11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
தாவரவியல் - கனிம ஊட்டம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
லைக்கன்கள் பற்றி எழுதுக.
2.
அம்மோனியாவாதல் என்றல் என்ன?
3.
அலுமினியம் நச்சுத்தன்மை என்றால் என்ன?
4.
5.
மெக்னீசியம் பற்றி எழுதுக
6.
நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரஙகள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை ஏன்?
7.
சிறப்பு வகை உணவூட்டம் என்றால் என்ன?
8.
வினையூக்க அமினோவாக்கம் பற்றி எழுதுக.
9.
வேர் முடிச்சு மூலம் நைட்ரஜன் நிலைநிறுத்தம் பற்றி எழுதுக.
10.
நைட்ரஜன் நிலைநிறுத்தம் பற்றி எழுதுக.
11.
மாங்கனீசு நச்சுத்தன்மை பற்றி எழுதுக.
12.
நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?
13.
தாவரம் A சாட்டைவால் நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. AB யின் கனிமக் குறைபாட்டினைக் கண்டறிக.
14.
பூச்சியுண்ணும் உணவூட்டம் பற்றி எழுதுக.
15.
நைட்ரஜன் சுழற்சியினை பற்றி எழுதுக.
16.
ஆஞ்சியோஸ் பெர்ம்களின் பூச்சியுண்ணும் உணவூட்ட முறையினை விவரி?
17.
சரியான கூற்றைக் கண்டறிக
I. சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம்
II. N, K, S மற்றும் MO குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது.
III. லெகூம் அல்லாத தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது.
IV. நைட்ரஜன் நீக்கத்தில் பங்கேற்கும் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்போபாக்டர்
I, II சரி
I, II, III சரி
I மட்டும் சரி
அனைத்தும் சரி
18.
சரியானவற்றைப் பொருத்துக.
| தனிமங்கள் | பணிகள் | ||
|---|---|---|---|
| A | மாலிப்டினம் | 1 | பச்சையம் |
| B | துத்தநாகம் | 2 | மெத்தியோனின் |
| C | மெக்னீசியம் | 3 | ஆக்சின் |
| D | சல்ஃபர் | 4 | நைட்ரோஜினேஸ் |
| A | B | C | D |
| 1 | 3 | 4 | 2 |
| A | B | C | D |
| 2 | 1 | 3 | 4 |
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
| A | B | C | D |
| 4 | 2 | 1 | 3 |
19.
மீண்டும் இடப்பெயராத தனிமம் எது?
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
கால்சியம்
நைட்ரஜன்
20.
ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்
Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்
Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்
21.
பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:
| 1. சிட்டரஸ் அடிநுனி இறப்பு | (i) Mo |
| 2. சாட்டை வால் நோய் | (ii) Zn |
| 3. பழுப்பு மையக் கருக்கல் நோய் | (iii) Cu |
| 4. சிற்றிலை நோய் | (iv) B |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (ii) | (iv) | (i) |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (i) | (iv) | (ii) |
| 1 | 2 | 3 | 4 |
| (i) | (iii) | (ii) | (iv) |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (iv) | (ii) | (i) |
1.
லைக்கன்கள் (Lichens)
(i) ஆல்காக்களும் பூஞ்சைகளும் இணைந்த கூட்டுயிர் வாழ்க்கையாகப் இது உள்ளது.
(ii) ஆல்காக்கள் உணவை தயாரிப்பதற்கும் பூஞ்சைகள் நீரை உறிஞ்சுவதற்கும் மற்றும் உடலை அமைப்பை ஏற்ப்படுவதற்கும் உதவுகிறது.
2.
அம்மோனியாவாதல் (Ammonification )
(i) இறந்த தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து பெறப்படும் கரிம நைட்ரஜன் (புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள்) பாக்டீரியங்களால் அம்மோனியாவாக மாற்றப்படும் நிகழ்வு அம்மோனியாவாதல் எனப்படும்.
(ii) இச்செயலில் பங்கேற்கும் பாக்டீரியங்கள் பாசில்லஸ் ரமோசஸ் மற்றும் பாசில்லஸ் வல்காரிஸ்.
3.
(i) அலுமினியத்தின் நச்சுத்தன்மை காரணமாக நியூக்ளிக் அமிலமானது வீழ்ப்படுகிறது.ஹைகூஞயேஸ் நொதியின் செயல்பாடு தடைபடுகிறது.
(ii) செல் பகுப்பை தடை செய்தல் மற்றும் பிளாஸ்மா சவ்வுடன் கால்மோடுலின் பிணைவதைத் தடுக்கிறது.
4.
5.
(i) பச்சையம் நிறமியின் பகுதிக்கூறாக இது உள்ளது. கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்ற நொதிககளின் (RUBP கார்பாக்சிலே மற்றும் PEP கார்பாக்சிலேஸ்) ஊக்குவிப்பானாக உள்ளது.
(ii) DNA மற்றும் RNA உருவாக்கத்தில் பயன்படுகிறது.
ரைபோசோம் துணை அலகுகள் இணைப்பிற்குத் தேவைப்படுகிறது.Mg+ அயனியாக உள்ளெடுக்கப்படுகிறது.
6.
(i) நைட்ரஜன் சுழற்சி சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சுழற்சியாகும். இப்புவியின் உயிரிங்கள் நைட்ரஜன் சுழற்சியைப் பெரிதும் சார்ந்துள்ளன. வளிமண்டலத்தில் நைட்ரஜனானது (N2) என்ற தனி நைட்ரஜனாக உள்ளது.
(ii) இரு நைட்ரஜன் அணுக்கள் உறுதியான மூன்று சகப்பிணைப்புகளால் (N=N) பிணைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல நைட்ரஜனை (N2) அம்மோனியவாக மாற்றும் செயல் முறைக்கு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று பெயர்.
7.
(i) உணவூட்டம் என்பது உயிரினங்கள் உணவை எடுத்துக் கொள்வது மற்றும் அதனை பயன்படுத்தும் முறையாகும்.
(ii) இரண்டு வகை உணவூட்டங்கள் முதன்மையானவை அவை முறையே தற்சார்பு உணவூட்டம் (Autrophic) மற்றும் பிற சார்பு உணவூட்டம் (Heterophic) ஆகும்.
தற்சார்பு உணவூட்டமானது, ஒளிர்ச்சேர்க்கை (Phytosynthetic) மற்றும் வேதிச்சேர்க்கை உணவூட்டம் (Chemosynthetic) என இருவகைப்படுத்தப்படும். பிறசார்பு உணவூட்டமானது, சாறுண்ணி, ஒட்டுண்ணி, கூட்டுயிர் வாழ்க்கை, மற்றும் பூச்சியுண்ணி வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
8.
(i) குளுட்டாமேட் அமினோ அமிலானது அம்மோனியாவுடன் வினைபுரிந்து குளுட்டாமைன் எனும் அமைடினை உருவாக்குகிறது.
(ii) குளுட்டாமைன்-கீட்டோகுளூட்டாரிக் அமிலத்துடன் வினைபுரிந்து இரண்டு மூலக்கூறு Formula குளுட்டோமேட்டை உருவாக்குகிறது.
9.
(i) லெகூம் தாவரங்களின் வேர் முடுச்சுகளில் வாழும் ரைசோபியம் பாக்டீரியம் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்த உதவுகிறது.
(ii) இந்த வகையான கூட்டுயிர் வாழ்க்கையில் பாக்டீரியம் மற்றும் தாவரம் இரண்டுமே பயனடைகின்றன.
(iii) வேர்முடுச்சுக்கள் ரைசோபிய பாக்டீரிய தொற்றின் மூலம் ஏற்படுகிறது
10.
(i) இயற்கையின் வியத்தகு செயல் என்பது தன்னைத்தானே ஒழுங்குபடுத்தல் ஆகும்.அனைத்து உயிரினங்களும் உயிர்வேதிய சுழற்சிகளின் பங்காற்றும் கருவிகளாகச் செயல்படுகின்றன.
(ii) நைட்ரஜன் சுழற்சி சிறப்பாக ஒழுங்கப்படுத்தப்பட்ட ஒரு சுழற்சியாகும். இப்புவியின் உயிரினங்கள் நைட்ரஜன் சுழற்சியைப் பெரிதும் சார்ந்துள்ளன. வளிமணடலத்தில் நைட்ரஜனானது டை நைட்ரஜன் (N2) என்ற தனி நைட்ரஜனாக உள்ளது.
11.
(i) மாங்கனீசு செறிவு அதிகரிக்கும் இரும்பு மற்றும் மெக்னீசியத்தை எடுத்துக்கொள்ளும் திறனை தடுக்கிறது.
(ii) மேலும் கால்சியம் தண்டின் நுனிப்பகுதிக்குக் கடத்தப்படுவதையும் தடுக்கிறது.
(iii) இதன்மூலம் Fe,Mg மற்றும் Ca பற்றாக்குறை நோயை ஏற்றப்படுத்துகிறது.மாங்கனீசு நச்சுத்தன்மையின் அறிகுறிகள் பழுப்பு புள்ளிகள் சூழ்ந்து பச்சையச் சோகையுடைய நரம்புகள் தோன்றுவதாகும்.
12.
இரு நைட்ரஜன் அணுக்கள் உறுதியான மூன்று சகப்பிணைப்புகளால் (N=N) பிணைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல நைட்ரஜனை (N2) அம்மோனியாவாக மாற்றும் செயல்முறைக்கு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று பெயர். இது முதல் நிலையாகும்.
நைட்ரோஜினேஸ் நொதியானது காற்றில்லா நிலையின்போது மட்டுமே செயல்படக் கூடியது. காற்றில்லா நிலையை ஏற்படுத்த வேர்முடுச்சிகளில் உருவாகும் லெக்ஹீமோகுளோபின் (leghaemoglobin )ஆக்ஸிஜன் நீக்கியாக(Oxygen Scavenger ) செயல்பட்டு ஆக்ஸிஜன் இல்லாச் சூழலை ஏற்ப்படுத்துகிறது.
13.
(i) குறைப்பாட்டு கனிமங்கள்
(ii) துத்தநாகம் மாலிப்டினம்
(iii) பற்றாக்குறை அறிகுறிகள்/ நோய்கள்
சிற்றிலை நோய் டர்னிக், பீட்ரூட்டில் பழுப்பு மையக் கருக்கல் னாய் மற்றும் ஆப்பிளின் உள்திசு தக்கை நோய்
(iv) காலிப்ளவர் மற்றும் முட்டைகோஸின் சாட்டை வால் நோய்
14.
1.நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள இடங்களில் இவ்வகை தாவரங்கள் நைட்ரஜன் பற்றாக்குறையை சரிசெய்ய பூச்சிகளின் உடலில் இருந்து நைட்ரஜன் சத்துக்களைப் பெறுகின்றன.
(அ) நெப்பந்தல் (Pitcher plant):
(i) குடுவை என்பது இலையின் மாற்றுரு. இக்குடுவையினுள் செரிமான நொதிகளை உருவாக்கம் வளரிகள் உள்ளன.
(ii) குடுவையின் வாய் விளிம்பில் தேன் சுரப்பிகள் காணப்படுவதோடு, குடுவையின் மூடி பகுதி பூச்சிகளைக் கவரும் வண்ணங்களும் காணப்படுகிறது.
(iii) பூச்சிகள் குடுவையினுள் விழுந்தவுடன் புரத செரிமான நொதிகள் பூச்சிகளின் உடலை செரிக்க உதவுகிறது.
(ஆ) ட்ரஸீரா (Drosera-Sundew- plant):
(i) இவை நீண்ட தடித்த உணர்நீட்சிகளை கரண்டி வடிவ இலைகளில் பெற்றவை.இவை ஒட்டக்கூடிய செரிமான திரவத்தை சுரந்து, பூச்சிகளை ஈர்க்கிறது. இது பார்ப்பதற்கு சூரிய பனித்துளி போன்று உள்ளது.
(இ) யுட்ரிகுலேரியா (Bladderwort):
(i) இது ஒரு நீரில் மூழ்கி காணப்படும் தாவரம். இவற்றின் இலைகள் பை போன்ற மாற்றுரு அடைந்து பூச்சிகளை சேகரித்து செரிக்கச் செய்கிறது.
(ஈ) டயோனியா (Venus fly trap):
(i) இவற்றின் இலைகள் வண்ணமயமான பொறியாக மாற்றமடைந்துள்ளது. இரண்டு மடல்களுடைய இலைகளின் உள்ளே உணர் இழைகள் காணப்படும்.
(ii) பூச்சிகள் உணர் இழைகளை தொட்டவுடன் இலைகள் மூடி அவை சிறைப்படுகின்றன.
15.
நைட்ரஜன் சுழற்சி(Nitrogen cycle):
இந்தச் சுழற்சி கிழ்கண்ட நிலைகள் உள்ளடிக்கியதாகும்.
(i) வளிமண்டல நைட்ரஜன் நிலைநிறுத்தம் (Atmospheric nitrogen fixation):
1.இது வளிமண்டலத்திலுள்ள டை நைட்ரஜன் படிப்படியாக ஹைட்ரஜன் அணுக்களின் சேர்க்கையால் ஒடுக்கம் அடையும் நிகழ்வு.
2.இரு நைட்ரஜன் அணுக்கள் (N=N) மூன்று சகப்பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. இவை பிளக்கப்பட்டு அம்மோனியாவாக மாறுகிறது.
3.நைட்ரஜன் நிலைப்படுத்தும் இச்செயல்முறைக்கு நைட்ரோஜினேஸ் என்ற நொதி கூட்டமைப்பு, மாலிப்டினம், இரும்பு, சல்ஃபர் (Mo,Fe,S) ஆகிய தனிமங்கள், காற்றில்லா நிலை,ATP ,e- (எலக்ட்ரான்) மற்றும் H+ (புரோட்டான்கள்) வழங்கும் குளுக்கோஸ் 6 பாஸ்பேட் ஆகியவை தேவைப்படுகின்றன.
4.நைட்ரேஜினேஸ் நொதியானது காற்றில்லா நிலையின்போது மட்டுமே செயல்படக்கூடியது.
5.காற்றில்லா நிலையை ஏற்படுத்த வேர்முடுச்சுகளில் உருவாகும் லெக்ஹீமோகுளோபின் (Leghaemoglobin) உதவுகிறது.
6.இந்த லெக்ஹீமோகுளோபின் ஆக்ஸிஜன் நீக்கியாக (Oxygen Scavenger) செயல்பட்டு ஆக்ஸிஜன் இல்லாச் சூழலை ஏற்படுத்துகிறது.
7.நைட்ரஜன் நிலைநிறுத்தம் பாக்டீரியாக்கள் வேர்முடுச்சுகளில் இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படுவதற்கு லெக்ஹீமோகுளோபின் நிறமியே காரணமாக உள்ளது.
ஒட்டுமொத்தவினை
\({ N }_{ 2 }+{ 8e }^{ - }+8H^{ + }+16ATP\longrightarrow 2N{ H }_{ 3 }^{ + }+{ H }_{ 2 }+16ADP+16Pi\)
(ii) நைட்ரேட்டாதல்(Nitrification)
அம்மோனியாவானது (NH3) முதலில் நைட்ரோசோமோனோஸ் பாக்டீரியத்தின் உதவியால் நைட்ரைட்டாக (NO3-) மாற்றம் அடைகிறது.
பின்னர் இது நைட்ரேட்டாக (NO3-) நைட்ரோபாக்டர் என்ற பாக்டீரியத்தினால் மாற்றம் அடைகிறது.
உயர் தாவரங்கள் அம்மோனியா அயன்களை விட நைட்ரேட்டுகளாக (NO+- ) உள்ளெடுத்துக்கொள்ளும் தகவமைப்பினைப் பெற்றுள்ளன.

(iii) நைட்ரேட் தன்மையதால் (Nitrate Assimilation)
நைட்ரேட்டானது ஒடுக்கம் அடைந்து அம்மோனியாவாக மாறிப் பின்னர்ச் செல்புரதங்களுள் சேர்க்கப்படும் நிகழ்விற்கு நைட்ரேட் தன்மையதால் என்று பெயர்.

(iv) அம்மோனியாவதால் (Ammonification)
இறந்த தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து பெறப்படும் கரிம நைட்ரஜன்(புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள்) பாக்டீரியங்களால் அம்மோனியாகவாக மாற்றப்படும் நிகழ்வு அம்மோனியாவாதால் எனப்படும். இச்செயலில் பங்கேற்கும் பாக்டீரியங்கள் பாசில்லஸ் ரமோசஸ் மற்றும் பாசில்லஸ் வல்காரிஸ்.
(v) நைட்ரஜன் நீக்கம்(Denitrifaction)
மண்ணில் காணப்படும் நைட்ரேட் வளிமண்டல நைட்ரஜனாக மாற்றப்படும் நிகழ்வு நைட்ரஜன் நீக்கம் எனப்படும். இதில் பங்கேற்கும் பாக்டீரியங்கள் சூடோமோனஸ், தையோபாசில்லஸ், பாசில்லஸ், சப்டிலிஸ், மற்றும் பிற.

16.
நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள இடங்களில் இவ்வகை தாவரங்கள் நைட்ரஜன் பற்றாக்குறையை சரிசெய்ய பூச்சிகளின் உடலில் இருந்து நைட்ரஜன் சத்துக்களைப் பெறுகின்றன.
(அ) நெப்பந்தஸ் ( Pitcher plant);
குடுவை என்பது இலையின் மாற்றரு. இக்குடுவையினுள் செரிமான நொதிகளை உருவாக்கும் வளரிகள் உள்ளன. குடுவையின் வாய் விளிம்பில் தேன் சுரப்பிகள் காணப்படுவதோடு, குடுவையின் மூடி பகுதி பூச்சிகளை கவரும் வண்ணங்களும் காணப்படுகிறது. பூச்சிகள் குடுவையினுள் விழுந்தவுடன் புரத செரிமான நொதிகள் பூச்சிகளின் உடலை செரிக்க உதவுகிறது.
(ஆ) ட்ரஸீரா (Drosera -Sundew plant ):
இவை நீண்ட தடித்த உணர் நீட்சிகளை கரண்டி வடிவ இலைகளில் பெற்றவை. இவை ஒட்டக்கூடிய செரிமான திரவத்தை சுரந்து, பூச்சிகளை ஈர்க்கிறது. இது பார்ப்பதற்கு சூரிய பனித்துளி போன்று உள்ளது.
(இ) யூட்ரிகுலேரியா (Bladderwort ):
இது ஒரு நீரில் மூழ்கி காணப்படும் தாவரம். இவற்றின் இலைகள் பை போன்று மற்றுரு அடைந்து பூச்சிகளை சேகரித்து செரிக்க செய்கிறது.
(ஈ) டயோனிய (venus fly trap ):
இவற்றின் இலைகள் வண்ணமயமான பொறியாக மாற்றமடைந்துள்ளது. இரண்டு மடல்களுடையே இலைகளின் உள்ளே உணர் இழைகள் காணப்படும். பூச்சிகள் உணர் இழைகளை தொட்டவுடன் இலைகள் மூடி அவை சிறைப்படைகின்றன.
17.
(b)
I, II, III சரி
18.
(c)
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
19.
(c)
கால்சியம்
20.
(a)
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
21.
(b)
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (i) | (iv) | (ii) |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards