11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
இடப்பெயர்ச்சி மற்றும் இயக்கம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம் ______.
நீளிழை
குறுயிழை
தசையியக்கம்
அமீபா போன்ற இயக்கம்
2.
தசைச்சுருக்கத்திக்கான ATPயேஸ் நொதி உள்ள இடம் ______.
ஆக்டினின்
ட்ரோப்போனின்
மையோசின்
ஆக்டின்
3.
ஒவ்வொரு எலும்புத்தசையும் இதனால் மூடப்பட்டுள்ளது.
எப்பிமைசியம்
பெரிமைசியம்
எண்டோமைசியம்
ஹைப்போமைசியம்
4.
தசைநார்களின் செயல் அலகு ______.
சார்கோமியர்
சார்கோபிளாசம்
மையோசின்
ஆக்டின்
5.
தசை இழைக் கற்றை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
மையோஃபைப்ரில்கள்
ஃபாசிக்கிள்
சார்கோமியர்
சார்கோப்பிளாசம்
6.
தசைகளை உருவாக்கும் அடுக்கு ______.
புறப்படை
நடுப்படை
அகப்படை
நரம்பு புறப்படை
7.
தசைப்பிடிப்பு நோயைப் பற்றிய குறிப்பு எழுதுக.
8.
சட்டக மண்டலத்தின் பணிகளை விளக்குக.
9.
சம இழுப்பு சுருக்கம் எவ்விதம் நடைபெறுகிறது?
10.
பல்வகை இயக்கங்களின் பெயர்களை கூறுக
11.
புறச்சட்டகம் என்றால் என்ன? எங்கு காணப்படும்?
12.
ஆக்ஸிஜனேற்ற இழைகள் -வரையறு.
13.
தசை தளர்வடைதல் -வரையறு.
14.
சார்கோமியர்கள் என்றால் என்ன?
15.
நீளிழை இயக்கம்-வரையறு.
16.
டெட்டனி எவ்வாறு ஏற்படுகிறது?
17.
எலும்புத் தசைகளிலுள்ள சுருங்கு புரதங்களின் பெயர்களை கூறுக
18.
சார்கோமியரிலுள்ள தசையிழைகளின் பெயர்களைக் கூறுக
19.
20.
இடுப்பு வளையத்திலுள்ள எலும்புகள் யாவை?
21.
அச்சு சட்டகத்தில் அடங்கியுள்ள மூன்று முக்கிய பகுதிகளின் பெயர்களை பட்டியலிடுக
22.
கபால எலும்புகளின் பெயர்களைக் குறிப்பிடுக
1.
(d)
அமீபா போன்ற இயக்கம்
2.
(c)
மையோசின்
3.
(a)
எப்பிமைசியம்
4.
(a)
சார்கோமியர்
5.
(a)
மையோஃபைப்ரில்கள்
6.
(b)
நடுப்படை
7.
(i) தசையில் ஏற்படும் கிழிசலே தசைப்பிடிப்பு எனப்படும் , விபத்து போன்ற அதிர்ச்சி இழுப்பால் தசையிழைகளில் ஏற்படும் கிழிவு சுளுக்கு எனப்படும்.
(ii) தசைகளின் மீள் திறனை விட அதிகமாகதிடீரென இழுபடுவதால் இந்நிலை ஏற்படுகின்றது.
(iii) சரியற்ற நிலையில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்வதால் முதுகுத் தசைகளில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு முதுகுவலி உண்டாகிறது.
8.
1. இவ்வமைப்பு உடலுக்கு உறுதியான கட்டமைப்பை அளிப்பதுடன் புவியீர்ப்பு விசைக்கு எதிராக உடல் எடையைத் தாங்குகின்றது.
2. உடலுக்கு நிலையான வடிவத்தைத் தந்து அதனை நிர்வகிக்கிறது.
3. மென்மையான உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கின்றது.
4. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுப்புக்களை சேமிக்கின்றது. மேலும் மஞ்சளான எலும்பு மஜ்ஜைப் பகுதியில் ஆற்றல் மூலமான கொழுப்பை டிரைகிளிசரைடு சேமிக்கின்றது.
5. எலும்புகளோடு இணைக்கப்பட்ட தசைகளுடன் சேர்ந்து நெம்புகோல் போல் செயல்பட்டு இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகின்றது.
9.
1. இவ்வகை சுருக்கத்தின்போது தசைகளின் நீளத்தில் மாற்றம் ஏற்படுகின்றது.
2. ஆனால் இழுவிசையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
3. இங்கு உருவாக்கப்படும் விசையில் எந்த மாற்றமுமில்லை.
4. எ.கா. பளு தூக்குதல் மற்றும் டம்பெல் தூக்குதல்
10.
1. அமீபா போன்ற இயக்கம்
2. குறு இழை இயக்கம்
3. நீளிழை இயக்கம்.
4. தசை இயக்கம்
குறிப்புகள் :
அமீபா போன்ற இயக்கம்:
மேக்ரோஃபேஜ் போன்ற செல்கள் நோய்க்கிருமிகளை விழுங்குவதற்காக தனது சைட்டோபிளாசத்தை பயன்படுத்திப் போலிக்கால்களை உண்டாக்கி இவ்வகை இயக்கத்தை மேற்கொள்கின்றன.
குறு இழை இயக்கம்:
இவ்வகை இயக்கம் சுவாசப்பாதை மற்றும் இனப்பெருக்கப் பாதையில் அமைந்துள்ள குறுயிழை எபிதீலிய செயல்களில் நடைபெறுகின்றது.
நீளிழை இயக்கம்:
சாட்டை போன்ற இயக்க உறுப்பு நீளிழைகளைக் கொண்ட செல்களில் இவ்வகை இயக்கம் நடைபெறுகின்றது. விந்து செல்கள் நீளிழை இயக்கத்தை மேற்கொள்கின்றன.
தசை இயக்கம்:
இவ்வகை இயக்கம் கைகள், கால்கள், தாடைகள், நாக்கு ஆகிய உறுப்புகளில் தசைகளின் சுருங்கி விரியும் தன்மையால் நடைபெறுகின்றது.
11.
1. இவ்வகை சட்டகம் முதுகு நாணற்ற உயிரிகளில் காணப்படுகின்றது.
2. இது உடலின் புறப்பகுதியில் உள்ள உறுதியான மற்றும் கடினமான பாதுகாப்பு அமைப்பாகும்.
3. எ.கா. கரப்பான் பூச்சி
12.
அதிக எண்ணிக்கையில் மைட்டோகாண்ட்ரியாவையும் அதிக அளவு ஆக்ஸிகரண பாஸ்பேட் ஏற்ற திறனும் பெற்ற தசையிழைகள் ஆக்ஸிஜனேற்ற இழைகள் எனப்படுகின்றன.
13.
1. இயக்கத் தூண்டல் நின்றவுடன், கால்சியம் அயனிகள் சார்கோபிளாசத்தினுள் மீளச் செலுத்தப்படுவதால் ஆக்டின் இழைகளின் செயல்படு பகுதியான இணைப்பிடம் மறைக்கப்படுகின்றது.
2. இதனால் மயோசின் இழைகளின் தலைப்பகுதி ஆக்டின் இழையுடன் இணைய இயலாமையால் Z கோடுகள் பழைய நிலைக்குச் செல்கின்றன. இதற்குத் தசை தளர்வடைதல் என்று பெயர்.
14.
இவை எலும்புத்தசையின் செயல் அலகு ஆகும்.
15.
1. சாட்டை போன்ற உறுப்பு நீளிழைகளைக் கொண்ட செல்களில் இவ்வகை இயக்கம் நடைபெறுகின்றது.
2. விந்து செல்கள் நீளிழை இயக்கத்தை மேற்கொள்கின்றன.
16.
1. பாராதைராய்டு ஹார்மோன் பற்றாக்குறையின் காரணமாக உடலில் கால்சியத்தின் அளவு குறைகிறது.
2. இதனாலேயே தீவிரத் தசை இறுக்கம் ஏற்படுகின்றது. இதற்கு டெட்டனி என்று பெயர்.
17.
1. ஆக்டின்
2. மையோசின்
3. ட்ரோபோமையோசின்
4. ட்ரோபோனின்
18.
1. தடித்த இழைகள்
2. மெல்லிய இழைகள்
19.
20.
1. காக்ஸல் எலும்பு, திருவெலும்பு மற்றும் வாலெலும்பு உள்ளன.
2. ஒவ்வொரு காக்ஸல் எலும்பும் இலியம், இஸ்கியம், மற்றும் பூப்பெலும்பால் ஆனது.
இடுப்பு வளையம்(Pelvic Girdle):
1. இடுப்பு வளையம், அதிக எடையைத் தாங்கும் படியான, உறுதியான சிறப்பு வாய்ந்த அமைப்பாகும்.
2. இவை காக்ஸல் எலும்பு எனும் இரு இடுப்பு எலும்புகளால் ஆக்கப்பட்டுள்ளது. இவ்வெலும்புகள் கால்களை அச்சுச் சட்டகத்துடன் இணைத்து பாதுகாக்கிறது.
3. திருவெலும்பு (Sacrum) மற்றும் வாலெலும்புடன் (Coceyx) இணைந்து கோப்பை வடிவ அமைப்பை இடுப்பு வளையத்திற்குத் தருகிறது.
4. ஒவ்வொரு காக்ஸல் எலும்பும், இலியம்(Ileum), இஸ்கியம் (Ischium) மற்றும் பூப்பெலும்பால் (Pubis) ஆனது.
5. இந்த மூன்று எலும்புகளும் இணைந்துள்ள பகுதியில் அசிட்டாபுலம் எனும் ஆழ்ந்த அரைக்கோளக் குழி இடுப்பின் பக்கவாட்டில் உள்ளது.
6. இக்குழிப்பகுதியில் தொடை எலும்பின் (Femur) தலைப்பகுதி பொருந்தியிருப்பதால், தொடை எலும்பு நன்கு அசைகிறது.
7. வயிற்றுப்பகுதியில் இடுப்பு வளையத்தின் இரு பகுதிகளும் இணைந்து, நாரிழைக் குருத்தெலும்பைக் கொண்ட பூப்பெலும்பு இணைவை (Pubic symphysis) உண்டாக்குகின்றன.
8. இடுப்பெலும்பின் மேற்பகுதியில் உள்ள இலியம் எடுப்பான எலும்பாகும். ஒவ்வொரு இலியமும் பின்பக்கத்தில் திருவெழும்புடன் உறுதியான இணைப்பை உருவாக்கியுள்ளது.
9. இஸ்கியம் ஒரு வளைந்த பட்டையான எலும்பாகும். V வடிவப்பெலும்பு, முன்பகுதியில் உள்ள பூப்பெலும்பு இணைவுடன் அசையும் வண்ணம் பொருந்தியுள்ளது.
10. ஆண்களின் இடுப்பு வளையம், பெரிய உறுதியான கனத்த எலும்புகளையுடைய குறுகிய ஆழமான அமைப்பாகும்.
11. பெண்களின் இடுப்பு வளையம் குறைந்த ஆழமுடைய அகன்ற மீள்தன்மையுடைய அமைப்பாகும். பெண் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும் இந்த அமைப்பு கர்ப்பகாலத்தில் உதவிகரமாக உள்ளது.
21.
1. மண்டையோடு
2. நாவடி (ஹையாய்டு) எலும்பு
3. முதுகெலும்புத் தொடர்.
4. மார்புக் கூடு
| எலும்பின் பெயர் | எலும்புகளின் எண்ணிக்கை | எலும்புகளின் மொத்த எண்ணிக்கை | |
|---|---|---|---|
| மண்டையோடு | கபாலம் | 8 | 29 |
| முகத்தெலும்பு | 14 | ||
| நடுக்காது எலும்பு | 6(2x3) | ||
| நாவடி எலும்பு | 1 | 26(பெரியவர்கள்) | |
| முதுகெலும்புத் தொடர் | கழுத்துப்பகுதி | 7 | |
| மார்புப்பகுதி | 12 | ||
| இடுப்புப்பகுதி | 5 | ||
| திருவெலும்பு | 1 | ||
| வாலெலும்பு | (5 எலும்புகள் இணைந்தது 1 (4 எலும்புகள் இணைந்தது) |
||
| மார்புபெலும்பு | 1 | 1 | |
| விலா எலும்புகள் | 12x2=24 | 24 | |
| எலும்புகளின் மொத்த எண்ணிக்கை | 80 | ||
22.
1. மண்டையோட்டில் உள்ள எலும்புகள் கபால எலும்புகள் மற்றும் முகத்தெலும்புகள் என இரு தொகுப்புகளாக அமைந்துள்ளன.
2. மொத்தமாக உள்ள 22 எலும்புகளில் கபால எலும்புகள் 8ம் முகத்தெலும்புகள் 14ம் அடங்கும்.
கபால எலும்புகள்
* ஓரிணை எலும்புகள்
* உச்சி எலும்பு (Parietal)
* ஓரிணை பொட்டெலும்பு (Temporal)
தனி எலும்புகள்
1. நுதலெலும்பு (Frontal)
2. பிடரிஎலும்பு (Occipital)
3. எத்மாய்டு (Ethmoid)
4. ஆப்புருவ எலும்பு (Sphenoid)
முகத்தெலும்புகள்
1. முகத்தெலும்புகளில் மேல்தாடையெலும்பு, கன்னத்தின் வளையெலும்பு, அண்ணவெலும்பு, கண்ணீர்ச்சுரப்பியண்மை எலும்பு மற்றும் மூக்கினிடைத் தட்டெலும்பு ஆகியவை இணை எலும்புகளாகவும் கீழ்த்தாடையெலும்பு மற்றும் இடைநாசி எலும்பு ஆகியன தனி எலும்புகளாகவும் உள்ளன.
2. இவையனைத்தும் இணைந்து மண்டையோட்டின் முன்பகுதியை உருவாக்குகின்றன.
3. தொண்டைக் குழியின் அடிப்பகுதியில் U வடிவ ஒற்றை நாவடி எலும்பு உள்ளது.
4. ஒவ்வொரு நடுச்செவியிலும் சுத்தி வடிவ எலும்பு, பட்டடை எலும்பு மற்றும் அங்கவடி எலும்பு ஆகிய 3 சிற்றெலும்புகள் உள்ளன. இவற்றிற்குச் செவிச்சிற்றெலும்புகள் என்று பெயர்.
5. மேல்தாடை, மேக்ஸில்லா என்னும் மேல்தாடை எலும்புகளாலும் கீழ்த்தாடை, மேன்டிபிள் என்னும் கீழ்த்தாடை எலும்புகளாலும் ஆனது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards