11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/09/2019
உயிரியல் காலாண்டு
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பைலோரிக் சுருக்குத் தசையின் வேலை யாது?
2.
திசுக்கள் ஏதன் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
3.
எண்ணிக்கை அடிப்படையிலான வகைப்பாடு என்பது யாது?
4.
தங்களது கருவளர்ச்சியின் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து முதுகெலும்பி கருக்களிலும் காணப்படும் பொதுவான பண்புகளைப் பட்டியலிடு.
5.
கட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் முக்கியத்துவத்தைக் கூறுக.
6.
மொனிராவின் சிறப்புப்பண்புகளை எழுதுக
7.
நிகர அழுத்தமே சிறுநீரக நுண் வடிகட்டுதல் நிகழ்வுக்கு காரணமாக அமைகிறது. விளக்குக.
8.
ஏமைட்டாசிஸ் எவ்வாறு நடைபெறுகிறது? அதன் மறுபெயர் யாது?
9.
ஆக்ஸிஜன் பிரிகை வளைவு படத்தை வரையவும்.
10.
டெர்கம் மற்றும் ஸ்டெர்னம் ஆகியவற்றை வேறுபடுத்துக.
11.
12.
ஐம்பெரும்பிரிவு வகைப்பாட்டினை விவாதி. அதன் நிறை, குறைகளைப் பற்றி குறிப்பு சேர்க்கவும்.
13.
தவளையின் கண்களைப் பாதுகாப்பது
மேல் இனம்
கீழ் இமை
நிக்டிடேடிவ் சவ்வு
இவை அனைத்தும்
14.
எலும்பு மீன்களில் காற்று பரிமாற்றத்திற்கென காற்றுபைகள் உள்ளன. இவைகள் இதனுடன் இணைக்கப்படாமல் அமைந்துள்ளது.
உணவுக் குழல்
மூச்சுக் குழல்
இதயம்
நுரையீரல்
15.
மண்புழுவைப் பற்றிய கீழ்கண்ட வாக்கியத்தில் தவறானதை கண்டுபிடி
உணவுகுழல் மேல் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.
உணவுகுழல் கீழ் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.
முதுகுப்புற இரத்தநாளம் பல்வேறு உறுப்புகளிலிருந்து இரத்தத்தை பெறுகின்றது.
வயிற்றுப்புற இரத்தநாளம் பல்வேறு உறுப்புகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.
16.
தொகுதி: நிடோரியாவிலுள்ள அனைத்து விலங்குகளும் ஆரச்சமச்சீரமைப்புடையவைகள் ஆனால் இவ்விலங்கு மட்டும் இருபக்க சமச்சீரமைப்புடையது
பைசாலியா
ஆடம்சியா
பென்னாட்டுலா
மியான்ட்ரினா
17.
ஃபிராக்டோஸ் உட்கிரகித்தலுக்கு, பொருட்கள் வழிக் கடத்தலுக்குத் தேவையானது
Na+
K+
CI-
HCO3-
18.
உணவிலுள்ள ஸ்டார்ச்சை சிதைப்பது
லிபேஸ்
பெப்ஸின்
அமைலேஸ்
லாக்டேஸ்
19.
கோழையைச் சுரக்கும் செல்கள் எவை?
முதன்மை செல்கள்
பெப்ட்டிக் செல்கள்
சைமோஜன் செல்கள்
கோப்பை வடிவ செல்கள்
20.
நீலப்பசும் பாசிகளோடு தொடர்புடைய சரியான கூற்று எது?
நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.
செல்சுவரில் செல்லுலோஸ் காணப்படுகிறது
உடலத்தைச் சுற்றி மியூசிலேஜ் காணப்படுவதில்லை
ஃபுளோரிடியன் தரசம் காணப்படுகிறது.
21.
கீழ்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்குகிறது?
சிலிக்கேட்டுகள்
தாது உப்புகள்
கால்சியம் கார்பனேட்
கால்சியம் ஆக்சலேட்
22.
திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு _______.
இறுக்கமான சந்திப்புகள்
ஒட்டும் சந்திப்புகள்
இடைவெளி சந்திப்புகள்
மீள் தன்மை சந்திப்புகள்
23.
நினைவிழந்த நிலையில் உள்ள ஒரு நோயாளி அவசரச் சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு செல்லப்பட்டு, உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டிய நிலையில் உளளார். ஏனெனில் அவரின் இதற்கு முந்தைய அவரின் மருத்துவத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவோ , அல்லது தற்போது இரத்த வகையை ஆராயவோ நேரமில்லாத நிலையில், எந்த வகை இரத்தம் அவருக்குக் கொடுக்கப்படலாம்?
A-
AB
O+
O-
24.
நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.
இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால்
இரத்தத்தில் அதிக O2 இருப்பதால்
இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால்
இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால்
25.
கண்ட அமைப்பு இதன் முக்கியப்பண்பு _______.
வளைத் தசைப் புழுக்கள்
முட்தோலிகள்
கணுக்காலிகள்
குழியுடலிகள்
26.
தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின் ஒவ்வொரு அலகு _______ ஆகும்.
டாக்சான்
வகை
சிற்றினம்
ஸ்ட்ரெயின்
27.
பார்வை ஒளி சார்ந்த ஐசோமியர், வடிவியல் ஐசோமியர் அல்லது நிலை சார்ந்த ஐசோமியர்களாக பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு நொதிகள் இவற்றிற்கு ஊக்கிகளாகச் செயல்பன்றன.
லைகேஸ்சுகள்
லையேஸ்கள்
ஹைட்ரோலேசுகள்
ஐசோமியரேசுகள்
28.
திசு வேதியலில் பயன்படுத்தப்படும் சாயங்கள் எவை ?
29.
B-DNA , A-DNA, Z-DNA வின் பண்புகளை ஒப்பிடு.
30.
31.
கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கிக் கீழ்க்கழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

அ) விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு.
ஆ) இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்தன்மை எத்தகையது?
இ) இவ்வுயிரியில் தலைக் காணப்படுகிறதா?
ஈ) இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன?
உ) இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்?
ஊ) இவ்விலங்கில் நரம்பு செல்கள் உள்ளனவா?
32.
DNA-வின் பண்பினை எழுது
1.
1. பைலோரிக் சுருக்குத் தசைகள் அவ்வப்போது இரைப்பையிலிருந்து வரும் ஓரளவு செரித்த உணவை சிறுகுடலுக்குள் அனுப்புகிறது.
2. சிறுகுடலிலிருந்து உணவு பின்னோக்கி வருவதை தடுக்கிறது.
2.
செல்களின்
1. அளவு
2. வடிவம், மற்றும்
3. செயல்
3.
இம்முறையில்,
1. உயிரினங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளின் அளவைப் புள்ளியின் அடிப்படையில் மதிப்பீடு செய்வதும்
2. உயிரிகளின் எண்ணிக்கை அளவிலான தொடர்களை கணினி மூலம் பகுப்பாய்வு செய்வதாகும்.
4.
1. முதுகுநான் உருவாக்கம்-இது முதன்மையான அகச்சட்டகமாகும். முதிர் முதுகெலும்பிகளில் இது பகுதியாகவோ முழுமையாகவோ முதுகெலும்புத் தொடராக மாற்றீடு செய்யப்படுகிறது.
2. முதுகுப்புற நரம்புக்குழல் உருவாக்கம் உடற்செயல்களை ஒருங்கிணைக்கிறது. உயர் முதுகுநாணிகளில் மூளையாகவும், தண்டுவடமாகவும் மாறியுள்ளது.
3. தொண்டைப்புற செவுள் பிளவுகள் -நீர்வாழ் விலங்குகளில் செவுள் பிளவுகள் இரத்த நுண்நாளங்களுடன் இணைந்து சுவாசத்திற்கு உதவுகிறது. நிலவாழ் முதுகுநாணிகளில் கருவளர்ச்சியின் போது தோன்றி பின்னர் மறைகிறது.
5.
1. பொருளை நன்கு வேறுபடுத்தி அறிய உதவுகிறது.
2. உயிருள்ள செல்கள் , திசுக்களைப் படித்தறிய உதவுகிறது.
3. வளர்ப்பு ஊடகத்தில் உள் வளர்ப்பின் மூலம் திசு வளர்ப்பு செய்து செல்வகுப்பின் நிலைகளை படித்தறிய உதவுகிறது.
6.
I) மொனிரா உயிரின உலகத்தின் அனைத்து புரோகாரியோடிக் உயிரினங்களையும் உள்ளடக்கியது.
II) இவை ஒரு செல் உயிரிகள்.
III) இவை இடப்பெயர்ச்சி அடையும் திறன் கொண்டவை. சில பாக்டீரியாக்கள் ஒட்டுண்ணிகள்ளாகவும், மற்றவை உடனுண்ணிகள்ளாக வாழ்கின்றன.
எடுத்துக்காட்டு : ஆர்க்கி பாக்டீரியா.
7.
சிறுநீரகங்கள் 24 மணிநேரத்தில் சுமார் 180லி அளவுக்கு கிளாமருலார் வடித்திரவதை உற்பத்தி செய்கின்றன. இரத்தத்திலுள்ள நீர், குளுக்கோஸ், அமினோ அமிலங்கள் மற்றும் நைட்ரஜன் கழிவுப் பொருட்கள் ஆகியவை இயல்பாக கிளாமருலஸை வந்தடைகின்றன. எனவே வடித்திரவம் ஏறத்தாழ இரத்தத்திற்கு நிகரான உட்பொருட்களையே பெற்றுள்ளது. 5nml விட பெரிய மூலக்கூறுகள் குழல்களுக்குள் நுழைய முடிவதில்லை. கிளாமருலஸில் வடிகட்டும் சவ்வின் வழியாக நேரும் இரத்தத்திலுள்ள பிற கரைபொருட்களும் வெளியேற இரத்தத்திலுள்ள கிளாமருலார் நீர்ம அழுத்தமே காரணமாகும். கிளாமருலார் இரத்த அழுத்தம் பிற இரத்த நுண்ணாளத்தொகுப்புகளில் இருப்பதைவிட அதிகமானதாகும். இரத்த நுண்நாளங்களில் பிளாஸ்மா புரதங்கள் இரண்டு எதிர் விசைகளை அளிக்கின்றன. கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் (30mm Hg) மற்றும் கிளாமருலர் கிண்ணங்களில் நீரம் அழுத்தம் (152mm Hg) எனும் இவை கிளாமருலர் கிண்ணங்களில் உள்ள திரவங்களால் உருவாகின்றது. இவ்விரண்டு அழுத்தங்களும் சேர்ந்து (30mm Hg 15 = 45 mm Hg) எதிர் அழுத்தத்தை தருவதால் மீதமுள்ள அதிகப்படியான (10mm Hg) நிகர அழுத்தமே சிறுநீரக நுண் வடிகட்டுதல் நிகழ்வுக்கு காரணமாக அமைகிறது.
நிகர வடிக்கட்டலுக்கான அழுத்தம் - கிளாமருலாரின் நீர்ம அழுத்தம் - (கூழ்ம ஊடுகலப்பு அழுத்தம் + கிளாமருலார் கிண்ணத்தின் நீர்ம அழுத்தம்)
நிகர வடிக்கட்டலுக்கான அழுத்தம் = 55mm Hg - (30mm Hg+15mm Hg)=10mm Hg
இரண்டு சிறுநீரகங்களில் உள்ள மொத்த நெஃப்ரான்கள் ஒரு நிமிடத்தில் உருவாக்கும் வடித்திரவத்தின் கொள்ளளவே கிளாமருலார் வடிகட்டும் வாதமாகும். முதிர்ச்சியடைந்த மனிதர்களில் இவ்வேதம் ஒரு நிமிடத்தில் சுமார் 120மி.லி முதல் 125மி.லி வரை ஆகும்
8.
1.முதலில் செல்லின் உட்கருவில் இடைப்பகுதியில் இறுக்கம் ஏற்பட்டு ஆழமாகி உட்கரு இரண்டாகப் பிரிகிறது.
2.அதை தொடர்ந்து, பிளாஸ்மா சவ்விலும் இறுக்கம் ஏற்பட்டு, மையம் நோக்கி விரிவடைந்து இறுதியில் சைட்டோபிளாசம் இரு பகுதிகளாக பிரிந்து இரு சேலைகள் உருவாகிறது.
3.மறுபெயர்-நேர்முகப் பகுப்பு, தெளிவாகச் செல் பகுப்பு எ.கா.பாலூட்டியின் குறுத்தெலும்பு செல்களின் பகுப்பு.
3.மறுபெயர்-நேர்முகப் பகுப்பு, தெளிவாகச் செல் பகுப்பு எ.கா பாலூட்டியின் குறுத்தெலும்பு செல்களின் பகுப்பு.
9.

10.
1. கரப்பான் பூச்சியின் முதுகுப்புறத்திலுள்ள ஸ்கிளீரைடுகளுக்கு டெர்கிட்கள் அல்லது டெர்கம் என்று பெயர்.
2. கரப்பான்பூச்சியின் வயிற்றுப்புறமுள்ள ஸ்கிளீரைடுகளுக்கு ஸ்டர்னைட்கள் அல்லது ஸ்டெர்னம் என்று பெயர்.
11.
12.
R.H. விட்டாக்கெர் எனும் அமெரிக்காவை சேர்ந்த வகைப்பாட்டியலர் 1969 ஆம் ஆண்டில் உயிரினங்களை ஐம்பெரும்பிரிவுகளாக வகுத்தார்.
நிறைகள்
i) ஐம்பெரும் பிரிவு வகைப்பாடு ஆனது சிக்கலான செல் அமைப்பு, உடலமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது.
ii) உணவு ஊட்டமுறையின் அடிப்படையில் இந்த வகைப்பாடு அமைந்து உள்ளது.
iii) பூஞ்சைகள் தாவரங்களிலிருந்து பிரித்துத் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
iv) உயிரினங்களுக்கு இடையே உள்ள இனப்பரிணாம குழுத் தொடர்பினை இந்த வகைப்பாடு எடுத்துக்காட்டுகிறது.
குறைகள்
i) இந்த வகைப்பாட்டில் வைரஸ்கள் சேர்க்கப்படவில்லை.
ii) மொனிரா, புரோட்டிஸ்டா என்ற பெரும் பிரிவில் தற்சார்பு, சார்பூட்ட முறை உயிரினங்கள் அடங்கியுள்ளன,இவை செல் சுவரற்ற உயிரினங்கள்.எனவே இவ்விரு பெரும் பிரிவுகளும் மாற்றுப் பண்பினை பெறுகின்றன.
13.
(c)
நிக்டிடேடிவ் சவ்வு
14.
(a)
உணவுக் குழல்
15.
(b)
உணவுகுழல் கீழ் ரத்த நாளத்தில் வால்வுகள் காணப்படுகிறது.
16.
(b)
ஆடம்சியா
17.
(a)
Na+
18.
(c)
அமைலேஸ்
19.
(d)
கோப்பை வடிவ செல்கள்
20.
(a)
நகர்வதற்கான உறுப்புகள் இல்லை.
21.
(d)
கால்சியம் ஆக்சலேட்
22.
(a)
இறுக்கமான சந்திப்புகள்
23.
(d)
O-
24.
(c)
இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால்
25.
(c)
கணுக்காலிகள்
26.
(a)
டாக்சான்
27.
(d)
ஐசோமியரேசுகள்
28.
| வரிசை எண் | சாயம் | சாயத்தின் நிறம் | ஏற்கும் திறன் |
|---|---|---|---|
| 1. | இயோசின் | இளஞ்சிவப்பு , சிவப்பு | சைட்டோ பிளாசம் , செல்லுலோஸ் |
| 2. | அசிட்டோ கார்மைன் ஹிமோ ட் டாக்சிலின் | இளஞ்சிவப்பு , சிவப்பு | உட்கரு, குரோமோசோம்கள் |
| 3. | மெத்திலீன் நீலம் | நீலம் | உட்கரு |
| 4 |
சாஃப் ரானின் |
சிவப்பு | செல்சுவர் (லிக்னி ன் ) |
| 5. | காட்டன் நீலம் | நீலம் | பூஞ்சையின் ஹைப்பாக்கள் |
| 6 | சூடான் IV, சூடான் கருப்பு | கருஞ்சிவப்பு , கருப்பு | லிப்பிடுகள் |
| 7 | கோமாஸ்சி அடர் நீலம் | நிலம் | புரதம் |
| 8. | ஜென் ஸ் பச்சை | பசுமை கலந்த நீலம் | மைட்டோகாண்ட்ரியா |
| 9. | I2KI | கருநீலம் முதல் பழுப்பு | தரசம் |
| 10. | டால்யூடின் நீலம் | நீலம் , நீல பச்சை | சைலம் , பாரங்கைமா , புறத் தோல் |
29.
| பண்புகள் | B-DNA | A-DNA | Z-DNA |
|---|---|---|---|
| திருகுச்சுருள் வகைகள் | வலப்புறம் | வலப்புறம் | இடப்புறம் |
| திருகுசுருள் விட்டம் (nm) | 2.37 | 2.55 | 1.84 |
| ஒவ்வொரு கார் இணையின் உயர்வு | 0.34 | 0.29 | 0.37 |
| ஒரு முழுத் திருப்பத்திற்கு உண்டான தொலைவு (இடைநிலையளவு)(nm) | 3.4 | 3.2 | 4.5 |
| ஒரு முழுத் திருப்பத்திற்குப் கார இணைகளின் எண்ணிக்கை | 10 | 11 | 12 |
| முதன்மை பள்ளம் வடிவமைப்பு | அகலமானது ஆழமானது | குறுகியது,ஆழமானது | தட்டையானது |
| சிறு பள்ளம் வடிவமைப்பு | குறுகியது, ஆழமற்றது | அகலமானது,ஆழமற்றது | குறுகியது,ஆழமானது |
30.
31.
அ. கடல் சாமந்தி (ஆடம்கியா) (தொகுதி: நிடோரியா)
ஆ. இருபக்க சமச்சீரமைப்புடைய விலங்கு
இ. தலை காணப்படவில்லை
ஈ. ஈரடுக்கு கொண்ட உயிரி
உ. ஒன்று மட்டும் (வாய் அல்லது ஹைப்போஸ்டோம்).
ஊ. வலைப் பின்னல் அமைப்பாக பரவியுள்ள மிக எளிய நரம்பு மண்டலம் உள்ளது.
32.
1.இதன் ஒரு இழை 5' - 3' திசையில் இருந்தால் மற்றொரு இழையில் 3' - 5' திசையில் செல்லும்.எனவே இரு இழைகளும் எதிர் இணையானவையாக உள்ளன.5' முனையில் பாஸ்ஃபேட் தொகுதியும்,3'முனையில் OH தொகுதியும் காணப்படும்.
2.கார இணைகளில் இருந்து சர்க்கரைகள் 1200 குறுகிய கோணத்திலும் 2400 அகலக் கோணத்திலும் நீட்டிக் கொண்டிருக்கும்.குறுகிய கோணத்தின் காரணமாகத் தோன்றுவது சிறு பள்ளம் அகலக் கோணத்தில் தோன்றுவது முதன்மை பள்ளம் எனப்படுகிறது.
3.ஒவ்வொரு கோணமும் 0.34 nm தூரத்தில் அமைந்திருப்பதால் சுருளின் ஒவ்வொரு திருப்பமும் 3.4 nm நீளம் கொண்டது.அதாவது ஒரு திருப்பதில் 10 கார இணைகள் உள்ளன.இப்பண்புகள் DNA-வில் அதிகமாகத் திகழும் B-DNA - வில் காணப்படுகிறது.
4.DNA சுருளின் விட்டம் \(20 \overset{0}{A } \) ஆகவும்,அதன் குறைந்த பட்ச வளைவு \(34 \overset{0}{A } \) ஆகவும் உள்ளது.X கதிர் படிக அமைப்பைக் காணும்போது ஒரு சுற்று சுற்றுவதற்கு (3600) 10 கார இணைகள் தேவைப்படுவது தெரிய வருகிறது.
5.திருகுச்சுருளின் வெப்ப இயக்கு நிலைத்திறன் மற்றும் கார இணைகளின் குறிப்பிட்ட தனித்தன்மை இவற்றை உள்ளடக்கியது.
(i) இரட்டைத் திருகுச்சுருள் நிறைவுபடுத்தும் காரங்களுக்கு இடையேயுள்ள ஹைட்ரஜன் இணைப்புகள்.
(ii) பல காரங்கள் ஒன்றின் மேல் ஒன்று தொடர்பு கொண்டு திருகுச்சுருள் அச்சிற்குச் செங்குத்தாகக் காணப்படுகிறது.திருகுச்சுருள் அடுக்கில் எலக்ட்ரான் கூட்டங்கள் காரங்களுக்கிடையே தொடர்பு கொண்டு (π-π) இரட்டைத் திருகுச்சுருளின் அமைப்பிற்கு நிலைத்திறன் அளிக்கின்றது.
6.பாஸ்ஃபோ டைஎஸ்டர் பிணைப்புகள் DNA திருகுச்சுருளுக்குத் துருவத்தன்மை தருவதோடு அவை வலிமையான சகப்பிணைப்புகளை ஏற்படுத்துவதால்,பாலி நியுக்ளியோடைடு சங்கிலிக்கு வலிமையும், நிலைப்புத்தன்மையும் அளிக்கின்றன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards