11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் செலவுகளை முதலின, வருவாயினச் செலவுகள் என வகைப்படுத்துக.
(i) ரூ 3,200 பின்வருமாறு இயந்திரத்தின் மீது செலவழிக்கப்பட்டது.
(அ) உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க சேர்க்கப்பட்ட கூடுதல் இயந்திரத்தின் மதிப்பு ரூ 2,000
(ஆ) கவனக்குறைவால் ஏற்பட்ட பழுதினைச் சரி செய்ய ரூ 1,200 செலவழிக்கப்பட்டது.
(ii) வாகனத்தின் எரிபொருள் திறனை அதிகரிக்க, அதன் இயந்திரத்தைப் புதுப்பிக்க மேற்கொண்ட செலவு ரூ 25,000.
2.
பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
(ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
(iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
(iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
(v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150.
3.
பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
(i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
(ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
(iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.
4.
வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்
வருவாயினச் செலவுகள்
முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்
நீள்பயன் வருவாயினச் செலவுகள்
முதலினச் செலவுகள்
5.
வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது
கடந்த காலத்திற்கு
எதிர் காலத்திற்கு
நடப்பு காலத்திற்கு
எந்த காலத்திற்கும்
6.
நடைமுறை முதலை அதிகரிப்பதற்காக இந்திய தொழில் வளர்ச்சி வங்கியிடம் பெற்ற நடுத்தர காலக் கடன் தொகை.
முதலினச் செலவுகள்
வருவாயினச் செலவுகள்
வருவாயின வரவுகள்
முதலின வரவுகள்
7.
8.
திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
மேற்கூறிய எதுவுமில்லை
9.
நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தரவும்.
10.
முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபடுத்தவும்.
11.
முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும்.
12.
பின்வரும் செலவுகளை முதலினம் அல்லது வருவாயினம் எனக் கூறவும்.
(i) கட்டடம் கட்டியதற்கான தொகை ரூ 10,00,000.
(ii) அறைகலன் பழுதுபார்த்தது ரூ 50,000.
(iii) கட்டடத்தை வெள்ளை அடிப்பதற்கானச் செலவு ரூ 80,000.
(iv) பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டியது ரூ 4,00,000.
13.
பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயினச் செலவினங்களாக வகைப்படுத்தவும்.
(i) நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம்.
(ii) வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள்.
(iii) சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.
(iv) கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள்.
1.
(i) (அ) கூடுதல் இயந்திரத்தைச் சேர்க்க செலவழித்த தொகை ரூ 2,000 முதலினச் செலவாகும்.
(ஆ) பழுதுபார்ப்புச் செலவு ரூ 1,200 வருவாயினச் செலவாகும்.
(ii) வாகனத்தின் எரிபொருள் திறனை அதிகரிக்க இயந்திரத்தைப் புதுப்பித்தது முதலினச் செலவாகும்.
2.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக் கட்டியதற்கானத் தொகை ரூ 5,000 முதலினச் செலவாகும்.
(ii) பழைய மகிழுந்து வாங்கியது மற்றும் அதை உடனடியாக பழுதுபார்ப்புச் செய்த செலவு மொத்தம் ரூ 32,000 முதலினச் செலவாகும்.
(iii) புதிய தொழிற்சாலைக்கான வண்ணம் பூசியதற்கானச் செலவு ரூ 10,000 முதலினச் செலவாகும்.
(iv) ஏற்றிச் செல் செலவு வண்டிக்கட்டணம் மற்றும் நிறுவுகைச் செலவு முதலினச் செலவாகும்.
(v) பழைய வாகனம் வாங்கி உடனடியாக பழுதுபார்த்தது ரூ 150 முதலினச் செலவாகும்.
3.
(i) பேரளவிலான விளம்பரச் செலவின் பயன் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்காண்டுகளுக்கு நீடிக்கும். இச்செலவு புலனாகும் / புலனாகாச் சொத்துக்களை உருவாக்கவில்லையென்றாலும் இது நீள்பயன் வருவாயினச் செலவாகும்.
(ii) இயந்திரத்தைப் பயன்படுத்த தயாராக்குவதற்கு செய்யப்படும் செலவுகள் முதலினச் செலவுகளில் அடங்கும்.
(iii) இயந்திரம் வாங்கி, அதனைத் தோழிற்சாலைக்கு கொண்டு வந்து பயன்படுத்தும் வரையிலான செலவுகள் முதலினச் செலவுகளாகும்.
4.
(d)
முதலினச் செலவுகள்
5.
(c)
நடப்பு காலத்திற்கு
6.
(d)
முதலின வரவுகள்
7.
(c)
8.
(a)
முதலினச் செலவு
9.
(i) நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட வருவாயினத் தன்மையுள்ள ஒரு செலவின் பயன், எதிர் வரும் ஆண்டு அல்லது ஆண்டுகளுக்கும் கிடைக்குமானால், அச்செலவு நீள்பயன் வருவாயினச் செலவு ஆகும்.
(ii) இச்செலவின் பயன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு கிடைக்கும்.
(iii) இது, நடப்பாண்டின் வருவாயுடன் பொருத்துவதிலிருந்து ஒத்தி வைக்கப்படுகின்றது.
(iv) இது குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வருமானத்திலிருந்து போக்கெழுதப்படுகிறது.
(v) இச்செலவு ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்கு நிறுவனம் ஈட்டும் வருமானத்தின் மீது சரிக்கட்டப்படும்.
(vi) உதாரணங்கள்: விளம்பரத்திற்காக செய்யப்பட்ட பேரளவுத் தொகை, பொறி மற்றும் இயந்திரம் மீதான பேரளவு பழுதுபார்ப்புச் செலவுகள்
10.
| அடிப்படை | முதலின வரவு | வருவாயினை வரவு | |
|---|---|---|---|
| (i) | தன்மை | அடிக்கடி நிகழாதத் தன்மையுடையது | அடிக்கடி நிகழும் தன்மையுடையது |
| (ii) | அளவு | பெரும்பாலும் பேரளவிலான தொகையாக இருக்கும். | சிறிய அளவிலான தொகையாக இருக்கும். |
| (iii) | பகிர்வு | இத்தொகையை இலாபமாக கருதி பகிர்ந்தளிக்க முடியாது | வருவாயின செலவைக் காட்டிலும் மிகுதியான வருவாயின வரவுகள் இலாபமாக கருதிப் பகிர்ந்து அளிக்கப்படும் |
11.
| அடிப்படை | முதலினச் செலவு | வருவாயினச் செலவு | |
|---|---|---|---|
| (i) | தன்மை | அடிக்கடி நிகழாதத் தன்மையுடையது | அடிக்கடி நிகழும் தன்மையுடையது |
| (ii) | நோக்கம் | வருவாய் ஈட்டும் திறனை அதிகரிப்பதே இச்செலவின் நோக்கம் | வியாபாரத்தின் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்வதே இச்செலவின் நோக்கம் |
| (iii) | பயனளிப்பு காலம் | இச்செலவின் பலன் நீண்ட காலத்திற்கு கிடைக்கும். | நடப்பு ஆண்டிற்கு மட்டுமே பலன் கிடைக்கிறது. |
| (iv) | இலாபம் ஈட்டும் திறனில் ஏற்படுத்தும் விளைவு | வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அதிகரிக்கச் செய்யும். | வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனைப் பராமரித்து வைத்துக் கொள்ள உதவும். |
| (v) | கணக்கியல் நடைமுறை | இருப்புநிலைக்குறிப்பில் சொத்துகள் பக்கத்தில் தோன்றும் | நேரடிச் செலவெனில் வியாபாரக் கணக்கின் பற்றுப்பக்கத்திலும் மறைமுகச் செலவெனில் இலாப நட்டக் கணக்கின் பற்றுப் பக்கத்திலும் தோன்றும். |
12.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | கட்டடம் கட்டியதற்கான தொகை ரூ 10,00,000 | முதலினச் செலவு |
| (ii) | அறைகலன் பழுதுபார்த்தது ரூ 50,000. | வருவாயினச் செலவு |
| (iii) | கட்டடத்தை வெள்ளை அடிப்பதற்கானச் செலவு ரூ 80,000. | வருவாயினச் செலவு |
| (iv) | பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டியது ரூ 4,00,000. | முதலினச் செலவு |
13.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம். | முதலினச் செலவு |
| (ii) | வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள். | முதலினச் செலவு |
| (iii) | சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம். | வருவாயினச் செலவு |
| (iv) | கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள். | முதலினச் செலவு |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards