11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/12/2018
11th Biology - Important 2 mark questions
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தாது கலந்த கார்டிகாய்டு ஹார்மோன் பற்றி குறிப்பு வரைக.
2.
சேண மூட்டு என்பது யாது?
3.
டூயூராமேட்டர் கீழ் இடைவெளி என்றால் என்ன?
4.
வோல்டினிசம் என்றால் என்ன? அவை யாவை?
5.
கார்டிகல் நெஃப்ரான்கள் என்பது யாது?
6.
பைருவேட் ஆக்ஸிஜனேற்றம் என்றால் என்ன?
7.
அலுமினியம் நச்சுத்தன்மை என்றால் என்ன?
8.
விவசாயத்தில் ஏத்திலினின் பங்கு யாது?
9.
சாந்தோஃபில்கள் பற்றி எழுதுக.
10.
பெரிடர்ம் என்றால் என்ன?
11.
இலைத்துளையின் அமைப்பு பற்றி எழுதுக.
12.
அகத்தோல் என்றால் என்ன?
13.
மனிதனின் G0 நிலையில் காணப்படும் செல்கள் யாவை?
14.
தாவர செல்லினுள் புதிய கனிமங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?
15.
மனித மற்றும் தாவர செல்லில் காணப்படும் நீரின் அளவுகள் யாது?
16.
என்டிரோகைனேஸின் மற்றும் டிரிப்ஸினின் வேலை யாது?
17.
பாலிசைக்ளிக்ஸ்டீல் என்பது யாது?
18.
தாடையுடைய விலங்கு பிரிவில் காணப்படும் மேல் வகுப்பு யாவை?
19.
கிழங்குகளில் 'கண்கள்' என்பது எதனைக் குறிக்கிறது?
20.
ஆக்ஸிஜன் ஹீமோகுளோபின் பிரிகை வளைவு என்பது யாது?
21.
கனிவளர் புல்லி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
22.
மான்டிபுலேட் வாய் உறுப்புகள் என்றால் என்ன?
23.
உயிரினங்களில் பாலிலா இனப்பெருக்கம் நடைபெறும் முறைகளைக் கூறு.
24.
ருமாட்டிக் இதய நோய் என்பது யாது?
25.
சதைப்பற்றுள்ள தாவரங்களில் சுவாச ஈவு மதிப்பு பூஜ்யம்.ஏன்?
26.
ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?
27.
குடும்பம் என்றால் என்ன?
28.
வகைப்பாட்டின் பெரும் படிநிலைகளைக் குறிப்பிடுக.
29.
உறுப்பு மண்டலம் என்றால் என்ன?
30.
தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பின் பெயர்களைக் கூறு
31.
டெட்டனி எவ்வாறு ஏற்படுகிறது?
32.
உடல் சமநிலைப் பேணுதல் (ஹோமியோஸ்டாசிஸ்) பற்றி எழுதுக.
33.
சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?
34.
மனிதரில் கார்னியா மற்றும் சிகிக்சை பொதுவாக நிராகரிக்கப்படுவதில்லை.ஏன்?
35.
சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?
36.
37.
இரத்தம் ஏன் தனித்துவமான இணைப்புத்திசு என்றழைக்கப்படுகிறது?
38.
உணவு விழுங்கப்படும் போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது?
39.
பயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டிரீயாவிலிருந்து வேறுபடுத்துக.
40.
உயிருள்ள திசுக்களில் சிறு மூலக்கூறுகளின் எடையை க் கொண்ட கரிமச் சேர்மங்களை வரை ப்ப டம் வாயிலாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது எந்தப் பிரிவைச் சார்ந்தவை என்று கண்டுபிடித்து அதிலுள்ள “X” என்ற வெற்றிடத்தில் பொருத்துக.

| பிரிவு | சேர்மம் |
| கொலஸ்டிராஸ் | குவானைன் |
| அமினனோ அமிலம் | NH2 |
| நியூக்ளியோடைடு | அடினைன் |
| நியூக்ளியோசைடு | யூராசில் |
41.
இருவிதையிலைகளையும் கோப்பை வடிவப் பூத்தளத்தையும் கொண்ட தாவரங்களை எவ்வாறு வகைப்படுத்துவாய்
42.
கீழ்கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக
அ) ஒரு வளமற்ற மகரந்தத்தாள்
ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள்
இ) அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்
43.
44.
ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.
45.
கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?
46.
நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?
47.
மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
48.
புரோட்டோபிளாச கோட்பாட்டைக் கூறுக.
49.
வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?
50.
பிரையோஃபைட்களின் கருவுறுதலுக்கு நீர் அவசியம் என்ற கருத்தை ஏற்கிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.
51.
பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?
52.
வறட்சி நிலையில் தாவரங்கள் எதிர்கொள்ளும் சேயலியல் விளைவுகள் யாவை?
53.
பெரும்பாலான விலங்குகளில் காணப்படும் பொதுவான நான்கு பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.
54.
மிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வுகளை வேறுபடுத்துக.
1.
கார்டெக்ஸின் வெளிப்பகுதியான மெல்லிய சோனா குளோமரூலோசா (சுமார் 15 மூ) பகுதி தாது கலந்த கார்டிகாய்டு ஹார்மோனைச் சுரக்கின்றது.
2.
மணிக்கட்டு எலும்பு மற்றம் உள்ளங்கை எலும்பிற்கும் இடையேயான மூட்டு.
3.
அரக்னாய்டு படலத்திற்கும் டூயூராமேட்டருக்கும் இடையேயுள்ள குறுகிய இடைவெளிக்கு டூயூராமேட்டர் கீழ் இடைவெளி என்று பெயர்.
4.
மல்பெரி வகை பட்டுப்புழுக்கள் ஒரு வருடத்தில் எத்தனை முறை இனப்பெருக்கத் தலைமுறையைத் தோற்றுவிக்கின்றன என்பதன் (இது வோல்டினிசம் என்று அழைக்கப்படுகிறது) அடிப்படையில் மூன்று வகை பட்டுப்புழு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை யூனிவோல்டைன் (ஆண்டுக்கு ஒரு தலைமுறைகள்) பைவோல்டைன் (ஆண்டுக்கு இருதலைமுறைகள்) மற்றும் மல்டிவோல்டைன் (இரண்டுக்கும் மேற்பட்ட தலைமுறைகள்) ஆகியவையாகும்.
5.
அனைத்து நெஃப்ரான்களும் பூரணிப்பகுதியில் தோன்றுகின்றன.
ஆனால் கரடிகள் நெஃப்ரான் கிளாமருலஸ்கள் காரடெக்சின் வெளியிடுக்கில் உள்ளன.
நுண்குழல் இரத்த நுண் நாளங்கள் வாசா ரெக்டாவை உருவாக்காது.
6.
சைட்டோபிளாசத்தில் கிளைக்காலைசிஸ் நிகழ்ச்சியால் உருவான இரண்டு பைருவேட் மூலக்கூறுகள் மைட்டோகாண்ட்ரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியினுள் நுழைகிறது. காற்று சுவாசத்தின் போது பைருவேட், இணை நொதி ஹ(CoA) மற்றும் பைருவேட் டிஹைட்ராஜினேஸ் நொதி கூட்டமைப்பு ஆகியவற்றால் அசிட்டைல் CoA வாக மாற்றப்படுகிறது.
7.
(i) அலுமினியத்தின் நச்சுத்தன்மை காரணமாக நியூக்ளிக் அமிலமானது வீழ்ப்படுகிறது.ஹைகூஞயேஸ் நொதியின் செயல்பாடு தடைபடுகிறது.
(ii) செல் பகுப்பை தடை செய்தல் மற்றும் பிளாஸ்மா சவ்வுடன் கால்மோடுலின் பிணைவதைத் தடுக்கிறது.
8.
1. மா, பைன் ஆப்பிள் தாவரங்களைத் தவிர மற்ற தாவரங்களில் மலர்கள் உருவாதலை தடை செய்கிறது.
2. பெண் மலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.ஆண் மலர்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
9.
(i) மஞ்சள் நிறமிகளான (C40H56O2) இவை கரோடினை போன்றவை ஆனால் கூடுதலாக ஆக்ஸிஜன் பெற்றவை.
(ii) லியூட்டின் நிறமியானது இலையுதிர் கால இலைகளின் மஞ்சள் நிறமாற்றத்திற்கு காரணமாக உள்ள சாந்தோஃபில் நிறமி.
10.
(i) இரண்டாம் நிலை வளர்ச்சியினால் தண்டும் வேறும் தடிமனில் அதிகரிக்கும் பொழுது, இரண்டாம்நிலை தோற்றத்தின் போது உருவாக்கப்படும் பாதுகாப்பு அடுக்கான பெரிடர்ம், புறத்தோல் மட்டுமின்றி முதல்நிலை புராணிக்குப் பதிலீடாக அமைகிறது. பெல்லம் (phellem), ஃபெல்லோஜென் (phellogen), ஃபெல்லோடெர்ம் (phelloderm) ஆகியவைகளை உள்ளிடக்கியதே பெரிடர்ம் ஆகும்.
11.
இலைகளின் புறத்தோல் மற்றும் பசுமையான தண்டில் காணப்படும் எண்ணற்ற சிறிய துளைகள் இலைத்துளைகள் (Stomata) எனப்படும்.
இலைத்துலையின் நீளம் மற்றும் அகலம் முறையே 10-40 மைக்ரான் மர்றும் 3-10 மைக்ரான் ஆகும்.
முதிர்ந்த இலைகளில் ஒரு சதுர மில்லி மீட்டருக்கு 50 முதல் 500 என்ற எண்ணிக்கையில் இவை காணப்படும்.
12.
(i) புறணியின் கடைசியடுக்கு அகத்தோல் ஆகும்.
(ii) இது புறணியை ஸ்டீலிருந்து பிரிக்கிறது. அகத்தோல் ஓரடுக்கு பீப்பாய் வடிவ, செல் இடைவெளிகள் அற்று நெருக்கமாக அமைந்த பாரங்கைமா செல்களாலானது.
13.
1.முதிர்ந்த நியூரான்(நரம்பு செல்)
2. எலும்புத் தசை
14.
கணிகங்கள் பிளவுறுதல் மூலம் பெருக்கம் அடைகின்றன.
15.
1.மனித செல் = 70%
2.தாவர செல் = 95%
16.
1. செயல்படாத டிரிப்ஸினோஜனை செயல்படும் டிரிப்ஸினாக மாற்றுகிறது
2. டிரிப்ஸினோஜன்
டிரிப்ஸின்
17.
இவ்வகை ஸ்டீலில் வாஸ்குலத் திசுக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வளையங்களாகக் காணப்படுகிறது.எ.கா.டெரிடியம்.
18.
மேல்வகுப்பு 1. மீன்கள்
மேல்வகுப்பு 2. நான்கு காலிகள்
19.
1. உருளைக்கிழங்கில் பல கோண மொட்டுகள் அமிழ்ந்து காணப்படுகின்றன.
2. இக் கோண மொட்டுகளுக்கு கண்கள் என்று பெயர்.
20.
1. ஆக்ஸிஜன் பகுதி அழுத்தத்திற்கு எதிராக ஹீமோகுளோபினின் O2 னின் செறிவு விழுக்காட்டை வரைபடத்தில் வரையும் போது சிக்மாய்டு ('S' வடிவ) வடிவ வளைவு கிடைக்கிறது.
2. இதற்கு ஆக்ஸிஜன் ஹீமோகுளோபின் பிரிகை வளைவு என்று பெயர்.
21.
1. இவ்வகை மலர்களில் புல்லி வட்டம் நிலையானவை.
2. கனி உருவாகும் போது தொடர்ந்து வளர்ந்து கனியை முழுவதும் அல்லது பகுதியை மூடியிருக்கும். இதற்கு கனிவளர் புல்லி எனப்படும்.
எ.கா: பைசாலிஸ்.
22.
1. கரப்பான்பூச்சியின் வாய் உறுப்பிலுள்ள இணையுறுப்புகள் கடித்துமென்று உண்ணும் வகை சார்ந்தது.
2. இவ்வகை வாய் உறுப்பிற்கு மான்டிபுலேட் வாய் என்று பெயர்.
23.
| முறைகள் | எடுத்துக்காட்டுகள் | |
|---|---|---|
| 1. | கொனிடியங்கள் | ஆஸ்பர்ஜில்லஸ் |
| 2. | மொட்டுவிடுதல் | ஹைட்ரா,ஈஸ்ட் |
| 3. | இரு பிளவுறுதல் | பாக்டீரியா, அமீபா |
| 4. | துண்டாதல் | ஸ்பைரோகைரா |
| 5. | புரோட்டோனிமா | மாஸ்கள் |
| 6. | மீளுருவாக்கம் | பிளனேரியா |
24.
1. ருமாட்டிக் காய்ச்சல் ஒரு சுயத் தடைக்காப்பு குறைபாட்டு நோயாகும்.
2. ஒருவரின் தொண்டைப்பகுதியில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டிரிங்கள் தாக்குவதால் இந்நோய் தோன்றுகிறது.
3. தொற்று ஏற்பட்ட 2-4 வாரங்களில் ருமாட்டிக் காய்ச்சல் ஏற்படுகிறது.
25.
சில சதைப்பற்றுள்ள தாவரங்களான ஒபன்ஷியா, பிரையோஃபில்லம் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் பகுதியாக ஆக்சிஜனேற்றமடைந்து கரிமஅமிலமாகக் குறிப்பாக மாலிக் அமிலமாக மாறுவதால் இத்தாவரங்களின் சசுவாசித்தில் CO2வெளியிடுவதில்லை ஆனால் O2பயன்படுத்தப்படுகிறது. இதில் சுவாச ஈவு மதிப்பு சுழியாக உள்ளது.
26.
ஸ்கிலிரன்கைமா செல்கள் புரோட்டா பிளாசமற்ற இறந்த செல்களாகும். இச்செல்கள் நீண்டோ அல்லது குட்டையாகவோ லிக்ளினால் ஆன இரண்டாம் நிலை சுவர்களைக் கொண்டு காணப்படும்.
27.
ஒன்றோ டொன்று ஒரே வகையான ஒத்த பண்புகளுடன் காணப்படும் பல பேரின்ங்கள் கொண்ட தொகுப்பு ஒரு குடும்பம் ஆகும் எ .கா : ஆஸ்ட ரேசி
28.
1. உலகம்
2. தொகுதி
3. வகுப்பு
4. வரிசை
5. குடும்பம்
6. பேரினம்
7. சிற்றினம்
29.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் இணைந்து பொதுவான இயற்பியல் மற்றும் வேதியியல் செயல்பாடுகளைச் செய்தால் அவை உறுப்பு மண்டலம் எனப்படும்.
எ.கா: செரிமான மண்டலம், கழிவுநீக்க மண்டலம்
30.
1. இராணி தேனீ,
2. ஆண் தேனீக்கள்
3. வேலைக்கார தேனீக்கள்
31.
1. பாராதைராய்டு ஹார்மோன் பற்றாக்குறையின் காரணமாக உடலில் கால்சியத்தின் அளவு குறைகிறது.
2. இதனாலேயே தீவிரத் தசை இறுக்கம் ஏற்படுகின்றது. இதற்கு டெட்டனி என்று பெயர்.
32.
ஹார்மோன்கள் உடலமைப்பு உடற்செயலில் மனநிலை செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைந்து உடல் சமநிலையைப் பேணுதல்.
33.
சிறுநீரக தமனி சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்த குழையாகும்.
எடுத்துச்செல்லப்படும் இரத்தம் தமனி இரத்தம் ஆகும்.
34.
இத்திசுவில் இரத்தக் குழாய்கள் இல்லாததே இதற்க்கு காரணம் ஆகும்.
35.
இரைப்பையில் குடல் உறிஞ்சிகள் கிடையாது.
காரணம்:
1. இரைப்பை உணவை சேமிக்கிறது.
2. இரைப்பை உணவை அரைக்கிறது
3. இரைப்பை நீரில் நொதிகள் காணப்படுவதால் செரித்தலில் மட்டும் ஈடுபடுகிறது.
4. உணவு முழுமையாக செரித்தல் அடையாமல் இருப்பதால் உறிஞ்சுவதற்கேற்ற சிறிய மூலக் கூறுகள் உருவாகவில்லை.
5. உறிஞ்சுவதற்குரிய நுண்ரத்தக்குழாய்கள் கிடையாது. மேற்கூறிய காரணங்களினால் இரப்பை குடல் உறிஞ்சிகளைப் பெற்றிருக்கவில்லை.
36.
37.
1. இரத்தம் ஒரு சிறப்புவகை இணைப்புத்திசுவாகும். இதனுடைய திரவ ஊடகமான பிளாஸ்மாவில் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த தட்டுகள் அமிழ்ந்த நிலையில் காணப்படுகிறது.
2. சிறுகுடலில் உறிஞ்சப்பட்ட ஊட்டப்பொருட்களை உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலம், உடல் உறுப்புகள் அனைத்தையும் இணைகிறது.
3. நுரையீரல் இருந்து O2 ஐ பல்வேறு உறுப்புகளுக்கும், அவ்வாறே உறுப்புகளிலிருந்து CO2 ஐ நுரையீரலுக்கும் எடுத்துச் செல்வதன் மூலம் உறுப்புகள் அனைத்தையும் இணைக்கிறது.
4. கழிவுப் பொருட்களை உடல் உறுப்புகளிலிருந்து நீக்கி, சிறுநீரகத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம் அதனையும் இணைகிறது.
மேற்கூறிய காரணங்களால் இரத்தம் ஒரு இணைப்புத் திசுவாக கருதப்படுகிறது.
38.
குரல்வளை மூடி
39.
| வ.எண் | பயன்தரும் பாக்டீரியா | நோயூக்கி பாக்டீரியா |
|---|---|---|
| 1. | வீடுகளில் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது | நோய்களை ஏற்படுத்துகிறது |
| 2. | தயிர், கயிறு, நொதி, எதிர் உயிரி உற்பத்தியில் பயன்படுகிறது. | காசநோய், காலரா, ஆன்ந்ராக்ஸ் போன்ற நோய்களை ஏற்படுத்தும். |
40.
நியூக்ளியோசைடு - யூராசில்
41.
வகுப்பு : டைக்காட்டியிடனே
துணைவகுப்பு : பாலிப்பெட்டாலே
வரிசை : காலிசி∴ புளோரே
42.
அ) ஸ்மினோடு (மலட்டு மகரந்தம்)
ஆ) பொல்லினியம்
இ) அல்லி ஒட்டியவை.
43.
44.
இரு பிரிவு தாவரங்களின் ஒளிச்சேக்கை வீதத்தை ஒப்பிடுக.
பிரிவு அ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)400-450nm இடைப்பட்ட ஒளி அலைநீளம் நீல நிற ஒளி சேர்க்கை ஆகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் அதிகமாக உள்ளது.
பிரிவு ஆ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)500-550 இடைப்பட்ட ஒளி அலைநீளத்தில் பச்சை நிற ஒளி சேர்க்கை கதிர்வீச்சாகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் குறைவகவே நடைப்பெறுகின்றது. பச்சையம் உரிஞ்சப்படுவது இல்லை.
45.
1. கட்டையின் அடர்நிறமான மையப்பகுதி வைரக்கட்டை அல்லது டியூரமென் எனப்படும்.
2. சாற்றுக்கட்டை நீரைக்கடத்தும் வேளையில், வைரக்கட்டைகள் நீர் கடத்துவதை நிறுத்துகிறது.
3. ஏனென்றால் வைரக்கட்டையில் சைலக்குழாய்கள் டைலோஸ்களால் அடைக்கப்படுவதால், நீர் அதன் வழியாகக் கடத்தப்படுவதில்லை.
4. டைலோஸ்களாலும் அதன் உட்பொருட்களாலும் வைரக்கட்டையை வண்ணமுடையதாகவும், இறந்ததாகவும் மற்றும் கடினமான பகுதியாகவும் மாற்றுகிறது.
46.
இரு நைட்ரஜன் அணுக்கள் உறுதியான மூன்று சகப்பிணைப்புகளால் (N=N) பிணைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல நைட்ரஜனை (N2) அம்மோனியாவாக மாற்றும் செயல்முறைக்கு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று பெயர். இது முதல் நிலையாகும்.
நைட்ரோஜினேஸ் நொதியானது காற்றில்லா நிலையின்போது மட்டுமே செயல்படக் கூடியது. காற்றில்லா நிலையை ஏற்படுத்த வேர்முடுச்சிகளில் உருவாகும் லெக்ஹீமோகுளோபின் (leghaemoglobin )ஆக்ஸிஜன் நீக்கியாக(Oxygen Scavenger ) செயல்பட்டு ஆக்ஸிஜன் இல்லாச் சூழலை ஏற்ப்படுத்துகிறது.
47.
1.நிலைத்த மரபுத்தன்மை: சேய் செல்களின் மரபுப்பொருளானது தாய் செல்லை ஒத்துக் காணப்படுகிறது.
2. வளர்ச்சி: பல செல் உயிரிகள் உரு வளர்ச்சி அடையும் போது அவற்றின் திசுக்களில் செல் பெருக்கமடைய உதவுகிறது. இவை அனைத்தும் ஒத்த செல்களாகவே உள்ளன.
3. திசு சிதைவதைச் சீர் செய்தல்: திசு சிதைவடையும் போது புதிய உருவொத்த செல்கள் மைட்டாசிஸ் பகுப்பின் மூலம் உருவாகிச் சிதைவு சரி செய்யப்படுகிறது.
4. பாலிலா இனப்பெருக்கம்: தாய் செல்லை ஒத்த வழித்தோன்றல்கள், பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் தோன்ற இப்பகுப்பு உதவுகிறது.
எடுத்துக்காட்டு: ஈஸ்ட் மற்றும் அமீபா.
5. பூக்கும் தாவரங்களில் குமிழ்த்தண்டு, தண்டடிக் கிழங்கு,கிழங்குகள், மட்டநிலத் தண்டுகள், ஓடுகொடிகள் ஆகிய அனைத்தும் மைட்டாடிக் பகுப்பினால் தோன்றியவை. இவை தாய்த் தாவரத்தை விட்டு விலகிப் புதிய தாவரங்கள் தோன்ற உதவுகின்றன. எனவே குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையுடைய வழித் தோன்றல்களை மைட்டாசிஸ் பகுப்பின் மூலமே உருவாக்க இயலும். மரபு பொறியியல், உயிர் தொழில்நுட்பவியலில் கையாளப்படும் திசு வளர்ப்பில் இப்பகுப்பே முக்கியப் பங்காற்றுகிறது.
6. இழப்பு மீட்டல்: நட்சத்திர மீன்களின் இழப்பு அடைந்த கரங்கள் மீள் உருவாதல்.
48.
1. புரோட்டோபிளாசம் செல்லின் உயிருள்ள பொருள். இது பிளாஸ்மா சவ்வினால் சூழ்ந்து காணப்படுகிறது. இது ஒரு நிறமற்ற பொருளாகும்.
2. இது செல் முழுவதும் பரவி.சைட்டோபிளாசம் உட்கரு மற்றும் பல உள்ளுறுப்புக்களைக் கொண்டுள்ளன.
3. புரோட்டோபிளாசம் சிறிய துகள்களான அயனிகள் அமினோ அமிலங்கள் , ஒற்றைச் சர்க்கரைகள் மற்றும் நீரையும் .பெரும் மூலகூறுகளான நீயுக்ளிக் அமிலங்கள் , புரதங்கள் , லிப்பிடுகள் மற்றும் பல்கூட்டுச் சர்க்கரைகள் போன்ற கூட்டுப் பொருள்களை உள்ளடக்கியது
4. இவை நிறமற்ற தோற்றத்துடன் ஜெல்லி போன்ற மீள்பாகு நிலை கொண்ட துகள்களால் ஆனது.இவை அதிக எண்ணிக்கையிலான வாக்குவோல்கள் கொண்டுள்ளதால் நுரை போன்று காணப்படுகிறது.இது வெப்பம். மின் அதிர்ச்சி வேதிப் பொருள் ஆகியவற்றின் தூண்டுதலுக்கு ஏற்பத் துலங்கலாகச் செயல் படுகிறது
49.
| வேர் ஏறு கொடிகள் | தண்டு ஏறு கொடிகள் | |
| 1. | தாவரங்களின் கணுக்களிலிருந்து தோன்றும் வேற்றிட வேர்களின் மூலம் ஆதாரத்தைப் பற்றி தாவரங்கள் ஏறுகின்றன. |
இவ்வகை தாவரங்களில் ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கான சிறப்புத் தகவமைப்புகள் கிடையாது. எனவே தண்டு ஆதாரத்தைச் சுற்றி பின்னி வளர்கின்றன. |
| 2. | எ.கா. பைப்பர் பிடல் பைப்பர் நைக்ரம் ஹீடிரா ஹீடிரா ஹெலிக்கஸ், போதாஸ் |
எ.கா. ஐபோமியா, கண்வால்வுலஸ், டாலிகஸ், கிளைட்டோரியா குவிஸ் குவாலிஸ். |
50.
1.கருவுறுதலுக்கு நீர் இன்றியமையாதது.
2. நிலவாழ் தாவரங்களாக இருப்பினும் வாழ்க்கைச் சுழற்சியை நிறைவு செய்ய நீர் அவசியமாதலால் தாவர பெரும்பிரிவுன் "நீர்நில வாழ்வன" என்று அழைக்கப்படுகிறது.
3. ஆந்திரீடியங்களில் உருவாகும் இரு கசையிழைகாளைக் கொண்ட நகரும் ஆண் கேமீட்கள் மெல்லிய நீர் மென்படலத்தில் நீந்தி ஆர்க்கிகோனியத்தை அடைந்து முட்டையுடன் இணைந்து இரட்டைமடிய கருமுட்டையை உருவாக்குகின்றது.
51.
i) பயிர் சுழற்சி என்பது ஒரே நிலத்தில் வெவ்வேறு பயிர்களை அடுத்தடுத்துப் பயிரிடும் முறை.
ii) அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் நைட்ரஜனை நிலைப்படுத்துதலில் ஈடுபடுகின்றன.
iii) லெகூம் வகை தாவரங்களின் வேர் முடிச்சுகளில் அஸட்டோபாக்டர், கிளாஸ்ட்டிரிடியம் மற்றும் ரைசோபியம் ஆகிய பாக்டீரியங்கள் காணப்படுகின்றன.
iv) எனவே, லெகும் வகை தாவரங்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்திகின்றன.
v) ஆகவே, பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுகிறார்கள்.
52.
வறட்சி என்ற சொல் போதியளவு மழை இல்லாத காலங்களில் மண்ணில் நீரின் அளவு குறைந்து தாவரங்களும் நீர் பாற்றாக்குறையின் காரணமாக பாதிக்கப்படுதலை குறிக்கும்.
வறட்சியின் விளைவுகள்:
1. செல்களின் வளர்ச்சி மற்றும் செல்சுவர் கூறுகளின் உற்பத்தி குறைவதால் செல்கள் அளவில் சிறிதாகின்றன.
2. நைட்ரஜன் நிலைநிறுத்தம் மற்றும் அதன் ஒடுக்கம் ஆகியவை சில நொதிகளின் குறைவான செயல்பாடுகளால் குறைகின்றன.
3. அப்சிக் அமிலம் உற்பத்தி அதிகரித்து இலைத்துளை சாதனங்கள் மூடுவதால் நீராவிப்போக்கு வீழ்ச்சியடைகின்றது.
4. புரோட்டோகுளோரோஃபில் உற்பத்தி தடைபடுவதால் ஒளிச்சேர்க்கை வீழ்ச்சியடைகின்றன.
5. சுவாசித்தல் மற்றும் உணவுப் பொருட்கள் இடப்பெயர்ச்சி குறைதல்,நீர் இழப்பதால் நொதிகளின் செயல்பாடுகள் அதிகரித்தல், இதைத் தொடர்ந்து RNA மற்றும் புரதங்கள் சிதைக்கப்படுகின்றன.
6.. கார்போஹைட்ரேட் இடப்பெயர்வு பாதிக்கப்படுவதால் முதிர்ந்த இலைகள் வாடுகின்றன.
7. இதைத் தொடர்ந்து இலை மூப்படைதல் நிகழ்கிறது.
53.
1. செல், திசு, உறுப்பு அல்லது உறுப்புமண்டல உடற்கட்டமைப்பை பெற்றிருப்பது.
2. ஒட்டிக்கொண்டோ, தனித்தோ, மிதந்தோ, நீந்தியோ, கூட்டமாக வாழும் இயல்பை பெற்றிருப்பது.
3. உடற்குழி அற்று, போலியான உடற்குழி அல்லது உண்மையான உடற்குழியை பெற்றிருப்பது.
4. ஈரடுக்கு அல்லது மூவடுக்குத் தன்மை
5. சமச்சீரற்ற, ஆரச்சமச்சீர் அல்லது இருபக்க சமச்சீர்தன்மை.
6. பாலின அல்லது பால் இனப்பெருக்கம்
7. மறைமுகவளர்ச்சி மற்றும் லார்வாக்களை பெற்றிருப்பது.
54.
| வ.எண் | மிட்ரல் வால்வு | அரைச்சந்திர வால்வு |
| 1 | இடது அரிக்கிகளுக்கு இடது வெண்றிக்கிள்களும் இடையில் காணப்படுகிறது. | பெருந்தமனி துவக்கம், நுரையீரல் தமனியின் துவக்கம் மற்றும் சிரைகளில் காணப்படுகிறது. |
| 2 | இதன் மறுபெயர் ஈரிதழ் வால்வு | - |
| 3 | வெண்ட்ரிக்கிள் சுருங்கும் போது வெண்ட்ரிக்கிளில் இருந்து ஆரிக்கிளினுள் இரத்தம் செல்வதை தடுக்கிறது. | வெண்ட்ரிக்கிள் விரிவடையும் போது இரத்தம் பெருந்தமனி மற்றும் நுரையீரல் தமையிலிருந்து பின்னோக்கி செல்வதை தடுக்கிறது |
| 4 | கார்டோடென்டினே என்ற அமைப்பு தாங்குகிறது. | காணப்படவில்லை |
| 5 | வெண்ட்ரிக்கிள்கள் சுருங்கும் போது இவ்வால்வுகள் மூடுவதால் 'லப்' என்ற ஒலி ஏற்படுகிறது. | வெண்ட்ரிக்கிள்கள் விரிவடையும் போது இவ்வால்வுகள் மூடுவதால் 'டப்' என்ற ஒலி ஏற்படுகிறது. |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards