11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2019
+1 Full Test Question
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
வெங்கடேசன் விற்பனை செய்வதற்காக ரூ 80,000 மதிப்புள்ள சரக்கை கொள்முதல் செய்தது ஒரு _______________
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
இவை எதுவுமில்லை
2.
______________ கணக்காளரின் ஒருமுகப்படுத்தல் இல்லாததாலும், கவனமின்மையாலும் நிகழ்வதாகும்.
பகுதி விடுபிழை
செய்பிழை
விதிப்பிழை
விடுபிழை
3.
முந்தைய ஆண்டின் _______ அடுத்த நிதி ஆண்டின் தொடக்க இருப்பு ஆகும்.
தொடக்க இருப்பு
இறுதி இருப்பு
இலாபங்கள்
நட்டங்கள்
4.
கணினி அமைப்பின் மிக முக்கியமான கூறு அதன் ________.
உரிமையாளர்
பணியாளர்கள்
பயனாளிகள்
இவை எதுவுமில்லை
5.
1.4.2013 இருப்பாய்வில் வங்கிக்கடன் ரூ 5,00,000 வங்கி வட்டி வீதம் ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தியது ரூ 30,000.31.3.2014 அன்று நிலுவையில் உள்ள வட்டி ________.
ரூ 30,000
ரூ 5,00,000
ரூ 4,70,000
ரூ 5,30,000
6.
சுகுமார் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு கொள்முதல் செய்ததற்காக வரவு வைக்க வேண்டிய கணக்கு.
சுகுமார் க/கு
ரொக்க க/கு
கொள்முதல் க/கு
வங்கி க/கு
7.
நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.
கணக்கு
நடவடிக்கை
சான்றுச்சீட்டு
இடாப்பு
8.
வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில் , உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு.
வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
9.
கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது
கணினி அமைப்பு செயலிழத்தல்
துல்லியத்தன்மை
பலதுறைப் புலமை
தேக்ககம்
10.
நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
ஓர் நடப்புச் சொத்து
ஓர் நீர்மைச் சொத்து
புலனாகும் சொத்து
புலனாகாச்சொத்து
11.
வங்கி வைப்புகள் மீதான வட்டி
முதலின வரவு
வருவாயின வரவு
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
12.
அதியமானிடமிருந்து கடனுக்கு அறைகலன் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது. இப்பிழையைத் திருத்தம் செய்யும்போது, கீழ்கண்டவற்றில் எந்தக் கணக்கைப் பற்று வைக்க வேண்டும்?
கொள்ள்முதல் கணக்கு
அறைகலன் கணக்கு
அதியமான் கணக்கு
இவை ஏதுமில்லை
13.
நிலைச்சொத்து விற்பனை மூலம் பெறப்படும் தொகை எந்த கணக்கில் வரவு வைக்கப்படுகிறது?
இலாப நட்டக் கணக்கு
நிலைச் சொத்து கணக்கு
தேய்மானக் கணக்கு
வங்கி கணக்கு
14.
பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?
செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது
விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது
வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
15.
விற்பனை ஏடு எதைப் பதிவு செய்ய உதவுகிறது?
அனைத்து சரக்குகளின் விற்பனை
அனைத்து சொத்துக்களின் கடன் விற்பனை
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
அனைத்து சொத்துக்கள் மற்றும் சரக்குகள் விற்பனை
16.
பேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது
வியாபாரக்ாபாரக் கணக்கு
இருப்பாய்வு
குறிப்பேடு
இலாபநட்டக் கணக்கு
17.
ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
வரவு இருப்பு
பற்று இருப்பு
இருப்பு இன்மை
பற்றும் மற்றும் வரவு இருப்பு
18.
இறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு
முக்கியத்துவ மரபு
பண மதிப்பீட்டுக் கருத்து
முன்னெச்சரிக்கை மரபு
நிகழ்வு தீர்வு / கருத்து
19.
தள்ளுபடி, ரொக்கம் மற்றும் வங்கி பத்திகளுடைய ரொக்க ஏட்டை இவ்வாறு அழைக்கலாம்.
சாதாரண ரொக்க ஏடு
இருபத்தி ரொக்க ஏடு
முப்பத்தி ரொக்க ஏடு
சில்லறை ரொக்க ஏடு
20.
நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
கடனீந்தோர்
பணியாளர்
வாடிக்கையாளர்
அரசு
21.
கணக்கியல் காலக் கருத்து - குறிப்பு வரைக.
22.
இடாப்பு என்றால் என்ன?
23.
வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள் யாவை?
24.
கணினிமயக் கணக்கியல் முறை என்றால் என்ன?
25.
பின்வரும் ஒவ்வொரு பிழையிலும் பாதிக்கப்பட்டுள்ள கணக்குகளைக் கூறவும்.
(அ) வா வாசுவுக்கு ரூ.1,000-த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ப ப பதிவுசெய்யப்படாமலுள்ளது.
(ஆ) கொமுதல் ஏட்டின் மொத்தம் ரூ.2,500 இருமுறை பேரேட்டில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.
26.
ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன?
27.
28.
ஏதேனும் நான்கு துணைஏடுகளின் வகைகளைக் குறிப்பிடுக.
29.
குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்பதன் பொருள் என்ன?
30.
ரொக்கத் தள்ளுபடி என்றால் என்ன?
31.
கணக்கியலின் நோக்கங்கள் யாவை?
32.
சொத்துகள் மற்றும் பொறுப்புகளை குழுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் என்றால் என்ன?
33.
2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
(ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
(iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
(iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
(v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.
34.
தேய்மானம் நீக்க வேண்டியதன் நோக்கங்கள் யாவை?
35.
அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதவும்
36.
வங்கியில் ரொக்கம் செலுத்தும்போது ரொக்க ஏட்டில் பற்றும் வங்கி அறிக்கையில் வரவும் வைக்கப்படுவது ஏன்? விளக்குக
37.
குறிப்பேட்டினை பேரேட்டுடன் வேறுபடுத்துக.
38.
பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.
| (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 60,000 |
| (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | ரூ 20,000 |
| (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது | ரூ 15,000 |
| (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது | ரூ 500 |
39.
முரளி என்பவரது ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து 31.3.2017 அன்றைய இருப்பாய்வினை தயாரிக்கவும்
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| விற்பனை | 35,000 | தணிக்கைக் கட்டணம் | 1,000 |
| வட்டி செலுத்தியது | 350 | நகர நுழைவு வரி | 8,000 |
| உள் திருப்பம் | 2,500 | நிலம் | 90,000 |
| தேய்மானம் | 2,400 | முதல் | 60,000 |
| அலுவலக வாடகை | 2,000 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 |
40.
எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.
41.
கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.
| அ] | ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது | ரூ 25,000 |
| ஆ] | சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது | ரூ 20,000 |
| இ] | அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது | ரூ 25,000 |
| ஈ] | ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது | ரூ 5,000 |
42.
பின்வரும் விவரங்களில் இருந்து திரு.ஜாக்கப் அவர்களின் செல்லேடு காட்டும் வங்கியிருப்பை 2010 டிசம்பர் 31ல் காண்க.
[அ] 2010 டிசம்பர் 31ல் ரொக்க ஏட்டினபடியான வங்கியிருப்பு ரூ 11,500.
[ஆ] விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை ரூ 1,750.
[இ] வங்கியில் செலுத்திய காசோலைகள் 31 டிசம்பர் 2010ல் தீர்வு செய்யப்படாதது ரூ 2,150.
[ஈ] வங்கி வசூல் செய்த முதலீட்டு மீது வட்டி ரூ 275 குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
[உ] உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது ரூ 250 குறித்து ஏட்டில் பதிவு இல்லை.
[ஊ] செல்லோட்டின்படி வங்கிக் கட்டணம் ரூ95.
43.
சங்கீதாவின் ஏடுகளில் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்க.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| முதல் | 20,000 | சம்பளம் | 6,600 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 8,000 | நிறுவுகைச் செலவுகள் | 4,500 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 10,500 | விளம்பரம் | 2,300 |
| கொள்முதல் | 75,000 | அறைகலன் | 10,000 |
| விற்பனை | 95,000 | வங்கி ரொக்கம் | 3,200 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 12,000 | இதர வரவுகள் | 600 |
| எடுப்புகள் | 4,500 |
சரிக்கட்டுதல்கள்:
(அ) மார்ச் 31, 2018 அன்று இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 14,200
(ஆ) சங்கீதாவின் வருமானவரி செலுத்தியது ரூ 800
(இ) எடுப்புகள் மீது வட்டி 12% ஆண்டுக்கு அனுமதிக்கவும்.
(ஈ) மேலாளருக் குரிய கழிவு, கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% தரப்பட வேண்டும்.
44.
கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.
| விவரம் | ரூ | விபரம் | ரூ |
|---|---|---|---|
| மொத்தம் இலாபம் | 50,000 | வட்டி பெற்றது | 2,000 |
| அலுவலக வாடகை | 10,000 | தள்ளுபடி பெற்றது | 3,000 |
| அலுவலக சொத்துகள் மீதான தேய்மானம் | 8,000 | வெளிதூக்குக் கூலி | 2,500 |
| தள்ளுபடி கொடுத்தது | 12,000 | அலுவலக கட்டடம் மீதான காப்பீடு | 3,500 |
| விளம்பரம் | 4,000 | பொதுச் செலவுகள் | 3,000 |
| தணிக்கைக் கட்டணம் | 1,000 | உள் ஏற்றிச் செல் செலவு | 1,000 |
45.
கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இடாப்பு தயாரிக்கவும்.
1. Financial Accounting – RL Gupta - 40 Nos.
2. Advanced Accounting – MC Shukla - 20 Nos.
3. Income Tax Law & Practice – HC Mehrothra - 20 Nos.
4. Practical Auditing – B N Tandon - 30 Nos.
46.
பின்வரும் பிழைகளை கணக்காளர் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறிந்தார். அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரூ.3,000-த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) பெற்றெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) தமிழ்ச்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) ரூ.300-க்கு பழைய அறைகலன் விற்றது விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(உ) செளந்தரபாண்டியனிடமிருந்து கடனுக்கு ரூ.800 மதிப்புள்ள சரக்கு வாங்கியது
ஏடுகளில் பதிவுசெய்யப்படவில்லை
47.
ஏப்ரல் 1, 2014 அன்று இராகுல் இயந்திரம் ஒன்றை ரூ. 2,00,000 க்கு வாங்கினார். அக்டோபர் 1, 2015 அன்று மற்றொரு இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு வாங்கினார். செப்டம்பர் 30, 2016 அன்று, ஏப்ரல் 1, 2014 அன்று வாங்கிய இயந்திரத்தை ரூ. 1,20,000 க்கு விற்றார். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. ஆண்டுக்கு 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட வேண்டும். 2014 – 15 லிருந்து 2016 – 2017 வரை மூன்று ஆண்டுகளுக்கான இயந்திர கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்.
48.
பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.
(i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.
(ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.
(iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.
(iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.
(v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400.
49.
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு சிவா நிறுவனத்தின் டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க.
(அ) ரொக்க ஏட்டின் படியான வரவிருப்பு ரூ 12,000
(ஆ) ரூ 1,200 மதிப்புள்ள காசோலை விடுத்து செலுத்துகைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டது தவறுதலாக ரொக்க ஏட்டில் ரூ 2,100 என வரவு வைக்கப்பட்டது.
(இ) வங்கி அறிக்கையின் பற்றுப் பக்கம் ரூ 100 குறைவாகக் கூட்டப்பட்டது
50.
பின்வரும் நடவடிக்கைகளை எழுது பொருள் வியாபாரம் செய்யும் இராம் நிறுவனத்தின் விற்பனை ஏட்டில் பதிவு செய்க.
| 2017 | |
| ஜனவரி 1 | அன்புவிற்கு கடனுக்கு விற்றது ரீம் ஒன்று ரூ. 150 வீதம் 20 ரீம்கள் வெள்ளைத்தாள். |
| ஜனவரி 2 | ஜெகதீஷ் நிறுவனத்திற்கு ஒரு டஜன் ரூ. 360 வீதம் 6 டஜன்கள் எழுதுகோல் கடனுக்கு விற்றது. |
| ஜனவரி 10 | பழைய செய்தித்தாளை ரொக்கத்திற்கு விற்றது ரூ. 620 |
| ஜனவரி 15 | இளங்கோவிற்கு கடனுக்கு விற்றது ஒன்று ரூ. 170 வீதம் 10 வரைவு அட்டைகள் |
| ஜனவரி 20 | கனி விற்பனையகத்திற்கு ஒன்று ரூ. 1,520 வீதம் 4 எழுது மேசைகளை ரொக்கத்திற்கு விற்றது |
51.
பின்வரும் இருப்புகள் பாஸ்கர் என்பவரது ஏடுகளிலிருந்து 31.3.2017 அன்று எடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து அவருடைய இருப்பாய்வு தயாரிக்கவும். இருப்பாய்வு சமன்படாவிட்டால் வேறுபாட்டினை அனாமத்துக் கணக்கிற்கு மாற்றவும்
| ரூ | ரூ | ||
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 | கடனாளிகள் | 25,000 |
| முதல் | 90,000 | உள்தூக்குக் கூலி | 16,500 |
| விற்பனை | 1,77,200 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 20,000 |
| சம்பளம் | 12,000 | கழிவுப் பெற்றது | 5,550 |
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 9,450 | வங்கி ரொக்கம் | 17,000 |
| தொலைபேசிக் கட்டணம் | 2,350 | அறைகலன் | 19,000 |
| கடனீந்தோர் | 16,000 | பொறி இயந்திரம் | 55,800 |
| கொள்முதல் | 85,000 | பழுதுபார்ப்புச் செலவு | 550 |
52.
கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து முன்பண மீட்பு முறையில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டைத் தயாரிக்கவும்.
| 2017 ஜூலை | ரூ | |
| 1 | காசாளரிடமிருந்து முன்பணம் பெற்றது | 2,000 |
| 7 | மடல் ஏடு மற்றும் பதிவேடுகள் வாங்கியது | 100 |
| 8 | வெள்ளைவெள்ளைத் தாள்கள் வாங்கியது | 50 |
| 10 | ஆட்டோ ரிக்ஷா கட்டணம் கொடுத்தது | 200 |
| 15 | கூலி கொடுத்தது | 300 |
| 18 | தபால் செலவுகள் செய்தது | 100 |
| 21 | எழுது பெருள்கள் வாங்கியது | 450 |
| 23 | தேநீர் செலவுகள் செய்தது | 60 |
| 25 | துரித அஞ்சல் செலவு செய்தது | 150 |
| 27 | சிற்றுண்டி செலவுகள் செய்தது | 250 |
| 31 | ஏற்றிச் செல் செலவுகள் செய்தது | 150 |
53.
மேரி என்ற அரிசி வியாபாரி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகிறார். அவருடைய குறிப்பேட்டில் 2018 மார்ச் மாதத்திற்கான நடவடிக்கைகளை பதிவு செய்க.
| மார்ச் | ரூ | |
| 1 | சிபி என்பவரிடமிருந்து அரிசி மூட்டைகள் கடன் கொள்முதல் செய்தது | 20,000 |
| 2 | இணைய வங்கி மூலமாக மின்கட்டணம் செலுத்தியது | 500 |
| 3 | சிபியிடமிருந்து வாங்கிய சரக்கு திருப்பி அனுப்பப்பட்ட | 5,000 |
| 4 | சொந்தப் பயன்பாட் டிற்காக எடுத்த அரிசி மூட்டைகள் மதிப்பு | 1,000 |
| 5 | விளம்பரக் கட்டணம் செலுத்தியது | 2,000 |
| 6 | மனோ என்பவருக்கு சரக்கு கடனுக்கு விற்றது | 20,000 |
| 7 | மனோ என்பவரால் சரக்கு திருப்பியனுப்பப்பட்டது | 5,000 |
| 8 | மனோவிடமிருந்து பெற வேண் டிய தொகை மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாக பணம் பெறப்பட்டது |
54.
கீழ்காணும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதுக.
| 2016 செப் 1 | ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ.80,000 |
| 7 | ரூபன் என்பவரிடமிருந்து ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | 10,000 |
| 10 | ஹேமா என்பவரிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது | 42,000 |
| 22 | ஹேமாவிற்கு திருப்பிய சரக்கு | 2,000 |
| 23 | ஹேமாவிற்கு ரொக்கம் செலுத்தியது | 10,000 |
1.
(b)
வருவாயினச் செலவு
2.
(b)
செய்பிழை
3.
(b)
இறுதி இருப்பு
4.
(c)
பயனாளிகள்
5.
(a)
ரூ 30,000
6.
(b)
ரொக்க க/கு
7.
(c)
சான்றுச்சீட்டு
8.
(d)
இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
9.
(a)
கணினி அமைப்பு செயலிழத்தல்
10.
(d)
புலனாகாச்சொத்து
11.
(b)
வருவாயின வரவு
12.
(c)
அதியமான் கணக்கு
13.
(b)
நிலைச் சொத்து கணக்கு
14.
(d)
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
15.
(c)
அனைத்து சரக்குகளின் கடன் விற்பனை
16.
(b)
இருப்பாய்வு
17.
(b)
பற்று இருப்பு
18.
(c)
முன்னெச்சரிக்கை மரபு
19.
(c)
முப்பத்தி ரொக்க ஏடு
20.
(b)
பணியாளர்
21.
1. கணக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தயாரிப்பதை இக்கருத்துக்கு குறிக்கிறது.
2. உரிமையாளர்கள், முதலீட்டாளர்கள், கடனீந்தோர், பணியாளர்கள் மற்றும் அரசு ஆகியோர் அவ்வபோது நிறுவனங்களின் செயல்திறனை அறிந்து கொள்ள ஆர்வம் கொள்வதால் கணக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொதுவாக ஒரு ஆண்டிற்கு தயாரிக்கப்பட வேண்டும்.
3. இக்கருத்து, உரிமையாளர்களுக்கு வணிகத்தின் வருமானத்தை பகிர்ந்தளிக்கவும் மற்றும் வெவ்வேறு காலங்களில் நிறுவனத்திறனை ஒப்பிட்டு பார்க்கவும், மதிப்பீடு செய்யவும் உதவுகிறது.
22.
சரக்கை விற்கும் பொழுது விற்பவர் ஒரு அறிக்கை போன்ற சீட்டைத் தயாரித்து வாங்குநரிடம் அளிப்பார் இதில் பற்றிய விவரம், அளவு, விலை, எடை, குறியீடு, மொத்தம் செலுத்த வேண்டிய தொகை, அளித்த தள்ளுபடி, நிகரமாக செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும். இவ்வறிக்கையே இடாப்பு எனப்படுகிறது.
23.
வியாபாரக் கணக்கு தயாரிப்பதன் நோக்கங்கள்
(i) மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம் பற்றிய தகவல்களைத் தருகிறது
(ii) வரக்கூடிய நட்டங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
(iii) நேரடிச் செலவுகள் மற்றும் நேரடி வருமானங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறது.
24.
(i) கணினிமயக் கணக்கியல் முறை என்பது, கணினியை பயன்படுத்தி கணக்குகளைப் பராமரிக்கும் முறை ஆகும்.
(ii) இது, கணக்கேடுகள் பாராமரிப்பு மற்றும் அறிக்கைகள் தயாரிப்பதற்கு ஏற்ப கணக்கியல் நடவடிக்கைகளை, வன்பொருள் மற்றும் மென்பொருள் கொண்டு செயல்முறைக்குள்ளாகுபடுவதை உள்ளடக்கியதாகும்.
25.
| வ.எண் | விவரம் | பே. ப. ஏ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | வாசு க/கு | ப | 1,000 | ||
| விற்பனை க/கு | 1,000 | ||||
| (வாசுவுக்கு கடனுக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப் படாமலுள்ளது திருத்தியது) | |||||
| ஆ | விற்பனை க/கு | ப | 2,500 | ||
| அனாமத்துக் க/கு | 2,500 | ||||
| (கொள்முதல் ஏட்டின் மொத்தம் ரூ.2,500 இருமுறை பேரேட்டில் எழுதப்பட்டுள்ளது திருத்தியது) |
26.
(i) ஆண்டுத் தொகை தேய்மானம் கணக்கிடும் போது சொத்தின் ஆரம்ப அடக்கவிலை மட்டுமல்லாமல் முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
(ii) தொடர்புடைய நிலைச் சொத்தில் முதலீடு செய்யாமல் வேறு ஏதாவது சொத்தில் முதலீடு செய்திருந்தால் குறிப்பிட்ட வட்டி பெறப்பட்டிருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் வட்டியானது கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
(iii) தேய்மானத் தொகையை கணக்கிட ஆண்டுத்தொகை காரணி பயன்படுத்தப்படுகிறது.
(iv) தேய்மானத் தொகை- ஆண்டுத் தொகை காரணி x சொத்தின் ஆரம்ப அடக்க விலை.
27.
28.
1. கொள்முதல் ஏடு
2. கொள்முதல் திருப்ப ஏடு
3. விற்பனை ஏடு
4. விற்பனைத் திருப்ப ஏடு
29.
1. குறிப்பேடு என்பது ஒரு தோற்றப்பதிவேடு. இதில் வணிக நடவடிக்கைகள் நாள் வரிசையில் பதிவுச் செய்யப்படுகின்றன. அதாவது, நடவடிக்கைகள் நிகழ்ந்த கால வரிசையில் பதியப்படுகின்றன.
2. நடவடிக்கைகள் முதன் முதலில் குறிபற்றில் தான் மதியப்படுகின்றன. குறிப்பேட்டில் பதிவு செய்வதற்கு ஆதார ஆவணங்கள் அடிப்படையாக உள்ளன.
3. நடவடிக்கைகளை குறிப்பேட்டில் பதிவு செய்வதை குறிப்பிட்டு பதிவு என்கிறோம்.குறிப்பேட்டில் நடவடிக்கைகளைப் பதிவு செய்யும் முறையினை குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்கிறோம்.
30.
(1) குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னரோ சரியாக தொகையை திரும்பச் செலுத்தும் நபர்களுக்கு கலங்க கூடிய தள்ளுபடி ரொக்கத் தள்ளுபடி ஆகும்.
(2) கடனீந்தோருக்கு தள்ளுபடி அளித்தது (நட்டம்) என்றும் மற்றும் கடனை திரும்பச் செலுத்தும் கடனாளிக்கு தள்ளுபடி பெற்றது (ஆதாயம்) என்றும் எடுத்துக் கொள்ளப்டுகிறது.
31.
கணக்கியலின் நோக்கங்கள் பின்வருமாறு:
(i) நிதி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த முறையான பதிவேடுகளை வைத்திருத்தல்.
(ii) வணிக நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிதல்.
(iii) வணிக நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் நிலைமை அறிதல்
(iv) பல்வேறு பயனீட்டாளர்களின் தேவைக்கேற்ப தகவல்களை வழங்குதல்.
(v) நிறுவனத்தின் சொத்துக்களைப் பாதுகாத்தல் மற்றும்,
(vi) நிறுவனத்தின் கடன் தீர்க்கும் திறன் மற்றும் நீர்மைத்தன்மையை அறிதல்.
32.
(i) இருப்புநிலைக் குறிப்பில் சொத்துகளும் பொறுப்புகளும் குழுப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட ஒழுங்கில் வரிசைப்படுத்தி காண்பிக்கப்படுகிறது.
(ii) குழுப்படுத்துதல் என்பது ஒரே தன்மையுடைய இனங்களை ஒரு பொதுவான தலைப்பின் கீழ் கொண்டுவருதலாகும். உதாரணமாக, பல்வேறு வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய தொகை 'பற்பல கடனாளிகள்' என்ற தலைப்பின் கீழ் காட்டப்படுகிறது.
(iii) ஒழுங்குபடுத்துதல் என்பது, பல்வேறு சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தகுந்த ஒழுங்கில் வரிசைப்படுத்தலாகும். ஒழுங்குபடுத்துதல் கீழ்க்கண்ட இரு வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் செய்யப்படுகிறது.
(அ) நீர்மைத்தன்மை ஒழுங்கு
(ஆ) நிலைத்தன்மை ஒழுங்கு
33.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017, டிச 31 | சம்பளக் க/கு கொடுபட வேண்டிய சம்பளக் க/கு (கொடுபட வேண் டிய சம்பளம் சரிக்கட்டப்பட்டது) |
ப | 1,200 | 1,200 | |
| டிச. 31 | வாடகைக் க/கு கொடுபட வேண்டிய வாடகை க/கு (கொடுபட வேண்டிய வாடகை சரிக்கட்டப்பட்டது) |
ப | 300 | 300 | |
| டிச. 31 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமக் க/கு காப்பீட்டு முனைமக் க/கு (முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு சரிக்கட்டப்பட்டது) |
ப | 450 | 450 | |
| டிச. 31 | முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி க/கு முதலீடுகள் மீதான வட்டி க/கு (முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி சரிக்கட்டப்பட்டது) |
ப | 400 | 400 | |
| டிச. 31 | வாராக்கடன் க/கு பற்பல கடனாளிகள் க/கு (வாராக்கடன் போக்கெழுதியது) |
ப | 200 | 200 |
34.
(i) சரியான இலாபம் அல்லது நட்டம் கண்டறிய
1. பொருத்துகை கோட்பாட்டின்படி, ஒரு கணக்காண்டில் செய்த செலவுகளை, அந்தக் காலத்தில் ஈட்டிய வருமானத்துடன் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும்.
2. எனவே, வணிகத்தில் வருமானத்தை பெருக்குவதற்காக சொத்துக்களைப் பயன்படுத்தும் போது, பயன்பாட்டிற்குரிய சொத்தின் அடக்கவிலை அதாவது, பயன்பாடு பெற்றதற்கேற்ப ஏட்டின் மதிப்பில் ஏற்படும் குறைவு, வருவாயுடன் பொருத்திப் பார்க்கப்பட வேண்டும்.
(ii) உண்மையான மற்றும் நியாயமான நிதி நிலையை உணர்த்த
1. நிலைச் சொத்துகளின் மீது தேய்மானம் நீக்கப்படும் போது, நிலைச் சொத்தின் ஏட்டு மதிப்பு அதன் தேய்மானத் தொகை இருப்புநிலைக் குறிப்பில் காண்பிக்கப்படுகிறது.
2. மீதமுள்ள தொகை அச்சொத்திலிருந்து இன்னும் பெறவேண்டிய பலன்களைக் குறிக்கிறது.
(iii) நிலைச் சொத்தினை மாற்றுவதற்காக
1. இலாப நட்டக் கணக்கில் தேய்மானம் பற்று வைக்கப்படும் போது, அதற்கு சமமான தொகை வணிகத்தில் தக்க வைக்கப்படுகிறது அல்லது வணிகத்திற்கு வெளியே முதலீடு செய்யப்படுகிறது.
2. சொத்தின் பயனுள்ள வாழ்நாள் முடிவுக்கு வரும் போது வணிகத்தில் உள்ள வளங்களைக் கொண்டு ஒரு புதிய சொத்து வாங்க முடியும்.
(iv) வரிச் சலுகைகளைப் பெற
1. இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி, வணிக வருமானத்திற்கு வரி கணக்கிடும் போது தேய்மானம் வருமானத்திலிருந்து கழித்து காண்பிக்கப்பட வேண்டும்.
2. ஆகையால், வரிச் சுமையை குறைப்பதற்காக தேய்மானம் கணக்கிடப்பட்டு இலாப நட்டக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது.
(v) சட்டத் தேவையைப் பூர்த்தி செய்ய
வருமானவரிச் சட்டத்திற்கு மட்டுமல்லாமல், பிற சட்டத்தின் சரத்துகளை பூர்த்தி செய்வதற்காக, நிலைச் சொத்தின் மதிப்பிலிருந்து தேய்மானம் நீக்கப்படுகிறது.
35.
1. இருபாய்வு சமநிலையடையாத பொது வேறுபாட்டு தொகையை அனாமத்துக் கணக்கு என்ற தற்காலிகக் கணக்கில் பற்று அல்லது வரவு வைக்க வேண்டும்.
2. பற்று உறுப்புகளின் கூட்டுத் தொகையை காட்டிலும் வரவு இருப்புகளின் கூட்டுத் தொகையை மிகையாக இருக்கும் பொது பற்று வைக்கப்படும்.
3. மாறாக வரவு இருப்புகளின் கூட்டுத் தொகை பற்று இருப்புகளின் கூட்டுத் தொகையை வீடாக குறைவாக இருப்பின் வரவு வைக்க வேண்டும்
36.
(1) வங்கி அறிக்கையில் உள்ள பதிவுகளை, ரொக்க ஏட்டில் உள்ள பதிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ரொக்க ஏட்டில் கணக்கீட்டு முறை நேர்மாறாக இருப்பதைக் காணலாம்.
(2) ரொக்க ஏட்டினை வணிகத்தின் நோக்கில் பதிவு செய்வதாலும், வங்கி அறிக்கையினை வங்கியின் நோக்கில் பதிவு செய்வதாலும் இவ்விரு ஏடுகளை ஒப்பிடும்போது நேர் மாறாக இருக்கும்.
(3) இரட்டைப் பதிவு முறை பின்பற்றுவதால், வங்கி அறிக்கையின் வரவு இருப்பு என்பது ரொக்க ஏட்டின் பற்று இருப்பைக் குறிக்கும்.
(4) வங்கி அறிக்கையின் பற்று இருப்பு என்பது ரொக்க ஏட்டின் வரவு இருப்பைக் குறிக்கும். ஏனென்றால் வங்கி இருப்பு சாதகமாக இருக்கும் பொழுது, வங்கியானது வணிகத்திற்கு கடனாளர் மற்றும் வணிகம் (வங்கியின் வாடிக்கையாளர்) வங்கியின் கடனீந்தோர் ஆவார்.
(5) வணிகம் வங்கியில் செலுத்தும் போது, வங்கியின் ஏடுகளில் வாடிக்கையாளர் வங்கியின் கடனீந்தோர் ஆவார்.
(6) வங்கியிலிருந்து, வணிகம் பணம் எடுக்கும் பொழுது, வங்கி வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய தொகை குறைவதால், வாடிக்கையாளரது கணக்கு பற்று வைக்கப்படுகிறது. இதன் விளைவாக வங்கி அறிக்கையில் (செல்லேடு) சாதகமான இருப்பு வரவு இருப்பாகவும், பாதகமான இருப்பு பற்று இருப்பாகவும் தோன்றும்.
37.
| வ. எண் | அடிப்படை | குறிப்பேடு | பேரேடு |
|---|---|---|---|
| 1 | பதிவு செய்யும் நிலை | குறிப்பேட்டில் பதிவது முதல் நிலையாகும். | குறிப்பேட்டில் பதிந்த பிறகு பேரேடு தயாரிப்பதால், இது இரண்டாவது நிலையாகும். |
| 2 | பதிவு செய்யும் வரிசை | குறிப்பேட்டில் நடவடிக்கைகள் நிகழ்ந்த வரிசைப்படி அதாவது நடவடிக்கைகள் நிகழ்ந்த நாளின்படி பதிவு செய்யப்படுகிறது | கணக்குகளின் வரிசைப்படி பேரேட்டில் பதிவுகள் செய்யப்படுகின்றன. |
| 3 | வழிமுறை | குறிப்பேட்டில் பதிவுசெய்வதை குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்கிறோம் | பேரேட்டில் பதிவு செய்வதை எடுத்தெழுதுதல் என்கிறோம் |
| 4 | இருபாய்வு தயாரிக்க உதவுதல் | குறிப்பேட்டில் பதியப்பட்டுள்ள தொகைகளை கொண்டு இருபாய்வு தயாரிக்க இயலாது | பேரேட்டுக் கணக்குகளின் மூலம் கிடைக்கப்பெற்ற இருப்புகளே இருபாய்வு தயாரிக்க அடிப்படையாகிறது. |
| 5 | பதிவிற்கான ஆதாரம் | ஆதார ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்டு பதிவுகள் செய்யப்படுகின்றன. | குறிப்பேட்டுப் பதிவுகளை கொண்டு பேரேடு தயாரிக்கப்படுகிறது |
| 6 | நிகர நிலை | குறிப்பேட்டினை கொண்டு ஒரு கணக்கின் நிக்கா நிலையினை அறிய முடியாது |
பேரேட்டினை கொண்டு ஒரு கணக்கின் நிகர நிலையினை அறியலாம். |
38.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
||
|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கிருப்பு ரூ |
|||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +60,000 | +60,000 | ||
| சமன்பாடு | +60,000 | = | +60,000 | |
| (ii) ரொக்கக் கொள்முதல் | +20,000 | +20,000 | ||
| சமன்பாடு | +40,000 | +20,000 | = | +60,000 |
| (iii) ரொக்க விற்பனை | +15,000 | -10,000 | +5,000 | |
| சமன்பாடு | +55,000 | +10,000 | = | +65,000 |
| (iv) வாடகை ரொக்கமாக செலுத்தியது | -500 | -500 | ||
| சமன்பாடு | +54,500 | +10,000 | = | +64,500 |
39.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | விற்பனை | 35,000 | ||
| 2 | வட்டி செலுத்தியது | 350 | ||
| 3 | உள் திருப்பு | 2,500 | ||
| 4 | தேய்மானம் | 2,400 | ||
| 5 | அலுவலக வாடகை | 2,000 | ||
| 6 | தணிக்கை கட்டணம் | 1,000 | ||
| 7 | நகர நுழைவு வரி | 8,000 | ||
| 8 | நிலம் | 90,000 | ||
| 9 | முதல் | 60,000 | ||
| 10 | வங்கி மேல்வரைப்பற்று | 11,250 | ||
| மொத்தம் | 1,06,250 | 1,06,250 |
40.
ஒரு நடவடிக்கையில் ரொக்கம் மற்றும் வாங்கி என்ற இரு கணக்குகளும்தொடர்பு பெற்றிருந்தால் அந்நடவடிக்கையின் இரு தன்மைகளும் ரொக்க ஏட்டில் பதியப்படுகின்றன.அவ்வாறு ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகள், ரொக்க ஏட்டில் பதியப்பட்டால் அது எதிர்ப்பதிவு எனப்படும்.
உதாரணம்:
1. வங்கியில் பணம் செலுத்தியது
இது ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் உள்ள வாங்கிப் பத்தியிலும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள ரொக்கப் பத்தியிலும் பதியப்படும்.
2. வங்கியிலிருந்து அலுவலக செலவுகளுக்காக பணம் எடுத்து:
இது ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் உள்ள ரொக்கப் புத்தியிலும் மற்றும் வரவு பக்கத்தில் உள்ள வாங்கிப் புத்தியிலும் பதியப்படும்.
41.
| வ.எண் | நடவடிக்கை | ரொக்கம் ரூ | சரக்கிருப்பு ரூ | கானாளிகள் ரூ | மொத்த சொத்துகள் ரூ | = | மொத்த பொறுப்புகள் ரூ | முதல் ரூ | கடனீந்தோர் ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| அ ) | ரம்யா தொழில் தொடங்கியது | +25,000 | +25,000 | ||||||
| இருப்புகள் | +25,000 | +25,000 | |||||||
| சமன்பாடு | +25,000 | = | +25000 | ||||||
| ஆ) | கடன் கொள்முதல் செய்தது | +20,000 | +20,000 | ||||||
| இருப்புகள் | +25,000 | +20,000 | +25,000 | +20,000 | |||||
| சமன்பாடு | +45,000 | = | +45,000 | ||||||
| இ) | கடன் விற்பனை | -18,000 | +25,000 | +7,000 | |||||
| இருப்புகள் | +25,000 | +2,000 | +25,000 | +32,000 | +20,000 | ||||
| சமன்பாடு | +52,000 | = | +52,000 | ||||||
| ஈ) | சொந்த செலவுக்கு எடுத்தது | -5,000 | -5,000 | ||||||
| இருப்புகள் | +20,000 | +2,000 | +25,000 | +27,000 | +20,000 | ||||
| சமன்பாடு | +47,000 | = | +47,000 |
42.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின் படி வங்கியிருப்பு | 11,500 | |
| கூட்டுக: | ||
| விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை | 1,750 | |
| வங்கி வசூல் செய்த முதலீட்டு மீது வட்டி | 275 | |
| உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது | 250 | 2,275 |
| 13,775 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்திய காசோலைகள் தீர்வு செய்யப்படாதது | 2,150 | |
| வங்கிக் கட்டணம் | 95 | 2,245 |
| செல்லோட்டின் படி வங்கியிருப்பு | 11,530 |
43.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 12,000 | விற்பனை | 95,000 | ||
| கொள்முதல் | 75,000 | இறுதிச் சரக்கிருப்பு | 14,200 | ||
| மொத்த இலாபம் கீ/இ | 22,200 | ||||
| 1,09,200 | 1,09,200 | ||||
| சம்பளம் | 6,600 | மொத்த இலாபம் கீ/கொ | 22,200 | ||
| நிறுவுகைச் செலவுகள் | 4,500 | இதர வரவுகள் | 600 | ||
| விளம்பரம் | 2,300 | எடுப்புகள் மீது வட்டி 12% | 540 | ||
| வருமான வரி | 800 | ||||
| மேலாளருக்குரிய கழிவு | 914 | ||||
| நிகர இலாபம் | 8,226 | ||||
| (முதல் கணக்கிற்கு மாற்றுவது) | |||||
| 23,340 | 23,340 |
| பொறுப்புகள் | தொகை ரூ |
தொகை ரூ |
சொத்துக்கள் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு | 10,500 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 8,000 | ||
| முதல் | 20,000 | அறைகலன் | 10,000 | ||
| கூட்டுக : நிகர இலாபம் | 8,226 | வங்கி ரொக்கம் | 3,200 | ||
| கழிக்க : | |||||
| 28,226 | வருமான வரி | 800 | 2,400 | ||
| கழிக்க : எடுப்புகள் | 4,500 | இறுதிச்சரக்கிருப்பு | 4,200 | ||
| 23,726 | |||||
| கழிக்க: | |||||
| எடுப்புகள் மீது வட்டி | 540 | 23,186 | |||
| மேலாளருக்கான கழிவு | 914 | ||||
| 34,600 | 34,600 |
44.
| விவரம் | தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|
| அலுவலக வாடகை | 10,000 | மொத்த இலாபம் | 50,000 |
| அலுவலக சொத்துகள் மீதான தேய்மானம் | 8,000 | வட்டி பெற்றது | 2,000 |
| தள்ளுபடி கொடுத்தது | 12,000 | தள்ளுபடி பெற்றது | 3,000 |
| விளம்பரம் | 4,000 | ||
| தணிக்கை கட்டணம் | 1,000 | ||
| வெளிதுக்குக் கூலி | 2,500 | ||
| அலுவலக கட்டடம் மீதான காப்பீடு | 3,500 | ||
| பொது ச் செலவுகள் | 3,000 | ||
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றுவது ) | 11,000 | ||
| 55,000 | 55,000 |
45.
செயல்முறை
(i) விற்பனையாளரின் பெயர் மற்றும் முகவரி, இடாப்பு எண் மற்றும் தேதியை உள்ளீடு செய்யவும்.
(ii) வாங்குபவரின் முகவரியை தட்டச்சு செய்யவும்.
(iii) அட்டவணையைட்டவணையை உருவாக்க – Insert தேர்வு செய்து Table / Insert Table அழுத்தவும். எத்தனை Column மற்றும் Row என்று தேர்வு செய்த பின் Ok பொத்தானை அழுத்தவும்.
(iv) எடுத்துக்காக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தட்டச்சு செய்யவும்.
வெளியீடு
SOUTH INDIA Ltd., INVOICE
100, Kamarajar Salai,
Chennai – 600006.
Invoice # 009876
Invoice date 31-12-2017
Bill To
Prof. A. Rajesh
HSC College,
123, PH Road,
Chennai – 600001.
| S. No. | Description | Qty | Unit Price Rs | Amount Rs |
|---|---|---|---|---|
| 1 | Financial Accounting – RL Gupta | 40 | 200 | 8,000 |
| 2 | Advanced Accounting – MC Shukla | 20 | 300 | 6,000 |
| 3 | Income Tax Law & Practice -– HC Mehrothra | 20 | 400 | 8,000 |
| 4 | Practical Auditing – B N Tandon | 30 | 150 | 4,500 |
| Sub total | 26,500 | |||
| Less: Discount at 20% | 5,300 | |||
| Invoice total | 21,200 | |||
| (Rupees twenty one thousand two hundred only) | ||||
| Thank you |
Cashier
46.
| வ.எண் | விவரம் | பே. ப. எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | இயந்திரம் க/கு | ப | 3,000 | ||
| கொள்முதல் க/கு | 3,000 | ||||
| (ரூ.3,000 த்திற்கு இயந்திரம் வாங்கியது கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது | |||||
| ஆ | தரகு க/கு | ப | 200 | ||
| பெற்ற வட்டி க/கு | 200 | ||||
| (பெற்ற வட்டி ரூ.200 தரகுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| இ | சம்பளம் க/கு | ப | 1,000 | ||
| தமிழ்ச்செல்வன் க/கு | 1,000 | ||||
| ( தமிழ்செல்வனுக்கு சம்பளம் ரூ.1,000 செலுத்தியது அவர் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| ஈ | விற்பனை க/கு | ப | 500 | ||
| அறைகலன் க/கு | 500 | ||||
| (பழைய அறைகலன் விற்றது விற்பனை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது திருத்தியது) | |||||
| உ | கொள்முதல் க/கு | ப | 800 | ||
| சௌந்தர பாண்டியன் க/கு | 800 | ||||
| (சௌந்தர பாண்டியனிடம் கடனுக்கு சரக்கு வாங்கியது திருத்தியது) |
47.
| விவரம் | தொகை ரூ |
|---|---|
| இயந்திரத்தின் அடக்கவில்லை (ஏப்ரல் 2014) | 200000 |
| கழிக்க: தேய்மானம் 2014-15 | 20000 |
| 180000 | |
| கழிக்க: தேய்மானம் 2015-16 | 20000 |
| 160000 | |
| கழிக்க: தேய்மானம் 30.09.2016 | 10000 |
| 200000 x \({10\over 100}\times {6\over 12}\) | |
| எட்டு மதிப்பு | 150000 |
| விற்ற விலை | 120000 |
| விற்ற இயந்திரத்தின் மீதான நட்டம் | 30000 |
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 2014 ஏப்ர 1 | வங்கி க/கு | 200000 | 2015 மார்ச் 31 | தேய்மானம் க/கு | 20000 |
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 180000 | |||
| 200000 | 200000 | ||||
| 2015 ஏப்ர 1 | இருப்பு கீ/கொ | 180000 | 2016 மார்ச் 31 | தேய்மானம் க/கு (20000+6000) | 26000 |
| அக் 1 | வங்கி க/கு | 120000 | மார்ச் 31 | இருப்பு கீ/இ | 274000 |
| 300000 | 300000 | ||||
| 2016 ஏப் 1 | இருப்பு கீ/கொ | 274000 | 2016 செப் 30 | தேய்மானம் க/கு | 10000 |
| 2016 செப் 30 | வங்கி க/கு | 120000 | |||
| 2016 செப் 30 | இலாப நட்டக் க/கு (விற்ற இயந்திரம் மீதான நட்டம்) | 30000 | |||
| 2017 மார்ச் 31 | தேய்மானம் க/கு | 12000 | |||
| 2017 மார்ச் 31 | இருப்பு கீ/இ | 102000 | |||
| 274000 | 274000 | ||||
| 2016 ஏப் 1 | இருப்பு கீ/கொ | 102000 |
| நாள் | விவரம் | தொகை ரூ | நாள் | விவரம் | தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| 2015 மார்ச் 31 | இயந்திர க/கு | 20000 | 2015 மார்ச் 31 | இலாப நட்டக் க/கு | 20000 |
| 20000 | 20000 | ||||
| 2016 மார்ச் 31 | இயந்திர க/கு | 26000 | 2016 மார்ச் 31 | இலாப நட்டக் க/கு | 26000 |
| 26000 | 26000 | ||||
| 2017 செப் 30 | இயந்திர க/கு | 10000 | 2017 மார்ச் 30 | இலாப நட்டக் க/கு | 22000 |
| மார்ச் 31 | இயந்திர க/கு | 12000 | |||
| 22000 | 22000 |
48.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000. | வருவாயினச் செலவு |
| (ii) | வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000. | முதலினச் செலவு |
| (iii) | முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000. | முதலினச் செலவு |
| (iv) | கழிவுப் பெற்றது ரூ 30,000. | வருவாயினச் செலவு |
| (v) | புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400. | முதலினச் செலவு |
49.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி வரவிருப்பு | 12,000 | |
| கூட்டுக: | ||
| காசோலை முன்னிலைப்படுத்தப்பட்டது |
1,200 | |
| 13,200 | ||
| கழிக்க: | ||
| தவறுதலாக ரொக்க ஏட்டில் வரவு வைக்கப்பட்டது |
2,100 | |
| வங்கி அறிக்கையின் பற்றுப் பக்கம் குறைவாக கூட்டப்பட்டது |
100 | 2,200 |
| வங்கி அறிக்கையின் படி மேல்வரைப் பற்று | 11,000 |
50.
| நாள் | விவரம் | உள்வரு இடாப்பு எண் |
பே.ப.எண் | தொகை | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 மே 2 | வாசு | ||||
| 100 மூட்டைகள் அரசி ரூ 800 வீதம் | 80,000 | ||||
| 8 | செய்யாறு சர்க்கரை ஆலை | ||||
| 20 மூட்டைகள் சர்க்கரை ரூ 2,600 வீதம் | 52,000 | ||||
| 10 | இராம் மாவு உற்பத்தி ஆலை | ||||
| 10 மூட்டைகள் கோதுமை மாவு ரூ 750 வீதம் | 7,500 | ||||
| 15 | நீலகிரி தேயிலை தோட்டம் | ||||
| 15 பெட்டிகள் தேயிலைத் தூள் | 13,500 | ||||
| 25 | சாய்ராம் காபித்தூள் நிறுவனம் | ||||
| 100 கிலோ காபித்தூள் ரூ 190 வீதம் | 19,000 | ||||
| கொள்முதல் க/கு | 1,72,000 | ||||
51.
| வ.எண் | கணக்கின் பெயர் | பே.ப.எண் | பற்று இருப்பு ரூ. | வரவு இருப்பு ரூ. |
|---|---|---|---|---|
| 1. | தொடக்கச் சரக்கிருப்பு | 40,000 | ||
| 2. | முதல் | 90,000 | ||
| 3. | விற்பனை | 1,77,200 | ||
| 4. | சம்பளம் | 12,000 | ||
| 5. | செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு | 9,450 | ||
| 6. | தொலைபேசிக் கட்டணம் | 2,350 | ||
| 7. | கடனீந்தோர் | 16,000 | ||
| 8. | கொள்முதல் | 85,000 | ||
| 9. | கடனாளிகள் | 25,000 | ||
| 10. | உள்தூக்குக் கூலி | 16,500 | ||
| 11. | பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு | 20,000 | ||
| 12. | கழிவுப் பெற்றது | 5,550 | ||
| 13. | வங்கி ரொக்கம் | 17,000 | ||
| 14. | அறைகலன் | 19,000 | ||
| 15. | பொறி இயந்திரம் | 55,800 | ||
| 16. | பழுதுபார்ப்புச் செலவு | 550 | ||
| 17. | அனாமத்துக் கணக்கு | 5,000 | ||
| மொத்தம் | 2,98,200 | 2,98,200 |
52.
| பெற்ற தொகை |
ரொ. ஏ . ப . எண் |
நாள் | விவரம் | சா. சீ. எ |
மொத்த செலவழித்த தொகை |
அஞ்சல்செலவு | ஆட்டோ கட்டணம் |
கூலி | அச்சு எழுதுபொருள் |
ஏற்றிச் செல் செலவு |
பல்வகைச் செலவுகள் |
பே. ப. எண் |
ஆள்சார்கணக்குகள் |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | |||||
| 2,000 | 2017 ஜூலை 1 |
ரொக்க | |||||||||||
| 7 | மடல் எடு மற்றும் பதிவேடு | 100 | 100 | ||||||||||
| 8 | வெள்ளைத் தாள்கள் | 50 | 50 | ||||||||||
| 10 | ஆட்டோ ரிக்ஷா கட்டணம் | 200 | 200 | ||||||||||
| 15 | கூலி | 300 | 300 | ||||||||||
| 18 | தபால் செலவு | 100 | 100 | ||||||||||
| 21 | எழுதுபொருள்கள் | 450 | 450 | ||||||||||
| 23 | தேநீர் செலவுகள் | 60 | 60 | ||||||||||
| 25 | துரித அஞ்சல் செலவு | 150 | 150 | ||||||||||
| 27 | சிற்றுண்டி செலவுகள் | 250 | 250 | ||||||||||
| 31 | ஏற்றிச் செல் செலவு | 150 | 150 | ||||||||||
| 1,810 | 250 | 200 | 300 | 600 | 150 | 310 | |||||||
| 31 | 190 | ||||||||||||
| 2,000 | 2,000 | ||||||||||||
| 190 | ஆகஸ்ட் 1 | இருப்பு கீ/கொ | |||||||||||
| 1810 | 1 | ரொக்கக் க/கு |
53.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 1 | கொள்முதல் க/கு | ப | 20,000 | ||
| சிபி க/கு | 20,000 | ||||
| (கடன் கொள்முதல் செய்தது) | |||||
| 2 | மின்கட்டணம் க/கு | ப | 500 | ||
| வங்கி க/கு | 500 | ||||
| (மின்கட்டணம் செலுத்தியது) | |||||
| 3 | சிபி க/கு | ப | 5,000 | ||
| கொள்முதல் திருப்பம் க/கு | 5,000 | ||||
| (சரக்கு திருப்பி அனுப்பியது குறித்து) | |||||
| 4 | எடுப்புகள் க/கு | ப | 1,000 | ||
| கொள்முதல் க/கு | 1,000 | ||||
| (சொந்த பயன்பாட்டிற்கு எடுத்தது) | |||||
| 5 | விளம்பரக் கட்டணம் க/கு | ப | 2,000 | ||
| ரொக்கக் க/கு | 2,000 | ||||
| (விளம்பரக் கட்டணம் செலுத்தியது) | |||||
| 6 | மனோ க/கு | ப | 20,000 | ||
| விற்பனை க/கு | 20,000 | ||||
| (கடன் விற்பனை0 | |||||
| 7 | விற்பனைத் திருப்பம் க/கு | ப | 5,000 | ||
| மனோ க/கு | 5,000 | ||||
| (சரக்கு திருப்பி அனுப்பியது குறித்து) | |||||
| 8 | வங்கி க/கு | ப | 15,000 | ||
| மனோ க/கு | 15,000 | ||||
| (மின்னணு பணப்பரிமாற்றம் மூலமாக பணம் பெறப்பட்டது) |
54.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2016 | ரொக்கக் க/கு | ப | 80,000 | ||
| செப்.1 | முதல் க/கு (ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது) |
80,000 | |||
| 7 | கொள்முதல் க/கு | ப | 10,000 | ||
| ரொக்கக் க/கு (ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது) |
10,000 | ||||
| 10 | கொள்முதல் க/கு | ப | 42,000 | ||
| கொள்முதல் க/கு (கடனுக்கு கொள்முதல் செய்தது) |
42,000 | ||||
| 22 | ஹேமா க/கு | ப | 2,000 | ||
| கொள்முதல் திருப்பக் க/கு (சரக்கு திருப்பி அனுப்பியது) |
2,000 | ||||
| 23 | ஹேமா க/கு | ப | 10,000 | ||
| ரொக்கக் க/கு (ஹேமாவிற்கு ரொக்கம் செலுத்தியது) |
10,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2016 செப்.1 | முதல் க/கு | 80,000 | 2016 செப்.7 | கொள்முதல் க/கு | 10,000 | ||
| 23 | ஹேமா க/கு | 10,000 | |||||
| 30 | இருப்பு கீ/இ | 60,000 | |||||
| 80,000 | 80,000 | ||||||
| அக். 1 | இருப்பு கீ/கொ | 60,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2016 செப்.30 | இருப்பு கீ/இ | 80,000 | 2016 செப்.7 | ரொக்கக் க/கு | 80,000 | ||
| 80,000 | 80,000 | ||||||
| அக். 1 | இருப்பு கீ/கொ | 80,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2016 செப்.7 | ரொக்கக் க/கு | 10,000 | 2016 செப்.30 | இருப்பு கீ/இ | 52,000 | ||
| 10 | ஹேமா க/கு | 42,000 | |||||
| 52,000 | 52,000 | ||||||
| அக். 1 | இருப்பு கீ/கொ | 52,000 | 52,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2016 செப்.22 | கொள்முதல் திருப்பம் க/கு | 2,000 | 2016 செப்.10 | கொள்முதல் க/கு | 42,000 | ||
| 23 | ரொக்கக் க/கு | 10,000 | |||||
| 30 | இருப்பு கீ/இ | 30,000 | |||||
| 42,000 | 42,000 | ||||||
| அக். 1 | இருப்பு கீ/கொ | 30,000 |
| நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ | நாள் | விவரம் | கு.ப.எண் | ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 30 | இருப்பு கீ/இ | 2,000 | 2016 செப்.22 | ஹேமா க/கு | 2,000 | ||
| 2,000 | 2,000 | ||||||
| அக். 1 | இருப்பு கீ/கொ | 2,000 |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards