11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 03/01/2019
XI Public Model Question
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பேரேட்டுக் கணக்குகளில் கணக்கியல் துல்லியத் தன்மையை அறிவதற்கு தயாரிக்கப்படுவது _______________
இருப்பாய்வு
இருப்பு நிலைக்குறிப்பு
இலாப நட்டக் கணக்கு
வியாபாரக் கணக்கு
2.
ரூ 1,00,000 மதிப்புள்ள ஒரு சொத்து ரூ 85,000 க்கு விற்கப்பட்டால், முதலின நட்டம்_______________
ரூ 85,000
ரூ 1,00,000
ரூ 15,000
ரூ 1,85,000
3.
விதிகளைத் தெரியாமலோ அல்லது மீறியோ தவறாகப் பதிவு செய்வதால் ஏற்படும் பிழைகள் _________________ எனப்படும்.
விதிப்பிழைகள்
செய்பிழைகள்
பிழைகள்
இவற்றில் எதுவுமில்லை
4.
________ என்பது ஒரு இன்றியமையாத கணக்கு ஏடு.
குறிப்பேடு
பேரேடு
தொடக்கப் பதிவு
சரிக்கட்டுப் பதிவு
5.
______ பயனாளிக்கும் கணினி அமைப்புக்கும் இடையேயான ஒரு இடைமுகமாக அமைகின்றது.
நிரலாக்க மென்பொருள்
பயன்பாட்டு மென்பொருள்
இயக்கமுறைமை
செயல்பாட்டு மென்பொருள்
6.
உரிமையாளரின் முதல் தொகை ரூ 7,00,000 ஆண்டுக்கு 8% முதல் மீதான வட்டி அனுமதிக்கப்பட்டால் முதல் மீதான வட்டி _______.
ரூ 56,000
ரூ 5,600
ரூ5,60,000
ரூ 7,00,000
7.
ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.
பற்றுத்தன்மை
வரவுத்தன்மை
ரொக்கத்தன்மை
இவற்றில் ஏதும் இல்லை
8.
முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது.
வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்
இலாப நட்டக் கணக்கில் வரவுப் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
9.
வெளியீட்டு சாதனத்திற்கான ஒரு உதாரணம்
சுட்டி
அச்சுப்பொறி
ஒளியியல் வருடி
விசைப் பலகை
10.
11.
திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்
முதலினச் செலவு
வருவாயினச் செலவு
நீள்பயன் வருவாயினச் செலவு
மேற்கூறிய எதுவுமில்லை
12.
கீழ்க்கண்ட பிழைகளில் எது இருப்பாய்வைப் பாதிக்காது?
ஒரு கணக்கில் தவறாக இருப்புக் கட்டுதல்
பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்
ஒரு கணக்கில் தவறாகக் கூட்டுதல்
ஒரு பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையைகையை முன்னெடுத்து எழுதுதல்
13.
தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?
காலப்போக்கு
பயன்பாடு
வழக்கொழிவு
அ, ஆ மற்றும் இ
14.
பின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல?
செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது
விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது
வங்கியில் நேரடியாகச் செலுத்திய தொகை
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
15.
16.
ஒரு இருப்பாய்வு தயாரிக்கப்படுவது
ஆண்டு இறுதியில்
ஒரு குறிப்பிட்ட நாளில்
ஒரு பருவ காலம் முடிந்தது
இவை ஏதும் இல்லை
17.
ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
கூட்டுதல்
எடுத்தெழுதுதல்
குறிப்பேட்டில் பதிதல்
இருப்புக் கட்டுதல்
18.
இந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு
இந்திய மைய வங்கி
இந்திய அடக்கவிலை மற்றும் கணக்காளர் நிறுவனம்
உச்ச நீதி மன்றம்
இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்
19.
ரொக்க ஏடு ஒரு
துணை ஏடு
முதன்மை ஏடு
உரிய குறிப்பேடு
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
20.
நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?
கடனீந்தோர்
பணியாளர்
வாடிக்கையாளர்
அரசு
21.
கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?
22.
குறிப்பு வரைக: அ. வருவாய், ஆ. செலவு
23.
இருப்பாய்விற்கும் இருப்புநிலைக் குறிப்பிற்கும் இடையே உள்ள ஏதேனும் இரண்டு வேற்றுமைகளை எழுதுக
24.
வன்பொருள் என்றால் என்ன?
25.
வருவாயினச் செலவு என்றால் என்ன?
26.
பகுதி விடுபிழை என்றால் என்ன?
27.
கீழ்கண்ட தகவல்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க.
| இயந்திரம் வாங்கிய விலை | ரூ. 2,00,000 |
| மூலதனமாக்கப்பட வேண்டிய செலவுகள் | ரூ. 50,000 |
| எதிர்நோக்கும் இறுதி மதிப்பு | ரூ. 15,000 |
| எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் | 5 வருடங்கள் |
28.
மாற்றுச் சீட்டின் வரைவிலக்கணம் தருக.
29.
ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?
30.
இருபத்தி ரொக்க ஏடு என்றால் என்ன
31.
கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.
| அ] | ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது | ரூ 25,000 |
| ஆ] | சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது | ரூ 20,000 |
| இ] | அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது | ரூ 25,000 |
| ஈ] | ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது | ரூ 5,000 |
32.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018 மார்ச் 31ல் திரு.முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
[அ] 31.3.2018 ல் செல்லேட்டின் வரவிருப்பு ரூ 2,500
[ஆ] வங்கிக் கட்டணம் ரூ 60 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[இ] ஏற்கனவே ரூ 3,500 க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 1,000 த்திற்கான காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
[ஈ] ஏற்கனவே ரூ 4,500 க்குச் செலுத்திய காசோலைகளில் ரூ 3,800 க்கான காசோலைகள் தான் வங்கியில் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
[உ] வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் ரூ 400 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[ஊ] 31.3.2018 முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது ரூ 600 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
33.
கீழ்க்கண்ட ரமேஷ் என்பவரின் 2017, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்விலிருந்து வியாபார இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்
| விவரம் | பற்று ரூ | வரவு ரூ |
|---|---|---|
| சரக்கிருப்பு (01.04.2016) | 40,000 | |
| கொள்முதல் | 85,000 | |
| விற்பனை | 1,90,000 | |
| பற்பல கடனீந்த | 48,000 | |
| அறைகலனும் பொரருத்துகைகளும் | 65,000 | |
| கடனாளிகள் | 45,000 | |
| வங்கி ரொக்கம் | 21,000 | |
| கூலி | 37,500 | |
| எடுப்புகள் | 15,000 | |
| தொலைபேசிக் கட்டணம் | 3,000 | |
| வாராக்கடன் | 2,000 | |
| வாராக்கடன் ஒதுக்கு | 2,500 | |
| பெற்ற தள்ளுபடி | 3,000 | |
| முதல் | 85,000 | |
| விளம்பரம் | 15,000 | |
| 3,28,500 | 3,28,500 |
சரிக்கட்டுதல்கள்:
(அ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 35,000
(ஆ) தீர்வடையாத விளம்பரக் கட்டணம் ரூ 250
(இ) வாரா மற்றும் ஐயக்கடன் ஒதுக்கு ரூ 3,000க்கு அதிகப்படுத்த வேண்டும்.
(ஈ) பற்பல கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
34.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து அப்துல் ரகுமான் என்பவரின் 2016, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.
31.12.2016 அன்று இறுதிச் சரக்கிருப்பு ரூ 2,000 என்று மதிப்பிடப்படுகிறது
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 500 | கொள்முதல் | 1,300 |
| விற்பனை | 5,000 | கூலி | 700 |
| பெற்ற தள்ளுபடி | 500 | சம்பளம் | 500 |
| கட்டடம் | 50,000 | முதல் | 50,000 |
| கைரொக்கம் | 4,500 |
35.
கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு இடாப்பு தயாரிக்கவும்.
1. Financial Accounting – RL Gupta - 40 Nos.
2. Advanced Accounting – MC Shukla - 20 Nos.
3. Income Tax Law & Practice – HC Mehrothra - 20 Nos.
4. Practical Auditing – B N Tandon - 30 Nos.
36.
கீழ்க்கண்ட பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) உரிமையாளரின் தனிப்பட்ட செலவு ரூ.200 பயணச்செலவு கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) கடனுக்கு ரூ.400 க்கு ரமேஷிடமிருந்து சரக்கு வாங்வாங்கியது தவறாக கணேஷ் கணக்கில் வர வர வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது.
(இ) மதிக்கு ரூ.500 சம்பளம் செலுத்தியது பேரேட்டில் மதியின் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) கட்டட விரிவாக்கத்திற்காக ரூ.2,700 செலுத்தியது பழுதுபார்ப்புக் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(உ) மேகலாவுக்கு ரூ.700க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் கிருஷ்ணன் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது
37.
பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயினச் செலவினங்களாக வகைப்படுத்தவும்.
(i) நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம்.
(ii) வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள்.
(iii) சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.
(iv) கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள்.
38.
இராம் ஆடை நிறுவனம் ஏப்ரல் 1, 2014 அன்று ரூ. 2,00,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை நிலா நிறுவனத்திடமிருந்து கடனாக வாங்கியது. அதற்கு நிறுவுகைச் செலவாக ரூ. 10,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கினை தயாரிக்கவும். கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ல் முடிக்கப் பெறுகின்றன.
39.
பிரகதீஷ் மின்னனு சாதனங்கள் விற்பனை செய்பவர் 2015-ஆம் ஆண்டில் தன் தொழிலைத் தொடங்கினார். 2018 மார்ச் மாதத்தின் பின்வரும் நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.
| மார்ச் | ரூ | |
| 1 | Y நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கொள்முதல் செய்தது | 60,000 |
| 2 | D நிறுவனத்திற்கு கடனுக்கு விற்பனைச் செய்தது | 30,000 |
| 3 | Y நிறுவனத்திற்கு வங்கிமூலம் செலுத்தி கடன் முழுதும் தீர்க்கப்பட்டது | 58,000 |
| 4 | D நிறுவனம் பிரகதீஷ் எழுதிய மாற்றுச்சீட்டை ஏற்றுக்கொண்டது | 30,000 |
| 5 | L க்கு சரக்கினை கடனாக விற்பனைச் செய்தது | 20,000 |
| 6 | M க்கு கடனாக விற்ற சரக்கு | 40,000 |
| 7 | M இடமிருந்து காசோலையைப் பெற்றுக்கொண்டு கணக்கு தீர்க்கப்பட்டது. அக்காசோலை உடனடியாக வங்கியில் செலுத்தப்பட்டது. | 39,000 |
| 8 | Y நிறுவனத்திற்கு விற்கு திருப்பிய சரக்கு | 4,000 |
| 9 | L நொடிப்பு நிலையை அடைந்தார். அவரிடமிருந்து ரூபாய்க்கு 90 பைசா பெற்றுக் கொண்டு கணக்குத் தீர்க்கப்பட்டது | |
| 10 | M இடமிருந்து திரும்பி வந்த சரக்கு | 3,000 |
40.
பின்வரும் விவரங்களைக் கொண்டு 2017 டிசம்பர் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து, வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டுபிடிக்கவும்
| விவரம் | ரூ | |
|---|---|---|
| i) | ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று | 20,000 |
| ii) | செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது | 4,000 |
| iii) | விடுத்த காசோலை செலுத்துைகக்கு முன்னிலைப்படுத்தப்படாதது | 1,000 |
| iv) | நிலை அறிவுறுத்தலின்படி வங்கி வசூலித்த வாடகை | 500 |
| v | வங்கியால் பற்று செய்யசெய்யப்பட்ட மேல்வரைப்பற்று மீதான வட்டி | 2,000 |
| vi) | வங்கியால் தவறுதலாலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 |
| vii) | 2017 டிசம்பர் 30 அன்று விடுத்த காசோலை வங்கியால் மறுக்கப்பட்டது | 5,000 |
| viii) | வங்கியில் செலுத்திய வாடிக்கையாளரின் காசோலை வங்கியால் மறுக்கப்பட்டது. ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை | 2,000 |
41.
பின்வரும் விபரங்களைக் கொண்டு நாலந்தா புத்தகக் கடையின் துணை ஏடுகளை தயார் செய்யவும்.
| 2017 | |
| டிசம்பர் 1 | உமாதேவியிடமிருந்து கடனுக்கு வாங்கியது |
| ஒன்று ரூ. 80 வீதம் 100 வணிகப் புள்ளியியல் புத்தகங்கள் | |
| ஒன்று ரூ. 150 வீதம் 100 கணக்குப்பதிவியல் புத்தத்தகங்கள் | |
| டிசம்பர் 7 | ஸ்ரீதேவியிடம் கடனுக்கு விற்றது |
| ஒன்று ரூ. 90 வீதம் 240 வணிகப்புள்ளியியல் புத்தகங்கள் | |
| ஒன்று ரூ. 170 வீதம் 250 கணக்குப்பதிவியல் புத்தகங்கள் | |
| டிசம்பர் 10 | சுபாவிடமிருந்து வாங்கியது |
| ஒன்று ரூ. 80 வீதம் 40 பொருளாதாரம் புத்தகங்கள் | |
| கழிக்க: வியாபாரத்தள்ளுபடி 15% | |
| டிசம்பர் 15 | சேதமடைந்திருந்த 10 கணக்குப்பதிவியல் புத்தகங்களை உமாதேவியிடம் திருப்பி, இதற்கு பணம் பெறப்படவில்லை |
| டிசம்பர் 18 | டிசம்பர் 18 குப்தாவிற்கு கடனுக்கு விற்றது |
| ஒன்று ரூ. 95 வீதம் 200 பொருளாதாரம் புத்தகங்கள் | |
| டிசம்பர் 26 | சுபாவிற்கு 5 பொருளாதாரம் புத்தகங்கள் திருப்பி அனுப்பப்பட்டன |
42.
பின்வரும் விவரங்களைக் கொண்டு முன்பண மீட்பு முறையில் பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏட்டினைத் தயாரிக்கவும்.
| 2017 அக் | ரூ | |
| 1 | காசாளரிடம் பெற்றது | 2,500 |
| 2 | கூலி கொடுத்தது | 260 |
| 5 | எழுது பொருட்கள் வாங்கியது | 300 |
| 6 | பணியாளர் பேருந்து கட்டணம்,வாடிக்கையாளர்களுக்குச் செலவு செய்தது | 200 |
| 12 | சிற்றுண்டி செலவுகள் செய்தது | 180 |
| 16 | ஏற்றிச் செல் செலவுகள் செய்தது | 160 |
| 20 | பயணச் செலவுகள் செய்தது | 188 |
| 25 | போக்குவரத்துச் செலவுகள் செய்தது | 320 |
| 27 | வருவாய் வில்லைகள் வாங்கியது | 48 |
| 28 | அலுவலகச் சுத்தம் செய்ய செலவு செய்தது | 140 |
| 29 | பதிவு தபால்கள் மூலம் சரக்களித்தோர்களுக்கு தபால் அனுப்பியது | 180 |
| 30 | வாடகை மகிழுந்து கட்டணம் செலுத்தியது | 219 |
43.
பலராமன் என்பவரின் ஏடுகளிலிருந்து 31-12-2017 அன்று எடுக்கப்பட்ட இருப்புகளிலிருந்து இருப்பாய்வு தயாரிக்க.
| ரூ | ரூ | ||
|---|---|---|---|
| முதல் | 2,20,000 | பழுதுபார்ப்புச் செலவு | 2,400 |
| எடுப்புகள் | 24,000 | அலுவலக மின் கட்டணம் | 2,600 |
| அறைகலன் | 63,500 | அச்சு எழுதுபொருள் செலவு | 2,700 |
| தொடக்கச் சரக்கிருப்பு | 62,050 | வங்கிக் கடன் | 7,500 |
| பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு | 9,500 | கணிப்பொறி | 25,000 |
| செலுத்தற்குரிய மாற்றுசீட்டு | 8,750 | கடனாளிகள் | 46,500 |
| கொள்முதல் | 88,100 | கை ரொக்கம் | 15,000 |
| விற்பனை | 1,35,450 | வங்கி ரொக்கம் | 27,250 |
| தள்ளுபடி அளித்தது | 7,100 | பொதுச் செலவுகள் | 7,100 |
| தள்ளுபடிப் பெற்றது | 3,500 | கடனீந்தோர் | 7,600 |
44.
பின்வரும் தொடக்கப்பதிவினைக் கொண்டு ஜாய் என்பவரின் ஏடுகளில் முக்கிய பேரேட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.
| நாள் | விவரம் | பே.ப.எ. | பற்று ரூ. | வரவு ரூ. |
|---|---|---|---|---|
| 2017 ஜூன் 1 | ரொக்கக் க/கு. ப | 45,000 | ||
| சரக்கிருப்பு க/கு ப | 50,000 | |||
| சோகன் க/கு ப | 35,000 | |||
| அறைகலன் க/கு ப | 50,000 | |||
| ராம் க/கு | 20,000 | |||
| ஜாய் முதல் க/க (சென்ற ஆண்டின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கணக்கில் கொண்டுவரப்பட்டது) |
1,60,000 |
45.
வியாபாரக் கணக்கு தயாரிக்க வேண்டியதன் தேவையை விளக்குக.
46.
கணக்கியலின் நோக்கங்கள் யாவை?
47.
கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்கு 2018, மார்ச் 31 ம் நாளன்று சரிக்கட்டுப் பதிவுகள் தருக.
(i) எடுப்புகள் மீதான வட்டி ரூ 50
(ii) வாராக்கடன் ரூ 500 போக்கெழுதவும்
(iii) அறைகலன் மீதான தேய்மானம் ரூ 1,000.
48.
தேய்மானம் கணக்கிடுதலில் நேர்க்கோட்டு முறை, குறைந்து செல் மதிப்பு முறை இடையே உள்ள வேறுபாடுகளை பட்டியலிடுக.
49.
இருப்பாய்வு வெளிக்காட்டும் பிழைகள் யாவை?
50.
பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.
| 2017 ஜன | ரூ | |
| 1 | கை இருப்பு ரொக்கம் | 11,200 |
| 5 | இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது | 300 |
| 7 | வாடகை செலுத்தியது | 30 |
| 8 | ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது | 300 |
| 10 | மோகனுக்கு செலுத்தியது | 700 |
| 27 | அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது | 200 |
| 31 | சம்பளம் கொடுத்தது | 100 |
51.
வங்கியில் ரொக்கம் செலுத்தும்போது ரொக்க ஏட்டில் பற்றும் வங்கி அறிக்கையில் வரவும் வைக்கப்படுவது ஏன்? விளக்குக
52.
53.
கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.
54.
பேரேட்டுக் கணக்கின் இருப்புகட்டுதலின் வழிமுறையை விளக்குக.
1.
(a)
இருப்பாய்வு
2.
(c)
ரூ 15,000
3.
(a)
விதிப்பிழைகள்
4.
(b)
பேரேடு
5.
(c)
இயக்கமுறைமை
6.
(a)
ரூ 56,000
7.
(b)
வரவுத்தன்மை
8.
(c)
இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
9.
(b)
அச்சுப்பொறி
10.
(b)
11.
(a)
முதலினச் செலவு
12.
(b)
பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்
13.
(d)
அ, ஆ மற்றும் இ
14.
(d)
ரொக்க ஏட்டில் தவறுதலாக பற்று வைத்த
15.
(c)
16.
(b)
ஒரு குறிப்பிட்ட நாளில்
17.
(d)
இருப்புக் கட்டுதல்
18.
(d)
இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம்
19.
(d)
துணையேடு மற்றும் முதன்மை ஏடு இரண்டு
20.
(b)
பணியாளர்
21.
1. இது வணிக நடவடிக்கைக்கள், கணக்கேடுகளில் பதிவு செய்வதற்கான செயல்முறை ஆகும்.
2. பணமதிப்பிலான நடவடிக்கைகள் மட்டுமே கணக்கேடுகளில் பதியப்படுகின்றன.
3. கணக்கேடுகள் பராமரிப்பே, கணக்கியல் செயல்பாட்டின் முதனமை நிலை ஆகும்.
4. கணக்கேடுகள் பராமரிப்பு, குறிப்பேட்டில் பதிதல் மற்றும் பேரேட்டில் எடுத்தெழுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
22.
அ. வருவாய்:
வருவாய் என்பது சரக்கை விற்றதன் மூலம் பெற்ற தொகை, ஈட்டிய வட்டி, இலாப ஈவு, கழிவு, இதர வகையாப் பெற வேண்டிய மற்றும் பெற்ற தொகையினைக் குறிக்கும்.
ஆ. செலவுகள்:
பொருளை உற்பத்தி செய்வதற்கோ அல்லது பண்டங்கள் மற்றும் பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வருவதற்காக செலவிட்ட தொகையினைச் செலவு என்கிறோம்.
23.
| இருப்பாய்வு | இருப்புநிலைக் குறிப்பு | |
|---|---|---|
| (i) | இருப்பாய்வு குறிப்பிட்ட நாளுக்குரிய பேரேட்டுக் கணக்கு இருப்புகளின் பட்டியல் ஆகும். | இருப்புநிலைக் குறிப்பு குறிப்பிட்ட நாளன்றைய சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் நிலையைக் காட்டும் அறிக்கை ஆகும். |
| (ii) | கணக்கியல் பதிவுகளின் கணக்கீட்டு சரித்தன்மையை பரிசோதிக்க இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது | இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ள தயாரிக்கப்படுகிறது. |
24.
கணினியின் இயற்கூறுகளை உள்ளடக்கியது அதன் வன்பொருளாகும். முழுமையான கணினி அமைப்பை உருவாக்குவதற்கான உள்ளீட்டு சாதனங்கள் மற்றும் வெளியீட்டு சாதனங்களையும் வன்பொருள் கொண்டிருக்கும்.
25.
(i) வணிக நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டிற்கான செலவும், வருவாய் ஈட்டும் திறனைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் செலவும் வருவாயினச் செலவு எனப்படும். இச்செலவு திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையது.
(ii) வருவாயினச் செலவு வருவாயுடன் தொடர்புடையது அல்லது குறிப்பிட்ட கணக்காண்டோடு தொடர்புடையது.
(iii) உதாரணமாக, கொள்முதல் மீதானச் செலவு ஒரு வருவாயினச் செலவு.
26.
கணக்காளர் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்யத் தவறினால் அது பகுதி விடு பிழையாகும்.இந்தப் பிழை பொதுவாக பேரேட்டில் எடுத்து எழுதும் போது நிகழும். இப்பிழை ஒரு கணக்கை மட்டுமே பாதிக்கும்.
27.

\(={2,50,000-15,000\over 5}={2,35,000\over 5}\)= ரூ. 47,000

\(={47,000\over 2,50,000}\times=18.8\% \)
28.
மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881-ன் படி, மாற்றுச்சீட்டு என்பது குறிப்பிட்ட நபருக்கோ அவரது ஆணைக்கேற்பவோ அல்லது அந்த ஆவணத்தைக் கொண்டு வருபவருக்கோ குறிப்பிட்ட பணத்தை செலுத்துமாறு குறிப்பிட்ட நபருக்கு ஒருவர் எந்த நிபந்தனையும் இணைக்காமல் எழுத்து மூலமாகக் கையொப்பமிட்டு விடுக்கும் ஆணைத் தாங்கிய ஆவணமாகும்.
29.
1. நிதி சார்ந்த நடவடிக்கைகளின் உண்மையான சான்றுகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள், ஆதார ஆவணங்கள் ஆகும்.
2. இந்த ஆவணங்கள் நடவடிக்கைகளின் தன்மை, தேதி, தொகை தொடர்புடைய நபர்கள் போன்ற விவரங்களை வெளிப்படுத்தும்.
3. ரொக்கச்சீட்டு, இடாப்பு, பற்றுக்குறிப்பு, வரவுக் குறிப்பு, செலுத்துச் சீட்டு, சம்பளப்பட்டியல், கூலிப்பட்டியல் காசோலைப் பட்டியல் போன்றவை ஆதார ஆவணங்களில் உள்ளடங்கும்.
30.
(i) இது ரொக்கம் மற்றும் தள்ளுபடி பத்திகளையுடைய ரொக்க ஏடு ஆகும்.தள்ளுபடி மற்றும் ரொக்கம் என்ற இரு பத்திகளை, பற்று மற்றும் வரவு என்ற இராணு பக்கங்களிலும் கொண்டிருப்பதால் இதனை ரொக்க ஏடு என்று அழைக்கிறோம்.
(ii) சாதாரண ரொக்க ஏடு தயாரிக்கப்படும் முறையிலேயே இருபத்தி ரொக்க ஏதும் தயாரிக்கப்படுகிறது. இதில் தள்ளுபடி பத்தி என்ற ஒரு பத்தி என்ற ஒரு பத்தி கூடுதலாகயிறு பக்கங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
31.
| வ.எண் | நடவடிக்கை | ரொக்கம் ரூ | சரக்கிருப்பு ரூ | கானாளிகள் ரூ | மொத்த சொத்துகள் ரூ | = | மொத்த பொறுப்புகள் ரூ | முதல் ரூ | கடனீந்தோர் ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| அ ) | ரம்யா தொழில் தொடங்கியது | +25,000 | +25,000 | ||||||
| இருப்புகள் | +25,000 | +25,000 | |||||||
| சமன்பாடு | +25,000 | = | +25000 | ||||||
| ஆ) | கடன் கொள்முதல் செய்தது | +20,000 | +20,000 | ||||||
| இருப்புகள் | +25,000 | +20,000 | +25,000 | +20,000 | |||||
| சமன்பாடு | +45,000 | = | +45,000 | ||||||
| இ) | கடன் விற்பனை | -18,000 | +25,000 | +7,000 | |||||
| இருப்புகள் | +25,000 | +2,000 | +25,000 | +32,000 | +20,000 | ||||
| சமன்பாடு | +52,000 | = | +52,000 | ||||||
| ஈ) | சொந்த செலவுக்கு எடுத்தது | -5,000 | -5,000 | ||||||
| இருப்புகள் | +20,000 | +2,000 | +25,000 | +27,000 | +20,000 | ||||
| சமன்பாடு | +47,000 | = | +47,000 |
32.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| செல்லோட்டின் வங்கி இருப்பு (வரவிருப்பு சாதகமான இருப்பு) |
2,500 | |
| கூட்டுக: | ||
| வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியாதது |
60 | |
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 1,000 | |
| காசோலை அவமதிக்கப்பட்டு ரொக்க ஏட்டில் பதியாதது | 600 | 1,600 |
| 4,160 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் முன்னிலைக்கப்படுத்தாதவை | 700 | |
| வங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்காதாயம் |
400 | 1,100 |
| ரொக்க ஏட்டின் படி வங்கி இருப்பு | 3,060 |
33.
| விவரம் | தொகை ரூ. |
தொகை ரூ. |
விவரம் | தொகை ரூ. |
தொகை ரூ. |
|---|---|---|---|---|---|
| தொடக்கச் | |||||
| சரக்கிருப்பு | 40,000 | விற்பனை | 1,90,000 | ||
| இறுதிச் | |||||
| கொள்முதல் | 85,000 | சரக்கிருப்பு | 35,000 | ||
| கூலி | 37,500 | ||||
| மொத்த | |||||
| இலாபம் கீ/இ | 62,500 | ||||
| 2,25,000 | 2,25,000 | ||||
| தொலைபேசிக் | 3,000 | மொத்த | |||
| கட்டணம் | இலாபம் | ||||
| வாராக் கடன் | 2,000 | கீ/கொ | 62,500 | ||
| கூட்டுக: | |||||
| புதிய வாரா | பெற்ற | 3,000 | |||
| ஐயக்கடன் | தள்ளுபடி | ||||
| ஒதுக்கு | 3,000 | ||||
| 5,000 | |||||
| கழிக்க: | |||||
| பழைய | |||||
| வாராக்கடன் | |||||
| ஒதுக்கு | 2,500 | 2,500 | |||
| பற்பல | |||||
| கடனாளிகள் | |||||
| மீதான | |||||
| தள்ளுபடி 2% | 840 | ||||
| விளம்பரம் | 15,000 | ||||
| கழிக்க: | |||||
| தீர்வடை | |||||
| யாதது | 250 | 14,750 | |||
| நிகர இலாபம் | |||||
| (முதல் | |||||
| கணக்கிற்கு | 44,410 | ||||
| மாற்றுவது) | |||||
| 65,500 | 65,500 |
| பொறுப்புகள் | தொகை ரூ. |
தொகை ரூ. |
சொத்துகள் | தொகை ரூ. |
தொகை ரூ. |
|---|---|---|---|---|---|
| அறை | |||||
| கலனும் | |||||
| பற்பல | பொருத்து | ||||
| கடனீந்தோர் | 48,000 | கைகளும் | 65,000 | ||
| கடனாளி | |||||
| முதல் | 85,000 | கள் | 45,000 | ||
| கழிக்க | |||||
| வாரா | |||||
| ஐயக் | |||||
| கூட்டுக: | கடன் | ||||
| நிகர இலாபம் | 44,410 | ஒதுக்கு | 3,000 | ||
| 1,29,410 | 42,000 | ||||
| கழிக்க: | |||||
| கடனாளி | |||||
| கள் மீது | |||||
| கழிக்க: | தள்ளுபடி | ||||
| எடுப்புகள் | 15,000 | 1,14,410 | ஒதுக்கு | 840 | 41,160 |
| வங்கி | |||||
| ரொக்கம் | 21,000 | ||||
| இறுதிச் | |||||
| சரக்கிருப்பு | 35,000 | ||||
| தீர்வடை | |||||
| யாத | |||||
| விளம்பரக் | |||||
| கட்டணம் | 250 | ||||
| 1,62,410 | 1,62,410 |
34.
| விவரம் | ரூ | விவரம் | ரூ |
|---|---|---|---|
| தொடக்கச் சரக்கிருப்பு | 500 | விற்பனை | 5,000 |
| கொள்முதல் | 1,300 | இறுதிச் சரக்கிருப்பு | 2,000 |
| கூலி | 700 | ||
| மொத்த இலாபம் கீ/இ | 4,500 | ||
| 7,000 | 7,000 | ||
| சம்பளம் | 500 | மொத்த இலாபம் கீ/ கொ | 4,500 |
| நிகர இலாபம் (முதல் கணக்கிற்கு மாற்றப்பட்டது) | 4,500 | பெற்ற தள்ளுபடி | 500 |
| 5,000 | 5,000 |
| பொறுப்புகள் | ரூ | ரூ | சொத்துகள் | ரூ | ரூ |
|---|---|---|---|---|---|
| முதல் | 50,000 | கட்டடம் | 50,000 | ||
| கூட்டுக : நிகர இலாபம் | 4,500 | 54,500 | கைரொக்கம் | 4,500 | |
| 54,500 | 54,500 |
35.
செயல்முறை
(i) விற்பனையாளரின் பெயர் மற்றும் முகவரி, இடாப்பு எண் மற்றும் தேதியை உள்ளீடு செய்யவும்.
(ii) வாங்குபவரின் முகவரியை தட்டச்சு செய்யவும்.
(iii) அட்டவணையைட்டவணையை உருவாக்க – Insert தேர்வு செய்து Table / Insert Table அழுத்தவும். எத்தனை Column மற்றும் Row என்று தேர்வு செய்த பின் Ok பொத்தானை அழுத்தவும்.
(iv) எடுத்துக்காக்காட்டில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தட்டச்சு செய்யவும்.
வெளியீடு
SOUTH INDIA Ltd., INVOICE
100, Kamarajar Salai,
Chennai – 600006.
Invoice # 009876
Invoice date 31-12-2017
Bill To
Prof. A. Rajesh
HSC College,
123, PH Road,
Chennai – 600001.
| S. No. | Description | Qty | Unit Price Rs | Amount Rs |
|---|---|---|---|---|
| 1 | Financial Accounting – RL Gupta | 40 | 200 | 8,000 |
| 2 | Advanced Accounting – MC Shukla | 20 | 300 | 6,000 |
| 3 | Income Tax Law & Practice -– HC Mehrothra | 20 | 400 | 8,000 |
| 4 | Practical Auditing – B N Tandon | 30 | 150 | 4,500 |
| Sub total | 26,500 | |||
| Less: Discount at 20% | 5,300 | |||
| Invoice total | 21,200 | |||
| (Rupees twenty one thousand two hundred only) | ||||
| Thank you |
Cashier
36.
| வ.எண் | விவரம் | பே. ப. எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | எடுப்புகள் க/கு | ப | 200 | ||
| பயணச் செலவு க/கு | 200 | ||||
| (உரிமையாளரின் தனிப்பட்ட செலவு ரூ.200 பயனாச் செலவு கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| ஆ | கணேஷ் க/கு | ப | 400 | ||
| ரமேஷ் க/கு | 400 | ||||
| (கடனுக்கு ரூ.400க்கு ரமேஷிடம் சரக்கு வாங்கியது தவறாக கணேஷ் கணக்கில் வரவு வைக்கப்பட்டு திருத்தியது) | |||||
| இ | சம்பளம் க/கு | ப | 500 | ||
| மதி க/கு | 500 | ||||
| (மதிக்கு ரூ.500 சம்பளம் செலுத்தியது பேரேட்டில் மதியின் கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| ஈ | கட்டடம் க/கு | ப | 2,700 | ||
| பழுதுபார்ப்பு க/கு | 2,700 | ||||
| (கட்டட விரிவாக்கத்திற்காக ரூ.2,700 செலுத்தியது பழுதப்பார்பு கணக்கில் பற்று வைக்கப்பட்டது திருத்தியது) | |||||
| உ | மேகலா க/கு | ப | 700 | ||
| கிருஷ்ணன் க/கு | 700 | ||||
| (மேகலாக்கு ரூ.700 க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் கிருஷ்ணன் கணக்கில் எடுத்து எழுதப்பட்டது திருத்தியது) |
37.
| வ.எண். | நடவடிக்கை | வகைகள் |
|---|---|---|
| (i) | நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம். | முதலினச் செலவு |
| (ii) | வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள். | முதலினச் செலவு |
| (iii) | சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம். | வருவாயினச் செலவு |
| (iv) | கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள். | முதலினச் செலவு |
38.
| தேதி | விவரம் | ரூ | தேதி | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2014 | 2015 | ||||
| ஏப்ரல் 1 | நிலா நிறுவனக் க/கு | 2,00,000 | மார்ச் 31 | தேய்மானக் க/கு | 21,000 |
| ஏப்ரல் 1 | வங்கி க/கு | 10,000 | (2,10,000 ×10%) | ||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 1,89,000 | |||
| 2,10,000 | 2,10,000 | ||||
| 2015 | 2016 | ||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,89,000 | மார்ச் 31 | தேய்மானக் க/கு | 18,900 |
| (1,89,000 ×10%) | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 1,70,100 | |||
| 1,89,000 | 1,89,000 | ||||
| 2016 | 2017 | ||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,70,100 | மார்ச் 31 | தேய்மானக் க/கு | 17,010 |
| (1,70,100 ×10%) | |||||
| மார்ச் 31 | இருப்பு கீ/இ | 1,53,090 | |||
| 1,70,100 | 1,70,100 | ||||
| 2017 | |||||
| ஏப்ரல் 1 | இருப்பு கீ/கொ | 1,53,090 |
| தேதி | விவரம் | ரூ | தேதி | விவரம் | ரூ |
|---|---|---|---|---|---|
| 2015 | 2015 | ||||
| மார்ச் 31 | இயந்திரக் க/கு | 21,000 | மார் ச் 31 |
இலாப நட்டக் க/கு | 21,000 |
| 21,000 | 21,000 | ||||
| 2016 | 2016 | ||||
| மார்ச் 31 | இயந்திரக் க/கு | 18,900 | மார்ச் 31 | இலாப நட்டக் க/கு | 18,900 |
| 18,900 | 18,900 | ||||
| 2017 | 2017 | ||||
| மார்ச் 31 | இயந்திரக் க/கு | 17,010 | மார்ச் 31 | இலாப நட்டக் க/கு | 17,010 |
| 17,010 | 17,010 |
39.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ |
வரவு ரூ |
|
|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 1 | கொள்முதல் க / கு Y நிறுவனக் க/கு (கடனுக்கு கொள்முதல் செய்தது) |
ப | 60,000 | 60,000 | |
| 2 | D நிறுவனக் க/கு விற்பனை க/கு (கடனுக்கு விற்பனைச் செய்தது) |
ப | 30,000 | 30,000 | |
| 3 | Y நிறுவனக் க/கு வங்கி க/கு பெற்ற தள்ளுபடி க/கு (Y நிறுவனத்திற்கு தள்ளுபடியுடன் பணம் செலுத்தியது) |
ப | 60,000 | 58,000 2,000 |
|
| 4 | பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு க/கு D நிறுவனக் க/கு (D நிறுவனத்திடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டு) |
ப | 30,000 | 30,000 | |
| 5 | L க/கு விற்பனை க/கு (கடனுக்கு விற்பனைச் செய்தது)` |
ப | 20,000 | 20,000 | |
| 6 | M க/கு விற்பனை க/கு (கடனுக்கு விற்பனை செய்தது) |
ப | 40,000 | 40,000 | |
| 7 | வங் கி க/கு அளித்த தள்ளுபடி க/கு M க/கு (காசோலை பெற்றுக் கொண்டு தள்ளுபடி அளித்தது) |
ப ப |
39,000 1,000 |
40,000 | |
| 8 | Y நிறுவனக் க/கு விற்பனைத் திருப்பம் க/கு (Y நிறுவனத்திற்கு திருப்பிய சரக்கு) |
ப | 4,000 | 4,000 | |
| 9 | ரொக்கக் க/கு வாராக் கடன் க/கு L க/கு (பணம் பெற்றுக் கொண் டு கணக்குத் தீர்த்தது) |
ப ப |
18,000 2,000 |
20,000 | |
| 10 | விற்பனைத் திருப்ப க/கு M க/கு (M திருப்பிய சரக்கு) |
ப | 3,000 | 3,000 | |
40.
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|
| ரொக்க ஏட்டின்படி மேல்வரைப்பற்று | 20,000 | |
| கூட்டுக: | ||
| செலுத்திய காசோலை வரவு வைக்கப்படாதது | 4,000 | |
| மேல்வரைப்பற்று மீதான வட்டி | 2,000 | |
| தவறுதலாக பற்று வைக்கப்பட்ட தொகை | 300 | |
| காசோலை வங்கியால் மறுக்கப்பட்டது | 2,000 | 8,300 |
| 28,300 | ||
| கழிக்க: | ||
| விடுத்த காசோலை முன்னிலைப்படுத்தப்படாதது | 1,000 | |
| வங்கி வசூலித்த வாடகை | 500 | |
| காசோலை மறுக்கப்பட்டது | 5,000 | 6,500 |
| வங்கி அறிக்கையின்படி மேல்வரைப் பற்று | 21,800 |
41.
| நாள் | விவரம் | உள்வரு இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை (ரூ) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 டிச 1 | உமாதேவி | ||||
| 100 வணிகப் புள்ளியியல் புத்தகங்கள் ரூ. 80வீதம் | 8,000 | ||||
| 100 கணக்குப் பதிவியல் புத்தகங்கள் ரூ. 150 வீதம் | 15,000 | 23,000 | |||
| டிச10 | சுபா | ||||
| 40 பொருளாதாரம் புத்தகங்கள் ரூ. 80வீதம் | 3,200 | ||||
| கழிக்க: வியாபாரத் தள்ளுபடி 15% | 480 | 2,720 | |||
| கொள்முதல் க/கு ப | 25,720 | ||||
| நாள் | விவரம் | ப.கு எண் | பே.ப.எண் | தொகை (ரூ) | குறிப்பு | |
|---|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | |||||
| 2017 டிச 15 | உமாதேவி | |||||
| 10 கணக்குப் பதிவியல் புத்தகங்கள் ரூ.150 வீதம் | 1,500 | சேதமடைந்தது | ||||
| 26 | சுபா | |||||
| 5 பொருளாதாரம் புத்தகங்கள் ரூ.80 வீதம் | 480 | |||||
| கழிக்க: 15% வியாபாரத் தள்ளுபடி | 72 | 408 | ||||
| கொள்முதல் திருப்பக் க/க வ | 1,908 | |||||
| நாள் | விவரம் | வெளிச்செல் இடாப்பு எண் | பே.ப.எண் | தொகை (ரூ) | |
|---|---|---|---|---|---|
| விளக்கம் | மொத்தம் | ||||
| 2017 டிச 7 | ஸ்ரீதேவி | ||||
| 240 வணிக்கப்புள்ளியியல் புத்தகங்கள் ரூ.90வீதம் | 21,600 | ||||
| 250 கணக்குப்பதிவியல் புத்தகங்கள் ரூ.170 வீதம் குப்தா | 42,500 | 64,100 | |||
| டிச 18 | 200 பொருளாதாரம் புத்தகங்கள் ரூ.95 வீதம் | 19,000 | |||
| விற்பனைக் க/கு வ | 83,100 | ||||
42.
| பெற்ற தொகை |
ரொ. ஏ . ப . எண் |
நாள் | விவரம் | சா. சீ. எ |
மொத்த செலவழித்த தொகை |
அஞ்சல்செலவு | பயணச் செலவுகள் |
கூலி | அச்சு எழுதுபொருள் |
ஏற்றிச் செல் செலவு |
பல்வகைச் செலவுகள் |
பே. ப. எண் |
ஆள்சார்கணக்குகள் |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | ரூ | |||||
| 2,500 | 2017 அக் 1 | ரொக்கம் | |||||||||||
| 2 | கூலி | 260 | 260 | ||||||||||
| 5 | எழுதுபொருள்கள் | 300 | 300 | ||||||||||
| 6 | பேருந்து கட்டணம் | 200 | 200 | ||||||||||
| 12 | சிற்றுண்டி செலவுகள் | 180 | 180 | ||||||||||
| 16 | ஏற்றிச் செல் செலவு | 160 | 160 | ||||||||||
| 20 | பயணச் செலவுகள் | 188 | 188 | ||||||||||
| 25 | போக்குவரத்துச் செலவுகள் | 320 | 320 | ||||||||||
| 27 | வருவாய் வில்லைகள் | 48 | 48 | ||||||||||
| 28 | அலுவலகச் சுத்தம் | 140 | 140 | ||||||||||
| 29 | பதிவு தபால்கள் | 180 | 180 | ||||||||||
| 30 | வாடகை மழுந்து கட்டணம் | 219 | 219 | ||||||||||
| 2,195 | 228 | 927 | 260 | 300 | 160 | 320 | |||||||
| 31 | இருப்பு கீ/இ | 305 | |||||||||||
| 2,500 | 2,500 | ||||||||||||
| 305 | நவ 1 | இருப்பு கீ/கொ | |||||||||||
| 2,195 | 1 | ரொக்க க/கு |
43.
| வ. எண் | கணக்கின் பெயர் | பே.ப.எ | பற்று இருப்பு ரூ | வரவு இருப்பு ரூ |
|---|---|---|---|---|
| 1 | முதல் | 2,20,000 | ||
| 2 | எடுப்புகள் | 24,000 | ||
| 3 | அறைகலன் | 63,500 | ||
| 4 | தொடக்கச் சரக்கிருப்பு | 62,050 | ||
| 5 | பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு | 9,500 | ||
| 6 | செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு | 8,750 | ||
| 7 | கொள்முதல் | 88,100 | ||
| 8 | விற்பனை | 1,35,450 | ||
| 9 | தள்ளுபடி அளித்தது | 7,100 | ||
| 10 | தள்ளுபடிப் பெற்றது | 3,500 | ||
| 11 | பழுது பார்ப்புச் செலவு | 2,400 | ||
| 12 | அலுவலக மின் கட்டணம் | 2,600 | ||
| 13 | அச்சு எழுதுபொருள் செலவு | 2,700 | ||
| 14 | வங்கிக் கடன் | 7,500 | ||
| 15 | கணிப்பொறி | 25,000 | ||
| 16 | கடனாளிகள் | 46,500 | ||
| 17 | கை ரொக்கம் | 15,000 | ||
| 18 | வங்கி ரொக்கம் | 27,250 | ||
| 19 | பொதுச் செலவுகள் | 7,100 | ||
| 20 | கடனீந்தோர் | 7,600 | ||
| மொத்தம் | 3,82,800 | 3,82,800 |
44.
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 45,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 35,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 50,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 20,000 |
| நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. | நாள் | விவரம் | கு.ப.எ. | ரூ. |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 ஜன 1 | இருப்பு கீ/கொ | 1,60,000 |
45.
1.மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம் பற்றிய தகவல்களை தருகிறது.
(i) வியாபார கணக்கு வணிகத்தின் கணக்காண்டிற்குரிய மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டத்தை
காட்டுகிறது
(ii)இது வணிகர்களுக்கு மொத்த இலாப விகிதத்தை கண்டறிய உதவுகிறது.வியாபார கணக்கு, விற்பனையில் உள்ள குறிப்பிட்ட சதவீதமாக இலாப விகிதத் தை வெளிப்படுத்துகிறது.
2.வரக்கூடிய நாட்டிங்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மொத்த இலாப விகிதம் குறைவாக இருந்தால், வரக்கூடிய நட்டங்களைத் தவிர்த்து வணிகத்தை பாதுகாக்கத் தேவையான நடவடிக்கையான எடுக்க முடிகிறது.
3.நேரடிச் செலவுகள் மற்றும் நேரடி வருமானங்கள் பற்றிய தகவல்களைத் தருகிறது.
(i) சரக்குகளை கொள்முதல் செய்வதற்கு செய்யப்படும் அணைத்துச் செலவுகளும் நேரடிச் செலவுகள் எனப்படும்.அவை வியாபாரக் கணக்கில் பதியப்படுகின்றன.
(ii)மேலும், வியாபார கணக்கு ,நேரடி வருமானமான விற்பனை வருவாயையும் காட்டுகிறது.
(iii) இவ்வாறு வியாபார கணக்கு நேரடிசெலவுகளை கட்டுப்படுத்த, நிர்வாகத்திற்கு உதவுகிறது.
46.
கணக்கியலின் நோக்கங்கள் பின்வருமாறு:
நிதி நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த முறையான பதிவேடுகளை வைத்திருத்தல்.
வணிக நிறுவனத்தின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிதல்.
வணிக நிறுவனத்தின் நிதி நிலையை அறிதல்.
பல்வேறு பயனீட்டாளர்களின் தேவைக்கேற்ப தகவல்களை வழங்குதல்.
நிறுவனத்தின் கடன் தீர்க்கும் திறன் மற்றும் நீர்மைத் தன்மையை அறிதல்.
47.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2018 மார்ச் 31 | முதல் க/கு எடுப்புகள் மீது வட்டி க/கு (எடுப்புகள் மீதான வட்டி சரிக்கட்டப்பட்டது) |
ப | 50 | 50 | |
| மார்ச் 31 | வாராக்கடன் க/கு பற்பல கடனாளிகள் க/கு (வாராக்கடன் போக்கெழுதியது) |
ப | 500 | 500 | |
| மார்ச் 31 | தேய்மானக் க/கு அறைகலன் க/கு (அறைகலன் மீது தேய்மானம் சரிக்கட்டப்பட்டது |
ப | 1,000 | 1,000 |
48.
நேர்கோட்டு முறைக்கும், குறைந்து செல் மதிப்பு முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பின்வருமாறு:
| வேறுபாடுகள் | நேர்கோட்டு முறை | குறைந்து செல் மதிப்பு முறை |
|---|---|---|
| கணக்கீட்டு அடிப்படை | ஆண்டுதோறும் சொத்தின் ஆரம்ப அடக்கவிலை மீது தேய்மானம் கணக்கிடப்படுகிறது. | ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் குறைந்து செல் மதிப்பின் மீது தேய்மானம் கணக்கிடப்படுகிறது. |
| தேய்மானத் தொகை | அனைத்து ஆண்டுகளுக்கும் தேய்மானத் தொகை சமமாக ஒரே அளவாக இருக்கும். | ஒவ்வொரு ஆண்டும் தேய்மானத்தொகை குறைந்து கொண்டே போகும். |
| பயனளிப்பு காலம் முடிவில் ஏட்டு மதிப்பு | சொத்தின் இறுதி மதிப்பு இல்லாத நிலையில் சொத்தின் ஏட்டு மதிப்பு பூஜ்ஜியமாகவும், இறுதி மதிப்பு இருந்தால் இறுதி மதிப்பிற்கு சமமாக இருக்கும். | சொத்தின் ஏட்டு மதிப்பு ஒரு போதும் பூஜ்ஜியமாக இருக்காது. |
| தேய்மான விகித கணக்கீடு | தேய்மான விகிதத்தை கணக்கிடுதல் எளிமையானது | தேய்மான விகிதத்தை கணக்கிடுதல் மிகக் கடினம் |
| தேய்மானத் தொகை கணக்கீட்டின் படிகள் | தேய்மானத் தொகை முதலிலும் தேய்மான விகிதம் இரண்டாவதாகவும் கணக்கிடப்படுகிறது. | தேய்மான விகிதம் முதலிலும் தேய்மானத் தொகை இரண்டாவதாகவும் கணக்கிடப்படுகிறது. |
49.
சில பிழைகள் இருப்பாய்வு சமன்படுவதை பாதிக்கும். அவ்வாறான பிழைகள், கணக்கு ஏடுகளில் நிகழ்ந்தால் பற்று இருப்புகளின் கூட்டுத்தொகையும் வரவு உறுப்புகளின் கூட்டுத் தொகையும் சமமாக இருக்காது. இருபாய்வு சமநிலை பெறாது. பகுதி விடுப்பிழையும் செய்பிழையும் இருபாய்வு சமன்பாடுவதை பாதிக்கும்.
அவ்வாறான பிழைகளின் உதாரணங்கள் பின்வருமாறு
1. குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டு பேரேட்டில் ஒரு கணக்கில் எழுதப்பட்டு மற்றொரு கணக்கில் எடுத்தெழுதப்படாமல் உள்ளது.
2. பேரேட்டில் எடுத்தெழுதும் போது கணக்கின் தவறான பக்கத்தில் எழுதுதல்
3. பேரேட்டுக் கணக்கில் இருமுறை எடுத்தெழுதுதல்
4. துணை ஏட்டில் அதிகமாக கூட்டுவது அல்லது குறைவாகக் கூட்டுவது.|
5. பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையை சரியான பக்கத்தில் எடுத்தெழுதுதல்.
6. பேரேட்டுக் கணக்கிலோ அல்லது துணை ஏட்டிலோ ஒரு பக்கத்தின் கூட்டுத்தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் பொது தவறான தொகையை எழுதுதல்
7. பேரேட்டுக் கணக்கை இருப்புக் காட்டும் போது நிகழும் பிழைகள்
8. துணை எதிலிருந்து பேரேட்டுக் கணக்கில் எடுத்து எழுதத் தவறுதல்.
50.
குணால் என்பவரின் ஏடுகளில்
| நா ள் |
பெறுதல்கள் | பே.ப.எ. | தொகை ரூ | நாள் | செலுத்தல்கள் | பே.ப.எ. | தொகை ரூ |
|---|---|---|---|---|---|---|---|
| 2017 | 2017 | ||||||
| ஜன 1 | இருப்பு கீ/கொ | 11,200 | ஜன 7 | வாடகை க/கு | 30 | ||
| ஜன | இரமேஷ் க/கு | 300 | ஜன | மோகன் க/கு | 700 | ||
| ஜன | விற்பனை க/கு | 300 | ஜன | அறைகலன் க/கு | 200 | ||
| ஜன | சம்பளம் க/கு | 100 | |||||
| ஜன | இருப்பு கீ/இ | 10,770 | |||||
| 11,800 | 11,800 | ||||||
| பிப் 1 | இருப்பு கீ/கொ | 10,770 |
51.
(1) வங்கி அறிக்கையில் உள்ள பதிவுகளை, ரொக்க ஏட்டில் உள்ள பதிவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ரொக்க ஏட்டில் கணக்கீட்டு முறை நேர்மாறாக இருப்பதைக் காணலாம்.
(2) ரொக்க ஏட்டினை வணிகத்தின் நோக்கில் பதிவு செய்வதாலும், வங்கி அறிக்கையினை வங்கியின் நோக்கில் பதிவு செய்வதாலும் இவ்விரு ஏடுகளை ஒப்பிடும்போது நேர் மாறாக இருக்கும்.
(3) இரட்டைப் பதிவு முறை பின்பற்றுவதால், வங்கி அறிக்கையின் வரவு இருப்பு என்பது ரொக்க ஏட்டின் பற்று இருப்பைக் குறிக்கும்.
(4) வங்கி அறிக்கையின் பற்று இருப்பு என்பது ரொக்க ஏட்டின் வரவு இருப்பைக் குறிக்கும். ஏனென்றால் வங்கி இருப்பு சாதகமாக இருக்கும் பொழுது, வங்கியானது வணிகத்திற்கு கடனாளர் மற்றும் வணிகம் (வங்கியின் வாடிக்கையாளர்) வங்கியின் கடனீந்தோர் ஆவார்.
(5) வணிகம் வங்கியில் செலுத்தும் போது, வங்கியின் ஏடுகளில் வாடிக்கையாளர் வங்கியின் கடனீந்தோர் ஆவார்.
(6) வங்கியிலிருந்து, வணிகம் பணம் எடுக்கும் பொழுது, வங்கி வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டிய தொகை குறைவதால், வாடிக்கையாளரது கணக்கு பற்று வைக்கப்படுகிறது. இதன் விளைவாக வங்கி அறிக்கையில் (செல்லேடு) சாதகமான இருப்பு வரவு இருப்பாகவும், பாதகமான இருப்பு பற்று இருப்பாகவும் தோன்றும்.
52.
53.
அ. முதல் அதிகரிக்கும் போது, சொத்து அதிகரித்தல்:
முருகன் ரூ.50,000/- முதல் போட்டு தொழில் தொடங்கினார்.
விளைவுகள்
ரொக்கம் உள்வருதல் - சொத்தின் மதிப்பு அதிகரிப்பு
முதல் போடப்பட்டது - முதல் அதிகரிப்பு
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
(ரொக்கம்) 50,000/- = 50,000(முதல்) பொறுப்புகள்
50,000/- = 50,000/-
ஆ. பொறுப்புகள் குறையும் போது, சொத்துக்களும் குறைதல்.
கடனீந்தோர்க்கு திருப்பிச் செலுத்திய தொகை ரூ.10,000/-
ரொக்கம் வெளிச்செல்லுதல் - சொத்தின் மதிப்பு குறைதல்
கடனீந்தோர் பணம் பெறுதல் - பொறுப்பின் மதிப்பு குறைதல்
முதல் பொறுப்புகள் - சொத்துக்கள்
பொறுப்புகள் (-10,000/-) = சொத்துக்கள் (-10,000/-)
-10,000/- = -10,000/-
54.
கணக்குகளை இருப்புகட்டுவதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
(i) பற்று பக்கத்தில்க் உள்ள தொகை புத்தியையும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள தொகைபத்தியையும் தனித்தனியாக கூட்ட வேண்டும்.
(ii) இரண்டு பக்கங்களில் கிடைக்கப்பெற்ற மொத்த தொகைகள் வித்தியாசதை கணக்கிட வேண்டும்.
(iii) இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை, குறைவாக மொத்தத் தொகை உடைய பக்கத்தில் விவரப்பத்தியில் 'இருப்பு கீ/இ' என எழுதி, அந்த தொகையை தொகை பத்தியிலும், அதன் எதிரே நாள் பத்தியில் அந்த மாதத்தின் கடைசி நாளையும் குறிப்பிட வேண்டும்.
(iv) இப்போது பற்ற மற்றும் வரவு என்ற இருபத்திகளையும் கூட்ட வேண்டும். அவை சமமாக இருக்கும். இரு பக்கங்களின் அக்கூட்டுத் தொகையினை ஒரே கோட்டில் கிடைமட்டமாக பதிய வேண்டும்.
(v) வித்தியாசத்தி தொகையை கூட்டுத் தொகைக்கு கீழே எதிர்பக்கத்தில் கீழ் கொண்டு வரவேண்டும். விவரப்பத்தியில் கீழே கொணரப்பட்ட அவ்வித்தியாசத் தொகையினை எதிரே 'இருப்பு கீ/கொ' என எழுதப்பட்டு, நாள் பத்தியில் அடுத்த கணக்கியல் காலத்தின் முதல் நாழிகை குறிப்பிட வேண்டும்.
(vi) ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால் அதன் இருப்புத்தொகை பற்று இருப்பு ஆகும். ஒரு கணக்கின் வரவு பக்கத்தின் மொத்தம் அதிகமாக இருந்தால், அதன் இருப்புத்தொகை வரவு இருப்பு ஆகும். இரண்டு பக்கங்களும் சமமாக இருந்தால் அக்கணக்கு எந்த இருப்பையும் காட்டாது.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards