11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 14/09/2019
கணக்குப்பதிவியல் காலாண்டு
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
வங்கி அறிக்கையின்படி இருப்பு ரூ 7,500 செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது ரூ,1,500 ரொக்க ஏட்டின் வங்கி பத்தியின் இருப்பு
6,000 மேல்வரைப்பற்று
9,000 மேல்வரைப்பற்று
9,000 சாதக இருப்பு
6,000 சாதக இருப்பு
2.
கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவது
மொத்த கொள்முதல்
ரொக்கக் கொள்முதல் மட்டும்
கடன் கொள்முதல் மட்டும்
இவற்றில் ஏதும் இல்லை
3.
சீனிவாசன் அவர்களுக்கு சரக்கு விற்பனை செய்ததற்கு பற்று வைக்க வேண்டிய கணக்கு.
ரொக்கக் க/கு
சீனிவாசன் க/கு
விற்பனை க/கு
கடன் க/கு
4.
சில்லறை ரொக்க ஏடு _________வகைப்படும்
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
5.
நாம் வழங்கிய காசோலை அவமதிக்கப்பட்டால் வரவு செய்யப்படும் கணக்கு
சரக்கீந்தோர் க/கு
வாடிக்கையாளர் க/கு
உரிமையர் க/கு
வங்கி க/கு
6.
ரொக்க ஏட்டின் பற்றிருப்பு என்பது
செல்லேட்டின் மேல்வரைப் பற்று
செல்லேட்டின்படி வரவு இருப்பு
ரொக்க ஏட்டின் படி மேல்வரைப் பற்று
இவை ஏதுவுமில்லை
7.
ஒரு தொழிலின் பொறுப்புகள் மதிப்பு ரூ.60,00/- அதன் உரிமையாளரின் முதல் ரூ.1,40,000 எனில் சொத்துக்களின் மதிப்பு
ரூ.1,40,000
ரூ.80,000
ரூ.60,000
ரூ.2,00,000
8.
ரொக்க ஏட்டின் படி இருப்பு ரூ.2,000. வங்கியால் பற்று செய்யப்பட்ட வங்கிக் கட்டணம் ரூ.50 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை எனில் வங்கி அறிக்கையின் படி இருப்பு என்ன
ரூ 1,950 வரவு இருப்பு
ரூ, 1,950 பற்று இருப்பு
ரூ, 1,950 பற்று இருப்பு
ரூ 2,050 வரவு இருப்பு
9.
நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு
கொள்முதல் ஏடு
விற்பனை ஏடு
கொள்முதல் திருப்ப ஏடு
உரிய குறிப்பேடு
10.
11.
இருப்பாய்வு கீழ்க்கண்ட எந்த கணக்குகளை உள்ளடக்கி இருக்கும்
ஆள்சார் கணக்குகள் மட்டும்
சொத்துக் கணக்குகள் மட்டும்
பெயரளவு கணக்குகள் மட்டும்
அனைத்து கணக்குகளும்
12.
உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
எடுப்புகள் கணக்கு
ரொக்கக் கணக்கு
முதல் கணக்கு
கொள்முதல் கணக்கு
13.
பின்வருனவற்றில் பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு எது?
கட்டடம் கணக்கு
கொடுபட வேண்டிய சம்பள கணக்கு
மகேஷ் கணக்கு
பாலன் நிறுவனம்
14.
கணக்கியல் சமன்பட்டின்படி சரியாக இல்லாதது.
சொத்துக்கள் = பொறுப்புகள் + முதல்
சொத்துக்க ள் = முதல் + பொறுப்புகள்
பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
முதல் = சொத்துக்கள் - பொறுப்புகள்
15.
ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
வரவு இருப்பு
பற்று இருப்பு
இருப்பு இன்மை
பற்றும் மற்றும் வரவு இருப்பு
16.
இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
இந்திய மைய வங்கி
இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்
உச்ச நீதி மன்றம்
இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்
17.
18.
சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு
ஒரு செலவு
ஒரு இலாபம்
ஒரு சொத்து
ஒரு பொறுப்பு
19.
பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.
நிதிநிலைக் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
மனிதவளக் கணக்கியல்
மேற்கண்ட ஏதுமில்லை
20.
நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது
சமூகக் கணக்கியல்
காரியதரிசிகளின் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
பொறுப்பு கணக்கியல்
21.
இருப்பாய்வு உடன்படுவது எந்த கோட்பாட்டின் அடிப்படையில் என்பதை விளக்குக.
22.
வங்கிச் செல்லேடு என்றால் என்ன?
23.
செலுத்துகைச் சீட்டு என்றால் என்ன (Pay-in-slip)?
24.
குறிப்பு வரைக: அ. கடனாளிகள், ஆ. கடனீந்தோர்
25.
கொள்முதல் ஏடு என்றான்றால் என்ன?
26.
சொத்து கணக்கு என்றால் என்ன?
27.
கணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்?
28.
2016 மார்ச் 31 - ல் சுதா நிறுவனத்தின் ரொக்க ஏடு ரூ 3,000 வங்கி ரொக்க இருப்பைக் காட்டியது.ஆனால் வங்கியில் பணம் பெற முன்னிலைப்படுத்தப்படாத காசோலைகள் ரூ 370, ரூ 350 மற்றும் ரூ 200 ஆகும் மற்றும் 820 மதிப்புள்ள காசோலைகள் வங்கியில் செலுத்தியும் பணமாக்கப்படவில்லை.அந்நாளில் வங்கி அறிக்கையின் படியான இருப்பைக் கணக்கிடுக.
29.
வியாபாரத் தள்ளுபடிக்கும், ரொக்கத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
30.
பின்வரும் இனங்களை சொத்து, ஆள்சார் மற்றும் பெயரளவுக் கணக்குகளாக வகைப்படுத்துக்க.
அ] முதல்
ஆ] கொள்முதல்
இ] வணிக நற்பெயர்
ஈ] பதிப்புரிமை
உ] லதா
ஊ] ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
எ] மின்கட்டணம்
ஏ] பங்காதாயம்
ஐ] கொடுபட வேண்டிய வாடகை
ஒ] ரமேஷ்
31.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?
32.
கணக்கியலின் பணிகளை விளக்குக.
33.
இரட்டைப்பதிவு கணக்கு முறையின் விதிகள் யாவை?
34.
கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
35.
திருமதி அமுதா அவர்களின் ஏடுகளில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.
| ஜனவரி 2018 | ரூ | |
| 1 | திருமதி அமுதா ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | 50,000 |
| 2 | ரொக்கக் கொள்முதல் செய்தது | 10,000 |
| 5 | மோகன் என்பவரிடமிருந்து கடனாக கொள்முதல் செய்தது | 6,000 |
| 7 | வங்கியில் செலுத்தியது | 5,000 |
| 10 | அறைகலன் வாங்கியது | 2,000 |
| 20 | சுரேஷிற்கு கடனாக விற்பனை செய்தது | 5,000 |
| 25 | ரொக்க விற்பனை | 3,500 |
| 26 | மோகனுக்குச் செலுத்தியது | 3,000 |
| 31 | ஊதியம் வழங்கியது | 2,800 |
36.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
[அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
[ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
[ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
[உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
37.
திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
| 2018 மார்ச் 1 | சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது. |
| 5 | ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது |
| 12 | திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. |
| 18 | சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது. |
| 20 | சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது |
38.
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு ராபர்ட் என்பவரின் ஏடுகளில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டினைத் தயாரிக்கவும்.
| 2017 செப் | ரூ | |
| 1 | கையிருப்பு ரொக்கம் | 230 |
| முன் பண மீட்புக்காக காசோலை பெற்றது | 2,270 | |
| 2 | அஞ்சல் செலவு செய்தது | 314 |
| 8 | இரயில் கட்டணம் செலுத்தியது | 280 |
| 10 | கணிப்பொறி பழுது பார்த்தது | 405 |
| 12 | அச்சுக் கட்டணம் செலுத்தியது | 500 |
| 16 | வாடிக்கையாளாளர்களுக்கு சிற்றுண்டி கொடுத்தது | 72 |
| 20 | பேனா மற்றும் மை வாங்கியது | 183 |
| 22 | பயணச் செலவுக்கு கொடுத்தது | 75 |
39.
பின்வரும் நடவடிக்கைகளை நேரடியாக பேரேட்டில் எடுத்து எழுதவும்.
| 2017 ஜூலை 1 | சங்கர் ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.1,00,000 |
| 5 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.10,000 |
| 9 | கூலி ரொக்கமாக கொடுத்தது | ரூ.6,000 |
| 19 | சம்பளம் ரொக்கமாக கொடுத்தது | ரூ.8,000 |
| 23 | விளம்பரச் செலவுகளுக்காக ரொக்கம் செலுத்தியது | ரூ.4,000 |
40.
41.
பின்வரும் தொடக்கப்பதிவினைக் கொண்டு ஜாய் என்பவரின் ஏடுகளில் முக்கிய பேரேட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. | வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2017 ஜூன் 1 | ரொக்கக் க/கு. ப | 45,000 | ||
| சரக்கிருப்பு க/கு ப | 50,000 | |||
| சோகன் க/கு ப | 35,000 | |||
| அறைகலன் க/கு ப | 50,000 | |||
| ராம் க/கு | 20,000 | |||
| ஜாய் முதல் க/க (சென்ற ஆண்டின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கணக்கில் கொண்டுவரப்பட்டது) |
1,60,000 |
1.
(c)
9,000 சாதக இருப்பு
2.
(c)
கடன் கொள்முதல் மட்டும்
3.
(b)
சீனிவாசன் க/கு
4.
(a)
இரண்டு
5.
(a)
சரக்கீந்தோர் க/கு
6.
(b)
செல்லேட்டின்படி வரவு இருப்பு
7.
(d)
ரூ.2,00,000
8.
(a)
ரூ 1,950 வரவு இருப்பு
9.
(d)
உரிய குறிப்பேடு
10.
(c)
11.
(d)
அனைத்து கணக்குகளும்
12.
(b)
ரொக்கக் கணக்கு
13.
(b)
கொடுபட வேண்டிய சம்பள கணக்கு
14.
(c)
பொறுப்புகள் = சொத்துக்கள் + முதல்
15.
(b)
பற்று இருப்பு
16.
(d)
இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்
17.
(b)
18.
(c)
ஒரு சொத்து
19.
(d)
மேற்கண்ட ஏதுமில்லை
20.
(b)
காரியதரிசிகளின் கணக்கியல்
21.
1. இரட்டைப் பதிவு முறையின் விதிகளின்படி, ஒவ்வொரு பற்றுக்கும் அதற்கேற்ப சமமான தொகை கொண்ட வரவு உண்டு. அதே போல் ஒவ்வொரு வரவுக்கும் அதற்கேற்ப சமமான தொகைகொண்ட பற்று உண்டு என்பதால் பற்று உறுப்புகளின் மொத்தமும் வரவு உறுப்புகளின் மொத்தமும் சமமாகும்.
2. இதன் அடிப்படையிலேயே இருப்பாய்வு சமன்படுகிறது.
22.
வங்கிச் செல்லேடு அல்லது நகலேடு என்பது வங்கியிடமுள்ள வாடிக்கையாளருடைய கணக்கின் பிரதியாகும்.இதில் அனைத்து வைப்புகள்,எடுப்புகள் மற்றும் வாடிக்கையாளரின் கணக்கில் மீதி இருக்கக் கூடிய தொகை ஆகியவற்றைக் காண்பிக்கின்றது.
23.
1.வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் வங்கியில் பணம் செலுத்துவதற்கு பயன்படுத்தும் சீட்டே செலுத்துச் சீட்டு ஆகும். இது வங்கியில் பணம் செலுத்திய உடன் வங்கியில் உள்ள அலுவலர் கையொப்பமிட்டும் வங்கி முத்திரையிட்டு செலுத்தச் சீட்டின் அடிக்கட்டை (Counter Foil) யை வழங்குவார்.
2. இது ஒரு வங்கி நடவடிக்கையின் ஆதார ஆவணம் ஆகும். அதில் நாள், கணக்கு எண், தொகை (ரொக்கம் / காசோலை) செலுத்தியது. கணக்கு வைத்திருப்பவரின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும்.
24.
கடனாளிகள்:
பணத்தையோ (அ) அதற்கு நிகரான மதிப்பையோ தராமல் பலன் ஒன்றை ஒருவர் வியாபார நிறுவனத்திடமிருந்து பெற்றால் அவர் கடனாளி எனப்படுகிறார்.
கடனீந்தோர்:
பணத்தையோ (அ) அதற்கு நிகரான மதிப்பையோ பெறாமல் பலன் ஒன்றை ஒருவர் வியாபார நிறுவனத்திற்கு அளித்தால் அவர் கடனீ ந்தோர் எனப்படுகிறார்.
25.
1. கொள்முதல் ஏட்டில் கடனுக்கு சரக்கு வாங்குவது மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.
2. கொள்முதல் ஏட்டில் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் போது, கடன் கொள்முதல் என்பது வணிகம் கையாளுகின்ற சரக்குதான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
3. சொத்துகள் வாங்கினாலும், சரக்குகள் ரொக்கத்திற்கு வாங்கினாலும் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவதில்லை.
4. கொள்முதல் ஏடு, கொள்முதல் நாளேடு எனவும் அழைக்கப்படுகிறது.
26.
வணிக நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் உடைமைகள் சார்ந்த கணக்குகள் சொத்து கணக்குகள் எனப்படுகின்றன.
சொத்துக் கணக்கானது:
(i) புலனாகும் சொத்து கணக்கு:
பார்க்க கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய சொத்துக்கள். எ.கா .: நிலம், கட்டிடம்
(ii) புலனாக சொத்து கணக்கு:
பார்க்க முடியாத மற்றும் தொட்டுணர முடியாத சொத்துக்கள்.எ.கா.: நற்பெயர், காப்புரிமை என இருவகைப்படும்.
27.
கணக்கியலின் அடிப்படை நோக்கமே நிறுவனத்தின் உள்ளேயும் வெளியேயும் உள்ள தனிநபர் மற்றும் குழுவிற்கு கணக்கியல் தகவல்களை பயன்படும்படி அளிப்பதாகும்.
அ. அகப் பயனீட்டாளர்கள்:
உரிமையாளர்
நிர்வாகம்
பணியாளர்கள்
ஆ. புறப் பயனீட்டாளர்கள்:
கடனீந்தோர் மற்றும் நிதி நிறுவனங்கள்
முதலீட்டாளர்கள்
வாடிக்கையாளர்கள்
வரி அதிகாரிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள்.
அரசு
ஆராய்ச்சியாளர்கள்.
பொதுமக்கள்.
28.
| ரொக்க ஏட்டின்படி வங்கியிருப்பு | 3,000 | |
| கூட்டுக : | ||
| காசோலை விடுத்தும் முன்னிலைப்படுத்தப்படாதவை | ||
| (370 + 350 + 200) | 920 | 920 |
| 3,920 | ||
| கழிக்க : | ||
| வங்கியில் செலுத்தியும் வசூல் ஆகாதவை | 820 | 820 |
| வங்கி அறிக்கையின்படி வங்கியிருப்பு | 3,100 |
29.
| வியாபாரத் தள்ளுபடி | ரொக்கத் தள்ளுபடி |
| 1. தள்ளுபடி அளிப்பவர்: இத்தள்ளுபடி உற்பத்தியாளர் /மொத்த வியாபாரியால் சில்லறை வியாபாரிகளுக்கு வழங்கப்படுவதாகும். |
இத்தள்ளுபடி வியாபாரிகள் தங்களது வாடிக்கையாளருக்கு வழங்குவதாகும். |
| 2. நோக்கம்: சில்லறை வியாபாரி இலாபம் அடைய வேண்டி இத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. |
குறிப்பிட்ட தவணை நாளுக்குள் தொகை செலுத்தப்படும் பொழுது இத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. |
| 3. வழங்கப்படும் காலம்: இத்தள்ளுபடி சரக்கு வாங்கும் பொழுது அளிக்கப்படுகிறது. |
குறிப்பிட்ட காலத்திற்குள் தொகை செலுத்தப்படும் பொழுது இத்தள்ளுபடி வழங்கப்படுகிறது. |
| 4. வேறுபாடு: வழக்கமாக இத்தள்ளுபடி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மாறுபாடு இன்றி குறிப்பிட்ட சதவீதத்தில் வழங்கப்படும். |
தொகை செலுத்தப்படும் கால அளவைப் பொறுத்து இத்தள்ளுபடி வாடிக்கையாளர் மாறுபடும். |
| 5. வெளிப்படுத்துதல்: இது இடாப்பிலிருந்து கழித்து காட்டப்படும். |
இது இடாப்பில் காட்டப்படமாட்டாது. |
| 6. பேரேட்டுக் கணக்கு: இத்தள்ளுபடிக்காக பேரேட்டில் தனிப் பேரேட்டுக் கணக்கு தயாரிக்கப்படாது. |
இவ்வகைத் தள்ளுபடி பெற்றமைக்காகவும், அளித்தமைக் காகவும், பேரேட்டில் தனிப் பேரேட்டுக் கணக்கு தயாரிக்கப்படும். |
30.
(i) ஆள்சார் கணக்குகள்:
அ) முதல்
உ) லதா
ஊ) ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
ஒ) ரமேஷ்
ஐ) கொடுபட வேண்டிய வாடகை
(ii) சொத்துக் கணக்குகள்:
ஆ) கொள்முதல்
இ) வணிக நற்பெயர்
ஈ) பதிப்புரிமை
(iii) பெயரளவுக் கணக்குகள்:
எ) மின்கட்டணம்
ஏ) பங்காதாயம்
31.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள்:
அ) பணவீக்க காலத்தில், பொருட்களின் விலை அதிகரிக்கும், போது சொத்துக்களைப் புராதன அடக்க விலையில் மதிப்பிடுவது வணிகத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிப்பதில்லை.
(ஆ) புராதன அடக்க விலையில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால், வெவ்வேறு நாட்களில் நிறுவப்பட்ட வணிக அமைப்புகளின் முடிவுகளை ஒப்பீடு செய்ய முடியாது.
(இ) மனித வளங்கள் போன்ற அடக்க விலையில் மதிப்பிட முடியாத சொத்துக்களை இக்கருத்தின் கீழ் அங்கீகரிக்க முடிவதில்லை.
32.
கணக்கியலின் பணிகள் கீழ்கண்டவாறு விவரிக்கப்படுகின்றன:
(i) அளவிடுதல்:
வணிக நடவடிக்கைகள் குறித்து முறையான ஆவணங்களை வைத்திருத்தல், பதிவு செய்தல் எடுத்தெழுதுதல், கடைசியாக இறுதிக் கணக்குகளைத் தயாரித்தல் ஆகியவையே கணக்கியலின் முதன்மையான பணியாகும்.
(ii) முன்னறிதல்:
வணிக நிறுவனங்களின் எதிர்கால செயல் திறன் மற்றும் நிதிநிலை பற்றி கணக்கியலின் பல்வேறு கருவிகளின் மூலம் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடிகிறது.
(iii) ஒப்பிடுதல்:
கணக்கியல், நிகழ்ந்த செயல்திறனுடன், திட்டமிட்ட செயல்திறனை ஒப்பிட உதவுகிறது. மேலும், இது கணக்கியல் கொள்கைகளுடனும் ஒப்பிட உதவுகிறது.
(iv) முடிவெடுத்தல்:
திட்டமிடுதல், செயல்திறன் மதிப்பீடு, கட்டுப்பாடு ஆகிய மேலாண்மை பணிகளுக்கான தகவல்களை நிர்வாகத்திற்கு கணக்கியல் வழங்குகிறது.
(v) கட்டுப்பாடு:
கணக்கியல் ஒரு கட்டுப்பாட்டுக்கு கருவியாக இருப்பதால், கையாண்ட பல்வேறு வழிமுறைகள் குறித்த பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிந்து, கருத்து தெரிவிக்க முடிகிறது. மேலும், வணிக கொள்கைகள் மற்றும் திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டனவா என்பதை மதிப்பீடு செய்யும் கருவியாக இது பயன்படுகிறது.
33.
பின்வருவன இரட்டைப்பதிவு முறையின் இயல்புகள் ஆகும்.
1. ஒவ்வொரு வணிக நடவடிக்கையும் இரு தன்மைகளைக் கொண்டிருக்கும்.
2. இரண்டில், ஒன்று பலனை அல்லது மதிப்பினைப் பெறுவதாகும், மறொன்று பலனை அல்லது மதிப்பினை அளிப்பதாகவும் இருக்கும்.
3. இவ்விரு தன்மைகள் குறைந்தது இரு கணக்குகள், அதாவது குறைந்த பட்சம் ஒரு பற்று குறைந்த பட்சம் ஒரு வரவு என சம்பந்தப்பட்டிருக்கும்.
4. ஒவ்வொரு பற்றும் அதற்குத் தகுந்த சமமான வறவினையும் ஒவ்வொரு வரவும் அதற்குத் தகுந்த சமமான பற்றினையும் பெற்றிருக்கும். ஒரு கணக்கு பற்று செய்யப்பட்டால் மற்றொரு கணக்கு வரவு வைக்கப்பட வேண்டும்.
34.
கணக்கியலில் பின்பற்ற வேண்டிய கட்டமைப்பையும் விதிகளையும், கணக்கியல் தரநிலைகள், தருவதால் வெவ்வேறு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை ஒப்பீடு செய்ய முடிகிறது நிதிநிலை அறிக்கை தயார் செய்வதில் நிலைத்தன்மை, ஒப்பீட்டு தன்மை, நிறைவுத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு கணக்கியல் கோட்பாடுகளை தர நிர்ணயம் செய்வது அவசியமாகிறது.
கோங்லர் என்பவற்றின் கூற்றுப்படி, "பொதுக் கணக்காளர் மற்றும் கணக்காளர்களின் நலனுக்காக வழங்கும் சட்டம் மற்றும் தொழில்சார் அமைப்புகளால் பொதுவாக உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளே கணக்கியல் தரநிலையாகும்."
கணக்கியல் தரநிலைகள் என்பது கணக்கியல் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை அடையாளம் கண்டு, அளவிட்டு, பதிவு செய்து, தகவல்களை நிதி அறிக்கை வாயிலாக வெளிப்படுத்துவதற்காக கணக்கியல் வல்லுநர் குழு அல்லது அரசு அல்லது பிற ஒழுங்காற்று அமைப்புகளால் வெளியிடப்படும் கொள்கை ஆவணங்களாகும்.
35.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2018 ஜனவரி 1 | ரொக்கக் க/கு | ப | 50,000 | ||
| முதல் க/கு | 50,000 | ||||
| (தொழில் முதல் போட்டது) | |||||
| 2 | கொள்முதல் க/கு | ப | 10,000 | ||
| ரொக்கக் க/கு | 10,000 | ||||
| (ரொக்கக் கொள்முதல் செய்தது) | |||||
| 5 | கொள்முதல் க/கு | ப | 6,000 | ||
| மோகன் க/கு | 6,000 | ||||
| (கடனாக கொள்முதல் செய்தது) | |||||
| 7 | வங்கிக் க/கு | ப | 5,000 | ||
| ரொக்கக் க/கு | 5,000 | ||||
| (வங்கியில் ரொக்கம் செலுத்தியது) | |||||
| 10 | அறைகலன் க/கு | ப | 2,000 | ||
| ரொக்கக் க/கு | 2,000 | ||||
| (அறைகலன் வாங்கியது) | |||||
| 20 | சுரேஷ் க/கு | ப | 5,000 | ||
| விற்பனை க/கு | 5,000 | ||||
| (கடனுக்கு விற்பனை செய்தது) | |||||
| 25 | ரொக்கக் க/கு | ப | 3,500 | ||
| விற்பனை க/கு | 3,500 | ||||
| (ரொக்க விற்பனை) | |||||
| 26 | மோகன் க/கு | ப | 3,000 | ||
| ரொக்கக் க/கு | 3,000 | ||||
| (மோகனுக்குச் செலுத்தியது) | |||||
| 31 | ஊதியக் க/கு | ப | 2,800 | ||
| ரொக்கக் க/கு | 2,800 | ||||
| (ஊதியம் வழங்கியது) |
36.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| செல்லோட்டின் வங்கி இருப்பு (வரவிருப்பு சாதகமான இருப்பு) |
2,500 | |
| கூட்டுக: | ||
| வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியாதது |
60 | |
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 1,000 | |
| காசோலை அவமதிக்கப்பட்டு ரொக்க ஏட்டில் பதியாதது | 600 | 1,600 |
| 4,160 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் முன்னிலைக்கப்படுத்தாதவை | 700 | |
| வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் |
400 | 1,100 |
| ரொக்க ஏட்டின் படி வங்கி இருப்பு | 3,060 |
37.
| நாள் | விவரம் | உள் வகு இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2018 மார்ச் 1 | சுரேஷ் 100 கிலோ காபிக்கொட்டை கிலோ ஒன்று ரூ 40 வீதம் |
4,000 | |||
| 5 | ஹரி 50 கிலோ டீத் தூள் கிலோ ஒன்று ரூ 20 வீதம் |
1,600 | |||
| 12 | ரேகா சுகர்ஸ்,திருச்சி 1200 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் |
9,600 | |||
| 18 | பெருமாள் ஸ்வீட்ஸ் , சென்னை 40 டின்கள் இனிப்பு டின் ஒன்று ரூ 200 வீதம் |
8,000 | |||
| 20 | கோவிந்தா பிஸ்கெட் கம்பெனி சென்னை 20 டின்பிஸ்கெட்டுகள் டின் ஒன்று ரூ 400 வீதம் |
8,000 | |||
| கொள்முதல் க/கு | 31,200 | ||||
38.
| பெற்ற தொகை | ரொ.ஏ.ப.எ. | நாள் | விவரம் | சா. சீ. எ. |
மொத்தம் செலவழித்த தொகை | அஞ்சல் செலவு | இரயில் கட்டணம் | பழுது பார்ப்புச் செலவுகள் | அச்சு எழுது பொருள் | பயணச் செலவுகள் | பல்வகைச் செலவுகள் | போ. எ. எ. |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2017 | ||||||||||||
| 230 | செப்1 | இருப்பு கீ/கொ | ||||||||||
| 2,270 | 1 | ரொக்கம் | ||||||||||
| 2 | அஞ்சல் செலவு | 314 | 314 | |||||||||
| 8 | இரயில் கட்டணம் | 280 | 280 | |||||||||
| 10 | கணிப்பொறி பழுது | 405 | 405 | |||||||||
| 12 | அச்சுக் கட்டணம் | 500 | 500 | |||||||||
| 16 | சிற்றுண்டிச் செலவு | 72 | 72 | |||||||||
| 20 | பேனா மற்றும் மை | 183 | 183 | |||||||||
| 22 | பயணச் செலவுகள் | 75 | 75 | |||||||||
| மொத்தச் செலவுகள் | 1,829 671 |
314 | 280 | 405 | 683 | 75 | 72 | |||||
| 30 | இருப்பு கீ/இ | |||||||||||
| 2,500 | 2,500 | |||||||||||
| 671 | அக் 1 | இருப்பு கீ/கொ | ||||||||||
| 1,829 | 1 | ரொக்கக் க/கு |
39.
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூலை க/கு | சங்கர் முதல் க/கு | 1,00,000 | 2017 ஜூலை 9 | கூலி க/கு | 6,000 | ||
| 5 | விற்பனை க/கு | 10,000 | 19 | சம்பளம் க/கு | 8,000 | ||
| 58,000 | 20 | விளம்பரச் செலவுகள் க/கு | 4,000 | ||||
| 31 | இருப்பு கீ/இ | 92,000 | |||||
| 1,10,000 | 1,10,000 | ||||||
| ஆகஸ்ட் 1 | இருப்பு கீ/கொ | 92,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூலை 31 | இருப்பு கீ/இ | 1,00,000 | 2017 ஜூலை 1 | ரொக்க க/கு | 1,00,000 | ||
| 1,00,000 | 1,00,000 | ||||||
| ஆகஸ்ட் | இருப்பு கீ/கொ | 1,00,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூலை 31 | இருப்பு கீ/இ | 10,000 | 2017 ஜூலை 5 | ரொக்க க/கு | 10,000 | ||
| 10,000 | 10,000 | ||||||
| ஆகஸ்ட் 1 | இருப்பு கீ/கொ | 10,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூலை 9 | ரொக்க க/கு | 6,000 | 2017 ஜூலை 31 | இருப்பு கீ/இ | 6,000 | ||
| 6,000 | 6,000 | ||||||
| ஆகஸ்ட் 1 | இருப்பு கீ/கொ | 6,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூலை 19 | ரொக்க க/கு | 8,000 | 2017 ஜூலை 31 | இருப்பு கீ/இ | 8,000 | ||
| 8,000 | 8,000 | ||||||
| ஆகஸ்ட் 1 | இருப்பு கீ/கொ | 8,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜூலை 20 | ரொக்கக் க/கு | 4,000 | 2017 ஜூலை 31 | இருப்பு கீ/இ | 4,000 | ||
| 4,000 | 4,000 | ||||||
| ஆகஸ்ட் 1 | இருப்பு கீ/கொ | 4,000 |
40.
41.
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 45,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 35,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 20,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 1,60,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards