11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/12/2018
11th Biology Model Test -1
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
முழு நொதி என்றால் என்ன?
2.
டிரைகிளிஸிரைடுகள் என்பது யாது?
3.
பாலிடீன் குரோமோசோம் தோன்றல் எவ்வாறு ஏற்படுகிறது?
4.
பெராக்சிசோம்கள் எங்கு காணப்படுகிறது?
5.
உட்கரு எனப்பெயரிட்டவர் யார்?
6.
கணைய நீரில் உள்ள நொதிகளையும், அதன் செயல்களையும் எழுது.
7.
உடல் பருமன் என்பது யாது?
8.
கல்லீரல் பழைய செல்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படுகிறது.
9.
தொகுதி: அன்னலிடாவில் காணப்படும் சுவச நிறமிகள் யாவை?
10.
பின்னு கொடி அல்லது தண்டு சூழல் கொடி என்பது யாது?
11.
பூஞ்சைகளின் செல்சுவர் எதனால் ஆனது?
12.
புளூரி லாக்குலர் சூற்பை என்பது யாது?
13.
மைக்கோபிளாஸ்மா என்பது யாது?
14.
DNA வரிக்குறியிடுதலில் பய்னபடுத்துவது யாது?
15.
இனப்பரிணாம வழி மரம் என்பது யாது?
16.
மார்பறையை வயிற்றறையிலிருந்து பிரிப்பது எது?
17.
நுரையீரலினுள் காணப்படும் சுவாசப் பரப்பின் பண்புகள் யாவை?
18.
மண்புழுவின் சுவாச உறுப்பு யாது? அது எங்கனம் வாயுப்பரிமாற்றத்தில் ஈடுபடுகிறது?
19.
இனப்பெருக்கம் செய்யாத உயிரினங்களின் பெயரினைத் தருக.ஏன் அவைகள் இனப்பெருக்கம் செய்வதில்லை?
20.
குளோரகோஜன் செல்கள் என்றால் என்ன?
21.
ருமாட்டிக் இதய நோய் என்பது யாது?
22.
இரத்த நுண்நாளத்தில் காணப்படாதது எது?
23.
ஹோப்ளோஸ்டீல் என்பது யாது? எ.கா. தருக.
24.
புதர் செடிகள் என்பவை யாவை?
25.
டிரக்கியோஃபைட்டாவில் அடங்கிய தாவரங்கள் யாவை?
26.
மஞ்சரி என்றால் என்ன?
27.
வகைப்பாட்டிற்கான கருவிக் கூறுகள் எவை?
28.
ஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்துக.
29.
தளர்வான இணைப்புத் திசுக்கள் என்பவை எவை?
30.
வரையறு: சிற்றினம்
31.
மூன்று வகை செல் சந்திப்புகள் யாவை?
32.
ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?
33.
காற்றானது நாசியிலிருந்து மூச்சுக்குழாயை அடையப் பல உறுப்புகளைக் கடந்து செல்கிறது. அவ்வுறுப்புகளின் பெயர்களை வரிசைப்படுத்து.
34.
மீன்களில் காணப்படும் காற்றுப் பைகளின் பண்புகளைக் குறிப்பிடுக.
35.
வலது வென்ட்ரிக்கிள் சுவர், இடதுவென்ட்ரிக்கிள் சுவரை விட மெல்லியது. ஏன்?
36.
பக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன?
37.
மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக
38.
கீழ்கண்டவற்றிற்கு கலைச்சொற்கள் தருக
அ) ஒரு வளமற்ற மகரந்தத்தாள்
ஆ) மகரந்தத்தாள்கள் ஒரு கட்டாக இணைந்த மகரந்தத்தாள்கள்
இ) அல்லி இதழ்களுடன் இணைந்திருத்தல்
39.
ஒற்றைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலை இரட்டைமடிய கேமீட் உயிரி வாழ்க்கைச் சுழலிலிருந்து வேறுபடுத்துக.
40.
சென்ட்ரோமியர் அமைவிடத்தில் அடிப்படையில் குரோமோசோம் வகைகளை கூறு?
41.
மீளா அல்லது மாற்றமுடியாத தன்மையுடைய ஒடுக்கிகள் என்பவை யாவை?எ.கா.தருக.
42.
சினாப்ஃசிஸ் என்றால் என்ன?
43.
சமமற்ற கேமீட்களின் இணைவு என்றால் என்ன?
44.
உமிழ் நீரில் காணப்படும் பொருட்கள் யாவை?
45.
ஃபிம்ரியெ அல்லது நுண்சிலும்புகள் என்பது யாது?
46.
நீர்வாழிடத் தாவரங்களை அவை கொண்டுள்ள சூழல் தகவமைப்புகளைக் கொண்டு வகைப்படுத்து.
47.
மெய் சைம் என அழைக்கப்படும் சைமோஸ் வகை மஞ்சரி?
48.
கடற்பஞ்சுகளில் நீரோட்ட மண்டலமான கால்வாய் மண்டலத்தின் பயன் யாது?
49.
ஹீமோகுளோபின் பற்றி எழுது.
50.
ஹெர்பேரியம் என்றால் என்ன?
51.
கரப்பான்பூச்சியில் காணப்படும் கண்டங்களும் அதில் காணப்படும் உறுப்புகளும் ஓர் தொகுப்பு.
52.
ஆன்டிஜனின் மறுபெயர் யாது? அதில் காணப்படும் வேதிப்பொருட்கள் யாவை?
53.
இரு சொற் பெயரிடும் முறை என்பது யாது?
54.
விலங்கு திசுவகைகளை பட்டியலிடு
55.
மறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.
1.
புரதம் அல்லாத பகுதிக்கூறுடன் செயல்படும் நொதி முழு நொதி எனப்படும்.
2.
கிளிஸரால் ஒன்றுடன் மூன்று கொழுப்பு அமிலங்கள் பிணைப்புற்று உருவாகும் ஒரு மூலக்கூறு டிரைகிளிஸிரைடாகும்.
3.
எண்டோமைட்டாசிஸ் மூலம் தோன்றுகிறது.
4.
1. தாவர இலை செல்கள்.
2. பாலூட்டிகளின் கல்லிரல் , சிறுநீரகம்
3. புரோட்டோசோவன்கள்
4. ஈஸ்ட் செல்கள்
5.
இராபார்ட் பிரெளன்
6.
1. கிளைக்கோஜன், ஸ்டார்ச்
மால்டோஸ்
2. பால்மமாக்கப்பட்ட கொழுப்பு
கொழுப்பு அமிலம் + மோனோ கிளிசரைடுகள்.
3. நியூக்ளிக் அமிலம்
நியூக்ளியோடைடுகள் + நியூக்ளியோசைடுகள்.
7.
அளவுக்கு அதிகமான கொழுப்பு அடிப்போஸ் திசுவில் சேர்வதால் ஏற்படுவது உடல் பருமன் எனப்படும்.
8.
இழப்பு மீட்டல் தன்மையின் மூலம்.
9.
1. ஹீமோகுளோபின்.
2. குளோரோகுரூரின்.
10.
1. சில தாவரங்களுக்கு ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கான சிறப்பு தகவமைப்புகள் கிடையாது.
2. எனவே தண்டுப் பகுதியே ஆதாரத்தைச் சுற்றி பற்றி வளர்கிறது.
3. எ.கா.: ஐப்போமியா
(i) வலம்புரிக் கொடிகள்
(ii) இடம்புரிக் கொடிகள்
11.
கைட்டின் எனும் பாலிசாக்ரைட்டுகள் (N-அசிட்டைல் குளுக்கோஸிமைனின் பல்படி)
12.
மலரின் சூற்பைக்குள் ஒன்றுக்கு மேல் சூலக அறைகள் காணப்பட்டால் , அந்த சூற்பை, புளூரி லாக்குவார் எனப்படும்.
13.
மைக்கோபிளாஸ்மா என்பது மிகச் சிறிய பல்வகை உருவமுடைய கிராம் எதிர் நுண்ணியிரிகளாகும்.
14.
PCR பெருக்கம் மற்றும் மரபனு குறிப்பான் வரிசைப்படுத்ததுல் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
15.
1. மூலக்கூறு இனப்பரிணாம பகுப்பாய்வின் முடிவுகள் மர வடிவத்தில் வெளிப்படுத்தப்படுகின்றன.
2. இது இனபரிணாம வழி மரம் என்று அழைக்கபடுகிறது.
16.
உதரவிதானம்.
17.
1. அதிகப் பரப்பளவையும், அதிக இரத்த நுண்நாளங்களையும் பெற்றிருக்க வேண்டும்.
2. ஈரத்தன்மையுடன் மிக மெல்லிய சுவருடையதாக இருத்தல் வேண்டும்.
3. புறச் சூழலோடு நேரடி தொடர்பு கொண்டிருத்தல் வேண்டும்.
4. சுவாசத்தின் போது காற்று எளிதாக ஊடுருவக் கூடியதாக இருக்க வேண்டும்.
18.
1. உடற்சுவர்
2. தோலின் புறப்பரப்பில் காணப்படும் ஏராளமான இரத்த நாளங்கள் ஊடுருவல் மூலம் O2 உள் எடுத்து CO2 ஐ வெளியேற்றுகிறது.
3. வாயுப்பரிமாற்றத்திற்காக தோல் கோழை மற்றும் உடற்குழி திரவத்தால் ஈரப்பதத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
19.
வேலைக்காரத் தேனீக்கள் மற்றும் கோவேறு கழுதைகள் மலட்டுத் தன்மை காரணமாக இனப்பெருக்கம் செய்ய முடியவில்லை.
20.
1. மண்புழுவில் கழிவு நீக்கத்திற்கென குடலில் சுவரில் சிறப்பு வகை செல்கள் காணப்படுகிறது.
2. இவைகள் குளோரகோஜன் செல்கள் எனப்படும்.
3. இவைகள் குடலின் சுவரிலுள்ள இரத்தத்திலிருந்து நைட்ரஜன் கழிவுகள் நெஃப்ரீடியாக்கள் மூலம் வெளியேற்றப் படுகின்றன.
21.
1. ருமாட்டிக் காய்ச்சல் ஒரு சுயத் தடைக்காப்பு குறைபாட்டு நோயாகும்.
2. ஒருவரின் தொண்டைப்பகுதியில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டிரிங்கள் தாக்குவதால் இந்நோய் தோன்றுகிறது.
3. தொற்று ஏற்பட்ட 2-4 வாரங்களில் ருமாட்டிக் காய்ச்சல் ஏற்படுகிறது.
22.
1. டியூனிகா மீடியா காணப்படவில்லை.
2. மீள்தன்மையுடைய தசைநார்கள் காணப்படவில்லை.
23.
மையத்திலுள்ள சைலம் ஃபுளோயத்தால் சூழப்பட்டிருக்கும் ஸ்டீல், ஹோப்ளோஸ்டீல் எனப்படும்.
எ.கா செலாஜினெல்லா
24.
தரை அருகிலிருந்து தோன்றும் கட்டைத்தன்மையுடைய பல கிளைகளைக் கொண்டுள்ள பல்லாண்டுவாழ் தாவரங்கள், புதர் செடிகள் எனப்படும்.
எ.கா: ஹைபிஸ்கஸ் (செம்பருத்தி)
25.
1. டெரிட்டோஃபைட்டா.
2. 
26.
தாவரத்தின் கிளைத்த அல்லது கிளைக்காத அச்சின் மேல் கொத்தாக பல மலர்கள் குறிப்பிட்ட முறையில் தோன்றுவது மஞ்சரி எனப்படும்.
27.
1. நேரடி களப்பணி
2. ஆய்வு செய்தல்
3. அடையாளம் காணுதல்
4. வகைப்படுத்துதல்
5. பாதுகாத்தல்
6. ஆவணப் பதிவு செய்தல்
28.
| ஹோமியோமிரஸ் | ஹெட்டிரோமிரஸ் |
|---|---|
| பாசி செல்கள் லைக்கென் உடலத்தில் சீராகப் பரவி காணப்படும் | வரையறுக்கப்பட்ட பூஞ்சை அடுக்குகள் காணப்படும். |
29.
செல்களும் நாரிழைகளும் அரை திரவ வடிவத்தில் காணப்படும் அடிப்படை பொருட்களில் தளர்வாக அமைந்துள்ளதை தளர்வான இணைப்புத்திசு எனப்படும்.
எ.கா: எரியோலார் இணைப்புத் திசு
30.
இது வகைப்பாட்டின் அடிப்படை அலகாகும். புறத்தோற்றப் பண்புகளில் ஒன்றுபட்ட ஆனால் இனப்பெருக்க பண்புகளில் தனிப்படுத்தப்பட்ட இனப்பெருக்கத் திறனுடைய சேய்களை உண்டாக்கும் உயிரினங்கள் சிற்றினம் எனப்படும்.
31.
1. இறுக்கமான சந்திப்புகள் - செல்லில் உள்ள பொருட்கள் கசிந்து வெளியேறிவிடாமல் தடுக்கும்.
2. ஓட்டும் சந்திப்புகள் - அருகருகே அமைந்துள்ள செல்களை ஓட்டும் சந்திப்புகள் பிணைக்கின்றன.
3. இடைவெளி சந்திப்புகள் - அருகருகே உள்ள செல்களின் சைட்டோபிளாசத்தை இணைத்து அச்செல்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும். பணியை இடைவெளி சந்திப்புகள் செய்கின்றன. இதன் மூலம் அயனிகள் சிறிய, சில சமயம் பெரிய மூலக்கூறுகள் கடத்தப்படுகிறது.
32.
1. இனப்பெருக்க காலங்களில், ஆன் தவளைகளில் ஓரிணை குரல் பை காணப்படுகிறது.
2. குரல்ப்பையின் உதவியினால் கரகர ஒலியை உருவாக்கி பெண் தவளையை கவர்கின்றது.
33.
வெளி நாசித்துவாரங்கள் → நாசியரை → தொண்டை → குரல்வளை → மூச்சுக்குழல்.
34.
மீன்களில் உணவுக்குழலுடன் இணைக்கப்பட்ட அல்லது இணைக்கப்படாத காற்றுப்பைகள் காணப்படுகின்றன. இப்பைகள், காற்றுப் பரிமாற்றத்திற்கும் (நுரையீரல் மீன்கள்) திருக்கை மீன்களில் மிதவைத் தன்மையைக் கொடுக்கவும் பயன்படுகின்றன.
35.
1. வலது வென்ட்ரிக்கிள் - இங்கிருந்து ஆக்சிஜனற்ற இரத்தம் இதயத்தின் அருகில் உள்ள நுரையிரலுக்கு செல்வதால், குறைவான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டுவதால் இதன் சுவர் சற்று மெல்லியது.
2.இடது வென்ட்ரிக்கிள் - இங்கிருந்து ஆக்சிஜன் உள்ள இரத்தம் இதயத்தை விட்டு தூரமான உறுப்புகளுக்கு அனுப்பப்படவேண்டுமானதல், அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டி இருப்பதால், அதன் சுவர் தடிமனாக உள்ளது.
36.
பக்கவேரானது வேர்களின் பெரிசைக்களிலிருந்து தோன்றி அகத்தோல், புறணி மற்றும் ரைசோடெர்மியை தாண்டி வெளி வருவதால் அவைகள் அகத் தோன்றிகளாகும்.
37.
I) மொனிரா உயிரின உலகத்தின் அனைத்து புரோகாரியோடிக் உயிரினங்களையும் உள்ளடக்கியது.
II) இவை ஒரு செல் உயிரிகள்.
III) இவை இடப்பெயர்ச்சி அடையும் திறன் கொண்டவை. சில பாக்டீரியாக்கள் ஒட்டுண்ணிகள்ளாகவும், மற்றவை உடனுண்ணிகள்ளாக வாழ்கின்றன.
எடுத்துக்காட்டு : ஆர்க்கி பாக்டீரியா.
38.
அ) ஸ்மினோடு (மலட்டு மகரந்தம்)
ஆ) பொல்லினியம்
இ) அல்லி ஒட்டியவை.
39.
| வ. எண் | ஒற்றைமடிய கேமீட் உயிரி | இரட்டைமடிய கேமீட் உயிரி |
| 1. | கேமீட்டகத் தாவரநிலை (n) ஓங்கி காணப்படுகிறது. | வித்தகத் தாவர நிலை (2n) ஓங்கி காணப்படுகிறது. |
| 2. | வித்தகத் தாவரநிலை ஒரு செல்லால் ஆன கருமுட்டையை மட்டும் குறிப்பிடுகிறது. | கேமீட்டகத் தாவர நிலை ஒரு செல்லிலிருந்து சில செல்களைக் கொண்ட கேமீட்டகத் தாவரத்தைக் குறிக்கிறது. |
| 3. | கருமுட்டை குன்றல் பகுப்படைந்து ஒற்றை மடிய நிலையை தக்க வைத்துக்கொள்கிறது. | கேமீட்கள் இணைந்து கரு முட்டை உருவாகி வித்தகத் தாவரமாக வளர்கிறது |
| 4. | எ.கா. வால்வாக்ஸ் ஸ்பைரோகைரா | எ.கா. ஃபியுக்கஸ், ஜிம்னோஸ் பெர்ம்கள் ஆஞ்சியோஸ்பெர்கள் |
40.
| குரோமோசோம் வகை | சென்ட்ரோமியர் இருப்பிடம் | வடிவம் | |
|---|---|---|---|
| 1. | டீலோ சென்ட்ரிக் | நுனி அமைந்த சென்ட்ரோமியர் | கோல் வடிவம் |
| 2. | அக்ரோ சென்ட்ரிக் | நுனி கீழ் அமைந்த சென்ட்ரோமியர் | கோல் வடிவம் |
| 3. | சப்மெட்டா சென்ட்ரிக் | மைய அருகு சென்ட்ரோமியர் | L வடிவம் |
| 4. | மெட்டா சென்ட்ரிக் | மையம் அமைந்த சென்ட்ரோமியர் | V வடிவம் |
41.
1.சில ஒடுக்கிகள் நிரந்தரமாக மற்றும் இறுக்கமாக ஒரு நொதியுடன் பிணைந்து அதன் ஊக்குவிக்கும் பண்பினை அழித்து விடுகின்றன.
2.இவற்றிற்கு மீளா (அ) மாற்ற முடியாத தன்மையுடைய ஒடுக்கிகள் என்று பெயர் இவற்றை நச்சுகள் என்றும் கூறலாம்.
எ.கா.
i. செல்லின் காற்று சுவாசத்தில் நடைபெறும் முடிவுநிலை ஆக்ஸிகரணத்தில் சைட்டோகுரோம் ஆக்ஸிடேஸ் நொதியைத் தடுக்கும் சையனைடு அயனிகள்.
ii. நரம்புகளுக்கிடையே சினாப்சிஸ் செயல் மூலம் உணர்வியக்க அலைகளைக் கடத்த உதவும் கடத்திகளைக் செயல்பட விடாது தடுக்கும் சாரின் என்ற நரம்பு நச்சு வாயு.
42.
1.மியாசிஸ் I, புரோஃபேஸ் I, சைக்கோட்டீன் துணை நிலையில் ஒத்திசைவு குரோமோசோம்கள் இணை சேர்கின்றன.
2.இதற்கு சினாப்சிஸ் என்று பெயர்.
3.இந்நிகழ்வு சினாப்டினிமல் தொகுப்பின் உதவியால் ஏற்படுகிறது.
43.
1.பாசிகளில் நடைபெறும் பால் இனப்பெருக்கம் முறையாகும்.
2.புற அமைப்பு அல்லது செயலில் வேறுபட்ட கேமீட்கள் இணைகின்றன.
3.இதற்கு சமமற்ற கேமீட்களின் இணைவு என்று பெயர்.எ.கா.பண்டோரினா.
44.
1.நீர்
2.சோடியம்(Na+)
3.பொட்டாசியம் (K+)
4.குளோரைடு (Cl-)
5.பைகார்பனேட்டுகள்
6.டயலின் அல்லது உமிழ்நீர் அமைலேஸ்
7.லைசோசைம் (பாக்டீரிய எதிர்ப்புப் பொருள்)
8.கோழை (கிளைக்கோபுரதம், உயவுப் பொருள்)
45.
1.கிராம் எதிர்பாக்டீரியங்களில் செல்சுவரின் மேற்புறத்தில் மயிரிழை போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.
2.இவை ஃபிம்ரியெ அல்லது நுண்சிலும்புகள் எனப்படும்.எ.கா : எண்டிரோபாக்டீரியா.
3.பாலினப் பெருக்கத்தின் போது நுண்சிலும்புகள் இணைவுக் குழலை தோற்றுவிக்கிறது.
46.
| வகைகள் | சூழ்நிலை தகவமைப்பு | எடுத்துக்காட்டு |
| மிதக்கும் தாவரங்கள் | நீரின் மேற்பரப்பில் மிதந்து வாழும் தாவரங்கள் | ஐகிகோர்னியா, ட்ராபா, பிஸ்டியா, லெம்னா |
| நீரில் மூழ்கி வளரும் தாவரம் | நீருக்குள் முழுவதுமாக மூழ்கி வாழும் தாவரங்கள் | ஹைட்ரில்லா, வாலிஸ்னேரியா |
| வேரூன்றி மிதப்பவை | வேர்பகுதி நீரில் மூழ்கியும், தண்டுப்பகுதி நீருக்கு மேலேயும் வளரும் தாவரங்கள் |
லிமினோஃபைடான், டைஃபா |
| மிதக்கும் இலைகளைக் கொண்டவை | வேர்பகுதியும் தண்டு பகுதியும் நீரில் மூழ்கியும் இலை மட்டும் நீரில் மிதந்தும் காணப்படும். |
நிலம்போ, நிம்ஃபயா |
| சதுப்பு நிலத் தாவரங்கள் | சேறு நிறைந்த உவர் நீர் பரப்பில் வாழ்பவை | அவிசென்னியா, ரைசோஃபோரா |
47.
1.சைமோஸ் மஞ்சரியின் வகையான தனி டைகேஷியம் மெய் சைம் என அளிக்கப்படுகிறது.
2. மஞ்சரி அச்சு நுனிமலருடன் முடிவடையும்.
3.பக்க மொட்டுகள் இரண்டும் தொடர்ந்து வளரும்.
4. மொத்தம் மூன்று மலர்கள் கொண்டவை.
5. முதிர்மலர்கள் நுனியிலும், இளம் மலர்கள் பக்கவாட்டிலும் அமைந்திருக்கும்.
எ.கா:ஜாஸ்மினம் (மல்லிகை)
48.
1. ஆஸ்டியா எனப்படும் துளை வழியாக வெளிப்புற நீர் உடலினுள் நுழைந்த ஸ்பான்ஞ்சோசீல் எனும் மையக் குழியை அடைகிறது. பின் அங்கிருந்து ஆஸ்குலம் வழியாக வெளியேற்றப்படுகிறது.
2. உணவூட்டும், காற்றோட்டம் சுவாசம் மற்றும் கழிவுநீக்கம் ஆகிய அனைத்து செயல்களும் இந்நீரோட்டத்தின் மூலம் நடைபெறுகிறது.
49.
1. இது இணைவுச் புரத வகையைச் சார்ந்தது.
2. 4% இரும்பும், மீதம் பகுதி ஹிஸ்டோன் வகையைச் சார்ந்த குளோபின் எனும் பொருளால் ஆனது.
3. இதன் மூலக்கூறு எடை 68,000 டால்ட்டன்கள்.
4. இதில் உள்ள நான்கு இரும்புஅணுக்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறுடன் இணையும் தன்மையுடையது.
50.
1.ஹெர்பேரியம் என்பது அழுத்தி , உலர்த்தி வடிவமைக்கப்பட்ட உலர்தாவர ஓட்டுதாளில் ஒட்டப்பட்ட , விளக்கக் குறிப்பு விவரச் சீட் டுடன் கூடிய தாவர உலர்த்தொகுப்பாகும்.
2. ஹெர்பேரியம் என்பது உலர் தாவரங்களைப் பாதுகாக்கும் நிலையும் அல்லது இடமாகும்.
51.
| வ.எண் | கண்டம் | காணப்படும் உறுப்பு |
|---|---|---|
| 1 | முன்மார்பு நடுமார்பு பின்மார்பு கண்டம் | 3 இணை கால்கள் |
| 2 | நடுமார்பு பின்மார்பு | 2 இணை இறக்கைகள் |
| 3 | 9வது கண்டம் | மலவாய் நீட்சிகள் |
| 4 | 10வது கண்டம் | மலப்புழைத் தண்டுகள் |
| 5 | மார்பு பகுதி, வயிற்றுப் பகுதி | இதயம் 13 அறைகள் |
| 6 | 4வது 6வது வயிற்றுக் கண்டங்கள் | 1 இணை விந்தகங்கள் |
| 7 | 2லிருந்து 6வது வயிற்றுக்கு கண்டங்கள் | 1 இணை அண்டகங்கள் |
| 8 | 7, 8, 9வது வயிற்றுக் கண்டம் | இனப்பை |
52.
1. அக்ளூட்டினோஜன் அல்லது ஆன்டிஜன்
2. அனைத்து வகை அக்ளூட்டினோஜன்களில்
(i) சுக்ரோஸ்
(ii) D - காலக்டோஸ்
(iii) N - அசிட்டைல் குளுக்கோஸமைன்
(iv) 11 முனை அமினோ அமிலங்கள்
53.
உலக அளவில் அறிவியல் அறிஞர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளின் அடிப்படையில், உயிரினங்களுக்கு இரு சொற்களால் பெயரிடும் முறை இரு சொற் பெயரிடும் முறை எனப்படும்.
எ.கா. பாவோ கிரிஸ்டேட்டஸ்(மயில்)
இதில் முதல் பகுதி பேரினப் பெயராகும். இதில் இரண்டாவது பகுதி சிற்றினப் பெயராகும்.
54.
1. எபிதீலியத் திசு (உறை)
2. இணைப்புத்திசு (ஆதரவு)
3. தசைத்திசு (இயக்கம்)
4. நரம்புத்திசு (கட்டுப்பாடு)
55.
1.நிலைத்த மரபுத்தன்மை: சேய் செல்களின் மரபுப்பொருளானது தாய் செல்லை ஒத்துக் காணப்படுகிறது.
2. வளர்ச்சி: பல செல் உயிரிகள் உரு வளர்ச்சி அடையும் போது அவற்றின் திசுக்களில் செல் பெருக்கமடைய உதவுகிறது. இவை அனைத்தும் ஒத்த செல்களாகவே உள்ளன.
3. திசு சிதைவதைச் சீர் செய்தல்: திசு சிதைவடையும் போது புதிய உருவொத்த செல்கள் மைட்டாசிஸ் பகுப்பின் மூலம் உருவாகிச் சிதைவு சரி செய்யப்படுகிறது.
4. பாலிலா இனப்பெருக்கம்: தாய் செல்லை ஒத்த வழித்தோன்றல்கள், பாலிலா இனப்பெருக்கத்தின் மூலம் தோன்ற இப்பகுப்பு உதவுகிறது.
எடுத்துக்காட்டு: ஈஸ்ட் மற்றும் அமீபா.
5. பூக்கும் தாவரங்களில் குமிழ்த்தண்டு, தண்டடிக் கிழங்கு,கிழங்குகள், மட்டநிலத் தண்டுகள், ஓடுகொடிகள் ஆகிய அனைத்தும் மைட்டாடிக் பகுப்பினால் தோன்றியவை. இவை தாய்த் தாவரத்தை விட்டு விலகிப் புதிய தாவரங்கள் தோன்ற உதவுகின்றன. எனவே குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையுடைய வழித் தோன்றல்களை மைட்டாசிஸ் பகுப்பின் மூலமே உருவாக்க இயலும். மரபு பொறியியல், உயிர் தொழில்நுட்பவியலில் கையாளப்படும் திசு வளர்ப்பில் இப்பகுப்பே முக்கியப் பங்காற்றுகிறது.
6. இழப்பு மீட்டல்: நட்சத்திர மீன்களின் இழப்பு அடைந்த கரங்கள் மீள் உருவாதல்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards