11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/12/2018
11th Biology - Important 3 mark questions
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோன் செயல்பாடுகளைக் குறிப்பிடுக.
2.
கைரை மற்றும் சல்சி இவற்றை வேறுபடுத்துக்க. அவற்றின் பணியைக் குறிப்பிடுக.
3.
மண்புழு உரம் குறிப்பு வரைக.
4.
பென்டோஸ் ஃபாஸ்பேட் வழித்தடத்தின் முக்கியத்துவத்தினை எழுதுக.
5.
மூப்படைதல் என்றால் என்ன?
6.
நுனி மற்றும் பக்க அக்குத்திசு பற்றி எழுதுக.
7.
வழிசெல்கள் பற்றி எழுதுக.
8.
சாறேற்றம் என்றால் என்ன?
9.
பிரையோஃபைட்கள் வாஸ்குல திசுக்களற்ற பூவாத்தாவரங்கள் என அழைக்கக் காரணம் யாது?
10.
வயிற்றுப்போக்கு என்பது யாது?
11.
ஐந்து உலக வகைப்பாட்டின் குறைக்கள் யாவை?
12.
வட்டவாயின வகுப்பைச் சார்ந்த விலங்குகளில் இனப்பெருக்கத்தில் காணப்படும் சிறப்பு பண்ணப்பு யாது?
13.
மனித சுவாச மண்டலத்தில் காணப்படும் உறுப்புகள் யாவை?
14.
தவளையின் பால் வழி வேறுபாட்டு தன்மைகள் எப்பொழுது தெளிவாகக் காணப்படும்? அவைகள் யாவை?
15.
எந்த சிரையில் யூரியா அதிகமாக இருக்கும். ஏன்?
16.
உருமாறும் தன்மை என்றால் என்ன?
17.
EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.
18.
ஒரு மர வியாபாரி காட்டிலிருந்து இரண்டு மரத்துண்டுகளைக் கொண்டு வந்து அதற்கு (அ) (ஆ) எனப்பெயரிட்டார். 'அ' கட்டையின் வயது 50, 'ஆ' கட்டையின் வயது 20 எனக் கொண்டால், இதில் எந்தக் கட்டை நீடித்து உழைக்கும்?ஏன்?
19.
இனத்தொடர்பு தொகுப்பமைவியலின் முக்கிய காரணிகள் எவை?
20.
அடிபோஸ் திசு என்பது யாது?
21.
ஷெல்லாக்கின் பயன்களில் ஏதேனும் மூன்றை வரிசைப்படுத்துக
22.
இரைப்பை குடற்பாதை ஹார்மோன்களின் பணிகளை விரிவாகக் குறிப்பிடவும்.
23.
ஸ்டார்ச் மூலக்கூறுகள் சிறுகுடலை அடைவது முதல் ஏற்படும் வேதி மாற்றங்களை பட்டியலிடுக.
24.
தவளையில் காணும் சுவாச முறைகளைப் பெயரிடுக.
25.
மீள் தன்மை நாரிழைகளை மீள் தன்மை இணைப்புத்திசுவினின்றும் வேறுபடுத்து
26.
கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?
27.
கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப் பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.
28.
29.
ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.
30.
ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி. அதன் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.
31.
பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது எனக் கருதுகிறாயா? உனது விடையை நியாயப்படுத்துக.
32.
முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை (hyper polarised) பெறுகிறது.ஏன்?
1.
இது அட்ரினல் சுரப்பியின் புறணிப் பகுதியைத் தூண்டி குளுக்கோகார்டிகாய்டுகள் மற்றும் தாது கலந்த கார்டிகாய்டுகள் உற்பத்தியைத் தூண்டுகின்றது. மெலனோசைட் செல்களில் மெலனின் உற்பத்தி, அடிப்போஸ் திசுக்களில் இருந்து கொழுப்பு அமில உற்பத்தி மற்றும் இன்சுலின் உற்பத்தி ஆகியவற்றை இந்த ஹார்மோன் துண்டுகிறது.
2.
பெருமூளையின் புறணியின் மேற்பரப்பு பல மேடு பள்ளங்களைக் கொண்ட மடிப்புகளாக காணப்படுகிறது. மேடுகள் கைரை (ஒருமை கைரஸ்) என்றும், கைரைகளுக்கிடையே உள்ள ஆழம் குறைந்த வரிப்பள்ளங்ள் சல்சி (ஒருமை -சல்கஸ்) என்றும், மற்றும் ஆழமான பள்ளங்கள் பிளவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கைரை, சல்சி ஆகியவை பெருமூளையின் புறணி பரப்பை அதிகரிக்கின்றன.
3.
மண்புழு உரம் வேளாண்மைக்குப் பயன்படும் மிகச்சிறந்த இயற்கை கரிம உரமாகும். எனவே, மண்புழு உரத்தை சந்தபடுத்துதல் தற்போது வளர்ந்து வரும், வளமான தொழிலாகும். கிராமப் புறங்களில் மண்புழு உரத்தை சில்லறை விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம். மண்புழு உரமானது தரமான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. எல்லா வயதினரும் மண்புழு உரத்தயாரிப்பிலும் விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள். மண்புழு உர விற்பனையானது ஒரு துணை வருவாய் ஈட்டும் தொழிலாக உள்ளது.
4.
1. HMP ஷண்ட் இரண்டு முக்கியமான விளைபொருள்களான NADPH மற்றும் பெண்டோஸ் சர்க்கரைகள் உருவாக்கத்துடன் தொடர்புடையது. கட்டப்படும் வளர் வினைகளுக்கு இது முக்கியப் பங்காற்றுகிறது.
2. உருவாக்கப்பட்ட இணைநொதி NADPH ஒடுக்க உயிர் உற்பத்தி வினைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஆக்ஸிஜன் தனி மூலக்கூறுகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது.
3.ரைபோஸ் 5-ஃபாஸ்பேட் மற்றும் அதன் வழிப்பொருள்கள் DNA, RNA, ATP, NAD+, FAD மற்றும் இணைநொதி A ஆகிய உருவாக்கத்திற்குப் பயன்படுகிறது.
5.
தாவரங்களின் வாழ்க்கை சில தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்டது. அதாவது விதை முளைத்தல், இளம் நிலை , முதிர்ச்சியடைத்தல், மூப்பு நிலை , மற்றும் இறப்பு , இதில் மூப்பு நிலை தாவரங்களின் மூப்படைதல் என்பது , உரு அமைத்தல் வாழ்வியல் செயல்கள் ஆகியவை படிப்படியாக குறைவதால் ஏற்படும் ஒட்டுமொத்த மூப்படைதலாகும் . விலங்குகளை போல் இல்லாமல் தாவரங்களில் தொடச்சியாக புதிய உறுப்புகளை உருவாக்குவதால் முதிர்ச்சியடைந்த உறுப்புகளில் அதிகமான சத்துகளை வெளியேற்றுகிறது.
6.
(i) நுனி ஆக்குத்திசுவானது முதல்நிலை தாவர உடலத்தை தோற்றுவிக்கின்றன.
(ii) கட்டைத் தாவரங்கள் இரண்டு வகையான பக்க ஆகுத்திசுக்களை கொண்டுள்ளது.
(iii) வாஸ்குலக் கேம்பியம் இரண்டாம் நிலை சைலம் மற்றும் ஃபுளோயத்தையும், கார்க்கேம்பியம் மரப்பட்டையையும் தோற்றுவிக்கின்றன.
7.
(i) புரோட்டோசைலக் கூறுகளுக்கு எதிரில் உள்ள அகத்தோல் செல்களில் மெல்லிய செல்சுவருடன், காஸ்பேரிய பட்டைகளின்றி காணப்படும்.
(ii) இச்செல்கள் வழிசெல்கள் (Passage Cells) எனப்படும். இவற்றின் பணி நீரையும் மற்றும் கரைந்த உப்புகளையும் புறணியிலிருந்து புரோட்டோசைலத்திற்கு கடத்துவதாகும்.
8.
நீரானது வேர்கள் வழியாக சைலத்திற்குள் பக்கவாட்டு வழியில் செல்வதை கற்றோம்.
இப்படத்தில் தாவத்திற்குள் நீர் பகிர்ந்தளிக்கும் இயங்கு முறையினை கற்க உள்ளோம்.
கிளை நதிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஓர் ஆற்றை உருவாக்குவது போல, இலட்சக்கணக்கிலான வேர்தூவிகள் துளித்துளியாக நீரை உறிஞ்சி நீர் கடத்தும் பெருவழிச் சாலையான சைலத்தில் ஒன்று சேர்க்கின்றன.
9.
1.பிரையோஃபைட்கள் ஈரமான நிலையான இடங்களில் வளரக் கூடிய எளிய நில வாழ்தாவரங்களாகும்.
2.இவைகளில் வாஸ்குலத் திசுக்களான சைலமும், ஃபுளோயமும் காணப்படுவதில்லை.
3.மலர்கள் உருவாக்காமல் வித்துகள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
4. எனவே பிரையோஃபைட்கள் வாஸ்குலத் திசுக்களற்ற பூவாத்தாவரங்களாகும்.
10.
1.உணவு மற்றும் நீரின் வழியாகப் பரவும் பாக்டீரியா அல்லது வைரஸ் தோற்றால் இது ஏற்படுகிறது.
2. தொற்றுயிரிகள் பெருங்குடலின் உட்சுவற்றை சேதப்படுத்துவதால், பெருங்குதலால் நீர்மப் பொருட்களை உட்கரிக்க இயலாது.
3. இயல்புக்கு மாறாக அடிக்கடி நடைபெறும் குடலியக்கத்தினால் அதிக முறை திரவத்தன்மையுடன் கூடிய மலம் வெளியேறுவது வயிற்றுப்போக்கு எனப்படும்
11.
1.தற்சார்பு , சார்பூட்ட முறை உயிரினங்கள் , செல் சுவருடைய,செல் சுவரற்ற உயிரினங்கள் மொனிரா, புரோட்டிஸ்டா எனும் பெரும் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன.இதனால் இவ்விரண்டு பெரும்பிரிவுகளும் மாற்றுப்படித்தான பண்பை (Heterogenous) பெறுகின்றன.
2.வைரஸ்கள் இந்த வகைப்பாட்டில் சேர்க்கப்படவில்லை.
12.
இவைகள் கடலில் மட்டுமே வாழக்கூடியதாக இருப்பினும் இனப்பெருக்கத்திற்காக நன்நீர் நோக்கி வலசை போகும் தன்மை கொண்டவை. இணைப் பெருக்கத்திற்குப் பின் சில நாட்களிலேயே இறந்துவிடும். அவற்றின் முட்டைகூடுகளிருந்து வெளிவரும் அம்மோசீட் லார்வா வளர் ஊர்மாற்றத்திற்குப் பின் மீண்டும் கடலுக்குத் திரும்பும்.
13.
1. புறநாசித்துளைகள்
2. நாசிக்குழி
3. தொண்டை
4. குரல்வளை
5. மூச்சுக்குழல்
6. மூச்சுக்கிளைக் குழல்கள்
7. மூச்சுக்கிளை நுண்குழல்கள்
8. நுரையீரல்கள் (நுண்ணுரைகளைக் கொண்டது)
14.
இனப்பெருக்க காலங்களில் பால்வழி வேறுபாடுகள் தெளிவாக காணப்படும்.
1. ஆண் தவளையை ஓரிணை குரல் பை காணப்படுகிறது.
2. ஆண் தவளையின் முன்னங்கால் முதல் விரலின் கீழே காலவித தண்டு காணப்படுகிறது.
3. குரல் பையின் மூலம் ஆண் தவளைகள் கரகர ஒலியை ஏற்படுத்துகிறது.
15.
1. கல்லீரல் சிரையில் உள்ள இரத்தத்தில் யூரியாவானது கல்லீரல் போர்ட்டல் சிரை மற்றும் கல்லீரல் தமனியை விட அதிகமாக காணப்படும்.
2. ஏனெனில் பிளாஸ்மாவில் பகுதி பொருட்கள் நிலையானாவையல்ல.
3. அளவுக்கு அதிகமாக புறத்தை நாம் உட்கொள்வதால் உருவாகும் உபரி அமினோ அமிலங்களை நமது உடலில் சேமிக்க முடியாது.
4. எனவே கல்லீரல் இந்த உபரி அமினோ அமிலங்களைச் சிதைத்து யூரியாவை உற்பத்தி செய்கிறது.
16.
தாவரங்களில் சூழ்நிலை அல்லது வளர்ச்சி நிலைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு உறவை அமைப்புகள் தோன்றுகிறது.இத்தகைய திறனுக்கு உருமாறும் தன்மை (பிளாஸ்டிசிடி என்று பெயர்). எடுத்துக்காட்டு ஹெட்டிரோ∴பிலி (ஈருவ இலை ) காணப்படும் தாவரங்கள் பருத்தி மற்றும் கொத்தமல்லி இத்தகைய தாவரங்களில் இளந்தவரா இலையின் உருவ அமைப்பும் அதே தாவரத்தின் முதிர்ந்த தாவர இலையின் உருவ அமைப்பும் வேறுபாட்டுக் காணப்படுகிறது.
மற்றொரு எடுத்துக்காட்டாக ரனன்குலஸ் (Butercup) எனும் தாவரத்தில் சூல்நிலைக்குத் தகுந்தவாறு இரு வேறுபட்ட உருவ அமைப்புடைய இலைகள் உருவாகிறது, இத்தாவரத்தில் நீரில் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் , நீர் பரப்பிற்கு மேல் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் வேறுபடுகிறது. இத்தகைய ஹெட்டிரோ∴பிலி உருமாறும் (Plasticity) தன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
17.
I.பாஸ்பரிகரண வினை
நொதி:ஹெக்சோகைனேஸ்
II.ஃபாஸ்பேட் நீக்கம் வினை
நொதி:ஃபாஸ்ஃபாஃபோகிளிசரேட் கைனேஸ்
நொதி: பைருவேட் கைனேஸ்
18.
(i) இரண்டாம் நிலை சைலம் சாற்றுக் கட்டை, வைரக்கட்டை எனவும் வேறுபடுத்தப்படுகிறது. மரங்களில், கட்டையின் வெளிறிய வெளிபகுதி சாற்றுக் கட்டை அல்லது அல்பர்னம் (Alburnm) எனப்படும்.
(ii) கட்டையின் அடர்நிறமான மையப்பகுதி வைரக் கட்டை அல்லது டியூரமென் (Duramen) எனப்படும். சாற்றுக் கட்டை நீரைக்கடத்தும் வேளையில், வைரக்கட்டைகள் நீர் கடத்துவதை நிறுத்துகிறது.
(ii) ஏனென்றால் வைரக்கட்டையில் சைலக்குழாய்கள் டைலோஸ்கலால் அடைக்கப்படுவதால்,நீர் அதன் வழியாகக் கடுத்தப்படுவத்தில்லை. டைலோஸ்களாலும் அதன் உட்பொருட்களாலும் வைரக்கட்டையை வண்ணமுடையதாகவும், இறந்ததாகவும் மற்றும் கடினமான பகுதியாகவும் மாற்றுகிறது.
(iv) பொருளாதார அடிப்படையில் காணும் போது பொதுவாகச் சாற்றுக்கட்டையை விட, வைரக்கட்டையிலிருந்து பெறப்படும் மரக்கட்டை மிகவும் நீடித்து உழைப்பையும் அதிக நுண்ணுயிரிகள் பூச்சி எதிர்ப்புத் திறனையும் கொண்டது.
19.
1. உயிரினங்களை அடையாளம் கண்டு, விளக்கி, பெயரிட்டு, வரிசைப்படுத்தி பாதுகாத்து ஆவணப்படுத்துவது.
2. சிற்றினங்களின் பரிணாம வரலாறு, சூழ்நிலை தொடர்பு, சூழ்நிலை தகவமைப்புகள் மற்றும் சிற்றினங்களுக்கிடையேயுள்ள தொடர்புகளை ஆய்வு செய்வது.
20.
1. தோலுக்கு அடியில் காணப்படுகிறது.
2. அடிபோஸ் அல்லது கொழுப்பு செல்கள் (அடிபோசைட்டுகள்) இத்திசுக்கூட்டத்தில் 90% அதிகமாக காணப்படுகிறது.
3. இத்திசுவில் உள்ள செல்கள் நேரடியாக கொழுப்பையும் பயன்படுத்தப்படாத இதர அதிகப்படியான உணவுப் பொருட்களையும் கொழுப்பாக மாற்றி திசுக்களில் சேமித்து வைக்கின்றன.
21.
1. முத்திரை மெழுகு தயாரிக்கவும் ஒளியியல் கருவிகளில் ஒட்டும் பொருளாகவும் அரக்கு பயன்படுகின்றது. மேலும், இது சிறந்த மின் கடத்தாப் பொருளாக செயல்படுவதால் மின்சாரத் துறையிலும் அதிகம் பயன்படுகிறது.
2. காலணி தயாரிப்பிலும் தோல் பொருட்களை பளபளப்பாக்கவும், மரப்பூச்சு தயாரிக்கவும் பயன்படுகிறது.
3. புகைப்படங்கள், செதுக்கித் தயாரிக்கும் பொருட்கள், நெகிழி வார்ப்பு பொருட்கள், நெகிழி வார்ப்பு பொருட்கள் மற்றும் அடுக்குப்பலகைத் தாள் படலம் தயாரிப்பிலும் பயன்படுகிறது. தங்க நகைகளில் உள்ளீட்டுப் பொருளாகவும் பயன்படுகிறது.
22.
கேஸ்ட்ரின் கோலிசிஸ்ட்டோகைனின் செக்ரிட்டின் மற்றும் இரைப்பைத் தடை பெப்டைடு போன்ற ஹார்மோன்களை இரைப்பை குடற்பாதையில் உள்ள சிறப்பு நாளமில்லாச் சுரப்பி செல் தொகுப்பு சுரக்கின்றது.
கேஸ்ட்ரின் இரைப்பை சுரப்பிகளை தூண்டி ஹைட்ரோகுளோரிக் அமிலம் (HCl) மற்றும் பெப்ஸினோஜனைத் தூண்டுகிறது.
உணவில் உள்ள கொழுப்பு மற்றும் அமிலத்தை பொறுத்து முன்சிறு குடலில் கோலிசிஸ்ட்டோகைனின் (CCK) சுரக்கின்றது.
CCK பித்தப்பையின் மீது செயல்பட்டு பித்த நீரை முன்சிறுகுடலுடன் வெளிவிடுகிறது.
மேலும் கணைய நீர் உற்பத்தியாகி வெளிவருவதையும் தூண்டுகிறது.
கணையத்தின் அசினிசெல்கள் மீது செக்ட்ரிடின் செயல்பட்டு நீர் மற்றும் பைகார்பனேட் அயனிகளைச் சுரந்து உணவின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குகின்றது. பூஜீ இரைப்பை சுரப்பையும் அதன் இயக்கத்தையும் தடுக்கின்றது.
23.
1. வாய்க்குழியல் உமிழ்நீர் அமைலேஸ் (அ) டயலின் உதவியால் ஸ்டார்ச், மால்டோஸாக மாற்றமடைகிறது.

2. கணைய அமைலேஸ் ஸ்டார்ச்சை, மால்டோஸாக மாற்றுகிறது.

3. சிறுகுடலில் உள்ள மால்டேஸ் எனும் நொதி, மால்டோஸை குளுக்கோஸ் + குளுக்கோஸாக மாற்றுகிறது.

24.
1. வாய்க்குழி சுவாசம்
2. நுரையீரல் சுவாசம்
3. தோல் சுவாசம்
25.
I. மீள்தன்மை நாரிழைகள்:
1. எலும்புத்தசைகளையும் எலும்புகளையும் இணைகிறது.
2. ஒரு குறிப்பிட்ட திசையிலிருந்து அளிக்கப்படும் இழுவிசை அழுத்தத்தை தாங்கும் வகையில் அமைந்துள்ளது.
3. இவ்விணைப்புத் திசுவானது எலும்புத்தசைகளோடு எலும்பை இணைக்கும் தசை நாண்களிலும் எலும்பினைப்பு நார்களிலும் காணப்படுகிறது.
4.எலும்பினைப்பு நார்கள் ஒரு எலும்பை மற்றோர் எலும்புடன் இணைகின்றன.
II. மீள்தன்மை இணைப்புத்திறன்:
1. மீள்தன்மை நாரிழைகள் அதிகம் காணப்படுகின்றன.
2. இழுக்கப்பட்ட தசைகள் மீண்டும் பழைய நிலையை அடைதல் மீள்தன்மை நாரிழையால் நடைபெறுகிறது.
3. தமனிகளில் அலை போன்ற துடிப்புடன் இரத்தம் பாய்வதற்கும் உட்சுவாசத்தைத் தொடர்ந்து நடைபெறும் வெளிசுவாசத்தால் நுரையீரல் சுருங்குவதற்கும் இவ்வகை நாரிழைகள் தான் காரணமாகும்.
4. பெரிய தமனிகளின் சுவரிலும், முதுகெலும்புத் தொடரில் காணப்படும் எலும்பினைப்பு நார்களிலும் சுவாசக்குழல் சுவர்களிலும் இவ்வகை இணைப்புத் திசுக்கள் காணப்படுகின்றன.
26.
1. ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் நீண்ட காலம் வாழக்கூடியச் சூழலில் அதற்கேற்ற சுவாசமும், இரத்தச் சிவப்பணுக்கள் உருவாக்கமும் சரி செய்யப்படுகின்றன.
2. இத்தகைய சூழலைச் சமாளிக்கவே சிறுநீரகங்களிலிருந்து அதிக அளவு எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
3. இந்த ஹார்மோன், எலும்பு மஞ்சையைத் தூண்டி அதிக இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
27.

28.
29.
1. குட்டியிட்டு பால் கொடுக்கும் பால் சுரப்பி வயிற்றின் அடிப்புறத்தில் உள்ளது.
2. வேட்டையாடி உணவுதேடும் மாமிச உண்ணி.
3. மாமிசத்தை உன்ன கோரைப் பற்கள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.
4. கால்விரல்களில் உறுதியான கூர்மையான நகங்கள் உண்டு.
5. வலுவான தாடைகளைப் பெற்றுள்ளது.
6. வெட்டுப் பற்கள் சிறியதாகவும், குறைவான பயன் உடையதாக உள்ளது.
30.
R.H. விட்டாக்கெர் எனும் அமெரிக்காவை சேர்ந்த வகைப்பாட்டியலர் 1969 ஆம் ஆண்டில் உயிரினங்களை ஐம்பெரும்பிரிவுகளாக வகுத்தார்.
நிறைகள்
i) ஐம்பெரும் பிரிவு வகைப்பாடு ஆனது சிக்கலான செல் அமைப்பு, உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.
ii) உணவு ஊட்டமுறையின் அடிப்படையில் இந்த வகைப்பாடு அமைந்து உள்ளது.
iii) பூஞ்சைகள் தாவரங்களிலிருந்து பிரித்துத் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
iv) உயிரினங்களுக்கு இடையே உள்ள இனப்பரிணாம குழுத் தொடர்பினை இந்த வகைப்பாடு எடுத்துக்காட்டுகிறது.
குறைகள்
i) இந்த வகைப்பாட்டில் வைரஸ்கள் சேர்க்கப்படவில்லை.
ii) மொனிரா, புரோட்டிஸ்டா என்ற பெரும் பிரிவில் தற்சார்பு, சார்பூட்ட முறை உயிரினங்கள் அடங்கியுள்ளன,இவை செல் சுவரற்ற உயிரினங்கள்.எனவே இவ்விரு பெரும் பிரிவுகளும் மாற்றுப் பண்பினை பெறுகின்றன.
31.
பாசிகளில் பசுங்கணிகத்தின் வடிவம் தனித்துவம் வாய்ந்தது. ஏனெனில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வடிவமுடைய பசுங்கணிகம் காணப்படுகிறது.
| வ. எண் | பசுங்கனிகத்தின் வடிவம் | எ-கா |
| 1. | கிண்ண வடிவம் | கிளாமிடோமோனால் |
| 2. | வட்டுவடிவம் | கேரா |
| 3. | கச்சை வடிவம் | யூலோத்ரிக்ஸ் |
| 4. | வலைப்பின்னல் | ஊடோகோணியம் |
| 5. | சுருள் வடிவம் | ஸ்பைரோகைரா |
| 6. | நட்சத்திர வடிவம் | சைக்னீமோ |
| 7. | தட்டு வடிவம் | மவுஜிலிய |
32.
மின்னழுத்தம் இயல்பான அளவான அளவையும் தாண்டி, அளவிற்குச் செல்லும் போது அதிக எதிர்மறைத் தன்மையுடைகிறது. எனவே, முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை பெறுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards