11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
இடப்பெயர்ச்சியின் வழியினை எழுதுக.
2.
தாவர நீராவிப்போக்குத் தடுப்பான் பற்றி எழுதுக.
3.
இலைத்துளை நீராவிப்போக்கு என்றால் என்ன?
4.
நீராவிப்போக்கு என்றால் என்ன?
5.
சவ்வூடு பரவல் திறன் என்றால் என்ன?
6.
தரச சர்க்கரை இடைமாற்றக் கொள்கையில் பாஸ்பாரிலேஸ் நொதி எவ்வாறு இலைத்துளையினைத் திறக்கிறது?
7.
நன்கு நீரூற்றினாலும், மண்ணில் உள்ள அதிகப்படியான உப்பு அடர்வினால் தாவரம் வாடுகிறது.விளக்கு
8.
ஆற்றல் சாரா உள்ளெடுப்பு பற்றி எழுதுக.
9.
நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?
10.
தாவரங்களில் நீர், கனிமங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் நீண்டதூரம் ________ மூலம் இடப்பெயர்ச்சி அடைகிறது
சாறேற்றம்
பரவல்
உள்ளீர்த்தல்
சவ்வூடு பரவல்
11.
உயிர்த்துடிப்பு கோட்பாட்டை வெளியிட்டவர் __________.
J.C
காட்லெவிஸ்கி
ஸ்ட்ராஸ்பர்கர்
ஸ்டீபன் ஹேல்ஸ்
12.
சைலத்திரலுள்ள நீரானது வேரின் கரைபொருட்களுடன் சேரும்போது அது _____ என்று அழைக்கப்படுகிறது.
விறைப்பு அழுத்தம்
சாறு
நிராவிப்போக்கு
நீராவிப்போக்கின் இழுவிசை
13.
நீரில் பெரும்பான்மையான பொருட்கள் கரைவதால் நீர் ஒரு _______ என்றழைக்கப்படுகிறது.
புகையூட்டம்
பொது கரைப்பான்
பாஸ்கல்
ஊடக உட்திறன்
14.
பரவலின் வாயிலாக நடைபெறும் இச்செயல்______ எனப்படும்.
புகையூட்டம்
பொது கரைப்பான்
பாஸ்கல்
ஊடக உட்திறன்
15.
முன்ச்சின் கருத்தாக்கம் எதை அடிப்படையாகக் கொண்டது?
விறைப்பழுத்தச் சரிவு மற்றும் உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடப்பெயர்ச்சி அடைதல்
விறைப்பழுத்தம் காரணமாக உணவு இடம்பெயர்தல்
உள்ளீர்த்தல் விசை காரணமாக உணவு இடம்பெயர்தல்
மேற்கூறியவற்றுள் ஏதுமில்லை
16.
இலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது?
பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு
பொட்டாசியம் அயனியின் வெளியேற்றம்
குளோரைடு அயனியின் உள்நுழைவு
ஹைட்ராக்ஸில் அயனியின் உள்நுழைவு
17.
18.
கனிமங்களின் உள்ளெடுப்பு என்றால் என்ன?
19.
நீர் வடிதல் என்றால் என்ன ?
20.
வளிமண்டல அழுத்தம் பற்றி எழுதுக.
21.
இலைத்துளையின் அமைப்பினை படம் வரைந்து பாகங்களை குறிக்க.
22.
சாறேற்றம் என்றால் என்ன?
23.
நீரியல் திறன் என்றால் என்ன?
1.
கரைபொருட்கள் \(\therefore \)புளோயம் வழியாகவே இடம்பெயர்கிறது என்பது தற்காலத்தில் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
வளைய அல்லது பட்டை இடை நீக்க சோதனை மூலம் \(\therefore \)புளோயம் வழியாகக் கரைப்பொருட்களை இடம்பெயர்வதை நிரூபிக்கலாம்.
2.
தாவரத்தில் நீராவிப்போக்கினைத் தடுக்கப் பயன்படும் எந்தப் பொருளும் நீராவிப்போக்குத் தடுப்பான்கள் எனப்படும்.
ஒரு சிறந்த நீராவிப்போக்குத் தடுப்பான் தாவரத்தின் வாயுப்பரிமாற்றத்திற்கு எவ்வித ஊறும் விளைவிக்காமல் நீராவிப்போக்கினை தடுக்க வேண்டும்.
3.
இலையின் கீழ்ப்புறத் தோலில் அதிக அளவில் காணப்படும் நுண்ணிய துளைகயே இலைத்துளைகளாகும்.
தாவரங்களில் இலைத்துளை வழியாகவே மிக திக அளவில் (90-95%) நீராவிப்போக்கு நடைபெறுகிறது.
4.
வேர்களால் உறிஞ்சப்பட்ட நீர் இறுதியில் இலைகளை அடைந்து அங்கிருந்து நீராவியாக வளி மண்டலத்தினை அடைகிறது.
உறிஞ்சப்பட்டதில் மிகச்சிறிய அளவிலான (5% ஐ விடக் குறைவு) நீரே தாவரத்தின் வளர்ச்சிக்கும் வளச்சிதை மாற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
5.
சவ்வூடு பரவல் திறன் (Osmotic potential ) என்பது ஒரு கரைசலில் உள்ள கரைப்பான் துகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள விகிதமாகும். சவ்வூடுபரவல் அழுத்தமும் சவ்வூடுபரவல் திறனும் சமமாகும் எனினும் சவ்வூடுபரவல் திறன் எதிர்மறை அளவிழும் சவ்வூடுபரவல் அழுத்தம் நேர்மறை அளவிலும் இருக்கும்.
6.
தரச-சர்க்கரை கோட்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் ஹேன்ஸ் (1940) என்பவரால் காப்பு செல்லில் பபஸ்பாரிலேஸ் நொதி(phosphorylase) கண்டறியபட்டது.
பகலில் பபஸ்பாரிலேஸ் நொதி தரசத்தினை நீராற்பகுத்து சர்க்கரையாக மாற்றி ph- அளவை உயர்த்துவதால் உட்சவ்வூடூபரவல் நடைபெற்று இலைத்துளை திறக்கிறது.
இரவில் இதற்கு எதிரான செயல் நடைபெறுகிறது.

7.
அடர்ந்த உப்பு கரைசலில் கரைபொருளின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சவ்வூடுபரவல் அழுத்தமும் அதிகரிக்கிறது. எனவே, அதிக அடர்வுள்ள கரைசல் அதிகமான சவ்வூடு பரவல் அழுத்தத்தினைக் கொண்டிருப்பதால் தாவரம் வாடுகிறது.
8.
ஆற்றல் சாரா உள்ளெடுப்பு
அயனிப் பரிமாற்றம் (Ion- Exchange)
வேர் செல்களுக்குள் இருக்கும் அயனியும் நிலக்கரைசலில் அதே மின்சுமையுடன் உள்ள அயனியும் பரிமாற்றமாகும். இதனை இரு கோட்பாடுகள் மூலம் விளக்கலாம்.
அவை (i) தொடர்பு பரிமாற்றக் கோட்பாடு மற்றும்
(ii) கார்பானிக் அமில பரிமாற்றக் கோட்பாடு.
அ. தொடர்பு பரிமாற்றக் கோட்பாடு (Contact Exchange Theory)
இக்கொள்கையின்படி வேர்செல்களின் மேற் பரப்பில் உள்ள அயனிகளும் மண் துகளில் ஒட்டியுள்ள அயனிகளும் உறுதியாகப் பிணையாமல் ஒரு குறுகிய வட்டப்பரப்பில் ஊசலாடிக் கொண்டுள்ளன.
இப்பரப்பு ஊசலாடும் பரப்பு (Oscillation Volume) எனப்படும்.
இக்குறுகிய பரப்பு காரணமாக அயனிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் தங்களுக்குள் எளிதாகப் பரிமாற்றம் செய்து கொள்கின்றன.
ஆ. கார்பானிக் அமில பரிமாற்றக் கோட்பாடு(Carbonic Acid Exchange Theory)
இக்கொள்கையின்பை, அயனிப்பரமாற்றத்திற்கு மிக முக்கியபங்கு வகிப்பது நிலக் கரைசலாகும். இதுவே அயனிப்பரமாற்றத்திற்கு ஊடகமாகவும் செயல்படுகிறது.
வேர் செல்களில் நடைபெறும் சுவாசித்தல் காரணமாக வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடனது நீருடன் சேர்ந்து கார்பானிக் அமிலமாக (H2CO3) மாறுகிறது.
இவ்வமிலம் மண் கரைசலில், புரோட்டானாகவும் (H+) பைகார்பனேட்டாகவும் (HCO-3) பிரிகிறது.
இதில் புரோட்டான்கள் மண் துகளில் பிணைந்துள்ள நேர்மின் அயனியுடன் பரிமாறிக் கொள்ளப்படுவதால் நேர்மின் அயானது மண் துகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மண் கரைசலில் சேர்கிறது.
பின் அது எளிதில் வேர்செல்களால் உள்ளெடுக்கப்படுகிறது.
9.
நீரியல் திறன் (\(\Psi \)) இவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.
\(*W=*s+*p\)
நீரியல் திறன் கரைபொருள் உள்ளார்ந்த திறன் + அழுத்தம் உள்ளார்ந்த திறன்
(i) கரைபொருளின் அடர்த்தி அல்லது கரைபொருள் உள்ளார்ந்த திறன் (*)
(ii) அழுத்தம் உள்ளார்ந்த (*) மேற்கண்ட இரு காரணிகலையும் இணைத்து நீரியல் திறனை இவ்வாறு குறிப்பிடலாம்.
(i) கரைபொருள் திறன் (*s) (Solute polential) : கரைபொருள் திறன் என்பது ஒரு கரைபொருள் நீரியல் திறன் மீது ஏற்படுத்தும் விளைவாகும். இது சவ்வூடு பரவல் இயல்திறன் (Osmotic Potential) என்றும் அழைக்கப்படுகிறது. தூய நீரில், கரைப்பொருளினைச் சோர்க்கும்போது அது னீரின் தனி ஆற்றலை (Free Energy) குறைப்பதால் நீரியல் திறன் பூஜ்ஜியத்திலிருந்து குறைந்து எதிர்மறையாகவே இருக்கும்.
திட்ட வளிமண்டல அழுத்தத்தின் உள்ள ஒரு கரைசலின் நீரியல் திறனானது அக்கரைசலின் கரைபொருள் திறனுக்குச் சமமாகவே இருக்கும் (*w = *s).
2. அழுத்தம் உள்ளார்ந்த திறன் (*p) (Pressure Potential) : கரைபொருள் உள்ளார்ந்த திறனின் செயல்பாட்டிற்கு எதிராக செயல்படும் இயங்கு விசையை அழுத்தயியல் திறன் /அழுத்தம் உள்ளார்ந்த திறன் ஆகும். ஒரு செல்லில் அழுத்த இயல் திறன் அதிகரித்தால் நீரியல் திறனும் அதிகரிக்கும், எனவே நீர் செல்லுக்குஸ் சென்று செல் விறைப்புத் தன்மையினை அடைகிறது.
செல்லுனுள் உருவாகும் இவ்வகை நேர்மறை நீரியல் அழுத்தம் (Positive hydrostatic pressure), விறைப்பு அழுத்தம் எனப்படும்.
இதேபோன்று செல்லில் இருந்து நீர் வெளியேறுவதால் நீரின் உள்ளார்ந்த திறன் குறைகிறது. இந்நிலையில் செல் நெகிழ்வு நிலை(flaccid)அடைகிறது.
3.ஊடக உட்திறன் (*m) (Matric Potential) : செல்சுவரில் உள்ள நீரை ஈர்க்கும் கொல்லாய்டுகள் (hydrating colloid) அல்லது கூழ்மம் போன்ற அங்கக மூலக்கூறுகளுக்கும் நீருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு ஊடக உட்திறன் எனப்படுகிறது.
ஊடக உட்திறனை உள்ளீ ர்த்தல் அழுத்தம் (imbibition pressure) எனவும் அழைக்கலாம்.
ஊடக உட்திறன் அதிகபட்சமாக (எதிர்மறை அலகில்) உலர்ந்த பொருட்களின் காணப்படும்.
எடுத்துக்காட்டு: நீரில் ஊறவைத்த விதைகள் பொருக்கமடைதல் .
10.
(a)
சாறேற்றம்
11.
(a)
J.C
12.
(b)
சாறு
13.
(b)
பொது கரைப்பான்
14.
(a)
புகையூட்டம்
15.
(b)
விறைப்பழுத்தம் காரணமாக உணவு இடம்பெயர்தல்
16.
(a)
பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு
17.
(b)
18.
கனிமங்கள் நிலக்கரைசலின் கரைநிலை அல்லது மண்ணின் கூழ்மத் துகளுடன் இணைந்த நிலை என இரு வகையான அமைப்பில் காணப்படுகின்றன.
கனிமங்களின் உள்ளெடுப்பு நீரின் உள்ளெடுப்புடன் சேர்ந்தே நடைபெறுகிறது என முற்காலத்தில் தவறுதலாகக் கருதப்பட்டது. ஆனால் கனிமங்களின் உள்ளெடுப்பும் நீரின் உள்ளெடுப்பும் ஒன்றையொன்று சாராத இரு தனித்தனிச் செயல்களாக உள்ளன.
கனிமங்கள் வேர்தூவிகளால் மட்டும் உறிஞ்சப்படுவதில்லை, வேரின் புறத்தோல் அடுக்காலும் (எபிபிளமா) உள்ளெடுக்கப்படுகிறது.
19.
காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது நீராவிப்போக்கின் வீதம் வெகுவாகக் குறைகிறது.
இந்நிலையில் நீர் உறிஞ்சப்படும்போது தாவரத்தினுள் அதிகப்படியான நீர் சேர்ந்து வேர் அழுத்தத்தினை உருவாக்குகிறது.
இந்த அதிகப்படியான நீர் தாவர இலைகளின் விளிம்புகளில் நீராக வடிகிறது. இதுவே நீர் வடிதல் எனப்படுகிறது. எடுத்துக்காட்டு: புற்கள்.
20.
வளிமண்டல அழுத்தம்:
குறைந்த வளி மண்டல அழுத்தத்தில் நீராவிப்போக்கின் வீதம் அதிகரிக்கிறது.மலைப்பகுதியில் குறைந்த வளி மண்டல அழுத்தம் நிலவுவதால் அங்கு நீராவிப்போக்கின் வீதம் அதிகமாக இருக்க வேண்டும்.
ஆனால் அங்கு நிலவும் குறைந்த வெப்பநிலை இதனை ஈடுசெய்வதால் நீராவிப்போக்கின் வீதம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
21.

22.
நீரானது வேர்கள் வழியாக சைலத்திற்குள் பக்கவாட்டு வழியில் செல்வதை கற்றோம்.
இப்படத்தில் தாவத்திற்குள் நீர் பகிர்ந்தளிக்கும் இயங்கு முறையினை கற்க உள்ளோம்.
கிளை நதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஓர் ஆற்றை உருவாக்குவது போல, இலட்சக்கணக்கிலான வேர்தூவிகள் துளித்துளியாக நீரை உறிஞ்சி நீர் கடத்தும் பெருவழிச் சாலையான சைலத்தில் ஒன்று சேர்க்கின்றன.
23.
நீரியல் திறன் பற்றிய கருத்தாக்கம் ஸ்லேடையார் மற்றும் டெயிலர் ஆகியோரால் 1960 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நீரியல் திறன் என்பது ஒரே குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஒரு அமைப்பில் உள்ள நீரை, தூய நீரின் நீரியல் ஆற்றலுடன் ஒப்பிடுவதாகும்.
ஒரு அமைப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள் எந்த அளவிற்கு எளிதாக இடம்பெயர்கிறது என்பதை அளவிடும் குறியீடாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards