11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
தாவரவியல் - கனிம ஊட்டம்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
நைட்ரஜன் வளிமண்டலத்தில் அதிகம் இருந்தாலும் தாவரஙகள் அதனைப் பயன்படுத்த முடிவதில்லை ஏன்?
2.
ஆஞ்சியோஸ் பெர்ம்களின் பூச்சியுண்ணும் உணவூட்ட முறையினை விவரி?
3.
ஏன் சில தாவரங்களில் பற்றாக்குறை அறிகுறிகள் முடிவில் இளம் இலைகளில் தோன்றுகிறது பிறதாவரங்களில் முதிர்ந்த பாகங்களில் தோன்றுகிறது?
4.
நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?
5.
தாவரம் A சாட்டைவால் நோய், தாவரம் B சிற்றிலை நோய் அறிகுறிகள் கொண்டுள்ளது. AB யின் கனிமக் குறைபாட்டினைக் கண்டறிக.
6.
சரியான கூற்றைக் கண்டறிக
I. சிஸ்டைன், மெத்தியோனின் அமினோ அமிலத்திற்குச் சல்ஃபர் அவசியம்
II. N, K, S மற்றும் MO குறைபாடு செல்பிரிவை பாதிக்கிறது.
III. லெகூம் அல்லாத தாவரத்தில் பிரான்க்கியா பாக்டீரியம் காணப்படுகிறது.
IV. நைட்ரஜன் நீக்கத்தில் பங்கேற்கும் நைட்ரோசோமோனாஸ் மற்றும் நைட்போபாக்டர்
I, II சரி
I, II, III சரி
I மட்டும் சரி
அனைத்தும் சரி
7.
சரியானவற்றைப் பொருத்துக.
| தனிமங்கள் | பணிகள் | ||
|---|---|---|---|
| A | மாலிப்டினம் | 1 | பச்சையம் |
| B | துத்தநாகம் | 2 | மெத்தியோனின் |
| C | மெக்னீசியம் | 3 | ஆக்சின் |
| D | சல்ஃபர் | 4 | நைட்ரோஜினேஸ் |
| A | B | C | D |
| 1 | 3 | 4 | 2 |
| A | B | C | D |
| 2 | 1 | 3 | 4 |
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
| A | B | C | D |
| 4 | 2 | 1 | 3 |
8.
மீண்டும் இடப்பெயராத தனிமம் எது?
பாஸ்பரஸ்
பொட்டாசியம்
கால்சியம்
நைட்ரஜன்
9.
ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்
Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்
Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்
10.
பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு:
| 1. சிட்டரஸ் அடிநுனி இறப்பு | (i) Mo |
| 2. சாட்டை வால் நோய் | (ii) Zn |
| 3. பழுப்பு மையக் கருக்கல் நோய் | (iii) Cu |
| 4. சிற்றிலை நோய் | (iv) B |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (ii) | (iv) | (i) |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (i) | (iv) | (ii) |
| 1 | 2 | 3 | 4 |
| (i) | (iii) | (ii) | (iv) |
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (iv) | (ii) | (i) |
1.
(i) நைட்ரஜன் சுழற்சி சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சுழற்சியாகும். இப்புவியின் உயிரிங்கள் நைட்ரஜன் சுழற்சியைப் பெரிதும் சார்ந்துள்ளன. வளிமண்டலத்தில் நைட்ரஜனானது (N2) என்ற தனி நைட்ரஜனாக உள்ளது.
(ii) இரு நைட்ரஜன் அணுக்கள் உறுதியான மூன்று சகப்பிணைப்புகளால் (N=N) பிணைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல நைட்ரஜனை (N2) அம்மோனியவாக மாற்றும் செயல் முறைக்கு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று பெயர்.
2.
நைட்ரஜன் பற்றாக்குறை உள்ள இடங்களில் இவ்வகை தாவரங்கள் நைட்ரஜன் பற்றாக்குறையை சரிசெய்ய பூச்சிகளின் உடலில் இருந்து நைட்ரஜன் சத்துக்களைப் பெறுகின்றன.
(அ) நெப்பந்தஸ் ( Pitcher plant);
குடுவை என்பது இலையின் மாற்றரு. இக்குடுவையினுள் செரிமான நொதிகளை உருவாக்கும் வளரிகள் உள்ளன. குடுவையின் வாய் விளிம்பில் தேன் சுரப்பிகள் காணப்படுவதோடு, குடுவையின் மூடி பகுதி பூச்சிகளை கவரும் வண்ணங்களும் காணப்படுகிறது. பூச்சிகள் குடுவையினுள் விழுந்தவுடன் புரத செரிமான நொதிகள் பூச்சிகளின் உடலை செரிக்க உதவுகிறது.
(ஆ) ட்ரஸீரா (Drosera -Sundew plant ):
இவை நீண்ட தடித்த உணர் நீட்சிகளை கரண்டி வடிவ இலைகளில் பெற்றவை. இவை ஒட்டக்கூடிய செரிமான திரவத்தை சுரந்து, பூச்சிகளை ஈர்க்கிறது. இது பார்ப்பதற்கு சூரிய பனித்துளி போன்று உள்ளது.
(இ) யூட்ரிகுலேரியா (Bladderwort ):
இது ஒரு நீரில் மூழ்கி காணப்படும் தாவரம். இவற்றின் இலைகள் பை போன்று மற்றுரு அடைந்து பூச்சிகளை சேகரித்து செரிக்க செய்கிறது.
(ஈ) டயோனிய (venus fly trap ):
இவற்றின் இலைகள் வண்ணமயமான பொறியாக மாற்றமடைந்துள்ளது. இரண்டு மடல்களுடையே இலைகளின் உள்ளே உணர் இழைகள் காணப்படும். பூச்சிகள் உணர் இழைகளை தொட்டவுடன் இலைகள் மூடி அவை சிறைப்படைகின்றன.
3.
(i) பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் தோன்றுமிடத்தை வைத்து முதிர்ந்த மற்றும் இளம் இலைகளின் வேறுபாட்டை உணரலாம்.
(ii) இதற்கு முக்கிய காரணம் கனிமங்களின் இடம்பெயர்வாகும். இதன் அடிப்படையில்
(அ) விரைவாக இடம் பெயரும் தனிமங்கள்.
(ஆ) ஒப்பீட்டளவில் இடம் பெயராத தனிமங்கள் என வகைப்படுத்தப்படுகிறது.
(அ) விரைவாக இடம் பெயரும் தனிமங்கள்:
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், குளோரின், சோடியம், துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் விரைவாக இடம்பெயர்வதால் பற்றாக்குறை அறிகுறிகள் முதிர்ச்சியடைந்த, உதிரும் நிலையில் உள்ள இலைகளில் தோன்றுகிறது.
(ஆ) ஒப்பீட்டளவில் இடம்பெயராத கனிமங்கள்:
கால்சியம், கந்தகம், இரும்பு, போரான் மற்றும் தாமிரம் போன்ற தனிமங்கள் எளிதில் இடம்பெயர்வதில்லை. எனவே, பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் இளம் இலைகளில் தோன்றுகிறது.
4.
இரு நைட்ரஜன் அணுக்கள் உறுதியான மூன்று சகப்பிணைப்புகளால் (N=N) பிணைக்கப்பட்டுள்ளது. வளிமண்டல நைட்ரஜனை (N2) அம்மோனியாவாக மாற்றும் செயல்முறைக்கு நைட்ரஜன் நிலைநிறுத்தம் என்று பெயர். இது முதல் நிலையாகும்.
நைட்ரோஜினேஸ் நொதியானது காற்றில்லா நிலையின்போது மட்டுமே செயல்படக் கூடியது. காற்றில்லா நிலையை ஏற்படுத்த வேர்முடுச்சிகளில் உருவாகும் லெக்ஹீமோகுளோபின் (leghaemoglobin )ஆக்ஸிஜன் நீக்கியாக(Oxygen Scavenger ) செயல்பட்டு ஆக்ஸிஜன் இல்லாச் சூழலை ஏற்ப்படுத்துகிறது.
5.
(i) குறைப்பாட்டு கனிமங்கள்
(ii) துத்தநாகம் மாலிப்டினம்
(iii) பற்றாக்குறை அறிகுறிகள்/ நோய்கள்
சிற்றிலை நோய் டர்னிக், பீட்ரூட்டில் பழுப்பு மையக் கருக்கல் னாய் மற்றும் ஆப்பிளின் உள்திசு தக்கை நோய்
(iv) காலிப்ளவர் மற்றும் முட்டைகோஸின் சாட்டை வால் நோய்
6.
(b)
I, II, III சரி
7.
(c)
| A | B | C | D |
| 4 | 3 | 1 | 2 |
8.
(c)
கால்சியம்
9.
(a)
Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர
10.
(b)
| 1 | 2 | 3 | 4 |
| (iii) | (i) | (iv) | (ii) |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards