11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/08/2019
துணை ஏடுகள் - I
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் நடவடிக்கைகளை மின்சாதனங்களை விற்பனைச் செய்யும் சுபஸ்ரீ மின் பொருள் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க.
| 2017 ஏப்ரல் 5 | கார்த்திக் மின் பொருள் நிறுவனத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது. 10 மின் தேய்ப்பான் ஒன்று ரூ.2,500 வீதம் 5 மின்சார அடுப்புகள் ஒன்று ரூ.2,000 வீதம் |
| ஏப்ரல் 19 | கேதான் மின் பொருளகத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது 3 மின்சார நீர்சூடேற்றி ஒன்று ரூ.6,000 வீதம் |
| ஏப்ரல் 25 | போலார் மின் பொருள் விற்பனையகத்திடமிருந்து கடனுக்கு வாங்கியது 10 மின் விசிறிகள் ஒன்று ரூ.2,000 வீதம் |
| ஏப்ரல் 29 | M நிறுவனத்திடமிருந்து ரொக்கத்திற்கு வாங்கியது. 10 மின்சார அடுப்புகள் ஒன்று ரூ.3,000 வீதம் |
2.
திருமதி வாணி அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்க்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
| 2018 மார்ச் 1 | சுரேஷிடமிருந்து 100 கிலோ காபிக்கொட்டைகிலோ ஒன்று ரூ40 வீதம் வாங்கியது. |
| 5 | ஹரியிடமிருந்து 80 கிலோ டீத்தூள் , கிலோ ஒன்று ரூ 20 வீதம் வாங்கியது |
| 12 | திருச்சி , ரேகா சுகர்ஸிடமிருந்து 120 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் வாங்கியது. |
| 18 | சென்னை , பெருமாள் ஸ்வீட்ஸிமிருந்து 40 திங்கள் இனிப்பு , டின் ஒன்று ரூ 200 வீதம் வாங்கியது. |
| 20 | சென்னை கோவிந்தா பிஸ்கட் கம்பெனியிடமிருந்து 20 டின் பிஸ்கெட்டுகள் , டின் ஒன்று ரூ 400 வீதம் வாங்கியது |
3.
பின்வரும் நடவடிக்கைகளை சாந்தி அறைகலன் நிறுவனத்தின் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்க:
| 2017 மார்ச் 1 |
மதுரை, மோகன் அறைகலன் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 20 நாற்காலிகள் ஒன்று ரூ.450 வீதம் | |
| 2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம் | |
| இதில், 10% வியாபரத் தள்ளுபடி நீக்குக | |
| மார்ச் 7 | இராயப்பேட்டை, இரமேஷ் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 2 மர நாற்காலிகள் ஒன்று ரூ.500 வீதம் | |
| 10 மடக்கு நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம் | |
| மார்ச் 21 | காரைக்கால், கமால் நிறுவனத்திடமிருந்து வாங்கியது |
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம் | |
| 15 இரும்பு அலமாமாரிகள் ஒன்று ரூ.1,500 வீதம் | |
| இதற்கு, கட்டுமம் மற்றும் அளிப்புச் செலவு ரூ.250 | |
| இதில், 10% வியாபாரத் தள்ளுபடி நீக்குக. | |
| மார்ச் 25 | சென்னை, ஜெமினி விற்பனையகத்திடமிருந்து |
| 2 தட்டச்சு இயந்திரங்கள் ஒன்று ரூ.7,750 வீதம் அலுவலகப் பணிக்கென வாங்கப்பட்டது. |
4.
மாற்றுச்சீட்டின் மீது வழங்கப்படும் சலுகை நாட்கள்
2
3
4
5
5.
வியாபாரத் தள்ளுபடியின் நோக்கம்
விற்பனையை அதிகப்படுத்துவது
குறைந்த விலையில் பொருட்களை விற்பது
ரொக்க விற்பனையை ஊக்கப்படுத்துதல்
மேற்கூறிய அனைத்தும்
6.
மாற்றுச்சீட்டில் குறிக்கப்பட்டுள்ள தொகையைப் பெறுபவர் ______.
எழுதுப் பெறுநர்
எழுதுநர்
செலுத்தப் பெறுநர்
உரிமையர்
7.
மறுப்புச் சான்றிதழை வழங்குபவர்
பொதுக்குறிப்பர்
எழுதுநர்
எழுதுப்பெறுநர்
செலுத்தப் பெறுநர்
8.
கணக்கேடுகளில் செய்யப்பட்டுள்ள தவறுகளைத் திருத்துவதற்காகச் செய்யப்படும் பதிவுகள்______.
சரிக்கட்டுப் பதிவுகள்
திருத்தப் பதிவுகள்
மாற்றுப் பதிவுகள்
குறிப்பேட்டுப் பதிவுகள்
9.
எந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது
விற்பனை ஏடு
கொள்முதல் ஏடு
முறையான குறிப்பேடு
எந்திரம் கணக்கு
10.
11.
நிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு
கொள்முதல் ஏடு
விற்பனை ஏடு
கொள்முதல் திருப்ப ஏடு
உரிய குறிப்பேடு
12.
ஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்
விற்பனை கணக்கின் பற்றுபக்கம்
கொள்முதல் கணக்கின் வரவுப் பக்கம்
விற்பனை கணக்கின் வரவுப் பக்கம்
13.
14.
வியாபாரத் தள்ளுபடி என்றால் என்ன?
15.
துணை ஏடுகள் என்றால் என்ன?
16.
கொள்முதல் திருப்ப ஏடு என்றால் என்ன?
17.
கொள்முதல் ஏடு என்றான்றால் என்ன?
18.
ஏதேனும் நான்கு துணைஏடுகளின் வகைகளைக் குறிப்பிடுக.
19.
விற்பனை ஏட்டின் படிவத்தினைத் தருக.
20.
குறிப்பு வரைக : அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு
21.
மாற்றுச் சீட்டின் தன்மைகள் யாவை?
22.
துணை ஏடுகளின் நன்மைகள் யாவை?
23.
கொள்முதல் ஏட்டின் படிவத்தினை தருக.
1.
| நாள் | விவரம் | உள்வரு இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை (ரூ) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 ஏப்ரல் 5 | கார்த்திக் மின்பொருள் நிறுவனம் 10 மின் தேய்ப்பான் ஒன்று ரூ.2500 வீதம் |
25,000 | |||
| 5 மின்சார அடுப்புகள் ஒன்று ரூ.2000 வீதம் | 10,000 | 35,000 | |||
| ஏப் 19 | கேதான் மின்பொருளகம், 3மின்சார நீர் சூடேற்றி ஒன்று ரூ.6,000 வீதம் |
18,000 | |||
| ஏப் 25 | போலார் மின் பொருள் விற்பனையகம் 10 மின் விசிறிகள் ஒன்று ரூ.2000 வீதம் |
20,000 | |||
| கொள்முதல் க/கு ப | 73,000 | ||||
2.
| நாள் | விவரம் | உள் வகு இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2018 மார்ச் 1 | சுரேஷ் 100 கிலோ காபிக்கொட்டை கிலோ ஒன்று ரூ 40 வீதம் |
4,000 | |||
| 5 | ஹரி 50 கிலோ டீத் தூள் கிலோ ஒன்று ரூ 20 வீதம் |
1,600 | |||
| 12 | ரேகா சுகர்ஸ்,திருச்சி 1200 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ 8 வீதம் |
9,600 | |||
| 18 | பெருமாள் ஸ்வீட்ஸ் , சென்னை 40 டின்கள் இனிப்பு டின் ஒன்று ரூ 200 வீதம் |
8,000 | |||
| 20 | கோவிந்தா பிஸ்கெட் கம்பெனி சென்னை 20 டின்பிஸ்கெட்டுகள் டின் ஒன்று ரூ 400 வீதம் |
8,000 | |||
| கொள்முதல் க/கு | 31,200 | ||||
3.
| நாள் | விவரம் | இடாப்பு எண் |
பே.ப.எ | தொகை ரூ | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 | மோ கன் அறைகலன் நிறுவனம், மதுரை | ||||
| மார்ச் 1 | 20 நாற்காலிகள் ஒன்று ரூ. 450 வீதம் | 9,000 | |||
| 2 மேசைகள் ஒன்று ரூ.1,000 வீதம் | 2,000 | ||||
| 11,000 | |||||
| கழிக்க: வியாபாரத்தள்ளுபடி @ 10% | 1,100 | 9,900 | |||
| மார்ச் 7 | ரமேஷ் நிறுவனம், ராயப்பேட்டை | ||||
| 2 மர நாற்காலி ஒன்று ரூ.500 வீதம் | 1,000 | ||||
| 10 சுழலும் நாற்காலிகள் ஒன்று ரூ.200 வீதம் | 2,000 | ||||
| 3,000 | |||||
| கூட்டுக: வண்டிக்கட்டணம் & அனுப்புகைச் செலவுகள் | 150 | 3,150 | |||
| மார்ச் 21 | கமால் நிறுவனம், காரைக்கால் | ||||
| 10 நாற்காலிகள் ஒன்று ரூ.750 வீதம் | 7,500 | ||||
| 15 இரும்பு அலமாரிகள் ஒன்று ரூ. 1,500 வீதம் | 22,500 | ||||
| 30,000 | |||||
| கழிக்க: வியாபாரத் தள்ளுபடி ஒன்று 10% | 3,000 | ||||
| 27,000 | |||||
| கூட்டுக: கட்டுமம் மற்றும் அனுப்புகைச் செலவுகள் | 250 | 27,250 | |||
| கொள்முதல் க/கு ப | 40,300 | ||||
4.
(b)
3
5.
(a)
விற்பனையை அதிகப்படுத்துவது
6.
(c)
செலுத்தப் பெறுநர்
7.
(a)
பொதுக்குறிப்பர்
8.
(b)
திருத்தப் பதிவுகள்
9.
(c)
முறையான குறிப்பேடு
10.
(c)
11.
(d)
உரிய குறிப்பேடு
12.
(a)
கொள்முதல் கணக்கின் பற்றுபக்கம்
13.
(c)
14.
1. வியாபாரத் தள்ளுபடி என்பது விற்பனையாளரால் வாங்குபருக்கு , சரக்குகளின் பட்டியல் விலையிலிருந்து குறைத்து வழங்குவதாகும்.
2. வியாபாரத வழக்கமாகவோ அல்லது சரக்குகளை அதிக எண்ணிக்கையில் கொள்முதல் செய்யும் போதோ இத்தள்ளுபடி வழங்கப்படுகிறது.இது இடாப்பில் கழித்து கான்பிக்கப்படுகிறது.
3.வியாபாரத்தள்ளுபடி கணக்கேடுகளில் பதிவு செய்யபடுவதில்லை .தள்ளுபடி போக நிகர தொகை மட்டுமே பதிவு செய்யப்படும்
15.
1. துணை ஏடுகள் என்பது குறிப்பேடுகளின் பல்வேறு பிரிவுகளாகும்.
2. ஒவ்வொரு துணை ஏட்டிலும் ஒத்த தன்மையுள்ள நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.இவைகள் முதன்மை பதிவேடுகளாகும்.
16.
1. கொள்முதல் திருப்ப ஏடு ஒரு துணை ஏடாகும். இதில், ஏற்கனவே கொள்முதல் செய்து பெறப்பட்ட சரக்குகளை, ரொக்கம் உடனடியாக பெறாமல் சரக்கு அளித்தவருக்கே திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.
2. சரக்குகள் அளித்தவருக்கே திரும்பச் செல்வதால், வெளித்திருப்பம் எனப்படுகின்றன.
3. இந்த ஏடு வெளித்திருப்ப ஏடு அல்லது வெளிச்செல் திருப்ப குறிப்பேடு என்று அழைக்கப்படுகிறது.
17.
1. கொள்முதல் ஏட்டில் கடனுக்கு சரக்கு வாங்குவது மட்டுமே பதிவு செய்யப்படுகிறது.
2. கொள்முதல் ஏட்டில் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் போது, கடன் கொள்முதல் என்பது வணிகம் கையாளுகின்ற சரக்குதான் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
3. சொத்துகள் வாங்கினாலும், சரக்குகள் ரொக்கத்திற்கு வாங்கினாலும் கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவதில்லை.
4. கொள்முதல் ஏடு, கொள்முதல் நாளேடு எனவும் அழைக்கப்படுகிறது.
18.
1. கொள்முதல் ஏடு
2. கொள்முதல் திருப்ப ஏடு
3. விற்பனை ஏடு
4. விற்பனைத் திருப்ப ஏடு
19.
| நாள் | விவரம் | இடாப்பு எண். | பே.ப.எண் | விளக்கம் ரூ. | தொகை | மொத்தம் ரூ. |
|---|---|---|---|---|---|---|
20.
அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு :
பெருதற்குரிய மாற்றுச்சீட்டு என்பது எழுதப்பட்ட மாற்றுச்சீட்டின் பணம் பெரும் தன்மையை குறிக்கும் கடன் விற்பனை நடைபெறும் போது சரக்கினை அளிப்பவர்.சர்க்கினை பெறுவர்(கடனாளிகள்)மீது ஒரு குறிப்பிட்ட காலத்தவணையில் மாற்றுச்சீட்டினை எழுதுவார்.இது வணிக நிர்வாணத்திற்கு பெறுதற்குரிய மாற்றுச்சீட் டு என்றும் கடனாளிகளுக்கு அதாவது யார் தொகையை செலுத்த ஏற்றுக்கொண்டாரோ அவருக்கு செலுத்தற்குரிய மாற்றுச்சிட்டாக அமையும்
| பெரும் நாள் | மாற்றுச் சீட்டினை (ஏற்குநர்) |
தவணைக் காலம் | பெறுதற்குரிய நாள் | பே.ப.எ | தொகை (ரூ) | குறிப்பு |
|---|---|---|---|---|---|---|
| (i) | (ii) | (iii) | (iv) | (v) | (vi) | (vii) |
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு:
மாற்றுச்சீட்டு யாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அவர்களது பெயர், தொகை , செலுத்த வேண்டிய தேதி போன்ற விவரங்கள்செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டில் பதியப்படும்.ஒவ்வொரு நபரின் மாற்றுச்சீட்டு ஏற்கும்பொது அதற்குரிய தொகை செலுத்தற்கூறிய மாற்றுச்சீட்டு ஏட்டில் பற்று வைக்கப்படுகிறது.மாற்றுச்சீட்டின் படிவம் பின்வருமாறு.
| பெரும் நாள் | மாற்றுச் சீட்டினை எழுதுநர் (கடனீ ந்தோர) |
தவணைக் காலம் | பெறுதற்குரிய நாள் | பே.ப.எ | தொகை (ரூ) | குறிப்பு |
|---|---|---|---|---|---|---|
| (i) | (ii) | (iii) | (iv) | (v) | (vi) | (vii) |
21.
(i) இது ஒரு எழுத்து வடிவிலான ஆவணம்.
(ii) இது ஒரு நிபந்தனை யற்ற ஆணை
(iii) இது ஒரு குறிப்பிட்டத் தொகையினைச் செலுத்துவதற்கான ஆணை
(iv) இது எழுதுநரால் கையொப்பமிடப் பட்டிருக்கும்
(v) இது ,முத்திரைவில்லை ஓட்டப்பட்டதாவோ அல்லது முத்திரை தாளில் எழுதப்பட்டதாகவோ இருக்கும்.
(vi) இது ஏற்குநரால் ஏற்கப்படுகிறது
(vii) இதில் குறிப்பிடப்பட்டுள்ள டதொகை எழுதுநருக்கோ அல்லது மாற்றப்பெற்றுவருக்கோ செலுத்தப்படும்.
22.
துணை ஏடுகளை பராமரிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:
(i) வணிக நடவடிக்கைகளின் சரியான மற்றும் முறையான பதிவு.
ஒவ்வொரு வகையான நடவடிக்கைக்கும் தனித்தனியாக அதற்குரிய ஏடுகள் பயன்படுத்துவதால், நடவடிக்கைகள் சரியான மற்றும் முறையான துணை ஏடுகளில் பதிவு செய்யப்படுகின்றன.
(ii) வசதியான எடுத்தெழுதுதல்
(1) அனைத்து நடவடிக்கைகளிலும் ஒத்த தன்மையுடையவைகள் ஓரிடத்தில், அதாவது ஒரு துணைஏட்டில் பதிவு செய்யப்படுகின்றன.
(2) இது கொள்முதல்கணக்கு, விற்பனைகணக்கு மற்றும் சம்பந்தப்பட்ட ஆள்சார்கணக்குகளில் எடுத்தெழுதுவதை எளிதாக்குகிறது.
(iii) வேலைப் பகிர்வு
குறிப்பேடு பல துணை ஏடுகளாகப் பிரிக்கப்படுவதால், வேலைப் பகிர்வு ஏற்படுகிறது. அதனால் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு துணை ஏடுகளில் ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடிகிறது. எனவே விரைவாக பணியினை முடிக்க முடிகிறது.
(iv) திறன் அதிகரிப்பு
வேலைப்பகிர்வு காரணமாக சிறப்புடைதலின் நன்மை கிடைக்கிறது. ஒரு நபர் வேலையை திரும்பத்திரும்ப செய்வதால் அவ்வேலையைக் கையாள்வதில் அவரது திறமை அதிகரிக்கிறது.
(v) முடிவெடுத்தலுக்கு உதவுகிறது
ஒவ்வொரு நடவடிக்கையில் முழுவிவரமும் தனித்தனியாக துணைஏடுகள் மூலம் கிடைக்கின்றன. இவ்விவரங்களை நிர்வாகம் எதிர்கால முடிவெடுத்தலுக்கு பயன்படுத்த முடியும்.
(vi) பிழைகளும், மோசடிகளும் தடுக்கப்படுகின்றன
அகச்சோதனையில் ஒருவரின் வேலை தானாகவே மற்றொருவரால் சோதனை செய்யப்படுவதால், அது மிகவும் திறன் வாய்ந்ததாக அமைகிறது. துணைஏடுகள் பராமரிப்பில் அகச்சோதனையை பயன்படுத்துவதன் மூலம் பிழைகள் அல்லது மோசடி தடுக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.
23.
படிவம்-கொள்முதல் ஏடு/கொள்முதல் குறிப்பேடு
| நாள் | விவரம் | இடாப்பு எண் | பே.ப எண் | தொகை(ரூ.) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| (i) | (ii) | (iii) | (iv) | (v) | (vi) |
| கொள்முதல் க/கு ப | |||||
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards