11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
வங்கிச் சரிகட்டும் பட்டியல்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியின் வரவிருப்பு என்பது
வங்கி அறிக்கையின்படி பற்றிருப்பு
வங்கி அறிக்கையின்படி வரவிருப்பு
ரொக்க ஏட்டின்படி சாதக இருப்பு
மேற்கூறிய ஏதுமில்லை
2.
ரொக்க ஏட்டின் இருப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது , வங்கி அளிக்கும் வட்டி ________.
கழிக்கப்பட வேண்டும்
கூட்டப்படவேண்டும்
இரண்டும் இல்லை
3.
வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயாரிப்பவர்
வங்கி
வணிகத்தின் கடனீ ந்தோர்
வங்கியின் வாடிக்கையாளர்
பணியாளர்
4.
வங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது வங்கியானது
வாடிக்கையாளர் கணக்கில் வரவு செய்யும்
வாடிக்கையாளர் கணக்கில் பற்று செய்யும்
வாடிக்கையாளர் கணக்கில் பற்று மற்றும் வரவு செய்யும்
மேற்கண்ட ஏதுமில்லை
5.
வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது
வங்கி அறிக்கை
ரொக்க ஏடு
வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
சில்லறை ரொக்க ஏடு
6.
வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுவது.
வங்கியரால்
வணிகத்தால்
வணிகத்தின் கடனாளிகளால்
வணிகத்தின் கடனீந்தோரால்
7.
ரொக்க ஏட்டில் அதிகமான இருப்பினை விளைவிக்கக் கூடிய ஐந்து இனங்களை வரிசைப்படுத்துக.
8.
வங்கிச் செல்லேடு என்றால் என்ன?
9.
நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் செலுத்தப்பெறும் ஏதேனும் இரண்டு செலவுகளை தருக
10.
ரொக்க ஏட்டின் வங்கிப்பத்திக்கும் வங்கி அறிக்கைக்கும் இடையேயான வேறுபாட்டிற்கான காரணங்களில் ஏதேனும் இரண்டை கூறுக
11.
வங்கி மேல்வரைப்பற்று என்றால் என்ன?
12.
பின்வரும் விவரங்களைக் கொண்டு , 31 டிசம்பர் 2016 - க்கான உதயம் நிறுவனத்தின் வங்கி செல்லேட்டில் காணக்கூடிய இருப்பினைக் காணக்கிடவும்.
1.31 டிசம்பர் 2016 ரொக்க ஏட்டின்படி வங்கிமேல்வரைப்பற்று ரூ 63,400
2. 31 டிசம்பரில் முடியும் 6 மாதத்திற்கான மேல்வரைப்பற்று மீதான வட்டி ரூ 1,600 செல்லேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. வங்கிக் கட்டணம் ரூ300 செல்லேட்டில் பதியப்பட்டுள்ளது.
4. ரூ 11,680 மதிப்பு கொண்ட காசோலை விடுக்கப்பட்டும் டிசம்பர் 31 வரை பணமாக்கப்பதவில்லை.
5. ரூ 21,700 மதிப்புள்ள காசோலைகள் வங்கியில் செலுத்தப்பட்டு . இன்னும் வசூலாகவில்லை.
6. வங்கி வசூலித்த முதலீடுகள் மீதான வட்டி ரூ 12,000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
13.
ரொக்க ஏட்டில் பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகள் யாவை?
14.
பின்வரும் தகவல்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க:
(அ) வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ 25,000.
(ஆ) மறுக்கப்பட்ட காசோலை ரூ 250 குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(இ) வங்கியில் செலுத்திய காசோலை தொகை ரூ 3,500 இன்னும் வசூலிக்கப்படவில்லை.
(ஈ) வங்கிக் கட்டணம் ரூ 300 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(உ) விடுத்த காசோலை ரூ 9,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.
15.
மேல்வரைப்பற்று இருப்பாக இருந்தால் வங்கி வசூலித்த வட்டி ஏற்படுத்தும் விளைவு என்ன
16.
‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?
17.
பின்வரும் தகவல்களைக் கொண்டு வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க
(அ) வங்கி அறிக்கையின் படி வங்கி மேல்வரைப்பற்று ரூ.6,500
(ஆ) விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது ரூ 8,750
(இ) செலுத்திய காசோலை இன்னும் வங்கியால் வரவு வைக்கப்படாதது ரூ.500
(ஈ) பணம் வைப்பு இயந்திரம் வழியாக வாடிக்கையாளர் நேரடியாக செலுத்தியது ரூ.3,500
(உ) வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படாதது ரூ 2,00
(ஊ) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை ரூ 1,980
18.
பின்வரும் விவரங்களைக் கொண்டு 2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டுபிடிக்கவும்
| விவரம் | ரூ | |
|---|---|---|
| i) | ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 20,000 |
| ii) | செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 4,000 |
| iii) | விடுத்த காசோலை செலுத்துைகக்கு முன்னிலைப்படுத்தப்படாதது | 1,000 |
| iv) | நிலை அறிவுறுத்தலின்படி வங்கி வசூலித்த வாடகை | 500 |
| v | வங்கியால் பற்று செய்யசெய்யப்பட்ட மேல்வரைப்பற்று மீதான வட்டி | 2,000 |
| vi) | வங்கியால் தவறுதலாலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 |
| vii) | 2017 டிசம்பர் 30 அன்று விடுத்த காசோலை வங்கியால் மறுக்கப்பட்டது | 5,000 |
| viii) | வங்கியில் செலுத்திய வாடிக்கையாளரின் காசோலை வங்கியால் மறுக்கப்பட்டது. ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 2,000 |
19.
பின்வரும் விவரங்களிலிருந்து காமாட்சி நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க.
(அ) ரொக்க ஏட்டின் படி பற்றிருப்பு ரூ.10,500
(ஆ) வங்கியில் செலுத்திய காசோலை ரூ.5,500 வங்கியால் வரவு வைக்கப்பட்டது. ஆனால் ரொக்க ஏட்டில் இரு முறை பதியப்பட்டது.
(இ) விடுத்த காசோலை ரூ.7,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
(ஈ) காசோலை புத்தகக் கட்டணம் ரூ.200 வங்கியால் பற்று வைக்கப்பட்டது ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(உ) பணம் வைப்பு இயந்திரம் வாயிலாக வாடிக்கையாளர் செலுத்திய ரூ.1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
20.
கூற்று (A): வங்கிச் சரிக்கட்டும் பட்டியலானது, நடவடிக்கைகளின் எண்ணிக்கை மற்றும் வணிகத்தின் தேவையைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் அல்லது வாரம் ஒரு முறை தயாரிக்கப்படலாம்.
காரணம் (R): ரொக்க ஏடு மற்றும் வங்கி அறிக்கையிலுள்ள பதிவுகள் வேறுபட்டு இருக்கும் போது, சரிக்கட்டுதல் தேவைப்படுகிறது.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(இ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
21.
கூற்று (A): வங்கி அறிக்கை அல்லது செல்லேடு என்பது வங்கியின் ஏடுகளில் உள்ள வாடிக்கையானது கணக்கின் பிரதியாகும்.
காரணம் (R): தற்காலத்தில் வாடிக்கையாளர் தன்னுடைய வங்கி அறிக்கையினை மின் அறிக்கை வாயிலாகவும் பெற முடியும்.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(இ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
1.
(a)
வங்கி அறிக்கையின்படி பற்றிருப்பு
2.
(c)
இரண்டும் இல்லை
3.
(c)
வங்கியின் வாடிக்கையாளர்
4.
(b)
வாடிக்கையாளர் கணக்கில் பற்று செய்யும்
5.
(c)
வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
6.
(b)
வணிகத்தால்
7.
1. காசோலை விடுத்தும் பணம் எற முன்னிலைப்படுத்துப் படாதவை.
2. வங்கி வசூல் செய்து வரவு வைத்த முதலீடுகள் மீதான வட்டி பங்காதாயம்.
3. வங்கியர் தவறுதலாக செய்த வரவு.
4. வாடிக்கையாளர் நேரடியாக வங்கியில் செலுத்தியது/
5. வங்கி அளித்த வட்டி
8.
வங்கிச் செல்லேடு அல்லது நகலேடு என்பது வங்கியிடமுள்ள வாடிக்கையாளருடைய கணக்கின் பிரதியாகும்.இதில் அனைத்து வைப்புகள்,எடுப்புகள் மற்றும் வாடிக்கையாளரின் கணக்கில் மீதி இருக்கக் கூடிய தொகை ஆகியவற்றைக் காண்பிக்கின்றது.
9.
1. காப்பீட்டு முனைமம்
2. தொலைபேசிக் கட்டணம்.
10.
| வ.எ. | ரொக்க ஏட்டின் வங்கி பத்தி | வங்கி அறிக்கை |
|---|---|---|
| 1. | இது வணிக நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. | இது வங்கியால் தயாரிக்கப்படுகிறது. |
| 2. | ரொக்க வைப்பு என்பது பற்று பக்கத்தில் பதிவு செய்யப்படும். | ரொக்க வைப்பு வரவு பக்கத்தில் பதிவு செய்யப்படும். |
11.
(1) வங்கிக் கணக்கில் உண்மையான இருப்புக்கு அதிகமாக எடுப்பு செய்யும்போது அவ்விருப்பினை இது குறிக்கின்றது.
(2) நடப்பு கணக்கு வைத்திருப்போருக்கு மட்டும் இத்தகைய வசதி அளிக்கப்படுகின்றது. இவ்வாறு அதிகப்படியாக எடுத்த தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது.
(3) இத்தொகை ரொக்க ஏட்டில் வரவிருப்பாகவும் அதாவது பாதக இருப்பாகவும் செல்லேட்டில் பற்றிருப்பாகவும் காண்பிக்கப்படும்.
12.
| ரொக்க ஏட்டின்படி வங்கிமேல்வரைப்பற்று | (-) | 63,400 |
| கூட்டுக : | ||
| காசோலை விடுத்தும் பணமாக்கப்படாதவை | 11,680 | |
| வங்கி வசூல் செய்த முதலீடுகள் மீதான வட்டி | 12,000 | |
| 23,680 | ||
| (-)39,720 | ||
| கழிக்க : | ||
| வங்கியில் செலுத்தியும் வசூல் ஆகாத காசோலைகள் | 21,700 | |
| மேல்வரைப்பற்று மீதான வட்டி (ப) | 1,600 | |
| வங்கிக் கட்டணம் | 300 | |
| 23,600 | ||
| வங்கி அறிக்கையின்படி மேல்வரைப்பற்று | -63,320 |
13.
(i) வணிகம், ரொக்க ஏட்டில் நடவடிக்கைகளை தவறாகப் பதிவு செய்தல்:
சில சமயங்களில் ரொக்க ஏடுகளில்பதிவு செய்யும் போது தவறுகள் நேர்வதுண்டு.உதாரணமாக,காசோலை வைப்பு செய்தது அல்லது விடுத்தது தொடர்பான நடவடிக்கைகளைப் பதிவு செய்யாமல் விடுவது அல்லது தவறாகப் பதிவு செய்வது, தவறாக இருப்புக்கட்டுவது, போன்றவையாகும்.இது போன்ற நிகழ்வுகளில்,வங்கி அறிக்கையின் படியான இருப்புக்கும் ரொக்க ஏடுகளின் படியான இருப்புக்கும் வேறுபாடுகள் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
(ii) வங்கியர் நடவடிக்கைகளை தவறாகப் பதிவு செய்தல்
சில சமயங்களில் வங்கியரின் ஏடுகளில் தவறுகள் நிகழ்வதுண்டு.எடுத்துக்காட்டாக, காசோலை வைப்பு செய்வதது தொடர்பான நடவடிக்கைளை பதிவு செய்யாமல் விடுவது அல்லது தவறாக பதிவு செய்வது மற்றும் தவறாக இருப்புக் கட்டுவது.இது போன்ற நிகழ்வுகளால், வங்கி அறிக்கையின் படியான இருப்புக்கும் ரொக்க ஏடுகளின் படியான இருப்புக்கும் வேறுபாடுகள் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
14.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 25,000 | |
| கூட்டுக: காசோலை மறுக்கப்பட்டது | 250 | |
| செலுத்திய காசோலை இன்னும் வசூலிக்கப்படவில்லை | 3,500 | |
| வங்கிக் கட்டணம்ரொக்க ஏட்டில் பதியப்படவில் | 300 | 4,050 |
| கழிக்க: விடுத்த காசோலை செலுத்துகைக்கு | 29,050 | |
| முன்னிலைப்படுத்தப்படவில்லை | 9,000 | |
| ரொக்க ஏட்டின் படி இருப்பு | 20,050 |
15.
வங்கி, தனது வாடிக்கையாளர்களின் கணக்கினை பராமரிப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட வேண்டும். அதனால், வங்கிக் கட்டணம் வணிகத்தின் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது. மேலும் வணிகம், வங்கியிடம் கடன் பெற்றிருந்தாலோ அல்லது மேல்வரைப்பற்று இருந்தாலோ அவை மீதான வட்டியும் வணிகத்தால் கொடுக்கப்பட வேண்டும். வங்கிக் கட்டணம் மற்றும் வட்டிக்கான பதிவுகள் வங்கி அறிக்கையில் பதியப்படும். ஆனால், வங்கி அறிக்கையை வணிகம் பெற்ற பின்னரே ரொக்க ஏட்டில் இவைகள் பதிவு செய்யப்படும். அதுவரை வங்கி அறிக்கையை விட ரொக்க ஏடு அதிக இருப்பைக் காட்டும்.
16.
வணிகம் காசோலை விடுக்கும் பொழுது வணிகம் அதனை உடனடியாக ரொக்க ஏட்டின் வரவு பக்கத்தில் பதிவு செய்யும். ஆனால், இந்நடவடிக்கை வங்கி அறிக்கையில் அதே நாளில் பதிவு செய்யப்படாமலிருக்கலாம். இது வங்கியில் முன்னிலைப்படுத்திய பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும், வங்கி அறிக்கையும் ரூ. 20,000 இருப்பைக் காட்டியது. 'X' நிறுவனமானது 'Y' என்ற நிறுமத்திற்கு 27 மார்ச் 2017 அன்று ரூ.10,000 மதிப்புள்ள காசோலையை விடுத்தது. அதனால் 27 மார்ச் 2017 அன்று 'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. ஆனால் காசோலையானது 2 ஏப்ரல் 2017ம் நாளன்று தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
17.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| வங்கி அறிக்கையின்படியான மேல்வரைப் பற்று இருப்பு | 6,500 | |
| கூட்டுக: | ||
| விடுத்த காசோலை முன்னிலைப்படத்தப்படாதது |
8,750 | |
| வாடிக்கையாளர் நேரடியாக செலுத்தியது | 3,500 | 12,250 |
| 18,750 | ||
| கழிக்க: | ||
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 500 | |
| வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படாதது | 200 | |
| நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை | 1,980 | 2,680 |
| ரொக்க எட்டின்படி மேல்வரைப்பற்று | 16,070 |
18.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி மேல்வரைப்பற்று | 20,000 | |
| கூட்டுக: | ||
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 4,000 | |
| மேல்வரைப்பற்று மீதான வட்டி | 2,000 | |
| தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 | |
| காசோலை வங்கியால் மறுக்கப்பட்டது | 2,000 | 8,300 |
| 28,300 | ||
| கழிக்க: | ||
| விடுத்த காசோலை முன்னிலைப்படுத்தப்படாதது | 1,000 | |
| வங்கி வசூலித்த வாடகை | 500 | |
| காசோலை மறுக்கப்பட்டது | 5,000 | 6,500 |
| வங்கி அறிக்கையின்படி மேல்வரைப் பற்று | 21,800 |
19.
| ரொக்க எட்டின்படி பற்றிருப்பு | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி பற்றிருப்பு | 10,500 | |
| கூட்டுக: | ||
| ரொக்க ஏட்டில் பதியப் படாதது | 1,000 | |
| 11,500 | ||
| கழிக்க: | ||
| வங்கியால் வரவு வைக்கப்பட்டது | 5,500 | |
| விடுத்த காசோலை முன்னிலைப்படுத்தப்பட்டது | 7,000 | |
| காசோலை புத்தகக் கட்டணம் | 200 | 12,700 |
| வங்கி அறிக்கையின் படி மேல்வரைப்பற்று | 1,200 |
20.
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
21.
(ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards