11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 13/09/2019
தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
ஸ்கிலிரன்கைமா மற்றும் டிரக்கீடுகள் ஏன் இறந்த செல்களாகக் காணப்படுகிறது?
2.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக.
3.
இருவிதையிலை வேருக்கும், ஒருவிதையிலை வேருக்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகளை எழுதுக
4.
சல்லடை குழாய்கள் என்றால் என்ன? விளக்குக.
5.
ஸ்கிலிரைடுகளின் வகைகளை வவரி.
6.
இருவிதையிலைத் தாவரங்களில் ஓட்டுப்போடுதல் வெற்றிகரமாக உள்ளது. ஆனால், ஒருவிதையிலைத் தாவரங்களில் அவ்வாறு இல்லை. ஏனென்றால் இருவிதையிலை தாவரங்களில் _______.
வளையமாக வாஸ்குலக் கற்றைகள் அமைந்திருப்பது
இரண்டாம் நிலை வளர்ச்சிக்கான கேம்பியம் அமைந்துள்ளது.
சைலக்குழாய் கூறுகள் ஒருமுனையில் இருந்து அடுத்த முனை வரை இணைந்து அமைந்திருப்பது.
கார்க் கேம்பியம் அமைந்திருப்பது.
7.
இருவிதையிலைத் தண்டில் வாஸ்குலக் கற்றையிலிருந்து இலை இழுவை நீட்டிக்கப்படும் பொழுது, இலை நரம்பின் வாஸ்குலத் திசுக்கள் எவ்வாறு அமைந்து இருக்கும்?
சைலம் மேல்புறத்திலும் ஃபுளோயம் கீழ்புறத்திலும் இருக்கும்.
ஃபுளோயம் மேல்புறத்திலும் சைலம் கீழ்புறத்திலும் இருக்கும்.
சைலம் ஃபுளோயத்தை சூழ்ந்திருக்கும்.
ஃபுளோயம் சைலத்தை சூழ்ந்திருக்கும்.
8.
ஜிம்னோஸ்பெர்ம்களில் சல்லடை செல்கள் களைக் கட்டுப்படுத்துவது எது?
அருகாமையில் உள்ள சல்லடை குழாய்கள்
ஃபுளோயம் பாரங்கைமா செல்கள்
துணைச்செல்களின் உட்கருக்கள்
அல்புமீனஸ் செல்களின் உட்கருக்கள்
9.
கீழ்கண்டவற்றை படித்து சரியான விடையைத் தேர்ந்தெடு
i. எக்ஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு வெளியே புரோட்டோசைலம் அமைந்துள்ளது.
ii. எண்டார்க் எனப்படுவது புரோட்டோசைலம் மையத்தை நோக்கி அமைந்துள்ளது.
iii. சென்ட்ரார்க் எனப்படுவது புரோட்டோசைலத்திற்கு நடுவில் மெட்டாசைலம் அமைந்துள்ளது
iv. மீஸார்க் எனப்படுவது மெட்டாசைலத்திற்கு நடுவில் புரோட்டோசைலம் அமைந்துள்ளது.
i, ii மற்றும் iii மட்டும்
ii, iii மற்றும் iv மட்டும்
i, ii மற்றும் iv மட்டும்
இவை அனைத்தும்
10.
கீழ்கண்ட படத்தினை உற்றுநோக்கிச் சரியான விடையைத் தேர்ந்தெடு.

i. A, B மற்றும் C தண்டு நுனியின் ஹிஸ்டோஜென் கொள்கை ஆகும்.
ii. A-மெடுல்லா, கதிர்களை உருவாக்குகிறது.
iii. B-புறணியை உருவாக்குகிறது.
iv. C-புறத்தோலை உருவாக்குகிறது.
i மற்றும் ii மட்டும்
ii மற்றும் iii மட்டும்
i மற்றும் iii மட்டும்
iii மற்றும் iv மட்டும்
1.
ஸ்கிலிரன்கைமா செல்கள் புரோட்டா பிளாசமற்ற இறந்த செல்களாகும். இச்செல்கள் நீண்டோ அல்லது குட்டையாகவோ லிக்ளினால் ஆன இரண்டாம் நிலை சுவர்களைக் கொண்டு காணப்படும்.
2.
இருவிதையிலை தண்டிற்கும் ஒருவிதையிலை தண்டிற்கும் இடையே உள்ள உள்ளமைப்பியல் வேறுபாடுகள்:
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலைத் தண்டு | ஒருவிதையிலைத் தண்டு |
| 1. | பபுறத்தோலடித்தோல் | கோலங்கைமா செல்களானது. | ஸ்கிலிரங்கைமா செல்களானது. |
| 2. | அடிப்படைத்திசு | புறணி, அகத்தோல், பெரிசைக்கிள், பித் என வேறுபட்டு காணப்படுகிறது. |
வேறுபடாத, தொடர்ச்சியான பாரங்கைமா திசுவால் ஆனது. |
| 3. | தரசு அடுக்கு | காணப்படுகிறது | காணப்படவில்லை. |
| 4. | மெடுல்லா கதிர்கள் | காணபப்டுகிறது | காணப்படவில்லை. |
| 5. | வாஸ்குலக் கற்றைகள் | (i) ஒருங்கமைந்தவை மற்றும் திறந்தவை. (ii) ஒரு வளையமாக அமைந்துள்ளன. (iii) இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுகிறது. |
(i) ஒருங்கமைந்தவை மற்றும் மூடிய வை. (ii) அடிப்படைத்திசுவில் சிதறிக் காணப்படுகிறது. (iii) இரண்டாம் நிலை பொதுவாக நடைபெறுவதில்லை. |
3.
| வ.எண் | பண்புகள் | இருவிதையிலை வேர் | ஒரு விதையிலை வேர் |
| 1. | பெரிசைக்கிள் | பக்கவேர்கள், பெல்லோஜென் மற்றும் வாஸ்குலக் கேம்பியத்தின் ஒரு பகுதி பெரிசைக்களிலிருந்து தோன்றுகின்றன. |
பக்கவேர்கள் மட்டும் தோன்றுகின்றன. |
| 2. | வாஸ்குலத் திசு | பெரும்பாலும் ஃபுளோயம் பட்டைகள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. |
பெரும்பாலும் சைலம் ஃபுளோயம் பட்டைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. |
| 3. | இணைப்புத் திசு | பாரங்கைமாவால் ஆனது. இந்தச் செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடடைகிறது. | பெரும்பாலும் ஸ்கிலிரங்கைமாவால் ஆனது. ஆனால் சில சமயங்களில் பாரங்கைமாவால் ஆனது. இந்த செல்கள் வாஸ்குலக் கேம்பியமாக வேறுபாடு அடைவதில்லை. |
| 4. | கேம்பியம் | இரண்டாம் நிலை வளர்ச்சியின் பொது இரண்டாம் நிலை ஆக்குத்திசுவாக தோன்றுகிறது. | முற்றிலும் இல்லை. |
| 5. | சைலம் | நான்கு முனை கொண்டவை. | பொதுவாகப் பல முனை கொண்டவை |
4.
(i) சல்லடைக் குழாய்கள் நீண்ட ககுழாய்களைப் போன்ற ஃபுளோயத்தின் கடத்துக் கூறுகளாகும்.
(ii) இவை வரிசையாக அமைந்த சல்லடைக் குழாய் கூறுகளின் முனைகள் ஒன்றன் மீது ஒன்று அமைந்து உண்டாக்கபப்டுகிறது.
(iii) இதனுடைய முனை சுவரில் சல்லடை போன்ற துளைகள் காணப்படுகின்றன. இது சல்லடை துளைத்தட்டு எனபப்டும்.
(iv) சல்லடைக் குழாய் கூறுகளின் பக்கச்சுவர்களில் பளபளப்பான தடிப்புகள் காணபப்டுகின்றன. இவை எளிய அல்லது கூட்டு சல்லடைத்தட்டுகளை கொண்டுள்ளன. சல்லடைக் குழாய்களின் பணிகள் துணைச் செல்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன என நம்பப்படுகிறது.
(v) முதிர்ந்த சல்லடை குழாய்களில் உட்கரு காணப்படுவதில்லை. ஆனால் சுவரை ஒட்டிய சைட்டோபிளாசம் காணபப்டுகிறது. இதில் சிறப்பு வகை புரதம். (பு.புரதம் ஃபுளோயம் புரதம்) எனபப்டும் ஸ்லைம் உடலங்கள் காணப்படுகின்றன.
(vi) முதிர்ந்த சல்லடைக் குழாய்களில், சல்லடை தட்டுகளில் உள்ள துளைகள் கேலோஸ் எனப்படும் பொருளால் (callose plug), அடைபட்டுள்ளது உணவுப்பொருட்கள் சைட்டோபிளாச இழைகள் மூலமாகக் கடத்தப்படுகிறது.
(vii) சல்லடைக் குழாய்கள் ஆஞ்சியோஸ் பெர்ம்களில் மட்டும் காணபப்டுகிறது.
5.
ஸ்கிலிரைடுகளின் வகைகளை:
(i) பிரேக்கி ஸ்கிலிரைடுகள் அல்லது கல் செல்கள் (Brachysclerids or Stone cells):
இவை ஒத்த விட்டம் கொண்ட ஸ்கிலிரைடுகள். கடினமான செல் சுவர்களைக் கொண்டுள்ளன. இச்செல்கள் தாவரங்களின் பட்டைகள், பித், புறணி, கடின கருவூண் திசு மற்றும் சியல் கனிகளின் தசைப் பகுதிகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: பேரிக்காயின் தளத்திசு (pulp of Pyrus)
(ii) மேக்ரோஸ்கிலிரைடுகள் (Macrosclereids):
இவை சிறு கழிகள் போன்ற நீண்ட செல்களாகும். இவை லெகூம் தாவர விதை வெளி உறைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: குரோட்டலேரியா, பைசம்.
(iii) ஆஸ்டியோ ஸ்கிலிரைடுகள் (Osteosclereids):
இவை விரிவடைந்த நுனிப் பாகங்களுடன் கூடிய நீண்ட செல்கள். இவை இலைகள், விதை உறைகள் போன்றவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு:பைசம் மற்றும் ஹேகியா (Kakea) விதை உறைகள்.
(iv) ஆஸ்டிரோ ஸ்கிலிரைடுகள் (Astrosclereids):
எவை கிளைத்த பிரிவுகலைக் கொண்ட நட்சத்திர வடிவ ஸ்கிலிரைடுகள் ஆகும். இவை இலைகள், இலைக்காம்பு ஆகியவற்றில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: தேயிலை, நிம்பையா, ட்ரைகோடென்ட்ரான்.
(v) டிரைக்கோ ஸ்கிலிரைடுகள் (Trichosclereids):
இவை மெல்லிய சுவர் கொண்ட மயிரிழைகள் போன்ற ஸ்கிலிரைடுகள் ஆகும். எண்ணற்ற கோண நுனிப்பிளவுற்ற படிகங்கள் செல் சுவரில் படிந்திருக்கும். இவை நீர் தாவரங்களின் தண்டு மற்றும் இலைகளில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: நிம்பையா, இலைகள், மான்ஸ்டீரா காற்று வேர்கள்.
6.
(b)
இரண்டாம் நிலை வளர்ச்சிக்கான கேம்பியம் அமைந்துள்ளது.
7.
(a)
சைலம் மேல்புறத்திலும் ஃபுளோயம் கீழ்புறத்திலும் இருக்கும்.
8.
(d)
அல்புமீனஸ் செல்களின் உட்கருக்கள்
9.
(c)
i, ii மற்றும் iv மட்டும்
10.
(a)
i மற்றும் ii மட்டும்
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards