11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/10/2019
கணக்குப்பதிவியல் - இரண்டாம் பருவம்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது.
இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
மேற்கண்ட இரண்டிலும்
மேற்கண்ட எதுவுமில்லை
2.
பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?
ரொக்கம்
சரக்கிருப்பு
அறைகலன்
முன்கூட்டிச் செலுத்திய செலவு
3.
வணிகத்தின் நிகர இலாபம் __________ அதிகரிக்கும்
எடுப்புகளை
பெறுதல்களை
பொறுப்புகளை
முதலினை
4.
வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்
வருவாயினச் செலவுகள்
முன் கூட் டி செலுத்திய வருவாயினச் செலவுகள்
நீள்பயன் வருவாயினச் செலவுகள்
முதலினச் செலவுகள்
5.
6.
இருப்பாய்வைப் பாதிக்காத பிழைகள்
விதிப்பிழைகள்
அதிகமாகக் கூட்டுதல் பிழைகள்
குறைவாகக் கூட்டுதல் பிழைகள்
பகுதி விடு பிழைகள்
7.
நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகையானது,
ஆண்டுதோறும் அதிகரிக்கும்
ஆண்டுதோறும் குறையும்
அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
ஆண்டுதோறும் மாறக்கூடியது
8.
9.
விற்பனை ஏட்டில் பதிவு செய்வதற்கு பயன்படும் அடிப்படை ஆவணம்
பற்றுக் குறிப்பு
வரவு குறிப்பு
இடாப்பு
ரொக்க இரசீது
10.
ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்
விற்பனை கணக்கின் பற்றுபக்கம்
கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்
விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்
11.
பற்று இருப்புகளும் மற்றும் வரவு இருப்புகளும் சமமாக இருக்கின்றனவா என அறிய அனைத்துப் பேரேட்டுக் கணக்குகளையும் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பட்டியல்
குறிப்பேடு
நாளேடு
இருப்பாய்வு
இருப்பு நிலைக் குறிப்பு
12.
இருப்பாய்வு என்பது ஒரு
அறிக்கை
கணக்கு
பேரேடு
குறிப்பேடு
13.
உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
எடுப்புகள் கணக்கு
ரொக்கக் கணக்கு
முதல் கணக்கு
கொள்முதல் கணக்கு
14.
சொத்து கணக்கு கையாள்வது
தனிப்பட்ட நபர்கள்
செலவுகள் மற்றும் இழப்புகள்
சொத்துகள்
வருமானம் மற்றும் இலாபங்கள்
15.
கு.ப.எ. என்பது
பேரேட்டு பக்க எண்
குறிப்பேட்டு பக்க எண்
சான்று சீட்டு எண்
ஆணை எண்
16.
பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
கூட்டுதல்
எடுத்தெழுதுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்புக் கட்டுதல்
17.
வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
பண மதிப்பீட்டுக் கருத்து
அடக்கவிலை கருத்து
வணிகத்தனித்தன்மை கருத்து
இரட்டைத்தன்மை கருத்து
18.
சில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு
ஒரு செலவு
ஒரு இலாபம்
ஒரு சொத்து
ஒரு பொறுப்பு
19.
ரொக்க ஏடு ஒரு
துணை ஏடு
முதன்மை ஏடு
உரிய குறிப்பேடு
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
20.
பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது
நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
21.
முழு விடு பிழை என்றால் என்ன?
22.
இடாப்பு என்றால் என்ன?
23.
இருப்பாய்வு என்றால் என்ன?
24.
ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?
25.
பேரேடு என்றால் என்ன?
26.
சில்லறை ரொக்க ஏடு என்றால் என்ன?
27.
கணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைப் கூறுக.
28.
முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும்.
29.
இருப்பாய்வு வெளிப்படுத்தாத பிழைகள் யாவை?
30.
வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதற்கான மூன்று காரணங்களைத் தருக
31.
பேரேடு என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் யாவை?
32.
பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.
| (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 60,000 |
| (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | ரூ 20,000 |
| (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது | ரூ 15,000 |
| (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது | ரூ 500 |
33.
‘பணம் சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்கியலில் பதியப்படுதல் வேண்டும்’ – விவரி.
34.
கணக்கியலின் பொருளை விளக்குக.
35.
அஜித் அவர்களின் கீழ்க்காணும் இருப்பாய்வு மற்றும் சரிக்கட்டுதல்களிலிருந்து 2016, மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
| விவரம் | பற்று ரூ | விவரம் | வரவு ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 15,000 | முதல் | 25,000 |
| அறைகலனும் பொருத்துகைகளும் | 30,000 | வெளித் திருப்பம் | 1,000 |
| கொள்முதல் | 40,000 | செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 10,000 |
| விற்பனைத் திருப்பம் | 2,000 | விற்பனை | 1,24,000 |
| உள்தூக்குக் கூலி | 10,000 | வாரா ஐயக்கடன் ஒதுக்கு | 500 |
| அலுவலக வாடகை | 23,000 | கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு | 100 |
| பற்பல கடனாளிகள் | 20,100 | ||
| வங்கியிருப்பு | 19,600 | ||
| வாராக்கடன் | 900 | ||
| 1,60,600 | 1,60,600 |
சரிக்கட்டுதல்கள்:
(அ) கணக்காண்டு இறுதியில் சரக்கிருப்பு ரூ 8,000
(ஆ) கூடுதல் வாராக்கடன் ரூ 100
(இ) பற்பல கடனாளிகள் மீது 2% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
(ஈ) பற்பல கடனாளிகள் மீது 1% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.
36.
சிவா என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பின்வரும் இருப்புகளிலிருந்து வியாபார, இலாப நட்டக் கணக்கினைத் தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| சரக்கிருப்பு (01.01.2016) | 9,000 | வாராக்கடன் | 1,200 |
| கொள்முதல் | 22,000 | இதரச் செலவுகள் | 1,800 |
| விற்பனை | 42,000 | அளித்த தள்ளுபடி | 1,700 |
| கொள்முதல் மீதான செலவுகள் | 1,500 | விற்பனை மீதான செலவுகள் | 1,000 |
| வங்கிக் கட்டணம் செலுத்தியது | 3,500 | அலுவலக அறைகலன் மீதான பழுது பார்ப்புச் செலவுகள் | 600 |
சரிக்கட்டுதல்கள்:
(அ) 31.12.2016 அன்றைய இறுதிச் சரக்கிருப்பு ரூ 4,500
(ஆ) மேலாளர் அவருக்குரிய கழிவுக்கு பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெறுகிறார்.
37.
பின்வரும் இருப்புகளைக் கொண்டு இருப்பாய்வு தயாரிக்கவும்.
| கணக்கின் பெயர் | ரூ | கணக்கின் பெயர் | ரூ |
|---|---|---|---|
| கொள்முதல் | 1,00,000 | விற்பனை | 1,50,000 |
| வங்கிக் கடன் | 75,000 | கடனீந்தோர் | 50,000 |
| கடனாளி | 1,50,000 | ரொக்கம் | 90,000 |
| சரக்கிருப்பு | 35,000 | முதல் | 1,00,000 |
38.
பின்வரும் விவரங்களை விஜய் மின் பொருள் விற்பனையகத்தின் கொள் முதல் ஏடு, கொள் முதல் திருப்ப ஏடு, விற்பனை ஏடு, விற்பனைத்திருப்ப ஏடு ஆகியவற்றில் பதிவு செய்க.
| 2017 | |
| ஜனவரி 1 | பிரித்தி நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது |
| 25 மேசை விசிறிகள் ஒன்று ரூ. 1,400 வீதம் | |
| 10 மின்விசிறிகள் ஒன்று ரூ. 2,000 வீதம் | |
| ஆட்டோ கட்டணம் ரூ. 100 சேர்க்க்க்கவும் | |
| ஜனவரி 5 | ஷீலா விற்பனையகத்திற்கு கடனுக்கு விற்றது |
| 10 மின் தேய்ப்பான்கள் ஒன்று ரூ. 1,250 வீதம் | |
| 20 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 450 வீதம் | |
| வியாபாரத்தள்ளுபடி 10% குறைக்கவும் | |
| ஜனவரி 10 | பிருந்தா நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது |
| 10 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 1,300 வீதம் | |
| ஜனவரி 18 | பிரித்தி நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பியது |
| 5 மேசை விசிறிகள் குறைபாட்டுடன் இருந்தன. அதற்கான்கான ரொக்கம் பெறப்படவில்லை | |
| ஜனவரி 20 | சத்யா மின் பொருளகத்திடமிருந்து வாங்கியது. |
| 10 மின்விசிறிகள் ஒன்று ரூ. 1,200 வீதம் | |
| வியாபாரத்தள்ளுபடி 5% நீக்கவும் | |
| ஜனவரி 21 | ஷீலா விற்பனையகித்திடமிருந்து 3 மின் தேய்ப்பான்கள் குறைபாடு காரணமாக திருப்பி வந்தது. அதற்கான ரொக்கம் செலுத்தப்படவில்லை |
| ஜனவரி 23 | எலிசபெத் நிறுவனத்திடமிருந்து 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று ரூ. 4,700 வீதம் கடனுக்கு வாங்கப்பட்டது |
| ஜனவரி 25 | பவானி நிறுவனத்திற்கு கடனுக்கு விற்றது 7 மின் விசிறிகள் ஒன்று ரூ. 1,450 வீதம் |
| ஜனவரி 27 | சத்யா மின் பொருளகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட 2 சேதமடைந்த மின் விசிறிகளுக்கான ரொக்கம் பெறப்படவில்லை. |
39.
கீழ்க்காணும் நடவடிக்கைகளைக் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதவும்
| 2015 மார்ச் 1 | சோமு என்பவருக்கு கடனாக சரக்கு விற்றது | ரூ.5,000 |
| 7 | ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | 300 |
| 15 | வட்டி பெற்றது | 1,800 |
40.
பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.
(i) அன்பு, ரொக்கம் ரூ 20,000 சரக்குகள் ரூ 12,000 மற்றும் இயந்திரம் ரூ 8,000 த்துடன் தொழில் தொடங்கினார்
(ii) ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 7,000
(iii) ரமணிக்கு ரூ 6,900 கொடுத்து கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்ட து
(iv) ரூ 5,400 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு இராஜனுக்கு விற்கப்பட்டது ரூ 6,000
(v) இராஜனிடமிருந்து ரூ 5,800 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது
(vi) கொடுபட வேண்டிய கூலி ரூ 400
41.
2017, மே மாதத்திற்காற்கான சேஷாத்ரி அவர்களின் பின்வரும் நடவடிக்கைகளை தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
| மே | ரூ | |
| 1 | கையிருப்பு ரொக்கம் | 40,000 |
| 5 | ஸ்வாதியிடமிருந்து பெற்ற ரொக்கம் | 4,000 |
| 7 | கூலி ரொக்கமாக கொடுத்தது | 2,000 |
| 10 | சசிகலாவிடமிருந்து ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது | 6,000 |
| 15 | ரொக்கத்திற்கு விற்பனை செய்த | 9,000 |
| 18 | கணிப்பொறி வாங்கியது | 15,000 |
| 22 | சபாபதிக்கு ரொக்கம் செலுத்தியது | 5,000 |
| 28 | சம்பளம் கொடுத்தது | 2,500 |
| 30 | வட்டிப் பெற்றது | 500 |
1.
(c)
மேற்கண்ட இரண்டிலும்
2.
(c)
அறைகலன்
3.
(d)
முதலினை
4.
(d)
முதலினச் செலவுகள்
5.
(b)
6.
(a)
விதிப்பிழைகள்
7.
(c)
அனைத்து ஆண்டுகளுக்கும் நிலையாக இருக்கும்
8.
(a)
9.
(c)
இடாப்பு
10.
(a)
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்
11.
(c)
இருப்பாய்வு
12.
(a)
அறிக்கை
13.
(b)
ரொக்கக் கணக்கு
14.
(c)
சொத்துகள்
15.
(b)
குறிப்பேட்டு பக்க எண்
16.
(b)
எடுத்தெழுதுதல்
17.
(c)
வணிகத்தனித்தன்மை கருத்து
18.
(c)
ஒரு சொத்து
19.
(d)
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
20.
(d)
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
21.
ஒரு நடவடிக்கையை குறிப்பேட்டில் அல்லது துணை எட்டிலோ பதிவு செய்யத் தவறுவது அல்லது பேரேட்டில் எடுத்து எழுதும்போது இரு தன்மைகளையும் பதிவு செய்யத் தவறுவதே முழுவிடு பிழையாகும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளை பாதிக்கும்.
22.
இடாப்பு என்பது ஒரு வணிக ஆவணம் அல்லது இரசீது அல்லது அறிக்கை ஆகும். இதனை விற்பனையாளர் தயார்செய்து சரக்கினை வாங்குபவருக்கு அளிக்கிறார். இதில் விற்பனைச்செய்யப்படும் சரக்கின் அளவு, தரம், விலை, மொத்தமதிப்பு போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும். எனவே, இடாப்பு என்பது வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் ஒரு முதன்மையான ஆவணமாக உள்ளது.
23.
(i) இருபாய்வு என்பது ஒரு குறிப்பிட்ட நாளில் அணைத்துப் பேரெடுக்க கணக்குகளில் உள்ள பற்று இருப்புகளையும் மற்றும் வரவு இருப்புகளையும் உள்ளடக்கிய ஓர் அறிக்கை ஆகும்.
(ii) பற்று மற்றும் வரவு என்ற இரு பத்திகளை அருகருகே கொண்டு இது தயாரிக்கப்படுகிறது.
24.
1. நிதி சார்ந்த நடவடிக்கைகளின் உண்மையான சான்றுகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள், ஆதார ஆவணங்கள் ஆகும்.
2. இந்த ஆவணங்கள் நடவடிக்கைகளின் தன்மை, தேதி, தொகை தொடர்புடைய நபர்கள் போன்ற விவரங்களை வெளிப்படுத்தும்.
3. ரொக்கச்சீட்டு, இடாப்பு, பற்றுக்குறிப்பு, வரவுக் குறிப்பு, செலுத்துச் சீட்டு, சம்பளப்பட்டியல், கூலிப்பட்டியல் காசோலைப் பட்டியல் போன்றவை ஆதார ஆவணங்களில் உள்ளடங்கும்.
25.
பேரேடு என்பது ஆள்சார், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் வருமானம் ஆகிய கணக்குகளில் இடம்பெற்றுள்ள மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குரிய தொடர்புடைய அணைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரட்டி அதன் இறுதி விளைவை காட்டக்கூடிய ஒரு தொகுப்பு அறிக்கையாகும்.
26.
சில்லறை ரொக்க ஏடு என்பது அடிக்கடி நிகழக்கூடிய சிறு செலவினங்களான வண்டிச்சத்தம் கூலி, தபால் தந்தி செலவு, அச்சு, எழுதுபொருள் செலவு போன்றவற்றை பதியும் தனி ரொக்க ஏடாகும்.
இதற்கென தனியாக அமர்த்தப்படும் சில்லறை காசாளர் சில்லறை ரொக்க எட்டினை பராமரிக்கின்றனர்.
27.
நிறுவனத்தை அளவில்
நிறுவனத்தின் எதிர்கால செயல்திறனை முன்னறிதல்
திட்டமிட்ட செயல்திறனை நிகழ்ந்த செயல் திறனுடன் ஒப்பிடுதல்
நிறுவன செய்ல்பாடுகள் குறித்து எளிதாக முடிவெடுத்தல்.
வணிக நடவடிக்கைகளின் கட்டுப்பாடு
அரசுக்கு உதவி புரிதல்.
28.
| அடிப்படை | முதலினச் செலவு | வருவாயினச் செலவு | |
|---|---|---|---|
| (i) | தன்மை | அடிக்கடி நிகழாதத் தன்மையுடையது | அடிக்கடி நிகழும் தன்மையுடையது |
| (ii) | நோக்கம் | வருவாய் ஈட்டும் திறனை அதிகரிப்பதே இச்செலவின் நோக்கம் | வியாபாரத்தின் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்வதே இச்செலவின் நோக்கம் |
| (iii) | பயனளிப்பு காலம் | இச்செலவின் பலன் நீண்ட காலத்திற்கு கிடைக்கும். | நடப்பு ஆண்டிற்கு மட்டுமே பலன் கிடைக்கிறது. |
| (iv) | இலாபம் ஈட்டும் திறனில் ஏற்படுத்தும் விளைவு | வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அதிகரிக்கச் செய்யும். | வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனைப் பராமரித்து வைத்துக் கொள்ள உதவும். |
| (v) | கணக்கியல் நடைமுறை | இருப்புநிலைக்குறிப்பில் சொத்துகள் பக்கத்தில் தோன்றும் | நேரடிச் செலவெனில் வியாபாரக் கணக்கின் பற்றுப்பக்கத்திலும் மறைமுகச் செலவெனில் இலாப நட்டக் கணக்கின் பற்றுப் பக்கத்திலும் தோன்றும். |
29.
சில பிழைகள் இருபாய்வு சமன்படுவதை பாதிக்காதவை. அவை ஏடுகளில் இருந்தாலும் பற்று இருப்புகளின் கூட்டுத் தொகையும், வரவு இருப்புகளின் கூட்டுத் தொகையும் சமமாக இருக்கும். இருபாய்வு சமநிலைப் பெரும். முழு விடுப்பிழைகள், விதிப்பிழைகள், ஈடுசெய் பிழைகள் மற்றும் துணை ஏடுகளில் தவறான பதிவுகள் ஆகியவற்றை இருபாய்வு வெளிப்படுத்துவதில்லை. அவ்வாறான பிள்ளைகளுக்கு உதாரணங்கள்:
1. ஒரு வருவாயினச் செலவை முதலின்ச் செலவாக பாவித்தல்
2. ஒரு நடவடிக்கையை முழுமையாக பதிவு செய்யத் தவறுதல்.
3. ஒரு நடவடிக்கை தவறான துணை ஏட்டில் பதிவு செய்தல்
4. ஒரு நடவடிக்கையை துணை ஏட்டில் அல்லது குறிப்பேட்டில் இருமுறை பதிவு செய்தல்.
5. ஒரு நடவடிக்கையின் திஸ்கியை குறிப்பேட்டில் தவறாக பதிவு செய்தல்
6. ஒரு நடவடிக்கையின் தொகையை துணை ஏட்டில் தவறாக பதிவு செய்தல்
7. ஈடு செய் பிழைகள்.
30.
(i) காசோலைகள் தீர்வடைவதில் ஏற்படும் கால தாமதத்தை கண்டறிதல்.
(ii) ரொக்க ஏட்டின் வங்கி பத்தியின் சரியான இருப்பினை கணக்கிடல்
(iii) வணிகத்தின் கணக்காளர்கள் மற்றும் வங்கி, நிதியினை தவறாக பயன்படுத்துவதை தடுத்தல்.
31.
பேரேடு என்பது ஆள்சார், சொத்துக்கள், பொறுப்புகள், செலவுகள் மற்றும் வருமானம் ஆகிய கணக்குகளில் இடம்பெற்றுள மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய தொடர்புடைய அணைத்து நடவடிக்கைகளையும் ஒன்று திரட்டி அதன் இறுதி விளைவைக் காட்டக்கூடிய ஒரு தொகுப்பு அறிக்கையாகும்.
பேரேட்டின் பயன்பாடுகள்:
(i) ஒரு குறிப்பிட்ட கொள்முதல், இயந்திரம் போன்ற ஒரு குறிப்பிட்ட கணக்கு சம்பந்தமான அணைத்து தகவல்களையும் பார்த்த உடனேயே தெரிந்து கொள்வதற்கு பேரேடு உதவுகிறது.
(ii) வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துதல்
பேரெடுக்க கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து கணக்குகளின் இருப்புகளையு முழுவதுமாக பகுப்பாய்வு சியா முடியும். அதன்மூலம்வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும்.
(iii) இருப்பாய்வு தயாரிக்க முடிகிறது.
பேரேட்டுக் கணக்குகளின் இருப்புகளையு கொண்டு இருபாய்வு தயாரிக்க முடியும். அதன் வாயிலாக குறிப்பேடு மற்றும் பேரேட்டில் உள்ள கணக்கியல் பதிவுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை அறிய முடிகிறது.
(iv) நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க உதவுகிறது
பேரேட்டுக் கணக்குகளின் உறுப்புகளை கொண்டு நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்க முடியும். அதன் மூலம் வணிகத்தின் நிகர இலாபம் அல்லது நட்டத்தையும் மற்றும் வணிகத்தின் நிதிநிலைமையும் அறிந்து கொள்ள உதவுகிறது.
32.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
||
|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கிருப்பு ரூ |
|||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +60,000 | +60,000 | ||
| சமன்பாடு | +60,000 | = | +60,000 | |
| (ii) ரொக்கக் கொள்முதல் | +20,000 | +20,000 | ||
| சமன்பாடு | +40,000 | +20,000 | = | +60,000 |
| (iii) ரொக்க விற்பனை | +15,000 | -10,000 | +5,000 | |
| சமன்பாடு | +55,000 | +10,000 | = | +65,000 |
| (iv) வாடகை ரொக்கமாக செலுத்தியது | -500 | -500 | ||
| சமன்பாடு | +54,500 | +10,000 | = | +64,500 |
33.
எந்த நடவடிக்கைகளை பணத்தால் அளவிட முடியுமோ, அந்த நடவடிக்கைகள் மட்டுமே கணக்குகளில் பதியப்பட வேண்டும் என்பது பணமதிப்பீட்டு கருத்து ஆகும்.
பணமானது பரிமாற்றத்தின் ஊடகமாக விளங்குவதால் பணத்தால் அளவிடக்கூடிய நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.கணக்கியலின், அளவிட்டு சுலபமாக ஒரு நாட்டினுடைய நாணயம் அமைகிறது.
பணத்தால் அளவிட முடியாத நடவடிக்கைகளை ஏடுகளில் பதியப்படுவது இல்லை. உதாரணமாக உற்பத்தி மேலாளர்க்கும், விற்பனை மேலாளர்க்கும் இடையேயான மனக்கசப்பினால் தொழில் பாதிக்கப்படுகிறது.
இந்நடவடிக்கைகள் ஏடுகளில் பதிவு செய்யப்படுவது இல்லை.ஏனென்றால் இதனை பணத்தால் அளவிட முடியாது.
பணம் ஒரு பொதுவான அளவீடாக இருப்பதால், பலதரப்பட்ட வணிக விவரங்களை அதன் மூலம் பதிவு செய்ய முடிகிறது.உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் 5 கணிப்பொறிகள், 2, மேசைகள், 3 நாற்காலிகள் அஆகிய சொத்துக்கள் உள்ளன. அவை கணிப்பொறிகள் ரூ.1,00,000/-, மேசை ரூ.10,000/-. நாற்காலிகள் ரூ.1,500/- என்ற பணமதிப்பில் குறிப்பிடவில்லையெனில், அச்சொத்துக்களை கூட்டுவது பயனுள்ள தகவலாக இருக்காது.
34.
கணக்கியல் என்பது நிதியியல் தகவல்களை, இனம் காணுதல், அளவிடுதல், பதிவு செய்தல், வகைப் படுத்துதல், சுருக்கமுணர்தல், உய்த்துணர்தல் மற்றும் தகவல்களைத் தெரிவித்தல் போன்ற முறையான செயல்பாடுகளை உள்ளடக்கியது.
கணக்கியல் கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறது.
பெற்றிருக்கக் கூடிய வளங்கள்.
பெற்றுருக்கக் கூடிய வளங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றன மற்றும்
அவற்றின் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்.
குறிப்பிட்ட கணக்காண்டில் ஈட்டிய இலாபம் அல்லது அடைந்த நட்டம், சொத்துக்கள், பொறுப்புகள், மற்றும் முதல் இவைகளின் மதிப்பு மற்றும் தன்மை குறித்து, கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
35.
| விவரம் | ரூ | ரூ | விவரம் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 15,000 | விற்பனை | 1,24,000 | ||
| கொள்முதல் | 40,000 | ||||
| கழிக்க: வெளித்திருப்பம் | 1,000 | 39,000 | கழிக்க: விற்பனைத் திருப்பம் | 2,000 | 1,22,000 |
| உள்தூக்குக் கூலி | 10,000 | இறுதிச் சரக்கிருப்பு | 8,000 | ||
| 66,000 | |||||
| 1,30,000 | 1,30,000 | ||||
| அலுவலக வாடகை | 23,000 | மொத்த இலாபம் கீ/க | 66,000 | ||
| வாரா ஐயக்கடன் ஒதுக்கு(இறுதி) | 400 | ||||
| கூட்டுக: வாராக்கடன் | 900 | ||||
| கூட்டுக: கூடுதல் வாராக்கடன் | 100 | ||||
| 1,400 | |||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு (தொடக்க ம்) | 500 | 900 | |||
| கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு (இறுதி) | 196 | ||||
| கழிக்க: தள்ளுபடி ஒதுக்கு (தொடக்கம்) | 100 | 96 | |||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 42,004 | ||||
| 66,000 | 66,000 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 25,000 | அறைகலனும் | |||
| கூட்டுக: நிகர இலாபம் | 42,004 | 67,004 | பொருத்துகைகளும் | 30,000 | |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 10,000 | பற்பல கடனாளிகள் | 20,100 | ||
| கழிக்க: கூடுதல் வாராக்கடன் | 100 | ||||
| 20,000 | |||||
| கழிக்க: வாரா ஐயக்கடன் ஒதுக்கு (20,000 × 2%) | 400 | ||||
| 19,600 | |||||
| கழிக்க: தள்ளுபடி ஒதுக்கு (19,600 × 1%) | 196 | 19,404 | |||
| இறுதிச் சரக்கிருப்பு | 8,000 | ||||
| வங்கி ரொக்கம் | 19,600 | ||||
| 77,004 | 77,004 |
36.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 9,000 | விற்பனை | 42,000 |
| கொள்முதல் | 22,000 | இறுதிச் சரக்கிருப்பு | 4,500 |
| கொள்முதல் மீதான செலவுகள் | 1,500 | ||
| மொ த்த இலாபம் கீ/இ | 14,000 | ||
| 46,500 | 46,500 | ||
| வங்கிக் கட்டணம் | 3,500 | மொத்த இலாபம் கீ/க | 14,000 |
| வாராக்கடன் | 1,200 | ||
| இதரச் செலவுகள் | 1,800 | ||
| அளித்த தள்ளுபடி | 1,700 | ||
| விற்பனைச் செலவுகள் | 1,000 | ||
| அலுவலக அறைகலன் மீதான பழுது பார்ப்புச் செலவுகள் | 600 | ||
| மேலாளருக்கான கழிவு | 200 | ||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 4,000 | ||
| 14,000 | 14,000 |
37.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | கொள்முதல் | 1,00,000 | ||
| 2. | வங்கிக் கடன் | 75,000 | ||
| 3. | கடனாளி | 1,50,000 | ||
| 4. | சரக்கிருப்பு | 35,000 | ||
| 5. | விற்பனை | 1,50,000 | ||
| 6. | கடனீந்தோர் | 50,000 | ||
| 7. | ரொக்கம் | 90,000 | ||
| 8. | முதல் | 1,00,000 | ||
| மொத்தம் | 3,75,000 | 3,75,000 |
38.
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப.எ. | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | |||||
| ஜனவரி 1 | பிரித்தி நிறுவனம் | ||||
| 25 மேசை விசிறிகள் ஒன்று ரூ 1400 வீதம் | 35,000 | ||||
| 10 மின் விசிறிகள் ஒன்று ரூ. 2,000 வீதம் | 20,000 | ||||
| 55,000 | |||||
| கூட்டுக: ஆட்டோ கட்டணம் | 100 | 55,100 | |||
| ஜனவரி 20 | சத்யா மின் பொருளாகம் | ||||
| 10 மின் விசிறிகள் ஒன்று ரூ.1, 200 வீதம் | 12,000 | ||||
| கழிக்க; வியாபாரத் தள்ளுபடி 5% | 600 | 11,400 | |||
| ஜனவரி 23 | எலிசபெத் நிறுவனம் 10 நீர் சுத்திகரிப்பு இயந்திரம் |
||||
| ஒன்று ரூ. 4,700 வீதம் | 47,000 | ||||
| கொள்முதல் க/கு ப | 1,13,500 | ||||
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | |||||
| ஜனவரி 5 | ஷீலா விற்பனையகம் | ||||
| 10 மின் தேய்ப்பான்கள் ஒன்று ரூ. 1,250 வீதம் | 12,500 | ||||
| 20 மின் அடுப்புகள் ஒன்று ரூ. 450 வீதம் | 9,000 | ||||
| 21,500 | |||||
| கழிக்க: வியாபாரத்தள்ளுபடி 10% | 2,150 | 19,350 | |||
| ஜனவரி 25 | பவானி நிறுவனம் | ||||
| 7 மின்விசிறிகள் ஒன்று ரூ. 1,450 வீதம் | 10,150 | ||||
| விற்பனை க/கு வ | 29,500 | ||||
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை ரூ | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | |||||
| 2017 | ||||||
| ஜனவரி 18 | பிரித்தி நிறுவனம் | |||||
| 5 மேசை மின் விசிறிகள் | ||||||
| ஒன்று ரூ. 1,400 வீதம் | 7,000 | குறைபாடு | ||||
| ஜனவரி 27 | சத்யா மின் பொருளாகம் | |||||
| 2 மின்விசிறிகள் ஒன்று ரூ. 1,140 வீதம் | 2,280 | சேதம் | ||||
| (விலை – வியாபாரத்தள்ளுபடி) (1,200 – 60) கொள்முதல் திருப்ப க/கு வ |
9,280 | |||||
| நாள் | விவரம் | வ.கு.எ. | பே.ப.எ. | தொகை ரூ | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | |||||
| 2017 | ||||||
| ஜனவரி | ஷீலா விற்பனையகம் | |||||
| 21 | 3 மின் தேய்ப்பான்கள் | |||||
| ஒன்று ரூ. 1,125 வீதம் | 3,375 | குறைபாடு | ||||
| (பட்டியல் விலை – வியாபாரத்தள்ளுபடி) (1,250 – 125) விற்பனைத் திருப்ப க/கு ப |
3,375 | |||||
39.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2015 | சோமு க/கு | ப | 5,000 | ||
| மார்ச் 1 | விற்பனை க/கு (கடன் விற்பனை) |
5,000 | |||
| 7 | அறைகலன் க/கு | ப | 300 | ||
| ரொக்கக் க/கு (ரொக்கக் கொள்முதல்) | 300 | ||||
| 15 | ரொக்கக் க/கு | ப | 1,800 | ||
| பெற்ற வட்டி க/கு (வட்டி பெற்றது குறித்து) |
1,800 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 1 | விற்பனை க/கு | 5,000 | 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 5,000 | ||
| 5,000 | 5,000 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 15 | பெற்ற வட்டி க/கு | 1,800 | 2015 மார்ச் 7 | அறைகலன் கீ/இ | 300 | ||
| 31 | இருப்பு கீ/இ | 1,500 | |||||
| 1,800 | 1,800 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,500 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 5,000 | 2015 மார்ச் 1 | சோமு க/கு | 5,000 | ||
| 5,000 | 5,000 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | ரொக்கக் க/கு | 300 | 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 300 | ||
| 300 | 300 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 300 | 5,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 1,800 | 2015 மார்ச் 15 | ரொக்கக் க/கு | 1,800 | ||
| 1,800 | 1,800 | ||||||
| 2015 ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,800 |
40.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
பொறுப்புகள் ரூ |
||||
|---|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கிருப்பு ரூ |
இயந்திரம் ரூ |
கடனாளர்கள் ரூ |
||||
| (i) ரொக்கம் சரக்கிருப்பு மற்றும் இயந்திரத்துடன் தொழில் தொடங்கியது | +20,000 | +12,000 | +8,000 | +40,000 | |||
| சமன்பாடு | +20,000 | +12,000 | +8,000 | +40,000 | |||
| (ii) கடன் கொள்முதல் | +7,000 | +7,000 | |||||
| சமன்பாடு | +20,000 | +19,000 | +8,000 | +40,000 | +7,000 | ||
| (iii) இரமணியின் கணக்கு தீர்க்கப்பட்டது | -6,900 | +100 | -7,000 | ||||
| சமன்பாடு | +13,100 | +19,000 | +8,000 | +40,000 | |||
| (iv) கடன் விற்பனை | -5,400 | +6,000 | +600 | ||||
| சமன்பாடு | +13,100 | +13,600 | +8,000 | +6,000 | +40,700 | ||
| (v) ரொக்கம் பெற்று இராஜன் கணக்கு முடிக்கப்பட்டது | +5,800 | -6,000 | -200 | ||||
| சமன்பாடு | +18,900 | +13,600 | +8,000 | +40,500 | |||
| (vi) கொடுபட வேண்டிய கூலி | -400 | +400 | |||||
| சமன்பாடு | +18,900 | +13,600 | +8,000 | +40,100 | +400 | ||
41.
| நாள் | பெறுதல்கள் | இ. எண் |
பே.ப. எண் |
தொகை ( ரூ ) | நாள் | செலுத்தல்கள் | சா.ப. எண் |
பே.ப. எண் |
தொகை ( ரூ ) |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2017 மே 1 |
இருப்பு கீ/கொ | 40,000 | 2017 மே 7 |
கூலி க/கு | 2,000 | ||||
| 5 | ஸ்வாதி க/கு | 4,000 | 10 | கொள்முதல் க/கு | 6,000 | ||||
| 15 | விற்பனை க/கு | 9,000 | 18 | கணிப்பொறி க/கு | 15,000 | ||||
| 30 | வட்டி க/கு | 500 | 22 | சபாபதி க/கு | 5,000 | ||||
| 28 | சம்பளம் க/கு | 2,500 | |||||||
| 31 | இருப்பு கீ/இ | 23,000 | |||||||
| 53,500 | 53,500 | ||||||||
| ஜூன் 1 | இருப்பு கீ/கொ | 23,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards