11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
சில்லறை ரொக்க ஏட்டின் வகைகள் யாவை?`
2.
ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?
3.
வங்கி சரிகட்டும் பட்டியலின் தேவை யாது?
4.
வைப்புச் சீட்டு என்றால் என்ன?
5.
விடுபிழை என்றால் என்ன?
6.
இருப்பாய்வு என்றால் என்ன?
7.
கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக.
8.
கணக்கேடுகள் பராமரிப்பின் நோக்கங்கள் யாவை?
9.
கணக்கு என்றால் என்ன?
10.
வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?
11.
கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?
12.
இருப்பாய்வு தயாரிக்கப்பட வேண்டி உள்ளது எனக் கருதி கீழ்க்கண்ட பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) விற்பனை ஏட்டில் ரூ.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) கொள்முதல் ஏட்டில் ரூ.600 குறைவாகக் கூட்டப்பட்்பட்டுள்ளது.
(ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.700 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(உ) பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு ஏட்டில் ரூ.800 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது
13.
இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) விற்பனை ஏட்டின் மொத்த தொகையில் ரூ.100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) கொள்முதல் திருப்ப ஏட்டின் மொத்தத்தில் ரூ.200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது
14.
வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.
15.
தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?
16.
பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
(i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
(ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
(iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.
17.
பின்வரும் பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தவும்.
(அ) பெற்ற வாடகைவாடகைக் கணக்கின் கூட்டுத்தொகை ரூ.900 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஆ) பெற்ற வாடகைவாடகைக் கணக்கின் கூட்டுத்தொகை ரூ.1,000 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) சம்பள சம்பளக் கணக்கின் கூட்டுத் தொகை ரூ.1,100 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஈ) சம்பள சம்பளக் கணக்கின் கூட்டுத் தொகை ரூ.1,200 கூடுதலாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
18.
கீழ்க்காணும் பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவைகளைத் திருத்தவும்.
(அ) கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகையை அடுத்த பக்கத்திற்கு எடுத்து எழுதும் போது ரூ.100 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஆ)கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத் தொகையைகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.200 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) விற்பனை ஏட்டின் கூட்டுத் தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.300 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் போது ரூ.400 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது
19.
20.
ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
21.
சொத்து கணக்கு என்றால் என்ன?
22.
கணக்கியலில் முழு வெளியீட்டு கொள்கை என்றால் என்ன?
23.
ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?
24.
தனிப்பத்தி ரொக்க ஏட்டின் படிவம் தருக.
25.
கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைப் கூறுக.
1.
1.சாதாரண சில்லறை ரொக்க ஏடு.
2. பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏடு.
2.
1. கடனுக்கு பொருள்களை விற்பனை செய்யும் பொழுது வாடிக்கையாளர் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் பணத்தைச் செலுத்தும் ஒரு வசதியை பெறுகிறார். வாடிக்கையாளர் தவணை நாளுக்குள் தொகையைச் செலுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்தள்ளுபடி ரொக்கத் தள்ளுபடி எனப்படுகிறது.
2. இது இடர்ப்பில் காட்டப்பட மாட்டாது. ரொக்கத் தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகிறது.
3.
1. ரொக்க ஏட்டில் வங்கியின் நடவடிக்கைக் குறித்து ஆர்ப்பாட்ட பிழைகள் ஏற்பட்ட எளிதாக கண்டற முடியும்.
2. தொடர்ச்சியாக வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படும் போது மோசடிகள் தவிர்க்கப்படிகின்றன.
3. கணக்காளர் பணியில் மறைமுகக் கட்டுப்பாட்டினை உருவாகுகிறது.
4. வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதன் வாயிலாக வசூலாகாத காசோலைகள் இனங்கண்டு கொண்டு வசூலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
4.
வங்கியில் ரொக்கம் அல்லது காசோலையை செலுத்தும் போது, வாடிக்கையாளரால் ஒரு படிவம் பூர்த்தி செய்யபட்டு ரொக்கம் அல்லது காசோலையுடன் வங்கியரிடம் அளிக்கப்படுகிறது. இந்தப் படிவத்தை செலுத்துச்சீட்டு அல்லது வைப்புச்சீட்டு என்று கூறுவர்.
5.
கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே விடு பிழை எனப்படும். அது முழு விடு பிழையாகவோ அல்லது பகுதி விடு பிழையாகவோ இருக்கலாம்.
6.
இருப்பாய்வு என்பது பேரேட்டில் உள்ள அனைத்து கணக்குகளின் பற்று மற்றும் வரவு இருப்புகளைக் காட்டும் ஒரு அறிக்கை ஆகும்.
7.
கணக்கியலில், கணினி பொதுவாக கீழ்கண்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
(அ) வணிக நடவடிக்கைகள் பதிவு செய்தல்
(ஆ) சம்பளப் பட்டியலில் கணக்கிடுதல்
(இ) பண்டக சாலை கணக்கியல் மற்றும்
(ஈ) கணக்கியல் அறிக்கைகள் உருவாக்குதல்
8.
1. அனைத்து வணிக நடவடிக்கைகளையும் காலவரிசைப்படி உரிய தலைப்புகளில் பதிவு செய்து முழுமையான மற்றும் நிலையான ஆவணங்களாக வைத்திருத்தல்.
2. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வணிகத்தின் இலாபம் அல்லது நடத்தை கணக்கிட உதவும்.
3. நிதிநிலையை அறிய உதவும்.
4. வணிக வளர்ச்சியை அறிதல்
5. செலுத்த வேண்டிய வரியினைக் கண்டறிதல்
6. சட்டத் தேவைகளை பூர்த்தி செய்தல்
9.
ஒரு வியாபார அமைப்பிற்கும் அதன் வாடிக்கையாளருக்கும் இடையே நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகளின் தொகுப்பே கணக்கு எனப்படும். ஒரு நபர், சொத்து, செலவு மற்றும் வருவாய் ஆகியவற்றிக்கு தனித்தனியாக கணக்குகள் துவக்கப்படும்.
கணக்குகள் மூன்று வகைப்படும்.
1. ஆள்கார் கணக்குகள்,
2. சொத்துக் கணக்குகள்
3. பெயரளவுக் கணக்குகள்.
10.
வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள்
(i) மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம் பற்றிய தகவல்களைத் தருகிறது
(ii) வரக்கூடிய நட்டங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
(iii) நேரடிச் செலவுகள் மற்றும் நேரடி வருமானங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறது.
11.
(i) கணினிமயக் கணக்கியல் முறை என்பது, கணினியை பயன்படுத்தி கணக்குகளைப் பராமரிக்கும் முறை ஆகும்.
(ii) இது, கணக்கேடுகள் பாராமரிப்பு மற்றும் அறிக்கைகள் தயாரிப்பதற்கு ஏற்ப கணக்கியல் நடவடிக்கைகளை, வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டு செயல்முறைக்குள்ளாகுபடுவதை உள்ளடக்கியதாகும்.
12.
அ. விற்பனை கணக்கில் ரூ.400 வரவு வைக்க வேண்டும்
ஆ. விற்பனைத் திருபக் கணக்கில் ரூ.500 வரவு வைக்க வேண்டும்
இ. கொள்முதல் கணக்கில் ரூ.600 பற்று வைக்க வேண்டும்
ஈ. கொள்முதல் திருபக் கணக்கில் ரூ.700 பற்று வைக்க வேண்டும்
உ. பெறுதற்குரிய மாற்றுசீட்டு பற்று வைக்க வேண்டும்
13.
அ. விற்பனை கணக்கில் ரூ.100 வரவு வைக்க வேண்டும்
ஆ. கொள்முதல் திருப்பக் கணக்கில் ரூ.200 பற்று வைக்க வேண்டும்.
14.
(i) வணிகத்தின் வழக்கமான நடைமுறைகளிலிருந்து பெறக்கூடிய வருமானங்கள் வருவாயின வரவுகளாகும்.
(ii) இது திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையது. இவ்வாறு பெறப்படும் தொகையானது பொதுவாக சிறிய அளவிலான தொகையாக இருக்கும்.
உதாரணங்கள்
1. சரக்கு விற்பதனால் கிடைக்கும் தொகை
2. முதலீடுகள் மீது பெற்ற வட்டி
15.
கீழ்கண்டவைகள் தேய்மானம் கணக்கிடுவதற்கான பல்வேறு முறைகள்:
(i) நேர்க்கோட்டு முறை அல்லது நிலைத்தவணை முறை அல்லது ஆரம்ப அடக்கவிலை முறை.
(ii) குறைந்து செல் மதிப்பு முறை அல்லது குறைந்து செல் இருப்பு முறை
(iii) ஆண்டுகளின் இலக்கங்களின் கூட்டுத்தொகை முறை
(iv) இயந்திர மணி நேர வீத முறை
(v) வெறுமையாதல் முறை
(vi) ஆண்டுத் தொகை முறை
(vii) மறுமதிப்பீட்டு முறை
(viii) ஈடு நிதி முறை
(ix) காப்பீட்டு முனைம முறை
16.
(i) பேரளவிலான விளம்பரச் செலவின் பயன் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்காண்டுகளுக்கு நீடிக்கும். இச்செலவு புலனாகும் / புலனாகாச் சொத்துக்களை உருவாக்கவில்லையென்றாலும் இது நீள்பயன் வருவாயினச் செலவாகும்.
(ii) இயந்திரத்தைப் பயன்படுத்த தயாராக்குவதற்கு செய்யப்படும் செலவுகள் முதலினச் செலவுகளில் அடங்கும்.
(iii) இயந்திரம் வாங்கி, அதனைத் தோழிற்சாலைக்கு கொண்டு வந்து பயன்படுத்தும் வரையிலான செலவுகள் முதலினச் செலவுகளாகும்.
17.
| அ | பெற்ற வாடகைக் கணக்கில் ரூ.900 வரவு வைக்க வேண்வேண்டும். |
| ஆ | பெற்ற வாடகைக் கணக்கில் ரூ.1,000 பற்று வைக்க வேண்டும். |
| இ | சம்பளக் கணக்கில் ரூ.1,100 பற்று வைக்க வேண்டும். |
| ஈ | சம்பளக் கணக்கில் ரூ.1,200 வரவுவைக்க வேண்டும் |
18.
| அ | கொள்முதல் கணக்கில் ரூ.100 பற்று வைக்க வேண்டும் |
| ஆ | கொள்ள்முதல் திருப்பக் கணக்கில் ரூ.200 பற்று வைக்க வேண்டும். |
| இ | விற்பனைக் கணக்கில் ரூ.300 பற்று வைக்க வேண்டும் |
| ஈ | விற்பனைத் திருப்பக் கணக்கில் ரூ.400 பற்று வைக்க வேண்டும் |
19.
20.
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்கு எனப்படும். இது
1. தனி நபர்
2. சட்டமுறை அமைப்பு
3. பிரதிநிதித்துவ அமைப்பு
என மூன்று வகையாக பிரிக்கப்படும்.
21.
வணிக நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் உடைமைகள் சார்ந்த கணக்குகள் சொத்து கணக்குகள் எனப்படுகின்றன.
சொத்துக் கணக்கானது:
(i) புலனாகும் சொத்து கணக்கு:
பார்க்க கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய சொத்துக்கள். எ.கா .: நிலம், கட்டிடம்
(ii) புலனாக சொத்து கணக்கு:
பார்க்க முடியாத மற்றும் தொட்டுணர முடியாத சொத்துக்கள்.எ.கா.: நற்பெயர், காப்புரிமை என இருவகைப்படும்.
22.
கணக்கு அறிக்கைகள் அனைவர்க்கும் முக்கிய தகவல்களை முழுமையாக வெளியிட வேண்டும்.இதன் அடிப்படையில் ஆர்வமுள்ளவர்கள் தக்க முடிவினை எடுப்பதற்கு உகந்த வகையில் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வகையான விளக்கத்துடன் நேர்மையானதாகவும், முழுமையானதாகவும் கூடிய கணக்கியல் தகவல்களை தர வேண்டும்.
23.
(1) குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னரோ சரியாக தொகையை திரும்பச் செலுத்தும் நபர்களுக்கு கலங்க கூடிய தள்ளுபடி ரொக்கத் தள்ளுபடி ஆகும்.
(2) கடனீந்தோருக்கு தள்ளுபடி அளித்தது (நட்டம்) என்றும் மற்றும் கடனை திரும்பச் செலுத்தும் கடனாளிக்கு தள்ளுபடி பெற்றது (ஆதாயம்) என்றும் எடுத்துக் கொள்ளப்டுகிறது.
24.
| நாள் | பெறுதல்கள் | இ.எண் | பே. ப.எண் | தொகை ரூ. | நாள் | செலுத்தல்கள் | சா. சீ. எண் | பே. ப.எண் | தொகை ரூ. |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| (1) | (2) | (3) | (4) | (5) | (6) | (7) | (8) | (9) | (10) |
25.
நிறுவனத்தை அளவில்
நிறுவனத்தின் எதிர்கால செயல்திறனை முன்னறிதல்
திட்டமிட்ட செயல்திறனை நிகழ்ந்த செயல் திறனுடன் ஒப்பிடுதல்
நிறுவன செய்ல்பாடுகள் குறித்து எளிதாக முடிவெடுத்தல்.
வணிக நடவடிக்கைகளின் கட்டுப்பாடு
அரசுக்கு உதவி புரிதல்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards