11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/12/2018
11th Biology Revision Test 2
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
நாளமில்லாச் சுரப்பிகளின் குறை மற்றும் மிகைச் செயல்பாடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கோளாறுகள் யாவை?
2.
தோல் வளையத்தின் கை எலும்புகள் பற்றி எழுதுக.
3.
உடல் நரம்பு மண்டலம் பற்றி எழுதுக?
4.
உடல் சமநிலை பேணும் உறுப்பு பற்றி எழுதுக?
5.
பறவை வளர்ப்பு பற்றி எழுதுக?
6.
எலும்பு தசையிழையின் நுண்ணமைப்பை படத்துடன் விவரி?
7.
சிறுநீரகத்தின் பணிகளை வெறிப்படுத்துதல் பற்றி எழுதுக? ADH மற்றும் டையபெட்டிஸ் இன்சிபிடஸ்
8.
சிறுநீரகத்தின் அமைப்பை படத்துடன் விவரி
9.
சுவாசித்தலின் மாற்று தளப்பொருள் படம் வரைக?
10.
அளவின் அடிப்படையில் கனிமங்களின் வகைப்பாட்டினை எழுதுக.
11.
வில் ஆக்ஸனோமீட்டர் ஆய்வினை எழுதுக.
12.
சூழல் ஒளிபாஸ்பரிகரணம் மற்றும் சுழலா ஒளி பாஸ்பரிகரணம் வேறுபடுத்துக.
13.
ஆற்றல் சாரா உள்ளெடுப்பு பற்றி எழுதுக.
14.
டைலோசஸ் அமைப்பினை படம் வரைந்து பாகங்களைக் குறிக்க?
15.
சல்லடை செல்கள் மற்றும் சல்லடைக் குழாய்களுக்கு இடையேயான வேறுபாட்டினை எழுதுக.
16.
நீரியல் திறனைக் கட்டுப்படுத்தும் கூறுகள் யாவை?
17.
சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை ?
18.
19.
சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.
20.
தைராய்டு சுரப்பி அமைப்பைப் பற்றி சுருக்கி எழுதுக.
21.
நுகர்ச்சி உணர் உறுப்பின் அமைப்பினை விவரி.
22.
நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகளை வரிசைப்படுத்துக்க.
(அ) உட்செல் நுண்தமனி
(ஆ) பெளமானின் கிண்ணம்
(இ) சேகரிப்பு நாளம்
(ஈ) சேய்மை சுருள் நுண் குழல்
(உ) கிளாமருலஸ் மற்றும்
(ஊ) ஹென்லேயின் வளைவு
(எ) அண்மை சுருள் நுண்குழல்
(ஏ) சிறுநீரக பெல்விஸ்
23.
விலங்குகளை வளர்த்தல், உணவூட்டம் மற்றும் பாதுகாத்தல், இனப்பெருக்கம் மற்றும் அவைகளின் நோய்க்கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதே கால்நடை வளர்ப்பாகும். வளர்ந்து வரும் மக்கள் தொகைப்பெருக்கத்திற்கு தேவையான உணவூட்டத்தை அளிக்கிறது. இத்தேவை பால், முட்டை , இறைச்சி மற்றும் தேன் போன்ற பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து பெருக்குவதால் பூர்த்தி செய்யப்படுகிறது.
அ) சரியான விகிதத்தில் கால்நடை வளர்ப்பதன் முக்கியத்துவம் யாது?
ஆ) உள்நாட்டு கால்நடை இனங்களுக்கிடையே நடைபெறும் இனக்கலப்பைவிட குறுக்கு கலப்புச் செய்தல் அதிக நன்மையைத் தருகிறது - விவரி.
இ) பறவைகள் உற்பத்தி ஒளிக்கால அளவைச் சார்ந்தது – விவரி
ஈ) கூட்டு மீன் வளர்ப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
24.
தசைச்சுருக்கத்திற்கான சறுக்கு-இழைக்கோட்பாட்டை விளக்கு
1.
2.
(i) சிறப்பாக இயங்கும் வகையில் கையில் 30 தனி எலும்புகள் உள்ளன.
(ii) தோள்பட்டைக்கு முழங்கைக்கும் இடையே உள்ள பகுதியில் உள்ள எலும்பிற்கு மேற்கை எலும்பு என்று பெயர்.
(iii) மேற்கை எலும்பின் தலைப்பகுதி தோள்பட்டையெலும்பின் கையெலும்பு பொருந்துக்குழிவுப் பகுதியுடன் பொருந்தியுள்ளது.
(iv) ஏதன் கீழ்முனைப்பகுதி இரு எலும்புகளுடன் இணைந்துள்ளன. முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் இடையே ஆர எலும்பு மற்றும் அல்னா ஆகிய இரு முன்கை எலும்புகள் முன்கையில் உள்ளன.
(v) ஒலிகிரனான் நீட்சி என்பது அல்னாவின் மேற்பகுதியில் உள்ளநீட்சியாகும். இது முழங்கையில் உள்ள கூர்மையான பகுதியாகும்.
(vi) கைப்பகுதியில் மணிக்கட்டு எலும்புகள் உள்ளங்கை எலும்புகள் மற்றும் விரல் எலும்புகள் ஆகியன உள்ளன.
(vii) மொத்தத்தில் 8 மணிக்கட்டு எலும்புகள் தலா 4 வீதம் இரு வரிசையாக அமைந்துள்ளன.
(viii) மணிக்கட்டின் மேற்பகுதியில் ஒரு கால்வாயை இது தோற்றுவிக்கின்றது. எதற்கு மணிக்கட்டுக் கால்வாய் என்று பெயர்.
(ix) உள்ளங்கையில் 5 உள்ளங்கை எலும்புகளும் விரல்களும் 14 விரல் எலும்புகளும் உள்ளன.
3.
1. புற நரம்பு மண்டலத்தின் பகுதியான உடல் நரம்புமண்டலம் இயக்கு நரம்பு மண்டலம் என்றும் அழைக்கப்படும்.
2. இவை எலும்புத் தசைகளின் வழியாக உடல் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நரம்புகளாகும்.
3.வரித்தசைகளுக்கு செல்லும் இயக்கு மற்றும் உணர்ச்சி நரம்புகள் உடல் நரம்பு மண்டலத்தை ஏற்படுத்தி உள்ளன.
4.தசை மற்றும் உறுப்புகளின் விருப்ப இயக்கம் மற்றும் அனிச்சை செயல் இயக்கங்கள் ஆகியவை உடல் நரம்பு மண்டலத்தின் முக்கியப் பணிகளாகும்.
4.
உடல் சமநிலை பேணும் உறுப்பு :
1. சமநிலை பேணுதல் என்பது அசைவுகளை உணரும் உணர்வின் ஒரு பகுதியாக உள்ளது.
2. உடலின் நிலை, அதன் திசையமைவு, அதன்
5.
6.
எலும்பு தசையிழையின் நுண்ணமைப்பு:
1. ஒவ்வொரு தசையிழையூம் மெலிந்த நீண்ட அமைப்பாகும். பெரும்பாலானவை ஒரு முனையோ அல்லது இரு முனைகளுமோ கூரியவனாக முடிகின்றன.
2. தசையிழையில் பல நீள்கோள வடிவ உட்கருக்கள் சார்கோலெம்மா எனப்படும் பிளாஸ்மா சவ்வின் கீழ் அமைந்துள்ளன. தசையிழையின் சைட்டோபிளாசம் சார்கோபிளாசம் எனப்படும்.
3. இதில் கிளைக்கோசோம், மையோகுளோபின் மற்றும் சார்கோபிளாச வலைப்பின்னல் ஆகியன உள்ளன.மையோகுளோபின் என்பது தசையிழைகளில் காணப்படும் சிவப்பு நிறச் சுவாச நிறமியாகும்.
4. இது ஹீமோகுளோபின் போன்று ஆக்ஸிஜனை கவரும் தன்மையுடைய இரும்பு அயனிகளைக் கொண்ட சுவாச நிறமியாகும். இந்நிறமி ஆக்ஸிஜனைத் தேக்கிவைக்கும் தன்மை கொண்டது.
5. கிளைக்கோசோம் என்பது சேமிக்கப்பட்ட கிளைகோஜன் துகள்கள் ஆகும். இது தசையிழை செயல்பாட்டிற்குத் தேவையான குளுக்கோஸை வழங்குகிறது.ஆக்டின், மையோசின் ஆகியவை தசையிழைகளில் உள்ள தசைபுரதங்கள் ஆகும்.
6. அடர்த்தி மிகு A பட்டைகள் (மாறுபட்ட தன்மை கொண்ட பட்டைகள்) மற்றும் அடர்த்தி குறைவான I பட்டைகள் (ஒத்த தன்மை கொண்ட பட்டைகள்) ஆகியன மாறி மாறி நேர்த்தியாக அமைந்துள்ளன.இவ்வமைப்பே தசைகளுக்கு வரிகளைத் தருகின்றன.
7. ஒவ்வொரு அடர்த்திமிகு பட்டையிலும் அடர்த்தி குறைவான H பகுதி எனும் மையப்பகுதி உள்ளது. ஒவ்வொரு H பகுதியையும் M என்னும் அடர்த்தி மிகு கோடு செங்குத்துவாக்கில் இரண்டாகப் பிரிகிறது. I பட்டைகளின் நடுவில் அடர்த்தியான Z கோடு என்னும் பரப்பு காணப்படுகிறது.
8. ஜெர்மனிய மொழியில் Zwischenscheibe என்றால் I பட்டைகளுக்கு இடையே உள்ள தட்டு/கோடு என்று பொருள். தசை நுண்ணிழையில் சுருங்கும் அமைப்பான சார்கோமியர்கள் உள்ளன.இவை எலும்புத்தசையின் செயல் அலகு ஆகும்.
9. ஒரு சார்கோமியர் என்பது தசை நுண்ணிழையின் அடுத்தடுத்த இரு Z கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதியாகும். ஒரு சார்கோமியரில் நடுவில் A பட்டையும் அதன் இருபுறமும் பாதி I பட்டைகளுக்கும் உள்ளன.
10.ஒவ்வொரு சார்கோமியரிலும் தடித்த இழைகள் மற்றும் மெல்லிய இழைகள் என்று இரு வகை இழைகள் உள்ளன. தடித்த இழைகள் A பட்டை முழுவதும் நீண்டு காணப்படுகின்றன.
11. சார்கோலெம்மாவின் உட்குழிவு குறுக்குவாட்டுப் குழல்களை உருவாக்குவதுடன் A மற்றும் I பட்டைகளின் சந்திப்புப்பகுதியின் இடைப்பகுதியில் நுழைந்துள்ளன.
7.
சிறுநீரக பணிகளை ஹைப்போதலாமஸ், ஜக்ஸ்டா கிளாமருலார் அமைப்பு மற்றும் ஓரளவிற்கு இதயம் ஆகியவைகளை உள்ளடக்கிய ஹார்மோன் பின்னூட்ட கட்டுப்பாடே கண்காணித்து நெறிப்படுத்துகிறது.
இரத்தம் மற்றும் உடல் திரவத்தின் கொள்ளளவு மற்றும் அயனிகளில் அடர்வுகளில் ஏற்படும் மாற்றங்களால் ஹைபோதாலமஸில் உள்ள ஊடுகலப்பு உணரவேற்பி தூண்டப்படுகிறது.
உடலிலிருந்து அதிக அளவில் திரவ இழப்பு ஏற்படுதல் அல்லது இரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்றவைகளால் ஹைபோதலாமஸின் ஊடுகலப்பு உணரவேற்பி தூண்டப்படுகிறது.
இதன்விளைவாக நியுரோஹைபோபைஸில் தூண்டப்பட்டு ஆன்டிடையூரிடிக் ஹார்மோன் எனப்படும் வாஸோபிரஸ்ஸின் அல்லது சிறுநீர்பெருக்கெதிர் ஹார்மோன் வெளியிடப்படுகிறது.
இதனால் சேகரிப்பு நாளம் மற்றும் சேய்மை சுருள் நுண்குழல்களின் செல்பரப்புகளில் அக்குவபோரின்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் குழலின் உட்பகுதியிலிருந்து இடையீட்டு திரவத்திற்குள் நீர் செல்கின்றது. இதனால் சிறுநீர்ப்பெருக்கத்தின் மூலம் ஏற்படும் அதிக நீரிழப்பு தடுக்கப்படுகிறது.
அளவிற்கதிகமாக பழச்சாறு அருந்தும்போது ஹைபோதலமஸில் உள்ள ஊடுகலப்பு உணரவேற்பிகள் தூண்டப்படாதால் நியூரோ ஹைபோபைஸிசில் உற்பத்தி குறைகிறது.
இது ஒரு எதிர்மறை பின்னூட்ட நிகழ்வாகும். இந்நேரத்தில் சேகரிப்பு நாளத்திலுள்ள அக்குவாபோரின்கள் சைட்டோபிளாத்தினுள் சென்று விடுவதால் சேகரிப்பு நாளத்தில் நீர் ஊடுருவல் தடுக்கப்படுகிறது.
எனவே சேகரிப்பு நாளத்திலுள்ள நீர் அனைத்தும் வெளியேற்றப்படுவதால் நீர்த்த சிறுநீர் வெளியேறுகிறது.
இதனால் இரத்தத்தின் அளவு நிலைநிறுத்தப்படுகிறது.
வாஸோபிரஸ்ஸின் ஹார்மோன் சுரப்பை எஎதிர்மறை மற்றும் நேர்மறை பின்னூட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது.
யுனுர் உணரவேற்பிகள் குறைபாடு இருந்தாலோ அல்லது யுனுர் சுரக்க இயலாமையாலோ நீரிழிவு நோய் உருவாகிறது.
அதிக தாக்கம் நீர்த்த சிறுநீர் அதிகமாக வெளியேறுதவதால் ஏற்படும் நீரிழப்பு மற்றும் குறைவான இரத்த அழுத்தம் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.
8.
ஒவ்வொரு சிறுநீரகமும் சராசரியாக 120கி முதல் 170கி வரை எடை கொண்டது. சிறுநீரகத்தின் மேல் மூன்று அடுக்குகளாக, ரீனல்/பேசியா, பெரீரீனல் கொழுப்பு உரை மற்றும் நார் உறை ஆகிய ஆதரவுதிசுக்கள் அமைந்துள்ளன.
சிறுநீரகத்தின் நீள்வெட்டுத் தோற்றத்தில் வெளிப்புற கார்டெக்ஸ் உட்புற மெடுல்லா மற்றும் பெல்விஸ் பகுதிகள் காணபடுகின்றன.
மெடுல்லா பகுதி சில கூம்பு வடிவது திசுத் தொகுப்புகளினால் பிரிக்கப்பட்டுள்ளன.
இத்திசுத்தொகுப்புகளுக்கு மெக்குல்லரி பிரமிடுகள் என்று பெயர்.
மெடுல்லரி பிரமிடுகளுக்கிடையே நீட்சியடைந்துள்ள கார்டெக்ட்ஸின் பகுதிகளுக்கு பெர்டினியின் சிறுநீரகத்தூண்கள் என்று பெயர்.
சிறுநீரகத்தின் குழிந்த பரப்பின் உடபகுதியில் உள்ள மேட்டிற்கு சிறுநீரக ஹைலம் என்று பெயர்.இதன் வழியாக சிறுநீரக நாளம் இரத்தநாளங்கள், நரம்புகள் ஆகியவை சிறுநீரகத்தினுள் செல்கின்றன.
ஹைலத்தின் உட்புறத்தில் உள்ள அகன்ற புனல் வடிவ இடைவெளிக்கு சிறுநீரக பெல்விஸ் என்றும் அவை பெற்றுள்ள நீட்சிகளுக்கு காலிசெஸ் என்றும் பெயர்.
சிறுநீரக பெல்விஸின் தொடர்சோயாக சிறுநீரக நாளம் உள்ளது. காலிசெஸ் பெல்விஸ் மற்றும் சிறுநீரக நாளங்களின் சுவர்களில் வரியற்ற தசைகள் உள்ளன. இவை ஒழுங்கமைவாக இயங்குகின்றன.
காலிசெஸ் சிறுநீரை சேகரித்து சிறுநீர் நாளம் வழியாக அனுப்புகிறது. அச்சிறுநீர் தற்காலிகமாக சிறுநீர்ப்பையில் சேமிக்கப்படுகின்றது
சிறுநீர்பை சிறுநீர் வெளிவிட்டு நாளத்தில் திறக்கிறது. அதன் வழியாக சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.

9.

10.
அளவின் அடிப்படையில் கனிமங்களின் வகைப்பாடு :
(i) இன்றியமையாக் கனிமங்கள் தேவையின் அடிப்படையில் பெரும ஊட்டமூலங்கள், மற்றும் வகைப்படுத்தப்படாத கனிமங்கள் எனப் பிரிக்கப்படுகின்றது.
(ii) அதிக அளவில் தேவைப்படும் இன்றியமையாத் தனிமங்கள் நுண் ஊட்டமூலங்கள் (Macronutrients) என அழைக்கப்படுகிறது.
(iii) குறைவான செறிவில் தேவைப்படும் அத்தியாவசியத் தனிமங்கள் நுண் ஊட்டமூலங்கள் (Macronutrients) எனப்படும்.
(iv) சோடியம், சிலிக்கான், கோபால்ட் மற்றும் செலினியம் போன்ற தனிமங்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால் சில தாவரங்களின் செயல்பாட்டிற்கு இவை தேவைப்படுகின்றன.
(v) இந்த தனிமங்கள் வகைப்படுத்தப்படாத கனிமங்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.இத்தனிமங்கள் சில குறிப்பிட்ட பணிகளுக்குத் தேவைப்படுகின்றன.
(vi) எடுத்துக்காட்டகச் சிலிக்கான் பூச்சி எதிர்ப்பு, நீரோட்டத்தில் சாய்தலைத் தடுக்க மற்றும் செல்சுவர் உருவாக்கத்திற்கு ஈக்யுஸிட்டேசி (ஈக்யுஸிட்டம்) சைப்பரேசி, கிராமினே ஆகிய குடும்பங்களின் தாவரங்களுக்கு தேவைப்படுகிறது.
(vii) பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் தோன்றுமிடத்தை வைத்து முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் வேறுபாட்டை உணரலாம். இதற்கு முக்கிய காரணம் கனிமங்களின் இடம்பெயர்வகும். இதன் அடிப்படையில்
(அ) விரைவாக இடம்பெயரும் தனிமங்கள்
(ஆ) ஒப்பீட்டளவில் இடம் பெயராத தனிமங்கள்
என வகைப்படுத்தப்படுகிறது.
(அ) விரைவாக இடம்பெயரும் தனிமங்கள்
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மெக்னீசியம், குளோரின், சோடியம், துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் விரைவாக இடம்பெயரும் தனிமங்கள். இளம் இலைகளை நோக்கி தனிமங்கள் விரைவாக இடம்பெயர்தல் பற்றாக்குறை அறிகுறிகள் முதிர்ச்சியடைந்த,உதிரும் நிலையில் உள்ள இலைகளில் தோன்றுகிறது.
(ஆ) ஒப்பீட்டளவில் இடம் பெயராத தனிமங்கள்
கால்சியம், கந்தகம், இரும்பு, போரான் மற்றும் தாமிரம் போன்ற தனிமங்கள் எளிதில் இடம்பெயர்வதில்லை. எனவே, பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் இளம் இலைகளில் தோன்றுகிறது.
11.
தாவரத் தண்டின் நீள் வளர்ச்சியை எளிதாக வில் ஆக்ஸனோமீட்டர் மூலம் அளக்கலாம். சிறிது கப்பியின் மைய அச்சுடன் இணைக்கப்பட்டுள்ள நீண்ட குறிமுள் அளவுகள் குறிக்கப்பபட்ட வில் மீது நகருமாறு அமைக்கப்பட்டுள்ளது. நூலின் ஒரு முனை தண்டின் நுனியுடன் கட்டப்பட்டிருக்கும் மற்றொரு முனை எடைக்கல்லுடன் கட்டப்படுவதால் கப்பி மீது நூல் இறுக்கமாகாச் செல்கிறது.
தாவரத் தண்டின் நுனி உயரத்தில் அதிகரிக்கும் போது கப்பி நகர்வதால் குறிமுள் அளவுகள் குறிக்கப்பட்ட வில்லில் கீழ்நோக்கி நகர்கிறது.அளவுகள் குறிக்கப்படுகிறது, கப்பியின் ஆரம் மற்றும் குருமுள்ளின் நீளம் ஆகியவற்றின் அளவுகளைப் பயன்படுத்தி தண்டின் உண்மையான நீள் வளர்ச்சியை அறியலாம்,கப்பியின் ஆரம் 4 அங்குலம் , குறி முள்ளின் நீளம் 20 அங்குலம் என இருந்தால் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.
12.
| சூழல் ஒளி பாஸ்பரிகரணம் மற்றும் சுழலா ஒளி பாஸ்பரிகரணம் வேறுபாடுகள் | |
| சூழல் ஒளி பாஸ்பரிகரணம் | சுழலா ஒளி பாஸ்பரிகரணம் |
| 1. PSI மட்டும் பங்கேற்கிறது. | 1. PSI மற்றும் PS II இரண்டும் பங்கேற்கின்றன. |
| 2. வினை மையமாக P700 செயல்படுகிறது. | 2. வினை மையமாக P680 செயல்படுகிறது |
| 3. வெளியேற்றப்பட்ட எலக்ட்ரான்கள் மீண்டும் திரும்புகிறது. | 3. வெளியேற்றப்பட்ட எலக்ட்ரான்கள் திரும்பவில்லை. |
| 4. நீரின் ஒளிபிளத்தல் நடைபெறுவதில்லை. | 4. நீரின் ஒளிபிளத்தல் நடைபெறுகிறது. |
| 5. ATP மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. | 5. ATP மற்றும் NADPH+H உற்பத்தியாகின்றன. |
| 6. பாஸ்பரிகரணம் இரண்டு இடங்களில் நடைபெறுகிறது. | 6. பாஸ்பரிகரணம் ஒரு இடங்களில் நடைபெறுகிறது |
| 7. வெளிப்புறத்திலிருந்து எலக்ட்ரான்கள் பெறப்படுவதில்லை. | 7. வெளிப்புற எலக்ட்ரான் வழங்கியான H2O மற்றும் H2S லிருந்து எலக்ட்ரான்கள் பெறப்படுகிறது. |
| 8. டைகுளோரோ டை மீதைல் யூரியாவினால் (DCMI) பாதிக்கப்படுவதில்லை. | 8. இது DCMI யால் எலக்ட்ரான் ஓட்டம் பாதிக்கப்படுகிறது. |
13.
ஆற்றல் சாரா உள்ளெடுப்பு
அயனிப் பரிமாற்றம் (Ion- Exchange)
வேர் செல்களுக்குள் இருக்கும் அயனியும் நிலக்கரைசலில் அதே மின்சுமையுடன் உள்ள அயனியும் பரிமாற்றமாகும். இதனை இரு கோட்பாடுகள் மூலம் விளக்கலாம்.
அவை (i) தொடர்பு பரிமாற்றக் கோட்பாடு மற்றும்
(ii) கார்பானிக் அமில பரிமாற்றக் கோட்பாடு.
அ. தொடர்பு பரிமாற்றக் கோட்பாடு (Contact Exchange Theory)
இக்கொள்கையின்படி வேர்செல்களின் மேற் பரப்பில் உள்ள அயனிகளும் மண் துகளில் ஒட்டியுள்ள அயனிகளும் உறுதியாகப் பிணையாமல் ஒரு குறுகிய வட்டப்பரப்பில் ஊசலாடிக் கொண்டுள்ளன.
இப்பரப்பு ஊசலாடும் பரப்பு (Oscillation Volume) எனப்படும்.
இக்குறுகிய பரப்பு காரணமாக அயனிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் தங்களுக்குள் எளிதாகப் பரிமாற்றம் செய்து கொள்கின்றன.
ஆ. கார்பானிக் அமில பரிமாற்றக் கோட்பாடு(Carbonic Acid Exchange Theory)
இக்கொள்கையின்பை, அயனிப்பரமாற்றத்திற்கு மிக முக்கியபங்கு வகிப்பது நிலக் கரைசலாகும். இதுவே அயனிப்பரமாற்றத்திற்கு ஊடகமாகவும் செயல்படுகிறது.
வேர் செல்களில் நடைபெறும் சுவாசித்தல் காரணமாக வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடனது நீருடன் சேர்ந்து கார்பானிக் அமிலமாக (H2CO3) மாறுகிறது.
இவ்வமிலம் மண் கரைசலில், புரோட்டானாகவும் (H+) பைகார்பனேட்டாகவும் (HCO-3) பிரிகிறது.
இதில் புரோட்டான்கள் மண் துகளில் பிணைந்துள்ள நேர்மின் அயனியுடன் பரிமாறிக் கொள்ளப்படுவதால் நேர்மின் அயானது மண் துகளிலிருந்து விடுவிக்கப்பட்டு மண் கரைசலில் சேர்கிறது.
பின் அது எளிதில் வேர்செல்களால் உள்ளெடுக்கப்படுகிறது.
14.

15.
| சல்லடைச் செல்கள் மற்றும் சல்லடைக் குழாய்கள் இடையேயான வேறுபாடுகள் | |
| சல்லடைச் செல்கள் | சல்லடைக் குழாய்கள் |
| 1. இச்செல்களுடன் துணைசெல்கள் காணப்படுவதில்லை. | 1. இச்செல்களுடன் எப்பொழுதும் துணைச்செல்கள் காணப்படுகின்றன. |
| 2. சல்லடை பரப்புகள் சல்லடை தட்டுகளை உருவாக்குவதில்லை. | 2. சல்லடை பரப்புகள் சல்லடை தட்டுகளை உருவாக்குகின்றன. |
| 3. சல்லடை பரப்புகள் வேறுபாடு அற்றவை. | 3. சல்லடை பரப்புகள் நன்றாக வேறுபாடு அடைந்தவை. |
| 4. செல்கள் நீண்டவை மழுங்கிய முனைகளைக் கொண்டவை. | 4. நீளவாக்கில் அமைந்த செல்கள் ஒன்றன் மீது ஒன்று குழாய் போன்று அமைந்து சல்லடை துளைகளுடன் இணைந்துள்ளன. |
| 5. அதிக எண்ணிக்கையில் பல சிறிய சல்லடை துளைகளைக் கொண்டவை. |
5. குறைந்த எண்ணிக்கையில் நீண்ட சல்லடை துளைகளைக் கொண்டவை. |
| 6. டிரிடோஃபைட், ஜிம்னோஸ்பெர்ம்களில் காணப்படுகிறது. | 6. ஆஞ்சியோஸ்பெர்ம்களில் காணப்படுகின்றன. |
16.
நீரியல் திறன் (\(\Psi \)) இவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.
\(*W=*s+*p\)
நீரியல் திறன் கரைபொருள் உள்ளார்ந்த திறன் + அழுத்தம் உள்ளார்ந்த திறன்
(i) கரைபொருளின் அடர்த்தி அல்லது கரைபொருள் உள்ளார்ந்த திறன் (*)
(ii) அழுத்தம் உள்ளார்ந்த (*) மேற்கண்ட இரு காரணிகலையும் இணைத்து நீரியல் திறனை இவ்வாறு குறிப்பிடலாம்.
(i) கரைபொருள் திறன் (*s) (Solute polential) : கரைபொருள் திறன் என்பது ஒரு கரைபொருள் நீரியல் திறன் மீது ஏற்படுத்தும் விளைவாகும். இது சவ்வூடு பரவல் இயல்திறன் (Osmotic Potential) என்றும் அழைக்கப்படுகிறது. தூய நீரில், கரைப்பொருளினைச் சோர்க்கும்போது அது னீரின் தனி ஆற்றலை (Free Energy) குறைப்பதால் நீரியல் திறன் பூஜ்ஜியத்திலிருந்து குறைந்து எதிர்மறையாகவே இருக்கும்.
திட்ட வளிமண்டல அழுத்தத்தின் உள்ள ஒரு கரைசலின் நீரியல் திறனானது அக்கரைசலின் கரைபொருள் திறனுக்குச் சமமாகவே இருக்கும் (*w = *s).
2. அழுத்தம் உள்ளார்ந்த திறன் (*p) (Pressure Potential) : கரைபொருள் உள்ளார்ந்த திறனின் செயல்பாட்டிற்கு எதிராக செயல்படும் இயங்கு விசையை அழுத்தயியல் திறன் /அழுத்தம் உள்ளார்ந்த திறன் ஆகும். ஒரு செல்லில் அழுத்த இயல் திறன் அதிகரித்தால் நீரியல் திறனும் அதிகரிக்கும், எனவே நீர் செல்லுக்குஸ் சென்று செல் விறைப்புத் தன்மையினை அடைகிறது.
செல்லுனுள் உருவாகும் இவ்வகை நேர்மறை நீரியல் அழுத்தம் (Positive hydrostatic pressure), விறைப்பு அழுத்தம் எனப்படும்.
இதேபோன்று செல்லில் இருந்து நீர் வெளியேறுவதால் நீரின் உள்ளார்ந்த திறன் குறைகிறது. இந்நிலையில் செல் நெகிழ்வு நிலை(flaccid)அடைகிறது.
3.ஊடக உட்திறன் (*m) (Matric Potential) : செல்சுவரில் உள்ள நீரை ஈர்க்கும் கொல்லாய்டுகள் (hydrating colloid) அல்லது கூழ்மம் போன்ற அங்கக மூலக்கூறுகளுக்கும் நீருக்கும் இடையே உள்ள ஈர்ப்பு ஊடக உட்திறன் எனப்படுகிறது.
ஊடக உட்திறனை உள்ளீ ர்த்தல் அழுத்தம் (imbibition pressure) எனவும் அழைக்கலாம்.
ஊடக உட்திறன் அதிகபட்சமாக (எதிர்மறை அலகில்) உலர்ந்த பொருட்களின் காணப்படும்.
எடுத்துக்காட்டு: நீரில் ஊறவைத்த விதைகள் பொருக்கமடைதல் .
17.
சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் :
1. ஆக்சின் (IAA) இருக்கும் போது செல் வகுப்பை தூண்டுகிறது.
2. ஒளி உணரும் தன்மை பெற்ற விதைகளில் அதன் உறக்கத்தை நீக்கி முளைக்கும்படி செய்கிறது. எடுத்துக்காட்டு: புகையிலைத் தாவரம்.
3. ஆக்சின் இருக்கும் போது, பட்டாணி தாவரத்தில் பக்க மொட்டுகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது
4. சைட்டோகைனின் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சி அடையச் செய்து தாவரங்கள் வயதாவதை தாமதப்படுத்துகிறது. இதற்கு ரிச்மாண்ட் லாங்க் விளைவு (Richmond lang effect ) என்று பெயர்.
5. சைட்டோகைனின் புரத சேர்க்கை விதத்தை அதிகப்படுத்தவும் , கற்றை இடைக்கேபியம் உருவாதலைத் தூண்டவும் , புதிய இலைகள் , பசுங்கணிகம் மற்றும் பக்க கிளைகள் உருவாதலை தூண்டவும் உதவுகிறது.
6. தாவரங்கள் மிகத் துரதமாக கரைப் பொருட்களை சேகரமடையச் செய்ய உதவுதல்.
18.

19.
(i) சல்லடைக் குழாய்கள் நீண்ட ககுழாய்களைப் போன்ற ஃபுளோயத்தின் கடத்துக் கூறுகளாகும்.
(ii) இவை வரிசையாக அமைந்த சல்லடைக் குழாய் கூறுகளின் முனைகள் ஒன்றன் மீது ஒன்று அமைந்து உண்டாக்கபப்டுகிறது.
(iii) இதனுடைய முனை சுவரில் சல்லடை போன்ற துளைகள் காணப்படுகின்றன. இது சல்லடை துளைத்தட்டு எனபப்டும்.
(iv) சல்லடைக் குழாய் கூறுகளின் பக்கச்சுவர்களில் பளபளப்பான தடிப்புகள் காணபப்டுகின்றன. இவை எளிய அல்லது கூட்டு சல்லடைத்தட்டுகளை கொண்டுள்ளன. சல்லடைக் குழாய்களின் பணிகள் துணைச் செல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன என நம்பப்படுகிறது.
(v) முதிர்ந்த சல்லடை குழாய்களில் உட்கரு காணப்படுவதில்லை. ஆனால் சுவரை ஒட்டிய சைட்டோபிளாசம் காணபப்டுகிறது. இதில் சிறப்பு வகை புரதம். (பு.புரதம் ஃபுளோயம் புரதம்) எனபப்டும் ஸ்லைம் உடலங்கள் காணப்படுகின்றன.
(vi) முதிர்ந்த சல்லடைக் குழாய்களில், சல்லடை தட்டுகளில் உள்ள துளைகள் கேலோஸ் எனப்படும் பொருளால் (callose plug), அடைபட்டுள்ளது உணவுப்பொருட்கள் சைட்டோபிளாச இழைகள் மூலமாகக் கடத்தப்படுகிறது.
(vii) சல்லடைக் குழாய்கள் ஆஞ்சியோஸ் பெர்ம்களில் மட்டும் காணபப்டுகிறது.
20.
ஓரிணைக் கதுப்புகள் கொண்ட வண்ணத்துப்பூச்சி வடிவம் கொண்ட தைராய்டு சுரப்பி மூச்சுக்கு குழலைச் சுற்றிக் குரல்வளைக்கு கீழ் அமைந்துள்ளது.
தைராய்டு சுரப்பி நமது உடலில் உள்ள மிகப்பெரிய நாளமில்லாச் சுரப்பியாகும்.
இதன் பக்கத் கதுப்புகள் இரண்டும் இஸ்துமஸ் எனும் மையத் திசுத் தொகுப்பினால் இணைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கதுப்பும் பல நுண்கதுப்புகளால் ஆனது. நுண்கதுப்புகள் அசினி எனும் ஃபாலிகிள்களால் ஆனவை. (ஒருமையில் அசினஸ்)
அசினஸ் ஒவ்வொன்றும் சுரப்புதன்மையுடைய கனசதுர (அ) தட்டையான எபிதீலிய செல்களை சுவராகப் பெற்றுள்ளன.
அசினஸின் உட்பகுதி தைரோகுளோபுலின் மூலக்கூறுகள் கொண்ட அடர்த்தி மிக்க கூழ்ம கிளைகோபுரத கலவையால் நிரம்பியுள்ளது.
21.
1. சுவை மற்றும் மணம் இவற்றிற்கான உணரவேற்பிகள் எனப்படுகின்றன. காற்றில் கரையச் கூடிய வேதிப்பொருட்கள் நுகர்ச்சி உணரவேற்பிகளைத் தூண்டுவதால் மணம் உணரப்படுகிறது.
2. நாசியறைகளின் கூரைப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் எனப்படுகிறது.
3. நுகர்ச்சி எபித்தீலியமானது கீழ்புறம் கோழைப்படலத்தாலும், மேல்புறம் நுகர்ச்சி சுரப்பிகளைக் கொண்ட இணைப்புத்திசுக்களாலும் சூழப்பட்டுள்ளது.
4. நுகர்ச்சி உறுப்பில் மூன்று வகையான செல்கள் காணப்படுகின்றன. அவை
1.ஆதரவு செல்கள்,
2. அடிப்படை செல்கள்,
3. ஆயிரக்கணக்கான ஊசி வடிவ நுகர்ச்சி உணர்வேற்பி செல்கள்.
5. மயலினுறை அற்ற இந்த உணர்வேற்பிகளின் மெல்லிய இழைகள் இணைந்து நுகர்ச்சி நரம்பாக மாறியுள்ளது. இது நுகர்ச்சி குமிழில் இணைகிறது.
6. மூளையின் முன்நெற்றி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணம் உணரப்படுகிறது.
7.மூளையின் முன்நெற்றி பகுதிக்கு செல்லும் அதே நேரம் தூண்டல்கள் லிம்பிக் தொகுப்புக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்க்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.
22.
உட்செல் நுண்தமனி ➝கிளாமருலஸ் ➝பெளமானின் கிண்ணம்➝அண்மை சுருள் நுண்குழல்➝ஹென்லேயின் வளைவு➝சேய்மை சுருள் நுண் குழல்➝ சேகரிப்பு நாளம்➝சிறுநீரக பெல்விஸ்
23.
அ.பால் இறைச்சி போன்றவைகள் கிடைக்கும்.
ஆ.கலப்பின வீரியம் அல்லது கலப்பினத்தின் மிகு கால்நடை இனங்கள் கிடைக்கும்.
இ.முட்டைகளின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.
ஈ.I.குறைந்த வளர்ப்பு காலத்தில் அதிக வளர்ச்சி வீதம் கொண்டவை.
II.வழங்கும் துணை உணவை ஏற்றுக்கொள்பவை.
III.சில பொதுவான நோய்களை தாங்கும் திறன் மற்றும் ஒட்டுண்ணிகள் தாக்கத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்டவை.
24.
1. இக்கோட்பாடு 1954 ஆம் ஆண்டு ஆனட்ரு F-ஹக்ஸ்லி மற்றும் ரோல்ப் நீடர்கெர்க் என்பவர்களால் உருவாக்கப்பட்டது.
2. இக்கோட்பாட்டின் படி குறிப்பிட்ட நீளமுடைய ஆக்டின் மற்றும் மையோசின் இழைகள் ஒன்றின் மீது ஒன்றாக இழைகிறது.
3. இதன் விளைவாகத் தசைச்சுருக்கம் ஏற்படுகின்றது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards