11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/01/2019
11th First Revision Test
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
பொட்டாசியம் மற்றும் அதன் அறிகுறியினை எழுதுக
2.
பட்டைத் துளை நீராவிப் போக்கு பற்றி எழுதுக.
3.
ஃபுளோய செல்லின் படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.
4.
பிளீக்டோனீமிக் DNA சுருள்கள் என்றால் என்ன?
5.
வாம்பின் என்றால் என்ன?
6.
ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.
7.
அண்மை சுருள் நுண்குழல் பகுதியில் மீள உறிஞ்சப்பட்ட பொருட்கள் எம்முறையில் கடத்தப்படுகின்றன எனப் பொருத்துக.
| அ) Na+ | -எளிய ஊடுருவல் |
| ஆ) குளுக்கோஸ் | -முதன்மை செயல்மிகு கடத்தல் |
| இ) யூரியா | -மறைமுக செயல்மிகு கடத்தல் |
| ஈ) பிளாஸ்மா | -இணை செயலியக்கம் |
| உ) நீர் | -உயிரணு உட்கவர்தல் |
| ஊ) புரதங்கள் | -புரத வழி ஊடுருவல் |
8.
பிளவு உடற்குழியையை (Schizocoelom) உணவுப்பாதை உடற்குழியுடன்டன் (Enterocoelom) ஒப்பிடுக.
9.
இதய ஒலிகள் என்றால் என்ன? அவை எப்போது, மற்றும் எப்படி உண்டாக்கப்படுகின்றன?
10.
வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?
11.
சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
12.
பெண்பூச்சிகள் ____ முட்டை பொரிந்து லார்வாவாக மாறும்
கருவுருதலுக்குப் பின்
வாரங்களுக்குப் பின்
ஸ்வார்மிங்
நீண்ட வடிவில்
13.
பொதுச் சொல்லான பிளாஸ்மா சவ்வு தசைகளில் _________ என அழைக்கப்படுகிறது.
தசை நுண்ணிழை
சார்க்கோலெம்மா
சார்க்கோபிளாசம்
சார்க்கோபிளாச வலைப்பின்னல்
14.
மீளாவினையின் விளைவால் இரண்டு மூலக்கூறு NADH+H+ மற்றும் CO2 ஆகியவை உருவாகின்றன. இது உருமாறும்வினை அல்லது _________ எனவும் அழைக்கப்படுகின்றது.
சுவாசித்தல்
ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினை
இணைப்பு வினை
குளுக்கோ நியோஜெனிசிஸ்
15.
தாவரத்தின் அடிப்படை அலகு ______ எனப்படும்.
செல்
எளியத்திசு
இடியோபிளாஸ்ட்கள்
ஸ்கிலிரைடுகள்
16.
தாவரங்களின் விதை உறக்கம்______.
சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
வளமான விதைகளை உருவாக்குதல்
வீரியத்தை குறைகிறது
விதைச்சிதைவை தடுக்கிறது
17.
பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:
| 1. சிட்டரஸ் அடிநுனி இறப்பு | (i) Mo |
| 2. சாட்டை வால் நோய் | (ii) Zn |
| 3. பழுப்பு மையக் கருக்கல் நோய் | (iii) Cu |
| 4. சிற்றிலை நோய் | (iv) B |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (ii) | (iv) | (i) |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (i) | (iv) | (ii) |
| 1 | 2 | 3 | 4 |
| (i) | (iii) | (ii) | (iv) |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (iv) | (ii) | (i) |
18.
மீசோகேரியோட்டுகளில் இவ்வகை செல்பகுப்பு நடைபெறுகிறது.
ஏமைட்டாசிஸ்
மைட்டாசிஸ்
மியாசிஸ்
மறைமுகப் பகுப்பு
19.
உருளைப்புழுக்களில் நீர்மச் சட்டகமாக செயல்படுவது
உடற்குழி திரவம்
போலி உடற்குழி திரவம்
இரத்தம்
நிணநீர்
20.
உயிரினங்களில் காணப்படும் வளர்ச்சி குறித்த தவறான கூற்று எது.
உயிரினங்களில் வளர்ச்சி வெளியார்ந்ததாகும்.
உயிரினங்களில் வளர்ச்சி, வளர்ச்சியும் இனப்பெருக்கமும் ஒருங்கிணைந்தது.
உயிரினங்களின் வளர்ச்சியின் போது பொருண்மை அதிகரிக்கின்றது.
உயிரினங்களின் உடலில் காயம் ஏற்படும் சமயத்தில் பழுதடைந்த திசுக்களைச் சரி செய்வது வளர்ச்சியின் மூலமே.
21.
அயோடின் கலந்த உப்பு இதனைத் தடுத்தலில் முக்கியப்பங்காற்றுகிறது.
ரிக்கெட்ஸ்
ஸ்கர்வி
காய்டர்
அக்ரோமெகாலி
22.
சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?
பெளமானின் கிண்ணம்
ஹென்லே வளைவின் நீளம்
அண்மை சுருள் நுண்குழல்
கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு
23.
கீழ் உள்ளனவற்றுள் பொருந்தாத இணை எது?
பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர்
ஸ்டார்ச்சை நீராற் பகுத்தல்-அமைலேஸ்கள்
கொழுப்பு செரித்தல்-லிபேஸ்கள்
உமிழ்நீர் சுரப்பி-பரோடிட்
24.
கீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..
நீணநீர் ரத்தத்திலிருந்து உருவாகி நீணநீர் நாளங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சுற்றோட்ட மண்டத்தை அடைகிறது
புரதங்களின் அடர்த்தி பிளாஸ்மாவைக் காட்டிலும் திசுத்திரவத்தில் குறைவாகக் காணப்படுகிறது.
நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்
நுண் இரத்த நாளங்களின் சுவர் வழியாக வெளிவரும் நீர் மற்றும் சிறுமூலக்கூறுகள் நீணநீரைத் தோற்றுவிக்கிறது.
25.
கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை.
பிரைமேட்டா
ஆர்த்தோப்டீரா
டிப்டிரா
இன்செக்டா
26.
கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?
மாஞ்சிஃபெரா
பாம்புசா
மியூசா
அகேவ்
27.
28.
உடல் சமநிலை பேணும் உறுப்பு பற்றி எழுதுக?
29.
சுவாசித்தலின் மாற்று தளப்பொருள் படம் வரைக?
30.
சயனோ பாக்டீரியத்தின் சிறப்பியல்புகள் யாவை?
31.
தவளைகளுக்கும் தேரைகளுக்குமிடையே வேறுபாடுகளை அட்டவணைப்படுத்து
32.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.
33.
நல்ல மணம் ஒருவரை சமையலறை நோக்கிச் செல்லத் தூண்டியது.இதில் உணவை அடையாளம் கண்டு உணர்வு தூண்டலை உண்டாக்கும் மூளை பகுதி எது?
34.
நெஃப்ரானுள் நுழையும் ஒரு துளி நீர் எதிர்கொள்ளும் அமைப்புகளை வரிசைப்படுத்துக்க.
(அ) உட்செல் நுண்தமனி
(ஆ) பெளமானின் கிண்ணம்
(இ) சேகரிப்பு நாளம்
(ஈ) சேய்மை சுருள் நுண் குழல்
(உ) கிளாமருலஸ் மற்றும்
(ஊ) ஹென்லேயின் வளைவு
(எ) அண்மை சுருள் நுண்குழல்
(ஏ) சிறுநீரக பெல்விஸ்
35.
பெரும்பாலான விலங்குகளில் காணப்படும் பொதுவான நான்கு பண்புகளைக்ளைக் குறிப்பிடுக.
36.
லில்லியேசி குடும்பத் தாவரங்களை சொலானேசி குடும்பத் தாவரங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுத்துவாய்?
37.
நுகர்ச்சி உறுப்புகள் என்றால் என்ன?
38.
நீள் பகல் தாவரம் என்றால் என்ன?
39.
ஸ்ட்ரெப்டோமைசிஸ் எனும் மண்வாழ் ஆக்டினோ பாக்டீரியம் உருவாக்கும் உயிர் எதிர்ப் பொருட்களைக் கூறு.
40.
சினான்டரஸ் மகரந்தம் என்பது யாது? எடுத்துக்காட்டு தருக.
41.
தாவரங்கள் இலைகள் உதிர்ந்த பின் எவ்வாறு சுவாசிக்கிறது?
42.
இரைப்பை உணவுக்குழல் பின்னோட்ட நோய் என்பது யாது?
43.
வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பல்வேறு தன்மைகளின் பகுப்பாய்வி என்பது யாது?
44.
தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பின் பெயர்களைக் கூறு
45.
சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய் எது?
46.
உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக.
1.
பொட்டாசியம் (K):
(i) செல்லின் சவ்வூடுபரவல் திறன் மற்றும் விறைப்பழுத்தத்தை கட்டுப்படுத்தி இலைத்துளை மூடி, திறக்க உதவுதல், புளோயத்தில் நடைபெறும் கடத்தல் செயல், நொதிகளின் செயல்பாடு மற்றும் அயனி பரிமாற்றம் மூலம் அயனி சமநிலையயை உண்டாக்குதல் ஆகியவை இதன் பணிகளாகும்.
(ii) K அயனிகளாக உள்ளெடுக்கப்படுகிறது.
பற்றாக்குறை அறிகுறிகள் :
(i) விளிம்பு பச்சைய சோகை, நைவுப் புண்கள் (Necrosis), கேம்பிய செயல்பாடு குறைதல், முனை ஆதிக்கப் பாதிப்பு, தானியங்களில் நீரோட்ட தலைசாய்வு மற்றும் இலைவிளிம்பு சுருள்தல்.
2.
தாவரங்களில் இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுவதன் காரணமாகப் புறத்தோலுக்கு பதிலாக பெரிடெர்ம் உருவாகிறது.
தண்டின் உள்ளமைந்த உயிருள்ள செல்களுக்கும் வெளிப்புற வளிமண்டலத்திற்கும் வாயுப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு ஏதுவாகச் சிறிய லென்ஸ் வடிவத் துளைகள் தண்டின் மேற்பரப்பில் காணப்படுகின்றன.
இவையே லென்டிசெல்(Lenticels) அல்லது பட்டைத் துளைகள் எனப்படும்.
3.

4.
1.DNA வின் இரண்டு இழைகள் திருகுச்சுருள் அமைப்பில் ஒன்றோடொன்று பிணைத்து காணப்படுகிறது.
2.இதில் ஒன்றிலிருந்து மற்றொன்ற எளிதில் பிரிக்க முடியாதவாறு காணப்படுகிறது.
3.இதற்கு பிளீக்டோனீமிக் DNA சுருள்கள் என்று பெயர்.
5.
1. வீணாகும் உணவுப் பொருட்கள், இலை குப்பை மற்றும் உயிர்த்திரள் போன்றவற்றை மண்புழுக்கள் மூலம் மறு சுழற்சி செய்து நல்ல தரமான உரத்தை சிறுகலன்களின் தயாரிப்பது வாம்பின் அல்லது தரமான புழு வளர்ப்பு எனப்படும்.
2. மரபு முறைகளைவிட வேகமாக இம்முறையில் தரமான தொழு உரத்தை தயாரிக்கலாம்.
6.
இரு பிரிவு தாவரங்களின் ஒளிச்சேக்கை வீதத்தை ஒப்பிடுக.
பிரிவு அ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)400-450nm இடைப்பட்ட ஒளி அலைநீளம் நீல நிற ஒளி சேர்க்கை ஆகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் அதிகமாக உள்ளது.
பிரிவு ஆ: ஒளிசேர்க்கைக்கான செயல்திறன் கதிர்வீச்சான (PAR)500-550 இடைப்பட்ட ஒளி அலைநீளத்தில் பச்சை நிற ஒளி சேர்க்கை கதிர்வீச்சாகும். இதில் ஒளிச்சேர்க்கை வீதம் குறைவகவே நடைப்பெறுகின்றது. பச்சையம் உரிஞ்சப்படுவது இல்லை.
7.
8.
| வ.எண். | சைகோசீலோமேட் | என் டீரோசீலோமேட் |
|---|---|---|
| 1. | நடுப்படை பிளவுபடுவதால் உருவாகின்றது | மூலக்குடலின் நடுப்படை பைகளிலிருந்து உருவாகின்றது. |
| 2. | பிளவு உடற்குழி என அழைக்கப்படுகிறது. | உணவுப்பாதை உடற்குழி என அழைக்கப்படுகிறது. |
| 3. | எ.கா. வளைதசைப்புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள் | முட்தோலிகள், அரை நாணிகள், முதுகு நாணிகள் |
9.
1. இதைச் சூழ்ற்சியின் போது வால்வுகளின் இயக்கத்தாதல் உண்டாகும் இருவகை இதய ஒலிகள் ஸ்டெத்தாஸ்கோப் பின் உதவியுடன் கேட்கலாம்.
2. 'லப்' ஒலி - வெண்டிரிக்கிள்கள் சுருங்கும் போது மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக் கொள்வதால் 'லப்' எனும் ஒலி தோன்றுகிறது.
3.'டப், ஒலி - வென்ட்ரிகுலார் சிஸ்டோலின் முடிவில் அரைச்சந்திர வால்வுகள் மூடுவதால் 'டப்' எனும் இரண்டாவது ஒளி தோன்றுகிறது.
10.
| வேர் ஏறு கொடிகள் | தண்டு ஏறு கொடிகள் | |
| 1. | தாவரங்களின் கணுக்களிலிருந்து தோன்றும் வேற்றிட வேர்களின் மூலம் ஆதாரத்தைப் பற்றி தாவரங்கள் ஏறுகின்றன. |
இவ்வகை தாவரங்களில் ஆதாரத்தைப் பற்றி ஏறுவதற்கான சிறப்புத் தகவமைப்புகள் கிடையாது. எனவே தண்டு ஆதாரத்தைச் சுற்றி பின்னி வளர்கின்றன. |
| 2. | எ.கா. பைப்பர் பிடல் பைப்பர் நைக்ரம் ஹீடிரா ஹீடிரா ஹெலிக்கஸ், போதாஸ் |
எ.கா. ஐபோமியா, கண்வால்வுலஸ், டாலிகஸ், கிளைட்டோரியா குவிஸ் குவாலிஸ். |
11.
12.
(b)
வாரங்களுக்குப் பின்
13.
(b)
சார்க்கோலெம்மா
14.
(c)
இணைப்பு வினை
15.
(a)
செல்
16.
(a)
சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
17.
(b)
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (i) | (iv) | (ii) |
18.
(a)
ஏமைட்டாசிஸ்
19.
(b)
போலி உடற்குழி திரவம்
20.
(a)
உயிரினங்களில் வளர்ச்சி வெளியார்ந்ததாகும்.
21.
(c)
காய்டர்
22.
(b)
ஹென்லே வளைவின் நீளம்
23.
(a)
பிலிரூபின் மற்றும் பிலிவிரிடின்-சிறுகுடல் நீர்
24.
(c)
நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும்
25.
(a)
பிரைமேட்டா
26.
(b)
பாம்புசா
27.
(c)
28.
உடல் சமநிலை பேணும் உறுப்பு :
1. சமநிலை பேணுதல் என்பது அசைவுகளை உணரும் உணர்வின் ஒரு பகுதியாக உள்ளது.
2. உடலின் நிலை, அதன் திசையமைவு, அதன்
29.

30.
1.இந்தத் தொகுப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் தொல்லூட்கரு உயிரிகளாகவும், நகரும் இனப்பெருக்க அமைப்புகள் அற்றும் காணப்படுகின்றன.
2.குரூக்காக்கஸ் ஒரு செல் உடலமைப்பிலும், கிளியோகாப்சா கூட்டமைப்பிலும், நாஸ்டாக் இழை வடிவிலும் காணப்படுகின்றன.
3.சில சிற்றினங்களில் வழுக்கு நகர்வு இயக்கம்(Gliding movement) காணப்படுகிறது.(ஆஸில்லடோரியா).
4.புரோட்டோபிளாசத்தின் மையப்பகுதி சென்ட்ரோபிளாசம் எனவும், விளிம்புப் பகுதி வண்ணத்தாங்கிகள் (chromatophore) கொண்டு குரோமோபிளாசம் எனவும் வேறுபட்டுள்ளது.
5.ஒளிச்சேர்க்கை நிறமிகளான C-பைக்கோசயனின், C-பைக்கோஎரித்ரின் போன்றவை மிக்சோஸாந்தின், மிக்சோஸாந்தோபில்லுடன் இணைந்து காணப்படுகின்றன.
6.சேமிப்பு உணவாகச் சயனோஃபைசிய தரசம் காணப்படுகிறது.
7.சில சிற்றினங்களில் அளவில் பெரிய நிறமற்ற செல்கள் உடலத்தின் நுனி அல்லது இடைப்பகுதியில் காணப்படுகின்றன.இவை ஹெட்டிரோசிஸ்டுகள் (Heterocysts) ஆகும்.இவ்வமைப்புகள் நைட்ரஜனை நிலைப்படுத்த உதவுகின்றன.
8.இவை தழை உடல இனப்பெருக்கம் வழி மட்டுமே இனப்பெருக்கம் செய்கின்றன.உறக்க நகராவித்துகள்(Akinetes) (தடித்த செல் சுவருடைய தழை உடல செல்களிலிருந்து தோன்றும் ஓய்வுநிலை செல்), ஹார்மோகோன்கள் (இழை உடலத்தின் ஒரு பகுதி பிரிந்துசென்று செல் பகுப்படைகிறது), பிளவுறுதல்,அகவித்துகள் போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றன.
9.இப்பிரிவு உயிரினங்களின் உடலத்தைச் சூழ்ந்து மியூசிலேஜ் படலம் காணப்படுவது சிறப்புப்பண்பாகும்.இக் காரணத்தினால் இவைகள் மிக்ஸோஃபைசி எனவும் அறியப்படுகின்றன.
10.பாலினப்பெருக்கம் காணப்படுவதில்லை.
11.மைக்ரோசிஸ்டிஸ் ஏருஜினோசா,அனபீனா பிளாஸ் அக்குவே போன்றவை நீர்மலர்ச்சியினை (Water bloom) ஏற்படுத்துவதுடன்,நச்சுப்பொருட்களையும் வெளியேற்றி நீர்வாழ் உயிரினங்களைப் பாதிக்கின்றன.பெரும்பாலானவை வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்தும் திறன் பெற்றுள்ளதால் உயிர் உரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.(எ.கா: நாஸ்டாக்,அனபீனா).ஸ்பைருலினால் புரதம் அதிகமிருப்பதால் அவை ஒன்றைச் செல் புரதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
31.
| பண்புகள் | தவளைகள் | தேரைகள் |
|---|---|---|
| குடும்பம் | ராணிடே | பஃபோனிடே |
| உடல் வடிவம் | ஒல்லியானது | பருத்தது |
| கால்கள் | நீண்டவை | குட்டையானவை |
| விரலிடைச்சவ்வு கொண்ட பாதம் | உள்ளது | இல்லை |
| தோல் | மென்மையான ஈரமுள்ள தோல் | பெருமுகிழ்ப்பு போன்ற சுரபிகளுடன் உலர்ந்த தோல் |
| பற்கள் | மேல்தாடை பற்கள், வோமரின் பற்கள் ஆகியவை உண்டு | பற்கள் இல்லை |
| முட்டையிடுதல் | கொத்தாக முட்டைகளைளிடும் | சாரமாக முட்டைகளையிடும் |
32.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகள்:
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலைத் தண்டு | ஒருவிதையிலைத் தண்டு |
| 1. | பபுறத்தோலடித்தோல் | கோலங்கைமா செல்களானது. | ஸ்கிலிரங்கைமா செல்களானது. |
| 2. | அடிப்படைத்திசு | புறணி, அகத்தோல், பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படுகிறது. |
வேறுபடாத, தொடர்ச்சியான பாரங்கைமா திசுவால் ஆனது. |
| 3. | தரசு அடுக்கு | காணப்படுகிறது | காணப்படவில்லை. |
| 4. | மெடுல்லா கதிர்கள் | காணபப்டுகிறது | காணப்படவில்லை. |
| 5. | வாஸ்குலக் கற்றைகள் | (i) ஒருங்கமைந்தவை மற்றும் திறந்தவை. (ii) ஒரு வளையமாக அமைந்துள்ளன. (iii) இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுகிறது. |
(i) ஒருங்கமைந்தவை மற்றும் மூடிய வை. (ii) அடிப்படைத்திசுவில் சிதறிக் காணப்படுகிறது. (iii) இரண்டாம் நிலை பொதுவாக நடைபெறுவதில்லை. |
33.
1. ஹைப்போதலாமஸில் உள்ள உள்ள ஓரிணை சிறிய உருண்டையான உறுப்பிற்கு மாமில்லரி உறுப்பு (Mammillary bodies) என்று பெயர். வாசனை சார்ந்த அனிச்சை செயல் மற்றும் அது தொடர்பான உணர்ச்சி வெளிப்பாடுகளில் இவ்வுறுப்பு பங்கேற்கிறது.
2. சுவை மற்றும் மணம் இவற்றிக்கான உணர்வேற்பிகள் வேதிவுணர்வேற்பிகள் (chemoreceptors) எனப்படுகின்றன.
3. காற்றில் கரையக்கூடிய வேதிப்பொருட்கள் நுகர்ச்சி உணரவேற்பிகளைத் தூண்டுவதால் மனம் உணரப்படுகிறது.
நாசியறைகளின் குறைப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறுத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய (ஒளபாக்டரி epithelium) திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் எனப்படுகிறது.
4. நுகர்ச்சி மின்தூண்டல்கள் இங்கிருந்து மூளையின் முன்நெற்றி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணம் உணரப்படுகிறது.
5. மூளையின் முன்நெற்றி பகுதிக்குச் செல்லும் அதேநேரம் தூண்டல்கள் லிம்பிக்தொகுப்புக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மணத்திற்கான உணர்வு அடிப்படையிலான பதில் செயல் பெறப்படுகிறது.
34.
உட்செல் நுண்தமனி ➝கிளாமருலஸ் ➝பெளமானின் கிண்ணம்➝அண்மை சுருள் நுண்குழல்➝ஹென்லேயின் வளைவு➝சேய்மை சுருள் நுண் குழல்➝ சேகரிப்பு நாளம்➝சிறுநீரக பெல்விஸ்
35.
1. செல், திசு, உறுப்பு அல்லது உறுப்புமண்டல உடற்கட்டமைப்பை பெற்றிருப்பது.
2. ஒட்டிக்கொண்டோ, தனித்தோ, மிதந்தோ, நீந்தியோ, கூட்டமாக வாழும் இயல்பை பெற்றிருப்பது.
3. உடற்குழி அற்று, போலியான உடற்குழி அல்லது உண்மையான உடற்குழியை பெற்றிருப்பது.
4. ஈரடுக்கு அல்லது மூவடுக்குத் தன்மை
5. சமச்சீரற்ற, ஆரச்சமச்சீர் அல்லது இருபக்க சமச்சீர்தன்மை.
6. பாலின அல்லது பால் இனப்பெருக்கம்
7. மறைமுகவளர்ச்சி மற்றும் லார்வாக்களை பெற்றிருப்பது.
36.
| வ.எண் | பொதுப் பண்புகள் | குடும்பம் : சொலானேசி | குடும்பம் : லில்லியேசி |
|---|---|---|---|
| 1. | வளரியல்வு | பெரும்பாலும் ஒரு பருவச் சிறுகொடிகள் புதர் செடிகள், சிறிய மரங்கள் | பெரும்பாலும் பல பருவச் சிறு செடிகள் |
| 2 | வேர் | கிளைத்த அனிவேர் தொகுப்பு | வேற்றிட சல்லிவேர்த் தொகுப்பு |
| 3. | தண்டு | மென்மையானது (அ ) கடைத்தன்மை கொண்டது, நிமிர்ந்து பின்னுக் கொடிகள் (அ) ஊடுருவி வளர்பவை | தரை தரைக்கீழ் குமிழ் தண்டு , சில வற்றின் மட்டநிலத்தண்டு |
| 4. | இலை | மாற்றிலை யடுக்கமைவு , தனியிலை அரிதாக இதற்கு வடிவ கூட்டிலை கள் , இலையடிச் செதிலற்றது.எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு | வேரண்மை இலைகள் காலைன் மாற்றிலை யடுக்கமைவு எதிரிலை யடுக்கமைவு வலைப் பின்னால் நரம்பமைவு இலையடிச் செதில் அற்றது |
| 5. | மஞ்சரி | இலைக்கோண (அ ) நுனி சைம்கள் (அ ) தனி மலர் , தேளுறு (அ )ரைபிடியம் (அ) சை மோஸ் (அ ) அம்பெல் லேட் சைம் | தனித்த (அ)கிளைத்த ரெசிமோஸ் (அ ) ஸ்பைக் (அ ) கூட்டு ரசிம் |
| 6 | மலர் | பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது , பூக்காம்பு டையது, இரு பால் மலர் இரு பூவிதழ் அடுக்குடையது | காம்புடையது. பூவடிச் செதிலுடையது, பூவடிச் செதிலற்றது,இரு பால் மலர் முவங்கமலர் சூலக மேல் மலர் |
| 7 | புல்லிவட்டம் (அ ) பூவிதழ் வட்டம் | புல்லிகள் 5,அரிதாக 4(அ ) இணைந்த புல்லி , தொடு இதழமைவு நிலைத்த புல்லி | பூவிதழ்கள் - 6 இணை யாதவை அரிதாக இணைந்தவை தோடு (அ )தழுவு இதழமைவு |
| 8 | அல்லிவட்டம் | அல்லிகள் 5 இணைந்த அல்லிகள் சூழல் இதழமைவு , சக்கர வடிவம் (அ ) மணி வடிவம் (அ ) புனல் வடிவம் தொடு (அ ) திருகு இதழமைவு | காணப்படுவதில்லை |
| 9 | மகரந்தத்தாள் வட்டம் | மகரந்தத்தாள் 5, அல்லி ஒட்டிவை சம நீலமற்ற மகரந்த கம்பிகளை யடைவை மகரந்தபை இரு அறைகள்களை உடைவை | மகரந்ததாள் 6 பூவிதலுக்கு எதிராக அமைத்துள்ளது.மகரந்தப்பை இரு மடல்கள் உடையது.நீள வாக்கில் வெடிப்பவை வெளி உள் நோக்கியது |
| 10 | கனி | வெடிகனி (அ ) சதைக்கனி | அறைவழி வெடிகனி (அ ) சதைகனி (அ ) தடுப்புச் சுவர் வழி வெடிகனி |
37.
நாசியறைகளின் குறைப்பகுதியில் காணப்படும் மஞ்சள் நிறத்தினால் ஆன நுகர்ச்சி எபிதீலிய திட்டுக்களே நுகர்ச்சி உறுப்புகள் எனப்படுகிறது.
38.
தீர்வுக்கட்ட ஒளிக்கால அளவைவிட மலர்தலுக்கு அதிக ஒளிக்காலம் தேவைப்படும் தாவரங்கள் நீள் பகல் தாவரங்கள் அல்லது குறு இருள் தாவரங்கள் என்படுகினற்ன,
எடுத்துக்காட்டு : பட்டாணி, பார்லி , ஓட்ஸ்.
39.
1.ஸ்ட்ரெப்டோமைசின்
2.குளோரம்ஃபெனிகால்
3.டெட்ராசைக்ளின்
40.
மலரில் மகரந்தக் கம்பிகளும், மகரந்தப்பைகளும் முழுமையாக இணைந்திருப்பது, சினான்டரஸ் மகரந்தம் எனப்படும்.
எ.கா: காக்சீனியா
41.
42.
1. இரைப்பை உணவைக் கடையும் போது கார்டியாக் சுருக்கத்தசைகள் சரியாக சுருங்காத நிலை ஏற்பட்டால் அமிலத்தன்மை கொண்ட இரைப்பை நீர் உணவுக் குழலுக்குள் மீண்டும் நுழைந்து விடும்.
2. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
3. இதற்கு இரைப்பை உணவுக்குழல் பின்னோட்ட நோய் என்று பெயர்.
43.
ஒத்தமைவு டி.என்.ஏ. மூலக்கூறுகளின் வரிசை அமைப்பில் உள்ள வேற்றுமைகளை டி.என்.ஏ. மாதிரிகளைப் பல துண்டங்கள் ஆக்குவதன் மூலம் அறிய இயலும். இம் முறைக்கு வரையறுக்கப்பட்ட துண்டங்களின் பகுப்பாய்வு என்று பெயர்.
44.
1. இராணி தேனீ,
2. ஆண் தேனீக்கள்
3. வேலைக்கார தேனீக்கள்
45.
சிறுநீரகத்தில் இருந்து வடிகட்டப்பட்ட இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்தக்குழாய் சிறுநீரக சிரை ஆகும்.
46.
உலகில் இலத்தீன் மற்றும் கிரேக்க மொழிகள் அதிகமாக பயன்பாட்டில் இல்லை. காலங்கள் கடந்தாலும் அதன் எழுத்துக்கள் மற்றும் அமைப்பு மாறாத காரணத்தினால் உயிரியல் சொற்கள் இன்றும் அம்மொழியில் தான் உள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards