11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 17/01/2020
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
ரொக்க ஏடு பராமரிக்கப்படும் போது, தனியாக ரொக்கக் கணக்கு மற்றும் ________ கணக்கு பேரேட்டில் தயாரிக்க வேண்டியதில்லை.
ரொக்கக் கணக்கு
வங்கி கணக்கு
எடுப்பு கணக்கு
தள்ளுபடி கணக்கு
2.
ஜூலை 12, 2015 ஆண்டு சுபா, மஞ்சுளா மீது ஒரு மாத கால சீட்டை எழுதினார். அம்மாற்றுச்சீட்டின் தவணை நாள்
ஆகஸ்ட் 12, 2015
ஆகஸ்ட் 15, 2015
ஆகஸ்ட் 16, 2015
ஆகஸ்ட் 14, 2015
3.
சொத்துக் கணக்குகள் எப்பொழுதும் காண்பிப்பது.
பற்றிருப்புகள்
வரவிருப்புகள்
பற்று/வரவு இருப்புகள்
இருப்புகள் இன்மை
4.
கணக்கியல் முறையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் _________________
தற்கால தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட மாற்றம்
சந்தையில் ஏற்பட்ட நிறைவுப் போட்டி
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
5.
சுரங்கங்கள், எண்ணெய் கிணறுகள் போன்ற இயற்க்கை வளங்களின் மதிப்புக் குறைதல் ________எனப்படும்.
போக்கெழுதல்
வழக்கொழிவு
வெறுமையாதல்
இவை எதுவுமில்லை
6.
ரூ 8,000 மதிப்புள்ள ஒரு பொறிவகை ரூ 8,500 க்கு விற்பனை செய்தததில் முதலின வரவு.
ரூ 8,000
ரூ 8,500
ரூ 500
ரூ 16,500
7.
கணக்காளர் நடவடிக்கையை அல்லது ஏதேனும் ஒரு தொகையை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யத் தவறுவதே ________________ எனப்படும்.
விடுபிழை
பகுதி விடுபிழை
முழுவிடுபிழை
இருமுறை பதிந்தபிழை
8.
31.3.2018 அன்றைய இருப்பாய்வின் படி முதலீடுகள் 10% ரூ 5,00,000 முதலீடுகள் மீது பெற்ற வட்டி ரூ 40,000 பெற வேண்டிய வட்டி ________.
ரூ 5,40,000
ரூ 40,000
ரூ 10,000
ரூ 5,10,000
9.
குமார் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது _______
தனி நபர் ஆள்சார் க/கு
சட்டமுறை அமைப்பு ஆள்சார்
பிரதிநிதித்துவ ஆள்சார் க/கு
இவற்றில் ஏதும் இல்லை.
10.
_______ முறையில் இரட்டைத் தன்மைக் கருத்து அடிப்படையில் கணக்கு ஏடுகள் பதியப்படுகின்றன.
ஒற்றைப்பதிவு முறை
இரட்டைப்பதிவு முறை
கணக்கேடுகள் பராமரிப்பு
மேற்கூறிய அனைத்தும்
11.
வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.
வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
12.
பின்வருனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?
உள்ளீட்டு அலகு
வெளியீட்டு அலகு
தரவு
மையச் செயல்பாட்டு அலகு
13.
இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் __________ காண்பிக்கிறது.
இலாபத்தினை
நிதி நிலையினை
விற்பனையை
கொள்முதலை
14.
15.
அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
கொள்ள்முதல் கணக்கு
அறைகலன் கணக்கு
அதியமான் கணக்கு
இவை ஏதுமில்லை
16.
எந்த வேறுபாட்டிற்கான காரணங்களைக் கண்டறிய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது
ரொக்க ஏட்டின் படி ரொக்க பத்தியின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு மற்றும் ரொக்க ஏட்டின் இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
17.
ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது
ஆண்டு இறுதியில்
ஒரு குறிப்பிட்ட நாளில்
ஒரு பருவ காலம் முடிந்தது
இவை ஏதும் இல்லை
18.
முன் கூட்டிச் செலுத்திய வாடகை ஒரு
பெயரளவு கணக்கு
ஆள்சார் கணக்கு
சொத்துக் கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
19.
இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு
முக்கியத்துவ மரபு
பண மதிப்பீட்டுக் கருத்து
முன்னெச்சரிக்கை மரபு
நிகழ்வு தீர்வு / கருத்து
20.
சிறிய செலவினங்களைப் பதியும் ஏடு
ரொக்க ஏடு
கொள்முதல் ஏடு
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு
சில்லறை ரொக்க ஏடு
21.
கீழ்க்கண்ட கணக்குகளின் இருப்புகள் இருப்பாய்வில் பற்றுப்பத்தியில் இடம் பெறுமா அல்லது வரவுப்பத்தியில் இடம் பெறுமா எனக் காட்டிடுக.
22.
மறுக்கப்படுதல் என்றால் என்ன?
23.
நிலைத் தவணை முறை என்றால் என்ன?
24.
குறிப்பு வரைக: (i) ரொக்க நடவடிக்கை
(ii) கடன் நடவடிக்கை
25.
கணக்கியலில் கணினியின் பயன்பாட்டினை எழுதுக.
26.
இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் யாவை?
27.
பயன் தீரும் சொத்துகள் என்றால் என்ன?
28.
விதிப்பிழை என்றால் என்ன?
29.
பின்வருபவை முதலினச் செலவுகளா அல்லது வருவாயினச் செலவுகளா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
(i) தொழிற்சாலை தொடங்க உரிமம் பெறுவதற்காகச் செலுத்தியக் கட்டணம் ரூ 25,000
(ii) தொழிற்கூடம் கட்டுவதற்கானச் செலவு செய்தது ரூ 2,00,000 மற்றும் கட்டுமானப் பொருட்கள் சேகரித்து வைப்பதற்காக தற்காலிக குடிசைகள் கட்டியச் செலவு ரூ 10,000
(iii) வாங்கிய பழைய இயந்திரத்தைப் புதுப்பிப்பதற்கானச் செலவு ரூ 5,000.
30.
சாதாரண ரொக்க ஏடு என்றால் என்ன?
31.
பின்வரும் விவரங்களிலிருந்து ரொக்க கணக்கினைத் தயாரிக்கவும்.
| 2018 ஜன 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ10000 |
| 2018 ஜன 3 | வங்கியில் கணக்கு துவங்கியது | ரூ.10000 |
| 2018 ஜன 5 | ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | ரூ.25000 |
| 2018 ஜன 7 | ரமேஷ் என்பவருக்கு சரக்கு விற்றது | ரூ.8000 |
| 2018 ஜன 12 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | ரூ.12000 |
| 2018 ஜன 15 | குமார் என்பவரிடம் சரக்கு விற்ற காசோலை பெற்றது | ரூ.7000 |
| 2018 ஜன 20 | சிவா என்பவரிடம் சரக்கு வாங்கி காசோலை விடுத்தது | ரூ.15000 |
| 2018 ஜன 30 | வாடகை செலுத்தியது | ரூ.3000 |
| 2018 ஜன 1 | ஊதியம் வழங்கியது | ரூ.5000 |
32.
திரு .இராம கிருஷ்ணன் அவர்களின் 2015 மார்ச் 31-ம் நாளன்றைய பேரேட்டுக் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் கொண்டு, இருப்பாய்வு தயாரிக்க.
| ரூ. | |
| முதல் | 2,40,000 |
| எடுப்புகள் | 60,000 |
| பற்பல கடனீந்தோர் | 4,30,000 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுகள் | 40,000 |
| பற்பல கடனாளிகள் | 5,00,000 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுகள் | 52,000 |
| பொறிவகைத் தொழுகுப்பு | 45,000 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 3,70,000 |
| கை ரொக்கம் | 9,000 |
| சம்பளம் | 95,000 |
| விற்பனைத் திருப்பம் | 10,000 |
| கொள்முதல் திருப்பம் | 11,000 |
| கழிவு செலுத்தியது | 1,000 |
| வியாபாரச் செலவுகள் | 25,000 |
| தள்ளுபடி பெற்றது | 5,000 |
| வாடகை | 26,000 |
| வங்கி கடன் | 60,000 |
| கொள்முதல் | 7,48,000 |
| விற்பனை | 11,80,000 |
| வங்கி வச ரொக்கம் | 25,000 |
33.
திரு.குரு அவர்களின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
| ரூ | ||
| 2017 செப்டம்பர் 1 |
கையிருப்பு ரொக்கம் | 19,000 |
| 3 | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | 10,000 |
| 4 | வெங்கட்டிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது | 18,000 |
| 6 | மோகனிடமிருந்து பெற்றது 4160,தள்ளுபடி அளித்தது | 40 |
| 8 | மின்கட்டணம் செலுத்தியது | 850 |
| 9 | வங்கியில் பணம் செலுத்தியது | 20,000 |
| 14 | வெங்கட்டிற்கு ரூ. 17,600 செலுத்திக் கணக்கைத் தீர்த்துக் கொண்டது. | 4,800 |
| 24 | வேல்முருகனிடமிருந்து ரொக்கம் பெற்றது | 4,000 |
| 26 | சம்பளம் கொடுத்தது | 4,000 |
| 28 | வங்கியிலிருந்து பணம் எடுத்தது | 5,000 |
34.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து திரு.உதயக்குமார் அவர்களின் வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயாரிக்க.
[அ] ரொக்க எட்டின்படி இருப்பு ரூ1,500
[ஆ] வங்கியில் செலுத்தியும் வசூலாகாதது ரூ 100
[இ] அளித்த காசோலைகள் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை ரூ 150
[ஈ] வங்கி அளித்த வட்டி ரூ 20
35.
திருவாளர்கள் சங்கர் அன்ட்கோ நிறுவனம் 1.1.2015 அன்று ரூ. 10,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவனம் ஆண்டுதோறும் 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப்பெறுகின்றன. குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
36.
புறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார்? அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.
37.
திரு.ஜான் அவர்களின் பின்வரும் இருப்பாய்வினைக் கொண்டு 31.1.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கனா வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கிணைத் தயாரிக்கவும்.
| விவரம் | தொகை (ரூ) | விவரம் | தொகை (ரூ) |
|---|---|---|---|
| கொள்முதல் | 5,40,000 | விற்பனை | 10,40,000 |
| சம்பளம் மற்றும் கூலி | 3,50,000 | வெளித்திருப்பம் | 12,000 |
| அலுவலகச் செலவுகள் | 4,000 | தள்ளுபடி பெற்றது | 6,000 |
| வியாபார செலவுகள் | 8,000 | வட்டி பெற்றது | 3,000 |
| தொழிற்சாலை செலவுகள் | 11,000 | முதல் | 1,78,000 |
| வருமான வரி | 8,000 | ||
| உள் திருப்பம் | 12,000 | ||
| தள்ளுபடி அளித்தது | 4,000 | ||
| கழிவு | 2,000 | ||
| சரக்கிருப்பு | 60,000 | ||
| வருமான வரி | 40,000 | ||
| கையிருப்பு ரொக்கம் | 2,00,000 | ||
| 12,39,000 | 12,39,000 |
இறுதி சரக்கிருப்பு ரூ1,35,000 என கனக்கிடப்பட்டுள்ளது
38.
கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?
39.
டெக் நிறுவனத்தின் 2016-2017 க்கான மொத்தத்த விற்பனைத் தொகை (பொருட்கள் வாரியாக) கீழே கொக்கப்பட்டுள்ளன
| Product | Sales ரூ |
|---|---|
| Toothpaste | 22,000 |
| Toothbrush | 11,000 |
| Hair Oil | 9,000 |
| Shampoo | 13,000 |
| Toilet Soap | 9500 |
| Bath Soap | 6500 |
(அ) தரவுகளை தூண் விளக்கப்படத்தில் வழங்கவும்.
(ஆ) தூண் வரைபடத்திலிருந்து வரி விளக்கப்படத்திற்கு மாற்றவும்
40.
பின்வரும் பிழைகள் இருப்பா்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டவை. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) அனிதாவுக்கு ரூ.50 செலுத்தியது தவறாக வனிதாவின் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) ரூ.500-க்கு அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) நடராஜனிடமிருந்து கடனுக்கு ரூ.750-க்கு சரக்கு கொள்முதல் செய்தது தவறாக விற்பனை ஏட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
(ஈ) இயந்திரம் நிறுவுவதற்கு செலுத்திய கூலி ரூ.1,000 கூலிக்கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
41.
இராம் ஆடை நிறுவனம் ஏப்ரல் 1, 2014 அன்று ரூ. 2,00,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை நிலா நிறுவனத்திடமிருந்து கடனாக வாங்கியது. அதற்கு நிறுவுகைச் செலவாக ரூ. 10,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கினை தயாரிக்கவும். கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ல் முடிக்கப் பெறுகின்றன.
42.
பின்வரும் நடவடிக்கைகளை அறைகலன் விற்பனை செய்யும் கமலா அறைகலன் நிறுவனத்தின் விற்பனை ஏட்டில் பதிவு செய்க.
| 2017 | |
| மே 2 | திருச்சி, நவீன் நிறுவனத்திற்கு ஒன்று ரூ. 1,750 வீதம் 5 கனிணி மேசைகள் கடனுக்கு விற்றது |
| மே 9 | மதுரை, தீபா உணவகத்திற்கு 6 உணவு மேசைகள் ஒன்று ரூ. 1,900 வீதம் கடனுக்கு விற்றது. |
| மே 15 | இராஜேஷிற்கு ஒன்று ரூ. 2,750 வீதம் 10 அலங்கார மேசைகள் கடனுக்கு விற்றது. |
| மே 24 | அனில் என்பவருக்கு ஒன்று ரூ. 1,250 வீதம் 5 மர மேசைகள் கடனுக்கு விற்றது. |
| மே 27 | கோபிக்கு ஒன்று ரூ. 3,500 வீதம் மூன்று பழைய கணினிகள் விற்றது. |
| மே 29 | அனில் என்பவருக்கு ஒன்று ரூ. 275 வீதம் 50 நாற்காலிகள் ரொக்கத்திற்கு விற்றது |
43.
பின்வரும் நடவடிக்கைகளுக்கு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்குக.
(i) இராகேஷ் ரூ 1,50,000 முதலுடன் தொழில் தொடங்கினார்.
(ii) வங்கியில் இட்ட தொகை ரூ 80,000.
(iii) மகேஷிடமிருந்து கடன் அட்டை மூலம் சரக்கு வாங்கியது ரூ 25,000.
(iv) 10,000 மதிப்புள்ள சரக்குகள் ரூ 14,000க்கு மோகனிடம் விற்பனை செய்யப்பட்டது. இத்தொகையினை அவர் எடுப்பு அட்டை மூலம் செலுத்தினார் .
(v) காசோலை மூலம் பெறப்பட்ட கழிவு ரூ 2,000 உடனடியாக வங்கியில் வசூலிப்பதற்காக செலுத்தப்பட்டது.
(vi) அலுவலக வாடகை மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தியது ரூ 6,000.
(vii) இராமனுக்கு விற்ற சரக்கின் மதிப்பு ரூ 15,000-ல், ரூ 5,000 உடனடியாக பணமாகப் பெறப்பட்டது.
44.
கீழ்க்காணும் நடவடிக்கைகளை அகமது என்பவரின் ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளுடைய ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
| 2017 அக் | ரூ | |
| 1 | ரொக்க இருப்பு | 37,500 |
| 3 | ரொக்க விற்பனை | 33,000 |
| 7 | வேலனுக்கு செசெலுத்திய ரொக்கம்ரூ 15,850 அவர் அனுமதித்த தள்ளுபடி | 150 |
| 13 | பெருமாள் என்பன்பவருக்கு கடனுக்கு விற்ற சரக்கு | 19,200 |
| 15 | சொந்த செலவுகளுக்காகப் பணம் எடுத்தது | 4,800 |
| 16 | சுப்பிரமணியனிடமிருந்து சரக்குகள் கடனுக்கு வாங்கியது | 14,300 |
| 22 | ரொக்கம் வங்கியில் செலுத்தியது | 22,700 |
| 25 | பெருமாளிடம் ரொக்கம் பெற்று அவர் கணக்கைத் தீர்த்துக் கொண்டது | 19,000 |
| 26 | அலுவலக செலவிற்காக காசோலை மூலம் ரொக்கம் எடுத்தது | 17,500 |
| 27 | கோபால கிருஷ்ணனுக்கு ரொக்கம் செலுத்தியது | 2,950 |
| அவரிடமிருந்து பெற்ற தள்ளுபடி | 50 | |
| 28 | சுப்பிரமணியனுக்கு ரொக்கம் செலுத்தி அவர் கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்டது |
14,200 |
| 29 | ரொக்கக் கொள்முதல் | 13,500 |
| 30 | விளம்பரச் செலவுகளுக்காக ரொக்கம் செலுத்தியது | 1,500 |
45.
எப்போது வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது?
46.
கணக்கியல் தரநிலைகளின் தேவை யாது?
47.
திரு.அப்துல் 2001 ஏப்ரல் 1,அன்று ரூ. 2,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கினார். மூன்று ஆண்டுகள் அவ்வியந்திரம் பயன்படுத்தப்பட்ட பிறகு ரூ.1,60,000 க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தேய்மானம் 10% குறைந்து செல் இருப்புமுறையில் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கணக்கேடுகள் மார்ச் 31அன்று முடிக்கப் பெறுகின்றன. இயந்திரம் விற்பனை மீதான இலாபம் அல்லது நட்டம் காண்க.
48.
இருப்பாய்வின் இயல்புகள் யாவை?
49.
முதலினச் செலவின் இயல்புகள் யாவை?
50.
கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.
51.
இறுதிக் கணக்குகளில் இறுதிச் சரக்கிருப்பு எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதை விளக்கவும்.
52.
தமிழன்பன் என்பவர் 2018 ஜனவரி 1 அன்று புத்தகம் விற்கும் தொழிலைத் தொடங்கினார். 2018 ஜனவரி மாதத்திற்கான அவருடைய தொழில் நடவடிக்கைகள் பின்வருமாறு. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தந்து பேரேட்டுக் கணக்குகளையும் தயாரிக்கவும்.
| 2018 ஜன 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.3,00,000 |
| 2 | வங்கி கணக்கை தொடங்குவதற்காக பணம் செலுத்தியது | ரூ.2,00,000 |
| 5 | சரக்குகள் வாங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு ரொக்கம் செலுத்தியது | ரூ.10,000 |
| 15 | புத்தகங்களை M.M. நிறுவனத்திற்கு ரொக்கத்திற்கு விற்றது | ரூ.5,000 |
| 22 | சரக்குகளை X நிறுவனத்திடமிருந்து வாங்கி ரூ.15,000 இணையவங்கி மூலமாக செலுத்தப்பட்டது | |
| 25 | Y என்பவருக்கு சரக்குகள் விற்பனை செய்யப்பட்டு அவரிடமிருந்து தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மூலம் பெறப்பட்டது | ரூ.30,000 |
53.
சிறு குறிப்பு வரைக
(அ) மாற்றுச்சீட்டில் மேலெழுதுதல்
(ஆ) மாற்றுச்சீட்டை தள்ளுபடி செய்தல்
54.
பின்வருவனவற்றை ஆள்சார் கணக்கு, சொத்து கணக்கு மற்றும் பெயரளவு கணக்கு என்று வகைப்படுத்துக
(அ) முதல்
(ஆ) கட்டட ம்
(இ) உள் ஏற்றிச் செல் செலவு
(ஈ) ரொக்கம்
(உ) தள்ளுபடிப் பெற்றது
(ஊ) வங்கி
(எ) கொள்முதல்
(ஏ) சந்துரு
(ஐ) கொடுபட வேண் டிய கூலி.
1.
(a)
ரொக்கக் கணக்கு
2.
(d)
ஆகஸ்ட் 14, 2015
3.
(a)
பற்றிருப்புகள்
4.
(c)
இவை இரண்டும்
5.
(c)
வெறுமையாதல்
6.
(a)
ரூ 8,000
7.
(a)
விடுபிழை
8.
(c)
ரூ 10,000
9.
(a)
தனி நபர் ஆள்சார் க/கு
10.
(b)
இரட்டைப்பதிவு முறை
11.
(d)
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
12.
(c)
தரவு
13.
(b)
நிதி நிலையினை
14.
(b)
15.
(c)
அதியமான் கணக்கு
16.
(c)
ரொக்க ஏட்டின் படி வங்கிப்பத்தியின் இருப்பு மற்றும் வங்கி அறிக்கை இருப்புக்கும் இடையேயான வேறுபாடு
17.
(b)
ஒரு குறிப்பிட்ட நாளில்
18.
(d)
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
19.
(c)
முன்னெச்சரிக்கை மரபு
20.
(d)
சில்லறை ரொக்க ஏடு
21.
| 1. வங்கி மேல்வரைப் பற்று | வரவு |
| 2. பற்பல கடனாளிகள் | பற்று |
| 3. பற்பல கடனீந்தோர் | வரவு |
| 4. உள் திருப்பம் | பற்று |
| 5. வெளித்திருப்பம் | வரவு |
| 6. பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | பற்று |
| 7. செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | வரவு |
| 8. முதலீடுகள் | பற்று |
| 9. பெற்ற கழிவு | வரவு |
| 10. முதலீடுகள் மீதான வட்டி | வரவு |
22.
மாற்றுச்சீட்டுக்கான தொகை தவணை நாளன்று செலுத்தப்படாமலி ருந்தால் அதனை மாற்றுச்சீட்டு மறுக்கப்படுதல் என்பர்.
23.
1.நிலைத் தவணை தேய்மானமாக, குறிப்பிட்ட விழுக்காடு ஒவ்வொரு ஆண்டிற்கும் சொத்தின் அடக்கவிலையிலிருந்து நீக்கப்படுகிறது. எனவே, இது ஆரம்ப அடக்கவிலை முறை என்றழைக்கப்படுகிறது.
2.சொத்தின் வாழ்நாள் முழுவதும் தேய்மானத் தொகை ஒரே அளவாக, சமமாக இருப்பதால் இம்முறை நிலைத் தவணை முறை எனவும் அழைக்கப்படுகிறது.
24.
ரொக்க நடவடிக்கை:
இது உடனடி ரொக்கம் பெறுதல் அல்லது உடனடி ரொக்கச் செலுத்தலை உள்ளடக்கிய ஒரு நடவடிக்கை ஆகும்.
கடன் நடவக்கை:
இது ரொக்கம் உடனடியாக செலுத்தப்படாத அல்லது பெறப்படாத ஒரு நடவடிக்கை ஆகும். ஆனால், அதற்குப் பின்னர் ரொக்கம் செலுத்தப்படும் அல்லது பெறப்படும்.
25.
கணக்கியலில், கணினி பொதுவாக கீழ்கண்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
(அ) வணிக நடவடிக்கைகள் பதிவு செய்தல்
(ஆ) சம்பளப் பட்டியலில் கணக்கிடுதல்
(இ) பண்டக சாலை கணக்கியல் மற்றும்
(ஈ) கணக்கியல் அறிக்கைகள் உருவாக்குதல்
26.
சரிக்கட்டுதல்களுடன் சேர்த்து இறுதிக் கணக்குகளைத் தயாரிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான கோட்பாடுகள் பின்வருமாறு:
(i) வருவாய்த் தீர்வுக் கோட்பாடு
இக்கோட்பாட்டின்படி,ஒரு குறிப்பிட்ட ஆண்டின் வருவாய் என்பது எந்த ஆண்டில் அது ஈட்டப்பட்டதோ அந்த ஆண்டில் தான் அது தீர்வு செய்யப்பட வேண்டும்.
(ii) பொருந்துகைக் கோட்பாடு
ஒரு ஆண்டில் பெறப்பட்ட வருமானத்தை அந்த ஆண்டின் செலவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து இக்கோட்பாட்டின் முக்கியத்துவம் ஆகும்.
27.
இவ்வகையான சொத்துகள் தோண்டியெடுக்கும் செயல் முறையில் தன மதிப்பை படிப்படியாக இழக்கின்றன. எடுத்துக்காட்டு: சுரங்கங்கள், கற்சுரங்கங்கள் முதலியன
28.
நடவடிக்கைகள் கணக்கு ஏடுகளில் பதிவு செய்யும் போது அடிப்படையாக கணக்கியல் விதிகளை தவறாக பின்பற்றுவதால் ஏற்படும் பிழையே விதிப்பிழை எனப்படும்.
29.
(i) தொழிலை நடத்துவதற்கான உரிமம் பெறுவதற்காகச் செய்த செலவு என்பதால், இச்செலவு முதலினச் செலவாகும்.
(ii) தற்காலிக குடிசைகள் உட்பட , தொழிற்கூடம் கட்டுவதற்கானச் செலவு முதலினச் செலவாகும்.
(iii) வாங்கிய பழைய இயந்திரத்தின் மீதான துவக்கப் பராமரிப்புச் செலவு என்பது நீண்டகால பலனைத் தருவதால் இது ஒரு முதலினச் செலவாகும்.
30.
(i) தனிபத்தி ரொக்க ஏடு அல்லது சாதாரண ரொக்க ஏடு, ஒரு பேரேட்டுக் கணக்கை போன்று ஒவ்வொரு பக்கத்திலும் தொகைக்கான பத்தி ஒன்றை (ரொக்க பத்தி) கொண்டிருக்கும்.
(ii) ரொக்க நடவடிக்கைகள் மட்டும் இந்த ஏட்டில் பதியப்படும். அணைத்து ரொக்கப் பெறுதலுக்கும் மற்றும் செலுத்தல்களுக்கும் இந்த ஏட்டில் முறையாக பதியப்படுகின்றன.
31.
| நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை | நாள் | விவரம் | கு.ப.எண் | தொகை |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 | 2018 | ||||||
| ஜன 1 | முதல் க/கு | 100000 | ஜன 3 | வங்கி க/கு | 10000 | ||
| ஜன 12 | விற்பனை க/கு | 12000 | 5 | கொள்முதல் க/கு | 25000 | ||
| ஜன 15 | விற்பனை க/கு | 7000 | 30 | வாடகை க/கு | 3000 | ||
| 30 | ஊதியம் க/கு | 5000 | |||||
| 31 | இருப்பு கீ/இ | 76000 | |||||
| 119000 | 119000 | ||||||
| 2018 | |||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 76000 |
32.
| வரிசை எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | முதல் | - | 2,40,000 | |
| 2. | எடுப்புகள் | 60,000 | - | |
| 3. | பற்பல கடனீந்தோர் | - | 4,30,000 | |
| 4. | செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள் | - | 40,000 | |
| 5. | பற்பல கடனாளிகள் | 5,00,000 | - | |
| 6. | பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுகள் | 52,000 | - | |
| 7. | பொறிவகைத் தொகுப்பு | 45,000 | - | |
| 8. | தொடக்கச் சரக்கிருப்பு | 3,70,000 | - | |
| 9. | கைவச ரொக்கம் | 9,000 | - | |
| 10. | சம்பளம் | 95,000 | - | |
| 11. | விற்பனைத் திருப்பம் | 10,000 | ||
| 12. | கொள்முதல் திருப்பம் | - | 11,000 | |
| 13. | கழிவு செலுத்தியது | 1,000 | - | |
| 14. | வியாபாரச் செலவுகள் | 25,000 | - | |
| 15. | தள்ளுபடி பெற்றது | - | 5,000` | |
| 16. | வாடகை | 26,000 | - | |
| 17. | வங்கிக் கடன் | - | 60,000 | |
| 18. | வங்கிக் கடன் | 7,48,000 | - | |
| 19. | விற்பனை | - | 11,80,000 | |
| 20 | வங்கி வச ரொக்கம் | 25,000 | ||
| மொத்தம் | 19,66,000 | 19,66,000 |
33.
| நாள் | பெறுதல்கள் | இ . எண் |
பே.ப.எண் | அளித்த தள்ளுபடி |
தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | சா. சீ . எண் |
பே.ப. எண் | பெற்ற தள்ளுபடி |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2017 செப் 1 |
இருப்பு கீ/கொ | 19,000 | 2017 செப் 8 |
மின்கட்டணம் க/கு | 850 | ||||||
| 3 | விற்பனை க/கு | 10,000 | 9 | வங்கிக் க/கு | 20,000 | ||||||
| 6 | மோகன் க/கு | 40 | 4,160 | 14 | வெங்கட் க/கு | 400 | 17,600 | ||||
| 24 | வேல்முருகன் க/கு | 4,800 | 26 | சம்பளக் க/கு | 4,000 | ||||||
| 28 | வங்கிக் க/கு | 5,000 | 30 | இருப்பு கீ/இ | 510 | ||||||
| 40 | 42,960 | 400 | 42,960 | ||||||||
| 2017 அக் 1 | இருப்பு கீ/கொ | 510 |
34.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி வங்கியிருப்பு | 1,500 | |
| கூட்டுக: | ||
| அளித்த காசோலைகள் | ||
| செலுத்துகைக்கு | 150 | |
| முன்னிலைப்படுத்தப்படவில்லை | 20 | 170 |
| வங்கி அளித்த வட்டி | 1,670 | |
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்தியும் வசூலாகாதது | 100 | |
| செல்லேட்டின் படி வங்கி இருப்பு | 1,570 |
35.
| நாள் | விவரம் | பே. ப.எ. |
பற்று ரூ. | வரவு ரூ. | |
|---|---|---|---|---|---|
| 2015 ஜன 1 | இயந்திரம் க/கு | ப | 10,00,000 | ||
| வங்கி க/கு | 10,00,000 | ||||
| (இயந்திரம் வாங்கியது) | |||||
| மார்ச் 31 | தேய்மானம் க/கு | ப | 25,000 | ||
| இயந்திரம் க/கு | 25,000 | ||||
| (மூன்று மாதங்களுக்கு தேய்மானம் நீக்கியது) | |||||
| மார்ச் 31 | இலாபநட்டக் க/கு | ப | 25,000 | ||
| தேய்மானம் க/கு | 25,000 | ||||
| (தேய்மானம் இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| 2016 மார்ச் 31 | தேய்மானம் க/கு | ப | 1,00,000 | ||
| இயந்திரம் க/கு | 1,00,000 | ||||
| (தேய்மானம் நீக்கியது) | |||||
| மார்ச் 31 | இலாபநட்டக் க/கு | ப | 1,00,000 | ||
| தேய்மானம் க/கு | 1,00,000 | ||||
| (தேய்மானம் இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | |||||
| 2017 மார்ச் 31 | தேய்மானம் க/கு | ப | 1,00,000 | ||
| இயந்திரம் க/கு | 1,00,000 | ||||
| (தேய்மானம் நீக்கியது) | |||||
| மார்ச் 31 | இலாபநட்டக் க/கு | ப | 1,00,000 | ||
| தேய்மானம் க/கு | 1,00,000 | ||||
| (தேய்மானம் இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்டது) |
36.
புறப் பயனீட்டாளர்கள்:
புறப்பயனீட்டாளர்கள் என்பவர்கள் நிறுவனத்திற்கு வெளியிலுள்ள நபர்கள். ஆனால், நிறுவனத்தின் கணக்கியல் விவரங்களை தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துபவர்கள் ஆவர். அவர்கள் பின்வருமாறு,
(i) கடனீந்தோர் மற்றும் நிதி நிறுவனங்கள்:
பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குபவர்கள், வணிக வங்கிகள், பொது வைப்புநிதி வைத்திருப்பவர்கள் மற்றும் கடனீட்டு பத்திரத்தார்கள் இந்த பிரிவில் அடங்குவர்.
(ii) முதலீட்டாளர்கள்:
(1) ஒரு நிறுவனத்தில் தங்களது நிதியை முதலீடு செய்யும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொண்டு தங்களது முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர்.
(2) அவர்கள் நிறுவனத்தின் எதிர்கால இலாபம் மற்றும் இடர்ஏற்கும் திறன் போன்ற, தங்களது இலாபத்தை பாதிப்பவைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பர்.
(iii) வாடிக்கையாளர்கள்:
(1) வணிக நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள் மற்றும் சேவைகளை, வாங்கிப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அவற்றின் விவரங்கள் மற்றும் விலைகள் பற்றி அறிய விருப்பம் கொண்டுள்ளனர்.
(2) அவர்களுக்கு தொடர்ந்து பொருட்களும், சேவைகளும் கிடைப்பதை உறுதி செய்து கொள்வதற்காக நிறுவனத்தின் நிலைத்தன்மை மற்றும் இலாபம் ஈட்டும் திறன் ஆகியவற்றை அறிய ஆர்வம் காட்டுவர்.
37.
| விவரம் | தொகை (ரூ) | தொகை(ரூ) | விவரம் | தொகை(ரூ) | தொகை(ரூ) |
|---|---|---|---|---|---|
| சரக்கிருப்பு | 60,000 | விற்பனை | 10,40,000 | ||
| கொள்முதல் | 5,40,000 | கழிக்க : விற்பனைத் திருப்பம் | 12,000 | 10,28,000 | |
| கழிக்க : கொள்முதல் திருப்பம் | 12,000 | 5,28,000 | இறுதிச் சரக்கிருப்பு | 1,35,000 | |
| வியாபாரச் செலவுகள் | 8,000 | ||||
| தொழிற் சாலை செலவுகள் | 11,000 | ||||
| உள் ஏற்றிச் செல் செலவு | 8,000 | ||||
| மொத்த இலாபம் கீ/கி (இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்பட்ட வேண்டியது ) | 5,48,000 | ||||
| 11,63,000 | 11,63,000 | ||||
| சம்பளம் மற்றும் கூலி | 3,50,000 | மொத்த இலாபம் கீ/கொ (வியாபார கணக்கிலிருந்து மாற்றப் பட்டது ) |
5,48,000 | ||
| அலுவலகச் செலவுகள் | 4,000 | தள்ளுபடி பெற்றது | 6,000 | ||
| தள்ளுபடி அளித்தது | 4,000 | வட்டி பெற்றது | 3,000 | ||
| கழிவு | 2,000 | ||||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப் பட வேண்டியது ) | 5,57,000 | 5,57,000 |
38.
கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள்:
1. நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக, காலவரிசைப்படி கணக்கேடுகளில் பதியப்படுகின்றன.இதனால் அணைத்து வணிக நடவடிக்கைகளுக்கும், கணக்கு ஏடு பராமரிப்பு நிரந்தரமான மட்டும் நம்பகத் தன்மையுள்ள ஆவணங்களை அளிக்கிறது.
2. கணக்கேடுகள் பராமரிப்பு நிதித் தகவல்கள் பெற உதவுகிறது.
3. இது அணைத்து வணிக செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
4. வணிக நிறுவனங்களின் கணக்கேடுகள் நீதிமன்ற வழக்குகளில் சட்டப்படியான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
5. பல்வேறு ஆண்டுகளின் நிதிவிவரங்களை ஒப்பிடுவது சாத்தியமாகிறது.மேலும், நிதி தகவல்களை, வேறு வணிக நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
6. செலுத்த வேண்டிய வரியினைக் கண்டுபிடிக்க கணக்கேடுகள் பரராமரிப்பு பயனுள்ளதாக இருக்கிறது.
கணக்கேடுகள் பராமரிப்பு குறைபாடுகள்:
1. இதில் பண மதிப்பிலான நடவடிக்கைகள் மட்டுமே பதியப்படுகின்றன.
2. இதில், விலை நிலை மாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
3. இதில், கடந்த கால நிதி விவரங்களை மட்டுமே பதியப்படுகின்றன.
39.
செயல்முறை
(அ) தூண் விளக்கப்படம்
(i) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை புதிய விரிதாளில் உள்ளீடு செய்யவும்.
(ii) அறை A1 முதல் B7 வரையிலான தரவு பரப்பைத் தேர்வு செய்யசெய்யவும்
(iii) Insert Menu சென்று Column Chart (3D) யை தேர்வு செய்யவும்
(iv) தூண் விளக்கப்படத்தை right click செய்து ‘Add Data Labels’ ஐ தேர்வு செய்யசெய்யவும்
(v) Layout - Chart Tools ஐ தேர்வு செய்யவும்
(vi) Axis Title தேர்வு செய்து அதற்கு பெயரிடவும்.

(ஆ) வரி விளக்கப்பக்கப்படம்
(i) அறை A1 முதல் B7 வரையிலான தரவு பரப்பைத் தேர்வு செய்யசெய்யவும்
(ii) Insert Menu சென்று Line Chart (2D) தேர்வு செய்யவும்
(iii) வரி விளக்கப்படத்தை right click செய்து ‘Add Data Labels’ ஐ தேர்வு செய்யவும்
(iv) Layout - Chart Tools – தேர்வு செய்யவும்
(v) Axis Title தேர்வு செய்து அதற்குப் பெயரிடவும்.

40.
| விவரம் | பே.ப. எ | பற்று ரூ | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | அனிதா க/கு | ப | 50 | ||
| வனிதா க/கு | 50 | ||||
| (அனிதாவுக்கு ரொக்கம் செலுத்தியது தவறாக வனிதா கணக்கில் பதிவுசெய்யப்பட்டது, திருத்தம் செய்யப்பட்டது.) | |||||
| ஆ | விற்பனைக் க/கு | ப | 500 | ||
| அறைகலன் க/கு | 500 | ||||
| (அறைகலன் விற்றது தவறாக விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது, திருத்தம் செய்யப்பட்டது.) | |||||
| இ | கொள்முதல் க/கு | ப | 750 | ||
| விற்பனைக் க/கு | ப | 750 | |||
| நடராஜன் க/கு | 1,500 | ||||
| (நடராஜனிடம் சரக்கு வாங்கியது தவறுதலாக விற்பனை ஏட்டில் பதிவுசெய்யப்பட்டது, தற்போது திருத்தம் செய்யப்பட்டது.) | |||||
| ஈ | இயந்திரக் க/கு | ப | 1,000 | ||
| கூலி க/கு | 1,000 | ||||
| (இயந்திரம் நிறுவுவதற்குக் கொடுத்த கூலி தவறாக கூலிக் கணக்கில் பற்று வைக்கப்பட்டது, திருத்தம் செய்யப்பட்டது.) |
41.
| தேதி | விவரம் | ரூ | தேதி | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2014 | 2015 | ||||
| ஏப்ரல் 1 | நிலா நிறுவனக் க/கு | 2,00,000 | மார்ச் 31 | தேய்மானக் க/கு | 21,000 |
| ஏப்ரல் 1 | வங்கி க/கு | 10,000 | (2,10,000 ×10%) | ||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 1,89,000 | |||
| 2,10,000 | 2,10,000 | ||||
| 2015 | 2016 | ||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,89,000 | மார்ச் 31 | தேய்மானக் க/கு | 18,900 |
| (1,89,000 ×10%) | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 1,70,100 | |||
| 1,89,000 | 1,89,000 | ||||
| 2016 | 2017 | ||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,70,100 | மார்ச் 31 | தேய்மானக் க/கு | 17,010 |
| (1,70,100 ×10%) | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 1,53,090 | |||
| 1,70,100 | 1,70,100 | ||||
| 2017 | |||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,53,090 |
| தேதி | விவரம் | ரூ | தேதி | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||
| மார்ச் 31 | இயந்திரக் க/கு | 21,000 | மார் ச் 31 |
இலாப நட்டக் க/கு | 21,000 |
| 21,000 | 21,000 | ||||
| 2016 | 2016 | ||||
| மார்ச் 31 | இயந்திரக் க/கு | 18,900 | மார்ச் 31 | இலாப நட்டக் க/கு | 18,900 |
| 18,900 | 18,900 | ||||
| 2017 | 2017 | ||||
| மார்ச் 31 | இயந்திரக் க/கு | 17,010 | மார்ச் 31 | இலாப நட்டக் க/கு | 17,010 |
| 17,010 | 17,010 |
42.
| நாள் | விவரம் | உள்வரு இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை (ரூ) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | நவீன் நிறுவனம் | ||||
| மே 2 | 5 கணினி மேசைகள் ரூ.1750 வீதம் | 8,750 | |||
| மே 9 | தீபா உணவகம் | ||||
| 6 உணவு மேசைகள் ரூ.1900 வீதம் | 11,400 | ||||
| மே 15 | இராஜேஷ் | ||||
| 10 அலங்கார மேசைகள் ரூ.2750 | 27,500 | ||||
| மே 24 | அனில் | ||||
| 5 மர மேசைகள் ரூ.1250 வீதம் | 6,250 | ||||
| விற்பனை க/கு வ | 53,900 | ||||
43.
| வ.எண். | நடவடிக்கை | ரொக்கம் ரூ | வங்கி ரூ | சரக்கிருப்பு ரூ | கடனாளர்கள் | மொத்த சொத்துகள் | = | மொத்த பொறுப்புகள் ரூ | முதல் ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| (i) | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +1,50,000 | +1,50,000 | ||||||
| இருப்புகள் | +1,50,000 | +1,50,000 | |||||||
| சமன்பாடு | +1,50,000 | = | +1,50,000 | ||||||
| (ii) | ரொக்கம் வங்கியில் செலுத்தியது | -80,000 | +80,000 | ||||||
| இருப்புகள் | +70,000 | +80,000 | +1,50,000 | ||||||
| சமன்பாடு | +1,50,000 | = | +1,50,000 | ||||||
| (iii) | கடன் அட்டை மூலம் சரக்கு வாங்கியது | -25,000 | +25,000 | ||||||
| இருப்புகள் | +70,000 | +55,000 | +25,000 | +1,50,000 | |||||
| சமன்பாடு | +1,50,000 | = | +1,50,000 | ||||||
| (iv) | கடன் விற்பனை | -10,000 | +14,000 | +4,000 | |||||
| இருப்புகள் | +70,000 | +55,000 | +15,000 | +14,000 | +1,54,000 | ||||
| சமன்பாடு | +1,54,000 | = | +1,54,000 | ||||||
| (v) | காசோலை மூலம் பெறப்பட்ட கழிவு | +2,000 | +2,000 | ||||||
| இருப்புகள் | +70,000 | +57,000 | 15,000 | +14,000 | +1,56,000 | ||||
| சமன்பாடு | +1,56,000 | = | +1,56,000 | ||||||
| (vi) | அலுவலக வாடகை மின்னனு பரிவர்த்தனை மூலம் செலுத்தியது | -6,000 | -6,000 | ||||||
| இருப்புகள் | +70,000 | +51,000 | 15,000 | +14,000 | +1,50,000 | ||||
| சமன்பாடு | +1,50,000 | = | +1,50,000 | ||||||
| (vii) | ரொக்க விற்பனை | +5,000 | -15,000 | -10,000 | |||||
| இருப்புகள் | +75,000 | +51,000 | +14,000 | +1,40,000 | |||||
| சமன்பாடு | +1,40,000 | = | +1,40,000 |
44.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப எண் |
தொகை ரூ | நாள் | பெறுதல்கள் | சா.சீ . எண் |
பே.ப. எண் |
தொகை ரூ | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தள்ளுபடி | ரொக்கம் | தள்ளுபடி | ரொக்கம் | ||||||||
| 2017 அக் 1 | இருப்பு கீ/கொ | 37,500 | 2017 அக் 7 | வேலன் க/கு | 150 | 15,850 | |||||
| 3 | விற்பனை க/கு | 33,000 | 15 | எடுப்புகள் க/கு | 4,800 | ||||||
| 25 | பெருமாள் க/கு | 200 | 19,000 | 22 | வங்கி க/கு | 22,700 | |||||
| 26 | வங்கி க/கு | 17,500 | 27 | கோபால கிருஷ்ணன் க/கு | 50 | 2,950 | |||||
| 28 | சுப்ரமணியன் க/கு | 100 | 14,200 | ||||||||
| 200 | 29 | கொள்முதல் க/கு | 13,500 | ||||||||
| 30 | விளம்பரச் செலவுகள் க/கு | 1,500 | |||||||||
| 31 | இருப்பு கீ/இ | 31,500 | |||||||||
| நவ 1 | இருப்பு கீ/கொ | 200 | 1,07,000 | 300 | 1,07,000 | ||||||
| 31,500 | |||||||||||
45.
(i) ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியின் இருப்பானது வாடிக்கையாளரின் வங்கி இருப்பினை எடுத்துரைப்பதாகும்.
(ii) வங்கிக் செல்லேடு என்பது வங்கியிடம் பெறப்படும் வாடிக்கையாளருடைய கணக்கின் பிரதியாகும்.
(iii)இரு ஏடுகளும் வெவ்வேறு நபர்களால் பராமரிக்கப்படுகின்றன.
(iv) சாதாரணமாக ரொக்க ஏடு செல்லேட்டுடன் ஒத்துப்போவதோடு இரு ஏடுகளின் இருப்புகளும் சமமாக இருக்க வேண்டும்.
(v) ஆனால் நடைமுறையில் இவ்விருப்புகள் பொதுவாக வேறுபடும்.இத்தகைய வேறுபாட்டின் போது வங்கிக் சரிக்கட்டும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
46.
கணக்கியல் தரநிலைகளின் தேவைகள்:
(i) நிதிநிலை அறிக்கைகளை நன்கு புரிந்து கொள்வதற்கு.
(ii) கணக்காளர் ஒரே மாதிரியான செயல்முறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு.
(iii) இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வணிக அமைப்புகளின் நிதிநிலை அறிக்கைகளை பயன்தருமுறையில் ஒப்பீடு செய்வதை எளிதாக்குவதற்கு.
(iv) நிதிநிலை அறிக்கையின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கு.
(v) சட்டத் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கு.
47.
| நாள் | விவரம் | தொகை ரூ. |
|---|---|---|
| 2001 எப் | இயந்திரத்தின் அடக்கவிலை | 2,00,000 |
| 2002 மார்ச் 31 | கழிக்க: முதலாமாண்டு தேய்மானம் [2,00,000 x\({10\over 100}\) ] |
20,000 |
| 1,80,000 | ||
| 2003 மார்ச் 31 | கழிக்க: இரண்டாம் தேய்மானம் [1,80,000 x\({10\over 100}\) ] |
18,000 |
| 1,62,000 | ||
| 2004 மார்ச் 31 | கழிக்க: மூன்றாம் ஆண்டு தேய்மானம் [1,62,000 x \({10\over 100}\)] |
16,200 |
| எட்டு மதிப்பு | 1,45,800 | |
| விற்பனை விலை | 1,60,000 | |
| இலாபம் | 14,200 |
48.
இருப்பாய்வின் இயல்புகள் பின்வருமாறு:
(i) இருப்பாய்வு அனைத்து பேரேட்டுக் கணக்குகளிலும் உள்ள இருப்புகளை உள்ளடக்கி இருக்கும்.
(ii) இது குறிப்பிட்ட ஒரு நாளில் தயாரிக்கப்படும். அதனால் தான் அதன் தலைப்பை மேலே எழுதும்போது 'நாளன்றைய' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
(iii) இரட்டைப்பதிவு முறையைப் பின்பற்றும் பொழுது, இருப்பாய்வின் பற்றுப்பத்தியின் மொத்தமும் மற்றும் வரவுபத்தியின் மொத்தமும் சமமாக இருக்க வேண்டும்.
(iv) இருப்பாய்வின் பற்றுப் பத்தியின் மொத்தமும் வரவுப் பத்தியின் மொத்தமும் வேறுபட்டிருந்தால், எங்கேயோ பிழைகள் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
(v) இருப்பாய்வின் பற்று பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் ஒரே தொகையாக அல்லது சமமாக இருந்தால், கணக்கேடுகளில் தவறுகள் இல்லை என்று அர்த்தம் அல்ல. ஏனென்றால், சில பிழைகளை இருப்பாய்வு வெளிக்காட்டாது.
49.
முதலினச் செலவின் இயல்புகள்:
(i) முதலினச் செலவு, ஒன்றிற்கும் மேற்பட்ட கணக்காண்டுகளுக்கு பலன் தரக்கூடியது.
(ii) நிலைச்சொத்து வாங்குவதற்கும், வாங்கிய நிலைச்சொத்தினை பயன்படுத்த தயாராகும் வரை மேற்கொள்ளப்பட்ட செலவுகளையும் உள்ளடக்கியது.
(iii) வணிக நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் திறனை அதிகரிப்பதில் பங்களிக்கிறது.
(iv) திரும்பத் திரும்ப நிகழாத தன்மையுடையது.
(v) இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கத்தில் காண்பிக்கப்படும்.
50.
கணக்கியல் செயல்முறையில் பின்வரும் எந்த நிலையிலும் பிழைகள் நிகழலாம்:
I குறிப்பெட்டுப்பதிவு நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழை
(ii) செய் பிழை
(iii) விதிப் பிழை
II பேரேட்டில் எடுத்தெழுதும் நிலையில்
இந்த நிலையில், கீழ்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழைகள்
(அ) முழு விடு பிழைகள்
(ஆ) பகுதி விடு பிழைகள்
(ii) செய் பிழைகள்
(அ) தவறான கணக்கில் எடுத்து எழுதுதல்
(ஆ) தவறான தொகையை எடுத்து எழுதுதல்
(இ) தவறான பக்கத்தில் எடுத்து எழுதுதல்
III இருப்புக்கட்டல் நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) கணக்கில் தவறாவறாகக் கூட்டுதல்
(ii) கணக்கில் தவறாவறாக இருப்புக்கட்டுதல்
IV இருப்பாய்வு தயாரிக்கும் நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழை
(ii) செய் பிழை
(அ) தவறான கணக்கில் பதிவு செய்தல்
(ஆ) செய் பிழை
(அ) தவறான கணக்கில் பதிவு செய்தல்
(ஆ) தவறான தொகையைப் பதிவு செய்தல்
(இ) இருப்பாய்யில் தவறான பத்தியில் பதிவு செய்தல்
51.
கணக்காண்டு இறுதியில் வணிகத்தில் விற்காமல் உள்ள சரக்குகளின் இருப்பு இறுதிச் சரக்கிருப்பு எனப்படும். கணக்கியல் தரநிலை 2-ன் படி (தீர்த்தியமைக்கப்பட்டது) அடக்க விலை அல்லது நிகரத் தீர்வு மதிப்பு , இதில் எது குறைவோ அந்த விலையில் இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படும் .
| விவரம் | பே.ப.எ. | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|
| இறுதிச் சரக்கிருப்பு க/கு | ப | xxx | ||
| வியாபாரக் க/கு | xxx | |||
| (இறுதிச் சரக்கிருப்பு கணக்கில் கொண்டு வரப்பட்டது) |
| வியாபாரக் கணக்கில் | வரவு பக்கம் காட்டப்படும் |
| இருப்பு நிலைக்குறிப்பில் | சொத்துகள் பக்கம் நடப்புச் சொத்தின் கீழ் கட்டப்படும் |
52.
| நாள் | விவரம் | பே.ப. எ. | பற்று ரூ. | வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | ரொக்கக் க/கு ப தமிழன்பன் முதல் க/கு (ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது) |
3,00,000 | 3,00,000 | |
| 2 | வங்கி க/கு ப ரொக்கக் க/கு (வங்கியில் பணம் செலுத்தியது) |
2,00,000 | 2,00,000 | |
| 5 | கொள்முதல் க/கு ப ரொக்கக் க/கு (சரக்குகள் ரொக்கத்திற்கு வாங்கியது) |
10,000 | 10,000 | |
| 15 | ரொக்கக் க/கு ப விற்பனை க/கு (சரக்குகளை ரொக்கத்திற்கு விற்றது) |
5,000 | 5,000 | |
| 22 | கொள்முதல் க/கு ப வங்கி க/கு (சரக்குகளை வாங்கி இணையவங்கி மூலம் ரொக்கம் செலுத்தப்பட்டது) |
15,000 | 15,000 | |
| 25 | வங்கி க/கு ப விற்பனை க/கு (சரக்குகளை விற்று தொகை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் மூலம் பெற்றது) |
30,000 | 30,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 1 | தமிழன்பன் முதல் க/கு | 3,00,000 | 2018 ஜன 2 | வங்கி க/கு | 2,00,000 | ||
| விற்பனை க/கு | 5,000 | கொள்முதல் க/கு | 10,000 | ||||
| இருப்பு கீ/இ | 95,000 | ||||||
| 3,05,000 | 3,05,000 | ||||||
| இருப்பு கீ/கொ | 95,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 31 | இருப்பு கீ/இ | 3,00,000 | 2018 ஜன 1 | ரொக்கக் க/கு | 3,00,000 | ||
| 3,00,000 | 3,00,000 | ||||||
| 3,00,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 2 | ரொக்கக் க/கு | 2,00,000 | 2018 ஜன 22 | கொள்முதல் க/கு | 15,000 | ||
| 3,00,000 | இருப்பு கீ/இ | 2,15,000 | |||||
| 2,30,000 | 2,30,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 2,15,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 5 | ரொக்கக் க/கு | 10,000 | 2018 ஜன 31 | இருப்பு கீ/இ | 25,000 | ||
| 22 | வங்கி க/கு | 15,000 | |||||
| 25,000 | 25,000 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 25,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2018 ஜன 31 | இருப்பு கீ/இ | 35,000 | 2018 ஜன 15 | ரொக்கக் க/கு | 5,000 | ||
| 22 | 25 | வங்கி க/கு | 30,000 | ||||
| 35,000 | 35,000 | ||||||
| 25,000 | பிப் 1 | இருப்பு கீ/கொ | 35,000 |
53.
(அ) மேலெழுதுதல்
(1) மாற்றுச்சீட்டின் உரிமையை வேறொருவருக்கு மாற்றித் தருவதற்காக, மாற்றுச்சீட்டின் முன்புறத்தில் அல்லது பின்புறத்தில் கையொப்பம் இடுவதை மேலெழுதுதல் என்பர்.
(2) மாற்றுச்சீட்டை இதற்கென மேலெழுதி மாற்றிக்கொடுப்பவர் மேலெழுதுநர் எனப்படுகிறார்.
(3) மாற்றுச்சீட்டு மேலெழுதி யாருக்கு கொடுக்கப்படுகிறதோ அவர் மேலெழுதப்பெறுநர் எனப்படுகிறார்.
(4) மேலெழுதப்பெறுநர் மாற்றுச்சீட்டுக்குரிய தொகையைப் பெறும் உரிமையைப் பெறுகிறார்.
(ஆ) தள்ளுபடி செய்தல்
(1) மாற்றுச்சீட்டை வைத்துள்ளவர் அதன் முத்துவுக்கு முன்பே பணம் பெற விரும்பினால், அதனை வங்கியில் தள்ளுபடி செய்து ரொக்கம் பெறலாம். இம்முறைக்கு மாற்றுச்சீட்டினைத் தள்ளுபடி செய்தல் என்று பெயர்.
(2) இதற்காக, வங்கியர் ஒரு சிறு தொகையைத் தள்ளுபடியாகப் பெற்றுக் கொள்வார். மீதமுள்ள தொகையினை உடனடியாக கொடுத்து விடுவார்.
54.
| வ.எண் | விவரம் | வகைப்பாடு |
| (அ) | முதல் | ஆள்சார் கணக்கு |
| (ஆ) | கட்டடம் | சொத்துக்கணக்கு |
| (இ) | உள் ஏற்றிச் செல் செலவு | பெயரளவு கணக்கு |
| (ஈ) | ரொக்கம் | சொத்து கணக்கு |
| (உ) | தள்ளுபடி பெற்றது | பெயரளவு கணக்கு |
| (ஊ) | வங்கி | ஆள்சார் கணக்கு |
| (எ) | கொள்முதல் | பெயரளவு கணக்கு |
| (ஏ) | சந்துரு | ஆள்சார் கணக்கு |
| (ஐ) | கொடுபட வேண்டிய கூலி | ஆள்சார் கணக்கு |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards