11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
முதன்மைப் பதிவேடுகள்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கணக்கியல் சமன்பாட்டினை நிரப்புக
| (அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ? | |
| (ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,00,000 | = | ? | + | ரூ 40,000 | |
| (இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ? | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
2.
இரட்டைப்பதிவு முறை என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.
3.
குறிப்பேட்டில் பதிவு செய்யும் படிநிலைகளை விவரி.
4.
உரிமையாளர் ஆயுள்மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம், கணக்கியலில் எவ்வாறு பதியப்படுகிறது?
5.
ஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.
6.
கணக்கு என்றால் என்ன? கணக்குகளை வகைப்படுத்தி, தகுந்த உதாரணங்களுடன் கூறுக.
7.
கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.
8.
பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்று வகைப்படுத்துக
(அ) முதல்
(ஆ) கட்டட ம்
(இ) உள் ஏற்றிச் செல் செலவு
(ஈ) ரொக்கம்
(உ) தள்ளுபடிப் பெற்றது
(ஊ) வங்கி
(எ) கொள்முதல்
(ஏ) சந்துரு
(ஐ) கொடுபட வேண் டிய கூலி.
9.
பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.
| (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 60,000 |
| (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | ரூ 20,000 |
| (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது | ரூ 15,000 |
| (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது | ரூ 500 |
10.
ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தும் இராணியின் ஏடுகளில் பின்வரும் விவரங்களை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 80,000 |
| (ii) இரமேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது | ரூ 10,000 |
| (iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | ரூ 6,000 |
| (iv) கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | ரூ 8,000 |
1.
| அ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 1,00,000 | = | ரூ 80,000 | + | ரூ 20,000 | |
| (ஆ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,00,000 | = | ரூ 1,60,000 | + | ரூ 40,000 | |
| (இ) | சொத்துகள் | = | முதல் | + | பொறுப்புகள் |
| ரூ 2,40,000 | = | ரூ 1,60,000 | + | ரூ 80,000 |
2.
ஒவொரு நடவடிக்கையும் பணம் அல்லது பணமதிப்பு சம்பந்தப்பட்ட இரண்டு தன்மைகளை கொண்டுள்ளன. மதிப்பினை பெறுதல் ஒரு தன்மையாகவும், அதே மதிப்பில் செலுத்துதல் இன்னொரு தன்மையாகவும் இருக்கும். அனைத்து நடவடிக்கைகளிலும் உலா இந்த இரு தன்மைகளும் கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுவதால் இரட்டைப் பதிவு முறை எனப்படும்.
இரட்டைப் பதிவு முறையின் நன்மைகள்:
(i) துல்லியத் தன்மை
இரட்டைத் தன்மை முறையில் வணிகத்தின் அனைத்து நடவடிக்கைகளும், இரு தன்மைகளோடு கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகின்றன.இது கணக்கியலின் துல்லியத் தன்மை பரிசோதிக்க உதவுகிறது.
(ii) வணிக முடிவுகளை உறுதிப்படுத்துதல்
வணிகத்தில் ஏற்படும் செலவுகள், இழப்புகள், வருவாய் இலாபங்கள் , சொத்துக்கள், பொறுப்புகள் போன்ற விவரங்களை உடனுக்குடன் பெற முடியும்.இதன் உதவியால் ஒரு குறிப்பிட்ட கணக்காண்டின் நிகர இலாபம் அல்லது நிகர நட்டம் மற்றும் ஒரு குறிப்பிட்ட தேதியில் நிதி நிலையினை கணக்கிட முடியும்.
(iii) ஒப்பீட்டு ஆய்வு
வணிக நிறுவனங்களின் தற்கால முடிவுகளை முந்திய ஆண்டுகளின் முடிவுகளோடும், மேலும் வேறு பல நிறுவனங்களின் முடிவுகளோடு ஒப்பீட்டு பார்க்க முடியும்.
(iv) பொதுவான ஏற்புத்தி தன்மை:
இம்முறையில் கணக்கினை பதிவு செய்வதை நிதி நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.ஏனெனில், இது ஒரு முறையான, அறிவியல் பூர்வமான கணக்கு பராமரிப்பு முறையாகும்.
3.
1. நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதிலுள்ள கணக்குகளை (தன்மையின் அடிப்படையில்) அடையாளம் காண வேண்டும்.
2. மேலே அடையாளம் கண்டா கணக்குகளை ஆள்சார் க/கு, சொத்துக் க/கு அல்லது பெயரளவுக் க/கு என்று பாகுபடுத்தி வேண்டும்.
3. மேலே பாகுபடுத்தப்பட்ட (ஒரு நடவடிக்கைக்கு தேவையான) இரண்டு கணக்குகளுக்கும் பற்று, வரவு விதிகளைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.
4. இரட்டைப் பதிவு முறையின் விதிகளைப் பயன்படுத்தி எந்த கணக்கினைப் பற்று வைக்க வேண்டும், எந்த கணக்கினை வரவு வைக்க வேண்டும் என கண்டறிய வேண்டும்.
5. நடவடிக்கை நடந்த நாளினை, நாள் பத்தியில் பதிவு செய்திட வேண்டும்.
6. பற்று வைக்க வேண்டிய கணக்கின் பெயரை விவரப் பத்தியின் இடது பக்கத்தில் மிகவும் நெருக்கமாக எழுத ஆரம்பித்து, இறுதியில் "ப" என்று பதிவு செய்ய வேண்டும். இதற்கு எதிரான அதே வரியில் பற்று பத்தியில் பற்று வைக்கும் தொகையினை பதிவு செய்திட வேண்டும்.
7. வரவு வைக்க வேண்டிய கணக்கின் பெயரை இரண்டாவது வரியில் பக்க ஓரத்திலிருந்து சிறிது இஅடைவேளி விட்டு, விவர பத்தியில் எழுத வேண்டும்.அதே வரியில் எதிராக உலா வரவு பத்தியில் வரவு வைக்கும் தொகையினை பதிவு செய்திட வேண்டும்.
8. அடுத்த வரியில் விவரப் பத்தியில் சிறு விளக்கத்தினை பிறை அடைப்பில் கொடுக்க வேண்டும்.
4.
1. உரிமையாளர் ஆயுள் மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம் வணிகச் செலவு அல்ல உரிமையாளரின் தனிப்பட்ட செலவினம்.
2. வியாபாரத் செலவின்மையால் இது செலவாக எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
3. ஆனாலும் இதற்குரிய தொகை வணிக நிறுவனத்திலிருந்து செலவிடப்பட்டதால் எடுப்பாக கருத வேண்டும்.
இதற்கான குறிப்பிட்டு பதிவு
எடுப்பு க/கு பற்று
ரொக்க க/கு வரவு
5.
ஆள்சார் கணக்கு:
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்குகள் எனப்படும்.இது தனி நபர், சட்டமுறை அமைப்பு, பிரதி நிதிதித்துவ அமைப்பு எனப் பிரிக்கப்படுகிறது.
(a) தனிநபர் கணக்கு:
தனி மனிதர் சார்புடைய கணக்குகளாகும்.எ.கா: ரமேஷ் கணக்கு, ராதா கணக்கு.
(b) சட்டமுறை ஆள்சார் கணக்கு:
ஆட்களின் குழு அல்லது அமைப்பு அல்லது சங்கம் சார்புடைய கணக்குகளாகும்.
எ.கா: வங்கி க/கு HMT Ltd., க/கு காப்பீட்டுக் கழகம். கணக்கு போன்றவை.
(iii) பிரதிநிதித்துவ அமைப்பு
இது இயற்கை அல்லது செயற்கை தன்மையுடைய நபரையோ அல்லது குழுவையோ குறிக்கிறது.
எ.கா.: கொடுப்பட வேண்டிய சம்பளக் கணக்கு, முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு கணக்கு போன்றவை.
6.
1. கணக்கு என்பது கணக்கியலில் அடையாளம் காண உதவும் ஒரு அடிப்படை அலகாகும்.
2. கணக்கு என்பது ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது நபர் சார்ந்த தகவல்களை ஒரேய இடத்தில ஒரு தலைப்பின் கீழ் ஒழுங்குபடுத்தி வழங்கும் ஒரு பதிவாகும்.
கணக்குகளின் வகைப்பாடு:
இரட்டைப்பதிவு முறையில் பல்வேறு வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் நோக்கில் கணக்குகளை ஆள்சார் க/கு மற்றும் ஆள்சார கணக்கு க/கு எனப் பிரிக்கலாம்.
ஆள்சார் கணக்கு:
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்கு எனப்படும். இது தனிநபர், சட்டமுறை அமைப்பு, பிரதிநிதித்துவ அமைப்பு எனப் பிரிக்கப்படுகிறது.
(i) தனிநபர்:
இது மனிதர்கள் சார்ந்த கணக்கு, எ.கா. ரமேஷ் கணக்கு, ராதா கணக்கு
(ஈ) சட்டமுறை அமைப்பு:
இது மனிதர்கள் அல்லாத சட்டத்தால் ஏற்கப்படும் செயற்கை நபர்கள் சார்ந்த கணக்கு.
எ.கா. வங்கி கணக்கு HMT Ltd., ஆயுள் காப்பீட்டுக் கழகம்.
(iii) பிரதிநிதித்துவ அமைப்பு
இது இயற்கை அல்லது செயற்கை தன்மையுடைய நபரையோ அல்லது குழுவையோ குறிக்கிறது.
எ.கா.: கொடுப்பட வேண்டிய சம்பளக் கணக்கு, முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு கணக்கு.
ஆள்சாரா கணக்குகள்:
ஆட்கள் சார்பில்லாக கணக்குகள் அனைத்தும் இதில் அடங்கும். இவைகள் சொத்துக் கணக்கு மற்றும் பெயரளவுக் கணக்கு எனப் பிரிக்கப்படுகிறது.
(i) சொத்து கணக்குகள்:
புலனாகும் மற்றும் புலனாக சொத்துக்களின் கணக்குகள் மற்றும் உடைமைகள் சார்ந்த கணக்குகள் சொத்துக் கணக்குகள் எனப்படுகின்றன.
புலனாகும் சொத்து - எ.கா: நிலம், கட்டிடம், அறைகலன்
புலனாக சொத்து - எ.கா: நற்பெயர், பதிப்புரிமை
(ii) பெயரளவுக் கணக்குகள்:
இக்கணக்குகளுக்கு எவ்வித வருவமும், வடிவமும் கிடையாது.இவைகள் வணிகத்தின் வருமானம் செலவு ஆதாயம் மற்றும் நாட்டம் சார்புடையதாகும்
எ.கா: வாடகை, சம்பளம், கூலி, பங்காதாயம், வட்டி
7.
அ. முதல் அதிகரிக்கும் போது, சொத்து அதிகரித்தல்:
முருகன் ரூ.50,000/- முதல் போட்டு தொழில் தொடங்கினார்.
விளைவுகள்
ரொக்கம் உள்வருதல் - சொத்தின் மதிப்பு அதிகரிப்பு
முதல் போடப்பட்டது - முதல் அதிகரிப்பு
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
(ரொக்கம்) 50,000/- = 50,000(முதல்) பொறுப்புகள்
50,000/- = 50,000/-
ஆ. பொறுப்புகள் குறையும் போது, சொத்துக்களும் குறைதல்.
கடனீந்தோர்க்கு திருப்பிச் செலுத்திய தொகை ரூ.10,000/-
ரொக்கம் வெளிச்செல்லுதல் - சொத்தின் மதிப்பு குறைதல்
கடனீந்தோர் பணம் பெறுதல் - பொறுப்பின் மதிப்பு குறைதல்
முதல் பொறுப்புகள் - சொத்துக்கள்
பொறுப்புகள் (-10,000/-) = சொத்துக்கள் (-10,000/-)
-10,000/- = -10,000/-
8.
| வ.எண் | விவரம் | வகைப்பாடு |
| (அ) | முதல் | ஆள்சார் கணக்கு |
| (ஆ) | கட்டடம் | சொத்துக்கணக்கு |
| (இ) | உள் ஏற்றிச் செல் செலவு | பெயரளவு கணக்கு |
| (ஈ) | ரொக்கம் | சொத்து கணக்கு |
| (உ) | தள்ளுபடி பெற்றது | பெயரளவு கணக்கு |
| (ஊ) | வங்கி | ஆள்சார் கணக்கு |
| (எ) | கொள்முதல் | பெயரளவு கணக்கு |
| (ஏ) | சந்துரு | ஆள்சார் கணக்கு |
| (ஐ) | கொடுபட வேண்டிய கூலி | ஆள்சார் கணக்கு |
9.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
||
|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கிருப்பு ரூ |
|||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +60,000 | +60,000 | ||
| சமன்பாடு | +60,000 | = | +60,000 | |
| (ii) ரொக்கக் கொள்முதல் | +20,000 | +20,000 | ||
| சமன்பாடு | +40,000 | +20,000 | = | +60,000 |
| (iii) ரொக்க விற்பனை | +15,000 | -10,000 | +5,000 | |
| சமன்பாடு | +55,000 | +10,000 | = | +65,000 |
| (iv) வாடகை ரொக்கமாக செலுத்தியது | -500 | -500 | ||
| சமன்பாடு | +54,500 | +10,000 | = | +64,500 |
10.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
பொறுப்புகள் | |||
|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கருப்பு ரூ |
அறைகலன் | கடனீந்தோர் ரூ |
|||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +80,000 | +80,000 | ||||
| சமன்பாடு | +80,000 | = | +80,000 | |||
| (ii) கடன் கொள்முதல் | +10,000 | +10,000 | ||||
| சமன்பாடு | +80,000 | +10,000 | = | +80,000 | +10,000 | |
| (iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | -6,000 | +6,000 | ||||
| சமன்பாடு | +74,000 | +10,000 | +6,000 | = | +80,000 | +10,000 |
| (iv) கடனீந்தோருக்கு அளித்தரொக்கம் | -8,000 | -8,000 | ||||
| சமன்பாடு | +66,000 | +10,000 | +6,000 | = | +80,000 | +2,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards