11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/12/2018
11th Accountancy- Important 2 mark questions
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ரொக்கச் சீட்டு பற்றி குறிப்பு எழுதுக.
2.
வங்கிச் செல்லேடு என்றால் என்ன?
3.
மறுக்கப்படுதல் என்றால் என்ன?
4.
புதுப்பித்தல் என்றால் என்ன?
5.
மறு மதிப்பீட்டு முறை குறிப்பு வரைக.
6.
நிலைத் தவணை முறை என்றால் என்ன?
7.
குறிப்பு வரைக: (i) ரொக்க நடவடிக்கை
(ii) கடன் நடவடிக்கை
8.
முதலீடுகள் என்றால் என்ன?
9.
இருப்பாய்வு வரைவிலக்கணம் தருக.
10.
செலவுகளின் வகைப்பாடுகளை எழுதுக.
11.
செய்பிழை என்றால் என்ன?
12.
விடுபிழை என்றால் என்ன?
13.
இறுதி இருப்பு என்றால் என்ன?
14.
கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு என்றால் என்ன?
15.
கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக.
16.
வாராக்கடன் என்றால் என்ன?
17.
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் யாவை?
18.
ரொக்கச் சீட்டு என்றால் என்ன (Cash Memo)?
19.
கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?
20.
கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றஉம் கணக்குப் பதிவியலுக்கான உறவுமுறையினை விளக்குக.
21.
சான்றுச் சீட்டு என்றால் என்ன?
22.
சரவணனின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட விவரங்கள் மூலம், டிசம்பர் 31, 2017 ஆம் ஆண்டிற்கான மொத்த இலாபத்தினை கணக்கிடவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,50,000 | ஆண்டிற்கான நிகர விற்பனை | 4,00,00 |
| நேரடிச் செலவுகள் | 8,000 | ஆண்டிற்கான நிகர கொள்முதல் | 1,50,000 |
| இறுதிச் சரக்கிருப்பு | 25,000 |
23.
வியாபாரக் கணக்கு பற்றி குறிப்பெழுதுக.
24.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து விற்ற பொருளின் அடக்க விலையைக் கணக்கிடுக
| விவரம் | ரூ |
|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 8,000 |
| கொள்முதல் | 60,000 |
| நேரடிச் செலவுகள் | 5,000 |
| மறைமுகச் செலவுகள் | 6,000 |
| இறுதிச் சரக்கிருப்பு | 9,000 |
25.
ஏதேனும் இரண்டு கணக்கியல் தொகுப்பின் பெயரைக் குறிப்பிடவும்.
26.
வன்பொருள் என்றால் என்ன?
27.
கடனாளிகள் மீது தள்ளுபடி ஒதுக்கு என்றால் என்ன?
28.
29.
இருப்பாய்வு தயாரிக்கும் முன் கீழ்கண்ட பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) கொள்முதல் ஏட்டின் மொத்தத்தில் ரூ.90 குறைவாக முன் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஆ) கொள்முதல் ஏட்டின் மொத்தத்தில் ரூ.180 அதிகமாக முன் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) விற்பனை ஏட்டின் மொத்தத்தில் ரூ.270 குறைவாக முன் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் மொத்தத்தில் ரூ.360 அதிகமாக முன் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(உ) கொள்முதல் திருப்ப ஏட்டின் மொத்தத்தில் ரூ.450 குறைவாக முன் எடுத்து எழுதப்பட்டுள்ளது
30.
பின்வரும் ஒவ்வொரு பிழையிலும் பாதிக்கப்பட்டுள்ள கணக்குகளைக் கூறவும்.
(அ) வா வாசுவுக்கு ரூ.1,000-த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ப ப பதிவுசெய்யப்படாமலுள்ளது.
(ஆ) கொமுதல் ஏட்டின் மொத்தம் ரூ.2,500 இருமுறை பேரேட்டில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.
31.
நிலைச் சொத்து ரூ. 50,000க்கு வாங்கப்பட்டது. தேய்மான விகிதம் ஆண்டுக்கு 15%. குறைந்து செல் இருப்பு முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு தேய்மானத் தொகை கணக்கிடவும்.
32.
முதலினச் செலவு என்றால் என்ன?
33.
34.
கீழ்கண்ட தகவல்களிலிருந்து 2017 மார்ச் 31, ஆம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறியவும்
| விவரம் | ரூ | |
|---|---|---|
| (i) | வங்கியில் வைப்பு செய்த காச�ோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது | 500 |
| (ii) | விடுத்த காச�ோலை செலுத்துகைக்கு இதுவரை முன்னிலைப் படுத்தப்படாதது | 1,000 |
| (iii) | வங்கி வசூலித்த வட்டி | 100 |
| (iv) | நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை | 200 |
| (v) | ரொக்க ஏட்டின் படி இருப்பு | 300 |
35.
ஒரு நிறுவனம், 1.1.2017 அன்று ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் 10 ஆண்டுகள், மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 10,000. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அதன் தேய்மானத் தொகையை நேர்க்கோட்டு முறையில் கணக்கிடவும்.
36.
பின்வரும் வாக்கியங்களங்களை ஏற்றுக்கொள்கிறாறாயா? ஏற்றுக் கொண்டால் ‘ஆம்’ எனவும், ஏற்றுக்கொள்ளாவிட்டால் ‘இல்லை’ எனவும் பதிலளிக்கவும்
(அ) வங்கிச் சரிகட்டும் பட்டியல் வங்கியரால் தயாரிக்கப்படுகிறது
(ஆ) வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கு முன்னர் ரொக்க ஏட்டினை சரிகட்டுவது கட்டாயமானது.
(இ) வங்கி அறிக்கையின் படி வரவிருப்பு என்பது மேல்வரைப்பற்றாகும்
(ஈ) வங்கியால் பற்று செய்யப்படும் வங்கிக் கட்டணம் வங்கி அறிக்கையின் படியான இருப்பினை அதிகரிக்கச் செய்யும்.
(உ) ரொக்க ஏட்டின் வங்கிப்பத்திக்கும் ர
37.
வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்றால் என்ன?
38.
விற்பனைத் திருப்ப ஏடு என்றால் என்ன?
39.
விற்பனை ஏடு என்றால் என்ன?
40.
41.
இருப்பாய்வின் படிவம் தருக
42.
பெயரளவு கணக்கிற்கான கணக்கியல் விதியைக் கூறுக.
43.
ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
44.
வரவு இருப்பு என்றால் என்ன?
45.
எடுத்தெழுதுதல் என்றால் என்ன?
46.
கணக்கியல் கருத்துக்கள் என்றால் என்ன?
47.
கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு
48.
சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?
49.
இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன
50.
கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைப் கூறுக.
51.
கணக்கியலை வரையறு.
1.
(i) ரொக்கச் சீட்டு என்பது ஒரு ஆவணம். இதில், தேதி, தொகை, மற்றும் ரொக்கக் கொள்முதல், ரொக்க விற்பனை அல்லது இதர ரொக்க நடவடிக்கைகளின் விவரங்கள் இருக்கும்.
(ii) வணிகம் செய்பவர்கள் ரொக்க விற்பனை செய்யும் போது பணம் பெறுகின்றனர் .
(iii) வணிக நிறுவனங்கள் ரொக்க கொள்முதலின் போது ரொக்கச்சீட்டைப் பெறுகின்றனர். ரொக்க விற்பனையின் போது ரொக்கச் சீட்டை அளிக்கின்றனர்.
2.
வங்கிச் செல்லேடு அல்லது நகலேடு என்பது வங்கியிடமுள்ள வாடிக்கையாளருடைய கணக்கின் பிரதியாகும்.இதில் அனைத்து வைப்புகள்,எடுப்புகள் மற்றும் வாடிக்கையாளரின் கணக்கில் மீதி இருக்கக் கூடிய தொகை ஆகியவற்றைக் காண்பிக்கின்றது.
3.
மாற்றுச்சீட்டுக்கான தொகை தவணை நாளன்று செலுத்தப்படாமலி ருந்தால் அதனை மாற்றுச்சீட்டு மறுக்கப்படுதல் என்பர்.
4.
மாற்றுச்சீட்டின் ஏற்குநர் , தவணை நாளில் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்படலாம் என்பதை முன்கூட்டியே அறிந்தால் அவர் எழுதுநரிடம் தொகை செலுத்துவதற்கான காலத்தை நீட்டித்தருமாறு கேட்கலாம்.அத்தருணத்தில் எழுதனர் பழைய மாற்றுச்சி ட்டினை இரத்து செய்யலாம் .பழைய நிலுவைத்தொகை மற்றும் அதற்கான வட்டியினையும் சேர்த்து புதிய மாற்றுச் சீட்டினை எழுத ஒப்புக் கொள்ளலாம் .இது மாற்றுச் சீட்டு புதுப்பித்தல் எனப்படும்.
5.
1. மறு மதிப்பீட்டு முறையில், ஆண்டுத் தேய்மானமானது சொத்தின் ஆண்டு இறுதி மதிப்பினை அச்சொத்தின் ஆண்டு தொடக்க மதிப்போடு ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது.
2. சொத்தின் ஆண்டு இறுதி மதிப்பானது அத்துறையில் சிறந்து விளங்கும் நபரின் உதவியோடு தீர்மானிக்கப்படுகிறது.
3. ஆண்டு இறுதி மதிப்பிற்கும் ஆண்டு தொடக்க மதிப்பிற்கும்,உள்ள வேறுபாடு அந்த ஆண்டுக்குரிய தேய்மானமாகக் கருதப்படுகிறது.
4. இம்முறையானது கால்நடைகள், விடுகருவிகள் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
6.
1.நிலைத் தவணை தேய்மானமாக, குறிப்பிட்ட விழுக்காடு ஒவ்வொரு ஆண்டிற்கும் சொத்தின் அடக்கவிலையிலிருந்து நீக்கப்படுகிறது. எனவே, இது ஆரம்ப அடக்கவிலை முறை என்றழைக்கப்படுகிறது.
2.சொத்தின் வாழ்நாள் முழுவதும் தேய்மானத் தொகை ஒரே அளவாக, சமமாக இருப்பதால் இம்முறை நிலைத் தவணை முறை எனவும் அழைக்கப்படுகிறது.
7.
ரொக்க நடவடிக்கை:
இது உடனடி ரொக்கம் பெறுதல் அல்லது உடனடி ரொக்கச் செலுத்தலை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கை ஆகும்.
கடன் நடவக்கை:
இது ரொக்கம் உடனடியாக செலுத்தப்படாத அல்லது பெறப்படாத ஒரு நடவடிக்கை ஆகும். ஆனால், அதற்குப் பின்னர் ரொக்கம் செலுத்தப்படும் அல்லது பெறப்படும்.
8.
(i) பிற நிறுவனங்களின் பங்குகள் , கடனீட்டுப் பத்திரங்கள் , பிணையங்கள் மற்றும் பிற பத்திரங்களில் முதலீடு செய்வது முதலீடுகள் என்று அழைக்கப்படுகின்றது
(ii) இந்த முதலீடு இரு வருடத்திற்கு அதிகமான காலத்திற்கு செய்யப்பட்டால் அது நீண்ட கால முதலீடுகள் என அழைக்கப்படுகின்றது
(iii) இந்த முதலீடு இரு வருடத்திற்கு குறைவான காலத்திற்கு செய்யப்பட்டால் அது குறுகிய கால முதலீடுகள் என அழைக்கப்பட்டு நடப்புச் சொத்தாக காண்பிக்கபடுகிறது.
9.
"பேரேட்டுக் கணக்குகளில் உள்ள பற்று இருப்புகளையும் மற்றும் வரவு இருப்புகளையும் கொண்டு கணக்கேடுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை பரிசோதிக்க தயாரிக்கப்படும் ஒரு அறிக்கையே இருப்பாய்வு" என ஜே.ஆர்.பேட்லிபாய் வரைவிலக்கணம் தந்துள்ளார்.
10.
செலவுகளைப் பின்வருமாறு மூன்று வகைகளாப் பிரிக்கலாம். அவை
1. முதலினச் செலவு
2. வருவாயினச் செலவு
3. நீள்பயன் வருவாயினச் செலவு
11.
ஒரு நடவடிக்கையானது தவறாகப் பதிவு செய்யப்பட்டால் அது செய்பிழை எனப்படும். இப்பிழை கணக்காளரின் ஒருமுகப்படுத்தல் இல்லாததாலும், கவனமின்மையாலும் நிகழ்வதாகும்.
12.
கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே விடு பிழை எனப்படும். அது முழு விடு பிழையாகவோ அல்லது பகுதி விடு பிழையாகவோ இருக்கலாம்.
13.
ஒரு கணக்கினை இருப்புக்கட்டும் பொழுது பற்று இருப்பு என்றால் இருப்புக் கட்டும் தொகை பற்றுப்பக்கத்திலும் இருக்கும்.இருப்பு கட்டிய தொகை இறுதி இருப்பு எனப்படும்.
14.
ஒரு குறிப்பேட்டுப்பதிவு ஒன்றுக்கு மேற்பட்ட பற்று இனங்களையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வரவு இனங்களையோ அல்லது இரண்டையுமோ கொண்டிருந்தால் அது கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு எனப்படும்.
15.
கணக்கியலில், கணினி பொதுவாக கீழ்கண்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
(அ) வணிக நடவடிக்கைகள் பதிவு செய்தல்
(ஆ) சம்பளப் பட்டியலில் கணக்கிடுதல்
(இ) பண்டக சாலை கணக்கியல் மற்றும்
(ஈ) கணக்கியல் அறிக்கைகள் உருவாக்குதல்
16.
கடன் விற்பனைக்குப் பின்,வாடிக்கையாளர் அல்லது கடனாளிகளிடமிருந்து பெறப்பட வேண்டிய தொகை,நிச்சயமாக கிடைக்கப் பெறாது என தெரிய வந்தால் அதனை வாராக்கடன் என கருதலாம்.வேறு வகையில் சொல்ல வேண்டுமானால்,கடனாளிகளிடமிருந்து திரும்பப் பெற இயலாத கடன், வாராக்கடன் எனப்படும்.
17.
சரிக்கட்டுதல்களுடன் சேர்த்து இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான கோட்பாடுகள் பின்வருமாறு:
(i) வருவாய்த் தீர்வுக் கோட்பாடு
இக்கோட்பாட்டின்படி,ஒரு குறிப்பிட்ட ஆண்டின் வருவாய் என்பது எந்த ஆண்டில் அது ஈட்டப்பட்டதோ அந்த ஆண்டில் தான் அது தீர்வு செய்யப்பட வேண்டும்.
(ii) பொருந்துகைக் கோட்பாடு
ஒரு ஆண்டில் பெறப்பட்ட வருமானத்தை அந்த ஆண்டின் செலவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆகும்.
18.
1. ரொக்கச் சீட்டு என்பது ஒரு ஆவணம். ஒரு வியாபாரி பொருட்களை ரொக்கத்திற்கு விற்பனை செய்யும் பொழுது அவர் ரொக்கச் சீட்டைத் தருகிறார்.அது போல பொருள்களை ரொக்கத்திற்கு கொள்முதல் செய்யும் பொழுது ரொக்கச் சீட்டைப் பெறுகிறார்.
2. சரக்கின் தன்மை, அளவு, விலை மற்றும் மொத தொகை, தேதி உள்ளிட்டவை ரொக்கச்ச சீட்டில் அடங்கியிருக்கும்.
19.
1. இது வணிக நடவடிக்கைக்கள், கணக்கேடுகளில் பதிவு செய்வதற்கான செயல்முறை ஆகும்.
2. பணமதிப்பிலான நடவடிக்கைகள் மட்டுமே கணக்கேடுகளில் பதியப்படுகின்றன.
3. கணக்கேடுகள் பராமரிப்பே, கணக்கியல் செயல்பாட்டின் முதனமை நிலை ஆகும்.
4. கணக்கேடுகள் பராமரிப்பு, குறிப்பேட்டில் பதிதல் மற்றும் பேரேட்டில் எடுத்தெழுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
20.
1. கணக்கேடுகள் பராமரிப்பு (Book Keeping) என்பதும் கணக்கியலின் ஒரு பகுதியாகும்.இது கணக்கியலின் தொடக்க நிலை ஆகும்.இது நடவடிக்கைகளை கணக்கேடுக்களில் பதியும் ஒரு செயல் முறையாகும்.
2. கணக்கியல் (Accounting) என்பது கணக்குப்பதிவியலின் ஒரு பகுதியாகும். கணக்கியல் என்பது மிதித்த தகவல்களை பதிவு செய்தல், வகைப்படுத்துதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் உய்த்துணர்த்துதல் போன்ற செயல்களை கொண்டதாகும்.
3. கணக்குப் பதிவில் என்பது, கணக்கிடல் செயல்முறையின் முறையான அறிவு மற்றும் தரங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
21.
ஒரு வியாபார நடவடிக்கை நிகழந்ததற்கான எழுத்து வடிவிலான ஆதாரமே சான்றுச்சீட்டு எனப்படும்.
எ.கா: ரொக்க இரசீது, இடாப்பு, வங்கிச் செலுத்துச் சீட்டு.
22.
| விவரம் | தொகை (ரூ) | தொகை (ரூ) | விவரம் | தொகை (ரூ) | தொகை (ரூ) |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 1,50,000 | நிகர விற்பனை | 4,00,000 | ||
| நேரடிச் செலவுகள் | 8,000 | இறுதிச் சரக்கிருப்பு | 25,000 | ||
| நிகர கொள்முதல் | 1,50,000 | ||||
| மொத்த இலாபம் கீ/இ | 1,17,000 | ||||
| 4,25,000 | 4,25,000 |
23.
வியாபாரம் என்பது இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் சரக்குகள் வாங்குதல் மற்றும் விற்றலைக் குறிக்கின்றது. வியாபாரக் கணக்கு கணக்காண்டிற்குரிய சரக்குகள் வாங்குதல் மற்றும் விற்றலின் முடிவினைக் காட்டும் ஒரு பெயரளவுக் கணக்கு ஆகும்.
24.
விற்ற சரக்கின் அடக்கவிலை = தொடக்கச் சரக்கிருப்பு + நிகர கொள்முதல் + நேரடிச்செலவுகள் – இறுதிச் சரக்கிருப்பு
= 8,000 + 60,000 + 5,000 – 9,000
= ரூ. 64,000
குறிப்பு : மறைமுகச் செலவுகள், விற்ற சரக்கின் அடக்க விலையில் சேராது
25.
1. ஆயத்த மென்பொருள்
2. திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள்
26.
கணினியின் இயற்கூறுகளை உள்ளடக்கியது அதன் வன்பொருளாகும். முழுமையான கணினி அமைப்பை உருவாக்குவதற்கான உள்ளீட்டு சாதனங்கள் மற்றும் வெளியீட்டு சாதனங்களையும் வன்பொருள் கொண்டிருக்கும்.
27.
(i) தவணை நாள் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ வாடிக்கையாளர் உரிய நேரத்தில் பணம் செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக சரக்கு அளித்தவரால் வழங்கப்படுவது ரொக்கத் தள்ளுபடியாகும்.
(ii) இத்தள்ளுபடியை வழங்குவதற்காக பற்பல கடனாளிகள் மீது உருவாக்கப்படும் ஒதுக்கு கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு எனப்படுகிறது.
28.
29.
அ) கொள்முதல் கணக்கில் ரூ.90 பற்று வைக்க வேண்டும்
ஆ) கொள்முதல் கணக்கில் ரூ.180 வரவு வைக்க வேண்டும்
இ) விற்பனை கணக்கில் ரூ.270 வரவு வைக்க வேண்டும்
ஈ) விற்பனைத் திருப்ப கணக்கில் ரூ.360 வரவு வைக்க வேண்டும்
உ) கொள்முதல் திருப்ப கணக்கில் ரூ.450 வரவு வைக்க வேண்டும்
30.
| வ.எண் | விவரம் | பே. ப. ஏ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | வாசு க/கு | ப | 1,000 | ||
| விற்பனை க/கு | 1,000 | ||||
| (வாசுவுக்கு கடனுக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப் படாமலுள்ளது திருத்தியது) | |||||
| ஆ | விற்பனை க/கு | ப | 2,500 | ||
| அனாமத்துக் க/கு | 2,500 | ||||
| (கொள்முதல் ஏட்டின் மொத்தம் ரூ.2,500 இருமுறை பேரேட்டில் எழுதப்பட்டுள்ளது திருத்தியது) |
31.
| விவரம் | தொகை ரூ. |
|---|---|
| அடக்க விலை | 50,000 |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (50,000 x \({15\over 100}\)) | 7,500 |
| 42,500 | |
| கழிக்க: இரண்டாமாண்டு தேய்மானம் (42,500 x \({15\over 100}\)) | 6,375 |
| 36,125 |
\(\therefore \) முதலாமாண்டு தேய்மானம்=ரூ. 7,500
இரண்டாமாண்டு தேய்மானம்= ரூ. 6,375
32.
(i) ஒரு கணக்காண்டில் மேற்கொள்ளப்பட்ட செலவின் பயனானது எதிர்வரும் ஆண்டுகளுக்கும் தொடர்ந்து கிடைக்குமானால் அச்செலவு முதலினச் செலவு ஆகும்.
(ii) இச்செலவு ஏதேனும் ஒரு நிலைச்சொத்து வாங்குவதற்கோ, வியாபார நிறுவனத்தின் இலாபம் ஈட்டும் திறனை அதிகரிப்பதற்கோ மேற்கொள்ளப்படலாம். இது திரும்பத் திரும்ப நிகழாத தன்மையுடையது.
33.
34.
| விவரம் | ரூ | ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி இருப்பு | 300 | |
| கூட்டுக: விடுத்த காசோலை இதுவரை செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படாதது | 1000 | |
| 1,300 | ||
| கழிக்க: வைப்பு செய்த காசோலை வசூலித்து வரவு ைக்கப்படாதது | 500 | |
| வங்கி வசூலித்த வட்டி | 100 | |
| நிலை அறிவுறுத்தலின் படி வங்கி செலுத்திய வாடகை | 200 | 800 |
| வங்கி அறிக்கையின் படி இருப்பு | 500 |
35.

\({1,90,000-15,000\over 5}={1,75,000\over 5}=\) ரூ. 35,000
36.
(i) ஆம் (ii) இல்லை (iii) இல்லை (iv) ஆம் (v) ஆம்
37.
(1) ரொக்க ஏட்டில் உள்ள ஒவ்வொரு பதிவும் வங்கி அறிக்கையுடன் பொருந்துமேயானால், இரண்டு ஆவணங்களிலும் வங்கி இருப்பு ஒரே தொகையாக இருக்கும். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை.
(2) இரண்டு இருப்புகளும் வெவ்வேறாக இருந்தால், அதற்கான காரணங்களை விளக்குவதற்காக ஒரு அறிக்கை தயாரிப்பது அவசியமாகிறது.
(3) இந்த அறிக்கை வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது.
38.
1. விற்பனைத் திருப்ப ஏடு, துணை ஏடுகளில் ஒன்றாகும். இது விற்பனைச் செய்த சரக்குகள் உடனடியாக ரொக்கம் அளிக்காமல் திருப்பிப் பெறப்படுவதைப் பதிவு செய்ய உதவுகிறது.
2. சரக்குகளை வாடிக்கையாளரிடமிருந்து திரும்பப் பெறுவது 'உள் திருப்பம்' எனப்படும்.
3. சொத்துக்கள் திரும்பப் பெறுவது அல்லது சரக்குகள் ரொக்கம் அளிக்கப்பட்டு திரும்பப் பெறுவது இந்த ஏட்டில் பதிவு செய்யப்படமாட்டாது.
39.
1. விற்பனை ஏட்டில் கடனுக்கு விற்கப்படும் சரக்குகள் பதியப்படும். இங்கு சரக்கு என்பது நிறுவனம் வழக்கமாக வாங்கி விற்கும் பொருளையே குறிக்கும்.
2. சரக்குகள் ரொக்கத்திற்கு விற்பனை செய்வது இதில் பதியப்படுவதில்லை.
3. இதைப்போலவே, சொத்துக்களை கடனுக்கு விற்பதுவோ அல்லது ரொக்கத்திற்கு விற்பதுவோ விற்பனை ஏட்டில் இடம் பெறாது.
4. இவ்வேடு விற்பனை நாளேடு, விற்பனைக் குறிப்பேடு, மற்றும் விற்பனைப் பதிவேடு என்றும் அழைக்கப்படுகிறது.
40.
41.
| வ.எண் | கணக்கின் பெயர் / விவரம் | பே. ப. எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
42.
1. செலவிற்கும் நட்டத்திற்கும் - பற்று வை.
2. வருமானத்திற்கும் ஆதாயத்திற்கும் - வரவு வை.
43.
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்கு எனப்படும். இது
1. தனி நபர்
2. சட்டமுறை அமைப்பு
3. பிரதிநிதித்துவ அமைப்பு
என மூன்று வகையாக பிரிக்கப்படும்.
44.
ஒரு கணக்கின் வரவு பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத் தொகை வரவு இருப்பு ஆகும்.
45.
குறிப்பேட்டில் பதிவாகி உள்ள நடவடிக்கைகளின் பட்டு மற்றும் வரவு இனங்களை பேரேட்டில் உள்ள கணக்குகளுக்கு மாற்றம் செய்வது எடுத்தெழுதுதல் எனப்படும்.
46.
i. கணக்கியல் கருத்துக்கள் என்பது கணக்கியல் அடிப்படை அனுமானங்களாகும் கணக்கியலானது, அடிப்படை அனுமானங்கள் அல்லது நிபந்தனைகளான கணக்கியல் கருத்துக்களை அடித்தளமாக கொண்டுள்ளது.
ii. கணக்கியல் கருத்துக்கள் என்பது பரந்த ஒருமித்த கருத்துக்களின் விளைவாகும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எண்ணம் அல்லது சாராசம் கருது எனபபொருள்படும்.இவை, கணக்கியல் செயல்முறை மற்றும் கணக்கியல் அறிக்கைகள் ஆகியவற்றிற்கு ஒரே மாதிரியான கட்டமைப்பைத் தருகின்றன.
47.
ஜே.ஆர்.பேட்லிபாய் அவர்களின் கூற்றுப்பா, "கணக்கு ஏடுகள் பராமரிப்பு என்பது வணிக நடவடிக்கைகளை ஏடுகளில் பதிவு செய்யும் ஒரு கலையாகும்."
ஆர்.என்.கார்டர் அவர்களின் கூற்றுப்பா "கணக்கேடுகள் பராமரிப்பு என்பது, பணம் அல்லது பணத்தின் மதிப்பிலுள்ள அணைத்து வணிகிய நடவடிக்கைகளையும் கணக்கேடுகளில் சரியாக பதிவு செய்யும் காலை மற்றும் அறிவியல் ஆகும்."
48.
சில்லறை ரொக்க ஏடு என்பது அடிக்கடி நிகழக்கூடிய சிறு செலவினங்களான வண்டிச்சத்தம் கூலி, தபால் தந்தி செலவு, அச்சு, எழுதுபொருள் செலவு போன்றவற்றை பதியும் தனி ரொக்க ஏடாகும்.
இதற்கென தனியாக அமர்த்தப்படும் சில்லறை காசாளர் சில்லறை ரொக்க எட்டினை பராமரிக்கின்றனர்.
49.
(i) இது ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளையுடைய ரொக்க ஏடு ஆகும்.தள்ளுபடி மற்றும் ரொக்கம் என்ற இரு பத்திகளை, பற்று மற்றும் வரவு என்ற இராணு பக்கங்களிலும் கொண்டிருப்பதால் இதனை ரொக்க ஏடு என்று அழைக்கிறோம்.
(ii) சாதாரண ரொக்க ஏடு தயாரிக்கப்படும் முறையிலேயே இருபத்தி ரொக்க ஏதும் தயாரிக்கப்படுகிறது. இதில் தள்ளுபடி பத்தி என்ற ஒரு பத்தி என்ற ஒரு பத்தி கூடுதலாகயிறு பக்கங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
50.
நிறுவனத்தை அளவில்
நிறுவனத்தின் எதிர்கால செயல்திறனை முன்னறிதல்
திட்டமிட்ட செயல்திறனை நிகழ்ந்த செயல் திறனுடன் ஒப்பிடுதல்
நிறுவன செய்ல்பாடுகள் குறித்து எளிதாக முடிவெடுத்தல்.
வணிக நடவடிக்கைகளின் கட்டுப்பாடு
அரசுக்கு உதவி புரிதல்.
51.
அமெரிக்க பொதுக் கணக்காளர் சான்று நிறுவனம் கணக்கியலுக்கு பின்வருமாறு வரைவிலக்கணம் தருகிறது.
"கணக்கியல் என்பது குறைந்தபட்சம் ஒரு பகுதியாவது நிதியில் தன்மை கொண்ட மற்றும் பணத்தால் மதிப்பிடக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை, முறையாகபதியும், வகைப்படுத்தும், சுருக்கக்கூறும் மற்றும் அதன் விளைவுகளை தெரிவிக்கும் ஒரு கலையாகும்."
அமெரிக்க கணக்கியில் கழகத்தின் கூற்றின்படி, " கணக்கியல் என்பது பொருளாதார தகவல்களைக் கண்டறிந்து அளவிட்டு, தகவல் தெரிவிக்கக்கூடிய ஒரு செயல்பாடாகும். இதன் மூலம், தகவல்களைப் பயன்படுத்துவோர் தக்க தீர்வு காண்பதற்கும் மற்றும் முடிவெடுப்பதற்கும் வகை செய்கிறது."
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards