11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
தாவரங்களின் வளர்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?
2.
உருமாறும் தன்மை என்றால் என்ன?
3.
உயிர்சார் நெருக்கடியின் செயல் நுட்பங்களை விளக்குக.
4.
வறட்சி நிலையில் தாவரங்கள் எதிர்கொள்ளும் சேயலியல் விளைவுகள் யாவை?
5.
6.
மலர்கள் தோற்றுவித்தல் ஒளிக்காலத்துவக்கத்தின் செயல்பாடுகள் பற்றி விவரி.
7.
சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை ?
8.
பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?
விதையுறை செதுக்கீடு
மோதல் நிகழ்த்துதல்
அடுக்கமடைதல்
இவை அனைத்தும்
9.
தாவரங்களின் விதை உறக்கம்______.
சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
வளமான விதைகளை உருவாக்குதல்
வீரியத்தை குறைகிறது
விதைச்சிதைவை தடுக்கிறது
10.
சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு
| 1) மனிதச் சிறுநீர் | i) ஆக்சின் B |
| 2) மக்காச்சோள எண்ணெய் | ii) GA3 |
| 3) பூஞ்சைகள் | iii) அப்சிசிக் அமிலம் II |
| 4) ஹெர்ரிங் மீன் விந்து | iv) கைனடின் |
| 5) இளம் மக்காச்சோளம் | v ) ஆக்சின் A |
| 6) இளம் பருத்திக் காய் | vi) சியாடின் |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| iii | iv | v | vi | i | ii |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| v | i | ii | iv | vi | iii |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| iii | v | vi | i | ii | iv |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| ii | iii | v | vi | iv | i |
11.
ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது.
எத்தனால்
சைட்டோகைனின்
ABA
ஆக்சின்
12.
கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.
3 அங்குலம்
6 அங்குலம்
12 அங்குலம்
30 அங்குலம்
13.
தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடு:
உருவாக்க கட்டத்தில் செல்பகுப்பை தக்கவைத்துக் கொள்ளும்
நீட்சியுறு கட்டத்தில் மைய வாக்குவோல் செல்லில் தோன்றுகிறது
முதிர்ச்சியுறு கட்டத்தில் தடிப்படைதல் மற்றும் வேறுபாடு அடைதல் நடைபெறுகிறது
முதிர்ச்சியுறு கட்டத்தில் செல்கள் மேலும் வளர்கிறது
1.
நேரடியாக வளர்ச்சியை அளத்தல் - சாதாரண அளவுகோல் முறை
படிநிலை 1 : சாதாரண அளவுகோல் எடுத்துக்கொள்.
படிநிலை 2 : தாவரத்தின் தரைப்பகுதி தண்டு முதல் வளர்நுனி வரை அளவீடு செய்
படிநிலை 3 : குறிப்பிட்ட கால இடைவெளியில் தாவரத்தின் வேர் மற்றும் தண்டின் நீள் வளர்ச்சி , குறுக்கு வளர்ச்சி இண்டியன் இங்க் (ஜனேயை ஜமே )பயன்படுத்திக் குறித்துக் கொண்டு அளவீடு செய்.
2.
தாவரங்களில் சூழ்நிலை அல்லது வளர்ச்சி நிலைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு உறவை அமைப்புகள் தோன்றுகிறது.இத்தகைய திறனுக்கு உருமாறும் தன்மை (பிளாஸ்டிசிடி என்று பெயர்). எடுத்துக்காட்டு ஹெட்டிரோ∴பிலி (ஈருவ இலை ) காணப்படும் தாவரங்கள் பருத்தி மற்றும் கொத்தமல்லி இத்தகைய தாவரங்களில் இளந்தவரா இலையின் உருவ அமைப்பும் அதே தாவரத்தின் முதிர்ந்த தாவர இலையின் உருவ அமைப்பும் வேறுபாட்டுக் காணப்படுகிறது.
மற்றொரு எடுத்துக்காட்டாக ரனன்குலஸ் (Butercup) எனும் தாவரத்தில் சூல்நிலைக்குத் தகுந்தவாறு இரு வேறுபட்ட உருவ அமைப்புடைய இலைகள் உருவாகிறது, இத்தாவரத்தில் நீரில் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் , நீர் பரப்பிற்கு மேல் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் வேறுபடுகிறது. இத்தகைய ஹெட்டிரோ∴பிலி உருமாறும் (Plasticity) தன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
3.
உயிரியல் சார் நெருக்கடிகள்:
1. பிற உயிரினங்களான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள், பூச்சிகள், களைகள், போட்டித் தாவரங்கள் போன்றவைகளால் தாவரங்களில் ஏற்படும் கடுமையான விளைவுகளே உயிரியல் சார் நெருக்கடி எனப்படுகிறது.
2. கால்நடைகளின் தீவனத்திற்காகவும் எரிபொருள் தேவைக்காகவும், வேளாண்மை பயன்பாட்டிற்காகவும்,மனிதர்களால் தாவரங்கள் வெட்டப்படுதலும் உயிரியல் சார் நெருக்கடிக்கு காரணமாக உள்ளன.
3. சுற்றுச்சூழலில் எப்பொழுதும் காணப்படும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் புழுக்கள் ஆகியவற்றால் ஏற்படும் உயிரியல் சார் நெருக்கடி செயல்திறன் மிக்க நெருக்கடிகள் என்ற அழைக்கப்படுகின்றன.
அல்லிலோபதி:
1. ஓர் உயிரினம் உற்பத்தி செய்யும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரி வேதிப்பொருள்கள் பிற உயிரினங்களின் முளைத்தல், வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.இது அல்லிலோபதி என்றழைக்கப்படும்.
2. இவை நன்மைத் தருபவை நேர்மறை அல்லிலோபதி அல்லது தீங்களிப்பவை எதிர்மறை அல்லிலோபதி-களாக உள்ளன.
3. இத்தகைய அல்லிலோ வேதிப்பொருட்கள் இலையிலிருந்து கசியும் நீர் தரையை அடைந்த பிறகும் மற்றும் வேரிலிருந்தும் பெறப்படுகின்றன.
4. அல்லிலோபதி என்ற கிரேக்க சொல் அல்லிலோன்-ஒருவருக்கொருவர் மற்றும் பாத்தோஸ்-பாதிக்க எனவும் முதன்முதல் ஹின்ஸ்மோலிஸ் என்பவரால் 1937-ல் பயன்படுத்தப்பட்டது.
5. அல்லிலோபதி விளைவுகளைத் தாவரங்கள் பயிர்களின் மீதும் பயிர்களைத் தாவரங்களின் மீதும் ஏற்படுத்தலாம்.
6. கருப்பு பாதாம் (ஜக்லான் நைக்ரம்) நன்கு அறியப்பட்ட அல்லிலோபதி தாவரங்களில் மீதும் ஏற்படுத்தலாம்.
7. இக்கருப்பு பாதாமில் ஜக்லான் என்ற வேதிப்பொருள் உள்ளன. இது ஒரு சுவாச தடுப்பான்.
8. சொலோனேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்காளான தக்காளி, மிளகாய் மற்றும் கத்திரிக்காய் ஜக்லானுக்கு எளிதில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை.
9. இத்தகையத் தாவரங்கள் அல்லிலோ வேதிப்பொருள்களுடன் சேரும்போது வாடல், பச்சைய சோகை இறப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
10. தற்போது அல்லிலோபதி மரங்களின் பட்டியலில் பெருமரம் (அய்லாந்தஸ் அல்டிசிமா) சேர்க்கப்பட்டுள்ளது.
11.அய்லான்தோன் ஓர் அல்லிலோ வேதிப்பொருள். இது அய்லான்தஸ் வேரிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.
12.சோளத்தில் காணப்படும் சொர்கோலான் என்ற அல்லிலோ வேதிப்பொருள்கள் அல்லிலோபதி செயல்தன்மை கொண்டவை.
13.இது பெரும்பாலும் சோளத்தின் சிற்றினங்களின் வேர்க்கசிவுகளில் காணப்படும்.
14. மக்காசோளத்தின் வேர்க் கசிவு சினோபேடியம் அல்பம் மற்றும் அமரான்தஸ்ரெட்ரோப்ளக்ஸ்ஸஸ் போன்ற சிலகளைத் தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.
15.ஓட்ஸ் (அவினா ஃபடுவா) தாவரத்தின் விதைக்கசிவு கோதுமை விதைமுளைத்தலை பாதிக்கின்றன.
(ii) நோய் உருவாக்கம்:
நுண்ணியர்களின் விளைவால் தாவரங்களில் நோய் உண்டாகின்றன. உதாரணமாக சாந்தோமோனாஸ் சிட்ரி.
4.
வறட்சி என்ற சொல் போதியளவு மழை இல்லாத காலங்களில் மண்ணில் நீரின் அளவு குறைந்து தாவரங்களும் நீர் பாற்றாக்குறையின் காரணமாக பாதிக்கப்படுதலை குறிக்கும்.
வறட்சியின் விளைவுகள்:
1. செல்களின் வளர்ச்சி மற்றும் செல்சுவர் கூறுகளின் உற்பத்தி குறைவதால் செல்கள் அளவில் சிறிதாகின்றன.
2. நைட்ரஜன் நிலைநிறுத்தம் மற்றும் அதன் ஒடுக்கம் ஆகியவை சில நொதிகளின் குறைவான செயல்பாடுகளால் குறைகின்றன.
3. அப்சிக் அமிலம் உற்பத்தி அதிகரித்து இலைத்துளை சாதனங்கள் மூடுவதால் நீராவிப்போக்கு வீழ்ச்சியடைகின்றது.
4. புரோட்டோகுளோரோஃபில் உற்பத்தி தடைபடுவதால் ஒளிச்சேர்க்கை வீழ்ச்சியடைகின்றன.
5. சுவாசித்தல் மற்றும் உணவுப் பொருட்கள் இடப்பெயர்ச்சி குறைதல்,நீர் இழப்பதால் நொதிகளின் செயல்பாடுகள் அதிகரித்தல், இதைத் தொடர்ந்து RNA மற்றும் புரதங்கள் சிதைக்கப்படுகின்றன.
6.. கார்போஹைட்ரேட் இடப்பெயர்வு பாதிக்கப்படுவதால் முதிர்ந்த இலைகள் வாடுகின்றன.
7. இதைத் தொடர்ந்து இலை மூப்படைதல் நிகழ்கிறது.
5.
6.
(i) ஒளிக்காலத்துவம் பற்றிய அறிவு கலப்பினமாக்கால் ஆய்வுகளில் முக்கிய பங்காற்றுகிறது
(ii) வாழ்வியல் முன் தயாரிப்புகளுக்கு ஒளிக்காலத்துவம் சிறந்த உதாரணம் எனவே தாவரங்களின் வாழ்வியலில் மாற்றத்தை தூண்டும் வெளிப்புற காரணியாகவும் இது கருதப்படுகிறது.

பைப்டோகுரோம் என்பது ஒளியினை ஈர்க்கும் நீலநிற பித்தபுரதநிறமியாகும்.பட்லர் மற்றும் அவர் குழுவினர் (1959) இந்த நிறமிக்கு இப்பெயரிட்டனர். இது ஒன்றிலிருந்து ஒன்றாக மற்றும் இரண்டு வடிவங்களில் உள்ளது. (i) சிவப்பு ஒளியை உரிஞ்சும் நிறமியை ஞச எனவும்
(ii) தொலை சிவப்பு ஒளியை உறிஞ்சும் நிறமியை Pfr எனவும் குறிப்பிடலாம். Pr வடிவம் சிவப்பு ஒளியின் 660nm அலை நீள கதிர்களை ஈர்த்து Pfr வடிவமாக மாறுகிறது. Pfr வடிவம் உயிரியல் ரீதியாக செயலற்ற நிலை மற்றும் நிலையானது. Pfr வடிவமாக மாற்றுகிறது. Pr வடிவம் உயிரியல் ரீதியாக செயலற்ற நிலை மற்றும் நிலையானது. Pfr வடிவம் உயிரியல் ரீதியாக செயல்படும் நிலை மற்றும் நிலையற்றது. குருநாள் தாவரங்களில் Pr மலர்தலை தூண்டுகிறது மற்றும் Pr மலர்தலை தடை செய்கிறது. ஆனால் நீள் பகல் தாவரங்களில் மலர்தல் Pfr ஆல் தூண்டப்படுகிறது. Pr ஆல் தடைசெய்யப்படுகிறது. Pfr எப்போதும் சவ்வு அமைப்புகளின் நீர் வெறுக்கும் பகுதியுடன் பினைந்துள்ளது. Pr வடவம் சைட்டோபிளாசத்தின் கரையும் பகுதிகளில் காணப்படுகிறது. பைப்டோகுரோமின் இரண்டு மாற்று வடிவங்கள் மலர்தலை தோற்றுவிக்க முக்கிய பங்காற்றுகிறது. இருப்பினும் கூடுதலாக விதை முளைத்தல் மற்றும் செல் சவ்வு ஒருங்கிணைப்பு மாற்றத்திலும் பங்கு கொள்கிறது.
7.
சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் :
1. ஆக்சின் (IAA) இருக்கும் போது செல் வகுப்பை தூண்டுகிறது.
2. ஒளி உணரும் தன்மை பெற்ற விதைகளில் அதன் உறக்கத்தை நீக்கி முளைக்கும்படி செய்கிறது. எடுத்துக்காட்டு: புகையிலைத் தாவரம்.
3. ஆக்சின் இருக்கும் போது, பட்டாணி தாவரத்தில் பக்க மொட்டுகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது
4. சைட்டோகைனின் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சி அடையச் செய்து தாவரங்கள் வயதாவதை தாமதப்படுத்துகிறது. இதற்கு ரிச்மாண்ட் லாங்க் விளைவு (Richmond lang effect ) என்று பெயர்.
5. சைட்டோகைனின் புரத சேர்க்கை விதத்தை அதிகப்படுத்தவும் , கற்றை இடைக்கேபியம் உருவாதலைத் தூண்டவும் , புதிய இலைகள் , பசுங்கணிகம் மற்றும் பக்க கிளைகள் உருவாதலை தூண்டவும் உதவுகிறது.
6. தாவரங்கள் மிகத் துரதமாக கரைப் பொருட்களை சேகரமடையச் செய்ய உதவுதல்.
8.
(a)
விதையுறை செதுக்கீடு
9.
(a)
சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்
10.
(b)
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 |
| v | i | ii | iv | vi | iii |
11.
(c)
ABA
12.
(a)
3 அங்குலம்
13.
(c)
முதிர்ச்சியுறு கட்டத்தில் தடிப்படைதல் மற்றும் வேறுபாடு அடைதல் நடைபெறுகிறது
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards