11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
சுவாசம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மனித சுவாச மண்டலத்தில் காணப்படும் உறுப்புகள் யாவை?
2.
பல்வேறு உயிரிகளில் காணப்படும் சுவாச உறுப்புகளை அட்டவணைப்படுத்து.
3.
ஹீமோகுளோபின் பற்றி எழுது.
4.
ஒருவருக்கு மலைநோய் எப்பொழுது ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் யாவை?
5.
ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு [மி.மீ. பாதரசம்] பகுதி அழுத்தம் மற்றும் வளிமண்டல வாயுக்களுடன் ஒரு ஒப்பீடு அட்டவணையை எழுது.
6.
ஆக்ஸிஜன் பிரிகை வளைவு படத்தை வரையவும்.
7.
நைட்ரஜன் நார்கோஸிஸ் என்றால் என்ன?
8.
ஒரு மனிதன் கடலின் ஆழத்திற்கு சென்று விட்டு மீண்டும் உடனடியாக மேலெழுப்பி மேற்பரப்பிற்கு வருவதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
9.
நிமோனியா ஏன் ஒரு ஆபத்தான நோயாகக் கருதப்படுகிறது?
10.
கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரிசெய்துகொள்கிறது?
1.
1. புறநாசித்துளைகள்
2. நாசிக்குழி
3. தொண்டை
4. குரல்வளை
5. மூச்சுக்குழல்
6. மூச்சுக்கிளைக் குழல்கள்
7. மூச்சுக்கிளை நுண்குழல்கள்
8. நுரையீரல்கள் (நுண்ணுரைகளைக் கொண்டது)
2.
| வ.எண் | சுவாச உறுப்புகள் | விலங்குகள் |
| 1. | உடல் பரப்பு (விரவல் முறை) | கடற்பஞ்சுகள், குழியுடலிகள், தட்டைப் புழுக்கள். |
| 2. | தோல் (ஈரப்பதமுடையது) | மண்புழுக்கள், தவளைகள் |
| 3. | மூச்சுக்குழல் | பூச்சிகள் |
| 4. | செவுள்கள் | நீர்வாழ் கணுக்காலிகள், மெல்லுடலிகள், மீன்கள் |
| 5. | நுரையீரல்கள் | இருவாழ்விகள், ஊர்வன, பரப்பன, பாலூட்டிகள் |
3.
1. இது இணைவுச் புரத வகையைச் சார்ந்தது.
2. 4% இரும்பும், மீதம் பகுதி ஹிஸ்டோன் வகையைச் சார்ந்த குளோபின் எனும் பொருளால் ஆனது.
3. இதன் மூலக்கூறு எடை 68,000 டால்ட்டன்கள்.
4. இதில் உள்ள நான்கு இரும்புஅணுக்கள் ஒவ்வொன்றும் ஒரு ஆக்ஸிஜன் மூலக்கூறுடன் இணையும் தன்மையுடையது.
4.
1. ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் உள்ள இடத்திற்குச் செல்லும்போது, அங்கு வளிமண்டல அழுத்தம், PO2 மூலம் குறைவாக இருப்பாதால்.
2. அம்மனிதனுக்கு தலைவலி, குறைசுவாசம், குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்ற உடனடி மலை நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
3. ஆக்ஸிஜன் ஹீமோகுளோபினோடு குறைவாக இணைவதே இதற்கு காரணமாகும்.
4. இதற்கு நைட்ரஜன் நார்கோஸிஸ் என்ற பெயர்.
5.
| பகுதி அழுத்தம் மி.மீ, பாதரசம் | |||||
| சுவாச வாயுக்கள் | வளிமண்டலக் காற்று | காற்று நுண்ணறை | ஆக்ஸிஜனற்ற (அசுத்த) இரத்தம் | ஆக்ஸிஜனுள்ள (தூய்மை) இரத்தம் | திசுக்கள் |
| O2 | 159 | 104 | 40 | 95 | 40 |
| CO2 | 0.3 | 40 | 45 | 40 | 45 |
6.

7.
1. ஒரு மனிதன் கடலின் ஆழத்திற்குச் செல்லும் போது அம்மனிதனைச் சூழ்ந்துள்ள நீரின் அழுத்தம் அதிகரிப்பதான் காரணமாக நுரையீரலின் கொள்ளளவு குறைகிறது.
2. இக்குறைவினால், நுரையீரலுக்குள் உள்ள வாயுக்களின் பகுதி அழுத்தம் அதிகரிக்கிறது.
3. இதனால் அதிகளவு O2 இரத்த ஓட்டத்தில் கலக்கிறது.
4. இது ஒரு பயனுள்ள விளைவாக இருப்பதாகக் கருதப்பட்டாலும் இன்னொரு வகையில் அப்பத்தானது.
5. ஏனெனில் இந்நிகழ்வினால் N2 வாயு அதிக அளவில் இரத்தத்தில் கலக்கிறது.
8.
1. அழுத்த மீட்சி நோய் ஏற்படுகிறது.
2. கரைந்த நிலையிலிருந்து N2 வெளியேற்றுவதால் இரத்தத்தில் குமிழ்கள் தோன்றுகின்றன. சிறு குமிழ்களினால் பாதிப்பில்லை.
3. ஆனால் பெரிய குமிழ்கள் இரத்த நுண்நாளங்களில் தங்கி இரத்த நுண்நாளங்களில் தங்கி இரத்த ஓட்டத்தை தடுக்கவோ நரம்பு முனைகளில் அழுத்தத்தையோ ஏற்படுத்தலாம்.
4. தசை மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் வாதம் உள்ளிட்ட நரம்பியல் கோளாறுகள் ஏற்படலாம்.
9.
1. இந்நோய் பாக்டீரியா மாற்றும் வைரஸின் தொற்றுகளால் நுரையீரல்கள் வீக்கமடைகிறது.
2. பாதிக்கப்பட்டவர்கள் கோழைப்பொருள் உற்பத்தி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், தொண்டைப்புண் ஆகியவற்றால் பாதிப்படைகிறார்கள்.
10.
1. ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் நீண்ட காலம் வாழக்கூடியச் சூழலில் அதற்கேற்ற சுவாசமும், இரத்தச் சிவப்பணுக்கள் உருவாக்கமும் சரி செய்யப்படுகின்றன.
2. இத்தகைய சூழலைச் சமாளிக்கவே சிறுநீரகங்களிலிருந்து அதிக அளவு எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
3. இந்த ஹார்மோன், எலும்பு மஞ்சையைத் தூண்டி அதிக இரத்தச் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards