11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
11th Biology - Model Question Paper 2019 - 2020
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தூண்டல்கள் கடத்தப்படுத்தல் பற்றி எழுதுக?
2.
நைட்ரஜன் சுழற்சியினை பற்றி எழுதுக.
3.
உயிரியல் சொற்களை கீழ்க்காணும் சொற்றொடர்களுடன் அடையாளம் காண்க. கழிவு நீக்கம், கிளாமருலஸ் , சிறுநீர்ப்பை, கிளாமருலார் வடிதிரவம், சிறுநீர் நாளங்கள், சிறுநீர், பௌமானின் கிண்ணம், சிறுநீரக மண்டலம், மீண்டும் உறிஞ்சுதல், மிக்ட்யூரிஷன், சவ்வூடு பரவல், புரதங்கள், சமநிலை பேணுதல்
i. சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம்.
ii. பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது.
iii. சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல்.
iv. இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து.
vi. தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல்.
vii. ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது.
vii. சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது.
xi. சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர்.
xii. இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்துதல்.
xiii.சிறுநீரகங்கள். சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன.
xiv. கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல்.
xvii. இரத்தத்தில் மட்டும் காணப்பட்டு கிளாமருவார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது?
4.
நொதியின் செயல்பாட்டை விளக்கு பூட்டு - சாவி கோட்பாட்டை படத்துடன் விளக்கு.
5.
தொகுதி: ஹிமிகார்டேட்டாவின் பண்புகளைக் கூறு.
6.
வேர் உருமாற்றம் என்பது யாது? வெற்றிடவேர் உருமாற்ற வகைகளை படத்துடன் விளக்குக.
7.
உயிர்சார் நெருக்கடியின் செயல் நுட்பங்களை விளக்குக.
8.
ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் C4 தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP-களை பயன்படுத்துவதாகும். C3 தாவரங்கள் 18 ATP - க்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் விளக்குகிறார். பின்னர் அதே ஆசிரியர் C4 தாவரங்கள் தான் C3-யை விட சிறந்த தகவமைப்பு பெற்றுள்ளதாக கூறுகிறார். இந்த முரண்பாட்டிற்க்கான காரணங்களை உன்னால் கூற முடியுமா?
9.
ஏன் சில தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறது பிறதாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறது?
10.
ஸ்கிலிரைடுகளின் வகைகளை வவரி.
11.
12.
தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சதைக்கனியின் வகைகளை விவரி.
13.
ஆக்ஸிடோசின் என்பது துரிதபிறப்பு என பொருள் பெறக் காரணம் யாது?
14.
நீராவிப்போக்கு என்றால் என்ன?
15.
மியாசிஸ் I, புரோஃபேஸ் I நிலையில் உள்ள துணை நிலைகள் யாவை?
16.
கேரியோடாக்ஸானமி - வரையறு
17.
பாசிகளின் பல்வேறு சேமிப்பு உணவுப்பொருட்கள் யாவை? எ-கா.தருக.
18.
சிறுகுடலில் மட்டும் உறிஞ்சிகள் உள்ளன. ஏன் இரைப்பையில் இல்லை?
19.
சிலவகை எபிதீலியங்கள் பொய்யடுக்கினால் ஆனவை. இதன் பொருள் என்ன?
20.
ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து
21.
தாவரங்களில் ஒரு பால் மலர்கள் உருவாக்குவதற்கான காரணம் என்ன?
தாவரங்கள் மூப்படைவதினால்
திட்டமிடப்பட்ட செல் இறப்பினால்
தாவரங்களில் தேவையற்ற பாகங்கள் உதிர்வதால்
ஹார்மோன்களின் செயல்களால்
22.
சிட்ரிக் அமிலச் சுழற்சி, எந்தப் பொருளை ஆக்ஸிஜனேற்றம் அடைச் செய்யும் இறுதி பொது வழித்தடமாக நிகழ்திறது?
கார்போஹைட்ரேட்
புரதம்
கொழுப்பு
இவை அனைத்தும்
23.
இவ்வகை இயக்கம் கைகள், கால்கள், தாடைகள், நாக்கு ஆகிய உறுப்புகளில் தசைகளின் சுருங்கி விரியும் தன்மையால் நடைபெறுகின்றது.
அமீபா போன்ற இயக்கம்
குறுஇழை இயக்கம்
நீளிழை இயக்கம்
தசை இயக்கம்
24.
கிளாமருலஸின் உல் அடுக்கு ____
பெரைட்டல்
போடோ சைட்டுகள்
பாம்பில்லரி நாளம்
காலிசெஸ்
25.
இலைத்துளைத் திறப்பு எதைச் சார்ந்தது?
பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு
பொட்டாசியம் அயனியின் வெளியேற்றம்
குளோரைடு அயனியின் உள்நுழைவு
ஹைட்ராக்ஸில் அயனியின் உள்நுழைவு
26.
மண்புழுவில் கருமுட்டை கூட்டை உருவாகும் சுரப்பி செல்கள் இங்கு காணப்படுகிறது.
பெரிஸ்டோமியம்
புரோஸ்டோமியம்
கிளைடெல்லம்
பைஜிடியம்
27.
சுவாசவேர்களில் காணப்படாத பண்பு எது?
சுவாசவேர்கள் அதிக எண்ணிக்கையிலான சுவாச துளைகளைப் பெற்றிருக்கும்
தண்டிலிருந்து. மேலிருந்து தரையை நோக்கி வளர்கிறது
நீர் நிரம்பிய சதுப்பு நிலங்களில் காற்றோட்டம் மிக குறைவாகக் காணப்படும் தாவரங்களில் காணப்படுகிறது
சுவாசத்திற்காக எதிர் புவிநாட்டமுடையவை
28.
ஆண்மலர்கள், பெண்மலர்கள் மற்றும் இருபால் மலர்கள் ஒவ்வொன்றும் தனித்தனித் தாவரங்களில் காணப்படுவது___________ எனப்படும்.
ஆண்-பெண் இருபால் மலர்த்தாவரங்கள்
ஆண் -இரு பால் மலர் தனித்தாவரங்கள்
முப்பால்மலர்த்தனித்தாவரங்கள்
பெண்இருப்பால் மலர்த்தனித்தாவரங்கள்
29.
பொய் அடுக்கு எபிதீலியத்தில் ஓரடுக்கு செல்களால் ஆன் எபிதீலியம் பல அடுக்குகள் செல்கள் கொண்ட எபிதீலியம் போன்று காட்சியளிப்பதற்கு காரணம்.
பல அடுக்குகள் கொண்ட எபிதீலியத்தில் சில அடுக்குகள் மறைந்து போவதால்
செல் அடுக்குகள் வெவேறு மட்டத்தில் காணப்படுவதால்
செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்
செல்களும் உட்கருக்களும் வெவேறு மட்டங்களில் காணப்படுவதால்
30.
அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது ________.
மீன்வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பு இணைந்ததாகும்.
நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும்.
மண்புழு வளர்ப்பும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்தது.
இறால் வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்ததாகும்.
31.
சரியான இணையைத் தேர்ந்தெடு
| பத்தி- I | பத்தி-II |
| p) உட்சுவாசத்திறன் | உட்சுவாசத்திற்குப்பிறகு வலிந்து சுவாசிக்கப்படும் காற்றின் அதிகப்பட்ச கொள்ளளவு |
| q) வெளிச்சுவாசத்திறன் | ii.வெளிச்சுவாசத்திற்குப் பிறகு நுரையீரலில் உள்ள காற்றின் கொள்ளளவு |
| R) உயிர்ப்புத்திறன் அல்லது முக்கியத்திறன் |
iii.வெளிச்சுவாசத்திற்குப் பிறகு உள்ளிழுக்கப்படும் காற்றின் கொள்ளளவு |
| S) FRC | உட்சுவாசத்திற்குப் பிறகு வெளி யேற்றப்படும் காற்றின் கொள்ளளவு |
| P | Q | R | S |
| i | ii | iii | iv |
| P | Q | R | S |
| ii | iii | iv | i |
| P | Q | R | S |
| ii | iii | i | iv |
| P | Q | R | S |
| iii | iv | i | ii |
32.
எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திலும், சிரைமண்டலத்தில் உள்ள இரத்தம் தமனி மண்டல இரத்தத்தை விட அதிகம். சிரைகளின் எந்த ஒரு குறிப்பிட்ட பண்பு இந்நிலையை அனுமதிக்கிறது.
மென்மையான தசைகள் இல்லாமை
வால்வுகள் இருப்பதால்
சிரைகள் நிணநீர் முடிச்சுகளுக்கு அருகில் இருப்பதால்
மெல்லிய எண்டோதீலிய சுவர் இருத்தலால்.
33.
உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
இனப்பெருக்கம்
வளர்ச்சி
வளர்சிதை மாற்றம்
இடப்பெயர்ச்சி
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
34.
செல்சுழற்சியின் S-நிலையில் ______.
ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA-வின் அளவு இரண்டு மடங்காகிறது
ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு தொடர்ந்து அதே அளவு இருக்கும்
குரோமோசோம்களின் எண்ணிக்கை அதிகமாகும்
ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA -வின் அளவு பாதியாக குறையும்
35.
பட்டியல் I –ஐ பட்டியல் II- உடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு?
| பட்டியல் I | பட்டியல் II |
| அ) தைலாய்டுகள் | (i) தட்டு வடிவப் பை போன்ற கோல்கை உறுப்புகள் |
| ஆ) கிரிஸ்டே | (ii) சுருங்கிய அமைப்பை கொண்ட DNA |
| இ) சிஸ்டர்னே | (iii) ஸ்ட்ரோமாவின் தட்டையான பை போன்ற சவ்வு |
| ஈ) குரோமாட்டின் | (iv) மைட்டோகாண்டிரியாவில் உள்ள மடிப்புகள் |
| அ | ஆ | இ | ஈ |
| (iii) | (iv) | (ii) | (i) |
| அ | ஆ | இ | ஈ |
| (iv ) | (iii) | (i) | (i i) |
| அ | ஆ | இ | ஈ |
| (iii) | (iv) | (i) | (ii) |
| அ | ஆ | இ | ஈ |
| (iii) | (i) | (iv) | (ii) |
36.
பறவை வளர்ப்பில் கிடைக்கும் ஏற்படும் நோய்கள் யாவை?
37.
நிபந்தனை அனிச்சை செயல் என்றால் என்ன?எடுத்துக்காட்டு தருக.`
38.
கீழ்க்கண்ட சுவாசக் கொள்ளளவு அளவீடுகளைக் கொண்டு உயிற்புத் திறனைக் கண்டுபிடி.
வெளிசுவாச சேமிப்பு கொள்ளவு : 1100 மி.லி
மூச்சுக்காற்று அளவு : 7000 மி.லி
உட்சுவாச சேமிப்பு கொள்ளளவு : 3000 மி.லி
39.
தவளையின் மற்றும் கரப்பான் பூச்சியின் வகைப்பாட்டு நிலைகளை எழுது.
40.
நீரியல் திறன் என்றால் என்ன?
41.
கண்டமாக்கம் என்றால் என்ன?
42.
கார்டே டென்டினே என்பது யாது?
43.
EMP வழித்தடத்தில் பாஸ்பரிகரணம் மற்றும் ஃபாஸ்பேட் நீக்கம் ஆகிய வினைகளில் ஈடுபடும் நொதிகளை எழுதுக.
1.
1. ஓய்வுநிலை சவ்வு மின் அழுத்தம்
2. செயல்நிலை சவ்வு மின்னழுத்தம்
3. மின்முனைப்பியக்க நீக்கம்
4. மின்முனைப்பியக்க மீட்சி
5. உச்ச மின்முனைப்பியக்கம்
6. நரம்புத்தூண்டல் கடத்தப்படும் வேகம்.
7. சைனாப்சிஸ் பகுதியில் தூண்டல் கடத்தப்படுத்தல்
2.
நைட்ரஜன் சுழற்சி(Nitrogen cycle):
இந்தச் சுழற்சி கிழ்கண்ட நிலைகள் உள்ளடிக்கியதாகும்.
(i) வளிமண்டல நைட்ரஜன் நிலைநிறுத்தம் (Atmospheric nitrogen fixation):
1.இது வளிமண்டலத்திலுள்ள டை நைட்ரஜன் படிப்படியாக ஹைட்ரஜன் அணுக்களின் சேர்க்கையால் ஒடுக்கம் அடையும் நிகழ்வு.
2.இரு நைட்ரஜன் அணுக்கள் (N=N) மூன்று சகப்பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. இவை பிளக்கப்பட்டு அம்மோனியாவாக மாறுகிறது.
3.நைட்ரஜன் நிலைப்படுத்தும் இச்செயல்முறைக்கு நைட்ரோஜினேஸ் என்ற நொதி கூட்டமைப்பு, மாலிப்டினம், இரும்பு, சல்ஃபர் (Mo,Fe,S) ஆகிய தனிமங்கள், காற்றில்லா நிலை,ATP ,e- (எலக்ட்ரான்) மற்றும் H+ (புரோட்டான்கள்) வழங்கும் குளுக்கோஸ் 6 பாஸ்பேட் ஆகியவை தேவைப்படுகின்றன.
4.நைட்ரேஜினேஸ் நொதியானது காற்றில்லா நிலையின்போது மட்டுமே செயல்படக்கூடியது.
5.காற்றில்லா நிலையை ஏற்படுத்த வேர்முடுச்சுகளில் உருவாகும் லெக்ஹீமோகுளோபின் (Leghaemoglobin) உதவுகிறது.
6.இந்த லெக்ஹீமோகுளோபின் ஆக்ஸிஜன் நீக்கியாக (Oxygen Scavenger) செயல்பட்டு ஆக்ஸிஜன் இல்லாச் சூழலை ஏற்படுத்துகிறது.
7.நைட்ரஜன் நிலைநிறுத்தம் பாக்டீரியாக்கள் வேர்முடுச்சுகளில் இளஞ்சிவப்பு நிறத்துடன் காணப்படுவதற்கு லெக்ஹீமோகுளோபின் நிறமியே காரணமாக உள்ளது.
ஒட்டுமொத்தவினை
\({ N }_{ 2 }+{ 8e }^{ - }+8H^{ + }+16ATP\longrightarrow 2N{ H }_{ 3 }^{ + }+{ H }_{ 2 }+16ADP+16Pi\)
(ii) நைட்ரேட்டாதல்(Nitrification)
அம்மோனியாவானது (NH3) முதலில் நைட்ரோசோமோனோஸ் பாக்டீரியத்தின் உதவியால் நைட்ரைட்டாக (NO3-) மாற்றம் அடைகிறது.
பின்னர் இது நைட்ரேட்டாக (NO3-) நைட்ரோபாக்டர் என்ற பாக்டீரியத்தினால் மாற்றம் அடைகிறது.
உயர் தாவரங்கள் அம்மோனியா அயன்களை விட நைட்ரேட்டுகளாக (NO+- ) உள்ளெடுத்துக்கொள்ளும் தகவமைப்பினைப் பெற்றுள்ளன.

(iii) நைட்ரேட் தன்மையதால் (Nitrate Assimilation)
நைட்ரேட்டானது ஒடுக்கம் அடைந்து அம்மோனியாவாக மாறிப் பின்னர்ச் செல்புரதங்களுள் சேர்க்கப்படும் நிகழ்விற்கு நைட்ரேட் தன்மையதால் என்று பெயர்.

(iv) அம்மோனியாவதால் (Ammonification)
இறந்த தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து பெறப்படும் கரிம நைட்ரஜன்(புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள்) பாக்டீரியங்களால் அம்மோனியாகவாக மாற்றப்படும் நிகழ்வு அம்மோனியாவாதால் எனப்படும். இச்செயலில் பங்கேற்கும் பாக்டீரியங்கள் பாசில்லஸ் ரமோசஸ் மற்றும் பாசில்லஸ் வல்காரிஸ்.
(v) நைட்ரஜன் நீக்கம்(Denitrifaction)
மண்ணில் காணப்படும் நைட்ரேட் வளிமண்டல நைட்ரஜனாக மாற்றப்படும் நிகழ்வு நைட்ரஜன் நீக்கம் எனப்படும். இதில் பங்கேற்கும் பாக்டீரியங்கள் சூடோமோனஸ், தையோபாசில்லஸ், பாசில்லஸ், சப்டிலிஸ், மற்றும் பிற.

3.
| 1 | சிறுநீர்ப்பையில் சேகரமாகும் திரவம் | சிறுநீர் |
| 2 | பௌமானின் கிண்ணம் வழியாக இரத்தம் வடிகட்டப்படும் போது உருவாவது | கிளாமருலார் வடிகட்டல் |
| 3 | சிறுநீர் தற்காலிகமாக சேமிக்கப்படல் | சிறுநீர்ப்பை |
| 4 | இரத்த நுண்நாளங்களால் பின்னப்பட்ட பந்து | கிளாமருலஸ் |
| 5 | கிளாமருலார் வடிதிரவத்தை சிறுநீராக மாற்றும் செயல் | கழிவுநீக்கம் |
| 6 | தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல் | யூரியா |
| 7 | ஒவ்வொன்றும் கிளாமருலஸைக் கொண்டுள்ளது | பௌமானின் கிண்ணம் |
| 8 | சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைச் சுமந்து செல்கிறது | சிறுநீர் நாளங்கள் |
| 9 | யூரியா மற்றும் பயனுள்ள பல பொருட்களைக் கொண்டுள்ளது | கிளாமருலார் வடிகட்டல் |
| 10 | இதன் சுவர்கள் வழியாக பௌமான் கிண்ணத்தினுள் இரத்தமானது வடிகட்டப்பட்டுள்ளது | கிளாமருலஸ் |
| 11 | சிறுநீர் கழித்தலுக்கான அறிவியல் பெயர் | மிக்ட்யூரின் |
| 12 | இரத்தத்திலும், திசு திரவத்திலும் உள்ள நீர் மற்றும் உப்பின் அளவை ஒழுங்குபடுத்தல். | உடற்சமநிலை பேணுதல் |
| 13 | சிறுநீரகங்கள், சிறுநீர் நாளங்கள் மற்றும் சிறுநீர்ப்பையைக் கொண்டுள்ளன. | சிறுநீரக மண்டலம் |
| 14 | கிளாமருலார் வடிதிரவத்திலிருந்து தேவையான (பயனுள்ள) பொருட்களை நீக்குதல் | மீண்டும் உறிஞ்சுதல் |
| 15 | அண்மை சுருண்ட குழல்களில் நீர் கடத்தப்படும் நிகழ்ச்சி | மீண்டும் உறிஞ்சுதல் |
| 16 | அண்மை சுருண்ட குழல்களைச் சூழ்ந்து காணப்படும் இரத்த நுண் நாளங்களில் உள்ள இரத்தம் எங்கிருந்து வருகிறது? | பௌமானின் கிண்ணம் |
| 17 | இரத்தத்தில் மட்டும் காணப்பட்டு, கிளாமருலார் வடிதிரவத்தில் காணப்படாத கரைபொருள் எது? | புரதங்கள் |
4.
1.நொதியால் ஊக்குவிக்கப்படும் வினையின் ஆரம்பப்பொருள் தளப்பொருள் (Substrate) எனப்படும்.அது மாற்றமடைந்து விளைப்பொருள் (Product) ஆகிறது.
2.தளப்பொருளானது நொதியின் மீது உள்ள ஊக்குவிப்பு தளம் (Active site) என்ற பகுதியோடு பிணைந்துக் கொள்கிறது.
3.இது பூட்டு - சாவி இயக்க முறையில் நிகழும் நொதி செயலாகும்.(Lock and key mechanism) இவ்வாறு நொதி - தளப்பொருள் கூட்டுத்தொகுதி உருவாகும் போது தளப்பொருளின் ஆற்றல் உயர்ந்து இடைநிலையை அடைந்து பின்னர் விளைப்பொருட்களாக மாறுவதுடன் நொதி எந்த மாற்றமும் அடையாமல் விடுவிக்கப்படுகிறது.
5.
1. மென்மையான புழு போன்ற குறைவான எண்ணிக்கையில் விலங்குகளைக் கொண்டது.
2. கடல் நீரில் வாழும்.
3. பொதுவான நாக்குப் புழு அல்லது அகார்ன் புழு என்று அழைக்கப்படுகிறது.
4. உண்மையான உடற்குழியை பெற்றுள்ள மூவடுக்க உயிரி.
5. உறுப்பு மண்டல அளவிலான உடற்கட்டமைப்பு உடையது.
6. இருபக்க சமம்சீரமைப்புடையது.
7. உருளைவடிவ உடல் 1. புரோபோஸிஸ் 2. கழுத்து (குட்டையானபாட்டை). 3. நீண்ட உடல் பகுதியைக் கொண்டுள்ளது.
8. லாக்குனா எனும் சிற்றிடைக்குழி காணப்படுகிறது.
9. சுவாசத்திற்கு ஒரு இணை செவுள் பிளவுகள் தொண்டையில் அமைந்துள்ளது.
10. கழிவுநீக்க உறுப்பு கிளாமருலஸ் அல்லது புரோபோசிஸ் சுரப்பி.
11. எளிய நரம்பு மண்டலத்தைக் கொண்டுள்ளது.
12. பால் இனப்பெருக்கம், வெளிக்கருவுருதல் காணப்படுகிறது.
6.
1. சில தாவரங்களின் வேர்கள் முதல்நிலைப் பணிகளைத் தவிர வேறு சில பணிகளையும் செய்கின்றன.
2. இவை இரண்டாம் நிலைப் பணிகள் எனப்படும்.
3. இப்பணிகள் மேற்கொள்வதற்கு வேர்கள் உருமாற்றம் அடைகிறது. இதற்கு வேர் உருமாற்றம் என்று பெயர்
வேற்றிட வேர் உருமாற்றம் (Adventinous root modification):
அ.சேமிப்பு வேர்கள் (Storage roots):
1. கிழங்கு வேர்கள் (Tuberous roots): இவ்வகை வேர்கள் குறிப்பிட்ட வடிவமற்று பருத்துக் காணபப்டும். கிழங்கு வேர்கள் கொத்தாக அல்லாமல் தனித்தே உருவாகின்றன.. எ.கா: ஐபோமியா படாடஸ் (சர்க்கரைவள்ளிக் கிழங்கு)
2. தொகுப்பு வேர்கள் (Fasciculated toots):
இவை தண்டின் அடிப்பகுதியிலிருந்து கொத்தாக உருவாகும் வேர்களாகும். எ.கா: டாலியா, அஸ்பராகஸ் (தண்ணீர் விட்டான் கிழங்கு), ருயில்லியா (சிலந்திநாயகம்)
3. முடிச்சு வேர்கள் (Nodulose roots): இவ்வகை வேர்களில் நுனிபகுதி மட்டும் பருத்துக் காணப்படும். எ.கா: மரான்டா (ஆரோரூட் கிழங்கு), குர்குமா அமாடா (மா, இஞ்சி), குர்குமா லாங்கா (மஞ்சள்)
4. மணிமாலை வடிவ வேர்கள் (Moniliform or beaded roots): இவ்வகை வேர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பருத்தும் சுருங்கியும் மணி மாலை வடிவில் காணப்படுகின்றன. எ.கா: வைடிஸ் (திராட்சை), போர்டுலகா (பருப்புக்கீரை), மொமார்டிகா (பாகற்காய்), பேசெல்லா (இந்தியப் பசலைக்கீரை)
5. வளைய வேர்கள் (Annulated roots): இவ்வகை வேர்கள் சீரான இடைவெளியில் தம் மேற்பரப்பில் தொடர் வளையங்களாகப் பருத்துக் காணபப்டும். எ.கா: சைகோட்ரியா

ஆ. தாங்கு வேர்கள் (Mechanical roots)
1. தூண் வேர்கள் (Prop or Pillar roots): இவை பக்கக்கிளைகளிலிருந்து கீழ்நோக்கி நேராக வளர்ந்து மண்ணுக்குள் செல்லும். எ.கா: ஃபைகஸ் பெங்காலென்சிஸ் (ஆலமரம்). இந்திய ரப்பர் மரம்.
முட்டு வேர்கள் (Stilt or Brace roots): இவை தண்டின் அடிப்பகுதி கணுக்களிலிருந்து சாய்வாக வளரும் தடித்த வேர்களாகும். இவ்வகை வேர்கள் தாவரத்திற்கு ஆதார வலிமையைத் தருகின்றன. எ.கா: சக்காரம் அஃபிஸினாரம் (கரும்பு), ஜியா மேஸ் (மக்காச்சோளம்), பண்டானஸ், ரைசோஃபோரா (கண்டல்)
3. ஏறு வேர்கள் (Climbing or Clasping or Clinging):
இவை தண்டின் கணுக்களிலிருந்து உருவாகி ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு ஏறுவதற்கு உதவும் வேர்களாகும். பற்றிக்கொள்வதற்கு எதுவாகக் காற்றில் காயும் ஒட்டுத் திரவத்தை இவை சுரக்கின்றன. எ.கா: எப்பிபிரிம்னம் பின்னேட்டம், பைப்பர் பீடல் (வெற்றிலைக்கொடி), ஃபைகஸ் பியுமிலா (கொடி அத்தி).
4. பலகை வேர்கள் (Buttress roots):
சிலவகை மரங்களில் அகலமான பலகை போன்ற புற வளர்ச்சியானது தண்டைச் சுற்றி கீழ்நோக்கி வளர்ந்து பெரும் மரங்களுக்கு வலிமை சேர்க்க உதவுகின்றன. இது மழைக்காடுகளில் தகவமைப்பாகும். எ.கா: பாம்பாக்ஸ் செய்பா (செவ்விலவம் பஞ்சு) செய்பா அர்ஜீனானா (மருத மரம்), டெலோனிக்ஸ் ரீஜியா (நெருப்புக் கொன்றை), டெரிகோட்டா அலாட்டா.

இ. இன்றியமையா பணி வேர்கள் (Vital function root)
1. தொற்று அல்லது வெலாமென் வேர்கள் (Epiphytic roots):
சில தொற்றுவாழ் ஆர்க்கிடுகள் சிறப்பு வகை தொங்கும் தரைமேல் வேர்களை உருவாக்குகின்றன. இவ்வகை வேர்கள் வெலாமென் என்கின்ற மென்மையான திசுவைக் கொண்டிருக்கின்றன. இத்திசு காற்றிலிருந்து ஈரத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எ.கா: வாண்டா, டென்ட்ரோபியம், ஏரிடிஸ்
2. இலை வேர்கள் (Foliar or Reproductive roots): இலை நரம்புகளிலிருந்தோ அல்லது இலைப்பரப்பிலிருந்தோ வேர்கள் உருவாகி புதிய தாவரங்களை உருவாக்குகின்றன. எ.கா: பிரையோஃபில்லம், பெகோனியா, ஜாமியோகுல்கஸ்
3. உறிஞ்சி அல்லது ஒட்டுண்ணி வேர்கள் (Sucking or Haustorial roots): இவ்வேர்கள் ஒட்டுண்ணித் தாவரங்களில் காணப்படுகின்றன. தண்டிலிருந்து ஓம்புயிரித் திசுவிற்குள் துளைத்துச் சென்று சத்துக்களை உறிஞ்சும் வெற்றிட வேர்களை ஒட்டுண்ணித் தாவரங்கள் தோற்றுவிக்கின்றன. எகா. கஸ்கியூட்டா, கசிதா, ஒரோபாங்கி, விஸ்கம், டென்ரோப்தே (புல்லுருவி).
4. ஒளிச்சேர்க்கை வேர்கள் Photosynthetic or Assimilatory roots): சிலவகை ஏறு மற்றும் தொற்றுத் தாவரங்களின் வேர்கள் பசுங்கணிகங்களைத் தோற்றுவித்து பசுமை நிறமாக மாறி ஒளிச்சேர்க்கைக்கு உதவுகின்றன.
எ.கா: டைனோஸ்போரா (சீந்தில் கொடி), ட்ராபா நாடன்ஸ், டீனியோஃபில்லம்.

7.
உயிரியல் சார் நெருக்கடிகள்:
1. பிற உயிரினங்களான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள், பூச்சிகள், களைகள், போட்டித் தாவரங்கள் போன்றவைகளால் தாவரங்களில் ஏற்படும் கடுமையான விளைவுகளே உயிரியல் சார் நெருக்கடி எனப்படுகிறது.
2. கால்நடைகளின் தீவனத்திற்காகவும் எரிபொருள் தேவைக்காகவும், வேளாண்மை பயன்பாட்டிற்காகவும்,மனிதர்களால் தாவரங்கள் வெட்டப்படுதலும் உயிரியல் சார் நெருக்கடிக்கு காரணமாக உள்ளன.
3. சுற்றுச்சூழலில் எப்பொழுதும் காணப்படும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் புழுக்கள் ஆகியவற்றால் ஏற்படும் உயிரியல் சார் நெருக்கடி செயல்திறன் மிக்க நெருக்கடிகள் என்ற அழைக்கப்படுகின்றன.
அல்லிலோபதி:
1. ஓர் உயிரினம் உற்பத்தி செய்யும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரி வேதிப்பொருள்கள் பிற உயிரினங்களின் முளைத்தல், வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.இது அல்லிலோபதி என்றழைக்கப்படும்.
2. இவை நன்மைத் தருபவை நேர்மறை அல்லிலோபதி அல்லது தீங்களிப்பவை எதிர்மறை அல்லிலோபதி-களாக உள்ளன.
3. இத்தகைய அல்லிலோ வேதிப்பொருட்கள் இலையிலிருந்து கசியும் நீர் தரையை அடைந்த பிறகும் மற்றும் வேரிலிருந்தும் பெறப்படுகின்றன.
4. அல்லிலோபதி என்ற கிரேக்க சொல் அல்லிலோன்-ஒருவருக்கொருவர் மற்றும் பாத்தோஸ்-பாதிக்க எனவும் முதன்முதல் ஹின்ஸ்மோலிஸ் என்பவரால் 1937-ல் பயன்படுத்தப்பட்டது.
5. அல்லிலோபதி விளைவுகளைத் தாவரங்கள் பயிர்களின் மீதும் பயிர்களைத் தாவரங்களின் மீதும் ஏற்படுத்தலாம்.
6. கருப்பு பாதாம் (ஜக்லான் நைக்ரம்) நன்கு அறியப்பட்ட அல்லிலோபதி தாவரங்களில் மீதும் ஏற்படுத்தலாம்.
7. இக்கருப்பு பாதாமில் ஜக்லான் என்ற வேதிப்பொருள் உள்ளன. இது ஒரு சுவாச தடுப்பான்.
8. சொலோனேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்காளான தக்காளி, மிளகாய் மற்றும் கத்திரிக்காய் ஜக்லானுக்கு எளிதில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை.
9. இத்தகையத் தாவரங்கள் அல்லிலோ வேதிப்பொருள்களுடன் சேரும்போது வாடல், பச்சைய சோகை இறப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
10. தற்போது அல்லிலோபதி மரங்களின் பட்டியலில் பெருமரம் (அய்லாந்தஸ் அல்டிசிமா) சேர்க்கப்பட்டுள்ளது.
11.அய்லான்தோன் ஓர் அல்லிலோ வேதிப்பொருள். இது அய்லான்தஸ் வேரிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.
12.சோளத்தில் காணப்படும் சொர்கோலான் என்ற அல்லிலோ வேதிப்பொருள்கள் அல்லிலோபதி செயல்தன்மை கொண்டவை.
13.இது பெரும்பாலும் சோளத்தின் சிற்றினங்களின் வேர்க்கசிவுகளில் காணப்படும்.
14. மக்காசோளத்தின் வேர்க் கசிவு சினோபேடியம் அல்பம் மற்றும் அமரான்தஸ்ரெட்ரோப்ளக்ஸ்ஸஸ் போன்ற சிலகளைத் தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.
15.ஓட்ஸ் (அவினா ஃபடுவா) தாவரத்தின் விதைக்கசிவு கோதுமை விதைமுளைத்தலை பாதிக்கின்றன.
(ii) நோய் உருவாக்கம்:
நுண்ணியர்களின் விளைவால் தாவரங்களில் நோய் உண்டாகின்றன. உதாரணமாக சாந்தோமோனாஸ் சிட்ரி.
8.
| C3 மற்றும் C4 தாவரங்கள் வேறுபாடுகள் | |
| C3 தாவரங்கள் | C4 தாவரங்கள் |
| CO2 நிலைநிறுத்தும் இலையிடைத் திசுக்களில் மட்டும் நடைபெறுகிறது. |
CO2 நிலைநிறுத்தும் காற்றை உறை மற்றும் இலையிடைத் திசு ஆகியவைகளில் நடைபெறுகிறது. |
| CO2-வை நிலைநிறுத்தும் பொருள் சுருக்ஷஞ மட்டும் | PEP இலையிடைடீ திசுவிலும் கற்றை உறையில் RUBP-யும் நிலைநிறுத்தும் பொருள்களாக உள்ளன. |
| உகந்த வெப்பநிலை 200 முதல் 250C | உகந்த வெப்பநிலை 30ஸ் முதல் 45ஸ்ஊ |
| CO2 நிலைநிறுத்தும் 50 ppm சேரியில் நடைபெறுகிறது. | CO2 நிலைநிறுத்தும் 10ppm செறிவிற்குக் குறைவான செறிவில் நடைபெறுகிறது. |
| அதிக ஒளிச்சுவாசதினால் குறைவான செயல்திறன் பெற்றது | குறைவான ஒளிச்சுவாசதினால் அதிகச் செயல்திறன் பெற்றது. |
| RUBP கார்பாக்சிலேஸ் நொதி CO3 நிலைநிறுத்தத்திற்கு உதவுகிறது. | PEP கார்பாக்சிலேஸ்மற்றும் RUBP கார்பாக்சிலேஸ் நொதிகள் CO2 நிலைநிறுத்தத்திற்கு உதவுகிறது. |
9.
(i) பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் தோன்றுமிடத்தை வைத்து முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் வேறுபாட்டை உணரலாம்.
(ii) இதற்கு முக்கிய காரணம் கனிமங்களின் இடம்பெயர்வாகும். இதன் அடிப்படையில்
(அ) விரைவாக இடம் பெயரும் தனிமங்கள்.
(ஆ) ஒப்பீட்டளவில் இடம் பெயராத தனிமங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.
(அ) விரைவாக இடம் பெயரும் தனிமங்கள்:
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், குளோரின், சோடியம், துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் விரைவாக இடம்பெயர்வதால் பற்றாக்குறை அறிகுறிகள் முதிர்ச்சியடைந்த, உதிரும் நிலையில் உள்ள இலைகளில் தோன்றுகிறது.
(ஆ) ஒப்பீட்டளவில் இடம்பெயராத கனிமங்கள்:
கால்சியம், கந்தகம், இரும்பு, போரான் மற்றும் தாமிரம் போன்ற தனிமங்கள் எளிதில் இடம்பெயர்வதில்லை. எனவே, பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் இளம் இலைகளில் தோன்றுகிறது.
10.
ஸ்கிலிரைடுகளின் வகைகளை:
(i) பிரேக்கி ஸ்கிலிரைடுகள் அல்லது கல் செல்கள் (Brachysclerids or Stone cells):
இவை ஒத்த விட்டம் கொண்ட ஸ்கிலிரைடுகள். கடினமான செல் சுவர்களைக் கொண்டுள்ளன. இச்செல்கள் தாவரங்களின் பட்டைகள், பித், புறணி, கடின கருவூண் திசு மற்றும் சியல் கனிகளின் தசைப் பகுதிகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: பேரிக்காயின் தளத்திசு (pulp of Pyrus)
(ii) மேக்ரோஸ்கிலிரைடுகள் (Macrosclereids):
இவை சிறு கழிகள் போன்ற நீண்ட செல்களாகும். இவை லெகூம் தாவர விதை வெளி உறைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: குரோட்டலேரியா, பைசம்.
(iii) ஆஸ்டியோ ஸ்கிலிரைடுகள் (Osteosclereids):
இவை விரிவடைந்த நுனிப் பாகங்களுடன் கூடிய நீண்ட செல்கள். இவை இலைகள், விதை உறைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு:பைசம் மற்றும் ஹேகியா (Kakea) விதை உறைகள்.
(iv) ஆஸ்டிரோ ஸ்கிலிரைடுகள் (Astrosclereids):
எவை கிளைத்த பிரிவுகலைக் கொண்ட நட்சத்திர வடிவ ஸ்கிலிரைடுகள் ஆகும். இவை இலைகள், இலைக்காம்பு ஆகியவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: தேயிலை, நிம்பையா, ட்ரைகோடென்ட்ரான்.
(v) டிரைக்கோ ஸ்கிலிரைடுகள் (Trichosclereids):
இவை மெல்லிய சுவர் கொண்ட மயிரிழைகள் போன்ற ஸ்கிலிரைடுகள் ஆகும். எண்ணற்ற கோண நுனிப்பிளவுற்ற படிகங்கள் செல் சுவரில் படிந்திருக்கும். இவை நீர் தாவரங்களின் தண்டு மற்றும் இலைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: நிம்பையா, இலைகள், மான்ஸ்டீரா காற்று வேர்கள்.
11.
12.
தனிச் சதைக்கனி(simple fleshy fruit) : ஒற்றைமலரின் ஒரு சூலகப்பையிலிருந்து உருவாகும் கனியாகும். இவற்றின் கனித்தோல் சதைப்பற்றுடன் சாறு நிறைந்தும் காணப்படுகிறது. கனித்தோல் வெளித்தோல், நடுத்தோல், உட்தோல் என வேறுபட்டுக் காணப்படுகிறது. மேலும் இது கீழ்க்கண்ட உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அ. சதைக்கனி (Berry)
1. இக்கனி இரண்டு அல்லது பல சூலக இலைகள் இணைந்து உருவாகும் கனியாகும்.
2. கனியின் வெளித்தோல் மெல்லியதாகவும், நடுத்தோல் மற்றும் உட்தோல் வேறுபாடற்றும் காணப்படும்.
3.இவைகள் சாறு நிறைந்த பகுதியை உருவாக்குகிறது.
எடுத்துக்காட்டு: தக்காளி, பேரிச்சை, திராட்சை, கத்தரி.
ஆ) உள்ஒட்டுச் சதைக்கனி (Drupe):
1.இக்கனி ஒற்றைச் சூலக இலை கொண்ட மேல்மட்டச் சூலகப்பையிலிருந்து உருவாகிறது.
2. இவை பொதுவாக சாறு நிறைந்த பகுதியை உருவாக்குகிறது.
3. இக்கனித்தோலின் வெளித்தோல் இறுக்கமான தோல் போன்றும், உட்தோல் கல் போன்று கடினமாகி விதையைச் சூழ்ந்தும் காணப்படுகிறது.
எடுத்துக்காட்டு: மா, தென்னை.
13.
1. இந்தப் பெப்டைடு ஹார்மோன் குழந்தை பிறப்பின்போது கருப்பையை தீவிரமாகச் சுருங்கச் செய்வதுடன் பால் சுரப்பிகளில் பால் உற்பத்தி மற்றும் வெளியேற்றத்தைத் தூண்டுகிறது.
2. ஆக்ஸிடோசின் என்பதற்கு துரிதப் பிறப்பு என்பது பொருள்.
14.
வேர்களால் உறிஞ்சப்பட்ட நீர் இறுதியில் இலைகளை அடைந்து அங்கிருந்து நீராவியாக வளி மண்டலத்தினை அடைகிறது.
உறிஞ்சப்பட்டதில் மிகச்சிறிய அளவிலான (5% ஐ விடக் குறைவு) நீரே தாவரத்தின் வளர்ச்சிக்கும் வளச்சிதை மாற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
15.
1.லெப்டோடீன்
2.சைக்கோட்டீன்
3.பாக்கிடீன்
4.டிப்ளோடீன்
5. டையாகைனசிஸ்
16.
குன்றல் பகுப்பின் போது காணப்படும் குரோமோசோம்களின் பண்புகள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் தாவர வகைப்பாட்டு சிக்கல்களை களைவது கேரியோடாக்ஸானமி எனப்படும்.
17.
1.தரசம் - குளோரோஃபைசி
2.லாமினாரியன் தரசம்-ரோடோஃபைசி
3.புளோரிடிய தரசம்-ரோடோஃபைசி
18.
இரைப்பையில் குடல் உறிஞ்சிகள் கிடையாது.
காரணம்:
1. இரைப்பை உணவை சேமிக்கிறது.
2. இரைப்பை உணவை அரைக்கிறது
3. இரைப்பை நீரில் நொதிகள் காணப்படுவதால் செரித்தலில் மட்டும் ஈடுபடுகிறது.
4. உணவு முழுமையாக செரித்தல் அடையாமல் இருப்பதால் உறிஞ்சுவதற்கேற்ற சிறிய மூலக் கூறுகள் உருவாகவில்லை.
5. உறிஞ்சுவதற்குரிய நுண்ரத்தக்குழாய்கள் கிடையாது. மேற்கூறிய காரணங்களினால் இரப்பை குடல் உறிஞ்சிகளைப் பெற்றிருக்கவில்லை.
19.
1.இவைகள் தூண்வடிவத்தில் சமமற்ற அளவுகளில் காணப்படுகிறது.
2.இவை ஒரே அடுக்கினால் ஆனது.
3.ஆனால் பார்ப்பதற்கு பல அடுக்குகள் போன்று தோற்றமளிக்கிறது.
4.இதற்கு காரணம் இதன் செல்களில் உள்ள உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுகிறது.
20.
லைக்கென் உடலத்தில் பாசிசெல்கள் பரவலின் அடிப்படையில்
| ஹோமியோமிரஸ் | ஹெட்டிரோமிரஸ் |
| பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவியிருத்தல். | வரையறுக்கப்பட்ட பாசி, பூஞ்சை அடுக்குகள் காணப்படுதல். |
21.
(b)
திட்டமிடப்பட்ட செல் இறப்பினால்
22.
(d)
இவை அனைத்தும்
23.
(d)
தசை இயக்கம்
24.
(b)
போடோ சைட்டுகள்
25.
(a)
பொட்டாசியம் அயனியின் உள்நுழைவு
26.
(c)
கிளைடெல்லம்
27.
(b)
தண்டிலிருந்து. மேலிருந்து தரையை நோக்கி வளர்கிறது
28.
(c)
முப்பால்மலர்த்தனித்தாவரங்கள்
29.
(c)
செல்களில் உலா உட்கருக்கள் வெவ்வேறு மட்டங்களில் காணப்படுவதால்
30.
(b)
நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும்.
31.
(d)
| P | Q | R | S |
| iii | iv | i | ii |
32.
(a)
மென்மையான தசைகள் இல்லாமை
33.
(e)
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
34.
(a)
ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA-வின் அளவு இரண்டு மடங்காகிறது
35.
(c)
| அ | ஆ | இ | ஈ |
| (iii) | (iv) | (i) | (ii) |
36.
1. பறவை இறகுகள், தலையணைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் (quilts) தயாரிக்க பயன்படுகிறது.
2. பறவை எச்சத்தில் நைட்ரஜன், பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் போன்ற உயர்சத்து பொருட்கள் நிறைந்துள்ளதால் மிகச்சிறந்த உரமாக பயன்படுத்தப்படுகிறது.
3.பறவை வளர்ப்பகத்திலிருந்து உருவாகும் இரத்த உணவு, இறகுணர்வு உபபொருள் உணவு மற்றும் முட்டை பொரிப்பகத்திலிருந்து உருவாகும் பொருட்கள் போன்றவை மாமிசத்திற்காக வளர்க்கப்படும் விலங்கு மற்றும் பறவை வளர்ச்சிக்கு நல்ல உணவாக பயன்படுத்தப்படுகிறது.
4.மேலும்,இப்பொருட்களில் விலங்குகள் வளர்ச்சிக்குத் தேவையான புரதங்கள், கொழுப்பு வைட்டமின்கள் மற்றும் அதிகளவிலான தனிம ஊட்டங்கள் நிறைந்துள்ளன.
37.
1. கற்றலினால் அல்லது அனுபவத்தால் ஏற்படும் அனிச்சை செயல் நிபந்தனை அனிச்சை செயல் எனப்படும்.
2. இது,விலங்குகளின் உடலில் இயற்கையாக இருப்பதில்லை.
3. பயிற்சி மற்றும் அனுபவத்தின் காரணமாகவே நடத்தை பண்புகளில் ஒன்றாய் இச்செயல் நடைபெறுகிறது.
4. எ.கா: உணவைப் பார்க்கும் போதும் அதன் மணத்தை நுகரும் போதும் உமிழ்நீர் சுரப்பிகளில் ஏற்படும் கிளர்ச்சி.
5. மூளையின் கார்டெக்ஸ் பகுதி இதனைக் கட்டுப்படுத்துகிறது.
38.
உயிர்ப்புத்திறன் =வெளிச்சுவாச கொள்ளளவு + மூச்சுக்காற்று கொள்ளளவு + உட்சுவாச சேமிப்பு கொள்ளளவு
=1100+7000+3000 மி.லி
=11100 மி.லி.
39.
தவளையின் வகைப்பாடு:
தொகுதி : முதுகு நாணிகள்
வகுப்பு : இருவாழ்விகள்
வரிசை : அனுரா
பேரினம் : ரானா
சிற்றினம் : ஹெக்ஸாடேக்டைலா (இந்திய பச்சைத்தவளை)
கரப்பான்பூச்சியின் வகைப்பாடு:
தொகுதி : கணுக்காலிகள்
வகுப்பு : பூச்சிகள்
வரிசை : ஆர்தரப்டீரா
பேரினம் : பெரிபிபிளனெட்டா
சிற்றினம் : அமெரிக்கானா
40.
நீரியல் திறன் பற்றிய கருத்தாக்கம் ஸ்லேடையார் மற்றும் டெயிலர் ஆகியோரால் 1960 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நீரியல் திறன் என்பது ஒரே குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஒரு அமைப்பில் உள்ள நீரை, தூய நீரின் நீரியல் ஆற்றலுடன் ஒப்பிடுவதாகும்.
ஒரு அமைப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள் எந்த அளவிற்கு எளிதாக இடம்பெயர்கிறது என்பதை அளவிடும் குறியீடாகவும் இதனைப் பயன்படுத்தலாம்.
41.
சில விலங்குகளின் உடல், உள்ளும் புறமும் வரிசையாக ஒரே மாதிரியான பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இக் கண்டங்களில் சில உறுப்புகள் மீண்டும் மீண்டும் காணப்படும். இதற்கு கண்டமாக்கம் எனப்படும்.
எ.கா: வளைதசைப் புழுக்கள்.
42.
1. வென்டிரிக்கிளின் மாயோகார்டியல் தசைகள் சீரற்ற தசைமேடுகளை நீட்சிளாகப் கொண்டுள்ளன.
2. இதற்கு ட்ரபெகுலே காரிணியே என்று பெயர்
3. இது கார்டே டென்டினே ஆக மாற்றமடைந்துள்ளது.
4. அரைச்சந்திர வால்வை மூடவும் திறக்கவும் கார்டே டென்டினே உதவுகிறது.
5. கார்டே டென்டினே பாப்பில்லரி தசைகள் மூலம் வென்டிரிக்கிளின் அடிப்புற உட்சுவரில் இணைக்கப்பட்டுள்ளன.
43.
I.பாஸ்பரிகரண வினை
நொதி:ஹெக்சோகைனேஸ்
II.ஃபாஸ்பேட் நீக்கம் வினை
நொதி:ஃபாஸ்ஃபாஃபோகிளிசரேட் கைனேஸ்
நொதி: பைருவேட் கைனேஸ்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards