iii) துன்பத்தின் முடிவு பற்றிய பெரும் உண்மை (நிர்வாணம்) |
-துன்பத்திலிருந்து முழுமையான விடுதலை |
| (iv) துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி பற்றிய பெரும் உண்மை. |
-எண் வழிப்பாதை (துக்க நிவாரண மார்க்கம்) |
28.
1. மனித இனத்தின் மூதாதையர் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.
2. இவ்வாறு ஆப்பிரிக்காவை விட்டு வெளியே முதன் முதலாக இடம்பெயர்ந்த மனித இனம் ஹோமா எரக்டஸ் ஆகும்.
3. இவர்கள் ஹோமோ சேப்பிபயன் ஸை போல மேம்பட்ட மொழியைக் கொண்டிருக்கவில்லை.
4. சில ஒலிகள், மற்றும் சைகைகளைச் சார்ந்த மொழியை பயன்படுத்தி இருக்கலாம்.
29.
மதுரைக்காஞ்சி முதுகுடுமிப் பெருவழுதியையும் மற்றொரு நெடுஞ்செழியனான தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும் வேறு சில பாண்டிய மன்னர்களையும் குறிப்பிடுகின்றது.
30.
(i) வாட இந்தியாவின் இரும்புக் காலமானது ஓவியன் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டப் பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
(ii) சுமார் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(iii) இக்காலக்கட்டத்தின் குடியிருப்புகள் அளவில் பெரியதானவை.அவை வட இந்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பெருமளவிலான மக்கள் தொகைப் பெருக்கத்தைக் காட்டுகிறது.
(iv) தென் இந்தியாவில் இரும்புக்காலம் ஈமச் சின்னங்களுடன கூடிய பெருங்கற்காலப் பண்டகமாக உள்ளது.
31.
சோழர்கால உள்ளாட்சி தேர்தல்களைப்பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறும் செய்தியினை தொகுத்து எழுதுக.
பொ.ஆ.919 மற்றும் 921ல் கிடைத்த உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் சோழர் கால உள்ளாட்சி தேர்தல் முறையை அறிய முடிகிறது.
இவை ஒரு பிராமணக் குடியிருப்புகளை பணிகளை மேற்கொள்வதற்கு வெவ்வேறு குழுக்களை சேர்ந்த உறுப்பினரை தேர்வு செய்யும் முறையை தெரிவிக்கின்றன.
தேர்வு செய்யும் முறை:
i) கிராமம் 30 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.
ii) ஒவ்வொரு பிரிவிற்கும் ஓர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
iii) தேர்வானவர்கள் அனைவரும் சேர்ந்து வெவ்வேறு குழுக்களை உருவாக்கினார்
iv) ஆவி பொதுப்பணிக்குழு, குளங்களுக்கான குழு, தோட்டங்களுக்கான குழு, பஞ்சநிவாரண குழு, தங்கம் தொடர்பான குழு ஆகியனவாகும்.
உறுப்பினாராகத் தகுதிகள்:
i) ஆண்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.
ii) போட்டியாளர் 35 வயதுக்கு மேலும் 75 வயதுக்கு கீழும் உள்ளவராக இருக்க வேண்டும்.
iii) சொத்தும், சொந்த வீடும் உடையவராக இருக்க வேண்டும்.
iv) வேதங்களிலும், பாஷ்யங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
குடவோலை முறை:
i) ஒரு பிரிவில் பி[ஒட்டியிடக்கூடிய அனைவருடைய பெயர்களில் தனித்தனிப் பனையோலைகளில் எழுதப்படும்.
ii) பின்னர் அவ்வோலை ஒரு பானையில் இடப்படும்
iii) சபையில் வயதில் மூத்தவர் ஒரு சிறுவனை அழைத்து பானையிலிருந்து ஓர் ஓலையை எடுக்கும்படி கூறுவர்.
iv) அந்த சிறுவன் எடுக்கும் ஓலையில் உள்ள பெயருக்கு உரியவரே உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.
இவ்வாறு மேற்கண்ட செய்திகள் உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
32.
1. புதுச்சேரியைத் தங்கள் குடியேற்றமாக்கும் முயற்சியில் பிரேஞ்சுக்காரர் மிகவும் சிரமப்பட்டனர்.
2. தங்களின் முக்கியப் போட்டியாளரான டச்சுக்காரர்களை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பிரான்சும் ஹாலந்தும் 1672 இலிருந்து தொடர்ந்து போர்கள் செய்து கொண்டிருந்தன.
3. இந்தியாவில் பிரேஞ்சுக்காரர்களுக்குப் போதுமான நிதி, ஆயுதம், வீரர்கள் இல்லை. ஏனெனில் இவை வங்காளத்திலிருந்த மற்றொரு பிரெஞ்சுக் குடியேற்றமான சந்தன்நகருக்கு (சந்திரநாகூர்) கொண்டு செல்லப்பட்டிருந்தன. ஆகவே 1693 இல் புதுச்சேரியை டச்சுக்காரர் எளிதாக கைப்பற்ற முடிந்தது.
4. புதுச்சேரி தொடர்ந்து ஆறு ஆண்டுகள் டச்சுக்காரரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது, 1697 இல் ரிஸ்விக் உடன்படிக்கையின்படி புதுச்சேரி மீண்டும் பிரெஞ்சுகாரருக்குத் தரப்பட்டது. இருந்தபோதிலும் 1699 இல் தான் அது பிரெஞ்சுக்காரர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
5. 1706 இல் பிரான்சிஸ் மார்ட்டின் இயற்கை எய்தும்வரை அதன் ஆளுநராக இருந்தார்.
6. பிரெஞ்சுக்காரர் மேற்கொண்ட பெருமுயற்ச்சியின் விளைவாக 1725 இல் மாகியையும், 1739 இல் காரைக்காலையும் பெற்றனர்.
7. வங்காளப் பகுதியில் காசிம் பஜார், சந்தன்நகர், பாலசோர் ஆகிய இடங்களில் தங்களது குடியேற்றங்களை நிறுவி விரிவுப்படுத்துவதில் பிரெஞ்சுக்காரர் வெற்றி பெற்றனர். பியரி பெனாய்ட் டூமாஸ் என்பவர் (1668 - 1745) புதுச்சேரியின் மற்றுமொரு சிறந்த ஆளுநர் ஆவார்.
8. இருந்தபோதிலும் தங்களைவிட மிகவும் வலிமை வாய்ந்த போட்டியாளரான ஆங்கிலேயரின் பயமுறுத்துதல்களை அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.
9. இறுதியில் தாங்கள் சேகரித்த செல்வம் அனைத்தையும் ஆங்கிலேயரிடம் இழந்தனர். பிரேஞ்சுக்காரரின் செல்வாக்கை புதுச்சேரி, காரைக்கால், மாகி சந்தன்நகர் ஆகிய இடங்களில் இன்றும் கண்கூடாகக் காணலாம்.
33.
(i) பாசனவசதி ஏற்படுத்திக் கொடுப்பதை பிரிட்டிஷ் அரசு புறக்கணித்தது. இந்திய அரசுகள் வெட்டிச் சென்ற பழைய கால்வாய்களும் குளங்களும் பயனற்றுக் கிடப்பதை கண்டபோதும் அவற்றை தூர்வாரி பயன்பாட்டிற்கு கொடுக்கவோ புதுப்பிக்கவோ கம்பெனி முயற்சி செய்யவில்லை.
(ii) சென்னையில் நாம் பின்வரும் பக்கிங்களில் விரிவாகக் காணப்போவது போல் ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் சிற்சில பாசன வேலைகள் நடந்தேறின.
(iii) கொள்ளிடத்தின் குறுக்கே 1836 இல் அணையை கட்டினார்.கிருஷ்ணா நதியின் குறுக்கே அணை கட்டும் பணி 1853 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
(iv) பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுபாட்டுக்குள் இந்தியா செல்வதற்கும் முன்பாக வட இந்தியாவில் 1830 இல் யமுனா கால்வாய்யும் , 1857 இல் கங்கைக் கால்வாய்யை 450 மைல்கள் வரை நீட்டித்த பணியும் , 1856 இல் பஞ்சாப் பகுதியில் அமைந்த பாரி இடைத் துறைக் கால்வாய் தோண்டும் பணியும் பாசன வசதி மேம்பாட்டில் குறிப்பிட்டத்தக்க முக்கியபணிகளாகும்.
(v)ஆனால் ககால்வாய்கள் மண்ணில் உப்புத் தன்மையை கூட்டவும் , தேவையில்லாத இடங்களில் தண்ணிர் தேங்கவும் வழிவகுத்தது.
34.
பொ.ஆ.335 இல் முதலாம் சந்திரகுப்தர் தந்து புதல்வர் சமுத்திர குப்தரை தனது வாரிசாக நியமித்தார். அசோகர் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட இவர் குறித்த நீண்ட புகழுரை அவர் மௌரிய பரம்பரையில் வந்ததாக சொல்கிறது. இந்தக் கல்வெட்டு சமுத்திர குப்தர் நாடு முழுவது படையெடுத்துச் சென்ற போது அவருக்கு அடிபணிந்த அரசர்கள், ஆட்சி பகுதிகள் ஆகியன குறித்து மிகப் பெரிய பட்டியலை தருகிறது.
1. முக்கியமாக தில்லி மற்றும் உத்திர பிரதேசத்தின் நான்கு அரசர்களை வென்றுள்ளார்
2. தெற்கு மற்றும் கிழக்குப் பகுதி அரசர்கள் கப்பம் செலுத்த கட்ட்டாயப்படுத்தப்பட்டனர்.
3. கிழக்கு கடற்கரையோரம் காஞ்சிபுரம் வரை இவர் படையெடுப்பு நீண்டது.
4. கங்கை சமவெளியில் மேற்கு பகுதியில் ஒன்பது அரசர்களை படைபலத்தால் வென்றார்
5. தக்காண பழங்குடியினைத் தலைவர்கள் கப்பம் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
6. காட்டு ராஜாக்களும் அஸ்ஸாம் வங்கம் போன்ற கிழக்குப்பகுதிஅரசர்களும் நேபாளம், பஞ்சாப் போன்ற பகுதிகளின் சிற்றரசர்களும் கப்பம் கட்ட கட்டாயப்படுத்தப்பட்டனர்.
7. இராஜஸ்தான் பகுதியில் உள்ள ஒன்பது குடியரசுகள் குப்தர்களின் ஏகாதிபதியத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப் பட்டனர்.
8. சாகர் அரசு, இலங்கை அரசு போன்ற வெளிநாட்டு அராசர்களும் கப்பம் கட்டியதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
9. இவ்வாறு சமுத்திரகுப்தர் ஒரு வெற்றி வீரராக இருந்துள்ளது. சான்றுகள் மூலம் உறுதியாகிறது. இவர் தனது இராணுவ வெற்றிகளை பிரகடனம் செய்ய "அசுவமேதயாகம்" நடத்தினார்.
35.
(i) சாளுக்கியர்கள் கலை வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளனர். கட்டுமான கோயில்களை கட்டுவதற்கு வேசர கலைப்பாணியை பின்பற்றினர். ஐஹோலே, பாதாபி, பட்டாடக்கல் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் கட்டுமான கோயில்களை காணலாம்.
(ii) அஜந்தா, எல்லோரா, நாசிக் ஆகிய இடங்களில் சாளுக்கியரின் குடைவரைக் கோயில்களை காணலாம். பாதாமி, அஜந்தா, குகைக் கோயில்களில் சாளுக்கியர் கால ஓவியங்களைக் காண முடிகிறது. 2ம் புலிகேசி ஒரு பாரசீக தூது குழுவிற்கு வரவேற்பளிப்பது போன்று ஓவியத்தில் சித்திகரிக்கப்படுகின்றன.
சாளுக்கியர் கால கோயில்களை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம்:
முதல்நிலை:
ஐஹோலே மற்றும் பாதாமியில் முதனிலை கோயில்கள் உள்ளன. ஐஹோலேவில் உள்ள 70 கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியது.
கோயில்களில் நான்கு மட்டும் சிறப்பாக குறிக்கப்பட வேண்டியது.
1. லட்கான் கோயில் - சமதளக் கூரையுடன் கூடிய இக்கோயிலில் தூண்களையுடைய மண்டபம் உள்ளது.
2. ஒரு யுத்த சைத்தியத்தைப் போல தோற்றமளிக்கும் துர்க்கைக் கோயில்
3. ஹீச்சிமல்லி குடி கோயில்
4. மெகுதி என்ற இடத்தில் உள்ள சமண கோயில்
பாதமியிலுள்ள முக்தீஸ்வரர் கோயிலும், மேலகுட்டி சிவன் கோயிலும் கட்டிடக்கலைக்கும், அழகிற்கும் பெயர் பெற்றவை.
இரண்டாம் நிலை:
1. பட்டாடக்கல் என்ற இடத்தில் பத்து கோயில்கள் உள்ளன. நான்கு வடஇந்திய கலைப்பாணி, ஆறு திராவிட கலைப்பாணியில் அமைந்தவை.
2. வட இந்திய கலைப்பாணியில் அமைந்துள்ள பாபநாதர் கோவில் திராவிட கலைப்பாணியில் அமைந்த சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் விருப்பாட்சர் ஆலயம் இரண்டும் புகழ் பெற்றவை.
3. இரண்டாம் விக்கிரமாதித்தனின் அரசிகளில் ஒருவரால் இது கட்டுவிக்கப்பட்டது.
4. காஞ்சியில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு இக்கோயில் கட்டப்பட்டது என்று கருதப்பட்டது.
36.
.1.அசோகரது ஆட்சி ஒரு நல்ல அரசர். நியாயமான ஆட்சி என்பதற்கான ஒரு முன்மாதிரியைக் காட்டுகிறது. அவர் தனது அதிகாரிகளான யுக்தர்கள் (கீழ்நிலை அதிகாரிகள்), ராஜிக்கர்கள் (கிராம நிர்வாகிகள்), பிரதேசிகர்கள் (மாவட்டத் தலைவர்கள்) ஆகியோரை இந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு தம்மத்தை போதிக்குமாறு அறிவுறுத்தினார்.
2. எல்லா மக்களும் தமது குழந்தைகள் என்றும் தன் சொந்தக் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் அவர்கள் (மக்கள்) இந்த உலகிலும் அடுத்த உலகிலும் நலமும் மகிழ்வும் பெற வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட அதிகாரிகளுக்கும் நகர நீதிபதிகளுக்கும் கட்டளையிட்டுள்ளார்.
3. இந்த அதிகாரிகள் பாரபட்சமின்றி நடந்துகொள்ள வேண்டும். சரியான காரணம் இன்றி மக்களை சிறைப்படுத்தக் கூடாது, சித்ரவதை செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் போன்றவை அசோகரின் கட்டளைகளாக இருந்தன.
4.தன்னுடைய இந்த கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஒரு அதிகாரியை அனுப்பப் போவதாகவும் அவர் அறிவித்தார்.
5. ஒரு திறமையான அரசர் தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பதை அசோகர் உணர்ந்திருந்தார்.
6.அனைத்து மதங்களும் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்றும் எல்லா மதத்துறவிகளுக்கும் மரியாதை தரப்பட்ட வேண்டும் என்று கூறினார்.
7. மருத்துவ வசதி தருவது அரசாங்கத்தின் பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். பேரரசர் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் பார்க்க மருத்துவமனைகளைத் திறக்க உத்தரவிட்டார்.
8. தேவையின்றி விலங்குகள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும். எல்லா உயிரினங்களுக்கும் மரியாதை காட்டப்பட வேண்டும் என்பது அவரது கல்வெட்டுக் கட்டளைகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் கருத்துக்களில் ஒன்று.
9. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளில் மனிதநேயமும் பிரிவும் கொண்ட ஒரு நல்ல முன் மாதிரியாகக் கொள்ளத் தகுந்த அரசாங்கத்தைப் பார்க்கிறோம்.
37.
புத்தரின் மரணத்திற்கு பிறகு, பெளத்தத்தின் விதிகளும் மற்ற விஷயங்களும் பெளத்த சங்கங்களில் முடிவு செய்யப்பட்டன. காலப்போக்கில் நான்கு பெளத்த சங்கங்கள் நடைபெற்றன.
1. முதல் பெளத்த சங்கம்:
தலைமை தாங்கியவர் உபாலி. இடம். ராஜகிருகம். இந்த சங்கத்தில் உபாலி வினயபீடத்தையும். ஆனாந்தர் சுத்த பீடத்தையும் வாசித்தார்.
2. இரண்டாம் பெளத்த சங்கம்:
புத்தரின் பரிநிர்வாணத்திற்கு 100 ஆண்டுகளுக்குப் பின் வைசாலியில் நடைபெற்றது. பெளத்த மதம் பெரியோரின் உபதேசங்களை நம்புவோர் என்றும் மகாசங்கிகா அல்லது பெருங்குழுவின் உறுப்பினர்கள் என்றும் இரண்டாக பிரிந்தது.
3. மூன்றாவது பெளத்த சங்கம்:
இதை அசோகர் பாடலிபுத்திரத்தில் கூட்டினார். இதற்குள்ள ஸ்தவிரவதின்கள் தன்மை வசமாக நிறுத்திக்கொண்டனர். எதிரான கருத்தக் கொண்டோடரை மதத்திலிருந்து நீக்கினர். அபிதம்ம பிடகத்தில் கதவத்து என்ற கடைசிப்பகுதி சேர்க்கப்பட்டது.
4. நான்காவது பெளத்த சங்கம்:
மன்னர் கனிஷ்கர் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்றது. சர்வஸ்திவாதிகள் என்போர் பெளத்தத்தின் முக்கியமான பிரிவினர். இப்பிரிவினர் கொள்கைகள் மஹாவி பாஷாவில் தொகுக்கப்பட்டுள்ளன.
38.
காடு சார்ந்த பொருளாதாரம்:
1. முகலாயப் பொருளாதாரம் காடு சார்ந்த வேளாண் பொருளாதாரமாகும்.
2. காடுகள் கைவினைத் தொழிலாளர்களுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை வழங்கியது.
3. தச்சர், கப்பல்கட்டுவோர், மேல்பூச்சி சாயம் தயாரிப்போர் ஆகியோருக்குத் தேவையான மரங்களைக் காடுகள் ஈந்தன.
4. நெசவு செய்வோர் உருளைகள் செய்வோர்க்குத் தேவையான பக்குவப்படுத்தப்படாத பட்டையை வழங்கியது.
5. இரும்புச் சுரங்கப் பணியாளர்களுக்கும், உலோகங்களை உருவாக்குவோருக்கும் தேவைப்பட்ட மரக்கரியைக் கொடுத்தது.
வேளாண் சார்ந்த பொருளாதாரம்:
1. கிராமப் புறங்களில் பல்வகைப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
2. வேளாண்மையே பொருளாதாரத்தின் அடித்தளம்.
3. அவற்றில் பணி செய்ய வேலையாட்கள் அமர்த்தப்பட்டு அவர்களுக்கான ஊதியம் பணமாகவோ பொருளாகவோ வழங்கப்பட்டது.
4. கிணற்று நீர்ப் பாசனமே முக்கியப் பாசன முறையாக இருந்தது.
5. அவுரி முகலாய கால முக்கிய வணிகப் பயிராகும்.
நகைப்புறப் பொருளாதாரம்:
1. நகர்ப்புறப் பொருளாதாரம் கைவினைத் தொழிற்கூடங்களைச் சார்ந்திருந்தது.
2. பஞ்சடித்துப்பட்டை இடுபவர் நூல்நூற்போர்,நெய்வோர், சாயமேற்றுவோர், அச்சுப்பதிப்போர், சலவை செய்வோர் என அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொழிற்கூடங்களில் பணியமர்த்தப்பட்டனர்.
3. பட்டு உற்பத்தி வங்காளத்தில் பிரமிப்பூட்டும் வளர்ச்சியைப் பெற்றிருந்தது. வங்காளம் உலகச் சந்தைக்கு அதிகமான பட்டுத்துணியை அனுப்பி வைக்கும் முக்கிய மையமாக திகழ்ந்தது.
வர்த்தகமும் வாணிகமும்:
1. நாட்டின் அரசியல் ஒருங்கிணைப்பும், திறமைமிக்க சட்டம் ஒழுங்குப் பராமரிப்பும் சுறுசுறுப்பான வர்தகத்தையும் வாணிகத்தையும் உறுதிப்படுத்தின.
2. உபரி பொருட்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆறுகளின் வழியாகவும், மாட்டு வண்டிகளும், ஒட்டக வண்டிகளும், சாலை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டன.
3. பஞ்சாரா எனும் நாடோடி வணிக இனக்குழு பெருமளவிலான பொருட்களைத் தொலை தூரப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர்.
4. அரிசி, சர்க்கரை, மஸ்லின் பட்டு, உணவு தானியம் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் வங்காளம் முக்கிய மையமாகத் திகழ்ந்தது.
39.
வடஇந்திய சீர்திருத்த இயக்கங்கள் தமிழகத்தின் மீது தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தின. பிரம்ம சமாஜமும், ஆரிய சமாஜமும் தமிழகத்தில் கிளைகளைப் பெற்றிருந்தன. ஆனால் தமிழகம் தனக்கே உரித்தான சீர்திருத்த இயக்கங்களைச் சந்தித்தது.
வைகுண்ட சுவாமிகள் (1809-1851)
(i) இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் சாஸ்தா கோவில் (சாமிதோப்பு) எனும் சிறிய ஊரில் 1809ல் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார்.முத்துக்குட்டி எனும் இயற்பெயர் கொண்டவர்.
(ii) திண்ணைப் பள்ளியில் மதம் மற்றும் நீதி நூல்களைச் கற்றார்.
(iii) தனது போதனைகளில் சாதிமுறையையும், அதிக வரிவசூல் முறையையும் கண்டித்தார்.
(iv) ஒடுக்கப்பட்ட மக்களிடேயே மிகவும் பிரபலமான அவர் " ஐயா வழி" என்ற நடைமுறையில் மக்கள் பின்பற்றினர்.
(v) சமத்துவச் சங்கத்தின் மூலம் பல சாதிகளில் சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தவர்.
(v) ஸ்ரீவைகுண்ட சாமிகள் வழிபாடு 1830 களில் நிறுவப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
(vi) அவருடைய போதனைகள் தொகுக்கப்பட்டு 'அகிலத்திரட்டு ' என்னும் வழிபாட்டு நூலக வெளி வந்தது.
(vi) 'நிழல் தாங்கல்' என்றழைக்கப்பட்ட அவர் உருவாக்கிய உணவுக் கூடங்களில் சாதிக் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டன.
இராமலிங்க அடிகள் (வள்ளலார்)1823-1874
(i) இராமலிங்க அடிகளார் சிதம்பரத்திற்கு அருகில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தார்.
(ii) முறையாக கல்வி பெறா இவர் சொந்தமாக பாடல்களை இயற்றினார்.அவையே 1867-ல் திருவருட்பா எனும் பெயரில் வெளியிடப்பட்டது.
(iii) மதவெறியையும், பகுத்தறிவற்ற தன்மையையும் கண்டனம் செய்தார்.
(iv) அவர் சத்திய தர்மசாலை ஒன்றை வடலூரில் நிறுவி ஏழைகளுக்கு உணவளிக்கத் தொடங்கினார். முக்கியமாக 1860 களில் பஞ்சங்களும், கொள்ளை நோயும் ஏற்பட்ட போது சாதிமத வேறுபாடின்றி உணவளித்தார்.
(v) தன்னை பின்பற்றுவோரை ஒருங்கிணைப்பதற்காக சத்ய ஞானசபை எனும் அமைப்பை நிறுவினார்.
(vi) அவருடைய எழுத்துக்கள் உலகளாவிய சிந்தனைகளைத் தூண்டி சைவ சமயத்துக்குள் இருக்கும் பிரிவினைகளை மதிப்பிழக்கச் செய்தது.
அயோத்திதாசப் பண்டிதரும்-பௌத்தமும்:
(i) பௌத்தம் தமிழ்நாட்டில் இரண்டாவது ஆயிரம் ஆண்டில் தொடக்கத்திலேயே முற்றிலுமாக துடைக்கப்பட்டு விட்டது.
(ii) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பௌத்தம் புத்துயிர் பெறத் துவங்கியது.
(iii) 1867 ல் சீவகசிந்தாமணி, 1898ல் மணிமேகலை ஆகிய இரண்டும் முழுமையாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
(iv) இதை அச்சிட்டு வெளியிட்டவர் அயோத்திதாச பண்டிதராவார்.
(v) 1890 களில் ஆதிதிராவிடர்களுக்கிடையே இயக்கத்தைத் தொடங்கிய அவர் ஆதி திராவிடர்களே உண்மையான பௌத்தர்கள் என்றும், வேத பிராமணியத்தை எதிர்த்ததன் விளைவாக அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர் என்றும் வாதிட்டார்.
(vi) மக்கள் பௌத்த மதத்திற்கு மாறுவதை அவர் ஊக்குவித்தார்.
(vii) அவர் கொள்கையை வட தமிழகப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பின்பற்றினர்.
(viii) இவ்வியக்கத்தில் சிங்காரவேலரும், லட்சுமி நரசுவும் முக்கியப் பங்கு வகித்தனர்.
(ix) அயோத்திதாச பண்டிதர் 1908 முதல் "ஒரு பைசாத் தமிழன்" என்ற பெயரில் வாரந்திரப் பத்திரிகை ஒன்றை தொடங்கி தான் இயற்கை எய்தும் காலம் வரை நடத்தினார்.
(x) இவ்வாறு பல இயக்கங்கள் சமூக மூடநம்பிக்கையிலும், சீரற்ற பழக்க வழக்கங்களிலும் மூழ்கியிருந்த மக்களை ஒரு மாறுதலுக்கு உட்படுத்தியது என்றே சொல்லலாம்.
40.
41.
அலாவுதின் கில்ஜியின் பரந்த நிலப்பரப்புகளை வென்றதைத் தொடர்ந்து அரசை நிலைப்படுத்தும் நோக்கில் விரிவான நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
நிர்வாக சீர்திருத்தங்கள்:
(i) பிரபுக்கள் குவித்து வைத்திருந்த செல்வம் பறிமுதல் செய்தார். பிரபுக்கள் சதிகள் எய்வதற்கான வாய்ப்பை தடுக்க எடுத்த முதல் நடவடிக்கை இது.
(ii) சுல்தானின் ஒப்புதலோடு மட்டுமே பிரபுக் குடும்பங்களுக்கிடையில் திருமண உறவுகள் அனுமதிக்கப்பட்டன.
(iii) கிராம அலுவலர்கள் அனுபவித்து வந்த மரபுரிமைகளை பறித்து, பரம்பரை கிராம அலுவலர்களின் அதிகாரங்களை தடைச் செய்தார்.
(iv) ஊழல் அரசு அலுவலர்களை கடுமையாகத் தண்டித்தார்.
சமூக சீர்திருத்தம்:
(i) உழவர்களிடமிருந்து நிலவரிகள் நேரடியாக வசூலிக்கப்பட்டது.
(ii) இதனால் கிராமத் தலைவர்கள் மரபாக அனுபவித்து வந்த வரிகள் வசூலிக்கும் உரிமை பறிபோனது.
(iii) அலாவுதீன் விதித்த வரிசுமை செல்வர்கள் மீது இருந்ததேயன்றி ஏழைகள் மீது அல்ல.
(iv) தனது பேரரசின் அனைத்து பகுதிகளுடனும் தொடர்பில் இருப்பதற்காக அலாவுதீன் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார்.
சந்தை சீர்திருத்தங்கள்:
(i) படை வீரர்களுக்கு ஊதியத்தை பணமாக கொடுத்த முதல் சுல்தான் அலாவுதீன் ஆவார் குறைந்த ஊதியமும் அளிக்கப்பட்டது.
(ii) அத்யாவசியப்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், கள்ளச்சந்தை, பதுக்கல் குறித்த விவரங்களை சேகரிக்கவும் ஒற்றர் முறையை பயன்படுத்தினார்.
(iii) கொடுக்கல், வாங்கல், பேரங்கள் அனைத்து விபரங்களையும் ஒற்றர் மூலம் அறிந்து கொண்டனர்.
(iv) அத்யாவசியப் பொருள்களின் விலை குறித்து அலுவலர்களும், ஒற்றர்களும் தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.
தண்டனை:
(i) விலை ஒழுங்கு முறை விதிகளை மீறுவோர் கடமையாக தண்டிக்கப்பட்டனர்.
(ii) ஏதேனும் எடைக்குறைவு கொண்டு பிடிக்கப்பட்டால், விற்பவரின் உடலிலிருந்து அதற்குச் சமமான எடையுள்ள சதை வெட்டி அவரது கண்முன்னே வீசப்பட்டது.
இவ்வாறாக எளியோர் மீது வரியை குறைத்து செல்வந்தர்கள் மீது அதிக வரியை புகுத்தி, தவறுகளுக்கு தக்க தண்டனை வழங்கி நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தினார்.
42.
வர்த்தன மரபின் மிகவும் புகழ் பெட்ரா மன்னராக இருந்தவர் ஹர்ஷவர்தனர் ஆவார். ஹர்ஷரின் தகப்பனார் பிரபாக வர்தனார். இறந்ததும் அவரது மூத்த மகன் இராஜ்யவர்தனர் ஆட்சி பொறுப்பேற்றார். இந்நினையில் கௌட அரசன் பூரங்கனால் இராஜ்யவர்தனர் நயவஞ்சமாக கொல்லப்பட்டார். பின்னர் ஹர்ஷவர்தனர் தனேஸ்வரத்தின் மன்னராக பொறுப்பேற்றார்.
பொ.ஆ.606ல் ஹர்ஷர் பதவி ஏற்றதும் தன்னுடைய சகோதரி விவகாரத்திலும் கவனம் செலுத்தினார் அவருடைய முதல் படையெடுப்பு தேவகுப்தனுக்கு எதிராக அமைந்தது.
தேவகுப்தன் போரில் கொல்லப்பட்டார். தீக்குளிக்கும் நிலையில் இருந்து தனது சகோதரியை காப்பற்றி அழைத்து வந்தார். பின் கன்னோசி அமைச்சர் பொன்னியின் அறிவுரைப்படி தன் தலைநகரை கன்னோசிக்கும் மாற்றினார்
பின் பேரரசு ஒன்றை உருவாகும் பொருட்டு பின்வரும் அரசர்களுக்கு சரணடையவோ அல்லது எதிர்த்து போரிடவோ வாய்ப்பினை அளித்து இறுதி எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார்.
i) வங்கத்தை ஆண்ட கௌட அரசன் சசாங்கன்
ii) வல்லபியை ஆண்ட மைத்ரகர்கள்
iii) புரோச் பகுதியை ஆண்ட கூர்ஜரர்கள்
iv) தக்காணத்தை ஆண்ட சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி
v) சிந்து, நேபாளம், காஷ்மீர், மகதம், ஒடிசா ஆகிய பகுதிகளை ஆண்ட அரசர்கள்
ஹெர்ஷரின் உடனடித் தேவை தன்னுடைய சகோதரனை கொன்ற சசாங்கனை பழிவாங்குவதாக இருந்தது.
ஹர்ஷருக்கும் சசாங்கத்துக்கும் இடையே நடந்த போர் குறித்து விவரங்கள் தெரியவில்லை. எனினும் சசாங்கன்இறந்த பிறகே கௌடப் பேரரசை ஹர்ஷர் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருக்கவேண்டும் என தெரிகிறது..
ஹர்ஷர்க்கும் மைத்ரகர்களுக்கும் இடையில் நிலவி வந்த பகையை ஹர்ஷரின் மக்களுக்கும் துருவப்பட்டருக்கும் நடந்த திருமண உறவின் மூலம் முடிவியேற்கு வந்தது. பின்னர் வல்லபி அரசு ஹர்ஷரின் ஆட்சியின் கீழ் கூட்டணி துணை அரசாக மாறியது.
43.
சங்க காலத்தில் மூவேந்தர் என்றறியப்பட்ட மணிமுடி சூடிய அரசர்களாக சேர, சோழ, பாண்டியர் பெரும்பாலான வேளாண் நிலங்களையும், வணிகப் பெறுவழிகளையும் நகரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
சோழர்:
1. தமிழகத்தின் மத்திய வட பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டிருந்தனர்.
2. அவர்களது ஆட்சியின் மையமாக இருந்த பகுதி காவிரியாற்றின் கழிமுகப் பகுதியாகும்.
3. இதுவே பின்னர் சோழ மண்டலம் என்றழைக்கப்ட்டது. அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
(திருச்சிராப்பள்ளி நகரத்திற்கு அருகே அமைந்துள்ளது).
4. மேலும் புகார் அல்லது காவிரிப்பூம்பட்டினமானது முக்கீயத் துறைமுகமாகவும் திகழ்ந்தது.
5. சோழரின் சின்னம் புலி ஆகும்.
சேரர்:
1. மத்திய, வடக்கு கேரளப் பகுதிகளையும் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியினையும் ஆட்சி செய்தனர்.
2. வஞ்சி அவர்களின் தலைநகராகும். மேலைக் கடற்கரைத் துறைமுகங்களான முசிறியும் தொண்டியும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன.
3. சில அறிஞர்கள் கேரளத்திலுள்ள திருவஞ்சைக்களம் என்னும் ஊரே வஞ்சி என்று அடையாளங்காண்கின்றனர்.
4. சேரர்களின் சின்னம் வில்அம்பு ஆகும்.
பாண்டியர்:
1. மதுரையிலிருந்து ஆண்டர். தாமிரபரணி நதி வங்காள விரிகுடாக் கடலில் கலக்குமிடத்தில் அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கியச் துறைமுகமாகும்.
2. இது முத்துக்குளிப்பிற்கும் சங்குகள் சேகரிப்பிற்கும் பெயர் பெற்றதாகவும். கொற்கை பெரிப்ளஸின் குறிப்புகளில் கொல்கொய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3. பாண்டியரின் சின்னம் மீன்.
4. மரபுவழிச் செய்தியின்படி பாண்டியர் தமிழ்ச் சங்கங்களை ஆதரித்து சங்க நூல்களைத் தொகுப்பித்தனர்.
44.
(i) வேதகால அரசு முறை என்பது இனக்குழு சமூகத்தின் அரசியலே ஆகும்.
(ii) இனக்குழுவின் தலைவரே அரசியல் தலைமையாக இருந்தார். அவர் ராஜன் (அரசன்) எனப்பட்டார்.
(iii) ராஜன் பல தூண்களைக் கொண்ட அரண்மனையில் வாழ்ந்தார். மதக்குருமார்களுக்கு கால்நடைகளையும், தேர்களையும், தங்க அணிகலன்களையும் பரிசாக வழங்கினார்.
(iv) ராஜன் ஒரு பாரம்பரியத் தலைவரானார்.
(v) அரசருடைய முக்கிய பணி இனக்குழுக்களை காப்பதாகும். மக்களின் சொத்துக்களை பாதுகாத்தார்.
(vi) நிலப்பரப்பின் மீதம், மக்களின் மீதும் அதிகாரம் இருந்தது.
(vii) சாதாரணமாக மக்களோடு நெருக்கமாய் இருந்தார். அவர்களோடு பொதுவில் உணவருந்தினார்.
நிர்வாகம்:
(i) வேத காலத்தில் சபா, சமிதி, விததா, கணா என்ற அமைப்புகள் காணப்பட்டுள்ளன.
(ii) சபா என்பது மூத்தோர் அல்லது செல்வார்கள் பங்கேற்ற அமைப்பு.
(iii) சமிதி என்பது மக்கள் கூடும் இடமாகும். விததா என்பது இணைக்க குழுக்களின் அமைப்பாகும். ராணுவம் மற்றும் மதம் சார்ந்த பணிகளை இவை மேற்கொண்டன.
(iv) அரசர்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கு சபா, சமிதி ஆகிய அமைப்புகளின் ஆதரவை நாடினார்.
(v) மதகுருக்கள் அரசருக்கு ஆலோசனை வழங்கி, ஊக்கப்படுத்தி, புகழ்ந்து தங்கள் செல்வாக்கைப் பெற்றனர்.
(vi) சேனானி என்பவர் படைத்தலைவர் ஆவார். 'பலி' எனப்பட்ட வரைமுறை தானாகவோ அல்லது கட்டாயப்படுத்தி பெறப்பட்டது.
(vii) நிலப்பரப்பை கட்டுப்படுத்திய அதிகாரி விராஜபதி எனப்பட்டார். படைக்குழுக்களின் தலைவர்களான குலபா அல்லது கிராமணி என்பவர்களுக்கு இவர் உதவி செய்வர். கிராமங்களின் தலைவரும் கிராமணியே ஆவார்.
45.
(i) 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பிரமாண்டமான கட்டிடம் குதுப்பினார்.
(ii) குத்புதீன் ஐபக்கால் தொடங்கப்பட்டு, கில்டுமிஷால் கட்டி முடிக்கப்பட்டது.
(iii) கில்டுமிஷால் கட்டி முடிக்கப்பட்ட போது 72.5 மீட்டர் உயரமாக இருந்தது.
(iv) ஃபைரோஸ் ஷா துக்ளக் மேற்கொண்ட பழுது நீக்கும் பணிகளால் 74 மீட்டராக உயர்ந்தது.
(v) இந்த கோபுரம் சூஃபித் துறவி குத்புத்தீன் பக்தியார் காகி என்பவரது நினைவாக எழுதப்பட்டது.
(vi) கட்டிடத்திலிருந்து சற்று வெளியே நீட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடங்கள் அக்கால கட்டிடக் கலையின் சிறப்புக்கு சான்றாகத் திகழ்கின்றன.
46.
1.தரங்கம்பாடி சமய பரப்புக்குழுவைச் சேர்ந்த அறிஞர் சி.எஸ்.ஜான் என்பவரைக் கல்வித் துரையின் முன்னோடியாக மன்னர் சரபோஜி கருதினார்.
2. இவர் கல்வித்துறையில் பரிசோதனைகளையும், சீர்த்திருத்தங்களையும் மேற்கொண்டார்.
3.பாடத்திட்டம் மற்றும் கல்விப்பயிற்றும் முறைகளில் அவர் நவீன முறைகளையும் மாணவர்களுக்கு செய்தார்.
47.
i) பௌத்த ஆசான் நாகார்ஜுனர், பௌத்த தத்துவஞானிகள் அஸ்வகோஷர், பார்ஸ்வர், வசுமித்திரர், போன்றோரின் புரவலராக பேரரசர் கனிஷ்கர் திகழ்ந்தனர்.
ii) "அஸ்வகோஷர்" அவரது "புத்தசரிதம்" நூலுக்காக புகழ் பெற்றவர் என்பதோடு ஒன்பது காட்சிகளில் அமைந்த சரிபுத்ரப்ரகரண என்ற முதல் சமஸ்கிருத நாடகத்தின் ஆசிரியர் என்பதற்காகவும் போற்றப்படுகிறார்
iii) மாபெரும் நாடகாசிரியர் பாசன், பெரும்பாலும் இந்த காலத்தை சேர்ந்தவராவார்.
iv) இந்து மத நூல்களில் மனு பொ.ஆ 2ம் நூற்றாண்டில் தான் இறுதி வடிவப் பெற்றன என்பதை அறிகிறோம்.
48.
(i) டில்லி சுல்தான் முகமது பின் துக்ளக் மீண்டும் தன் தலைநகரை தில்லிக்கு மாற்றிய போது அவரின் தென்பகுதியின் மாகாண ஆளுநர்கள் தங்களை சுதந்திர அரசர்களால் அறிவித்தனர்.
(ii) 1345இல் வடக்கு கர்நாடகாவில் ஜாபர்கான் தன்னை சுதந்திர அரசராக அறிவித்துக் கொண்டார்.
(iii) தன் தலைநகரை தேவகிரியிலிருந்து குல்பர்காவிற்கு மாற்றினார்.
(iv) அவர் பாமன்ஷா என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டு பாமினி அரச வம்சத்தைத் தோற்றுவித்தார்.
49.
(i) பிள்ளையார்பட்டி
(ii) திருமயம்
(iii) குன்றக்குடி
(iv) திருச்செந்தூர்
(v) கழுகுமலை
(vi) கன்னியாகுமரி
(vii) சித்தன்னவாசல்
ஆகிய இடங்களில் தொடக்க காலப் பாண்டியர்களால் கட்டப்பட்ட குடைவரை கோயில்கள் காணப்படுகிறது.
50.
i) மகதத்திலிருந்து பிரிந்து சென்ற கலிங்கத்தைக் கைப் பற்றுவதற்காக நடைபெற்ற போர் கலிங்கப்போர்.
ii) அசோகரது ஆட்சிக்காலத்தின் முக்கியமான நிகழ்வு அவரது ஆட்சியில் நடைபெற்ற கலிங்கப்போர் ஆகும்.
iii) போரில் கொல்லப்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள் பல பத்தாயிரங்களாகும்.
iv) இப்போர் மற்ற போர்களை விட மிக கொடூரமானதாக இருப்பதாக இருந்திருக்க வேண்டும்.
v) போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மெளரிய அரசுடன் இணைத்துக்கொண்டார்.
51.
(i) பல்லவர்கால அரசியல் நிர்வாகப் பிரிவின் தலைவர் அரசர் ஆவார்.
(ii) அரசருக்கு உதவ 'மந்திரி மண்டல' என்ற அமைச்சர் குழு இருந்தது.
(iii) மாநில ஆளுநர்களுக்கு அமைச்சர் குழு ஆலோசனை வழங்கியது.
(iv) கிராமங்களில் கிராமமன்றங்கள் நிர்வாகம் செய்தன.
(v) ரகஸ்யதிகரா, கொடுக்காபிள்ளை, கோச அதீயஷா, தர்மாதிகாரி போன்றவர்கள் நிர்வாகத்தினை நடத்தும் மற்ற அதிகாரிகளாவார்.
(iv) மாவட்டப் பிரதிநிதிகளும் இருந்தனர்.
52.
உள்நாட்டு பூசல்களும் அரச குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளும் அதன் வீழ்ச்சிக்கு காரணமாயின.
பிற்காலத்திய குப்த அரசர்கள் பௌத்தத்தைக் கடைப்பிடித்தும் இவர்கள் பேரரசை விரிவுபடுத்துவதிலோ, ராணுவ படையெடுப்புகாலிலே கவனம் செலுத்தாததும் பேரரசை பலவீனப்படுத்தியது.
அத்ததுடன் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளபட்ட படையெடுப்புகள், சிற்றரசர்கள் பலமாக உருவானது ஆகியன அனைத்தும் சேர்ந்து குப்தப் பேரரசு வீழக் காரணமாகின.
ஹூணர்களின் படையெடுப்பால் கருவூலம் காலியானது. பிற்கால குப்த அரசர்கள் வலிமை குன்றியது. ஆகியன குப்த பேரரசின் வீழ்ச்சிக்கு காரணங்களாயின.
53.
கிழார் என்போர் கிராமங்களின் அல்லது ஒரு சிறிய பகுதியின் தலைவராக இருந்து, பின்னர் நாடு என்றறியப்பட்ட நிர்வாகப் பிரிவின் தலைவராவர். இவ்ர்கள் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகங்களின் தலைவர்களாவர்.
வேளிர்:
வேளிர்கள், பல்வேறு புவியியல் தன்மைகளைக் கொண்ட, குறிப்பாக மூவேந்தர்களின் வளம் நிறைந்த பகுதிகளின் இடையே அமைந்திருந்த மலைப்பாங்கான காட்டுப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தனர்.
54.
(i) பொ.ஆ.மு. ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் சில அவைதீகச் சிந்தனையாளர்கள் கேள்விற்கு உட்படுத்தியதின் விளைவாக அறிவு மலர்ச்சி தோன்றியது.
(ii) இக்கால கட்டத்தின் தான் வைதீகக் கருத்துக்களைப் பற்றி கேள்வி எழுப்பிய சிந்தனையாளர்கள் தோன்றினர்.
(iii) அவை தீகச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்கள்
(1) கோசலர்
(2) கெளதம்புத்தர்
(3) மகாவீரர்
அஜிதகேசகம்பளி ஆகியோர் ஆவார்.
(iv) இத் துறிவிகளின் போதனைகள் புதிய ஆட்சி முறைகள் நகரமையங்களின் உருவாக்கம். கைத்தொழில்கள், தொலை தூர வணிகத்தின் வளர்ச்சி இவற்றால் விரைவில் மாறிக்கொண்டிருந்த சமூகத்தின் தேவைகளைப் பேசின.
(v) இந்த அறிவு மலர்ச்சிவாதிகள் வேதக் கருத்துக்களான ஆன்மா, மனம், உடல் ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார்கள்.
(vi) அதன் வழியாக, புதிய மதங்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தார்கள்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards