11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
கணினிமையக் கணக்கியல்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
விவேக் சென்னையிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பெற்ற கடன் ரூ 2,00,000 மற்றும் தவணைகளின் எண்ணிக்கை 84 மாதங்களாகும். மாதந்தோறும் ரூ 3,300 வீதம் செலுத்துவதாக கருதி, சரியான செயற்கூறு பயன்படுத்தி விகிதத்தைக் கண்டுபிடிக்கவும்
2.
கீழேயுள்ள தகவல்களை கருத்தில் கொள்ளவும்
கடன் தொகை ரூ 3,00,000
திருப்பி செலுத்தும் காலங்களின் எண்ணிக்கை 48 மாதங்கள்
ஆண்டு வட்டி விகிதம் 10%
குறித்த காலங்களில் செலுத்த வேண்டிய தொகை யினை PMT எனும் செயற்கூறு மூலம் கணக்கிடவும்.
3.
கணினி அமைப்பின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு சாதனங்களைக் குறிப்பிடுக.
4.
பல்வேறு வகையான குறிமுறையாக்க முறைகளைக் குறிப்பிடுக.
5.
கணினிமையக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஏதேனும் மூன்றினைத் தருக
6.
பல்வேறு வகையான கணக்கியல் மென்பொருள்கள்கள் யாவை?
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகளிலிருந்து குறைந்தபட்ச வசூலாக ரூ. 500 ஐ ஏதேனும் ஒரு நாளில் எட்டிய விற்பனைப் பிரிைவ கண்டுபிடிக்கவும்.
| Counter | Day 1 sales Rs | Day 2 sales Rs |
|---|---|---|
| Ground floor | 600 | 600 |
| First floor | 850 | 300 |
| Second floor | 350 | 400 |
8.
மூன்று விற்பனையாளர்கள் உள்ளனர். அவர்கள் இரண்டு நாட்களில் செய்து முடித்த விற்பனை கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தது ரூ. 400 விற்பனை செய்து முடித்த விற்பனையாளர் யார் என்பதை கண்டுபிடிக்க உங்களிடம் கோரப்படுகின்றது.
9.
கீழ்க்கண்ட அட்டவணை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் வினாக்களுக்கான விடையை கண்டறியவும்.
| A | B | C | D | E | F | G | H | I | J | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | 550 | 156 | 852 | 584 | TAX | 573 | GST | 1234 | ||
| 2 | 340 | 1285 | 468 | 584 | 268 | 222 | CASH | BRS | STOCK | DEBT |
(அ) எண்கள் மட்டுமே கொண்ட அறைகள் எத்தனை?
(ஆ) ஏதேனும் ஒரு மதிப்பைக் கொண்டிருக்கும் அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.
(இ) 1000 க்கு மேல் மதிப்பு கொண்டுள்ள அறைகளின் எண்ணிக்கையை கணக்கிடவும்.
10.
ஒரு போட்டித் தேர்வில் சில மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு இருந்தன. விரிதாளிலுள்ள உரிய செயற்கூறுகளை கொண்டு சராசரி, அதிகப்படியான மற்றும் குறைந்த மதிப்பெண்ணை கண்டுபிடிக்கவும்.
| A | B | C | D | E | F | G | H | |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | NAME | Anbu | Balu | Gobu | Ramu | Somu | Raju | Anu |
| 2 | SCORES | 60 | 80 | 164 | 192 | 104 | 64 | 204 |
1.
(i) MS-Excel இல் புதிய விரிதாளை திறக்கவும்.
(ii) கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை அறைகளில் உள்ளீடு செய்யவும்.
| A | B | |
|---|---|---|
| 1 | Number of instalments (nper) | 84 |
| 2 | Periodic payment (pmt) | 3300 |
| 3 | Loan amount (pv) | -200000 |
| 4 | FV | 0 |
| 5 | Type | 0 |
(iii) அறை B6 –ல் RATE எனும் செயற்கூறு கொண்டு விகிதம் கணக்கிடவும். =RATE(B1,B2,B3,B4,B5)*12
விகிதம் 10%
2.
(i) MS–Excel ல் புதிய விரிதாளை திறக்கவும்
(ii) கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை அறைகளில் உள்ளீடு செய்யவும்
| A | B | |
|---|---|---|
| 1 | Rate of interest (p.a.) | 10% |
| 2 | Number of instalments (nper) | 48 |
| 3 | Loan amount (pv) | -300000 |
| 4 | FV | 0 |
| 5 | Type | 0 |
(iii) அறை B6 ல் கீழ்க்கண்ட சூத்திரத்தின்படி PMT கணக்கிடவும் =PMT(B1/12,B2,B3,B4,B5)
செலுத்தவேண்டியத் தொகை ரூ 7,608.78
3.
(i) உள்ளீட்டு சாதனங்கள்:
1. விசைப்பலகை
2. ஒளியியல் வருடி
3. சுட்டி
4. இயக்குபிடி
5. தொடுதிரை
6. எழுத்தாணி
(ii) வெளியீட்டு சாதனங்கள்:
1. திரையகம்
2. அச்சுப் பொறி
4.
குறிமுறையாக்கத்தின் மூன்று முறைகள் பின்வருமாறு.
(அ) தொடர்ச்சியான குறிமுறை:
1. தொடர்ச்சியான குறிமுறையில், எண்கள் மற்றும் எழுத்துக்களை அடுத்தடுத்து வரிசையாக ஒதுக்கப்படுவதாகும்.
2. இந்த குறிமுறைகள், காசோலை, இடாப்பு போன்ற பல மூல ஆவணங்களில் முதன்மையாக குறிப்பிடப்படுகிறது.
உதாரணம்;
| குறிமுறை | கணக்குகள் |
| CL001 | ABC நிறுமம் |
| CL002 | XYZ நிறுமம் |
| CL003 | மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் |
(ஆ) தொகுப்புக் குறிமுறை1. தொகுப்புக் குறிமுறையில், ஒரு குறிப்பிட்ட பரப்பு எண்களை விரும்பிய அளவிலான துணைப் பரப்புகளாகப் பிரித்தெடுக்கப்படும் மற்றும் ஒவ்வொரு துணைப் பரப்பும் ஒரு குறிப்பிட்டக் குழுவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
2. அதிகப்படியான தொகுப்பு குறிமுறை சூழ்நிலைகளில், துணை பரப்புகளில் உள்ள எண்கள் தொடர்ச்சியான குறிமுறையை தழுவிய இருக்கும்.
உதாரணம்:
| குறிமுறை | விற்பனையாளர் வகை |
| 100-199 | சிறிய விசைக் குழாய்கள் |
| 200-299 | நடுத்தர விசைக் குழாய்கள் |
| 300-399 | குழாய்கள் |
| 400-499 | பொறிகள் |
| குறிமுறை | தகவல் |
| பேபஎ | பேரேட்டு பக்க எண் |
| இஎ | இரசீ து எண் |
5.
கணினிமயக் கணக்கியல் முறையின் முக்கிய குறைபாடாக இருப்பதுயாதெனில் அவை இயங்குகின்ற சூழலைச் சார்ந்திருப்பதாகும். அவைகளில் சிலவற்றை பின்வருமாறு பட்டியலிடலாம்.
(i) அதிகப்படியான நிறுவுதல் செலவு:
அவ்வப்போது கிடைக்கக்கூடிய புதிய பாதிப்புகள் கொண்டு கணினியின் வன்பொருள் மாற்றப்படுவதன் தேவையும் மற்றும் மென்பொருளை மேம்படுத்துவதன் அவசியமும் ஏற்படுகின்றது. எனவே, அதிகப்படியான நிறுவுதல் செலவு ஏற்படுகிறது.
(ii) பயிற்சி அளித்தலின் செலவுகள்:
கணினிமயக் கணக்கியல் முறையை பயனுள்ளதாகவும், திறனுடனும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வன்பொருளின் மற்றும் மென்பொருளின் புதிய பாதிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். இவை சிறப்பு பயிற்சியின் தேவையினை ஏற்படுத்துகிறது. ஆகவே, பணியாளர்களின் பயிற்சிக்காக செலவு செய்யப்படுகின்றது.
(iii) வேலையின்மையென அச்சம்:
கண்னிமயக் கணக்கியல் முறையை அறிமுகப்படுத்துவதனால், பணியாளார்கள் தனது வேலை பறிபோகலாம் என பாதுகாப்பற்றதாக கருதி, கணினி சார்ந்த வேலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை.
6.
வணிக தேவைகளுக்கு பொருந்துவதை பொறுத்து, மென்பொருள் மூன்று வகைப்படும். அவை பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
(i) ஆயத்த மென்பொருள்:
1.இவை வணிக நிறுவனங்கள் வாங்கியவுடன் உபயோகப்படுத்தக்கூடிய தரப்படுத்தப்பட்ட அல்லது ஆயத்த தொகுப்புகள் ஆகும்.
2. இந்தத் தொகுப்புகள், சிறிய மற்றும் பாரம்பாரிய வியாபார நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன. நிறுவுதல் மற்றும் பராமாரிப்பு செலவு மிகச் குறைவு.
3. Tally, Busy, Marg மற்றும் Profitbooks என்பவை இவ்வகையிலான மென்பொருளுக்கு சில உதாரணங்களாகும்.
(ii) திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள்:
1. பலசமயங்களில் ஆயத்த மென்பொருள், வணிக நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப பொருந்துவது சாத்தியமில்லை.
2. இச்சூழ்நிலைகளில் திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள் வணிக நிறுவனத்தின் தேவைகள் பூர்த்தியடைவதற்கு உதவியாக இருக்கின்றன.
3. திருத்தியமைக்கப்பட்ட மென்பொருளை வணிகமையத்தின் தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைக்கலாம்.
(iii) உருவாக்கப்பட்ட மென்பொருள்:
1. பெரிய வணிக மையங்கள் தங்களுக்கொன்று தனிவழியான செயல்பாட்டைக் கொண்டிருக்கும்.
2. பயனுடைய மேலான்மை தகவல் முறைக்கு, சிறிய அல்லது நடுத்தர அளவிலான வணிக மையங்களிலிருந்து தேவைப்படாத, பலதரப்பட்ட மற்றும் குறிப்பிட்ட தகவல்கள் பல பயானாளிகளுக்கு அடிக்கடி தேவைப்படுகின்றன. இவ்வகையான தொகுப்புகளின் விலை மிகவும் அதிகம்.
7.
செயல்முறை
1. MS-Excel இல் புதிய விரிதாளைத் திறக்கவும்.
2. எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை உள்ளீடு செய்யவும்.
3. அறை D1 – ல் ‘Achieved‘ எனும் தரவை உள்ளீடு செய்யவும் .
4. அறை D2 – ல் கீழ்க்கண்டவற்றை தட்டச்சு செய்யவும்.
=OR(B2>=500,C2>=500)
5. அறை D2 –ல் இருக்கும் சூத்திரத்தை D3 மற்றும் D4 ல் நகல் எடுக்கவும்.
வெளியீடு
| Counter | Day 1 sales Rs | Day 2 sales Rs | Achieved |
|---|---|---|---|
| Ground Floor | 600 | 600 | TRUE |
| First Floor | 850 | 300 | TRUE |
| Second Floor | 350 | 400 | FALSE |
8.
செயல்முறை
1. MS-Excel இல் புதிய விரிதாளை திறக்கவும்.
2. எடுத்துக்காட்டில் கொடுத்துள்ள அட்டவணையை உள்ளீடு செய்யவும்.
3. அறை D1 ல் ‘Achieved’ எனும் தரவை உள்ளீடு செய்யவும்.
4. அறை D2 ல் கீழே கொடுக்கப்பட்டதை தட்டச்சு செய்யவும்.
=AND(B2>=400,C2>=400)
5. அறை D2 ல் இருக்கும் சூத்திரத்தை D3 மற்றும் D4 ல் நகல் எடுக்கவும்.
வெளியீடு
| Salesman | Day 1 Rs | Day 2 Rs | Achieved |
|---|---|---|---|
| Anand | 500 | 250 | FALSE |
| Balu | 600 | 500 | TRUE |
| Cibi | 250 | 300 | FALSE |
9.
செயல்முறை
(i) MS-Excel ல் புதிய விரிதாளைத் திறக்கவும்.
(ii) எடுத்துக்காட்டில் உள்ள தரவை அறைA1 முதல் J2 வரை உள்ளீடு செய்யவும்.
(iii) எண்கள் மட்டுமே கொண்ட அறைகளின் எண்ணிக்கையைப்க்கையைப் பெற, B3-ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்.
=COUNT(A1:J2)
(iv) ஏதேனும் ஒரு மதிப்பைக் கொண்டிருக்கும் அறைகளின் எண்ணிக்கையை பெற, B4-ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்.
=COUNTA(A1:J2)
(v) 1000 க்கு மேல் மதிப்புக் கொண்டுள்ள அறைகளின் எண்ணிக்கையை பெற, B5-ல் கீழ்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்
=COUNTIF(A1:J2,”>1000”)
விடை
(அ) 12 (ஆ) 18 (இ) 2
10.
செயல்முறை
(i) MS-Excel ல் புதிய விரிதாளைத் திறக்கவும்.
(ii) எடுத்துக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள படி அனைத்து மதிப்புகளையும் உள்ளீடு செய்யவும்.
(iii) சராசரி மதிப்பெண்ணைக் கண்டுபிடிக்க, அறை B5 -ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்.
=AVERAGE(B2:H2)
(iv) அதிகப்படியான மதிப்பெண்ணைக் கண்டுபிடிக்க, அறை B3–ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்.
=MAX(B2:H2)
(v) குறைந்த மதிப்பெண்ணைக் கண்டுபிடிக்க, அறை B4-ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை அளிக்கவும்.
=MIN(B2:H2)
விடை
சராசரிமதிப்பெண் 124, அதிகப்படியான மதிப்பெண்பெண் 204, குறைந்த மதிப்பெண் 60.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards