11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
கோபால்ட் குளோரைடு தாள் முறையில் மூலம் நீராவிப் போக்கு எவ்வாறு அளவிடப்படுகிறது?
2.
வேறுபடுத்து :வாஸ்குலக் கேம்பியம் மற்றும் கார்க் கேம்பியம்.
3.
தாவரத்திசுக்களின் வகைகளை அட்டவணைப்படுத்து.
4.
ஒரு நியூரானின் அமைப்பை படம் வரைந்து பாகம் குறி.
5.
நியூ ரோஹைபோஃபைசிஸ் ஹார்மோன்கள் குறிப்பு எழுதுக.
6.
நீண்டமைந்த மாதிரி எலும்பின் அமைப்பை படத்துடன் விவரி?
7.
இறால் வளர்ப்பு பற்றி எழுதுக.
8.
சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
9.
பசுங்கணிகம் முப்பரிமாண அமைப்பு மற்றும் பசுங்கணிகத்தின் உள்ளமைப்பு தோற்றம் ஆகியவற்றின் படம் வரைந்து பாகங்களை குறிக்க?
10.
B-DNA , A-DNA, Z-DNA வின் பண்புகளை ஒப்பிடு.
11.
செலானேசி குடும்பத்தாவரங்களின் பொருளாதார முக்கியத்துத்தை அட்டவணைப்படுத்து.
12.
தவளையின் செரிமான மண்டலத்தின் அமைப்பை விளக்குக.
13.
கனிகள் -கருத்துப்படம்.
14.
தண்டின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
15.
எளிய எபிதீலிய திசுக்களை படம் வரைந்து பாகம் குறி
16.
Rh ரத்தவகை - குறிப்பு எழுதுக.
17.
கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு பாகங்களை குறிக்கவும். படம்

18.
கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கிக் கீழ்க்கழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

அ) விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு.
ஆ) இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்தன்மை எத்தகையது?
இ) இவ்வுயிரியில் தலைக் காணப்படுகிறதா?
ஈ) இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
உ) இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்?
ஊ) இவ்விலங்கில் நரம்பு செல்கள் உள்ளனவா?
19.
நவீன மூலக்கூறுக்கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்தலாமா?
20.
உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக.
1.
கோபால்ட் குளோரைடு(CoCl2) தாள் முறை:
1. பசுமையானான மேல்கீழ் வேறுபாடுடைய இலை ஒன்றினைத் தேர்வு செய்து அதன் இரு புறத்தினையும் உலர்ந்த பஞ்சியினைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
2. இலையின் இரு புறத்தையும் உலர்ந்த கோபால்ட் குளோரைடு காகிதத் துண்டினால் மூடி அதன் மேல் கண்ணாடித் துண்டுகளை அசையாதவாறு பொருத்த வேண்டும்.
3. இந்த அமைப்பினை சிறிது நேரம் இடையூறின்றி வைக்கும்போது இலையின் அடிப்புறத்தோலில் உள்ள கோபால்ட் குளோரைடு தாள் இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதைக் காணலாம்.
4.இதற்குக் காரணம் இலைத்துளை வழியாக வரும் நீராவியினால் கோபால்ட் குளோரைடு தாள் நீரேற்றம் (CoCl2,2H2O or CoCl2.4H2O)பெறுவதேயாகும்.
5. மேலும் இவ்வாறான மேல்கீழ் வேறுபாடடைந்த இலையில் நீராவிப்போக்கின் வீதம் மேற்புறத்தோலை விட அடி புறத்தோலில் அதிகம் இருப்பதையும் அறியலாம்.
2.
| வாஸ்குலக் கேம்பியம் | கார்க் கேம்பியம் | |
|---|---|---|
| 1. | கேம்பியம் எனவும் அழைக்கப்படுகிறது. | ஃபெல்லோஜென் எனவும் அழைக்கப்படுகிறது. |
| 2. | இது தண்டில் புரோகேம்பியம் மற்றும் கற்றையிடைப் பாரங்கைமா செல்களிலிருந்து தோன்றுகிறது.வேரில் இணைப்பு பாரன்கைமா செல்கள் பெரிசைக்கிளிலிருந்தும் தோன்றுகிறது. | ஒரு படித்தான செல்களைக் கொண்டுள்ளது. |
| 3. | இது நீண்ட மற்றும் குட்டையான ரே தோற்றுவிகளை கொண்டுள்ளது. | ஒரு படித்தான செல்களைக் கொண்டுள்ளது. |
| 4. | இரண்டாம் நிலை ஃபுளோயத்தை வெளிப்புறத்திலும், இரண்டாம் நிலை சைலத்தை உட்புறத்திலும், இரண்டாம் நிலை சைலத்தை உட்புறத்திலும் தோற்றுவிக்கின்றன. | இது ஃபெல்லத்தை (கார்கி) வெளிப்புறத்திலும் ஃபெல்லடொம்மை (இரண்டாம் நிலைப் புறணி)உட்புறத்திலும் தோற்றுவிக்கின்றன. |
3.
| காணக்கூடிய பகுதி | பணி | இயல்பு | செல் அமைப்பு | சுவர் பொருள்கள் | |
| பாரங்கைமா | புறணி.பித் மெடுல்லா கதிர்கள் வாஸ்குலத் திசுக்களில் பொதிந்த திசுக்களாக | பொதிந்த திசுவாக, தங்குதல், வளிப் பரிமாற்றம், உணவு சேமிப்பு | உயிருள்ளது | முதன்மையாகச் செல்லுலோஸ் பெக்டின் | முதன்மையாகச் செல்லுலோஸ் பெக்டின் |
| கோலங்கைமா | இலை நடு நரம்பு மற்றும் தண்டின் புறணியின் மேற்பகுதி செல்களின் கோணங்களில் | தங்கு திறன் செயல்பாடு | உயிருள்ளது | நீண்டது, பல கோணமுடையது | முதன்மையாகச் செல்லுலோஸ், பெக்டின், ஹெமி செல்லுலோஸ் |
| ஸ்கிலிரங்கைமா (அ) நார்கள் |
இலை நடு நரம்பு மற்றும் தண்டின் புறணியின் மேற்பகுதி செல்களின் கோணங்களில் | தாங்குதிறன் செயல்பாடு | உயிருள்ளது | நீண்டது, பல கோணமுடையது | முதன்மையாகச் செல்லுலோஸ், பெக்டின், ஹெமி செல்லுலோஸ் |
| ஆ)ஸ்கிளிரைடுகள் | புறணி, பித் புளோயம் உறை பழங்களின் கல் செல்கள் மற்றும் விதை உறைகள் | தாங்கு திறன் செயல்பாடு | உயிரற்றது | பலவகையானவை கடினமானவை ஒத்த குறுக்களவு கொண்டவை | முதன்மையாக லிக்னின் |
| டிரக்கீடுகள் சைலக்குழாய் | வாஸ்குல தொகுப்பு | நீர், கனிம உப்புகள் கடத்துதல் | உயிரற்றது | நீண்டது, குழாய் போன்றது | முதன்மையாக லிக்னின் |
| ஃபுளோயம் சல்லடை குழாய்கள் | வாஸ்குல தொகுப்பு | கரிமப் கரைபொருட்கள் கடத்துதல் | உயிருள்ளது | நீண்டது, குழாய் போன்றது | செல்லுலோஸ் பெக்டின், ஹெமி செல்லுலோஸ் |
| துணைச் செல்கள் | வாஸ்குல தொகுப்பு | கரிமக் கரைபொருட்கள் கடத்துதல் | உயிருள்ளது | நீண்டது, குழாய் போன்றது | செல்லுலோஸ் பெக்டின் |
4.
1. நுண் அமைப்பு கொண்ட நியூரான்களில் மூன்று பெரும் பகுதிகள் உள்ளன. அவை செல் உடல், டென்ட்ரைட்டுகள் மற்றும் ஆக்ஸான் ஆகியவையாகும்.
2. செல் உடல்பகுதி, கோள வடிவத்திலும் அடிப்படை செல்லுக்குறிய அனைத்து உட்பொருட்களையும் கொண்டிருந்தாலும், சென்டிரியோல்கள் மட்டும் காணப்படுவதில்லை.
3. நியூரானை சுற்றியுள்ள பிளாஸ்மா சவ்விற்கு நியூரோலெம்மா என்றும் ஆக்ஸானின் பிளாஸ்மா சவ்விற்கு ஆக்ஸ்ஸோலெம்மா என்றும் பெயர்.
4. செல் உடலில் பல கிளைகளைக் கொண்ட குட்டையான இழைகள் காணப்படுகின்றன. இவை டென்ட்ரைட்டுகள் என்று அழைக்கப்டுகின்றன. இவை நரம்பு தூண்டல்களை செல் உடலை நோக்கி அனுப்புகின்றன.செல் உடலன்மற்றும் டென்ட்ரைட்டுகளில் சைட்டோபிளாசம் காணப்படுகிறது.மேலும் நிஸ்ஸல் துகள்களைப் கொண்ட என்டோபிளாச வளையும் உள்ளது.
5. செல்லின் உடலின் கூம்பு வடிவப் பகுதியான ஆக்ஸான் மேட்டிலிருந்து உருவாகும் நீண்ட இழையே ஆக்ஸான் ஆகும். இதன் முனைப் பகுதி சிறு கிளைகாலிக் கொண்டது.
6. இயக்கு நியூரான்களில், ஆக்ஸான்மேட்டிலிருந்து தான் நரம்பு தூண்டல் தோற்றுவிக்கப்படுகிறது.
7. நியூரானின் மற்ற இரு பகுதிகளைப் போலவே செல் உட்பொருட்களைக் கொண்டிருந்தாலும் ஆக்ஸானில் கோல்கை உறுப்புகளும் நிஸ்ஸல் துகளும் இல்லை.
8. ஆக்ஸான்களில் குறிப்பாகக் புரா நரம்பு மண்டலத்திலுள்ள ஆக்ஸான்களின் மேற்புறத்தைக் கிளியால் செல்களின் ஒரு வகையான ஷிவான் செல்கள் சூழ்ந்துள்ளன. இது மயலின் உறையை உருவாக்குகிறது.
9. ஆக்ஸான்களில் மட்டுமே இவ்வுறை உண்டு.டென்டிரைடுகள் எப்போதுமே மயலின் உரை அற்றவை ஆகும். ஆக்ஸானில் உள்ள மயலின் உறை தொடர்ச்சியாகக் காணப்படுவதில்லை.
10. அடுத்தடுத்த ஷிவான் செல்களுக்கிடையே சிறு இடைவெளி உண்டு. இதற்கு ரான்வியர் கணு என்று பெயர். மயலின் உறைகளைக் கொண்ட நீண்ட நரம்பிழைகளில் நிதானமாகவே தூண்டல்கள் கடத்தப்டுகின்றன.
11.ஆக்ஸானின் சேய்மை முனையின் ஒவ்வொரு கிளையும் குமிழ் போன்ற முடிச்சில் முடிகிறது.
12.ஆக்ஸான்கள் -செல் உடலிருந்து பெறும் தூண்டல்களை நரம்பு-தசை சந்திப்பிற்கு கடத்துகின்றன.
5.
1. ஹைபோதலாமஸின் நரம்பு சுரப்பு செல்களால் சுரக்கப்பட்டு கீழ்வரும் இரு ஹார்மோன்களும் நியூரோஹைபோஃபை சிஸில் சேமிக்கப்படுகின்றன.
வாஸோப்ரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரடிக் ஹார்மோன்(ADH)
2. பெப்டைடு ஹார்மோனான ADH, நெஃப்ரான்களின் சேய்மை சுருள் நுண்குழல் பகுதியில் நீர் மற்றும் மின்பகு பொருட்கள் மீள உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது.
3. இதனால் சிறுநீர் மூலமாக நீரிழப்பு குறைகிறது.
4. எனவே இதற்கு ஆன்டிடையூரடிக் ஹார்மோன் (சிறு நீர் பெருக்கெதிர் ஹார்மோன்) என்றும் பெயர். இந்த ஹார்மோனின் மிகை உற்பத்தி இரத்தக் குழல்களைச் சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை உயர்த்துகின்றது. இதன் குறை சுரப்பால் டையபடிஸ் இன்சிபிடஸ் எனும் மிகை சிறுநீர் உற்பத்தி நிலை ஏற்படும்.
ஆக்ஸிடோசின்
5. இந்தப் பெப்டைடு ஹார்மோன் குழந்தை பிறப்பின்போது கருப்பையை தீவிரமாகச் சுருங்கச் செய்வதுடன் பால் சுரப்பிகளில் பால் உற்பத்தி மற்றும் வெளியேற்றத்தைத் தூண்டுகிறது.
6. ஆக்ஸிடோசின் என்பதற்கு துரிதப் பிறப்பு என்பது பொருள்.
6.
7.
8.
1. ஆக்சின் (IAA) இருக்கும்போது செல் பகுப்பை தூண்டுகிறது.
2. ஒளி உணரும் தன்மை பெற்ற விதைகளில் அதன் உறக்கத்தை நீக்கி முளைக்கும்படி செய்கிறது. எடுத்துக்காட்டு : புகையிலைத் தாவரம்.
3. ஆக்சின் இருக்கும் போது, பட்டானி தாவரத்தில் பக்க மொட்டுகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது.
4. சைட்டோகைனின் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சி அடையச் செய்து தாவரங்கள் வயதாவதை தாமதப்படுத்துகிறது. இதற்கு ரிச்மாண்ட் லாங்க் விளைவு என்று பெயர்.
5. சைட்டோகைனின் புரத சேர்க்கை வீ தத்தை அதிகப்படுத்தவும் கற்றை இடைக்கேம்பியம் உருவாதலைத் தூண்டவும் , புதிய இலைகள் , பசுங்கணிகம் மற்றும் பக்க கிளைகள் உருவாதலை தூண்டவும் உதுவுகிறது.
9.


10.
| பண்புகள் | B-DNA | A-DNA | Z-DNA |
|---|---|---|---|
| திருகுச்சுருள் வகைகள் | வலப்புறம் | வலப்புறம் | இடப்புறம் |
| திருகுசுருள் விட்டம் (nm) | 2.37 | 2.55 | 1.84 |
| ஒவ்வொரு கார் இணையின் உயர்வு | 0.34 | 0.29 | 0.37 |
| ஒரு முழுத் திருப்பத்திற்கு உண்டான தொலைவு (இடைநிலையளவு)(nm) | 3.4 | 3.2 | 4.5 |
| ஒரு முழுத் திருப்பத்திற்குப் கார இணைகளின் எண்ணிக்கை | 10 | 11 | 12 |
| முதன்மை பள்ளம் வடிவமைப்பு | அகலமானது ஆழமானது | குறுகியது,ஆழமானது | தட்டையானது |
| சிறு பள்ளம் வடிவமைப்பு | குறுகியது, ஆழமற்றது | அகலமானது,ஆழமற்றது | குறுகியது,ஆழமானது |
11.
| வ.எண் | பொருளாதரா முக்கியத்துவம் | இரு சொற்பெயர் | பயனுள்ள பாகங்கள் | பயன்கள் |
|---|---|---|---|---|
| 1. | உணவத் தாவரங்கள் | சொலானம் டியூபரோசம் (உருளை க்கிழங்கு ) | தரைக்கீழ்த் தண்டு கிழங்கு | காய்கறியாகப் பயன்படுத்தப் படுகிறது மற்றும் தர்சம் தயாரிக்கப்படுகின்றது |
| லைக்கோ பெர்சிகான் எஸ்குலெண்டம் | முதிர்ந்த கனி | சுவைமிகு காய்கறியாகப் பயன்படுத்தப் படுகிறது மற்றும் சமைக்காமலும் சாப்பிடலாம். | ||
| சொலானம் மெலாஞ்சி னா (கத்திரிக்காய் ) | இளங்கனி | சமைத்து உண்ணப்படும் காய்கறியாகப் பயன்படுத்தப் படுகிறது | ||
| காப்சிகம் அன்னுவம் (ஊ சிமிளகாய் ) காப்சிகம் ப்ரூட்ட சென்ஸ் (மிளகாய்) | கனிகள் | உணவாகப் பயன்படுகிறது காய்ந்த மிளகாய்லி ருந்து அரைத்துத் தயாரிக்கப்படும் .உலர் பொடி பலவகை உணவின் காராச்சு வையினை அளிக்கப் பயன்படுகிறது. | ||
| ஃபைசாலிஸ் பெருவியானா (கேப்நெல்லி /சொடக்கு தக்காளி ) | கனி | சுவைமிக்க கனியாக பய்னபடுகிறது | ||
| 2 | மருத்துவத் தாவரங்கள் | அட்ரோபா பெல்லடோனா | வேர்கள் | இதன் வேரிலிருந்து பெறப்படும் சக்தி வாய்ந்த அல்கலாய்டு பெல்லடோனா தசைவலியை நீக்கப் பயன்படும் பிளாஸ்டர், டிங்ச்சர் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகிறது.மேலும் கண்பரிசோதனையில் கண்பாவை (கண்மணி ) விரிவடையச் செய்யல் பயன்படுகிறது |
| டாட்டூரா ஸ்ட்ராமோனியம் | இலை மற்றும் வேர் | தாவர இலை மற்றும் வேரிலிருந்து எடுக்கப்படும் ஸ்ட்ராமோனியம் என்ற மருந்து ஆஸ் தூம மற்றும் கக்குவான் இருமலுக்கு மருந்தாக பயன்படுகிறது. | ||
| சொலானம் ட்ரைலோ பேட்டம் |
இலைகள் மலர்கள் மற்றும் சதைக்கனிகள் |
இருமலுக்கு மருந்தாகப் பயன் படுகிறது | ||
| வைத்தானியா சாம்னி ஃ பெரா | வேர்கள் | இருமலுக்கு வாத நோய்க்கும் மருந்தாக பயன் படுகிறது. | ||
| 3. | புகையிலை | நிக்கோட்டி யானா டொபக்கம் | காய்ந்த இலைகலிருந்து பெறப்படும் புகையிலை | இத் தாவர இலைகளில் நிக்கோட்டின் , நூர் நிக்கோட்டின் மற்றும் அனபேசின் போன்ற அல்கலாய்டு உள்ளன.சிக்ரெட் , பீடி , குழாய் உறிஞ்சுகுழல் , குட்கா போன்றவைகளிலும் மென்று சுவைப்பதற்கு , மூக்குப் பொடி தயாரிப்பிலும் புகையிலை முதன்மையான பொருளாகப் பயன்படுகிறது. |
| 4 | அலங்காரத் தாவரங்கள் | செஸ்ட்ரம் , டையூர்னம் (பகல் மல்லி ) செஸ்ட்ரம் நாக்டர்னம் (இரவு மல்லி ) நிக்கோட் டி யானா , அப்லேட் டா , பெட்டுனியா ஹைபிரிடா , ஷைசான்தஸ் பின்னேட்டஸ் , ப்ருக் மேன்சியா சிற்றினம் | தாவரம் | இத்தாவரங்கள் அழகாக இருப்பதால் அலங்காரத்திற்காகத் தோட்டங்களில் வளர்க்கப் படுகின்றன. |
12.
1. தவளையின் உணவுப்பாதை வாய் முதல் மலவாய் வரையில் நீண்டுள்ளது.
2. இது வாய் வாய்க்குழி தொண்டை உணவுக்குழல் இரைப்பை முன் மற்றும் பின் சிறுகுடல் மலக்குடல் பொது கழிவுத்துளை ஆகிய பகுதிகளை கொண்டது.
3. உணவுப் பாதை பொதுப்புழை வழியே வெளியே திறக்கிறது.
4. அகன்ற பெரிய வாய், வாய்குழியில் திறக்கிறது.
5. தசையாலான ஓட்டும் தன்மை கொண்ட நாக்கு வாய்குழியின் தரைப்பகுதியில் இணைந்தும் பின்பகுதி இணையாமலும் உள்ளது.
7. நாக்கின் நுனி பிளவுபட்ட முனையை கொண்டுள்ளது.
8. பூச்சிகள் உள்ளிட்ட இரையை கண்டவுடன் மிக விரைவில் நீளும் நாக்கில் இறை ஒட்டிக்கொண்டவுடன் நாக்கு உடனடியாக வாயினுள் இழுக்கப்பட்டு வாய் மூடப்படுகிறது.
9. மேல்தாடையின் உட்பகுதியில் கூர்மையான சிறிய மேல்தாடைப் பற்கள் ஒற்றை வரிசையில் அமைந்துள்ளன.
10. இதைத்தவிர இதைத்தவிர உள்நாசித்துவாரங்களின் அருகில் இரண்டு தொகுதி வோமரைன் பற்கள் உள்ளன.
11. கீழ்த்தாடை பற்களற்றது.
12. வாய், வாய்பகுழியிலும் வாய்க்குழி தொண்டை வழியாக உணவுகுழலிலும் திறக்கிறது.
13. குட்டையான உணவுக்குழல் இரைப்பையில் முடிகிறது.
14. மலக்குடல் வழியாக இறுதியில் பொதுக்கழிவறையில் திறக்கிறது.
15. கல்லீரலில் சுரக்கப்படும் பித்த நீர் பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது.
16. கணையத்தில் சுரக்கப்படும் கணைய நீரில் நொதிகள் உள்ளன.
17. பிளவுபட்ட நாக்கினால் பிடிக்கப்பட்ட உணவு இரைப்பை சுவரினால் சுரக்கப்படுகிற HCl அமிலம், மற்றும் இரைப்பை நீரினால் செரிக்கப்படுகிறது.
18. ஓரளவிற்கு செரிக்கப்பட் உணவான இரைப்பைபாகு இரைப்பையிலிருந்து முன் சிறுகுடலுக்குள் செலுத்தப்பட்டுள்ளது.
19. முன் சிறுகுடல் கல்லீரலிருந்து கணைய நீரையும் பொதுநாளம் வழியாக பெறுகிறது.
20.பித்தநீர் கொழுப்பை பால்மமடையச் செய்கிறது.
21. கார்போஹைடிரேட் புரதம் மற்றும் கொழுப்பை சிரிக்க கணைய நீர் உதவுகிறது.
22. குடல்சுவரில் உள்ள விறல் போன்ற குடலுறிஞ்சிகள் மற்றும் நுண் குடலுறிஞ்சிகள் செரித்த உணவை உட்கிரகிக்கின்றன
23. செரிக்காத திடக்கழிவுகள் மலக்குடல் வழியாகப் பொதுக் கழிவறைக்கு கடத்தப்படுகிறது.
24. அங்கிருந்து பொதுக்கழிவுத்துளை வழியாக கழிவுகள் வெளியேறுகின்றன.
13.
14.
பெரும்பாலானலான பூக்கும் தாவரங்கள் நிமிர்ந்து நேர் அச்சில் வளர்கின்ற தண்டினைக் கொண்டவை. இத்தகைய தண்டுகள் 1. கூம்புவடிவ, 2. கிளை பரவிய, 3. கிளையற்ற மற்றும் 4. குழல் தண்டு கொண்டவை என வகைப்படுத்தப்படுகின்றன.
1. கூம்பு வடிவ மரங்கள் (Excurrent):
இவ்வகை மரங்கள் தொடர்ந்து வளரும் மைய அச்சினையும் படிப்படியாக நுனி நோக்கி நீளம் குறைந்த பக்கக் கிளைகளையும் கொண்டவை. இதன் விளைவாக இம்மரங்கள் கூம்பு வடிவத்தில் காணபப்டுகின்றன . எ.கா: முனுன் லான்ஜிஃபோலியம் (பாலியால்தியா லான்ஜிஃபோலியா -நெட்டிலிங்கம்), கேசுரைனா (சவுக்கு)
2. கிளை பரவியவை (Decurrent or Deliquescent):
இவ்வகை மரங்களில் பக்கக்கிளைகள் மைய அச்சைக் காட்டிலும் தீவிர வளர்ச்சியைக் கொண்டவை. இதனால் மரத்தின் வடிவம் பரந்து விரிந்தோ வட்டமாகவோ காணபப்டும். எ.கா: மாஞ்சிஃபெரா இண்டிகா (மா) அசாடிராக்டா இண்டிகா (வேம்பு), டாமரிண்டஸ் இண்டிகஸ் (புளிய மரம்), ஏகில் மார்மிலஸ் (வில்வ மரம்)
3. கிளையற்றவை (Caudes): இவை கிளைகளற்ற பருத்த, உருண்ட, தண்டில் நிலையான வீழ் இலைத் தழும்புகளைக் கொண்ட மரங்களாகும். எ.கா: காக்கஸ் நியுசிஃபெரா (தென்னை), பெராஸ் ஃபிளாபெல்லிஃபெர்மிஸ் (பனை மரம்), அரிக்கா கட்டிச்சு (பாக்கு மரம்).
4. குழல் தண்டு (Culm):
தெளிவான கணுக்களையும், இலை உறைகளால் சூழப்பட்ட பெரும்பாலும் உள்ளீடற்ற கணுவிடைப் பகுதிகளையும் கொண்ட தண்டினைக் சூழல் தண்டு என்பர். எ.கா: மூங்கில் உட்பட பெரும்பாலான புல் வகைகள்.
15.
16.
1. Rh காரணி எனும் புரதம் இரத்தச் சிவப்பணுக்களின் மேற்பரப்பில் காணப்படுகிறது.
2. இது ரீசஸ் குரங்கின் இரத்தச் சிவப்பணுக்களில் உள்ள புரதத்தை ஒத்துக் காணப்படுவதால் இவை Rh காரணி எனப் பெயரிடப்பட்டது.
3. இரத்தச் சிவப்பணுக்களின் மேற்பரப்பில் இந்த D ஆன்டிஜன் காணப்பட்டால் அவர்கள் Rh+ மனிதர்கள் எனவும் D ஆன்டிஜன் அற்றவர்கள் Rh- மனிதர்கள் எனவும் கருதப்படுவர்.
4. ஒருவருக்கு இரத்தம் செலுத்தும் முன்பு இந்த Rh காரணி பொருத்தத்தையும் பரிசோதிக்க வேண்டும்.
5. ஒரு Rh- தாய், Rh+ கருவைச் சுமக்கும் போது திசுப் பொருந்தநிலை ஏற்படுகிறது.
6. முதல் கருத்தரிப்பின் போது கருவின் Rh+ ஆன்டிஜன்கள் தாய்சேய் இணைப்புத் திசுவால் பிரிக்கப்டுவதால் தாயின் இரத்தத்தோடு அவை தொடர்பு கொள்ளவாய்ப்பிலை.
7. இருந்த போதும், முதல் குழந்தை பிறப்பின்போது கருவின் Rh+ ஆன்டிஜென்களில் சிறிதளவு தாயின் இரத்தத்தில் கலப்பதால், தாயின் உடலில் D எதிர்வினைப் பொருட்களின் உற்பத்தி தொடங்குகின்றது.
8. அடுத்த குழந்தைக்காகக் கருத்தரிக்கும் போது Rh- தாயிடமிருந்து Rh+ எதிர்வினைப் பொருட்கள் கருவின் இரத்த ஓட்டத்தில் கலந்து கருவின் சிவப்பணுக்களை அழிக்கின்றன.
9. எனவே கருவானது இறக்க நேரிடுகிறது.
10. இரத்தசோகை மற்றும் மஞ்சள் காமாலை போன்ற குறைப்பாடுகளால் அக்கரு பாதிக்கப்படுகிறது.
11. இதற்கு காரணமாகும் நிலைக்கு எரித்ரோபிளஸ்டோஸிஸ்ஃபீடாலிஸ் என்று பெயர்.
12. இந்நிலையைத் தவிர்க்க முதல்பிரசவத்திற்குப் பின் உடனடியாக Rh நெகட்டிவ் தாய்க்கு D ஆன்டிபாடிக்கான எதிர்வினைப் பொருளான ரோக்கம் என்னும் மருந்தை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும்.
17.
A - வலது, இடது, கல்லீரல் நாளம்,
B - பொது பித்த நீர் நாளம்,
C - கணைய நாளம்
D - கல்லீரல் கணைய நாளம்|
E - சிஸ்டிக் நாளம்.
18.
அ. கடல் சாமந்தி (ஆடம்கியா) (தொகுதி: நிடோரியா)
ஆ. இருபக்க சமச்சீரமைப்புடைய விலங்கு
இ. தலை காணப்படவில்லை
ஈ. ஈரடுக்கு கொண்ட உயிரி
உ. ஒன்று மட்டும் (வாய் அல்லது ஹைப்போஸ்டோம்).
ஊ. வலைப் பின்னல் அமைப்பாக பரவியுள்ள மிக எளிய நரம்பு மண்டலம் உள்ளது.
19.
1. புதிய தொழில் நுட்பங்களின் வளர்ச்சி, பாரம்பரிய வகைப்பாட்டுக் கருவியிலிருந்து மூலக்கூறு அளவிலான வகைபாட்டுக் கருவிகளை உருவாக்க உதவியுள்ளன. அதிகத் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை இம்முறைகளின் சிறப்பம்சங்களாகும். கீழ்கண்ட முறைகள் வகைப்பாட்டியலில் பயன்படுத்துகின்றன.
2. ஒரு உயிரியின் டி.என்.ஏ வில் உள்ள குறுகிய மரபுக் குறியீடுகளை வைத்துக் கொண்டு அவ்வுயிரினம் குறிப்பிட்ட சிற்றினத்தைச் சார்ந்ததா என்று அறிய டி.என்.ஏ வரிக்குறியீடு (DNA barcoding) தொழில் நுட்பம் உதவுகிறது.
3. ஒரு மரபு குழுமத்தில் உள்ள ஜீன்களுக்கிடையேயான ஒற்றுமை வேற்றுமைகளை, டி.என்.ஏ வரிசை அமைப்பு மூலம் கண்டறிய, டி.என்.ஏ கலப்பு ஆக்கம் (DNA hybridization) எனும் தொழில் நுட்பம் உதவுகிறது.
4. டி.என்.ஏ வில் உள்ள சிறப்பு அமைப்புகளை அறிந்து ஒப்பிடுவதன் மூலம், உயிரியை அடையாளம் காண, டி.என்.ஏ கைரேகை தொழில் நுட்பம் (DNA Finger printing) உதவுகிறது.
5. ஒத்தமைவு டி.என்.ஏ மூலக்கூறுகளின் வரிசை அமைப்பில் உள்ள வேற்றுமைகளை, டி.என்.ஏ மாதிரிகளைப் பல துண்டங்கள் ஆக்குவதன் மூலம் அறிய இயலும். இம்முறைக்கு வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வு (Restriction Fragment Length polymorphisms analysis) என்று பெயர்.
6. ஒற்றை ஜீனையோ அல்லது ஜீனின் பகுதியையோ பாலிமரஸ் சங்கிலி வினையை (PCR) பயன்படுத்தி, பெருக்கி பின் அதனை வகைபாட்டுக் கருவியாக பயன்படுத்தலாம்.
20.
உலகில் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகள் அதிகமாக பயன்பாட்டில் இல்லை. காலங்கள் கடந்தாலும் அதன் எழுத்துக்கள் மற்றும் அமைப்பு மாறாத காரணத்தினால் உயிரியல் சொற்கள் இன்றும் அம்மொழியில் தான் உள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards