11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
திலக் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்த இலாபம் | 1,00,000 | வட்டி பெற்றது | 6,000 |
| வாடகை செலுத்தியது | 22,000 | வாராக்கடன் | 2,000 |
| சம்பளம் | 10,000 | வாரா ஐயக்கடன் ஒதுக்கு (1.4.2016) | 4,000 |
| கழிவு (வ) | 12,000 | பற்பல கடனாளிகள் | 40,000 |
| தள்ளுபடி பெற்றது | 2,000 | கட்டடம் | 80,000 |
| காப்பீட்டு முனைமம் செலுத்தியது | 8,000 |
சரிக்க ட்டுதல்க ள்:
(அ) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 4,000
(ஆ) பதினொரு மாதங்களுக் குரிய வாடகை செலுத்தப்பட்டது.
(இ) கூடியுள்ள வட்டி ரூ 2,000
(ஈ) கட்டடம் மீது 10% தேய்மானம் நீக்குக
(உ) கூடுதல் வாராக்கடன் ரூ 3,000 மற்றும் பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
(எ) முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ 2,000.
2.
2016, மார் ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின் ஒரு பகுதி
| விவரம் | பற்று ரூ | வரவு ரூ |
|---|---|---|
| பற்பல கடனாளிகள் | 1,04,000 | |
| வாராக்கடன் | 5,000 | |
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 2,000 |
சரிக்கட்டுதல்கள்:
(i) கூடுதல் வாராக்கடன் ரூ 4,000
(ii) பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.
தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தந்து இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
3.
2016, டிசம்பர் 31ஆம் நாளைய இருப்பாய்வின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது.
| விவரம் | ரூ |
|---|---|
| பற்பல கடனாளிகள் | 20,000 |
| வாராக்கடன் | 500 |
சரிக்கட்டுதல்: கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும், சரிக்கட்டுப் பதிவு தந்து, இவ்விவரம் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
4.
_______ என்பது ஒரு கடனாளி தன் கடன் தொகையைச் செலுத்தத் தவறுவதால் ஏற்படும் இழப்பாகும்.
வாராக்கடன்
கடன்
பற்பல கடனாளிகள்
வாராஐயக்கடன் ஒதுக்கு
5.
இறுதிக் கணக்குகள் தயார் செய்யப்படுகையில், சரிக்கட்டுதலில் தரப்படும் அனைத்து இனங்களும் _______ தோன்றும்.
ஒரு இடம்
இரு இடங்களில்
மூன்று இடங்களில்
இவை எதுவுமில்லை
6.
31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________.
ரூ 5,40,000
ரூ 40,000
ரூ 10,000
ரூ 5,10,000
7.
பெற வேண்டிய பங்காதாயம் இருப்பு நிலைக்குறிப்பில் எங்குக் காட்டப்பட வேண்டும்?
பற்றுப் பக்கத்தில்
பொறுப்புக்கள் பக்கத்தில்
சொத்துக்கள் பக்கத்தில்
இவை எதுவுமில்லை
8.
வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.
வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
9.
முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.
இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
மேற்கண்ட இரண்டிலும்
மேற்கண்ட எதுவுமில்லை
10.
இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது.
அடக்க விலையில்
சந்தை விலையில்
அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்
அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
11.
நிகர இலாபம்.
முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்
எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்
12.
முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.
வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்
இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
13.
வாராக்கடன் என்றால் என்ன?
14.
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் யாவை?
15.
கூடியுள்ள வருமானம் என்றால் என்ன?
16.
17.
சரிக்கட்டுப் பதிவுகள் என்றால் என்ன?
18.
கீழ்க்கண்ட விவரங்கள் இருப்பாய்விலிருந்து பெறப்பட்டன:
| விவரம் | பற்று ரூ | வரவு ரூ |
|---|---|---|
| பற்பல கடனாளிகள் | 30,000 | |
| பெற்ற தள்ளுபடி | 1,000 |
இவ்விவரங்கள் இலாப நட்டக் கணக்கிலும் இருப்புநிலைக்குறிப்பிலும் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்
19.
முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீது வட்டி குறித்து சரிக்கட்டுப் பதிவுகள் தருக.
20.
வாரா ஐயக்கடன் ஒதுக்கு என்றால் என்ன? ஏன் அது உருவாக்கப்பட வேண்டும்?
21.
இறுதிக் கணக்குகள் தயாரிக்க வேண்டியதன் தேவை யாது?
22.
கூலி
23.
வட்டி பெற்றது
24.
வாடகை
25.
இறுதி சரக்கிருப்பு
1.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| வாடகை | 22,000 | மொத்த இலாபம் கீ/க | 1,00,000 | ||
| கழிவு | 12,000 | ||||
| கூட்டுக: கொடுபட வேண்டியது (22000 x 1/11) | 2,000 | 24,000 | |||
| சம்பளம் | 10,000 | கழிக்க: முன்கூட்டிப் பெற்றது | 2,000 | 10,000 | |
| கூட்டுக: கொடுபட வேண்டியது | 4,000 | 14,000 | பெற்ற தள்ளுபடி | 2,000 | |
| காப்பீட்டு முனைமம் | 8,000 | பெற்ற வட்டி | 6,000 | ||
| கழிக்க: முன்கூட்டிச் செலுத்தியது | 2,000 | 6,000 | கூட்டுக: கூடியுள்ள வட்டி | 2,000 | 8,000 |
| ஐயக்கடன் ஒதுக்கு (இறுதி) | 1,900 | ||||
| கூட்டுக: வாராக்கடன் | 2,000 | ||||
| கூட்டுக: கூடுதல் வாராக்கடன் | 3,000 | ||||
| 6,900 | |||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு (தொடக்கம்) | 4,000 | 2,900 | |||
| கட்டடம் மீதான தேய்மானம் (80,000 x 10/100) | 8,000 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக் கிற்குமாற்றப்பட்ட து) | 65,100 | ||||
| 1,20,000 | 1,20,000 |
குறிப்பு:
பற்பல கடனாளிகள் : 40,000
கழிக்க: கூடுதல் வாராக்கடன்: 2,000
: 38,000
வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% : 38,000 × 5% = ரூ 1,900
2.
குறிப்பு:
| விவரம் | ரூ |
|---|---|
| பற்பல கடனாளிகள் | 1,04,000 |
| கழிக்க: கூடுதல் வாராக்கடன் | 4,000 |
| 1,00,000 |
வாரா ஐயக்கடன் ஒதுக்கு = ரூ 1,00,000 x 5/100 = ரூ 5,000
| 2016 டிச. 31 | வாராக்கடன் க/கு பற்பல கடனாளிகள் க/கு (வாராக்கடன் போக்கெழுதியது) |
ப | 4,000 | 4,000 | |
| டிச. 31 | வாரா ஐயக்கடன் ஒதுக்கு வாராக்கடன் க/கு (வாராகடன், வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கிற்கு மாற்றப்பட்டது) (5000 + 4000) |
ப | 9,000 | 9,000 | |
| டிச. 31 | இலாப நட்டக் க/கு வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு (வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கப்பட்டது) (9000 + 5000 – 2000 = 12,000) |
ப | 12,000 | 12,000 |
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| வாரா ஐயக்கடன் ஒதுக் கு (இறுதி) | 5,000 | ||||
| கூட்டுக: வாராக்கடன் | 5,000 | ||||
| கூட்டுக: கூடுதல் வாராக்கடன் | 4,000 | ||||
| 14,000 | |||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு (தொடக்கம்) | 2,000 | 12,000 | |||
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனாளிகள் | 1,04,000 | ||||
| கழிக்க: கூடுதல் வாராக்கடன் | 4,000 | ||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு (இறுதி) | 5,000 | 95,000 | |||
3.
வாரா ஐயக்கடன் ஒதுக்கு = ரூ. 20,000 x 5/100 = ரூ. 1,000
| நாள் | விவரம் | பே. ப.எ. |
பற்று ரூ |
வரவு ரூ |
|---|---|---|---|---|
| 2016 | இலாப நட்டக் க/கு ப | 1,000 | ||
| டிச. 31 | வாரா ஐயக்கடன் ஒதுக்கு க/கு | 1,000 | ||
| (5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கியது) |
ப 2016 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய இலாப நட்டக் கணக்கு வ
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| வாராக்கடன் | 500 | ||||
| கூட்டுக: வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 1,000 | 1,500 | |||
| பொறுப்புகள் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனாளிகள் | 20,000 | ||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 1,000 | 19,000 | |||
4.
(a)
வாராக்கடன்
5.
(b)
இரு இடங்களில்
6.
(c)
ரூ 10,000
7.
(c)
சொத்துக்கள் பக்கத்தில்
8.
(d)
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
9.
(c)
மேற்கண்ட இரண்டிலும்
10.
(d)
அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
11.
(b)
முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
12.
(c)
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
13.
கடன் விற்பனைக்குப் பின்,வாடிக்கையாளர் அல்லது கடனாளிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய தொகை,நிச்சயமாக கிடைக்கப் பெறாது என தெரிய வந்தால் அதனை வாராக்கடன் என கருதலாம்.வேறு வகையில் சொல்ல வேண்டுமானால்,கடனாளிகளிடமிருந்து திரும்பப் பெற இயலாத கடன், வாராக்கடன் எனப்படும்.
14.
சரிக்கட்டுதல்களுடன் சேர்த்து இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான கோட்பாடுகள் பின்வருமாறு:
(i) வருவாய்த் தீர்வுக் கோட்பாடு
இக்கோட்பாட்டின்படி,ஒரு குறிப்பிட்ட ஆண்டின் வருவாய் என்பது எந்த ஆண்டில் அது ஈட்டப்பட்டதோ அந்த ஆண்டில் தான் அது தீர்வு செய்யப்பட வேண்டும்.
(ii) பொருந்துகைக் கோட்பாடு
ஒரு ஆண்டில் பெறப்பட்ட வருமானத்தை அந்த ஆண்டின் செலவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆகும்.
15.
நடப்பு ஆண்டில் ஈட்டப்பட்ட ஒரு வருமானம் அல்லது அதில் ஒரு பகுதி, அக்கணக்காண்டின் இறுதி வரை பெறப்படாமலே இருந்தால், அது கூடியுள்ள வருமானம் அல்லது பெற வேண்டிய வருமானம் அல்லது ஈட்டியும் பெறாமல் உள்ள வருமானம் பெற வேண்டிய வருமானங்களுக்குப் பொருந்தும் .
16.
17.
கொடுபடவேண்டிய செலவினங்கள், முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள், பெறவேண்டிய வருமானங்கள் மற்றும் முன்கூட்டிப் பெற்ற வருமானங்கள் போன்ற இருபாய்வில் அக்கணக்காண்டின் இறுதியில் எடுத்துக் கொள்ளப்படாத நடவடிக்கைகளுக்காக செய்யப்படும் குறிப்பேட்டுப் பதிவே சரிகட்டுப் பதிவு எனப்படும்.
18.
| விவரம் | தொகை ரூ | தொகை ரூ | விவரம் | தொகை ரூ | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தள்ளுபடி பெற்றது க/கு | 1,000 |
| பொறுப்புகள் | தொகை ரூ | தொகை ரூ | சொத்துக்கள் | தொகை ரூ | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 30,000 |
19.
முதல் மீது வட்டி:
| விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|
| முதல் மீது வட்டி க/கு | ப | xxx | ||
| முதல் க/கு | xxx | |||
| (முதல் மீது வட்டி சரிக்கட்டப்பட்டது) |
எடுப்புகள் மீது வட்டி:
| விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|
| முதல் க/கு | ப | xxx | ||
| எடுப்புகள் மீது வட்டி க/கு | xxx | |||
| (எடுப்புகள் மீது வட்டி சரிக்கப்படப்பட்டது) |
20.
(i) எதிர்காலத்தில் வாராக்கடனால்ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய இலாபம் கணக்கிடுவதற்கு முன் உருவாக்கப்படும் ஒரு தொகையே வாரா ஐயக்கடன் ஒதுக்கு எனப்படும்.
(ii) கணக்காண்டு இறுதியில் சில கடன்கள் ஐயப்பாடு உடையதாக இருக்கலாம். அதாவது, கடனாளிகளிடமிருந்து வரவேண்டிய தொகை பெறலாம் அல்லது பெற முடியாமல் போகலாம். காரணம், கடனாளிகளுக்கு செலுத்தக்கூடிய திறன் இல்லாமல் போகலாம் அல்லது ஏமாற்றுவதற்காகக் கூட இருக்கலாம்.
(iii) வாராக்கடன் தோன்றும் போது அதனை வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கிற்கு மாற்றப்பட வேண்டுமே அன்றி இலாபநட்டக் கணக்கிற்கு மாற்றக் கூடாது.
(iv) இது முன்னெச்சரிக்கை மரபின்படி செய்யப்படுகிறது.
(v) மேலும், பொருத்துகைக் கோட்பாட்டின்படி, அனைத்து செலவினங்களும் அந்த ஆண்டின் வருமானத்திலிருந்தே சரி செய்யப்பட வேண்டும் என்பதற்க்காகவும் செய்யப்படுகிறது.
(vi) எனவே, நடப்பு ஆண்டுக்குரிய ஒதுக்குகள், நடப்பு ஆண்டு கடனாளிகளிலிருந்து உருவாக்க வேண்டும் என்பது பொருத்தமானதாக இருக்கும்.
21.
(i) இறுதிக் கணக்குகளின் முதன்மைப் பணியானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொழிலின் உண்மையான மற்றும் நியாயமான இலாபத் தன்மை மற்றும் நிதிநிலை ஆகியவற்றை வெளிக்காட்டுவதாகும்.
(ii) இருப்பாய்வில் தோன்றக் கூடிய, ஒரு குறிப்பிட்ட கணக்கியல் காலத்தின் முழுமைக்குமான பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகளை அடிப்படையாகக் கொண்டு இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
(iii) இறுதிக்கணக்குகளை தயாரிக்கும் பொழுது முழுமையான ஒரு கணக்கியல் காலத்திற்குரிய செலவுகளையும் வருமானங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
22.
வியாபாரக் கணக்கின் பற்றுபக்கம்
23.
இலாப நட்ட கணக்கின் வரவு
24.
இலாப நட்டக் கணக்கின் பற்றுப்பக்கம்
25.
வியாபாரக் கணக்கின் பற்றுபக்கம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards