11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கணக்கியலின் கோட்பாடுகளில் ஏதேனும் மூன்றினை விளக்குக.
2.
கணக்கியல் தரநிலைகளின் தேவை யாது?
3.
குறிப்பு வரைக: (i) அடக்கவிலைக் கருத்து
(ii) வருவாய் தீர்வு கருத்து
4.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?
5.
முன்னெச்சரிக்கை மரபு பற்றி விளக்குக.
6.
நிலைத்தன்மை மரபு குறித்து சிறு குறிப்பு வரைக
7.
வணிகத்தன்மை கருத்து பற்றி விளக்குக.
8.
கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
9.
‘பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்’ – விவரி.
10.
பொருத்துகை கருத்து என்றால் என்ன? ஏன் ஒரு வணிக அமைப்பு இக்கருத்தைப் பின்பற்ற வேண்டும்?
1.
1. வணிகத் தனித்தன்மை கருத்து:
அ) இந்தக் கருத்தின்படி, வணிகநிறுவனம், முதல் இடுகின்ற உரிமையாளர் அல்லது உரிமையாளர்களிடமிருந்து தனித்து மற்றும் வேறுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஆ) இக்கருத்தின் அடிப்படையில் கணக்குகள், உரிமையாளரின் கண்ணோட்டத்தில் இல்லாமல் வணிக நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் தயாரிக்கப்படுகின்றன.
இ) ஆதலால், உரிமையாளரின் முதல், நிறுவனம் செலுத்த பொறுப்பாகும்.
2. பணமதிப்பீடுக் கருத்து:
அ) பணமதிப்பீட்டுக் கருத்தின்படி, எந்த நடவடிக்கைகளைப் பணத்தால் அளவிட முடியுமோ, அந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்குகளில் பதியப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
ஆ) பணமானது பரிமாற்றத்தின் ஊடகமாக விளங்குவதால் பணத்தால் அளவிடக்கூடிய நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. கணக்கியலின், அளவீட்டு அலகாக, ஒரு நாட்டினுடைய நாணயம் அமைகிறது.
3. நிறுவனத் தொடர்ச்சி கருத்து:
அ) இது ஒரு அடிப்படை கருத்து இதன்படி, ஒரு வணிக நிறுவனம் தொடரக்கூடியது மற்றும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து செயலாற்றும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
ஆ) இக்கருத்தின் அடிப்படியில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை மதிப்பீடு செய்தல், நிலைச்சொத்தின் மீதான தேய்மானம், கொடுபட வேண்டிய மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள், பெற வேண்டிய மற்றும் கூட்டியுள்ள வருமானம் போன்றவைகளின் கணக்கியல் வழிமுறைகள் மேற்கொள்கின்றன.
2.
கணக்கியல் தரநிலைகளின் தேவைகள்:
(i) நிதிநிலை அறிக்கைகளை நன்கு புரிந்து கொள்வதற்கு.
(ii) கணக்காளர் ஒரே மாதிரியான செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு.
(iii) இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வணிக அமைப்புகளின் நிதிநிலை அறிக்கைகளை பயன்தருமுறையில் ஒப்பீடு செய்வதை எளிதாக்குவதற்கு.
(iv) நிதிநிலை அறிக்கையின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கு.
(v) சட்டத் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு.
3.
(i) அடக்கவிலைக் கருத்து:
(1) வணிகத்தில் ஒரு சொத்தானது புராதன அடக்கவிலையில் அதாவது வாங்கிய விலையில் பதிவு செய்யப்படுகிறது.
(2) அடக்கவிலையே அனைத்து தொடரும் கணக்கியலுக்கும் அடிப்படையாக அமையும்.
(3) இது, சொத்துகள் எப்போதுமே அடக்க விலையில் காண்பிக்கப்படும் என்று பொருளாகாது.
(4) சொத்து வாங்கும் பொழுது அடக்கவிலையில் பதிவு செய்யப்பட்டு முறையாகத் தேய்மானம் புத்தக மதிப்பிலிருந்து கழிக்கப்பட்டு காண்பிக்கப்படுகிறது.
(ii) வருவாய் தீர்வு கருத்து:
(1) வருவாய் தீர்வு கருத்தின்படி, ஒரு சொத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றம், அச்சொத்துக்கள் வணிகத்தால் தீர்வு செய்யப்படும் போது மட்டுமே பதிவு செய்யப்படும்.
(2) புராதன அடக்க விலையில் சொத்துக்கள் பதிவு செய்தால், சொத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் அச்சொத்து தீர்வு செய்யும் போது மட்டுமே கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும்.
4.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள்:
அ) பணவீக்க காலத்தில், பொருட்களின் விலை அதிகரிக்கும், போது சொத்துக்களைப் புராதன அடக்க விலையில் மதிப்பிடுவது வணிகத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிப்பதில்லை.
(ஆ) புராதன அடக்க விலையில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால், வெவ்வேறு நாட்களில் நிறுவப்பட்ட வணிக அமைப்புகளின் முடிவுகளை ஒப்பீடு செய்ய முடியாது.
(இ) மனித வளங்கள் போன்ற அடக்க விலையில் மதிப்பிட முடியாத சொத்துக்களை இக்கருத்தின் கீழ் அங்கீகரிக்க முடிவதில்லை.
5.
1. இது எச்சரிக்கையாக அல்லது பாதுகாப்பாக செயல்படும் கொள்கையாகும்.
2. இக்கொள்கையின்படி வணிக நடவடிக்கைகள் பதியும் போது இலாபத்தை எதிர்நோக்காமால் ஆனால் அனைத்து எதிர்பார்க்கும் நட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
3. எடுத்துக்காட்டாக, இறுதி சரக்கிருப்பு அடக்கவிலை அல்லது சந்தைவிலை இதில் எது குறைவாக உள்ளதோ அதை கருத்தில் கொள்ள வேண்டும்.
4. இக்கருத்தின்படி எந்தவொரு மதிப்பின் அதிகரிப்பும், பெறப்படாத நிலையில் கணக்கில் கொண்டு வரக்கூடாது.
5. உருவாகாத ஆதாயத்தை எதிர்நோக்கக்கூடாது.அனால் நாட்டம் ஏற்பட வாய்ப்பிருந்தால் அதற்கு ஒருக்கீடு செய்ய வேண்டும்.
6.
1. கணக்கியல் கொளகையும், நடைமுறைகளும் தொடர்ச்சியாக ஒரு கணக்காண்டிலிருந்து மற்றொரு கனகாந்திற்கும் பின்பற்றப்படும் என்பதை இம்மரபு தெரிவிக்கிறது.
2. ஒரே விதமான கணக்கியல் கொளகைகள் பின்பற்றப்பட்டால் தான் வெவ்வேறு ஆண்டுகளின் முடிவுகளை ஒப்பீடு செய்ய முடியும்.
3. உதாரணமாக, ஒரு நிறுவனம், நிலைச்சொத்து வாகியதிலிருந்தே நேர்கோட்டு தேய்மான முறையைப் பின்பற்றினால், தொடர்ச்சியாக அதையே பின்பற்ற வேண்டும்.இருப்பினும், இதனை மாற்றம் செய்யவே முடியாது எனப் பொருள் கொள்ள இயலாது.
பின்வரும் சூழ்நிலைகளில் கணக்கியல் கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கலாம்.
1. சட்டத் தேவையைப் பூர்த்தி செய்ய.
2. கணக்கியல் தர நிர்ணயங்களுக்கு இணங்க
3. வணிகத்தின் உண்மையான மற்றும் நேர்மையான நிலையைப் பிரதிபலிக்க.
7.
1. இந்த கருத்தின்படி வணிக நிறுவனம், முதல் இருக்கின்ற உரிமையாளர் அல்லது உரிமையாளர்களிடமிருந்து தனித்து மற்றும் வேறுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
2. இக்கருத்தின் அடிப்படையில் கணக்குகள், உரிமையாளரின் கண்ணோட்டத்தில் இல்லாமல் வபாணிக நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் தயாரிக்கப்படுகின்றன.ஆதலால் உரிமையாளரின் முதல், நிறுவனம் செலுத்த வேண்டிய ஒரு பொறுப்பாகும்.
3. இந்த கருத்தின்படி கணக்கு ஏடுகளில், வணிக நடவடிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.உரிமையாளரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் வணிகத்தில் அவர் பங்களித்த முதல், மற்றும் சொந்த உபயோகத்திற்கு வணிகத்திலிருந்து எடுத்த ரொக்கம் போன்ற நடவடிக்கைகள் கணக்கேடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும்.
8.
கணக்கியலில் பின்பற்ற வேண்டிய கட்டமைப்பையும் விதிகளையும், கணக்கியல் தரநிலைகள், தருவதால் வெவ்வேறு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை ஒப்பீடு செய்ய முடிகிறது நிதிநிலை அறிக்கை தயார் செய்வதில் நிலைத்தன்மை, ஒப்பீட்டு தன்மை, நிறைவுத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு கணக்கியல் கோட்பாடுகளை தர நிர்ணயம் செய்வது அவசியமாகிறது.
கோங்லர் என்பவற்றின் கூற்றுப்படி, "பொதுக் கணக்காளர் மற்றும் கணக்காளர்களின் நலனுக்காக வழங்கும் சட்டம் மற்றும் தொழில்சார் அமைப்புகளால் பொதுவாக உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளே கணக்கியல் தரநிலையாகும்."
கணக்கியல் தரநிலைகள் என்பது கணக்கியல் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை அடையாளம் கண்டு, அளவிட்டு, பதிவு செய்து, தகவல்களை நிதி அறிக்கை வாயிலாக வெளிப்படுத்துவதற்காக கணக்கியல் வல்லுநர் குழு அல்லது அரசு அல்லது பிற ஒழுங்காற்று அமைப்புகளால் வெளியிடப்படும் கொள்கை ஆவணங்களாகும்.
9.
எந்த நடவடிக்கைகளை பணத்தால் அளவிட முடியுமோ, அந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்குகளில் பதியப்பட வேண்டும் என்பது பணமதிப்பீட்டு கருத்து ஆகும்.
பணமானது பரிமாற்றத்தின் ஊடகமாக விளங்குவதால் பணத்தால் அளவிடக்கூடிய நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.கணக்கியலின், அளவிட்டு சுலபமாக ஒரு நாட்டினுடைய நாணயம் அமைகிறது.
பணத்தால் அளவிட முடியாத நடவடிக்கைகளை ஏடுகளில் பதியப்படுவது இல்லை. உதாரணமாக உற்பத்தி மேலாளர்க்கும், விற்பனை மேலாளர்க்கும் இடையேயான மனக்கசப்பினால் தொழில் பாதிக்கப்படுகிறது.
இந்நடவடிக்கைகள் ஏடுகளில் பதிவு செய்யப்படுவது இல்லை.ஏனென்றால் இதனை பணத்தால் அளவிட முடியாது.
பணம் ஒரு பொதுவான அளவீடாக இருப்பதால், பலதரப்பட்ட வணிக விவரங்களை அதன் மூலம் பதிவு செய்ய முடிகிறது.உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் 5 கணிப்பொறிகள், 2, மேசைகள், 3 நாற்காலிகள் அஆகிய சொத்துக்கள் உள்ளன. அவை கணிப்பொறிகள் ரூ.1,00,000/-, மேசை ரூ.10,000/-. நாற்காலிகள் ரூ.1,500/- என்ற பணமதிப்பில் குறிப்பிடவில்லையெனில், அச்சொத்துக்களை கூட்டுவது பயனுள்ள தகவலாக இருக்காது.
10.
ஒரு குறிப்பிட்ட கணக்காண்டின் ஈட்டிய வருவாய் அக்கணக்காண்டின் செலவு அடங்களோடு ஒப்பிட்டு வியாபாரத்தின் முடிவை அறிவதே பொறுத்துகைக் கருது எனப்படுகிறது.
இது நிகழ்வு தீர்வு கருது மட்டும் கணக்கியல் காலா கருத்தினை அடிப்டையாகக் கொண்டதாகும்.
குறிப்பிட்ட ஆண்டில் மேற்கொள்ளப்படாமல் அந்த கணக்காண்டிற்குரிய செலவுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இக்கருத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டிய மற்றும் முன் கூட்டித் செலுத்திய செலவுகள் மற்றும் பெற வேண்டிய அல்லது முன்கூட்டிப் பெட்ரா வருமானங்கள் பான்ழவற்றிக்கு சரிக்கட்டுதல்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாறாக இலாபநட்டப் பகிர்வுக்கு முன் ஒரு கணக்காண்டில் ஈட்டிய வருவாய், அவ்வாண்டில் அவ்வருவாயை ஈட்ட செய்த செலவுகளோடு ஒப்பீடு செய்வதன் மூலம் துல்லிய இலாபத்தை கணக்கிட முடியும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards