11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
வங்கிச் சரிகட்டும் பட்டியல்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
2.
பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பைக் கண்டறிக
| விவரம் | ரூ | |
|---|---|---|
| (i) | வங்கி அறிக்கையின் படி இருப்பு | 6,000 |
| (ii) | டிசம்பர் 28, 2017 அன்று வங்கியில் செலுத்திய காச�ோலை இன்னும் வரவு வைக்கப்பட்டவில் | 2,000 |
| (iii) | டிசம்பர் 20, 2017 அன்று விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தபடவில்லை | 3,000 |
| (iv) | வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட கடனீட்டுப் பத்திரம் மீதான வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 4,000 |
| (v) | கட்டடம் மீதான காப்பீட்டு முனைமம் வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது | 1,000 |
| (vi) | வங்கியால் தவறுதலாலாக வரவு வைக்கப்பட்ட தொகை | 500 |
3.
பின்வரும் தகவல்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலை தயார் செய்க:
(அ) வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ 25,000.
(ஆ) மறுக்கப்பட்ட காசோலை ரூ 250 குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(இ) வங்கியில் செலுத்திய காசோலை தொகை ரூ 3,500 இன்னும் வசூலிக்கப்படவில்லை.
(ஈ) வங்கிக் கட்டணம் ரூ 300 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(உ) விடுத்த காசோலை ரூ 9,000 செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.
4.
ரோனி என்பவர் வீணா புகைப்பட நிலையத்தின் உரிமையாளர் ஆவார். மார்ச் 31, 2018 ஆம் நாளன்று அவருடைய வணிகத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தி இருப்பு கட்டப்பட்டது. அது
ரூ12,000 மேல்வரைப்பற்று காட்டியது. வீணா புகைப்பட்பட நிலையத்தின் வங்கி அறிக்கை ரூ 5,000 வரவு இருப்பைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயார் செய்க.
(அ) வங்கி நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 3,000 ஆனால், இது குறித்து ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஆ) 2018 மார்ச் 27 அன்று விடுத்த ரூ 9,000 மதிப்புள்ளள்ள காசோலை . இதில் ரூ 7,000 மதிப்புள்ள காசோலை 2018 மார்ச் 31-ஆம் நாள் வரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை.
(இ) ரொக்க ஏட்டின் பற்றிருப்பு ரூ 4,100 வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது.
(ஈ) வங்கியால் பற்று வைக்கப்பட்ட காசோலை புத்தகக் கட்டணம் ரூ.200 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(உ) வங்கியில் பற்று வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டக வாடகை ரூ1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
5.
கீழ்காணும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியல் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறிக
| விவரம் | ||
|---|---|---|
| i) | ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 10,000 |
| ii) | செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 5,000 |
| iii) | விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது | 1,000 |
| iv) | வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாகப் பெற்றது | 500 |
| v) | வங்கி பற்றுவைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி | 1,000 |
| vi) | வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 |
6.
வங்கிச் சரிகட்டும் பட்டியலில் கால இடைவெளிகளால் ஏற்படும் வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் தருக.
7.
மேல்வரைப்பற்று இருப்பாக இருந்தால் வங்கி வசூலித்த வட்டி ஏற்படுத்தும் விளைவு என்ன
8.
வங்கியில் ரொக்கம் செலுத்தும்போது ரொக்க ஏட்டில் பற்றும் வங்கி அறிக்கையில் வரவும் வைக்கப்படுவது ஏன்? விளக்குக
9.
‘காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தவில்லை’ என்பதன் பொருள் என்ன?
10.
வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று காரணங்களைத் தருக
1.
2.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 6,000 | |
| கூட்டுக: செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படவில்லை | 2,000 | |
| கட்டடம் மீதான காப்பீட்டு முனைமம் வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது | 1,000 | 3,000 |
| கழிக்க: | 9,000 | |
| விடுத்த காசோலை இன்னும் முன்னிலைப்படுத்தப்படவில்லை | 3,000 | |
| கடனீட்டுப் பத்திரம் மீதான வட்டி வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்டது | 4,000 | |
| வங்கியால் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட தொகை | 500 | 7,500 |
| ரொக்க ஏட்டின் படி இருப்பு | 1,500 |
3.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 25,000 | |
| கூட்டுக: காசோலை மறுக்கப்பட்டது | 250 | |
| செலுத்திய காசோலை இன்னும் வசூலிக்கப்படவில்லை | 3,500 | |
| வங்கிக் கட்டணம்ரொக்க ஏட்டில் பதியப்படவில் | 300 | 4,050 |
| கழிக்க: விடுத்த காசோலை செலுத்துகைக்கு | 29,050 | |
| முன்னிலைப்படுத்தப்படவில்லை | 9,000 | |
| ரொக்க ஏட்டின் படி இருப்பு | 20,050 |
4.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 12,000 | |
| கூட்டுக: காசோலை புத்தகத்திற்கான கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்பட்டவில்லை | 200 | |
| பாதுகாப்புப் பெட்டகக் கட்டணம் வங்கியால் பற்று வைக்கப்பட்டது | 1,000 | 1,200 |
| 13,200 | ||
| கழிக்க: வங்கியால் நேரடியாக வசூலிக்கப்பட்ட பங்காதாயம் | 3,000 | |
| விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது | 7,000 | |
| ரொக்க ஏட்டின் பற்றிருப்பு தவறுதலாக வரவிருப்பாக எடுத்தெழுதப்பட்டது | 8,200 | 18,200 |
| வங்கி அறிக்கையின் படி சாதகமான இருப்பு | -5,000 |
5.
டிசம்பர் 31, 2017-ம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல்
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 10,000 | |
| கூட்டுக: செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 5,000 | |
| வங்கி பற்று வைத்த மேல்வரைப்பற்று மீதான வட்டி | 1,000 | |
| வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 | 6,300 |
| 16,300 | ||
| கழிக்க: விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது |
1,000 | |
| வங்கியால் வாடிக்கையாளரிடமிருந்து நேரடியாக பெற்றது | 500 | 1,500 |
| வங்கி அறிக்கையின் படி மேல்வரைப்பற்று | 14,800 |
6.
(அ) விடுத்த காசோலை வங்கியில் செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படாதது
வணிகம் காசோலை விடுக்கும் பொழுது வணிகம் அதனை உடனடியாக ரொக்க ஏட்டின் வரவு பக்கத்தில் பதிவு செய்யும். ஆனால், இந்நடவடிக்கை வங்கி அறிக்கையில் அதே நாளில் பதிவு செய்யப்படாமலிருக்கலாம். இது வங்கியில் முன்னிலைபடுத்திய பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும் வங்கி அறிக்கையும் ரூ.20,000 இருப்பைக் காட்டியது. 'X' நிறுவனமானது 'Y' என்ற நிறுமத்திற்கு 27 மார்ச் 2017 அன்று ரூ.10,000 மதிப்புள்ள காசோலையை விடுத்தது.
(ஆ) வங்கியில் வசூலுக்கு அனுப்பிய காசோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது
காசோலை வங்கியில் வைப்பு செய்யப்படும் பொழுது ரொக்க ஏட்டில் அதே நாளில் பற்று வைக்கப்படும். ஆனால், இது வங்கி அறிக்கையில் அதே நாளில் தோன்றாமல் இருக்கலாம். ஏனெனில், காசோலை வசூலான பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'x' நிறுவனத்தின் ரொக்க ஏடும் வங்கி அறிக்கையும் ரூ.20,000 இருப்பாகக் காட்டியது. 'x' நிறுவனம், 2016 மார்ச் 25 அன்று ABC நிறுவனத்திடமிருந்து ரூ.5,000 ற்கான காசோலையைப் பெற்றது. அதே நாளில் 'x' நிறுவனம் தனது ரொக்க ஏட்டில் ரூ.5,000 வரவு வைத்தது.
(இ) வங்கிக் கட்டணம், வங்கிக் கடன் மீதான வட்டி மற்றும் மேல்வரைப்பற்று மீதான வட்டி
வங்கி, தனது வாடிக்கையாளர்களின் கணக்கினை பராமரிப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட வேண்டும். அதனால், வங்கிக் கட்டணம் வணிகத்தின் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது.
உதாரணம்:
2017 மார்ச் 1ஆம் நாளன்றைய ரொக்க ஏடு மற்றும் வங்கி அறிக்கையின் ஆரம்ப இருப்பு ரூ.7,000 . வங்கி மார்ச் 27, 2017 அன்று வங்கி கட்டணமாக ரூ.300 பற்று செய்தது.
(ஈ) வங்கி வசூல் செய்த வட்டி மற்றும் பங்காதாயம்
வாடிக்கையாளரின் பங்கு முதலீட்டின் மீதான பங்காதாயம் மற்றும் எந்த ஒரு முதலீடுகளின் மீதான வட்டியும் வங்கியால் வசூலிக்கப்படலாம். வசூலான நாளன்று இவ்விவரங்கள் வங்கி அறிக்கையில் பதியப்படும்.
உதாரணம்:
ரொக்க ஏடு மற்றும் அறிக்கையின் படியான இருப்பு ரூ.15,000, வங்கி வசூலித்த பங்காதாயம் ரூ.1,000. இதன் விளைவாக வங்கி அறிக்கையின் படியான இருப்பு ரூ.16,000 ஆக உயர்ந்துள்ளது.
7.
வங்கி, தனது வாடிக்கையாளர்களின் கணக்கினை பராமரிப்பதற்கான செலவுகளை ஈடுகட்ட வேண்டும். அதனால், வங்கிக் கட்டணம் வணிகத்தின் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது. மேலும் வணிகம், வங்கியிடம் கடன் பெற்றிருந்தாலோ அல்லது மேல்வரைப்பற்று இருந்தாலோ அவை மீதான வட்டியும் வணிகத்தால் கொடுக்கப்பட வேண்டும். வங்கிக் கட்டணம் மற்றும் வட்டிக்கான பதிவுகள் வங்கி அறிக்கையில் பதியப்படும். ஆனால், வங்கி அறிக்கையை வணிகம் பெற்ற பின்னரே ரொக்க ஏட்டில் இவைகள் பதிவு செய்யப்படும். அதுவரை வங்கி அறிக்கையை விட ரொக்க ஏடு அதிக இருப்பைக் காட்டும்.
8.
(1) வங்கி அறிக்கையில் உள்ள பதிவுகளை, ரொக்க ஏட்டில் உள்ள பதிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ரொக்க ஏட்டில் கணக்கீட்டு முறை நேர்மாறாக இருப்பதைக் காணலாம்.
(2) ரொக்க ஏட்டினை வணிகத்தின் நோக்கில் பதிவு செய்வதாலும், வங்கி அறிக்கையினை வங்கியின் நோக்கில் பதிவு செய்வதாலும் இவ்விரு ஏடுகளை ஒப்பிடும்போது நேர் மாறாக இருக்கும்.
(3) இரட்டைப் பதிவு முறை பின்பற்றுவதால், வங்கி அறிக்கையின் வரவு இருப்பு என்பது ரொக்க ஏட்டின் பற்று இருப்பைக் குறிக்கும்.
(4) வங்கி அறிக்கையின் பற்று இருப்பு என்பது ரொக்க ஏட்டின் வரவு இருப்பைக் குறிக்கும். ஏனென்றால் வங்கி இருப்பு சாதகமாக இருக்கும் பொழுது, வங்கியானது வணிகத்திற்கு கடனாளர் மற்றும் வணிகம் (வங்கியின் வாடிக்கையாளர்) வங்கியின் கடனீந்தோர் ஆவார்.
(5) வணிகம் வங்கியில் செலுத்தும் போது, வங்கியின் ஏடுகளில் வாடிக்கையாளர் வங்கியின் கடனீந்தோர் ஆவார்.
(6) வங்கியிலிருந்து, வணிகம் பணம் எடுக்கும் பொழுது, வங்கி வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய தொகை குறைவதால், வாடிக்கையாளரது கணக்கு பற்று வைக்கப்படுகிறது. இதன் விளைவாக வங்கி அறிக்கையில் (செல்லேடு) சாதகமான இருப்பு வரவு இருப்பாகவும், பாதகமான இருப்பு பற்று இருப்பாகவும் தோன்றும்.
9.
வணிகம் காசோலை விடுக்கும் பொழுது வணிகம் அதனை உடனடியாக ரொக்க ஏட்டின் வரவு பக்கத்தில் பதிவு செய்யும். ஆனால், இந்நடவடிக்கை வங்கி அறிக்கையில் அதே நாளில் பதிவு செய்யப்படாமலிருக்கலாம். இது வங்கியில் முன்னிலைப்படுத்திய பின்புதான் வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
உதாரணம்:
'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியும், வங்கி அறிக்கையும் ரூ. 20,000 இருப்பைக் காட்டியது. 'X' நிறுவனமானது 'Y' என்ற நிறுமத்திற்கு 27 மார்ச் 2017 அன்று ரூ.10,000 மதிப்புள்ள காசோலையை விடுத்தது. அதனால் 27 மார்ச் 2017 அன்று 'X' நிறுவனத்தின் ரொக்க ஏட்டில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. ஆனால் காசோலையானது 2 ஏப்ரல் 2017ம் நாளன்று தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
10.
(i) காசோலைகள் தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டறிதல்.
(ii) ரொக்க ஏட்டின் வங்கி பத்தியின் சரியான இருப்பினை கணக்கிடல்
(iii) வணிகத்தின் கணக்காளர்கள் மற்றும் வங்கி, நிதியினை தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards