11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 03/01/2020
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
அறைகலன் 750-க்கு விற்றது, விற்பனைக்கு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கீழ்கொடுக்கப்பட்டுள்ளவனவற்றில் எது சரியானது?
| விற்பனை கணக்கு | ப |
| அறைகலன் கணக்கு |
| அறைகலன் கணக்கு | ப |
| விற்பனை கணக்கு |
| ரொக்கக் கணக்கு | ப |
| விற்பனை கணக்கு |
| கொள்முதல் கணக்கு | ப |
| விற்பனை கணக்கு |
2.
இயந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது
விற்பனை ஏடு
கொள்முதல் ஏடு
கொள்முதல் திருப்ப எடு
முறையான குறிப்பேடு
3.
ஜனவரி 1,2018 அன்று சில்லறைக் காசாளரிடம் ரூ.1,000 தரப்பட்டது. ஜனவரி மாதம் அவர் ரூ.860 செலவழித்தார் பிப்ரவரி 1அன்று அவர் முன் பண மீட்புக்காக பெறும் காசோலையின் தொகை ரூ.________ .
1000
860
1860
140
4.
நடவடிக்கைகள் தோற்றம் பெறுவது
ஆதார ஆவணங்கள்
குறிப்பேடு
கணக்கியல் சமன்பாடு
கணக்கியல் கருத்துக்கள்
5.
ஒரு பொறிவகையின் மதிப்பு ரூ.10,000 பயனளிப்புக் காலம் ஆண்டுகள், ஏறி மதிப்பு ரூ.1000 என்றால் நேர்கோட்டு முறையின் தேய்மான விகிதம் _______ஆகும்.
9.5%
9%
10%
12%
6.
வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
இவை எதுவுமில்லை
7.
நிதி ஆண்டின் ஆரம்பத்தில் கணக்கு ஏடுகளில் பதியக் கூடிய பதிவுக்கு ______ என்று பெயர்.
சரிக்கட்டுப்பதிவு
இறுதிப் பதிவு
தொடக்கப் பதிவு
குறிப்பேடு
8.
1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.
ரூ 30,000
ரூ 5,00,000
ரூ 4,70,000
ரூ 5,30,000
9.
தனித்தன்மை அனுமானமானது நிறுவனத்தை இவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும்
உரிமையாளர்
வங்கியர்
கடனீந்தோர்
அரசு
10.
நிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.
பொறுப்பாகும்
செலவாகும்
வருமானமாகும்
கடனீந்தோர் ஆவர்
11.
வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.
வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
12.
வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம்
சுட்டி
அச்சுப்பொறி
ஒளியியல் வருடி
விசைப் பலகை
13.
பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?
ரொக்கம்
சரக்கிருப்பு
அறைகலன்
முன்கூட்டிச் செலுத்திய செலவு
14.
எந்நாள் முதற்கொண்டு தேய்மானம் கணக்கிடப்பட வேண்டும்
சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்
சொத்தினை வாங்குவதற்காதற்கான ஆணை பிறப்பித்த நாள்முதல்
சொத்தினை வியாபார வளாகத்திற்குள் பெற்ற நாநாள்முதல்
சொத்தின் இடாப்பு பெற்றெற்ற நாள் முதல்
15.
கொள்முதல் ஏட்டின் மொத்தத் தொகை அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
கொள்முதல் கணக்கு
அனாமத்துக் கணக்கு
கடனீந்தோர் கணக்கு
மேற்கண்டது ஏதும் இல்லை
16.
வங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது
வங்கி அறிக்கை
ரொக்க ஏடு
வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
சில்லறை ரொக்க ஏடு
17.
கீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்
அனைத்து பேரேட்டுக் கணக்குகளின் சுருக்கத்தைத் தருவது.
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
கணக்குகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையைப் பரிசோதிப்பது
(அ), (ஆ) மற்றும் (இ)
18.
கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.
சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்
சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்
பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
19.
20.
ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது
எதிர்ப்பதிவு
கூட்டுப் பதிவு
ஒற்றைப் பதிவு
சாதாரணப் பதிவு
21.
பின்வரும் தகவல்களை கொண்டு அதன் செலுத்தும் நாட்களை கணக்கிடுக.
| மாற்றுச் சீட்டின் நாள் | தவணைக் காலம் | சலுகை நாட்கள் | செலுத்தற்குரிய நாள் |
| 1வது மார்ச் | 2 மாதங்கள் | 3 | ? |
| 12வது ஜுலை | 1 மதம் | 3 | ? |
22.
கீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப்பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக.
23.
குறைந்து செல் மதிப்பு முறை என்றால் என்ன?
24.
கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக.
25.
முதலீடுகள் மீது பெற வேண்டிய வட்டி என்றால் என்ன?
26.
கணக்கு என்றால் என்ன?
27.
வியாபாரக் கணக்கு பற்றி குறிப்பெழுதுக.
28.
இருப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(அ) கொள்முதல் ஏட்டில் ரூ.10,000 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) அறைகலன் பழுதுபார்ப்புச் செலவு ரூ.500 அறைகலன் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(இ) அகில் நிலவனுக்கு கடனுக்கு ரூ.456 க்கு சரக்கு விற்றது அவர் கணக்கில் ரூ.654 என வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது
29.
பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
(ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
(iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
(iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
(v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150.
30.
ரொக்க ஏடு என்றால் என்ன?
31.
பின்வரும் விவரங்களிலிருந்து இருப்பாய்வினைத் தயாரிக்கவும்.
| ரூ. | |
| முதல் | 70,000 |
| எடுப்புகள் | 45,000 |
| பற்பல கடனீந்தோர் | 3,000 |
| பெற்ற தள்ளுபடி | 5,450 |
| பற்பல கடனாளிகள் | 20,000 |
| கழிவு (ப) | 1,000 |
| இயந்திரம் | 10,000 |
| வரிவீதங்கள் | 2,450 |
32.
பின்வரும் விவரங்களிருந்து விற்பனை கணக்கினை தயார் செய்யவும்.
| 2015 மார்ச் 1 | ரமேஷ் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது. | ரூ.10000 |
| 2015 மார்ச் 5 | கணேஷ் என்பவரிடம் கடன் பேரில் சரக்கு விற்றது. | ரூ.5000 |
| 2015 மார்ச் 8 | ரொக்க விற்பனை | ரூ.15000 |
| 2015 மார்ச் 10 | குமரன் என்பவரிடம் சரக்கு விற்று காசோலைபெற்று வங்கியியல் செலுத்தியது. | ரூ.8000 |
33.
பின்வரும் நடவடிக்கைகளை திருமதி. லலிதாவின் தனிப்பத்தி ரொக்க எட்டில் பதிவு செய்க.
| ரூ | ||
| 2016 ஆகஸ்ட் 1 |
கையிருப்பு ரொக்கம் | 46,000 |
| 3 | வங்கியில் செலுத்தியது | 12,000 |
| 4 | ரொக்க விற்பனை | 24,000 |
| 5 | மணி என்பவருக்கு கடனுக்கு விற்பனை செய்தது. | 3,000 |
| 7 | அச்சுக்கட்டணம் | 3,000 |
| 9 | நடேசனிடமிருந்து காசோலை பெற்றது | 8,000 |
| 12 | பங்காதாயம் பெற்றது | 2,000 |
| 14 | கணிப்பொறி வாங்கியது | 35,000 |
| 17 | மணியிடமிருந்து ரொக்கம் பெற்றது | 3,000 |
| 24 | வங்கியிலிருந்து பணம் எடுத்தது | 2,000 |
34.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
[அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
[ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
[ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
[உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
35.
குமரன் பிரதர்ஸ் நிறுவனம் 1.1.2000 அன்று ரூ.5,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது 1.1.2002 அன்று அவ்வியந்திரம் ரூ.4,00,000க்கு விற்கப்பட்டது. அந்நிறுவனம் ஆண்டுதோறும் தேய்மானது 15% நேர்க்கோட்டு முறையில் நீக்கியது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன.இயந்திரம் கணக்கு தயார் செய்க.
36.
திருமதி. உமா சங்கரின் இருப்பாய்வு 31 மார்ச் 2017 ல் பின்வருமாறு காண்பிக்கினற்து.இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க.
| பற்று இருப்பு | ரூ | வரவு இருப்பு | ரூ |
|---|---|---|---|
| கொள்முதல் | 70,000 | முதல் கணக்கு | 56,000 |
| விற்பனைத் திருப்பம் | 5,000 | விற்பனை | 1,50,000 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 20,000 | கொள்முதல் திருப்பம் | 4,000 |
| தள்ளுபடி கொடுத்தது | 2,000 | தள்ளுபடி பெற்றது | 1,000 |
| வங்கி கட்டணம் | 500 | கடனீந்தோர் | 30,000 |
| சம்பளம் | 4,500 | ||
| கூலி | 5,000 | ||
| உள் ஏற்றிச் செல் செலவு | 4,000 | ||
| வெளி ஏற்றிச் செல் செலவு | 1,000 | ||
| வாடகை மற்றும் வரி | 5,000 | ||
| ரொக்க கையிருப்பு | 1,000 | ||
| பொறியும் பொறித் தொகுதியும் | 50,000 | ||
| பற்பல கடனாளிகள் | 60,000 | ||
| வங்கியிருப்பு | 7,000 | ||
| விளம்பரம் | 6,000 | ||
| 2,41,000 | 2,41,000 |
37.
புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.
38.
கணக்கேடுகள் பராமரிப்பிற்கும், கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
39.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் மூலம்
i) CONCATENATE செயற்கூற்றைக் கொண்டு B3 ல் முகவரியை நிரப்பவும்.
ii) C2 வில் கொடுக்கப்பட்டுள்ள KAMARAJAR SALAI என்பதனை C3 ல் சிறிய எழுத்துக்களாக மாற்றவும்
iii) D2வில் கொடுக்கப் பட்டுள்ள Chennai என்பதனை D3ல் பெரிய எழுத்துக்களாக மாற்றவும்.
40.
இலக்குமி போக்குவரத்து நிறுவனம், அக்டோபர் 1, 2014 அன்று ரூ. 8,00,000க்கு கனரக வாகனம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 15% தேய்மானம் நீக்கவேண்டும். 31 மார்ச் 2017ல் அக்கனரக வாகனம் ரூ. 5,00,000க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. விற்ற வாகனத்திற்கான இலாபம் அல்லது நட்டத்தினைக் கணக்கிடவும்.
41.
(அ) கடனுக்கு மேகலாவுக்கு ரூ.102-க்கு சரக்கு விற்றதற்கான பதிவு பேரேட்டில் மேகலாவின் கணக்கில் ரூ.120 என எடுத்து எழுதப்பட்டது.
(ஆ) அளித்த தள்ளுபடிப் பத்தியின் மாதக் கூட்டுத்தொகை ரூ.100 பேரேட்டில் பெற்ற தள்ளுபடிக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டது..
(இ) மன்னன் ரூ.275 செலுத்தியது கண்ணன் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) அலுவலக உபயயோகத்திற்காக எழுதுபொருள் வாங்க ரூ.26 ரொக்கம் செலுத்தியதற்கான ரொக்க ஏட்டில் உள்ள பதிவு பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(உ) கொள்முதல் ஏட்டில் ரூ.100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
42.
பின்வரும் நடவடிக்கைகளை இராஜா ஹோட்டலின் குறிப்பேடுகளில் பதிவு செய்க.
| ஜனவரி | ரூ | |
| 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | 3,00,000 |
| 2 | ராஜுவிடமிருந்து கடன் கொள்முதல் செய்தது | 1,00,000 |
| 3 | வங்கியில் ரொக்கம் செலுத்தியது | 2,00,000 |
| 20 | வங்கியில் கடன் பெற்றது | 1,00,000 |
| 22 | சொந்த உபயோகத்திற்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது | 800 |
| 23 | ராஜுவிற்கு தேசிய மின்னனு பணப்பரிமாற்றம் மூலமாக ரொக்கம் செலுத்தி கணக்கு தீர்க்கப்பட்டது | 99,000 |
| 25 | உரிமையாளரின் சங்க உறுப்பினர் சந்தா காசோலை மூலம் செலுத்தியது | 200 |
| 26 | உரிமையாளரின் வீட்டிற்கான மின் கட்டணம் எடுப்பு அட்டை மூலம் செலுத்தியது | 2,000 |
| 31 | அறக்கட்டளை அமைப்பிற்கு மதிய உணவு இலவசமாக வழங்கியது | 1,000 |
| 31 | வங்கி வசூலித்த பாதுகாப்பு பெட்டக வாடகை | 1,000 |
43.
சந்திரனின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை பதிவு செய்க.
| 2017 நவ | ரூ | |
| 1 | ரொக்க இருப்பு | 22,000 |
| 2. | ரொக்க விற்பனை | 14,000 |
| 3. | கோவிந்தனுக்கு கடனுக்கு விற்றது | 12,000 |
| 4 | பலராமனிடம் கடனுக்கு கொள்முதல் செய்தது | 27,000 |
| 5 | ரொக்கக் கொள்முதல் | 8,800 |
| 8 | கோவிந்தனிடமிருந்து 2% ரொக்க தள்ளுபடி கழித்தது போக மீதி தொகைப் பெறப்பட்டது |
|
| 12 | பலராமனுக்கு ரூ 26,800 பணம் செலுத்தி அவர் கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்டது |
|
| 15 | சொந்த தேவைக்கு பணம் எடுத்தது | 4,000 |
| 28 | ரொக்கம் வங்கியில் செலுத்தியது | 5,000 |
| 29 | மதன் தரவேண்டியது ரூ 5,000. ரூ 4,800 செலுத்தி அவர் கணக்கைத் தீர்த்துக் கொண்டார். | |
| 30 | சம்பளம் ரொக்கமாக அளித்தது | 4,000 |
44.
பின்வரும் நடவடிக்கைகளை இராஜா அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏடுகளில் பதிவு செய்க.
| 2017 | |
| மே 4 | கன்னியாகுமரி, காசி அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ.300 வீதம் | |
| 4 மேசைகள் ஒன்று ரூ.800 வீதம் | |
| மே 6 | வேலூர், வெல்கம் அறைகலன் நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது |
| 2 அலமாரிகள் ஒன்று ரூ 2,000 வீதம் | |
| 4 நாற்காலிகள் ஒன்று ரூ 200 வீதம் | |
| கழிக்க: வியாபாரத் தள்ளுபடி 5% | |
| மே 10 | நாகப்பட்டினம், முருகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து அறைகலன்கள் வாங்கியது |
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ 250 வீதம் | |
| 5 மேசைகள் ஒன்று ரூ 750 வீதம் | |
| கட்டுமம் மற்றும் அனுப்புகைச் செலவுகள் ரூ150 | |
| மே 10 | அடையாறு, ஆனந்தன் நிறுவனத்திடமிருந்து அலுவலகப் பயன்பாட்டிற்காக இரண்டு கணிப்பொறிகள் ஒன்று ரூ.15,550 வீதம் கடனுக்கு வாங்கியது. |
| மே 25 | சென்னை, கௌதம் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ. 550 வீதம் | |
| 15 அலமாரிகள் ஒன்று ரூ. 2,000 வீதம் | |
| அனுப்புகைச் செலவு ரூ. 200 | |
| கழிக்க: வியாபாரத் தள்ளுபடி 10% |
45.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து. 2003 மார்ச் 31 - ல் திரு முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
1. 31.03.2008 - ல் வங்கி அறிக்கையின் வரவிருப்பு ரூ 5,000
2. வங்கிக் கட்டணம் ரூ 120 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
3. ஏற்கனவே ரூ 7,000 - க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 2, 000 காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
4. ஏற்கனவே ரூ 9,000 - க்கு விடுத்த காசோலைகளில் ரூ 7,600 - க்கான காசோலைகள் மட்டுமே வங்கியில் முன்னிலைப்படுத்தபட்டிருக்கின்றன.
5. வாங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்கா தாயம் ரூ 800 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
6. 31.03.08 - க்கு முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது. ரூ 1,200 ரொக்க ஏட்டில் பதியவில்லை.
46.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?
47.
நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.
| இயந்திரத்தின் அடக்கவிலை | ரூ. 2,30,000 |
| நிறுவுவதற்கான செலவுகள் | ரூ. 20,000 |
| பயனளிப்புக் காலம் | 10 ஆண்டுகள் |
| ஏறி மதிப்பு | ரூ. 50,000 |
48.
இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விளக்குக.
49.
நீள்பயன் வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?
50.
இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறிய செய்ய வேண்டியன யாவை?
51.
2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
(ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
(iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
(iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
(v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.
52.
கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.
53.
ஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.
54.
நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?
1.
(a)
| விற்பனை கணக்கு | ப |
| அறைகலன் கணக்கு |
2.
(d)
முறையான குறிப்பேடு
3.
(b)
860
4.
(a)
ஆதார ஆவணங்கள்
5.
(b)
9%
6.
(b)
வருவாயினச் செலவு
7.
(c)
தொடக்கப் பதிவு
8.
(a)
ரூ 30,000
9.
(a)
உரிமையாளர்
10.
(a)
பொறுப்பாகும்
11.
(d)
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
12.
(b)
அச்சுப்பொறி
13.
(c)
அறைகலன்
14.
(a)
சொத்தினை பயன்பாட்டிற்கு இட்ட நாள்முதல்
15.
(b)
அனாமத்துக் கணக்கு
16.
(c)
வங்கி அறிக்கை மற்றும் ரொக்க ஏட்டின் வங்கி பத்தி
17.
(b)
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்க உதவுவது
18.
(c)
பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
19.
(b)
20.
(a)
எதிர்ப்பதிவு
21.
(1) செலுத்தற்குரிய நாள் மே 4
(2) செலுத்தற்குரிய நாள் ஆகஸ்ட் 14 (ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் பொதுவிடுமுறை)
22.
| 1. வங்கி மேல்வரைப் பற்று | வரவு |
| 2. பற்பல கடனாளிகள் | பற்று |
| 3. பற்பல கடனீந்தோர் | வரவு |
| 4. உள் திருப்பம் | பற்று |
| 5. வெளித்திருப்பம் | வரவு |
| 6. பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | பற்று |
| 7. செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | வரவு |
| 8. முதலீடுகள் | பற்று |
| 9. பெற்ற கழிவு | வரவு |
| 10. முதலீடுகள் மீதான வட்டி | வரவு |
23.
குறைந்து செல் மதிப்பு என்பது சொத்தின் எட்டு மதிப்பு ஆகும். அதாவது (சொத்தின் அடக்க விலையிலிந்து கடந்த கணக்காண்டு வரை உள்ள தேய்மானத் தொகை கழிக்கப்பட்டது)ஆண்டு தோறும் தேய்மானத் தொகை குறைந்து கொண்டே செல்வதால் இம்முறையானது குறைந்து செல் இருப்பு முறை அல்லது குறைந்து செல் மதிப்பு முறை எனவும் அழைக்கப்படுகிறது.
24.
கணக்கியலில், கணினி பொதுவாக கீழ்கண்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
(அ) வணிக நடவடிக்கைகள் பதிவு செய்தல்
(ஆ) சம்பளப் பட்டியலில் கணக்கிடுதல்
(இ) பண்டக சாலை கணக்கியல் மற்றும்
(ஈ) கணக்கியல் அறிக்கைகள் உருவாக்குதல்
25.
தொழிலுக்கு வெளியே முதலீடு செய்யப்படும் பங்குகள்,வைப்புகள் போன்றவைகளுக்கு கிடைக்கப் பெற வேண்டிய வட்டியை முதலீடுகள் மீது பெற வேண்டிய வட்டி என்கிறோம்.
26.
ஒரு வியாபார அமைப்பிற்கும் அதன் வாடிக்கையாளருக்கும் இடையே நடைபெறும் பல்வேறு நடவடிக்கைகளின் தொகுப்பே கணக்கு எனப்படும். ஒரு நபர், சொத்து, செலவு மற்றும் வருவாய் ஆகியவற்றிக்கு தனித்தனியாக கணக்குகள் துவக்கப்படும்.
கணக்குகள் மூன்று வகைப்படும்.
1. ஆள்கார் கணக்குகள்,
2. சொத்துக் கணக்குகள்
3. பெயரளவுக் கணக்குகள்.
27.
வியாபாரம் என்பது இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் சரக்குகள் வாங்குதல் மற்றும் விற்றலைக் குறிக்கின்றது. வியாபாரக் கணக்கு கணக்காண்டிற்குரிய சரக்குகள் வாங்குதல் மற்றும் விற்றலின் முடிவினைக் காட்டும் ஒரு பெயரளவுக் கணக்கு ஆகும்.
28.
| வ.எண் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | அனாமத்துக் க/கு | ப | 1,000 | ||
| கொள்முதல் க/கு | 1,000 | ||||
| (கொள்முதல் ஏட்டில் ரூ.10,000 அதிகமாக கூட்டப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| ஆ | அறைகலன் பழுதுபார்புச் செலவு க/கு | ப | 500 | ||
| அறைகலன் க/கு | 500 | ||||
| (அறைகலன் பழுதுபார்புச் செலவு ரூ.500 அறைக்கலன் கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| இ | அனாமத்துக் க/கு | ப | 198 | ||
| அகில்நிலவன் க/கு | 198 | ||||
| (அகில் நிலவன் கணக்கில் கூடுதலாக பற்று வைக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) |
29.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக் கட்டியதற்கானத் தொகை ரூ 5,000 முதலினச் செலவாகும்.
(ii) பழைய மகிழுந்து வாங்கியது மற்றும் அதை உடனடியாக பழுதுபார்ப்புச் செய்த செலவு மொத்தம் ரூ 32,000 முதலினச் செலவாகும்.
(iii) புதிய தொழிற்சாலைக்கான வண்ணம் பூசியதற்கானச் செலவு ரூ 10,000 முதலினச் செலவாகும்.
(iv) ஏற்றிச் செல் செலவு வண்டிக்கட்டணம் மற்றும் நிறுவுகைச் செலவு முதலினச் செலவாகும்.
(v) பழைய வாகனம் வாங்கி உடனடியாக பழுதுபார்த்தது ரூ 150 முதலினச் செலவாகும்.
30.
(i) ரொக்க ஏடு என்பது ரொக்க நடவடிக்கைகளை மட்டும், நாள் வரிசைப்படி பாதியாக கூடிய ஒரு ஏடாகும். ரொக்க நடவடிக்கைகள் முதன்முதலில் ரொக்க ஏட்டில் பதியப்படுவதால் இது ஒரு முதல் மூலப் பதிவேடு அல்லது முதன்மை பதிவேடு ஆகும்.
(ii) ரொக்க நடவடிக்கைகள் என்பது இங்கு வங்கி நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்கலாம்.
31.
| வரிசை எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | முதல் | - | 70,000 | |
| 2. | எடுப்புகள் | 45,000 | ||
| 3. | பற்பல கடனீந்தோர் | - | 3,000 | |
| 4. | பெற்ற தள்ளுபடி | - | 5,450 | |
| 5. | பற்பல கடனாளிகள் | 20,000 | - | |
| 6. | கழிவு (ப) | 1,000 | ||
| 7. | இயந்திரம் | 10,000 | ||
| 8. | வரிவீதங்கள் | 2,450 | ||
| மொத்தம் | 78,450 | 78,450 |
32.
| நாள் | விவரம் | கு.ப. எண் | தொகை | நாள் | விவரம் | கு.ப.எண். | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||||
| மார்ச் 1 | ரொக்க க/கு | 10000 | |||||
| மார்ச் 5 | கணேஷ் க/கு | 5000 | |||||
| மார்ச் 8 | ரொக்க க/கு | 15000 | |||||
| மார்ச் 10 | வங்கி க/கு | 8000 | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 38000 | |||||
| 38000 | 38000 | ||||||
| 2015 | |||||||
| ஏப் 1 | இருப்பு கீ/கொ | 38000 |
33.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை | நாள் | செலுத்தல்கள் | சா.சீ. எண் |
பே.ப. எண் |
தொகை |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2016 ஆக 1 |
இருப்பு கீ/கொ | 46,000 | 2016 ஆக 3 |
வங்கிக் க/கு | 12,000 | ||||
| 4 | விற்பனை க/கு | 24,000 | 7 | அச்சுக்கட்டணம் க/கு | 3,000 | ||||
| 9 | நடேசன் க/கு | 8,000 | 14 | கணிப்பொறி க/கு | 35,000 | ||||
| 12 | பங்காதாயக் க/கு | 2,000 | 31 | இருப்பு கீ/இ | 35,000 | ||||
| 17 | மணி க/கு | 3,000 | |||||||
| 24 | வங்கிக் க/கு | 2,000 | |||||||
| 85,000 | 85,000 | ||||||||
| 2016 செப் 1 | இருப்பு கீ/கொ | 35,000 |
34.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| செல்லோட்டின் வங்கி இருப்பு (வரவிருப்பு சாதகமான இருப்பு) |
2,500 | |
| கூட்டுக: | ||
| வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியாதது |
60 | |
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 1,000 | |
| காசோலை அவமதிக்கப்பட்டு ரொக்க ஏட்டில் பதியாதது | 600 | 1,600 |
| 4,160 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் முன்னிலைக்கப்படுத்தாதவை | 700 | |
| வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் |
400 | 1,100 |
| ரொக்க ஏட்டின் படி வங்கி இருப்பு | 3,060 |
35.
| நாள் | விவரம் | தொகை ரூ. |
|---|---|---|
| 2001 ஜன 1 | அடக்கவிலை | 5,00,000 |
| 2001 மார்ச் 31 | கழிக்க: தேய்மானம் (5,00,000 x\({15\over 100}\times {3\over 12}\) ) |
18,750 |
| 4,81,250 | ||
| 2002 மார்ச் 31 | கழிக்க: தேய்மானம் (5,00,000 x\({15\over 100}\) ) |
75,000 |
| 4,06,250 | ||
| 2003 மார்ச் 31 | கழிக்க: தேய்மானம் (5,00,000 x\({15\over 100}\times {9\over 12}\) ) |
56,250 |
| எட்டு மதிப்பு | 3,50,000 | |
| விற்பனை விலை | 4,00,000 | |
| இயந்திரம் விற்றதில் இலாபம் | 50,000 |
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 2001 ஜன 1 | வங்கி க/கு | 5,00,000 | 2016 மார்ச் 31 | தேய்மானம் க/கு | 18,750 |
| 2016 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 4,81,250 | |||
| 5,00,000 | 5,00,000 | ||||
| 2000 ஏப் 1 | இருப்பு கீ/கொ | 4,81,250 | 2016 மார்ச் 31 | தேய்மானம் க/கு | 75,000 |
| 2016 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 4,06,250 | |||
| 4,81,250 | 4,81,250 | ||||
| 2001 ஏப் 1 | இருப்பு கீ/கொ | 4,06,250 | 2002 மார்ச் 31 | தேய்மானம் க/கு | 56,250 |
| 2002 ஜன 1 | இலாப நட்டக் க\கு (விற்பனை இலாபம்) |
50,000 | 2002 மார்ச் 31 | வங்கி க/கு (விற்பனை) |
4,00,000 |
| 4,56,250 | 4,56,250 |
36.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 20,000 | விற்பனை | 1,50,000 | ||
| கொள்முதல் | 70,000 | கழிக்க : திருப்பம் | 5,000 | 1,45,000 | |
| கழிக்க : திருப்பம் | 4,000 | 66,000 | இறுதிச் சரக்கிருப்பு | 30,000 | |
| கூலி | 5,000 | ||||
| உள் ஏற்றிச் செல் செலவு | 4,000 | ||||
| மொத்த இலாபம் | 80,000 | ||||
| கீ/இ (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| 1,75,000 | 1,75,000 | ||||
| தள்ளுபடி கொடுத்தது | 2,000 | மொத்த இலாபம் கீ/கொ | 80,000 | ||
| (வியாபார கணக்கிலிருந்து மாற்றப்பட்டது ) | |||||
| வங்கிக் கட்டணம் | 500 | தள்ளுபடி பெற்றது | 1,000 | ||
| சம்பளம் | 4,500 | ||||
| வெளி ஏற்றிச் செல் செலவு | 1,000 | ||||
| வாடகை மற்றும் வரி | 5,000 | ||||
| விளம்பரம் | 6,000 | ||||
| நிகர இலாபம் | 62,000 | ||||
| (முதல் கணக்கிற்கு மாற்ற வேண்டியது ) | |||||
| 81,000 | 81,000 |
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துகள் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| பற்பல கடனீந்தோர் | 30,000 | ரொக்கம் கையிருப்பு | 1,000 | ||
| முதல் கணக்கு | 56,000 | வங்கியிருப்பு | 7,000 | ||
| கூட்டுக : நிகர இலாபம் | 62,000 | 1,18,000 | பற்பல கடனாளிகள் | 60,000 | |
| இறுதிச் சரக்கிருப்பு | 30,000 | ||||
| பொறியும், பொறித் தொகுதியும் | 50,000 | ||||
| 1,48,000 | 1,48,000 |
37.
புறப் பயனீட்டாளர்கள்:
புறப்பயனீட்டாளர்கள் என்பவர்கள் நிறுவனத்திற்கு வெளியிலுள்ள நபர்கள். ஆனால், நிறுவனத்தின் கணக்கியல் விவரங்களை தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துபவர்கள் ஆவர். அவர்கள் பின்வருமாறு,
(i) கடனீந்தோர் மற்றும் நிதி நிறுவனங்கள்:
பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்கள், வணிக வங்கிகள், பொது வைப்புநிதி வைத்திருப்பவர்கள் மற்றும் கடனீட்டு பத்திரத்தார்கள் இந்த பிரிவில் அடங்குவர்.
(ii) முதலீட்டாளர்கள்:
(1) ஒரு நிறுவனத்தில் தங்களது நிதியை முதலீடு செய்யும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொண்டு தங்களது முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர்.
(2) அவர்கள் நிறுவனத்தின் எதிர்கால இலாபம் மற்றும் இடர்ஏற்கும் திறன் போன்ற, தங்களது இலாபத்தை பாதிப்பவைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பர்.
(iii) வாடிக்கையாளர்கள்:
(1) வணிக நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள் மற்றும் சேவைகளை, வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவற்றின் விவரங்கள் மற்றும் விலைகள் பற்றி அறிய விருப்பம் கொண்டுள்ளனர்.
(2) அவர்களுக்கு தொடர்ந்து பொருட்களும், சேவைகளும் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதற்காக நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் இலாபம் ஈட்டும் திறன் ஆகியவற்றை அறிய ஆர்வம் காட்டுவர்.
38.
| கணக்கேடுகள் பராமரிப்பு | கணக்கியல் |
|---|---|
| 1.செயல்பரப்பு: வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் மற்றும் வகைப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. |
நிதித் தகவல்களை, கணக்கேடுகளில் பதிவு செய்தல், வகைப்படுத்துதல்.பகுப்பாய்வு மற்றும் உய்த்துணர்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. |
| 2.நிலை: கணக்கியலின் முதன்மை நிலை கணக்கீடுகள் பராமரிப்பாகும். |
இது இரண்டாம் நிலையான பகுப்பாய்வு மற்றும் உய்த்துணர்த்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. |
| 3. பணி இயல்பு: இது வழக்கமான மற்றும் எழுத்தர் பணி கொண்டது. |
இது பகுப்பாய்வுத் தன்மை கொண்டது. |
| 4. தேவையான அறிவு: இதற்கு குறிப்பேட்டில் பதிவு செய்தல், எடுத்தெழுதல் சார்ந்த அடிப்படை அறிவு தேவைப்படுகிறது. |
கணக்கியல் பதிவுகளை மேற்கொள்ள கணக்கியல் விதிமுறைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் சார்ந்த முழுமையான அறிவு தேவைப்படுகிறது. |
| 5. தேவையான திறன்: பகுப்பாய்வு திறன் கணக்கு பராமரிப்பிற்கு தேவையில்லை |
கனாகியலுக்கு பகுப்பாய்வு பகுப்பாய்வு திறன் தேவைப்படுகிறது. |
| 6. நோக்கம் வணிக நடவடிக்கைகளை முறையாக ஏடுகளில் பராமரித்தல் | வணிகத்தின் நிகர முடிவினை அறிதல் |
39.
| A | B | C | D | E | |
|---|---|---|---|---|---|
| 1 | NAME | HOUSE NO. | STREET | PLACE | PINCODE |
| 2 | ANAND | 123 | KAMARAJAR SALAI | Chennai | 600018 |
செயல்முறை
(i) முகவரியை நிரப்புவதற்கு
(அ) MS-Excel ல் புதிய விரிதாளை திறக்கவும்
(ஆ) எடுத்துக்காட்டில் கொடுத்துள்ளபடி அனைத்து மதிப்புகளையும் உள்ளீடு செய்ய செய்யவும்.
(இ) B3 ல் கீழ்க்காணும் சூத்திரத்தை உள்ளீடு செய்யவும்
=CONCATENATE(A2,” “,B2,” “,C2,” “,D2,” “,E2)
விடை
ANAND 123 KAMARAJAR SALAI Chennai 600018
ii) C2 வில் உள்ள KAMARAJAR SALAI என்பதை சிறிய எழுத்துக்களாக மாற்ற, C3-ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை உள்ளீடு செய்யவும்
=LOWER(C2)
விடை
kamarajar salai
iii) D2 வில் உள்ள Chennai என்பதை D3 –ல் பெரிய எழுத்துக்களாக மாற்ற, D3- ல் கீழ்க்கண்ட சூத்திரத்தை உள்ளீடு செய்யவும்
=UPPER(D2)
விடை
CHENNAI
40.
| விவரம் | தொகை ரூ |
|---|---|
| கனரக வாகனத்தின் விலை | 8,00,000 |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (8,00,000 x \({5\over 100}\times {6\over 12}\)) | 6,000 |
| 7,40,000 | |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (7,40,000 x \({15\over 100}\)) | 1,11,000 |
| 6,29,000 | |
| கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் (6,29,000 x \({15\over 100}\)) | 94.350 |
| எட்டு மதிப்பு | 5,34,650 |
| விற்ற விலை | 5,00,000 |
| விற்ற பொருளின் மீது நட்டம் | 34,650 |
41.
| விவரம் | பே.ப. எ | பற்று ரூ | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | அனாமத்துக் க/கு | ப | 18 | ||
| மேகலா க/கு | 18 | ||||
| (மேகலா கணக்கில் தொகை கூடுதலாகப் பதிவுசெய்யப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஆ | அளித்த தள்ளுபடி க/கு | ப | 100 | ||
| பெற்ற தள்ளுபடி க/கு | 100 | ||||
| அனாமத்துக் க/கு | |||||
| (அளித்த தள்ளுபடி தவறாக பெற்ற தள்ளுபடிக் கணக்கில் பதிவுசெய்யப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது.) | |||||
| இ | கண்ணன் க/கு | ப | 275 | ||
| மன்னன் க/கு | 275 | ||||
| (மன்னன் கணக்குக்கு பதிலாக கண்ணன் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஈ | எழுதுபொருள் க/கு | ப | 26 | ||
| அனாமத்துக் க/கு | 26 | ||||
| (எழுதுபொருள் வாங்கியது எழுது பொருள் கணக்கில் பதியாதது திருத்தம் செய்யப்பட்டது.) | |||||
| உ | கொள்முதல் க/கு | ப | 100 | ||
| (கொள்ள்முதல் ஏட்டில் குறைவாகக் கூட்டப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது.) |
42.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| ஜனவரி 1 | ரொக்கக் க/கு | ப | 3,00,000 | ||
| இராஜா முதல் க/கு | 3,00,000 | ||||
| (ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது) | |||||
| 2 | கொள்முதல் க/கு | ப | 1,00,000 | ||
| ராஜிவ் க/கு | 1,00,000 | ||||
| (கடனுக்கு கொள்முதல் செய்தது) | |||||
| 3 | வங்கி க/கு | ப | 2,00,000 | ||
| ரொக்கக் க/கு | 2,00,000 | ||||
| (வங்கியில் ரொக்கம் செலுத்தியது) | |||||
| 20 | ரொக்கக் க/கு | ப | 1,00,000 | ||
| வங்கிக் கடன் க/கு | 1,00,000 | ||||
| (வங்கியில் கடன் பெற்றது) | |||||
| 22 | எடுப்புகள் க/கு | ப | 800 | ||
| வங்கி க/கு | 800 | ||||
| (சொந்த உபயோகத்திற்க்காக வங்கியிலிருந்து பணம் எடுத்தது) | |||||
| 23 | ராஜீவ் க/கு | ப | 1,00,000 | ||
| வங்கி க/கு | 99,000 | ||||
| பெற்ற தள்ளுபடி க/கு | 1,000 | ||||
| (ராஜீவ் கணக்கு தீர்க்கப்பட்டது) | |||||
| 25 | எடுப்புகள் க/கு | ப | 200 | ||
| வங்கி க/கு | 200 | ||||
| (உரிமையாளரின் சந்தா காசோலை மூலம் செலுத்தியது) | |||||
| 26 | எடுப்புகள் க/கு | ப | 2,000 | ||
| வங்கி க/கு | 2,000 | ||||
| (மின் கட்டணம் எடுப்பு அட்டை மூலம் செலுத்தியது) | |||||
| 31 | அறக்கட்டளை க/கு | ப | 1,000 | ||
| கொள்முதல் க/கு | 1,000 | ||||
| (உணவு இலவசமாக அறக்கட்டளை அமைப்பிற்கு வழங்கியது) | |||||
| 31 | பெட்டக வாடகை க/கு | ப | 1,000 | ||
| வங்கி க/கு | 1,000 | ||||
| (பெட்டக வாடகை செலுத்தியது) |
43.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை | நாள் | செலுத்தல்கள் | சா.சீ. எண் |
பே.ப. எண் |
தொகை | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தள்ளுபடி | ரொக்கம் | தள்ளுபடி | ரொக்கம் | ||||||||
| 2017 நவ 1 | இருப்பு கீ/கொ | 22,000 | 2017 நவ 7 | கொள்முதல் க/கு | 8,800 | ||||||
| 2 | விற்பனை க/கு | 14,000 | 12 | பலராமன் க/கு | 200 | 26,800 | |||||
| 8 | கோவிந்தன் க/கு | 240 | 11,760 | 15 | எடுப்புகள் க/கு | 4,000 | |||||
| 29 | மதன் க/கு | 200 | 4,800 | 28 | வங்கி க/கு | 5,000 | |||||
| 30 | சம்பளம் க/கு | 4,000 | |||||||||
| 30 | இருப்பு கீ/இ | 3,960 | |||||||||
| 440 | 52,560 | 200 | 52,560 | ||||||||
| டிச 1 | இருப்பு கீ/கொ | 3,960 | |||||||||
44.
| நாள் | விவரம் | இடாப்பு எண் |
பே ப.எ |
தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | |||||
| மே 4 | காசி அறைகலன் நிறுவனம், கன்னியாகுமரி | ||||
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ 300 வீதம் | 3,000 | ||||
| 4 மேசைகள் ஒன்று ரூ 800 வீதம் | 3,200 | 6,200 | |||
| மே 10 | முருகன் அறைகலன் நிறுவனம், நாகப்பட்டினம் | ||||
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ. 250 வீதம் | 2,500 | ||||
| 5 மேசைகள் ஒன்று ரூ. 750 வீதம் | 3,750 | ||||
| 6,250 | |||||
| கூட்டுக: கட்டும மற்றும் அனுப்புகைச் செலவுகள் | 150 | 6,400 | |||
| மே 25 | கௌதம் நிறுவனம், சென்னை | ||||
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ. 550 வீதம் | 5,500 | ||||
| 15 இரும்பு அலமாமாரிகள் ஒன்று ரூ. 2,000 வீதம் | 30,000 | ||||
| 35,500 | |||||
| கழிக்க: வியாபாரத் தள்ளுபடி ஒன்று 10% | 3,550 | ||||
| 200 | |||||
| 31,950 | |||||
| கூட்டுக: அனுப்புகைச் செலவுகள் | 200 | 32,150 | |||
| கொள்முதல் க/கு ப | 44,750 | ||||
45.
| ரொக்க ஏட்டின்படி வங்கியிருப்பு | 6,120 | |
| கூட்டுக: | ||
| காசோலை விடுத்தும் இன்னும் முன்னிலைப்படுத்தப்படாதவை | 1,400 | |
| வங்கி வரவு வைத்த பங்காதாயம் | 800 | |
| 2,200 | ||
| (-) | ||
| 8,320 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்தியும் வசூல் ஆகாத காசோலைகள் | 2,000 | |
| வங்கி கட்டணம் (பற்று) | 120 | |
| காசோலை அவமதிக்கப்பட்டது | 1,200 | |
| 3,320 | ||
| (-) | ||
| வங்கி அறிக்கையின்படி வரவிருப்பு | 5,000 |
46.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள்:
அ) பணவீக்க காலத்தில், பொருட்களின் விலை அதிகரிக்கும், போது சொத்துக்களைப் புராதன அடக்க விலையில் மதிப்பிடுவது வணிகத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிப்பதில்லை.
(ஆ) புராதன அடக்க விலையில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால், வெவ்வேறு நாட்களில் நிறுவப்பட்ட வணிக அமைப்புகளின் முடிவுகளை ஒப்பீடு செய்ய முடியாது.
(இ) மனித வளங்கள் போன்ற அடக்க விலையில் மதிப்பிட முடியாத சொத்துக்களை இக்கருத்தின் கீழ் அங்கீகரிக்க முடிவதில்லை.
47.
மொத்த அடக்கவிலை = அடக்கவிலை +நிறுவுவதற்கான செலவுகள்
=ரூ. 2,30,000+ரூ. 20,000=ரூ. 2,50,000

\(={2,50,000-50,000\over 10}\)
\(={2,00,000\over 10}\)= ரூ. 20,000

\(={2,00,000\over 2,50,000}\times 100=8\%\)
48.
ஒரு இருப்பாய்வு கீழ்க்கண்ட முறைகளில் தயாரிக்கப்படுகிறது.
(i) இருப்பு முறை:
இம்முறையில் ஒவ்வொரு பேரே ட்டுக் கணக்குகளிலிருந்து கிடைக்கப்பேற்றை, பற்று அல்லது வரவு இருப்பிற்கு ஏற்ப உரிய கணக்கிற்கு எதிரே இருப்பாய்வில் பதியப்படுகிறது.
(ii) மொத்தத் தொகை முறை:
இம் முறையில்,பற்றுப் பக்கத்திலுள்ள பேரேட்டுக் கணக்குகளின் மொத்த தொகையும் மற்றும் வரவுபக்கத்திலுள்ள பேரேடுக்கணக்குகளின் மொத்த தொகையும் கணக்கிடப்பட்டு, இருப்பாய்வில் பதியப்படுகின்றன.
(iii) மொத்தத் தொகை மற்றும் இருப்பு முறை:
இம்முறை மொத்தத் தொகை முறை மற்றும் இருப்பு முறை ஆகியவற்றை ஒன்று சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலப்பின் முறையாகும். இம்முறையில் மொத்தம் நான்கு பத்திகள் உள்ளன. அவை,
(அ) பேரேட்டுக் கணக்குகளின் பற்றுப் பக்கங்களின் மொத்தம்.
(ஆ) பேரேட்டுக் கணக்குகளின் வரவுப் பக்கங்களின் மொத்தம்
(இ) பேரேட்டுக்கணக்குகளின் பற்று இருப்பு
(ஈ) பேரேட்டுக் கணக்குகளின் வரவு இருப்பு என்பதாகும். இம்முறையும் வழக்கத்தில் இல்லை.
49.
நீள்பயன் வருவாயினச் செலவின் இயல்புகள்:
(i) இது ஒரு வருவாயினச் செலவு. இச்செலவின் பயன் எதிர்வரும் காலத்தில் கிடைக்கக் கூடியது.
(ii) இச்செலவு, செலவழித்த ஆண்டிலேயே முழுவதும் போக்கெழுதப்படுவதில்லை. குறிப்பிட்ட சில ஆண்டுகளில் போக்கெழுதப்பட வேண்டும்.
(iii) போக்கெழுதியது போக மீதமுள்ள தொகை (உள்ளபடியான செலவு - போக்கெழுதிய தொகை) இருப்புநிலைக் குறிப்பில் சொத்துகள் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
50.
இருப்பாய்வு தயாரிக்கும் முன்பு பிழைகளைத் தற்செயலாகவோ அல்லது கணக்கு ஏடுகளை குறிப்பிட்ட நோக்கத்திற்காக கூர்ந்தாய்வு செய்தோ கண்டறியலாம். இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறியப் பின்பற்ற வேண்டிய படிநிலைகள் பின்வருமாறு:
| (i) | உரிய குறிப்பேட்டின் பதிவுகளை கூர்ந்தாய்வு செய்தல் |
| (ii) | துணை ஏடுகளில் பதிவுகளை கூர்ந்தாய்வு செய்தல் |
| (iii) | துணை ஏடுகளின் கூட்டுத்தொகைகளை ஆய்வு செய்தல் |
| (iv) | பேரேட்டுக் கணக்கில் பதிவு செய்தவற்றை கூர்ந்தாய்வு செய்தல் |
| (v) | பேரேட்டு கணக்குகளின் இருப்புக் காட்டியதை கூர்ந்தாய்வு செய்தல் |
மேற்கண்டவாறு கண்டுபிடித்த பிழைகளை தொடர்புடைய கணக்குகளில் பற்று அல்லது வரவு வைப்பதன் மூலம் திருத்தம் செய்ய வேண்டும்.
51.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017, டிச 31 | சம்பளக் க/கு கொடுபட வேண்டிய சம்பளக் க/கு (கொடுபட வேண் டிய சம்பளம் சரிக்கட்டப்பட்டது) |
ப | 1,200 | 1,200 | |
| டிச. 31 | வாடகைக் க/கு கொடுபட வேண்டிய வாடகை க/கு (கொடுபட வேண்டிய வாடகை சரிக்கட்டப்பட்டது) |
ப | 300 | 300 | |
| டிச. 31 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமக் க/கு காப்பீட்டு முனைமக் க/கு (முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு சரிக்கட்டப்பட்டது) |
ப | 450 | 450 | |
| டிச. 31 | முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி க/கு முதலீடுகள் மீதான வட்டி க/கு (முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி சரிக்கட்டப்பட்டது) |
ப | 400 | 400 | |
| டிச. 31 | வாராக்கடன் க/கு பற்பல கடனாளிகள் க/கு (வாராக்கடன் போக்கெழுதியது) |
ப | 200 | 200 |
52.
படிவம்-கொள்முதல் ஏடு/கொள்முதல் குறிப்பேடு
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப எண் | தொகை(ரூ.) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| (i) | (ii) | (iii) | (iv) | (v) | (vi) |
| கொள்முதல் க/கு ப | |||||
53.
ஆள்சார் கணக்கு:
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்குகள் எனப்படும்.இது தனி நபர், சட்டமுறை அமைப்பு, பிரதி நிதிதித்துவ அமைப்பு எனப் பிரிக்கப்படுகிறது.
(a) தனிநபர் கணக்கு:
தனி மனிதர் சார்புடைய கணக்குகளாகும்.எ.கா: ரமேஷ் கணக்கு, ராதா கணக்கு.
(b) சட்டமுறை ஆள்சார் கணக்கு:
ஆட்களின் குழு அல்லது அமைப்பு அல்லது சங்கம் சார்புடைய கணக்குகளாகும்.
எ.கா: வங்கி க/கு HMT Ltd., க/கு காப்பீட்டுக் கழகம். கணக்கு போன்றவை.
(iii) பிரதிநிதித்துவ அமைப்பு
இது இயற்கை அல்லது செயற்கை தன்மையுடைய நபரையோ அல்லது குழுவையோ குறிக்கிறது.
எ.கா.: கொடுப்பட வேண்டிய சம்பளக் கணக்கு, முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு கணக்கு போன்றவை.
54.
குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எடுத்தெழுதப்படும் முறைகள்:
(i) குறிப்பேட்டில் பற்று வைக்கப்பட்டுள்ள கணக்கை காண்க. அக்கணக்கு எகனாவே துவங்கப்படவில்லை என்றால் அப்பேரேட்டை துவக்க வேண்டும். கணக்கின் பெயரை மேல்பகுதியில் நடுவில் எழுதவேண்டும்.
(ii) கணக்கின் பற்றுப்பக்கத்தில் நாள் பத்தியில் நடவடிக்கை நிகழ்ந்த நாளைக்கு குறிப்பிட வேண்டும்.
(iii) விவரப்பத்தியில் குறிப்பேட்டில் வரவு வைக்கப்பட்டுள்ள கணக்கின் பெயரைப் பதிய வேண்டும்.
(iv) குறிப்பேட்டில் பற்றுத் தொகை பத்தியில் உள்ள இக்கணக்கிற்குரிய தொகையினை, தொகை பத்தியில் பதிய வேண்டும்.
(v) குறிப்பேட்டில் வரவு வைக்கப்டுள்ள கணக்கை கண்டறியவும். அவ்வாறு இல்லை என்றால் அக்கணக்கை பேரேட்டில் புதிதாக துவங்க வேண்டும். கணக்கின் பெயரை மேல் பகுதியின் நடுவில் எழுத வேண்டும்.
(vi) குறிப்பேட்டில் பற்று வைக்கப்பட்டுள்ள கணக்கின் பெயரை விவரப்பத்தியில் எடுத்து எழுத வேண்டும். அதற்குரிய தொகையை தொகைப் பத்தியில் எழுத வேண்டும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards