11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
முதன்மைப் பதிவேடுகள்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
குறிப்பேடு வரைவிலக்கணம் தருக.
2.
இரட்டைப்பதிவுமுறையின் வரைவிலக்கணம் எழுதுக.
3.
வைப்புச் சீட்டு என்றால் என்ன?
4.
குறிப்பேடு என்றால் என்ன?
5.
ரொக்க நடவடிக்கை என்றால் என்ன?
6.
காசோலை பதிவுச் சீட்டு என்றால் என்ன?
7.
பற்றுச்சீட்டு(Receipt) என்றால் என்ன?
8.
செலுத்துகைச் சீட்டு என்றால் என்ன (Pay-in-slip)?
9.
பற்று குறிப்பு என்றால் என்ன (Debit Note)?
10.
இடாப்பு என்றால் (Invoice)?
11.
இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.
12.
சொத்து கணக்கு என்றால் என்ன?
13.
பின்வருனவற்றிக்கான ஏதேனும் ஒரு நடவடிக்கையைத் தருக.
(அ) சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்.
(ஆ) ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்.
14.
கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?
15.
விடுபட்ட பகுதிகளை நிரப்புக:
| சொத்துக்கள் ரூ= | பொறுப்புகள் ரூ= | முதல் ரூ | |
|---|---|---|---|
| (அ) | 30,000 | 20,000 | ? |
| (ஆ) | 60,000 | 25,000 | ? |
| (இ) | ? | 25,000 | 30,000 |
| (ஈ) | ? | 10,000 | 80,000 |
| (உ) | 25,000 | ? | 15,000 |
| (ஊ) | 40,000 | ? | 30,000 |
1.
பேராசிரியர் கார்ட்டரின் கருத்துபடி, ரூ நினைவுக் குறிப்பு அல்லது நாட்குறிப்பிலிருந்து, நடவடிக்கைகள் நிகழ்ந்த நாள் வரிசைப்படி பதிவு செய்ய பயன்படுத்தப்படும் முதன்மைப் பதிவேடே குறிப்பேடாகும். பேரேட்டில் துல்லியமாக எடுத்தெழுதுவதை உறுதிப்படுத்தும் வகையில் பதிவுகள் பற்று மற்றும் வரவு என வகைப்படுத்தப்படுகின்றன".
2.
முன்ரோ மற்றும் பால்மர் அவர்களின் கூற்றுப்படி, "ஒவ்வொரு நடவடிக்கையும் பணம் அல்லது பணமதிப்பு சம்பந்தப்பட்ட இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளன. மதிப்பினைப் பெறுதல் ஒரு தன்மையாகவும், அதே மதிப்பில் செலுத்துதல் இன்னொரு தன்மையாகவும் இருக்கும். அனைத்து நடவடிக்கைகளிலும் உள்ள இந்த இரு தன்மைகளும் கணக்ககேடுகளில் பதிவு செய்யப்படுவதால், இரட்டைப் பதிவு முறையாகிறது."
3.
வங்கியில் ரொக்கம் அல்லது காசோலையை செலுத்தும் போது, வாடிக்கையாளரால் ஒரு படிவம் பூர்த்தி செய்யபட்டு ரொக்கம் அல்லது காசோலையுடன் வங்கியரிடம் அளிக்கப்படுகிறது. இந்தப் படிவத்தை செலுத்துச்சீட்டு அல்லது வைப்புச்சீட்டு என்று கூறுவர்.
4.
நடவடிக்கைகள் நிகழ்ந்த நாள் வரிசையில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உரிய பற்று வைக்க வேண்டிய கணக்கின் பெயர், தொகை மற்றும் விளக்க குறிப்புடன் பதிவு செய்யும் கணக்குப் பதிவேடு குறிப்பேடு எனப்படும்.
5.
1. ஒரு நடவடிக்கை நிகழும்போது உடனடியாக பணம் செலுத்துதல் அல்லது பெறுதல் நிகழ்ந்தால் அது ரொக்க நடவடிக்கை ஆகும்.
2. உதாரணமாக, ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ரூ.10,000/- இந்நடவடிக்கையில் ரூ.10,000/- மதிப்புள்ள சரக்கு உள்வருகிறது.ரூ.10,000/- ரொக்கம் நிறுவனத்தை விட்டு வெளியே செல்கிறது.
6.
1. காசோலை என்பது ஒரு மாற்றத்தக்க ஆவணம். வங்கி தமது வாடிக்கையாளர் சொந்த பயன்பாட்டிற்கும் பணம் எடுக்கவோ அல்லது வேறு நபருக்கு பணம் செலுத்தவோ காசோலைப் புத்தகத்தை வழங்குகிறது.
2. காசோலை வழங்குவதன் மூலம் ஒரு நபரின் கணக்கிலிருந்து அவருக்கோ அல்லது காசோலையயில் குறிப்பிட்ட நபருக்கோ ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்க வங்கி அறிவுறுத்துகிறது.
3. ஒவ்வொரு புத்தகத்திலும் விவரங்களை பதிவு சீட்டு இருக்கும். இதுவே காசோலைப் பதிவுச் சீட்டு எனப்படும். இது எதிர்கால பயன்பாட்டிற்காக கணக்கு வைத்திருப்பவரிடம் இருக்கும்.
7.
1. வியாபாரி வாடிக்கையாளரிடம் ரொக்கம் பெரும் பொழுது பற்று சீட்டினை தருகிறார். பற்றுசீட்டில் வியாபாரின் பெயர், முகவரி, எண், நாள், வடிக்கையாளருக்குத் தருகிறார். நகரினை பதிவுக்கு வைத்துக்கொள்கிறார்.
2. அதே போல, பணம் செலுத்தும் பொழுது பணம் பெற்றவரிடமிருந்து பற்று சீட்டினை பெறுகிறார்.
8.
1.வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் வங்கியில் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தும் சீட்டே செலுத்துச் சீட்டு ஆகும். இது வங்கியில் பணம் செலுத்திய உடன் வங்கியில் உள்ள அலுவலர் கையொப்பமிட்டும் வங்கி முத்திரையிட்டு செலுத்தச் சீட்டின் அடிக்கட்டை (Counter Foil) யை வழங்குவார்.
2. இது ஒரு வங்கி நடவடிக்கையின் ஆதார ஆவணம் ஆகும். அதில் நாள், கணக்கு எண், தொகை (ரொக்கம் / காசோலை) செலுத்தியது. கணக்கு வைத்திருப்பவரின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும்.
9.
1. சரகளித்தோரிடம் அதனை வாங்கியோர் திருப்பியனுப்பும் பொழுது சரக்கு திருப்பப்பட்ட நாள், சரகளித்தோரின் பெயர் மற்றும் முகவரி, திருப்பப்பட்ட சரக்கின் விவரம், அளவு அதன் மதிப்பு காரணம் போன்ற தகவல்கள் அடங்கிய அறிக்கையை இரண்டு படிகளில் தயாரித்து ஒன்றினை சரகளித்தோருக்கு அனுப்பியும் பிறதொன்றை அவரே வைத்திருப்பார். அவ்வறிக்கைக்கு பற்று குறிப்பு என்று பெயர்
2. ஒவ்வொரு பற்றுக் குறிப்பும் வரிசையாக எண் தரப்பட்டிருக்கும் பற்றுக் குறிப்பின்படி, சரகளித்தோரின் கணக்கில் பற்று வைக்கப்படும்.
10.
1. இடாப்பு, கடன் கொள்முதல் மாற்றும் கடன் விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் தேதி, தொகை மற்றும் கடன் கொள்முதல் அல்லது கடன் விற்பனை குறித்த சரக்குகளின் விவரம் இடம் பெற்றிருக்கும்.
2. பெரும்பாலும் இடாப்பினை மூன்று படிகளில் தயாரிப்பார். முதல் படியினை வாங்குபவருக்கு தருகின்றனர். இரண்டாவது படியினை சோதனைச் சாவடிக்கென சரக்குதான் அனுப்பி வைப்பர். மூன்றாவது படியினை விற்றவர் தம்மிடம் வைத்துக் கொள்கிறார்.
3. இது நடவடிக்கையினை ஏடுகளில் பதிவு செய்யும் ஆதார ஆவணமாக பயன்படுகிறது.
11.
| வ.எண் | கணக்கு | பற்றுத் தன்மை | வரவுத் தன்மை |
|---|---|---|---|
| 1. | ஆள்சார் கணக்கு | பெருவருக்கு பற்று | தருபவருக்கு வரவு |
| 2. | சொத்து கணக்கு | உள்வருவனவற்றிற்கு பற்று | வெளிச்செல்பவை வரவு |
| 3. | பெயரளவுக் கணக்கு | செலவுக்கும் நட்டத்திற்கும் பற்று | வருமானத்திற்கும், ஆதாயத்திற்கும் வரவு |
12.
வணிக நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் உடைமைகள் சார்ந்த கணக்குகள் சொத்து கணக்குகள் எனப்படுகின்றன.
சொத்துக் கணக்கானது:
(i) புலனாகும் சொத்து கணக்கு:
பார்க்க கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய சொத்துக்கள். எ.கா .: நிலம், கட்டிடம்
(ii) புலனாக சொத்து கணக்கு:
பார்க்க முடியாத மற்றும் தொட்டுணர முடியாத சொத்துக்கள்.எ.கா.: நற்பெயர், காப்புரிமை என இருவகைப்படும்.
13.
சொத்துக்கள் குறைதல் மற்றும் பொறுப்புகள் குறைதல்:
கடனீந்தோருக்கு ரொக்கம் செலுத்தியது ரூ.20,000
1. கடனீந்தோர் பணம் செலுத்தியது - பொறுப்புகள் குறையும்
2. ரொக்கம் வெளிசெலுத்தல் - சொத்துக்கள் குறையும்
ஒரு சொத்து அதிகரித்தல் மற்றும் மற்றொரு சொத்து குறைதல்:
1. இயந்திரம் உள்வருகிறது - சொத்து அதிகரித்தல்
2. ரொக்கம் வெளிச்செல்கிறது - சொத்துக்கள் குறையும்
14.
1. நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், முதல் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை சமன்பாட்டு முறையில் வெளிப்படுத்துவதே கணக்கியல் சமன்பாடு எனப்படும்.
2. இரட்டைப்பதிவு முறையின் கீழ் ஒவ்வொரு நடவடிக்கையும் இரண்டு தன்மைகளை பெற்றிருக்கும். இது சொத்துக்கள், பொறுப்புகள் அல்லது முதல் போன்றவற்றில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் சமன்பாடு முழுமை அடைந்து சமமாகிறது.
15.
| சொத்துக்கள் ரூ= | பொறுப்புகள் ரூ= | முதல் ரூ | |
|---|---|---|---|
| (அ) | 30,000 | 20,000 | 10,000 |
| (ஆ) | 60,000 | 25,000 | 35,000 |
| (இ) | 55,000 | 25,000 | 30,0000 |
| (ஈ) | 90,000 | 10,000 | 80,000 |
| (உ) | 25,000 | 10,000 | 15,000 |
| (ஊ) | 40,000 | 10,000 | 30,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards